Jump to content

இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் உலக சாதனைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி - நியூசிலாந்து வரலாற்று வெற்றியை பெற்றது எப்படி?

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரிஷப் பந்த் ஆட்டமிழந்த காட்சி.  

புனேவில் நடந்த இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 113 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 2 நாட்கள் மீதமிருக்கும் நிலையிலேயே இரண்டாது டெஸ்ட போட்டி முடிவுக்கு வந்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 259 ரன்களும், இந்திய அணி 156 ரன்களும் சேர்த்தன. நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 103 ரன்கள் முன்னிலை பெற்று ஆடி, 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 359 ரன்கள் இலக்கோடு இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி, 245 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்கறு நியூசிலாந்து அணி புதிய வரலாறு படைத்துள்ளது.

இந்தியாவுக்கு 359 ரன் இலக்கு

நியூசிலாந்து அணி நேற்றைய இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்து, 301 ரன்கள் என பெரிய முன்னிலை பெற்றிருந்தது. டாம் பிளென்டல் 30 ரன்னிலும், கிளென் பிலிப்ஸ் 9 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர். டாம் பிளென்டன் 41 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

இதைத் தொடர்ந்து கடைசிவரிசை பேட்டர்களான சான்ட்னர் (4), சவுத்தி (0), அஜாஸ் படேல் (1), ரூர்கே (0) என வரிசையாக ஜடேஜா, அஸ்வின், சுந்தர் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். காலை தேநீர் இடைவேளைக்கு முன்பாகவே நியூசிலாந்து அணி 255 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழந்து, இந்திய அணிக்கு 359 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

டி20 போல் அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால்

359 ரன்கள் இலக்கைத் துரத்த இந்திய அணிக்கு 3 நாட்கள் வரை அவகாசம் இருந்தது. ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா இருவரும் இந்திய அணியின் இன்னிங்சைத் தொடங்கினர். ரோகித் சர்மா நிதானமாக பேட் செய்ய, ஜெய்ஸ்வால் அதிரடியாக ரன்களைச் சேர்த்தார். நிதானமாக ஆட முயன்றாலும் ரோகித் சர்மாவால் நீண்டநேரம் நிலைக்க முடியவில்லை. , 8 ரன்களில் சான்ட்னர் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கில், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து ரன்களைச் சேர்த்தார்.

இருவரும் களத்தில் இருந்தவரை ரன்கள் வேகமாக வந்தன. டி20 போட்டியைப் போல் இருவரும் அதிரடியாக ஆடியதால் 8.2 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை எட்டியது. ஜெய்ஸ்வால் சிக்ஸர், பவுண்டரிகளாக அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார்.

உணவு இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது. ஜெய்ஸ்வால் 40 பந்துகளில் அரைசதத்தைப் பதிவு செய்தார். கில், ஜெய்ஸ்வால் பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்து சென்றது.

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜெய்ஸ்வால் சிக்ஸர், பவுண்டரிகளாக அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார்.

இந்திய அணியை சுருட்டிய சான்ட்னர்

நிதானமாக பேட் செய்த கில் 23 ரன்களில் சான்ட்னர் பந்துவீச்சில் மிட்ஷெலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர். 15.2 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை 96 பந்துகளில் எட்டி வேகமாக இலக்கை நோக்கி நகர்ந்தது.

அடுத்து கோலி களமிறங்கி, ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். அதிரடியாக ஆடிவந்த ஜெய்ஸ்வால் 65 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்த நிலையில் சான்ட்னர் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதன்பின் இந்திய அணியின் சரிவு தொடங்கியது. அடுத்துவந்த ரிஷப் பந்த் ரன் அவுட் செய்யப்பட்டு டக்-அவுட் ஆனார்.

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

சான்ட்னரின் ‘ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப்’ பந்துவீச்சில் காலை நகர்த்தாமல் ஆடி விராட் கோலி 17 ரன்னில் ஆட்டமிழந்தார். சர்ஃபிராஸ் கான் களத்துக்கு வந்தது முதலே தனது காலை நகர்த்தாமலேயே சான்ட்னரின் பந்துவீச்சை எதிர்கொண்டு பல தவறுகளைச் செய்தார்.

லேசாக டர்ன் ஆகும் வகையில் சான்ட்னர் வீசிய பந்தைத் தடுத்து ஆட முற்பட்ட போது சர்ஃபிராஸ் கானை ஏமாற்றிய பந்து க்ளீன் போல்டாக்கியது. சர்ஃபிராஸ் கான் 9 ரன்னில் ஏமாற்றமளித்தார்.

அதன் பிறகு இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வரிசையாக இழந்த வண்ணம் இருந்தது. வாஷிங்டன் சுந்தர் (21), அஸ்வின் (18), ஆகாஷ் தீப் (1) என வரிசையாக விக்கெட்டுகளைக் கோட்டைவிட்டனர். கடைசியில் நம்பிக்கையளித்த ஜடேஜா 42 ரன்களில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 96 ரன் என்ற வலுவான நிலையில் ஒரு கட்டத்தில் இருந்தது. ஆனால், அடுத்த 149 ரன்களுக்குள் மீதமிருந்த 9 விக்கெட்டுகளையும் இந்திய அணி இழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியின் உலக சாதனைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி

நியூசிலாந்து தொடருக்கு முன்பாக, இந்திய அணி 2013-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடர்களை வென்று உலக சாதனையுடன் வீறுநடை போட்டது. இந்திய மண்ணில் நடைபெறும் தொடர் என்பதால், இதனையும் வெற்று சாதனைப் பயணத்தை மேலும் நீட்டிக்கும் முனைப்பில் இந்திய அணி இருந்தது. ஆனால், அதற்கு நியூசிலாந்து அணி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தற்போதைய நிலையில், சர்வதேச டெஸ்டில் இந்திய அணி தொடர்ச்சியாக 18 முறை தொடர்களை வென்றதே சாதனையாக இருக்கிறது. ஆஸ்திரேலியா இருமுறை தொடர்ந்து 10 தொடர்களை வென்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

கடந்த 1983-ஆம் ஆண்டுக்குப் பின் இந்திய அணி ஒரு காலண்டர் ஆண்டில் உள்நாட்டில் 3 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தது இதுதான் முதல்முறை. ஏறக்குறைய 41 ஆண்டுகளுக்குப் பின் ஒரே ஆண்டில் உள்நாட்டில் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.

புதிய வரலாறு

இதுவரை, நியூசிலாந்து அணி இந்தியாவில் பல ஆண்டுகள் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடர்களில் விளையாடியிருந்தாலும், ஒருமுறைகூட டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. அந்த வரலாறு இம்முறை மாறியுள்ளது.

இந்திய மண்ணில் பெங்களூருவில் நடந்த டெஸ்டில் வென்ற நியூசிலாந்து அணி, புனேயில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் வென்று டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

"ஒட்டுமொத்த அணியின் தோல்வி"

டெஸ்ட் தொடரை இழந்தபின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “டெஸ்ட் தொடரை இழந்தது வேதனையளிக்கிறது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களைவிட நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினர். களத்தில் வந்த சவால்களுக்கு எங்களால் சரியான பதிலடி கொடுக்க முடியாமல் தோல்வி அடைந்துவிட்டோம்,” என்றார்.

மேலும், “சரியாக பேட் செய்தோம் என நான் நினைக்கவில்லை, அதனால்தான் போதுமான ரன்களும் கிடைக்கவில்லை. 20 விக்கெட்டுகளை எடுக்கலாம். அதேசமயம், பேட்டர்களும் ரன்கள் குவிக்க வேண்டும். நியூசிலாந்து அணியை முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேலாக முன்னிலை பெற வைத்துவிட்டோம். இதற்கு நாங்கள் சரியாக பேட்டிங் செய்யாததுதான் காரணம். நாங்கள் பதிலடி கொடுத்திருக்க வேண்டும், ஆனால், தோற்றுவிட்டோம்,” என்றார்.

“இது அதிகமான ஆட்டங்கள் நடந்த பிட்ச் அல்ல, நாங்கள்தான் சரியாக பேட் செய்யவில்லை. வான்ஹடே மைதானத்தில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை வெல்ல முயல்வோம். இது அணியின் ஒட்டுமொத்த தோல்வி. எங்கள் முன் நின்ற சவால்களை ஏற்பதில் ஓர் அணியாகத் தோற்றுவிட்டோம்,” எனத் தெரிவித்தார்.

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடினமான பாதை, ஒற்றை மனிதரின் சாதனை

இந்தியப் பயணத்துக்கு முன்பாக இலங்கை சென்ற நியூசிலாந்து அணி, அந்நாட்டிடம் டெஸ்ட் தொடரை இழந்தது. இதனால் அனுபவ கேப்டன் கேன் வில்லியம்ஸன் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. சிறந்த டெஸ்ட் பேட்டரான வில்லியம்ஸன் இல்லாமலே நியூசிலாந்து அணி இந்தியத் தொடருக்கு வந்தது. ஆனால், இந்திய அணி தயாரித்து வைத்த ஆயுதத்தை எடுத்தே இந்திய அணியை வீழ்த்தி 2-0 என்று டெஸ்ட் தொடரை வென்று புதிய சகாப்தத்தை நிகழ்த்தியுள்ளது.

நியூசிலாந்து அணி, டெஸ்ட் தொடரை வெல்வதற்கு பிரம்மாஸ்திரமாக இருந்தது மிட்ஷெல் சான்ட்னர் எனும் ஒற்றை மனிதர்தான். முதல் இன்னிங்ஸில் 53 ரன்களுக்கு 7 விக்கெட், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் என ஆட்டத்தையே திருப்பிவிட்டார்.

12 ஆண்டுகளுக்குப்பின் முற்றுப்புள்ளி

அதேசமயம், கடந்த 2012-ஆம் ஆண்டுக்குப்பின் இந்திய மண்ணில் எந்த நாட்டு அணிக்கு எதிராகவும் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழக்காமல் இருந்து வந்தது.

தற்போது 12 ஆண்டுகளுக்குப்பின் நியூசிலாந்திடம் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்து, தனது சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டது. இதுவரை எந்த அணியும் உள்நாட்டில் டெஸ்ட் தொடரை 12 ஆண்டுகளாக இழக்காமல் பயணித்தது இல்லை. ஆனால், இந்திய அணி மட்டுமே அந்தச் சாதனையை செய்திருந்த நிலையில் அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 4,332 நாட்களுக்குப்பின் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்துவிட்டது.

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சான்ட்னரின் பந்துவீச்சுத் திட்டத்தை தொடக்கத்திலேயே ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், கில், ரிஷப்பந்த் போன்ற அதிரடி பேட்டர்கள் தகர்த்திருக்கலாம்

இந்திய அணிக்கு என்ன ஆச்சு?

நியூசிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெற்ற சுழற்பந்துவீச்சாளர்களான மிட்ஷெல் சான்ட்னர், கிளென் பிலிப்ஸ் இருவருமே டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் இல்லை. அதிலும் சான்ட்னர் இதுவரை டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியதே இல்லை. அப்படியிருந்த வீரர் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் சாய்த்தார்.

ஆனால், டெஸ்ட் சுழற்பந்துவீச்சாளர்கள் என அடையாளம் காணப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா ஆகியோரின் சுழற்பந்துவீச்சு புனேவில் சுத்தமாக எடுபடவில்லை இருவரின் பந்துவீச்சையும் நியூசிலாந்து பேட்டர்கள் எளிதாகக் கையாண்டனர். இதில் வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சு மட்டும் விதிவிலக்கு.

இந்திய பேட்டர்கள் சிறிதுகூட நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை திணறச் செய்யும் வகையில் பேட் செய்யவில்லை. அவர்களை நிலைகுலைய வைக்கும் விதத்தில் அதிரடி ஆட்டத்தைக் கையில் எடுக்கவில்லை. அவ்வாறு அதிரடி பாணியை எடுத்திருந்தால், நியூசிலாந்து அணியின் திட்டம் சிதறி, என்ன செய்வதென்று தெரியாமல் தவறுக்கு மேல் தவறு செய்திருப்பார்கள்.

ஆனால், சுழற்பந்துவீச்சைக் கவனமாக ஆட வேண்டும் என்ற நோக்கோடு கூடுதலாக செலுத்திய கவனம், ரன்வேகத்தையும் குறைத்தது. தவறு செய்யவும் வழிவகுத்தது. இந்திய பேட்டர்கள் கூடுதல் கவனம் செலுத்தியதை வாய்ப்பாகப் பயன்படுத்திய சான்ட்னர், ‘ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப்’ பந்துவீசி நெருக்கடியும், அழுத்தத்தையும் அதிகரித்து விக்கெட்டுகளை எளிதாகச் சாய்த்தார்.

சான்ட்னரின் பந்துவீச்சுத் திட்டத்தை தொடக்கத்திலேயே ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், கில், ரிஷப்பந்த் போன்ற அதிரடி பேட்டர்கள் தகர்த்திருக்கலாம். ஆனால், கவனமாக ஆட வேண்டும் என்ற நோக்கோடு ஒவ்வொரு பந்துக்கு ஒவ்வொரு விதமாக செயல்பட்டு அவரை ஃபார்முக்கு இட்டுச் சென்றனர்.

அதேநேரத்தில், நியூசிலாந்து பேட்டர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோரை நிலைகுலையச் செய்யும் விதத்தில் அதிரடி ஆட்டத்தை கையாண்டனர். இது அஸ்வின், ஜடேஜாவின் பந்துவீச்சு உத்தியை குழப்பிவிட்டது. இலங்கை அணிக்கு எதிராக கல்லே நகரில் நடந்த டெஸ்டிலும் இதே உத்தியைத்தான் நியூசிலாந்து அணி கையாண்டது குறிப்பிடத்தக்கது.

சுழற்பந்துவீச்சுக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக ஆடக் கூடியவர்கள் என்று இந்திய பேட்டர்கள் என அறியப்பட்ட காலம் இருந்தது. அதனால்தான் இந்திய ஆடுகளங்கள் பெரும்பாலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவே அமைக்கப்பட்டன. அப்படியிருந்த இந்திய அணியில் சீனியர் பேட்டர்களான ரோகித் சர்மா, விராட் கோலி போன்றோர் ஜொலிக்காமல் போனது கேள்வியை எழுப்புகிறது.

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 6 போட்டிகளில் குறைந்தபட்சம் 4 வெற்றிகள், ஒரு டிராவை இந்திய அணி பதிவு செய்தால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்ல முடியும்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற முடியுமா?

இந்திய அணியின் டெஸ்ட் தொடர் தோல்வி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குச் செல்லும் அதன் பாதையை கடினமாக்கியுள்ளது. தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியும், முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியும் சிறிய புள்ளிகள் வித்தியாசத்தில்தான் இருக்கின்றன.

இன்னும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 டெஸ்ட் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் என 6 போட்டிகளில் குறைந்தபட்சம் 4 வெற்றிகள், ஒரு டிராவை இந்திய அணி பதிவு செய்தால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும்.

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வீரப் பையன்26 said:

நான் நேற்று சொன்னேன் தானே இன்றுட‌ன் விளையாட்டு முடிந்து விடும் என்று 

விளையாட்டு 3 நாள் தான் எடுத்த‌து 5 நாள் விளையாட்டை 

113 ரன்ஸ்சால் நியுசிலாந் பெரிய‌ வெற்றி😁.............................

👍..........

இந்த தோல்விக்கு பின்னால் இந்தியாவின் வளர்ச்சியை பொறுக்க முடியாத ஒரு சில உலக நாடுகளின் சதி இருக்கின்றது என்று சொல்வதைத் தவிர வேறு எதுவும் இப்போது சொல்வதற்கில்லை..........

இதற்கு ஆதாரம் என்னிடம் கேட்காதீர்கள்....... எனக்கு தெரிந்த தகவல்களை நான் சொல்கின்றேன். வேண்டும் என்றால் அந்த சில உலக நாடுகள் இங்கு வந்து இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுக்கட்டும்...........🤣........(உபயம்: உதய கம்மன்பில).

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரசோதரன் said:

👍..........

இந்த தோல்விக்கு பின்னால் இந்தியாவின் வளர்ச்சியை பொறுக்க முடியாத ஒரு சில உலக நாடுகளின் சதி இருக்கின்றது என்று சொல்வதைத் தவிர வேறு எதுவும் இப்போது சொல்வதற்கில்லை..........

இதற்கு ஆதாரம் என்னிடம் கேட்காதீர்கள்....... எனக்கு தெரிந்த தகவல்களை நான் சொல்கின்றேன். வேண்டும் என்றால் அந்த சில உலக நாடுகள் இங்கு வந்து இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுக்கட்டும்...........🤣........(உபயம்: உதய கம்மன்பில).

இந்தியா க‌ப்ட‌னை ரெஸ் விளையாட்டில் சேர்க்க‌ கூடாது , இவ‌ருக்கு ப‌தில் புஜாரா அல்ல‌து ர‌கான‌ இவைய‌ சேர்க்க‌னும்

இந்தியா அணியில் அதிக‌ம் 20ஓவ‌ரில் விளையாடும் வீர‌ர்க‌ளை தான் தெரிவு செய்து இருக்கின‌ம்

அனுப‌வ‌ வீர‌ர் புஜாரா இந்தியா அணிக்கு க‌ண்டிப்பாய் தேவை விக்கேட் விழுந்தாலும் ம‌லை போல் நின்று மெது மெதுவாய் ஆடி ர‌ன்ஸ் அடிப்பார்........................இர‌ண்டு தோல்விக்கும் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ள் தான் கார‌ண‌ம்😁........................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

இர‌ண்டு தோல்விக்கும் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ள் தான் கார‌ண‌ம்😁........................

👍..........

கோலியும், ரோகித்தும் 8, 17 என்று கூட்டுத்தொகை 8 ஆக வரவேண்டும் என்று எண்ணி எண்ணி அடித்து இருக்கின்றார்கள் போல.............🤣

அந்த நாட்களில் ஒரு புரளி இருந்தது. ஈராக் உதைபந்தாட்ட அணி போட்டிகளில் தோற்றால், சதாமின் மகன் உதய் அந்த அணி வீரர்களை இரும்புச் சங்கிலிகளால் கட்டிப் போடுவாராம் என்று.......... இப்ப ஜெய் ஷா அந்தச் சங்கிலிகளை தேடிக் கொண்டிருப்பார் போல........  

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

👍..........

கோலியும், ரோகித்தும் 8, 17 என்று கூட்டுத்தொகை 8 ஆக வரவேண்டும் என்று எண்ணி எண்ணி அடித்து இருக்கின்றார்கள் போல.............🤣

அந்த நாட்களில் ஒரு புரளி இருந்தது. ஈராக் உதைபந்தாட்ட அணி போட்டிகளில் தோற்றால், சதாமின் மகன் உதய் அந்த அணி வீரர்களை இரும்புச் சங்கிலிகளால் கட்டிப் போடுவாராம் என்று.......... இப்ப ஜெய் ஷா அந்தச் சங்கிலிகளை தேடிக் கொண்டிருப்பார் போல........  

5நாள் விளையாட்டுக்கு நிதான‌மும் பொறுமையும் முக்கிய‌ம் குருநாதா

5நாள் விளையாட்டு மூன்று நாளில் முடிந்து போய் விடுது
ப‌ழைய‌ கிரிக்கேட் ஜாம்பவான்க‌ள் நின்று பிடிப்பாங்க‌ள் வெற்றி அடையா விட்டாலும் ம‌ச்சை ச‌ம‌ நிலையில் முடிப்ப‌த‌ற்க்கு க‌டும் முய‌ற்ச்சி ப‌ண்ணுவின‌ம் 

இப்ப‌த்த‌ இள‌ம் வீர‌ர்க‌ள் எல்லாம் காசாசை பிடித்த‌வ‌ர்க‌ள் அதிர‌டியா விளையாடினால் தான் ஜ‌பிஎல் 20 ஓவ‌ர் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் எங்க‌ளை சேர்ப்பார்க‌ள் என்ற‌ நினைப்பில் விளையாடுகின‌ம்..................

கோலி ரோகித் இருவ‌ரும் ஓய்வை அறிப்ப‌து ந‌ல்ல‌ம் இவ‌ர்க‌ளுக்கு வ‌ய‌தாகிட்டு போக‌ போக‌ ஒழுங்காய் விளையாடுகின‌ம் இல்லை அணிக்கு தான் பாதிப்பு


இல‌ங்கை அணியில் அஞ்ச‌லோ ம‌த்தியூஸ் இவ‌ருக்கு தான் பெரிய‌ வ‌ய‌து ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் எல்லாம் இள‌ம் வீர‌ர்க‌ள் அது தான் அவ‌ர்க‌ளால் நிதான‌மாய் நின்று விளையாடி பெரிய‌ இஸ்கோர் அடிக்க‌ முடியுது

நியுசிலாந்த‌ இல‌ங்கை அணி சிம்பிலா வென்ற‌வை

இந்தியா போயும் போயும் சொந்த‌ ம‌ண்ணில் நியுசிலாந்திட‌ம் தோத்து இருக்கின‌ம் ஹா ஹா.......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வார‌ கிழ‌மை ந‌ட‌க்கும் மூன்றாவ‌து ரெஸ் விளையாட்டு 

மும்பை மைதான‌த்தில் ந‌ட‌ப்ப‌தால் அதிக‌ ர‌ன்ஸ்ச எதிர் பார்க்க‌லாம் மும்பை வ‌க்க‌ன்ட் மைதான‌ம் ம‌ட்டை வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்.................இதில் ஆவ‌து இந்தியா வெல்லுதா என்று பாப்போம் இதிலும் கோட்ட‌ விட்டால் இந்திய‌ வீர‌ர்க‌ள் க‌டும் விம‌ர்ச‌ன‌த்தத‌ ச‌ந்திக்க‌ வேண்டி வ‌ரும்...................நியுசிலாந் தொட‌ரை வென்ற‌ நினைப்பில் துணிந்து அடித்து ஆட‌ பாப்பின‌ம் அப்ப‌டி ந‌டந்தால் விளையாட்டு ச‌ம‌ நிலைய‌ நோக்கி போகும் 

 

இந்தியா வெல்ல‌ க‌டின‌மாய் போராடுவின‌ம்😁...........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா கொச் க‌வுத‌ம் க‌ம்பிர‌

சோச‌ல் மீடியாக்க‌ளில் க‌ழுவி ஊத்தின‌ம் இந்தியாவின் தொட‌ர் தோல்வியால்

 

வீர‌ர்க‌ள் ச‌ரியாக‌ விளையாட‌ விட்டால் கொச்சை வ‌சை பாடுவ‌த‌ ஏற்க்க‌ முடியாது........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெளதம் கம்பீரை அவமானப்படுத்த வேண்டுமென்றே ரோஹித்தும் கோலியும் விளையாடுவதுபோல தோன்றுகிறது. இந்த இருவருக்கும் கம்பீரை சுத்தமா பிடிக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெஸ்ட் தொடரில் இந்தியாவை வீழ்த்த நியூசிலாந்தின் சான்ட்னருக்கு சி.எஸ்.கே உதவியதா?

மிட்செல் சான்ட்னர் - நியூசிலாந்து - கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக

முழுநேர டெஸ்ட் பந்துவீச்சாளராக இல்லாத போதும், சமீபத்தில் புனேவில் நடந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற மிட்செல் சான்ட்னர் முக்கியப் பங்காற்றினார். 69 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்து அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி உள்ளது.

நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரிக்குப் பின் சிறந்த சுழற்பந்துவீச்சாளராக மிட்செல் சான்ட்னர் புகழ்பெற்றுள்ளார்.

உண்மையில் டேனியல் வெட்டோரி ஓய்வு பெற்றபின் நியூசிலாந்து அணியில் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் தேவை என்பதால் அணியில் சேர்க்கப்பட்டவர் சான்ட்னர்.

ஆனால், அவரிடம் இருந்து பெரிய அளவிலான ஆகச்சிறந்த பந்துவீச்சு வெளிப்படவில்லை என்பதால், அவருக்கு அதிக அளவில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

 

புனேவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில்கூட நியூசிலாந்து அணியில் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் பிரேஸ்வெல்லை எடுக்கவே அந்த அணியின் நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. மேலும், ப்ளேயிங் லெவனில் அஜாஸ் படேல், பிரேஸ்வெலுக்குதான் முக்கியத்துவம் அளிக்க முடிவுசெய்திருந்தது.

ஆனால், சொந்தப்பணி காரணமாக பிரேஸ்வெல் தொடரில் இடம் பெறமுடியாததால் சான்ட்னர் ப்ளேயிங் லெவனில் நியூசிலாந்து அணிக்குள் வந்தார்.

யார் காரணம்?

ஆசிய நாடுகளில் கிரிக்கெட் தொடருக்காக நியூசிலாந்து அணி பயணம் செய்யத் தொடங்கிய பின்புதான் சான்ட்னரின் பந்துவீச்சுத் திறமை மெருகேறி, அவரைச் சிறந்த பந்துவீச்சாளராக அடையாளம் காட்டியது.

சான்ட்னரின் பந்துவீச்சில் திடீரென ஏற்பட்ட முன்னேற்றம், நுணுக்கம், துல்லியம் ஆகியவை மெருகேற இலங்கையின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஒருவரும், ஐ.பி.எல் டி20 தொடரும், சி.எஸ்.கே அணியும்தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது.

 
மிட்செல் சான்ட்னர் - நியூசிலாந்து - கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மிட்செல் சான்ட்னர்

புனே டெஸ்ட்: முன்பும்- பின்பும்

குறிப்பாக இந்திய அணிக்கு எதிரான புனே டெஸ்ட் போட்டிக்கு முன்பாக, சான்ட்னர் டெஸ்ட் அரங்கில் ஒருமுறைகூட ஒரே இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை. சான்ட்னரின் அதிகபட்சமே ஒரு இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள்தான்.

உள்நாட்டுப் போட்டிகளிலும் ஒருமுறைதான் சான்ட்னர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். புனே டெஸ்ட் போட்டிக்கு முன்பாக சான்ட்னரின் பந்துவீச்சு சராசரி 42.16 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 91.60 ஆகவும் இருந்தது.

இலங்கை சென்றிருந்த நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை இழந்துதான் இந்தியாவுடன் களமிறங்கியது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்கூட சான்ட்னர் வெகு சிறப்பாக பந்து வீசவில்லை. கல்லே டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட்டை மட்டுமே சான்ட்னர் வீழ்த்தியிருந்தார்.

ஆனால், புனேவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப்பின் ஒரே டெஸ்டில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி, முத்தையா முரளிதரன், மறைந்த ஷேன் வார்ன், சக்லைன் முஸ்தாக், நேதன் லயன் ஆகியோரின் சாதனைக்கு இணையாக சான்ட்னர் உள்ளார்.

ஆனால் புனே டெஸ்ட் போட்டிக்குப்பின் சான்ட்னரின் டெஸ்ட் வாழ்க்கையே தலைகீழாக மாறி, அவரது பந்துவீச்சுக்கு தனி மரியாதை கிடைத்துள்ளது. புனே டெஸ்ட் போட்டிக்குப்பின் சான்ட்னரின் பந்துவீச்சு சராசரி 36.32 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 78.2 ஆகவும் மெருகேறியுள்ளது.

ஒருமுறைகூட 5 விக்கெட்டுகளை வீழ்த்தாத சான்ட்னர் புனே டெஸ்டில் இரு இன்னிங்ஸிலும் 5 விக்கெட்டுகள் என 13 விக்கெட்டுகளை வீழ்த்தி, இரு 5 விக்கெட்டுகள் சாதனையைப் படைத்துள்ளார்.

3 நாட்களில் 'தேசிய ஹீரோ'

நியூசிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் லான் ஸ்மித் வர்ணனையின்போது கூறுகையில் “புனேவில் நடந்த 3 நாட்கள் டெஸ்ட் போட்டிக்குப்பின் நியூசிலாந்தின் தேசிய ஹீரோவாக சான்ட்னர் மாறிவிட்டார்,” என்று பெருமையோடு குறிப்பிட்டார்.

கடினமான இந்திய ஆடுகளம்

சான்ட்னரின் பந்துவீச்சில் திடீரென இந்த முன்னேற்றம் ஏற்படுவதற்கு ஒரு விதத்தில் ஐ.பி.எல் டி20 தொடரும், இந்தியப் பந்துவீச்சாளர்களும், சி.எஸ்.கே அணியும் காரணமாகியுள்ளது என்பதை சான்ட்னரே பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் அனைத்தும் பெரும்பாலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக உருவாக்கப்பட்டவை. இங்கு வந்து வெளிநாட்டு சுழற்பந்துவீச்சாளர் சாதிப்பது கடினம்தான். ஏனென்றால் ஆடுகளத்தின் தன்மை, எவ்வாறு பந்துவீசுவது, எந்த வேகத்தில் வீசுவது, பந்துவீச்சில் எத்தகைய மாறுபாட்டை வெளிப்படுத்துவது என்பதைத் தெரிந்து பந்துவீச வேண்டும்.

இதற்கு முந்தைய காலங்களில் மிகச்சில வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள்தான் இந்திய மண்ணில் சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்துள்ளனர். முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், மெக்கஃபே, நேதன் லயன், ஸ்வான், சக்லைன் முஸ்தாக் என சிலர்தான் சிறப்பாகப் பந்துவீசியுள்ளனர். மற்றவகையில் அனுபவமற்ற சுழற்பந்துவீச்சாளர்களால் இந்திய மண்ணில் சாதிப்பது கடினம்.

ஆனால், இந்தியாவில் ஒரே டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் சான்ட்னர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்திருப்பது கிரிக்கெட் ஜாம்பவான்களை வியப்படைய வைத்துள்ளது.

இந்திய ஆடுகளங்களின் தன்மையை வெகு எளிதாக சான்ட்னர் அறிந்து கொள்ள அவருக்கு ஐ.பி.எல் தொடரும், சி.எஸ்.கே அணியில் எடுத்த பயிற்சியும், ஐ.பி.எல் தொடரில் இந்திய பந்துவீச்சாளர்களுடன் ஏற்பட்ட பழக்கமும் காரணமாகியுள்ளது.

 
மிட்செல் சான்ட்னர் - நியூசிலாந்து - கிரிக்கெட்

பட மூலாதாரம்,INSTAGRAM/MITCHSANTNER

ஐ.பி.எல், சி.எஸ்.கே எப்படி உதவின?

'கிரிக்இன்போ' இணையதளத்துக்கு சான்ட்னர் அளித்த ஒரு பேட்டியில், “ஒரு சிறந்த சுழற்பந்துவீச்சாளராக நான் உருமாறுவதற்கு எனக்கு ஐ.பி.எல் டி20 தொடர் வெகுவாக உதவியது. சி.எஸ்.கே அணியில் நான் இடம் பெற்றபோது அதில் இருந்த ஹர்பஜன் சிங், ரவிந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர் ஆகியோரின் நட்பும் அவர்களின் பந்துவீச்சு நுணுக்கமும் என் பந்துவீச்சை மெருகேற்ற உதவியது,” என்று தெரிவித்தார்.

"இந்திய ஆடுகளங்களைப் பற்றி பெரிதாகத் தெரியாது. ஆனால், ஐ.பி.எல் தொடரில் ஆடியபின் இந்திய ஆடுகளங்களின் தன்மையை நான் புரிந்துகொண்டேன். அதற்கு ஏற்றாற்போல் பந்துவீச்சை மாற்ற முடிந்தது. குறிப்பாக நான் கேரம்பால் பந்துவீச்சை அஸ்வின் பந்துவீச்சு முறையைப் பார்த்துதான் கற்றுக்கொண்டேன்,” என்று தெரிவித்தார்.

யார் அந்த இலங்கை வீரர்?

அது மட்டும்லலாமல் ஆசியாவில் வங்கதேசம், இலங்கை, இந்தியா போன்ற அணிகளுடன் விளையாட நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் சென்று விளையாடத் துவங்கியதிலிருந்து அந்த அணிக்குப் பந்துவீச்சு ஆலோசகராக இலங்கையின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டார்.

ஹேரத்தின் ஏராளமான ஆலோசனைகள், அவர் கற்றுக்கொடுத்த நுணுக்கங்கள் ஆகியவை சான்ட்னரின் பந்துவீச்சு மெருகேறுவதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்திருக்கிறது. புனே டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை ஃபுல் டாஸில் ஆட்டமிழக்கச் செய்யக்கூட ஹேரத்தின் ஆலோசனையில் வீசப்பட்ட பந்துவீச்சுதான் காரணம் என்று சான்ட்னர் தெரிவித்துள்ளார்.

புனே டெஸ்ட் போட்டிக்குப்பின் சான்ட்னர் அளித்த பேட்டியில் “என்னுடைய சுழற்பந்துவீச்சு மெருகேறியதற்கு ஹேரத்தின் ஆலோசனை முக்கியக் காரணம். ஹேரத் உண்மையில் சிறந்த பந்துவீச்சாளர். பந்துவீச்சில் எவ்வாறு வேகக்தைக் குறைப்பது, ஒவ்வொரு பந்திலும் வேகத்தில் மாறுபாட்டை எவ்வாறு கொண்டுவருவது என்பதை எனக்கு கற்றுக்கொடுத்தார்,” என்றார்.

"புனே டெஸ்டில் வாஷிங்டன் சுந்தர் இதேபோன்று பந்துவீச்சில் வேகத்தைக் குறைத்துப் பந்துவீசிய முறையைக் கண்டேன். அதேபோன்று ஹேரத்தும் கற்றுக்கொடுத்தது எனக்கு உதவியது. விராட் கோலியை 'ஃபுல் டாஸில்' ஆட்டமிழக்கச் செய்ய நான் பந்துவீச்சில் வேகத்தைக் குறைத்து வீசியது காரணம். இந்த நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தது ஹிராத் தான்,” எனத் தெரிவித்துள்ளார்.

 
மிட்செல் சான்ட்னர் - நியூசிலாந்து - கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெட்டோரிக்குப் பின் கிடைத்த அடையாளம்

இந்தியத் தொடருக்கு சான்ட்னர் வருவதற்கு முன்புவரை பெரிதாக அறியப்படாத வீரராகவும், பந்துவீச்சாளராகவும் இருந்தார். ஆனால் ஒரே டெஸ்டில் உச்சத்துக்கு சென்றுவிட்டார்.

கடந்த 1992-ஆம் ஆண்டு, பிப்ரவரி 5 ஆம் தேதி ஹேமில்டன் மாகாணத்தில் வைகடோ நகரில் மிட்செல் சான்ட்னர் பிறந்தார். சிறுவயதிலிருந்தே பந்துவீச்சு, பேட்டிங்கில் தீவிரமாகப் பயிற்சி எடுத்த சான்ட்னர், பந்துவீச்சு ஆல்ரவுண்டராகவே வளர்ந்தார். கிரிக்கெட் விளையாடாத நாட்களில் கோல்ஃப் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

2011-ஆம் ஆண்டிலிருந்து நியூசிலாந்து வடக்கு மாவட்ட கிரிக்கெட் அணிகளில் சான்ட்னர் விளையாடி வந்தார். 2014-15 ஆம் ஆண்டில் நடந்த உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் சான்ட்னரின் ஆட்டம் வெகுவாக பாராட்டப்பட்டதையடுத்து, நியூசிலாந்தின் தேசிய அணிக்குள் இடம் பெற்றார்.

2015-ஆம் ஆண்டு நியூசிலாந்தின் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் டேனியல் வெட்டோரி ஓய்வு பெற்றபின், இடதுகை சுழற்பந்துவீச்சாளரை அந்த அணி தேடிக்கொண்டிருந்தபோது, சான்ட்னர் அடையாளம் காணப்பட்டு அவர் அணியில் சேர்க்கப்பட்டார்.

முதல்முறையாக 2015-ஆம் ஆண்டு இங்கிலாந்து பயணத்துக்கான நியூசிலாந்து அணியில் சான்ட்னர் அறிமுகமாகி ஆக்டோபர் 24-ஆம் தேதி நடந்த ஒருநாள் போட்டியில் அறிமுகமாகினார். அதற்குமுன்பாக உள்நாட்டில் சோமர்செட் கவுன்டி அணிக்கு எதிராக சான்ட்னர் 94 ரன்கள் சேர்த்தது நியூசிலாந்து நிர்வாகத்துக்கு வெகுவாக நம்பிக்கையளித்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சான்ட்னர் விளையாட வாய்ப்புக் கிடைத்தது.

சர்வதேசப் போட்டியில் சான்ட்னர் விளையாடுவதற்கு முன்பாக அவர் 19 முதல்தரப் போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவத்தைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சாம் பில்லிங்ஸ் விக்கெட்டை வீழ்த்தி சான்ட்னர் முதல் சர்வதேச விக்கெட்டை எடுத்தார். நான்காவது ஒருநாள் போட்டியில் அதில் ரஷித் பந்துவீச்சில் ஒரே ஓவரில் 28 ரன்களை விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

 
மிட்செல் சான்ட்னர் - நியூசிலாந்து - கிரிக்கெட்

பட மூலாதாரம்,INSTAGRAM/MITCHSANTNER

படக்குறிப்பு, 2018-இல் முழங்காலில் ஏற்பட்ட காயம், அறுவை சிகிச்சையால் சான்ட்னர் சிஎஸ்கே அணியில் விளையாட முடியாமல் போனது.

பகலிரவு டெஸ்டில் அறிமுகம்

இதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் சான்ட்னர் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. அதே 2015-ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பகலிரவுடெஸ்ட் போட்டியில் சான்ட்னர் அறிமுகமாகினார். டெஸ்ட் வரலாற்றில் ஒரு வீரர் பகலிரவு டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியது இதுதான் முதல்முறையாகும்.

அதன்பின் நியூசிலாந்தின் நேதன் மெக்கலம், ஜீத்தன்படேல், அஜாஸ் படேல் ஆகியோருடன் சேர்ந்து சுழற்பந்துவீச்சு வீசும் வாய்ப்பும் சான்ட்னருக்கு கிடைத்தது. இருப்பினும், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சான்ட்னரின் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை, வெற்றி நாயகனாக வலம்வர முடியாமல் பெரிதும் அறியப்படாத வீரராகவே இருந்து வந்தார்.

ஐ.பி.எல் அறிமுகம்

இதனிடையே 2018-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் சிஎஸ்கே அணி 50 லட்சம் ரூபாய்க்கு சான்ட்னரை வாங்கியது. ஆனால் அந்த ஆண்டில் முழங்காலில் ஏற்பட்ட காயம், அறுவை சிகிச்சையால் சான்ட்னர் சி.எஸ்.கே அணியில் இடம் பெற்று விளையாட முடியாமல் போனது. அதன்பின் சிஎஸ்கே அணியில்தான் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

குறிப்பாக 2019-ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கடைசிப்பந்தில் சிக்ஸர் அடித்து சி.எஸ்.கே அணியை சான்ட்னர் வெற்றி பெறவைத்த ஆட்டமும், இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 2 விக்கெட் வீழ்த்தியதும் அவரை பெரிய உயரத்துக்கு கொண்டு சென்றது.

சான்ட்னர் தனக்கு பேட்டிங் செய்யக் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறியதில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாட்லிங்குடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சான்ட்னர் முதல்முறையாக சர்வதேச டெஸ்ட் சதத்தை எட்டினார். 7-வது விக்கெட்டுக்கு வாட்லிங், சான்ட்னர் 261 ரன்கள் சேர்த்து நியூசிலாந்து அணியின் அதிகபட்ச 7-வது விக்கெட் ரன் குவிப்பு என்ற சாதனையைப் புரிந்தனர்.

இதுவரை டெஸ்ட் போட்டியில் சான்ட்னர் ஒரு சதம், 3 அரைசதங்கள் உள்பட 941 ரன்களும், ஒருநாள் போட்டியில் 3 அரைசதங்கள் உள்பட 1,355 ரன்களும், டி20 போட்டியில் ஒரு அரைசதம் உள்பட 675 ரன்களும் சேர்த்துள்ளார். டெஸ்ட் போட்டியில் சான்ட்னர் 67 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 107, டி20 போட்டியில் 115 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

புனே டெஸ்ட் போட்டிக்கு முன்புவரை பெரிதும் அறியப்படாத வீரராக இருந்த சான்ட்னரை உலகம் அறியச் செய்த பங்கு இந்திய வீரர்களுக்கும், ஐ.பி.எல், சி.எஸ்.கே அணியினருக்கும் இருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/10/2024 at 10:15, வீரப் பையன்26 said:

இந்தியா கொச் க‌வுத‌ம் க‌ம்பிர‌

சோச‌ல் மீடியாக்க‌ளில் க‌ழுவி ஊத்தின‌ம் இந்தியாவின் தொட‌ர் தோல்வியால்

 

வீர‌ர்க‌ள் ச‌ரியாக‌ விளையாட‌ விட்டால் கொச்சை வ‌சை பாடுவ‌த‌ ஏற்க்க‌ முடியாது........................

நியுசிலாந்து அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னால் இலங்கை இடது கை சுழல் பந்து வீச்சாளரான ரங்கன கேரத் உள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, vasee said:

நியுசிலாந்து அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னால் இலங்கை இடது கை சுழல் பந்து வீச்சாளரான ரங்கன கேரத் உள்ளார்.

நானும் இதை வாசித்த‌ மாதிரி இருக்கு
ர‌ங்க‌னா கேராத் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் 

அவ‌ர் நியுசிலாந் சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளுக்கு ப‌யிற்ச்சியாள‌ரா இருப்ப‌து ம‌கிழ்ச்சி🙏🥰.....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, vasee said:

நியுசிலாந்து அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னால் இலங்கை இடது கை சுழல் பந்து வீச்சாளரான ரங்கன கேரத் உள்ளார்.

மூன்றாவ‌து டெஸ்ட் மைச்சும் சில‌து இந்தியா தோக்க‌ கூடும்............இந்தியா இந்த‌ மைச்ச‌ வென்றால் தான் உல‌க‌ டெஸ்ட் ச‌ம்பிய‌ன் போட்டிக்கு தெரிவாகுமாம் அதோட‌ மீத‌ம் அவுஸ்ரேலியா கூட‌ ந‌ட‌க்க‌ இருக்கும் விளையாட்டிலும் வெல்ல‌னுமாம்

 

அவுஸ்ரேலியாவை இந்தியா அவ‌ர்க‌ளின் சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து சிர‌ம‌ம்...............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெருக்கடியில் களமிறங்கும் இந்திய அணி, தயார்நிலையில் நியூசிலாந்து - வெற்றி யாருக்கு?

IND vs NZ Test Match - Mumbai Wankhede Stadium

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மிகுந்த அழுத்தம், நெருக்கடிக்கு மத்தியில் இன்று (நவம்பர்1) மும்பை வான்ஹடே மைதானத்தில் 3வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இந்திய அணிக்கு அடுத்து வரக்கூடிய 6 டெஸ்ட் போட்டிகளும் முக்கியம். ஆகவே, வெற்றி அவசியம் என்ற நிர்பந்தத்துடன் இன்று களமிறங்குகிறது.

இந்திய அணிக்கு நெருக்கடி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு 2 முறை தகுதி பெற்றுள்ள இந்திய அணி 3வது முறையாக முன்னேறிவிடலாம் என்று எண்ணியிருந்தது. ஆனால், நியூசிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை இழந்தது, 12 ஆண்டுகளுக்குப் பின் உள்நாட்டில் டெஸ்ட் தொடரைப் பறிகொடுத்தது என அடுத்தடுத்து இரண்டு தோல்விகளைச் சந்தித்த பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கனவு தள்ளிப்போயுள்ளது.

இன்று நடக்கவிருக்கும் நியூசிலாந்துக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டி தவிர்த்து, ஆஸ்திரேலியா சென்று அந்த அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது.

 

இந்த 6 டெஸ்ட் போட்டிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெற்றால்தான், இந்திய அணி எந்தவித சிக்கலும் இன்றி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும். ஒருவேளை ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியைச் சார்ந்திருக்க வேண்டும்.

இந்திய அணி 13 டெஸ்ட் போட்டிகளில் 8 வெற்றிகள், 4 தோல்விகள், ஒரு டிரா என 98 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், வெற்றி சதவிகிதம் 62 ஆகக் குறைந்துவிட்டது. இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும், இந்திய அணிக்கும் குறைந்த அளவே வித்தியாசம் இருக்கிறது. ஆதலால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் இரு அணிகளுக்கும் முக்கியமானதாக இருக்கும்.

அது மட்டுமல்லாமல் நியூசிலாந்து அணியும் உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற 4 வெற்றிகள் மட்டுமே தேவை. இந்திய அணிக்கு எதிராக கடைசி டெஸ்டில் ஒருவேளை வெற்றி பெற்றால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றுவிட்டால் நியூசிலாந்தும் பைனலுக்கு போட்டியிடும்.

ஆதலால் இந்திய அணி நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறது. இதற்கிடையே இலங்கை, தென் ஆப்ரிக்க அணிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதில் இந்தியாவுக்குக் கடும் போட்டியாக உள்ளன.

ஆதலால், இந்திய அணிக்கு கடைசி டெஸ்டில் கிடைக்கும் வெற்றிதான் அடுத்தடுத்து வெற்றி நடை போடுவதற்கு ஊக்கமாக அமையும் என்பதால் மிகுந்த நெருக்கடியில் களமிறங்குகிறது.

 

எதிர்பாராத மோசமான ஃபார்ம்

IND vs NZ Test Match - Mumbai Wankhede Stadium

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியின் பேட்டர்கள், குறிப்பாக சீனியர் பேட்டர்கள் மோசமான ஃபார்மில் இருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன. கடந்த 2 டெஸ்ட் போட்டியிலும் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. தேவையான ரன்களை குவிக்காததுதான் புனே டெஸ்டில் தோல்வி அடைய முக்கியக் காரணம் என்று கேப்டன் ரோஹித் சர்மா வெளிப்படையாகத் தெரிவித்தார்.

"பேட்டிங்கில் எதிர்பார்த்த ரன்களை குவிக்கவில்லை, மோசமாக பேட் செய்தோம். பந்துவீச்சாளர்கள் அவர்களின் பணியைச் செய்தாலும் பேட்டர்கள் ரன் குவிப்பது முக்கியம்" என்று ரோஹித் சர்மா தெரிவித்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நெருங்கும் வேளையில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சர்ஃபிராஸ் கான், சுப்மான் கில் போன்ற பேட்டர்கள் சிறப்பாக பேட் செய்வது அவசியமாகிறது. புனே டெஸ்டில் சான்ட்னரின் வேகம் குறைந்த சுழற்பந்துவீச்சு நுட்பத்துக்கு எதிராக இந்திய பேட்டர்களின் திறமை சறுக்கிவிட்டது.

சவாலான ஆஸ்திரேலிய ஆடுகளத்தை எதிர்கொள்வதற்கு முன், பெங்களூரு டெஸ்டில் வேகப்பந்துவீச்சுக்கு 46 ரன்களில் சுருண்ட இந்திய அணி, புனே டெஸ்டில் சுழற்பந்துவீச்சுக்கு 156 ரன்களிலும், 245 ரன்களிலும் ஆட்டமிழந்தது அதன் பேட்டிங் ஃபார்மை கவலைக்குரியதாக வைத்துள்ளது.

IND vs NZ Test Match - Mumbai Wankhede Stadium

பட மூலாதாரம்,GETTY IMAGES

குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா புனே டெஸ்டில் இரு இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது, விராட் கோலி ஃபுல்டாஸ் பந்துவீச்சில் போல்டானது இருவரின் ஃபார்மையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

அது மட்டுமல்லாமல் புனே டெஸ்டில் ஜடேஜா, அஸ்வினின் பந்துவீச்சும் பெரிதாக எடுபடவில்லை. இருவரும் வழக்கமான பந்துவீச்சை மட்டுமே வெளிப்படுத்தினார்களே தவிர ஆடுகளத்திற்கு ஏற்ப தங்கள் பந்துவீச்சின் வேகத்தைக் குறைத்து, பல்வேறு பந்துவீச்சு வடிவங்களை வெளிப்படுத்த தவறவிட்டனர்.

புனே டெஸ்டில் 2வது இன்னிங்ஸில் நியூசிலாந்து பேட்டர்கள் அதிகமான ரன்கள் குவிக்க ஜடேஜா, அஸ்வின் இருவரும் ரன்களை வாரி வழங்கியது முக்கியக் காரணம்.

மும்பை வான்ஹடே டெஸ்ட் போட்டி இந்திய அணி அடுத்த கட்டத்திற்குச் செல்ல முக்கியமானது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் கடைசி டெஸ்டுக்கு இருக்கலாம் எனத் தெரிகிறது. ஜடேஜா அல்லது வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அக்ஸர் படேல் சேர்க்கப்படலாம் என விவாதிக்கப்படுகிறது.

 

தயார் நிலையில் நியூசிலாந்து

IND vs NZ Test Match - Mumbai Wankhede Stadium

பட மூலாதாரம்,GETTY IMAGES

நியூசிலாந்து அணி ஆசிய கண்டத்திற்குப் பயணம் செய்யத் தொடங்கியதில் இருந்து தீவிரமாக, திட்டமிட்ட பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த போதிலும் மனம் தளராமல் இந்திய டெஸ்ட் தொடரை எதிர்கொண்டது.

பெங்களூருவில் இந்திய அணி 46 ரன்களில் சுருண்டதை அந்த அணியினரே எதிர்பார்க்கவில்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்திய நியூசிலாந்து முதல் டெஸ்டை வென்றது. 2வது டெஸ்டில் சான்ட்னரின் பந்துவீச்சு வெற்றியை எளிதாக்கியது.

முதல்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி வென்று சாதித்தது. அந்த அணியின் அனுபவ பேட்டரும், முன்னாள் கேப்டனுமான கேன் வில்லியம்ஸன் இல்லாமல் இந்த மாபெரும் வரலாற்று வெற்றியை நியூசிலாந்து பெற்றுள்ளது.

இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்ப பந்துவீசுவது குறித்து பிரத்யேக பயிற்சிகளையும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் எடுத்துள்ளனர். குறிப்பாக இலங்கையின் ரங்கன்னா ஹிராத் இந்திய ஆடுகளங்கள் குறித்தும், அதன் தன்மை குறித்தும் துல்லியமாகக் கூறி பயிற்சி அளித்து வருகிறார்.

பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் இந்திய அணிக்கு சிறிதும் சளைக்காமல் நியூசிலாந்து அணி இருக்கிறது. நியூசிலாந்து அணியில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது எனத் தெரிகிறது. வான்ஹடே மைதானத்தில், வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக டாஸ் அமையும்.

 

வான்ஹடே மைதானம்

IND vs NZ Test Match - Mumbai Wankhede Stadium

பட மூலாதாரம்,GETTY IMAGES

வான்ஹடே மைதானத்தில் இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் 12 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது, 7 போட்டிகளில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் வென்றுள்ளன. 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

கடந்த 1988ஆம் ஆண்டு ஜான் ரைட் கேப்டன்சியில் பயணம் செய்த நியூசிலாந்து அணி, இதே மும்பை வான்ஹடே மைதானத்தில் 136 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது.

ஒருவேளை கடைசி டெஸ்டிலும் நியூசிலாந்து வென்றால், 36 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மும்பையில் வெற்றியைப் பதிவு செய்யும். கடைசியாக 2021ஆம் ஆண்டில் மும்பையில் நடந்த டெஸ்டில் நியூசிலாந்து அணியை 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

மும்பை வான்ஹடே மைதானத்தில் இதுவரை இந்தியா- நியூசிலாந்து அணிகள் இதுவரை 3 முறை மோதியுள்ளன, அதில் 2 முறை இந்திய அணியும், ஒருமுறை நியூசிலாந்தும் வென்றுள்ளன.

 

ஆடுகளம் எப்படி?

IND vs NZ Test Match - Mumbai Wankhede Stadium

பட மூலாதாரம்,GETTY IMAGES

மும்பை வான்ஹடே ஆடுகளம் எப்போதுமே பேட்டர்களுக்கு சொர்க்கபுரி. இரண்டாவது நாளில் இருந்து சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும்.

புற்கள் பெரிதாக பிட்ச்சில் இல்லை என்பதால், சுழற்பந்துவீச்சுக்கு பந்து நன்கு டர்ன் ஆகும். வேகப்பந்துவீச்சு, மிதவேகம், சுழற்பந்துவீச்சு எதுவானாலும் பந்து நன்கு பவுன்ஸ் ஆகி பேட்டர்களை நோக்கி வரும் என்பதால் ரன் குவிக்க இரு அணி பேட்டர்களுக்கும் ஏதுவாக இருக்கும்.

முதல் நாளில் பெரிதாக விக்கெட் வீழ்வது கடினமாக இருக்கும். இரண்டாவது நாளில் இருந்து ஆட்டம் மெதுவாக சுழற்பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்லத் தொடங்கும்.

டாஸ் வெல்லும் அணி யோசிக்காமல் முதலில் பேட் செய்வது உத்தமம். முதல் இரு நாட்கள் பேட்டர்களை நோக்கித்தான் பந்து வரும் என்பதால் பெரிய ஸ்கோரை அடித்துக்கொள்ள முடியும்.

அதன்பிறகு ஆடுகளத்தில் விரிசல்கள் ஏற்படும்போது, சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றாற்போல் பந்து திரும்பத் தொடங்கும். அப்போது பேட் செய்வது கடினமாக இருக்கும். சுழற்பந்துவீச்சுக்கு ஏதுவாக ஆடுகளம் மாறுவதற்கு பெரிய ஸ்கோரை அடித்துவிடுவது நல்லது.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/10/2024 at 09:09, vasee said:

நியுசிலாந்து அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னால் இலங்கை இடது கை சுழல் பந்து வீச்சாளரான ரங்கன கேரத் உள்ளார்.

 

On 31/10/2024 at 09:12, வீரப் பையன்26 said:

நானும் இதை வாசித்த‌ மாதிரி இருக்கு
ர‌ங்க‌னா கேராத் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் 

அவ‌ர் நியுசிலாந் சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளுக்கு ப‌யிற்ச்சியாள‌ரா இருப்ப‌து ம‌கிழ்ச்சி🙏🥰.....................

மன்னிக்கவும் ரங்கன கேரத் ஆப்கான் இலங்கை தொடர்களுக்கும் மட்டும் தற்காலிக சுழற்பந்துவீச்சு பயிற்சியாளாரக இருந்துள்ளார்.

5 hours ago, ஏராளன் said:

இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்ப பந்துவீசுவது குறித்து பிரத்யேக பயிற்சிகளையும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் எடுத்துள்ளனர். குறிப்பாக இலங்கையின் ரங்கன்னா ஹிராத் இந்திய ஆடுகளங்கள் குறித்தும், அதன் தன்மை குறித்தும் துல்லியமாகக் கூறி பயிற்சி அளித்து வருகிறார்.

 

நியுசிலாந்து 235 அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது, சுழல் பந்துவீச்சாளர்கள் 9 விக்கெடுக்களை கைப்பற்றி உள்ளனர் முதல் நாள் ஆட்டத்திலேயே, இந்த போட்டியில் சான்ட்னர் விளையாடவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, vasee said:

மன்னிக்கவும் ரங்கன கேரத் ஆப்கான் இலங்கை தொடர்களுக்கும் மட்டும் தற்காலிக சுழற்பந்துவீச்சு பயிற்சியாளாரக இருந்துள்ளார்.

 

On 28/10/2024 at 22:44, ஏராளன் said:

அது மட்டும்லலாமல் ஆசியாவில் வங்கதேசம், இலங்கை, இந்தியா போன்ற அணிகளுடன் விளையாட நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் சென்று விளையாடத் துவங்கியதிலிருந்து அந்த அணிக்குப் பந்துவீச்சு ஆலோசகராக இலங்கையின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டார்.

ஹேரத்தின் ஏராளமான ஆலோசனைகள், அவர் கற்றுக்கொடுத்த நுணுக்கங்கள் ஆகியவை சான்ட்னரின் பந்துவீச்சு மெருகேறுவதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்திருக்கிறது. புனே டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை ஃபுல் டாஸில் ஆட்டமிழக்கச் செய்யக்கூட ஹேரத்தின் ஆலோசனையில் வீசப்பட்ட பந்துவீச்சுதான் காரணம் என்று சான்ட்னர் தெரிவித்துள்ளார்.

புனே டெஸ்ட் போட்டிக்குப்பின் சான்ட்னர் அளித்த பேட்டியில் “என்னுடைய சுழற்பந்துவீச்சு மெருகேறியதற்கு ஹேரத்தின் ஆலோசனை முக்கியக் காரணம். ஹேரத் உண்மையில் சிறந்த பந்துவீச்சாளர். பந்துவீச்சில் எவ்வாறு வேகக்தைக் குறைப்பது, ஒவ்வொரு பந்திலும் வேகத்தில் மாறுபாட்டை எவ்வாறு கொண்டுவருவது என்பதை எனக்கு கற்றுக்கொடுத்தார்,” என்றார்.

"புனே டெஸ்டில் வாஷிங்டன் சுந்தர் இதேபோன்று பந்துவீச்சில் வேகத்தைக் குறைத்துப் பந்துவீசிய முறையைக் கண்டேன். அதேபோன்று ஹேரத்தும் கற்றுக்கொடுத்தது எனக்கு உதவியது. விராட் கோலியை 'ஃபுல் டாஸில்' ஆட்டமிழக்கச் செய்ய நான் பந்துவீச்சில் வேகத்தைக் குறைத்து வீசியது காரணம். இந்த நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தது ஹிராத் தான்,” எனத் தெரிவித்துள்ளார்.

ஆசியாவில் வங்கதேசம், இலங்கை, இந்தியா போன்ற அணிகளுடன் விளையாட நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் சென்று விளையாடத் துவங்கியதிலிருந்து அந்த அணிக்குப் பந்துவீச்சு ஆலோசகராக இலங்கையின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

 

மன்னிக்கவும் ரங்கன கேரத் ஆப்கான் இலங்கை தொடர்களுக்கும் மட்டும் தற்காலிக சுழற்பந்துவீச்சு பயிற்சியாளாரக இருந்துள்ளார்.

 

நியுசிலாந்து 235 அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது, சுழல் பந்துவீச்சாளர்கள் 9 விக்கெடுக்களை கைப்பற்றி உள்ளனர் முதல் நாள் ஆட்டத்திலேயே, இந்த போட்டியில் சான்ட்னர் விளையாடவில்லை.

நியுசிலாந் மிடில் வீர‌ர்க‌ள் ந‌ல்லா அடிச்சு ஆடினார்க‌ள்

ஜ‌டேயாவின் ஒரு ஓவ‌ரில் இர‌ண்டு விக்கேட் , ஒரு க‌ட்ட‌த்தில் 355 ர‌ன்ஸ் அடிப்பின‌ம் என்று நினைத்தேன் ஆனால் 235ர‌ன்ஸ்சுக்கை எல்லாரும் அவுட்..........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜடேஜா, வாஷிங்டன் சுழலில் சுருண்ட நியூசிலாந்து; இந்தியா 6 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறல்

இந்தியா - நியூசிலாந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி, மும்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விராட் கோலி ஒரு பவுண்டரி அடித்தநிலையில் ஹென்றியால் ரன்அவுட் செய்யப்பட்டார்
  • எழுதியவர், போத்திராஜ் . க
  • பதவி, பிபிசி தமிழுக்காக

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (நவம்பர் 1) துவங்கிய இந்தியா நியூசிலாந்து அணிக்கு இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது சுழற்பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி விரைவாகவே முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.

முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவர்கள் மட்டுமே பேட் செய்த நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் வில் யங் (71), டேரல் மிட்செல் (82) ஆகியோர் சேர்த்த ரன்கள்தான் அதிகபட்சம். இருவரையும் விரைவாக ஆட்டமிழக்கச் செய்திருந்தால் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 150 ரன்களுக்குள்தான் இருந்திருக்கும்.

முதல் இன்னிங்ஸை சீராகத் தொடங்கிய இந்திய அணி வழக்கம்போல் ரோகித் சர்மாவின் விக்கெட்டை விரைவாக இழந்தது. அதன்பின் முதல்நாள் ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருந்தபோது, திடீரென அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது.

78 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்த இந்திய அணி 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

9 விக்கெட்டுகளை வீழ்த்திய இருவர்

நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் 186 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என வலுவாக இருந்தது. ஆனால், கடைசி 48 ரன்களுக்கு மட்டும் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

நியூசிலாந்து அணியின் பேட்டிங் சரிவுக்கு வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா இருவரின் பங்களிப்பு பிரதானமாகும். ஜடேஜா 22 ஓவர்கள் வீசி 65 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், சுந்தர் 18.4 ஓவர்கள் வீசி 81 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இருவரும் சேர்ந்து 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். டெஸ்ட் போட்டியில் 14-வது முறையாக ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 
இந்தியா - நியூசிலாந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி, மும்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜாகீர்கான், இஷாந்தை முந்திய ஜடேஜா

டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஜாகீர்கான், இஷாந்த் சர்மா, இருவரையும் இந்த ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா பின்னுக்குத் தள்ளி 5-ஆவது இடத்துக்கு முன்னேறினார்.

ரவீந்திர ஜடேஜா தற்போது டெஸ்ட் போட்டியல் 314 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி அளவில் 5வது இடத்தில் உள்ளார். ஜாகீர்கான், இஷாந்த் சர்மா இருவரும் 311 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

அடுத்துவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு 3-ஆவது முறையாக இந்திய அணி தகுதி பெறுவதற்கு 6 டெஸ்ட் போட்டிகளில் குறைந்தபட்சம் 4 டெஸ்ட் போட்டிகளில் வெல்ல வேண்டும். 6 ஆட்டங்களிலும் இந்திய அணி வென்றால், எந்தவிதமான தடையும் இன்றி, இறுதிப்போட்டிக்குச் செல்லலாம்.

நியூசிலாந்துடன் மும்பையில் இன்று தொடங்கிய டெஸ்ட் போட்டியும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் இந்திய அணிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஆதலால் இன்று கட்டுக்கோப்பான பீல்டிங், பந்துவீச்சை வெளிப்படுத்தி 235 ரன்களுக்குள் நியூசிலாந்தைச் சுருட்டினர்.

 
இந்தியா - நியூசிலாந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி, மும்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரவீந்திர ஜடேஜா

அஸ்வினுக்கு சாதாரண நாள்

ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சு புனே டெஸ்ட் போட்டியிலிருந்து எதிர்பார்த்த அளவு எடுபடவில்லை. மும்பை டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸிலும் அஸ்வினுக்கு சாதாரண நாளாக அமைந்துவிட்டது.

வழக்கமாக பந்துவீச்சில் பல்வேறு உத்திகங்களைப் பயன்படுத்தி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அஸ்வினின் பந்துவீச்சு நியூசிலாந்து பேட்ஸ்மேன்களிடம் எடுபடவில்லை. டெஸ்ட் போட்டியில் ஃபார்முக்கு வராத நிலையிலும் ஆஸ்திரேலியாவுக்கு அஸ்வின் பயணிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
இந்தியா - நியூசிலாந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி, மும்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கிரிக்கெட் வீரர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

மும்பையில் கொளுத்திய வெயில்

மும்பையில் இன்று வெயில் 37 டிகிரி செல்சியஸாக சுட்டெரித்து, நண்பகலில் 41 டிகிரி வரை சென்றது. இதனால் இந்திய வீரர்கள் பீல்டிங் செய்யவும், நியூசிலாந்து பேட் செய்யவும் மிகுந்த சிரமப்பட்டனர்.

ஒவ்வொரு 3 ஓவர்களுக்கும் இடையே நீர், குளிர்பானங்கள் வீரர்களுக்கு வழங்கப்பட்டன, ஐஸ் பேக், ஐஸ் துண்டு ஆகியவற்றை வைத்து வீரர்கள் முகத்தையும், வியர்வையையும் துடைத்தவாறு இருந்தனர்.

காலை நேரத்தில் கடும் வெயிலும், காற்று குறைவாகவும், காற்றில் ஈரப்பதத்தின் அளவும் அதிகரித்து காணப்பட்டதால் வீரர்கள் வியர்வை மழையில் நனைந்து, சிறிது நேரத்தில் சோர்வடைந்தனர். இதுபோன்ற கடும் வெயிலை அனுபவித்திராத நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் டேரல் மிட்செல், வில் யங் மிகுந்த சிரமப்பட்டனர்.

பும்ராவுக்கு ஓய்வு

ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை மனதில் வைத்தும், வைரஸ் தொற்று காரணமாகவும் பும்ராவுக்கு இந்த டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்டு முகமது சிராஜ் சேர்க்கப்பட்டிருந்தார்.

சிராஜின் பந்துவீச்சு சாரசரிக்கும் கீழாகவே இருந்தது, பெரிதாக சொல்லிக் கொள்ளும் வகையில் அவர் வீசிய பந்து ஸ்விங் ஆகவில்லை, லென் லென்த்தும் (line length) கிடைக்கவில்லை.

நியூசிலாந்து திணறல்

ஆனால், ஆகாஷ் தீப், அரவுண்ட் ஸ்டெம்ப் பக்கம் வந்து பந்துவீசியதால், தொடக்கத்திலிருந்தே டேவன் கான்வே, லாதம் திணறினர். அதற்கு ஏற்றார்போல் கான்வே கால்காப்பில் வாங்கி, ஆகாஷ் தீப் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 15 ரன்களுக்கு முதல் விக்கெட்டை நியூசிலாந்து பறிகொடுத்தது.

இரண்டாவது விக்கெட்டுக்கு கேப்டன் லாதமுடன், வில் யங் இணைந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்தனர். சுந்தர், ஜடேஜா பந்துவீச வந்தபின் ரன் சேர்க்கும் வேகம் குறைந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு இருவரும் 44 ரன்கள் சேர்த்தநிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் டாம் லாதம் (28) க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

கடந்த டெஸ்டில் இந்திய அணிக்கு சிம்மசொப்னமாக இருந்த ரச்சின் ரவீந்திரா இந்த முறை நிலைக்கவில்லை. வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ரச்சின் ரவீந்திரா போல்டாகி 5 ரன்களில் ஆட்டமிழந்தார். புனே டெஸ்டில் இருந்து மூன்றாவது முறையாக சுந்தர் பந்துவீச்சில் ரவீந்திரா விக்கெட்டை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு இடைவேளைக்கு செல்லும்போது நியூசிலாந்து அணி 91 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆடுகளம் தொடக்கத்திலிருந்தே சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைத்தது. இதனால் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சில் பந்து நன்கு டர்ன் ஆகியது, சிறிது பவுன்ஸும் ஆகியது.

இந்தியா - நியூசிலாந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி, மும்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் டாம் லாதம் (28) க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார்.

வலுவான பார்ட்னர்ஷிப்

நான்காவது விக்கெட்டுக்கு வில் யங் - டேரல் மிட்செல் கூட்டணி சிறப்பாக விளையாடினர். ஜடேஜா, அஸ்வின், சுந்தர் பந்துவீச்சை சமாளித்து ஆடி ரன்களைச் சேர்த்தனர்.

வில் யங் 94 பந்துகளிலும், மிட்ஷெல் 90 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். வில் யங் இந்த டெஸ்ட் தொடரிலேயே முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்திருந்த நிலையில் இந்த பார்ட்னர்ஷிப்பை ஜடேஜா பிரித்தார்.

 
இந்தியா - நியூசிலாந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி, மும்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டேரல் மிட்செல்

ஆட்டத்தில் திருப்புமுனை

ஜடேஜா பந்துவீச்சில் வில் யங்க் ஸ்லிப்பில் இருந்த ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து 71 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தத் தருணம்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும், அடுத்து களமிறங்கிய டாம் பிளென்டல் இதே ஓவரில் ஜடேஜா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். ஜடேஜா வீசிய 45-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை நியூசிலாந்து அடுத்தடுத்து இழந்தது.

அதன்பின் நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன. கடைசி வரிசை பேட்ஸ்மேன்கள் யாரும் ஒற்றை இலக்க ரன்களைக் கடக்கவில்லை. இஷ் சோதி (7), மாட் ஹென்றி (0), அஜாஸ் படேல் (7), கிளென் பிலிப்ஸ் (17) என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

கடைசி 48 ரன்களுக்குள் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. டேரல் மிட்செல் 82 ரன்கள் சேர்த்தநிலையில் சுந்தர் பந்துவீச்சில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு டேரல் மிட்செல் அடித்த 3 சிக்ஸர்கள்தான் ஸ்கோரை ஓரளவுக்கு உயர்த்தியது.

இந்தியா - நியூசிலாந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி, மும்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் தொடங்கினர்.

ரோகித் மீண்டும் ஏமாற்றம்

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் தொடங்கினர். அதிரடியாக பவுண்டரிகள் அடித்த ரோகித் சர்மா கடந்த டெஸ்டைப் போல் நீடிக்கவில்லை. ஹென்றி பந்துவீச்சில் அவுட்சைட் ஆப்சைடு சென்றபந்தைரோஹித் சர்மா தேவையின்றி தட்டிவிட ஸ்லிப்பில் நின்றிருந்த லாதம் கேட்ச் பிடித்தார். ரோகித் சர்மா 18 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து வந்த சுப்மான் கில், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். இருவரும் விரைவாக ரன்களைச் சேர்த்தனர். நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சில் பவுண்டரி, சிக்ஸர் என அடித்தால் ரன்ரேட் வேகமெடுத்தது. 13 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை எட்டியது. இருவரின் அதிரடியான ஆட்டத்தால் 58 பந்துகளில் பார்ட்னர்ஷிப் 50 ரன்களைத் தொட்டது.

இந்தியா - நியூசிலாந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி, மும்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விராட் கோலி ஒரு பவுண்டரி அடித்தநிலையில் ஹென்றியால் ரன்அவுட் செய்யப்பட்டார்

கடைசி நேரத்தில் திணறல்

அஜாஸ் படேல் பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முற்பட்டு ஜெய்ஸ்வால் 30 ரன்கள் சேர்த்தநிலையில் க்ளீன் போல்டாகினார். முதல் நாள் ஆட்டம் முடிய சில ஓவர்கள் இருக்கையில் களமிறங்கிய முகமது சிராஜ் கால்காப்பில் வாங்கி அஜாஸ் படேலின் அதே ஓவரில் ஆட்டமிழந்தார். 18வது ஓவரில் மட்டும் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்தது.

அடுத்து களமிறங்கிய விராட் கோலி ஒரு பவுண்டரி அடித்தநிலையில் ஹென்றியால் ரன்அவுட் செய்யப்பட்டார். முதல்நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் சேர்த்துள்ளது. ரிஷப் பந்த் ஒரு ரன்னிலும், கில் 31 ரன்களிலும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சை வெற்றிகரமாகத் தொடங்கி, ரோஹித் சர்மா, கோலி என பெரிய விக்கெட்டுகளை குறைந்த ஓவர்களில் வீழ்த்தி நிம்மதி அடைந்துள்ளது. ஆடுகளம் நாளை சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால், நாளை இரு அணிகளிலும் விக்கெட் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வீரப் பையன்26 said:

நியுசிலாந் மிடில் வீர‌ர்க‌ள் ந‌ல்லா அடிச்சு ஆடினார்க‌ள்

ஜ‌டேயாவின் ஒரு ஓவ‌ரில் இர‌ண்டு விக்கேட் , ஒரு க‌ட்ட‌த்தில் 355 ர‌ன்ஸ் அடிப்பின‌ம் என்று நினைத்தேன் ஆனால் 235ர‌ன்ஸ்சுக்கை எல்லாரும் அவுட்..........................

பிளாக் கேப்ஸ் சுற்றுப்பயணம்: இலங்கை பந்துவீச்சு ஜாம்பவான் ரங்கனா ஹெராத் பயிற்சியாளர் குழுவில் இணைந்தார்

NZ ஹெரால்ட்
7 செப், 2024 06:49 காலைபடிக்க 2 நிமிடங்கள்

சேமிக்கவும்
பகிரவும்
ரங்கனா ஹெராத்தின் ஈடுபாட்டால் அஜாஸ் படேல் மற்றும் கேரி ஸ்டெட் ஆகியோர் பயனடைவார்கள். புகைப்படம் / கெட்டி படங்கள்

ரங்கனா ஹெராத்தின் ஈடுபாட்டால் அஜாஸ் படேல் மற்றும் கேரி ஸ்டெட் ஆகியோர் பயனடைவார்கள். புகைப்படம் / கெட்டி படங்கள்

  • பிளாக் கேப்ஸ் ஆப்கானிஸ்தான், சிர்லங்கா மற்றும் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் விளையாட உள்ளது
  • சக்லைன் முஷ்டாக்கின் வெற்றிடத்தை இலங்கை சுழற்பந்து ஜாம்பவான் ஒருவர் நிரப்பியுள்ளார்
  • இந்த சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, நவம்பர் இறுதியில் தொடங்கும் மூன்று டெஸ்ட்களில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது

பிளாக் கேப்ஸ் ஆசியா வழியாக தங்கள் நீண்ட பயணத்தின் முதல் மூன்று சோதனைகளில் நிலைமைகளைக் கையாள உள்ளூர் நிபுணத்துவத்தைக் கொண்டு வந்துள்ளனர் .

இலங்கையின் சுழல் ஜாம்பவான் ரங்கனா ஹெராத் - 433 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய அனுபவமிக்கவர் - சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார், மேலும் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரும் அணியுடன் பணியாற்றுவார்.

பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் பயிற்சியாளருமான சக்லைன் முஷ்டாக்கிற்குப் பதிலாக ஹெராத், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பதவியை வகிக்க பதவியில் இருந்து விலகியுள்ளார்.

ஹெராத் - விக்கெட்டுகள் அடிப்படையில் எல்லா காலத்திலும் மிகவும் திறமையான இடது கை ஆர்த்தடாக்ஸ் டெஸ்ட் ஸ்பின்னர் - அஜாஸ் படேல், மிட்செல் சான்ட்னர் மற்றும் ரச்சின் ரவீந்திரருடன் நெருக்கமாக பணியாற்ற வாய்ப்புள்ளது. திங்கட்கிழமை இந்தியாவின் நொய்டாவில் தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் அவர் அணியுடன் இருப்பார், மேலும் இந்த மாத இறுதியில் இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட அவர் அணியில் இருப்பார்.

 
 

பிளாக் கேப்ஸ் பின்னர் ஐசிசியின் இரண்டாவது தரவரிசை டெஸ்ட் அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளுக்காக இந்தியாவுக்குத் திரும்புகிறார்.

ஆப்கானிஸ்தான் டெஸ்டில் மட்டுமே ரத்தோர் அணியுடன் களமிறங்கினார்.

பயிற்சியாளர் கேரி ஸ்டெட், இந்த ஜோடி உள்ளூர் நிலைமைகள் பற்றிய நுண்ணறிவுகளுடன் குழுவிற்கு புதிய அறிவைக் கொண்டுவரும் என்றார்.

"ரங்கனா மற்றும் விக்ரம் ஆகியோரை எங்கள் சோதனைக் குழுவில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்," என்று அவர் கூறினார். “கிரிக்கெட் உலகில் இருவருமே உயர்வாக மதிக்கப்படுகிறார்கள், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பை எங்கள் வீரர்கள் உண்மையிலேயே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.

 

“குறிப்பாக எங்களின் மூன்று இடது கை மரபுவழி சுழற்பந்து வீச்சாளர்களான அஜாஸ், மிட்ச் மற்றும் ரச்சின் ஆகியோருக்கு, துணைக் கண்டத்தில் மூன்று டெஸ்ட்களில் ரங்கனாவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

"இலங்கைக்கு எதிரான எங்கள் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் மைதானமான காலியில் ரங்கனா 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், எனவே அந்த இடத்தைப் பற்றிய அவரது அறிவு விலைமதிப்பற்றதாக இருக்கும்."

1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து ஆண்கள் துணைக் கண்டத்தில் ஆறு நேரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் தடவையாக இந்த காவியச் சுற்றுப்பயணம் அமைந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில், இலங்கைக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றதற்கும் 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்ததற்கும் இடையே எட்டு மாத இடைவெளி இருந்தது. பாகிஸ்தான்.

 

இந்திய தொடருக்கும் கேரத்தும், ரத்தோரும் பயிற்சியாளராக உள்ளார்கள் என்பதனை நியுசீலன்ற் கேரல்ட் உறுதி செய்துள்ளது.

இந்த போட்டியில் இந்தியா வென்றாக வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது, இந்த போட்டியிலும் நியிசிலாந்து அணிக்காக கேரத் தனது பங்களிப்பினை செய்துவருகிறார் என நினைக்கிறேன், ஜெஸ்வால் அவுட்டாகிய அந்த ரிவர்ஸ் சுவீப் பந்து வீச்சு (முழுமையான காட்சி பார்க்கவில்லை காணொளி துணுக்கு மட்டும் பார்த்தேன்) இலங்கை அணிக்கெதிரான போட்டியில் நியுசிலாந்து அணியின் பந்து வீச்சாளரான அஜாஸ் பட்டேலிடம் கேரத் ஆட்ட நடுவில் பேசிய பின் இடது கை ஆட்டக்காரரான டிமுத் கருணாரட்னவிற்கு ஸ்கொயார் லெக்கில் ஒரு களத்தடுப்பாளரை வைத்து பந்தை கிடாயாக வீசி மட்டையாளரை இரட்டை மன நிலையில் வைத்து அவுட்டாக்கியது போலவே இதே போட்டியில் அதே லனில் அதே போல ஒரு சுவீப் ஆடும் பந்தை  ஜைஸ்வாலுக்கு சோர்ட் லெக்கில் களத்தடுப்பாலரை வத்து இரையாக பந்தை கிடயாக விசி ஜைஸ்வாலை அவுட்டாக்கியுள்ளார்.

முன்னால் இந்திய மட்டை பயிற்சியாளரும், இலங்கை சுழற்பந்து வீச்சாளரின் உதவியுடன் நியுசிலாந்து இந்த தொடரை வெள்ளை அடித்தாலும் ஆச்சரிய பட முடியாது, ஆனால் இந்தியா தனது முதலாவது இனிங்ஸில் குரைந்த பட்சம் 300 ஓட்டங்களாவது பெறவேண்டும் ஏனென்றால் 4 ஆவதாக ஆடும் இந்தியணிக்கு 150 ஒட்டங்களே இமாலய இலக்காக இருக்கும்.

 

 

Edited by vasee
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

 

ஆசியாவில் வங்கதேசம், இலங்கை, இந்தியா போன்ற அணிகளுடன் விளையாட நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் சென்று விளையாடத் துவங்கியதிலிருந்து அந்த அணிக்குப் பந்துவீச்சு ஆலோசகராக இலங்கையின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டார்.

நீங்கள் கூறியது சரிதான் ஐசிசி இணையத்தளத்தில் இரண்டு தொடர் மட்டும் குறிப்பிடப்பட்டதால்  முன்பு பதிந்தது தவறென நினைத்து அவ்வாறு பதிவிட்டேன் மேல் உள்ள பதிவில் நியுசிலாந்து கேரல்டினை கூகிள் மொழிபெயர்ப்பின் உதவியுடன் பதிந்துள்ளேன் , அதில் இந்த இந்திய தொடரிலும் அவர் பணியாற்றுகிறார் எனப்தனை உறுதிப்படுத்தியுள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

நீங்கள் கூறியது சரிதான் ஐசிசி இணையத்தளத்தில் இரண்டு தொடர் மட்டும் குறிப்பிடப்பட்டதால்  முன்பு பதிந்தது தவறென நினைத்து அவ்வாறு பதிவிட்டேன் மேல் உள்ள பதிவில் நியுசிலாந்து கேரல்டினை கூகிள் மொழிபெயர்ப்பின் உதவியுடன் பதிந்துள்ளேன் , அதில் இந்த இந்திய தொடரிலும் அவர் பணியாற்றுகிறார் எனப்தனை உறுதிப்படுத்தியுள்ளது.

இப்ப‌ நிறைய‌ கிரிக்கேட் தொட‌ர் ந‌ட‌ப்ப‌தால் 

கிரிக்கேட் செய்திக‌ள் அதிக‌ம் வ‌ருவ‌தால் எல்லாத்தையும் நினைவில் வைத்து இருக்கேலாது

 

ஒரு தொட‌ர் முடிய‌ இன்னொரு தொட‌ர் அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் விக்வாஸ் தொட‌ர் ந‌ட‌க்குது

 

வெஸ்சின்டீஸ்சில் ஒவ்வொரு தீவுக‌ளுக்கான‌ தொட‌ர் நாட‌க்குது.............எல்லாத்தை பின் தொட‌ர்ந்தால் குழ‌ம்பி போய் விடும் அண்ணா😁...............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - நியூஸிலாந்து கடைசி டெஸ்ட்: இரண்டு அணிகளும் சமஅளவில் மோதல்

image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (01) ஆரம்பமான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 14 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டு இரண்டு அணிகளும் சம அளவில் இருக்கின்றன.

0111_will_young_nz_vs_ind.png

மும்பை ஆடுகளம் சுழல்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்படவேண்டும் எனவும் முதல் நாளிலிருந்து சுழற்சி இருக்கவேண்டும் எனவும் மும்பை மைதான பராமரிப்பாளரை இந்திய அணி முகாமைத்துவம் கோரியிருந்தது.

0111_ravindr_jadeja_ind_vs_nz.png

அப்படி இருந்தும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 13 விக்கெட்களை வீழ்ந்தி இந்தியாவை துவம்சம் செய்த மிச்செல் சென்ட்னரை இந்தப் போட்டியில் நியூஸிலாந்து இணைத்துக்கொள்ளாதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் நாளன்று வீழ்த்தப்பட்ட 14 விக்கெட்களில் 11 விக்கெட்கள் சுழல்பந்துவீச்சாளர்களால் கைப்பற்றப்பட்டது. 2 விக்கெட்களை வேகப்பந்துவீச்சாளர்கள் கைப்பற்றியதுடன் விராத் கோஹ்லி அநாவசியமாக ரன் அவுட் ஆனார்.

முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 235 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

வில் யங் 71 ஓட்டங்களையும் டெறில் மிச்செல் 82 ஓட்டங்களையும் பெற்றதுடன் அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அவர்களை விட அணித் தலைவர் டொம் லெதம் அதிகபட்சமாக 28 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ரவிந்த்ர ஜடேஜா 65 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஷ்வின் 81 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

தனது 77ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ரவிந்த்ர ஜடேஜா இன்னிங்ஸில் ஒன்றில் 14 தடவையாக 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தார்.

பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இந்தியா முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 86 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஷுப்மான் கில் 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார். யஷஸ்வி ஜய்ஸ்வால் 30 ஓட்டங்களையும் ரோஹித் ஷர்மா 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அஜாஸ் பட்டேல் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

https://www.virakesari.lk/article/197683

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவால் கூட‌ பெரிய‌ இஸ்கோர் அடிக்க‌ முடிய‌ வில்லை...........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வீரப் பையன்26 said:

இப்ப‌ நிறைய‌ கிரிக்கேட் தொட‌ர் ந‌ட‌ப்ப‌தால் 

கிரிக்கேட் செய்திக‌ள் அதிக‌ம் வ‌ருவ‌தால் எல்லாத்தையும் நினைவில் வைத்து இருக்கேலாது

 

ஒரு தொட‌ர் முடிய‌ இன்னொரு தொட‌ர் அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் விக்வாஸ் தொட‌ர் ந‌ட‌க்குது

 

வெஸ்சின்டீஸ்சில் ஒவ்வொரு தீவுக‌ளுக்கான‌ தொட‌ர் நாட‌க்குது.............எல்லாத்தை பின் தொட‌ர்ந்தால் குழ‌ம்பி போய் விடும் அண்ணா😁...............................

இந்திய அணியினை நியுசிலாந்து போட்டு புரட்டி எடுப்பது என்பது அதுவும் இந்தியாவிலே என்பதால் இந்த தொடர் ஒரு ஆர்வ மிகுதியினை ஏற்படுத்தியுள்ளது அதனால் இதனை பின் தொடர்கிறேன், பெரும்பாலும் ஆட்ட முடிவில் நிலமையினை அவதானிப்பதுண்டு அல்லது யூரியூப்பில் சில வேளை கைலைற்ஸ் பார்பதுண்டு வேறு ஆட்டங்களை பின் தொடர்வதில்லை.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, வீரப் பையன்26 said:

இந்தியாவால் கூட‌ பெரிய‌ இஸ்கோர் அடிக்க‌ முடிய‌ வில்லை...........................

இந்த ஆடுகளத்தினை சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக்கியுள்ளார்கள் இந்தியர்கள் என நினைக்கிறேன், முதல் நாள் ஆட்டத்திலேயே வேகப்பந்திற்கு பெரிதும் உதவவில்லை, நியுசிலாந்து இந்த ஆட்டத்தினை 3 ஆம் நாளுக்கு எடுத்து சென்றால் இந்தியாவின் நிலை இன்னும் மோசமாகும், ஒப்பீட்டளவில் இந்திய அணியே சிறந்த சுழல் பந்து வீச்சாளரைக்கொண்ட அணி இந்தியணிக்கு தற்போது வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ளது ஆனாலும் நியுசிலாந்து அணியினை 150 ஓட்ட்டங்களுக்குள் சுருட்டி விட்டால் வெற்றி வாய்ப்புண்டு.

இந்த ஆடுகளம் புனே ஆடுகளம் போல பந்து தரையில் பட்டு வேகமாகவோ அல்லது சமச்சீரற்ற பந்து எழுச்சி கொண்ட ஆடுகளம் அல்ல என கூறுகிறார்கள், பந்து தரையில் பட்டு மெதுவாக எழுவதாக கூறுகிறார்கள்(தூசி உள்ள) பெரும்பாலும் அதிக வெப்பம் காரணமாக தரை விரைவாக உடைய வாய்ப்புண்டு அத்துடன் பந்து வீச்சாளர்களின் பாதத்தடத்தினால் உருவாக்கப்படும் பகுதிகளில் பந்தினை கணிப்பது சிரமாகும், இந்தியா குறைந்த  ஓட்டங்களில் விரைவாக நியுசிலாந்தினை அவுட்டாக்கினால் வெற்றி பெறலாம் என கருதுகிறேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இந்திய அணியினை நியுசிலாந்து போட்டு புரட்டி எடுப்பது என்பது அதுவும் இந்தியாவிலே என்பதால் இந்த தொடர் ஒரு ஆர்வ மிகுதியினை ஏற்படுத்தியுள்ளது அதனால் இதனை பின் தொடர்கிறேன், பெரும்பாலும் ஆட்ட முடிவில் நிலமையினை அவதானிப்பதுண்டு அல்லது யூரியூப்பில் சில வேளை கைலைற்ஸ் பார்பதுண்டு வேறு ஆட்டங்களை பின் தொடர்வதில்லை.

என‌க்கு வோர் அடிச்சால் டெஸ்ட் ம‌ச்சையும் பாப்பேன்

ஆனால் எல்லா டெஸ்ட் விளையாட்டும் பார்ப்ப‌து கிட‌யாது 

 

த‌மிழ‌க‌ வீர‌ர் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் கிடைச்ச‌ வாய்ப்பை ச‌ரியாக‌ ப‌ய‌ன் ப‌டுத்துகிறார்...............................

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.