Jump to content

‘திராவிடம்’ இல்லாத தமிழ்த்தாய் வாழ்த்து: என்ன சர்ச்சை? பாடலின் வரலாறும், பின்னணியும் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்த்தாய் வாழ்த்து, ஆளுநர்

பட மூலாதாரம்,DOORDARSHAN

படக்குறிப்பு, பிரசார் பாரதி அலுவலகத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆன்.என்.ரவி கலந்துகொண்ட விழா
18 அக்டோபர் 2024, 13:23 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

சென்னை பிரசார் பாரதி அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை, அக்டோபர் 18) நடந்த ஒரு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.

இந்த விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் 'திராவிட நல் திருநாடும்' என்ற வரி விடுபட்டது. இது அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு எதிர்வினையாற்றியிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் ‘திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்’, என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்,” என்று பதிவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்ட பிரசார் பாரதி

இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து பிரசார் பாரதி இது குறித்து ஒரு விளக்கக் குறிப்பை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில் 'தவறுக்கு மன்னிப்பு கோருவதாக' அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

அதில், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு சிறப்பித்த, சென்னை தூர்தர்ஷன் நடத்திய இந்தி மாத நிறைவு விழாவில், ‘தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின்போது கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியைத் தவறவிட்டு விட்டார்’, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “தமிழையோ, அல்லது தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவரிடம் இல்லை. வேண்டும் என இதனை யாரும் செய்யவில்லை,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இனவாதக் கருத்து’ - ஆளுநரின் பதில்

இந்தச் சர்ச்சை குறித்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதிவுக்கு எதிர்வினையாற்றியிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஸ்டாலினின் குற்றச்சாட்டு ‘பொய்யானது’ என்றும், ‘இனவாதம்’ என்றும் கூறியிருக்கிறார்.

எக்ஸ் தளத்தில் அவரது பதிவில், “ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச் சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் [மு.க.ஸ்டாலினுக்கு] நன்றாகத் தெரியும்,” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், “நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன். அதில், சமீபத்திய நடவடிக்கையாக வட கிழக்கு மாநிலத்தில் தமிழை பரப்ப அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுஹாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது,” என்று கூறியிருக்கிறார்.

ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது,” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், ‘இனவாதக் கருத்துக்களையும் தவறான குற்றச்சாட்டுகளையும் அவசரகதியில் முதலமைச்சர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் தான் இருப்பதாக’ ஆளுநர் ஆர்.என். ரவி கூறியிருக்கிறார்.

 
தமிழ்த்தாய் வாழ்த்து, ஆளுநர்

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் வரலாறு

இந்நிலையில், 'நீராரும் கடலுடுத்த' என்று தொடங்கும் இந்தப் பாடலின் பின்னணி என்ன? இது எப்படி தமிழ்த்தாய் வாழ்த்தாக அங்கீகரிக்கப்பட்டது? என்பதன் வரலாற்றுப் பின்னணியைப் பார்க்கலாம்.

இந்தப் பாடல் தமிழறிஞர் பெ.சுந்தரனார் 1891-இல் வெளியான தமது 'மனோன்மணீயம்' என்ற நாடக நூலுக்கு எழுதிய தமிழ் வாழ்த்துப் பா.

1970ம் ஆண்டு ஜூன் மாதம், கருணாநிதி முதல்வராக இருந்தபோது இது தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டது.

அன்றே நீக்கப்பட்ட வரிகள்

அப்படி ஏற்கும்போது சம்ஸ்கிருதம் போல அழியாத தமிழின் சிறப்பாக சுந்தரனார் குறிப்பிடும் சில வரிகளை நீக்கிவிட்டே அது அதிகாரப்பூர்வ வாழ்த்தாக ஏற்கப்பட்டது.

"பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்

உன் உதரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்

ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன்"

என்பவையே அந்த நீக்கப்பட்ட வரிகள்.

 
தமிழ்த்தாய் வாழ்த்து, ஆளுநர்
படக்குறிப்பு, தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான அரசாணை

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில்...

மோகன ராகத்தில், திஸ்ர தாளத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் அமைத்த இசையில் அது பாடப்படவேண்டும் என்பது அரசாணை. இதில் எங்கும், இந்தப் பாடல் இசைக்கப்படும் போது எழுந்து நிற்பதைப் பற்றியோ, அவமதிப்பவர்களுக்கான தண்டனை பற்றியோ குறிப்பு இல்லை.

தமிழ்த்தாய் வாழ்த்து அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னணி குறித்து தமிழ்வளர்ச்சித் துறையின் முன்னாள் இயக்குநரும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான மா.ராசேந்திரனிடம் கேட்டோம்.

1970-ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது, கடவுள் வாழ்த்துக்கு மாற்றாக அரசு நிகழ்ச்சிகளில் பாடுவதற்கு தமிழ்த்தாய் வாழ்த்து அறிமுகம் செய்யப்பட்டது என்றார்.

மதச் சார்பற்ற அரசுக்கு மத நம்பிக்கையோடு கூடிய ஓர் இறைவணக்கப் பாடலைப் பாடுவது பொருத்தமாக இருக்காது என்பதால், மொழி வணக்கப்பாடல் அறிமுகமானது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

 
தமிழ்த்தாய் வாழ்த்து, ஆளுநர்

பட மூலாதாரம்,FACEBOOK/PG/KALAIGNAR89

படக்குறிப்பு, 1970-ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது தமிழ்த்தாய் வாழ்த்து அறிமுகம் செய்யப்பட்டது

பாரதிதாசன் பாடல் பரிசீலனை

பாரதிதாசன் பாடல் ஒன்றும் இதற்கான பரிசீலனையில் இருந்தது என்று கூறிய ராசேந்திரன், இறுதியில் சுந்தரனாரின் பாடல் சிறப்பாக இருந்ததாக முடிவு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்டது என்றார் அவர்.

நல்லிணக்கத் தன்மையுள்ள பாடல் இது என்று குறிப்பிட்ட ராசேந்திரன், மாநிலத்தின் ஆட்சி மொழியாக உள்ள ஒரு மொழியை அரசு நிகழ்ச்சிகளுக்கு முன்பு வாழ்த்திப் பாடுவது பண்பான செயல் என்றும் குறிப்பிட்டார்.

தமிழ்த்தாய் வாழ்த்து, ஆளுநர்

பட மூலாதாரம்,TWITTER

படக்குறிப்பு, 2018-ஆம் ஆண்டு காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது அமர்ந்தபடி இருந்தது சர்ச்சையானது

இதற்கு முந்தைய சர்ச்சை

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைச் சுற்றி அரசியல் சர்ச்சை உருவாவது இது முதல்முறை அல்ல.

2018-ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது மட்டும் எழுந்து நின்றிவிட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது அமர்ந்தபடி இருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.

இதுகுறித்து அப்போது பிபிசி தமிழிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத சங்கரமடத்தின் மூத்த நிர்வாகி ஒருவர், தமிழை அவமதிக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்று கூறியிருந்தார். "மடத்தில் பாடப்படும் வழிபாட்டுப் பாடல்களுக்கு கூட பக்தர்கள் எழுந்து நிற்பார்களே ஒழிய மடாதிபதிகள் எழுந்து நிற்க மாட்டார்கள்" என்று கூறிய அவர் "இது எங்கள் சம்பிரதாயம்" என்றும் தெரிவித்தார்.

தேசிய கீதம் பாடும்போது மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்றாரே ஏன் என்ற கேள்விக்கு, "தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காவிட்டால் அது குற்றம்" என்று கூறிய அந்த நிர்வாகி, "தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒன்றா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதையடுத்து 2021-ஆம் ஆண்டு, அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் நடத்தும் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

(இந்தக் கட்டுரையில் 2018-ஆம் ஆண்டு காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது அமர்ந்தபடி இருந்தது சர்ச்சையானபோது பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையிலிருந்து தகவல்கள் எடுத்தாளப் பெற்றுள்ளன.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே!"
இப்பாடலில் இரண்டாம் பத்தியில்....
"கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே"
என தனித்தே வருகின்றது.
இவ்வரிகளை சேர்த்துப் பாடினால் முன்னுள்ள திராவிட திருத்தம் தெரிந்துவிடும் அபாயம் தவிர்க்கவே தவிர்க்கப்பட்டிருக்கின்றது.
"தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும்" என்பதை.
"திராவிடநல் திருநாடும்" என மாற்றி பாடபட்டிருக்கிறது.
அறத்தோடு சிந்தியுங்கள்
அடையாளம் மறைக்கும் சூழ்ச்சி யாரால் இயற்றப்பட்டது என்பதை அறிந்துத் தெளிக தமிழினமே.?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடம் எனும் சொல் தமிழ்நாட்டிற்கு ஏன்?
தேவையில்லாத ஆணிய புடுங்குவதே சிறப்பு.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.