Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

image

இஸ்ரேலின் கடற்கரை நகரமான சீசரியாவில் அமைந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது ஹெஸ்புல்லா  அமைப்பினர் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, லெபனான் எல்லையை கடந்து இஸ்ரேலுக்குள் 3 ஆளில்லா விமானங்கள் நுழைந்ததாகவும், அதில் 2 ஆளில்லா விமானங்கள் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், மற்றொரு ஆளில்லா விமானம் கட்டிட சுவற்றை தாக்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சம்பவத்தின்போது பெஞ்சமின் நெதன்யாகுவும், அவரது மனைவியும் இல்லத்தில் இல்லை எனவும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/196652

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

மற்றொரு ஆளில்லா விமானம் கட்டிட சுவற்றை தாக்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சம்பவத்தின்போது பெஞ்சமின் நெதன்யாகுவும், அவரது மனைவியும் இல்லத்தில் இல்லை

அவருக்கு தெரிந்திருக்கு, தமக்கு இலக்கு வைக்கப்படுமென்று. யாராவது சொல்லிக்குடுக்காமலா விடப்போகிறார்கள்?



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.