Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கட்டிப் பிடிப்பதற்கு மூன்று நிமிடங்கள்தான் அனுமதி

Dunedin (Neuseeland) விமான நிலையத்தில் இருக்கும் அறிவித்தல் பலகையைப் பார்க்கும் போது, கோபமும் வருகிறது அதே நேரம் சிரிப்பும் சேர்ந்து வருகிறது. பயணிகளை வழியனுப்பும் போது  கூட வருபவர்கள் அவர்களைக் கட்டி அணைத்துக் கொள்வதற்கு மூன்று நிமிடங்கள்தான் அனுமதி என்று Dunedin விமான நிலைய அறிவித்தல் பலகையில் இருக்கிறது.

விமான நிலையத்தின் தலைவர் டானியல் டி போனோ (Daniel De Bono) ஒரு வானொலி நேர்காணலில் இப்படிச் சொல்கிறார், “ஒரு ஆய்வின்படி, கட்டிப்பிடிக்கும்போது, "காதல் ஹோர்மோன்" ஒக்ஸிடாசினை ("love hormone" oxytocin)  வெளியிட 20 வினாடிகள் போதுமானது. ஆகவே மூன்று நிமிடங்கள் கட்டிப் பிடிப்பதே அதிகமானது. யாராவது மூன்று நிமிடங்களுக்கு மேல் கட்டிப் பிடிக்க விரும்பினால் விமான நிலையத்தில் உள்ள வாகனத் தரிப்பிடத்துக்குச் சென்று நீண்ட நேரம் கட்டிப் பிடிக்கலாம் என்கிறார்.

மனுசனுக்குக் கட்டிப் பிடிப்பதில் என்ன பிரச்சினையோ?

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, Kavi arunasalam said:

மனுசனுக்குக் கட்டிப் பிடிப்பதில் என்ன பிரச்சினையோ?

கட்டிப்புடிச்சு வழியனுப்புறம் எண்டு சொல்லிப்போட்டு 10,15 நிமிசமாய் என்னென்ன ஜில்மா வேலையள் செய்தினமோ ஆருக்குத்தெரியும்? 😎

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kavi arunasalam said:

கட்டிப் பிடிப்பதற்கு மூன்று நிமிடங்கள்தான் அனுமதி

Dunedin (Neuseeland) விமான நிலையத்தில் இருக்கும் அறிவித்தல் பலகையைப் பார்க்கும் போது, கோபமும் வருகிறது அதே நேரம் சிரிப்பும் சேர்ந்து வருகிறது. பயணிகளை வழியனுப்பும் போது  கூட வருபவர்கள் அவர்களைக் கட்டி அணைத்துக் கொள்வதற்கு மூன்று நிமிடங்கள்தான் அனுமதி என்று Dunedin விமான நிலைய அறிவித்தல் பலகையில் இருக்கிறது.

விமான நிலையத்தின் தலைவர் டானியல் டி போனோ (Daniel De Bono) ஒரு வானொலி நேர்காணலில் இப்படிச் சொல்கிறார், “ஒரு ஆய்வின்படி, கட்டிப்பிடிக்கும்போது, "காதல் ஹோர்மோன்" ஒக்ஸிடாசினை ("love hormone" oxytocin)  வெளியிட 20 வினாடிகள் போதுமானது. ஆகவே மூன்று நிமிடங்கள் கட்டிப் பிடிப்பதே அதிகமானது. யாராவது மூன்று நிமிடங்களுக்கு மேல் கட்டிப் பிடிக்க விரும்பினால் விமான நிலையத்தில் உள்ள வாகனத் தரிப்பிடத்துக்குச் சென்று நீண்ட நேரம் கட்டிப் பிடிக்கலாம் என்கிறார்.

மனுசனுக்குக் கட்டிப் பிடிப்பதில் என்ன பிரச்சினையோ?

வாகன parking தான் பிரச்சனை.  

Canada வில் வாகனத்திலிருந்து இறக்கிவிடும் பல  இடங்களுக்குக்  Kiss and Ride என்று பெயருண்டு. பயணிகளை இறக்கிவிட்டு, கட்டியணைத்து ஒரு முத்தத்தைக் கொடுத்தவுடன் வாகனத்தை எடுத்து நகர்ந்துவிட வேண்டும்.  இல்லையேல் பின்னால் இறக்கிவிடக் காத்திருக்கும் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி ஏற்படும். 

வாகன நெரிசலைக் குறைக்கத்தான் இந்த ஏற்பாடு. 😁

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 20/10/2024 at 22:11, குமாரசாமி said:

கட்டிப்புடிச்சு வழியனுப்புறம் எண்டு சொல்லிப்போட்டு 10,15 நிமிசமாய் என்னென்ன ஜில்மா வேலையள் செய்தினமோ ஆருக்குத்தெரியும்? 😎

சும்மாவா கவிஞன் பாடெழுதினான்………..?

“ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளைத்தாச்சி”  

10,15 நிமிசமாய் என்றால்???????🤔😳

  • Haha 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.