Jump to content

ரவி செனிவிரத்னவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி - உதயகம்மன்பில


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
image

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவிசெனிவிரத்னவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இமாம் அல்விஸ் விசாரணை குழுவின் அறிக்கையினை பகிரங்கப்படுத்துவதற்கான செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/196760

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - ரவி செனிவிரத்னவிற்கு முன்கூட்டியே அனைத்து விடயங்களும் தெரியும் - உதயகம்மன்பில குற்றச்சாட்டு

image

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்னவிற்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

udaya_55.jpg

பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பில் 2019 ஜனவரி மாதம் முதல் 2019 ஏப்ரல் 21 திகதி வரை ரவி செனவிரத்னவுக்கு 13 புலனாய்வு தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற தேசிய மற்றும் சர்வதேச புலனாய்வு தகவல்களுக்கமைய ரவி செனவிரத்ன செயற்பட்டிருந்தால் மிலேட்சத்தனமான குண்டுத்தாக்குதலை தடுத்திருக்கலாம்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு தேர்தல் காலத்தில் ஒத்துழைப்பு வழங்கியவர்களின் பெயர்கள் இமாம் மற்றும் அல்விஸ் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதால் அவர் இவ்விரு அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை.

https://www.virakesari.lk/article/196758

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.