Jump to content

அரசுடன் இணையமாட்டோம்! - அமெரிக்க தூதுவரிடம் தமிழ் பிரதிநிதிகள் திட்டவட்டம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகாரப்பகிர்விற்கு சாதகமாக இருக்கமாட்டார்கள் என தமிழ் தரப்பு பிரதிநிதிகள் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் அமெரிக்க தூதுவரை சந்தித்த வேளையிலேயே மேற்படி விடயம் எடுத்துக்கூறப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இந்த சந்திப்பின் போது அமெரிக்க தூதுவர் முக்கியமாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அநுரகுமார திஸாநாயக்க எப்படி தமிழர்களை கையாள்வார் என்பது தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.

அந்தவகையில், கடந்த காலத்தில் ஜே.வி.பியினர் செய்த செயற்பாடுகளை சுட்டிக்காட்டி இவர்கள் அதிகார பகிர்விற்கு சாதகமாக இருக்கமாட்டார்கள் என்பதை அவரிடம் சுட்டிக்காட்டினோம்.

அதேவேளை நாங்கள் அரசாங்கத்தில் சேர்வதோ அல்லது அதன் ஒரு அங்கமாக இருப்பதோ என்பது நடக்கமுடியாத விடயம். தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் அப்படியான விடயத்தை செய்ய மாட்டோம் எனவும் தெரிவித்தோம்.

இது தொடர்பில் பொதுத் தேர்தல் முடிந்த பிற்பாடு ஜனாதிபதியுடன் கதைப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

july-siththar-sri-251024-seithy%20(1).jp

https://seithy.com/breifNews.php?newsID=324573&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தானே உங்கடை பெரிய பிரச்சனை.இந்த நிலைப்பாட்டடால் மக்கள் வேறு தெரிவுகள் எடுப்பது தவிர்க்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இது தொடர்பில் பொதுத் தேர்தல் முடிந்த பிற்பாடு ஜனாதிபதியுடன் கதைப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

 

அதிகாலை வந்தால்
அழகாய் என் வானில் நீ
அணையாத சூரியன் ஆகிறாய்
நெடு நேரம் காய்ந்து
கத கதப்பு தந்தவுடன்
நிலவாய் உருமாறி நிற்கிறாய்

உன்னை இன்று பார்த்ததும்
என்னை நானே கேட்க்கிறேன்
வைரம் ஒன்றை கையில் வைத்து
எங்கே தேடி அலைந்தாயோ

உண்மை என்று தெரிந்துமே
நெஞ்சம் சொல்ல தயங்குதே
கைகள் கோர்த்து பேசினாலே
தைரியங்கள் தோன்றுமே

கதைப்போமா
கதைப்போமா
கதைப்போமா(கதைப்போமா)
ஒன்றாக நீயும் நானும்தான்

கதைப்போமா(கதைப்போமா)
கதைப்போமா(கதைப்போமா)
கதைப்போமா
நீ பேச பேச காயம் ஆறுமே

கதைப்போமா(கதைப்போமா)
கதைப்போமா(கதைப்போமா)
கதைப்போமா

கதைப்போமா
கதைப்போமா
கதைப்போமா
ஒன்றாக நீயும் நானும்தான்

கதைப்போமா
கதைப்போமா
கதைப்போமா

நீ பேச பேச காயம் ஆறுமே

---இப்படிக்கு கூத்தமைப்பான்ஸ் அண்ட் ஸ்ரீலங்கன் ப்ரசிடெண்ட்ஸ் 
இப்படி பேசிப்பேசியே ஒருத்தர் மேல போயிட்டார் ...இப்போ அடுத்த கேப்மாரிஸ் அசெம்ப்ல்ட் 
ஆனா நாங்க பேசணும்னா இலங்கை ஒட்டறையாட்சியின் மேல் சத்தியப்பிரமாணம் எடுத்து இலங்கை அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கிக்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் ஆகினால்தான் கதைப்போம்  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர் சங்குச்சின்னத்திலா தேர்தலில் நிற்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரைச்ச மாவ அரைப்போமா,
தோய்த்த துணியை  தோய்ப்போமா... 😂

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.