Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

2024 ஆம் ஆண்டில் இதுவரை தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்று சுகாதார அமைச்சகத்தின் மருத்துவப் பொருட்கள் பிரிவு தெரிவித்துள்ளது.

தர சோதனையில் தோல்வியடைந்த 71 மருந்துகளில், சுமார் 39 மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை, பத்து மருந்துகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை, மற்றவை சீனா, கென்யா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து வந்தவை.

இதுகுறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர், இந்தியா உலகின் முன்னணி மருந்து உற்பத்தியாளர்களில் ஒருவர் என்றும், இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளில் தரக் குறைபாடு ஏற்படுவது சாதாரண நிகழ்வு என்றும் கூறினார்.

“எனினும், தரமற்ற மருந்து எதுவும் சந்தையில் இல்லை என்பதை உறுதி செய்கிறோம்,” என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததாகக் கண்டறியப்பட்ட மருந்துகளில், சில திரும்ப அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அல்லது நிறுத்தப்பட்டுள்ளன.

https://thinakkural.lk/article/311396

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுதான் தடவிக் குத்தல்... நல்ல திசைகாட்டி முள்ளுகள்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஏராளன் said:

தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததாகக் கண்டறியப்பட்ட மருந்துகளில், சில திரும்ப அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அல்லது நிறுத்தப்பட்டுள்ளன.

இந்திய எதிர்ப்பு நன்றாக வேலை செய்கின்றது ...இந்தியா உனக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும் ....
...சிறிலாங்கா நீங்கள் கியூபாவிலிருந்து இறக்குமதி செய்யுங்கோ...அதற்கும் பணம் இந்தியா தரும் பயப்பட வேண்டாம்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ஏராளன் said:

இதுகுறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர், இந்தியா உலகின் முன்னணி மருந்து உற்பத்தியாளர்களில் ஒருவர் என்றும், இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளில் தரக் குறைபாடு ஏற்படுவது சாதாரண நிகழ்வு என்றும் கூறினார்.

இறந்தவர்கள் எவரும் இதுவரை முறைப்பாடு செய்யவில்லை.

ஆனபடியால் தரக்குறைவாக இருந்தாலும் நீங்கள் இன்றே வாங்கிப் பாவியுங்கள்.

  • Like 2

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.