Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
செவ்வாய் [29/10/2024] தரணியில் வந்த என் பேரப்பிள்ளைக்கு, மனமார வாழ்த்துக்கள்!! வியாழன் இரவு, 31 /10 / 2024 என் கையில் வீடு வந்து தழுவினார்.
இதை விட, வேறு என்ன பிறந்த நாள் 01/11/2024 பரிசு, தேவை எனக்கு ?
 
"மழலையின் மொழி கேட்டு"
 
"மழலையின் மொழி கேட்டு
நான்பேசும் மொழி மறந்தேன்
மழலையின் மொழி பேசி
என்னையே நான் மறந்தேன்!"
 
"மழலையின் குறும்பு கண்டு
துன்பங்கள் ஓடி மறைந்தன
மழலையின் புன்னகை பார்த்து
இதயமே வானில் பறந்தன!"
 
"குழலூதும் குழவியை பார்த்து
குறும்பு கண்ணனை மறந்தேன்
குழந்தை காட்டும் நளினத்தில்
குமரி ஊர்வசியை மறந்தேன்!"
 
"குழவி தளர்நடை கண்டு
குதூகலித்து நான் மகிழ்ந்தேன்
குழவியின் கொஞ்சிக் குலாவுதலில்
குரத்தி வள்ளியை மறந்தேன்!"
 
"தரணியில் ஓர்நிலவு கண்டேன்
மழலையில் பலநிலவு கண்டேன்
தரணியில் குழந்தை ஆடுகையில்
மயிலும் மலைத்து நிற்கக்கண்டேன்!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
May be an image of 1 person, baby, smiling and hospital
 
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, kandiah Thillaivinayagalingam said:
செவ்வாய் [29/10/2024] தரணியில் வந்த என் பேரப்பிள்ளைக்கு, மனமார வாழ்த்துக்கள்!! வியாழன் இரவு, 31 /10 / 2024 என் கையில் வீடு வந்து தழுவினார்.
இதை விட, வேறு என்ன பிறந்த நாள் 01/11/2024 பரிசு, தேவை எனக்கு ?

உங்கள் பேரனுக்கும் உங்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் பேரபிள்ளை பல்லாண்டு காலம் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ மனதார வாழ்த்துகின்றேன்🙏

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.