Jump to content

மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

கிழக்கு மாகாணத்தான் எனக்குத்தான் தெரியும் தவிர யு.கே. சிட்டிசனுக்கு தெரியாது கண்டியளோ..?

ஏன் யாழ்பாணத்தானான உங்களுக்கு தெரியாது என சொன்னால் -  உங்கள் பிரதேசவாதம் அப்பட்டமாக தெரிந்து விடும் என்பதால் யூகேயை இழுக்கிறீர்களாக்கும்.🤣

இங்கே முன்பே எழுதியதுதான் வடக்கு கிழக்கின் எந்த ஊரும் என் சொந்த ஊரே. எனக்கே நான் எந்த ஊரவன் என்ற பிரக்ஞை இல்லாத போது உங்களுக்கும் அது தேவையில்லை🤣

தகவல்கள் பிழை என்றால் சுட்டலாம். பொத்தாம் பொதுவில் நான்-கிழக்குமாகாணத்தான்,  non-கிழக்குமாகாணத்தான் என்ற பிரதேசவாத கதைகளை விட்டு விட்டு.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

கருணாவுக்குத்தான் வாக்கு போட்டேன் என்கிறீர்கள் - நீங்கள் அம்பாறை வாக்காளர் எனில் பிள்ளையானுக்கு எப்படியிம் போட்டிருக்க முடியாதே🤣. கள்ள வாக்கு போட்டால்தான் உண்டு.

என்னால் முடியும். திருமணத்திற்கு முன் அம்பாறை மாவட்டம் திருமணத்திற்கு பின் மட்டக்களப்பு மாவட்டம்

 

5 hours ago, goshan_che said:

அப்போதும் காணி பிரச்சனை, உங்கள் ஆன்மாவிற்கு நெருங்கிய கல்முனை விடயம் எல்லாமும் இருந்தது? ஒரு கல்லைத்தன்னும் தூக்கிப்போட்டாரா

ஆமா போட்டார் கல்முனை உங்களை வரவேற்கிறது என்று காத்தான்குடி போல் அரபு கலந்து  உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்த வளைவு மீது டோசரை போட்டார்.

தரவைப் பிள்ளையார் வீதி கடற்கரைப் பள்ளி வீதி என்று மாற்றப்படாமல் காப்பாற்றியதும் அவர் தான்.

5 hours ago, goshan_che said:

மட்டு அம்பாறையில் எந்த தமிழ் தேசிய கட்சிக்கும் ஆதரவில்லை. பிள்ளையான், கருணாவுக்கு ஆதரவு என்பதே உங்கள் நிலைப்பாடாக இருந்தது

தவறு அமலையும் ஆதரித்து எழுதியிருக்கிறேன். இனிமேல் அபிவிருத்தி அரசியல் செய்தால் தான் கோவணமாவது மிஞ்சும் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெலுங்கர் பற்றி வந்தாலே காணுமே ஈழத்தமிழர்களையும் தெலுங்கு வம்சா வழி என்று நிறுவ படாத பாடு படுவார் அவர் என்னமோ ஆறடியில் தவறுதலாக ................................................................................நிறுவ முற்படுகிறார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

என்னால் முடியும். திருமணத்திற்கு முன் அம்பாறை மாவட்டம் திருமணத்திற்கு பின் மட்டக்களப்பு மாவட்டம்

ஆனால் ஒரே தேர்தலில் இரெண்டு இடத்திலும் வாக்கு போட்டால் மாமியார் வீட்டுக்குத்தான் போகணும். ஆகவே கருணாவுக்கு நீங்கள் போட்ட தேர்தலில் பிள்ளையானுக்கு போட்டிருக்க முடியாது.

6 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஆமா போட்டார் கல்முனை உங்களை வரவேற்கிறது என்று காத்தான்குடி போல் அரபு கலந்து  உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்த வளைவு மீது டோசரை போட்டார்.

தரவைப் பிள்ளையார் வீதி கடற்கரைப் பள்ளி வீதி என்று மாற்றப்படாமல் காப்பாற்றியதும் அவர் தான்.

நான் கேட்டது கல்முனை தரமுயர்த்தல், காணிகள் அபகரிக்கப்பட்டது பற்றி என்ன செய்தார் என. எதுவுமில்லை.

 அலிசாகிர் மெளலானாவால் வழிநடத்தப்படும், நடத்தப்பட்ட,  கருணா முஸ்லிம்களுக்கு எதிராக தமிழருக்கு இதுவரை ஒரு ஒழுங்கான விடயமும் செய்ததில்லை. சும்மா வாய்சவாடல் விடுவார்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

தவறு அமலையும் ஆதரித்து எழுதியிருக்கிறேன். இனிமேல் அபிவிருத்தி அரசியல் செய்தால் தான் கோவணமாவது மிஞ்சும் என்று.

இதை நீங்கள் முன் வைத்த போது கருணா, பிள்ளையானை ஆதரிப்பது போல் இல்லை இது என நானும் எழுதினேன்.

ஆனால் கடைசியில் மட்டகளப்பு கண்ட அபிவிருத்தி என்ன? போஸ்டல் டிபார்ட்மெண்டில் கொஞ்ச பேருக்கு பியூன் வேலை, அமலின் மகனுக்கு ரோயல் கல்லூரி அனுமதி. அமலுக்கு நல்ல வெளிநாட்டு வாகனம். சொல்லி கொள்ளும் படி வேறேதும் உண்டா?

ஆங்கிலத்தில் humility என்பார்கள். தமிழில் சுய அடக்கம் எனலாம். It’s time you have some humility.

தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரித்து அது தவறாக போன போது - அந்த நிலை எடுத்தவர்கள் மீது என்ன குதி குதித்தீர்கள்?

ப்ரொக்சிக்கு ஆதரவு கொடுத்த தேசிக்காய்கள் என்றீர்கள்.

அப்போ இப்போ நீங்கள் யார்? தெரிந்த கள்ளர்களை ஆதரித்த - ஜிப்சிக்கி ஆதரவு கொடுத்த பாவக்காயா, கோவக்காயா இல்லை தொங்கி கொண்டிருக்கும் முந்திரியா🤣.

திரி எங்கோ (சாதிய வசவு) தொடங்கி, எங்கோ வந்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, goshan_che said:

ஆனால் ஒரே தேர்தலில் இரெண்டு இடத்திலும் வாக்கு போட்டால் மாமியார் வீட்டுக்குத்தான் போகணும். ஆகவே கருணாவுக்கு நீங்கள் போட்ட தேர்தலில் பிள்ளையானுக்கு போட்டிருக்க முடியாது.

அதைத்தான் நானும் சொன்னேன் பிள்ளையானுக்கு போட்டது நான் என்று சொன்னது நீங்கள்

நீங்கள் சொன்னதற்கு நீங்கள் தான் ஆதாரம் தர வேண்டும். என்னிடம் கேட்கக்கூடாது.

45 minutes ago, goshan_che said:

மட்டகளப்பு கண்ட அபிவிருத்தி என்ன? போஸ்டல் டிபார்ட்மெண்டில் கொஞ்ச பேருக்கு பியூன் வேலை

ஒ போஸ்டல் டிபார்ட்மென்ட் வேலை என்றால் அவ்வளவு கேவலாமா...? ஆனா இது கூட உங்களால் முடியவில்லையே என்று நான் தேசிக்காய்ஸை பார்த்து கேட்டால் திசைதிருப்புகிறேன் என்பீர்கள். இது திசைதிருப்பல் இல்லை Hypocrisy ஐ தொட்டுக் காட்டல். 

 

1 hour ago, goshan_che said:

நான் கேட்டது கல்முனை தரமுயர்த்தல், காணிகள் அபகரிக்கப்பட்டது பற்றி என்ன செய்தார் என. எதுவுமில்லை

சில விடயங்களை செய்துவிட்டு என்னால் முடியும் என்றார் நம்பினோம். புரியாதது மாதிரி நடிப்பவருக்கு திரும்ப திரும்ப ஒரு விடையத்தை சொல்ல முடியாது. தேசிக்காய்களால் முடியாவிட்டால் பேரிக்காயை தேடுவேன். பேரிக்காயால் முடியாவிட்டால் முந்திரிக்காயை தேடுவேன். இம்முறை தேசிய மக்கள் சக்தி என்கிற புடலங்காய் தான் என் தெரிவு. 

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ வந்து விட்டோம். தேர்தல் திருவிழா களைகட்டுவதால் இன்னும் பலதிரிகளில் சந்திக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ஆனா இது கூட உங்களால் முடியவில்லையே என்று நான் தேசிக்காய்ஸை பார்த்து கேட்டால் திசைதிருப்புகிறேன் என்பீர்கள்

இல்லை அவர்களும் இப்படியான வேலைகளை எடுத்து கொடுத்து…பின்னர் வந்து அதை காட்டி வாக்கும் கேட்டுள்ளார்கள்.

யுத்த முடிவில் ஆசிய வங்கி போன்றவை மத்திய அரசின் மூலம் செய்த சிலதுக்கு பிள்ளையான் உரிமை கோருவதை தவிர….நீங்கள் முந்தள்ளிய பிள்ளையான், கருணா, அமல் எந்த வகையிலும் மட்டு-அம்பாறைக்கு ஒரு ஆணியையும் புடுங்கவில்லை. திருமலையை திரும்பியும் பார்க்கவில்லை.

இவர்களில் அமல் ஒரு போதும் பிரதேசவாததை கையில் எடுக்கவில்லை. ஏனைய அரசியல்வாதிகள் போல அவரும் சுயநலமி.

புதிதாக முயற்சித்தேன், அவரை நம்பி ஏமாந்தேன் என நீங்கள் சொல்வது ஏற்புடையது.

ஆனால் கருணா, பிள்ளையான் அப்படி அல்ல.

அவர்களும் நீங்களும், கூட்டமைப்பின் கையாலாகத, சுயநல, ப்ரொக்சி அரசியலை - யாழ்ப்பாணத்தவர் அல்லது யாழ் அரசியல்வாதிகள் கிழக்கை வஞ்சிக்கிறார்கள் என்று பொய் பிரச்சாரம் செய்தீர்கள்.  நீங்கள் யாழ் அரசியல்வாதிகள் என்றீர்கள், ஆனால் உங்கள் ஹீரோக்கள் இருவரும் நேரடியாக யாழ் மக்கள் மீதே பழியை போட்டார்கள். இது உங்களுக்கு ஏனோ உறுத்தவில்லை.

அவர்கள் கிழக்கு மக்களை போலவே வடக்கு மக்களையும் வஞ்சித்தனர். ஆனால் அந்த உண்மையை நீங்கள் கிழக்கு மக்களிடம் கூறவில்லை.

உங்களுக்கும் சங்கிஆனத்தத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

அவர் மத அடிப்படையில், நீங்கள் பிரதேச அடிப்படையில்.

இந்த பிரதேசவாத நஞ்சை விதைப்பது இலகு, ஆனால் நிலம் நஞ்சானபின் அதை அகற்றுவது கடினம்.

கிழக்கில் மட்டும் அல்ல. வடக்கிலும்தான். 

தமிழ் அரசியலை, யாழ்பாணம், மட்டகளப்பு தேர்தல் தொகுதிக்கான அரசியல் என சுருக்கும் பேரினவாத சதி கிட்டதட்ட வென்று விட்டது, இதில் சுமந்திரன் வகையறாக்கள் போலவே, இப்போ வந்து நம்பி கெட்டோம் என கையை பிசையும் நீங்களும் பங்காளிகளே.

இப்போ என் பி பி என்கிறீர்கள். அப்போ உங்கள் அரசியல் ஒரு முழுவட்டத்தை அடைந்து விட்டது. தலைவரில் விசுவாசி என தொடங்கி, பிரதேசவாத பஸ்சை பிடித்து, ஜேவிபியின் இனப்பிரச்சனையா கிலோ என்ன விலை? என்ற அரசியலுக்கு வந்து விட்டீர்கள்.

உங்களை போல பலரும் இதே இடத்துக்கு வந்துள்ளார்கள்தான். 

இருக்கும் ஒற்றுமையை ஒவ்வொரு பக்கத்தால் இழுத்து சிதறடித்த பின் இதுவே ஒரே வழி என்பதை உணர்கிறேன்.

பிகு

வேறு திரிகளில் சந்திப்போம். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/11/2024 at 15:32, island said:

தென்னிந்திய மொழிகள் எல்லாம் தமிழில் இருந்து காலவொட்டதில் பிரிந்தன என்றால் எல்லோரும் ஒரே மரபு இன மக்கள்  தானே. இதிலென்ன தமிழ் பெரிய மேளம், தெலுங்கு சின்ன மேளம் என பிரிப்பு என்பது புரியவில்லை.

எமக்கு தொடர்பில்லாத பக்கத்து நாட்டில் சாதிப்பிரிவினைகளை ஊக்குவிக்கும் கதையாடல்களை மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வமாக உள்ள நாம் எமது நாட்டில் இன ஒடுக்குமுறை என்று ஒலமிடுவது முரண்பாடாக தெரியவில்லையா? 


ஆம் , எந்த வேற்றுமையும் இருக்க கூடாது.

அனால் , யதார்த்தம் அப்படி இல்லை.

இவை வரலாறு. எதோ ஒரு விதத்தில் உதவும்  வேற்றுமையை தணிக்க என்பது எனது நம்பிக்கை.

சில வரலாற்றை பார்த்து பெருமை அடைவோம்.

வெட்கி தலை குனியக்  கூடியது, ஒரு பகுதி சமூகத்தை வதைத்தது, கைவிட்டது போன்ற எல்லாவற்றையும் எம்மவர்கள் செய்தனர் என்பதை அறிவது நன்மை  என்றே நினைக்கிறன்.

வரலாற்றில் அங்கெ நடந்தது அநேகமாக எல்லாம் இங்கேயும் நடந்தது.

மூடிபோட்டு போகமுடியாது. 

மூடிபோட்டு போவதன் விளைவின் மறுதாக்கமாக ஓர்ம  வடிவம் சித்தார்த் போல, 50 -100 வருடங்கள் கடந்து, அல்லது அவர் போன்றவர்களின் சந்ததிகள் அறியும் போது வரும். 

சித்தார்த்  இப்போது சொல்லியதுக்கு (சித்தார்த் சரி என்று சொல்லவில்லை), சாதியின் பெயரால் அவரின் முனைய சந்ததிக்கு கொடுமை இழைக்கப்பட்டதையும் ஏற்றுக்கொண்டு,  சித்தார்த் செய்த  தவறையும்  சுட்டிக்காட்டி, இரு பகுதியும் தமது தவறையும் ஒப்பொக்கொண்டு  பகிரங்க வருத்தம் , மன்னிப்பு கேட்டு, வழங்கி கடந்து செல்வதே, இவற்றை தணிக்கும். இது ஒரு உதாரணம் மாத்திரமே.


தமிழ் இலக்கியவாதிகள் சந்திப்பில் தான் அறிகிறேன், youtube வழியாக,   தென்மராட்சியில் சாதியின் பெயரால் துரத்தி சென்று உயிர் தப்ப மரம் எறியவரை, மரத்தை தறித்து விழுத்தி கொன்றதாக, இது நடந்தது 1960 களில் (youtube இல்  தமிழ் இலக்கியவாதிகள் சந்திப்பில் சொல்லப்பட்டது); அதே தென்மராதியில் jcb  கொண்டு தேர் இழுக்கப்படுகிறது, மக்கள் இருந்தும், அவர்களை சாதியின் அடிப்படையில் தேர் இழுப்பதை தடுத்து. 

எங்களுக்குள் உள்ள கரும்ப் பொட்டுகள், சிரங்குகள், எழும்பு கூடுகள் ... வெளியே வர வேண்டும். அதற்கு இது ஒரு சிறிய வெளி.

தொடர்ப்பில்லாதது என்று எங்கு வரையறை  என்பது புரியவில்லை.

  • Thanks 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.