Jump to content

சகோதர இனத்தின் நிர்வாகப் பயங்கரவாதம் கொடிகட்டிப் பறக்கின்றது, கிழக்கு நமதே என்று முழங்குவோம் - பிள்ளையான்

colomban

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1000996148.jpg

(பாறுக் ஷிஹான்)

யாழ் தலைமைகளின் அந்த நரித்தந்திரத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அவர்களின் எடுபிடிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க நீங்கள் உறுதி எடுங்கள்.கடந்த தேர்தலில் யாழ்ப்பாணத் தலைமைகள் இங்கே நிராகரிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை மாற்றுத்தலைமையின் அவசியத்தை எம்மக்கள் நன்கு  உணர்த்தியுள்ளனர். அதன் காரணமாகவே அம்பாறை மக்களுக்குரிய தலைமைத்துவத்தை வழங்க தமிழ் மக்கள் விடுதலை புலிகளாகிய நாம் முன்வந்துள்ளோம் என   தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் படகு சின்னத்தில்  01ம் மற்றும் 09ம் இலக்கங்களில்  வேட்பாளர்களாக போட்டியிடும் அற்புதலிங்கம் விஷ்கரன் மற்றும் செல்வநாயம் ரசிகரன் ஆகியோரை ஆதரித்து காரைதீவு கிராமிய குழு  மற்றும் கிராம பொது அமைப்புகளால் திங்கட்கிழமை  (04) மாலை ஒழுங்கு செய்யப்பட்ட மாபெரும் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதன்போது கல்முனை குட்டி ஜிம் இளைஞர்கள் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் வெற்றிக்கு கரம்கோர்த்து பணியாற்ற இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது 

இம்முறை பாராளுமன்றப் பொது தேர்தலில் எமது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியானது கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலும் போட்டியிடுகின்றது. அம்பாறை மாவட்ட தமிழர்களின் பிரதிநிதித்துவம் பறிபோய்விடக்கூடாது என்பதனால் கடந்த காலங்களில் இங்கு போட்டியிடுவதிலிருந்து நாம் விலகியிருந்தோம்.

கடந்த தேர்தலில் யாழ்ப்பாணத் தலைமைகள் இங்கே நிராகரிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை மாற்றுத்தலைமையின் அவசியத்தை எம்மக்கள் நன்கு  உணர்த்தியுள்ளனர். அதன் காரணமாகவே அம்பாறை மக்களுக்குரிய தலைமைத்துவத்தை வழங்க தமிழ் மக்கள் விடுதலை புலிகளாகிய நாம் முன்வந்துள்ளோம். மட்டக்களப்பைப் பொறுத்தவரையில் நாம் ஆழ வேரூன்றி அகலக்கால் பதித்துள்ளோம். அங்கே நடந்துள்ள  அபிவிருத்திப் பணிகளைப் போன்று அம்பாறை மக்களுக்காகவும் எதிர்காலத்தில் எம்மால் செய்ய முடியும்.

கடந்த தேர்தலில் தோல்வி கண்ட அந்த போலித் தமிழ் தேசியவாதிகள் அம்பாறை மக்களின் ஆணைக்கு மதிப்பளிப்பவர்களாக இருந்திருந்தால் அவர்கள் இந்தத் தேர்தலில் அம்பாறையில் போட்டியிடுவதைத் தவிர்த்திருக்க வேண்டும். ஆனால் ஒன்றுக்கு இரண்டாக வந்து இங்கே வீடென்றும் சங்கென்றும் பிரித்து நின்று அம்பாறை மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கத் துணிந்துள்ளனர். நிச்சயம் அவர்கள் வெல்லப்போவதில்லை. கடந்த தேர்தல்ளில் ஒன்றாக நின்றபோதே அவர்கள் தோல்வி அடைந்தார்கள். ஆனால் தற்போது எப்படியாவது ஆயிரம்  இரண்டாயிரம் என்று சேகரித்த  அவ்வாக்குகளால் தங்களுக்கு ஒரு தேசிய பட்டியலை பெற்றுக்கொள்வதே அவர்களது தந்திரமான நோக்கமாகும். யாழ் தலைமைகளின் அந்த நரித்தந்திரத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அவர்களின் எடுபிடிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க நீங்கள் உறுதி எடுங்கள்.

ஆயுதப் போராட்டக்களத்தில் ஆகுதியானவர்களின் குடும்பங்களும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களும் அல்லலுறுவது தொடர்ந்த வண்ணமே உள்ளது. முன்னாள்  போராளிகள் வாழ்வாதாரங்களின்றி கைவிடப்பட்டுள்ளனர். கல்முனை  காரைதீவு  திருக்கோவில் போன்ற பிரதேசங்களில் உள்ள அரச உத்தியோகத்தர்கள் நிர்வாக நெருக்கடிகளுக்கு  உள்ளாகி அலைகின்றனர். கடலோர மீனவர்களுக்குரிய நவீன வசதிகள் மிகவும் பற்றாக்குறையாக உள்ளது. ஏழை   மக்கள் சமூக பிரச்சினைகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாற்றுத் திறனாளிகளின் எதிர்காலம் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

 சம்மாந்துறை  நாவிதன்வெளி மற்றும் பொத்துவில் போன்ற பிரதேசங்களில் வாழும் எமது மக்கள் கவனிப்பாரற்றவர்களாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கின்றார்கள். சகோதர இனத்தின் நிர்வாகப் பயங்கரவாதம் கொடிகட்டிப் பறக்கின்றது. வீரமுனைக் கிராமத்து மக்களுக்கு ஒரு வரவேற்பு கோபுரம் அமைக்கும் உரிமை கூட நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வந்துள்ளது. இத்தனைக்கும் வீரமுனைப் பிரதேசமானது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்புத் தமிழகத்துடன் கருக்கொண்ட வரலாற்றுப் புகழ் மிக்க இடமாகும். இறுதியாக எமது பிரசன்னமே அந்தப் பிரச்சினையை பகிரங்கப்படுத்தியது.

பல கிராமங்களில் தரமான பாடசாலைகள் இல்லை. மின்சார வசதிகள் இல்லை. தரமான வீதிகள் இல்லை. பல இடங்களில் வைத்தியசாலை வசதிகளில்லை. இருக்கும் வைத்தியசாலைகள் எவ்வித வசதிகளும் இன்றி கைவிடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மாணவர்களுக்குரிய போக்குவரத்து வசதிகள் இல்லை. விளையாட்டு மைதானங்கள் இல்லை. இறந்து போகின்ற மனிதர்களுக்குரிய மயானங்கள் கூட உரிய வசதிகளின்றி காடுமண்டிக் கிடக்கின்றன. குறிப்பாக பொத்துவில் செங்காமம் கிராம மக்கள் அடிப்படை வசதிகளற்ற நிலையில் பல அவலங்களோடு வாழ்கின்றனர். இக் கிராமத்தில் ஒரு பாடசாலைகூட இல்லாமல் அடிப்படைக் கல்வியைக் கூட தொடர முடியாத நிலையே காணப்படுகின்றது.

ஏன் சாகாமம் குடிநிலம் பகுதிகளைப் பாருங்கள் அங்கே உள்ள மீனவர்கள் வலைகள் கூட இன்றி வாடுகின்றனர். யானை வேலிகள் இல்லை. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இரவு நேரத்தினை கழிக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சுத்தமான குடிநீரின்றி மக்கள் அல்லலுறுகின்றனர். அக்கரைப்பற்று தமிழர்கள் அடிமைச்சந்தைகளைப்போல கூலி சந்தைகளை நம்பி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களது வாழ்வு என்பது இழப்பதற்கு உழைப்பைத் தவிர எதுமில்லை என்னும் கையறு நிலையில் வந்து நிற்கின்றது.

இன்று கவனிப்பார் அற்றவர்களாக  உறுதிமிக்க அரசியல் பிரதிநிதிகள்  அற்றவர்களாக  சுருங்கச் சொன்னால் அரசியல் குரலற்ற  ஒரு அனாதை குழுவினராக சீரழிந்து கிடக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இவையனைத்தையும் நாம் மாற்றியாக வேண்டும். அம்பாறை தமிழர்களுக்கு மட்டுமல்ல கிழக்குத் தமிழர்கள் அனைவருக்கும் எதிர்காலத்தில் ஒரு அரசியல் மற்றும் சமூக பாதுகாப்பு இயக்கமாக தலைமை கொடுக்க நாங்கள் முன்வந்துள்ளோம்.

ஆகவே எமது கரங்களைப் பலப்படுத்த முன்வாருங்கள். கிழக்கு மக்களின் குரலான தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் கீழ் ஓரணியாய் திரண்டு எமது பலத்தினை நிரூபிப்போம். 'கிழக்கு நமதே' என்று முழங்குவோம் என குறிப்பிட்டார்

https://www.jaffnamuslim.com/2024/11/blog-post_454.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, colomban said:

முதலமைச்சராக இருந்த போது   இந்த குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்திருக்கலாமே??    ஆனால் சொத்துக்கள் மட்டும்   அளவு கணக்கில்லாமால்.  சேர்க்க முடிந்து உள்ளது  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, colomban said:

யாழ் தலைமைகளின் அந்த நரித்தந்திரத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அவர்களின் எடுபிடிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க நீங்கள் உறுதி எடுங்கள்.கடந்த தேர்தலில் யாழ்ப்பாணத் தலைமைகள் இங்கே நிராகரிக்கப்பட்டுள்ளனர்

38 minutes ago, colomban said:

கிழக்குத் தமிழர்கள் அனைவருக்கும் எதிர்காலத்தில் ஒரு அரசியல் மற்றும் சமூக பாதுகாப்பு இயக்கமாக தலைமை கொடுக்க நாங்கள் முன்வந்துள்ளோம்.

ம் ..... பிரதேசவாதத்தை கிளப்பி வாக்குபறிக்க நினைக்கிறார். முதலமைச்சராக இருந்தபோதுமக்களின் குறைகளை  நிவர்த்தி செய்ய வக்கில்லை, இப்போ யாரை குறை கூறுகிறரர்? சிறையிலிருந்தவண்ணம் தேர்தலில் வெற்றி பெற முடியுமென்றால், அந்த மக்களின் தேவைகளை ஏன் பூர்த்தி செய்ய முடியவில்லை?   பிரதம மந்திரி பதவியும்  உங்களுக்கு தரப்படும், அதை வைத்து உங்களுக்கு ஒரு பியூனை கூட நியமிக்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.