Jump to content

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்புக்கு குவியும் வாழ்த்துகள் - யுக்ரேன், இஸ்ரேல், இந்தியா கூறியது என்ன?

அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வாகியுள்ளார்.

வெற்றிமுகத்தில் இருக்கும் போதே ஃபுளோரிடாவில் உள்ள தனது பிரசாரக் குழுவின் தலைமையகத்தில், ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப் "இது அமெரிக்க மக்களுக்கு கிடைத்த அற்புதமான வெற்றியாகும். இது அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசமாக மாற்றும்" என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து இந்திய பிரதமர் மோதி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட உலகத் தலைவர்கள் பலரும் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய பிரதமர் வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“அதிபர் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற என் நண்பர் டொனால்ட் டிரம்பிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா-அமெரிக்கா இடையிலான உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறேன்.” என்று கூறியுள்ளார்.

“நமது மக்களின் மேம்பாட்டிற்காகவும், உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளம் ஆகியவற்றை மேம்படுத்தவும் நாம் ஒன்றிணைந்து பாடுபடுவோம்.” என்று மோதி தனது பதிவில் கூறியுள்ளார்.

அந்தப் பதிவில் டொனால்ட் டிரம்ப் உடனான தனது பழைய புகைப்படங்களைப் பகிர்ந்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார் மோதி.

அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,NARENDRAMODI/X

படக்குறிப்பு, டிரம்பை வாழ்த்திய நரேந்திர மோதி

இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டொனால்ட் டிரம்புக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், "வரலாற்றின் மிகப்பெரிய மறுவரவிற்கு (Comeback) வாழ்த்துகள்! இதுவொரு மாபெரும் வெற்றி” என்று கூறியுள்ளார்.

“வரலாற்று சிறப்புமிக்க வகையில் வெள்ளை மாளிகையின் அதிகாரத்தை நீங்கள் மீண்டும் கைப்பற்றியிருப்பது, அமெரிக்காவிற்கு ஒரு புதிய தொடக்கத்தையும், இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவிற்கு ஒரு வலிமையான மறுசீரமைப்பையும் வழங்குகிறது" என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

 
அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, வெள்ளை மாளிகையின் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றியிருப்பது, அமெரிக்காவிற்கு ஒரு புதிய தொடக்கத்தைத் தரும் என நெதன்யாகு கருத்து

பிரிட்டன் பிரதமர் வாழ்த்து

பிரிட்டன் பிரதமர் கிய்ர் ஸ்டார்மரும் டொனால்ட் டிரம்புக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

"வரவிருக்கும் ஆண்டுகளில் உங்களுடன் பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன். மிக நெருக்கமான நட்பு நாடுகள் என்ற முறையில், சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை பாதுகாப்பதில் நாம் ஒன்றாக, உறுதுணையாக நிற்கிறோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

"வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு முதல் புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பம் வரை, பிரிட்டன் -அமெரிக்கா சிறப்பு உறவு, வரவிருக்கும் ஆண்டுகளில் தொடர்ந்து முன்னேற்றம் காணும் என்பதை நான் அறிவேன்." என்றும் கிய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

 
அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிரிட்டன் பிரதமர் கிய்ர் ஸ்டார்மரும் டொனால்ட் டிரம்புக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

யுக்ரேன் அதிபர் வாழ்த்து

யுக்ரேன் அதிபர் வொலொதிமிர் ஸெலென்ஸ்கி, டொனால்ட் டிரம்பை வாழ்த்தியுள்ளார். "சர்வதேச விவகாரங்களில் "வலிமை மூலம் அமைதி" என்ற கொள்கையைக் கொண்ட டிரம்பை நான் வாழ்த்துகிறேன். இது தான் யுக்ரேனுக்கும் அமைதியை வழங்கும். இதனை நாம் இருவரும் இணைந்து நடைமுறைப்படுத்துவோம்," என்று கூறி தன்னுடைய வாழ்த்துகளை பதிவு செய்திருக்கிறார் அவர்.

"டொனால்ட் டிரம்பின் தலைமையின் கீழ் வலிமையான அமெரிக்காவை நான் எதிர்பார்க்கிறேன். அமெரிக்காவின் இரு கட்சிகளும் யுக்ரேனுக்காக வழங்கிய வலிமையான ஆதரவை நாங்கள் நம்பியுள்ளோம்.

இரு நாடுகளுக்கும் நன்மை கிடைக்கும் வகையில் அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த ஒன்றாக பணியாற்ற நாங்கள் விரும்புகிறோம். ஐரோப்பாவில் ஒரு வலுவான ராணுவ சக்தியைக் கொண்ட யுக்ரேன் ஐரோப்பா மற்றும் அட்லாண்டிக் பிரதேசத்தில் உள்ள சமூகங்களுக்கான நீண்ட கால அமைதி மற்றும் பாதுகாப்பினை எங்கள் கூட்டணி நாடுகள் உதவியுடன் நிலை நிறுத்த உறுதி பூண்டுள்ளோம்.

அதிபர் டிரம்பை நேரில் பார்த்து வாழ்த்தவும், அமெரிக்காவுடனான யுக்ரேனின் மூலோபய கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தவும் ஆவலுடன் இருக்கிறேன்," என்று அவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 
அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விரைவில் நேரில் சந்தித்து வாழ்த்துகளை கூற ஆவலுடன் இருக்கிறேன் என யுக்ரேன் அதிபர் கூறியுள்ளார்.

ஹங்கேரி பிரதமர் வாழ்த்து

டிரம்பின் நெருங்கிய கூட்டாளியாக அறியப்பட்ட ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் தன்னுடைய வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.

"உலக நாடுகள் அனைத்திற்கும் தேவையான முக்கியமான வெற்றி இது," என்று குறிப்பிட்ட அவர், "அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மறுவரவு இது," என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராக போட்டியிட முடிவு செய்த போது அதனை ஆர்பன் வெளிப்படையாக ஆதரித்தார். 2016ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள உறுப்பு நாடுகளில் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவு வழங்கிய முதல் மற்றும் ஒரே தலைவர் இவர் மட்டுமே.

 
அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,REUTERS/X

படக்குறிப்பு, ஹங்கேரி பிரதமருடன் டொனால்ட் டிரம்ப்

வாழ்த்திய இதர தலைவர்கள்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், டிரம்பை வாழ்த்தியுள்ளார். அவருடைய வாழ்த்து செய்தியில், "அமைதிக்காகவும் செழுமைக்காகவும் மரியாதையுடனும் லட்சியத்துடனும்," முன்பு ஒன்றாக பணியாற்றியதைப் போன்று தொடர்ந்து பணியாற்ற தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ருட்டே, டிரம்பின் தலைமை "எங்களின் கூட்டாளிகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவும் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும். அவருடன் தொடர்ந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்," என்று கூறியுள்ளார்.

நேட்டோவை டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்திருக்கிறார். கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் ஐரோப்பிய உறுப்பு நாடுகள், பாதுகாப்பிற்காக போதுமான நிதியை வழங்குவதில்லை என்று குற்றம் சுமத்தியிருந்தார்.

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி , "இரு நாடுகளும் அசைக்க முடியாத கூட்டணி, பொது மதிப்புகள் (Common Values), வரலாற்று ரீதியிலான நட்பால் இணைந்திருக்கிறது. இது மூலோபாய கூட்டணி. வருங்காலத்தில் இந்த கூட்டணி வலுப்பெறும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்," என்று கூறி வாழ்த்துகளை பதிவு செய்திருக்கிறார்.

சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, "அமெரிக்க அதிபர் தேர்தலானது அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரம். அமெரிக்க மக்களின் தேர்வை நாங்கள் மதிக்கிறோம்," என்று கூறினார்.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜக்ரோவா, "அமெரிக்கா அதன் ஜனநாயகத்தை முதலில் சரி செய்ய வேண்டும். அதன் சொந்த தோல்விகளுக்கு மற்றவர்களை குற்றம் சொல்லக் கூடாது," என்று கூறினார். கடந்த முறை தேர்தலின் போது ரஷ்யாவின் தலையீடு அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கம் செலுத்தியது என்று குற்றம் சுமத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

us-result.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டொனால்ட் டிரம்ப்: இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக அவரது ஆட்சி எப்படி இருக்கும்?

இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்தார் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.

அவரின் புதிய ஆட்சி எப்படி இருக்கும் என்பதற்கான அறிகுறிகளை அவரின் கடந்த கால ஆட்சியே கூறியள்ளதாக சில அரசியல் விமர்சகர்கள் தங்களின் கருத்துகளை முன்வைக்கின்றனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு அவர் எங்கே எதை விட்டுச் சென்றாரோ அதைத் தொடர்வார் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றும் திட்டம்

அப்படி விட்டுச்சென்ற பல திட்டங்களில், அமெரிக்காவின் தெற்கு எல்லையில், குடியேறிகள் வருவதை தடுக்க தடுப்புச் சுவர் எழுப்புவதும் ஒன்று. அவரின் அந்தத் திட்டத்திற்கு நிதி அளிப்பதற்கான நாடாளுமன்ற ஒப்புதல் அவருக்கு அப்போது கிடைக்கவில்லை.

இந்த முறை தேர்தல் பிரசாரத்தின்போது அந்தக் கட்டுமானத்தை விரைவில் முடிப்பேன் என்று கூறியே வாக்கு சேகரித்தார். அதை அவர் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்காவில் நுழைந்தவர்களை நாட்டில் இருந்து வெளியேற்றுவதற்கான அவருடைய திட்டத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அவர் நாடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில், 2022ஆம் ஆண்டில் 11 மில்லியன் மக்கள் சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்காவில் குடியேறியுள்ளார்கள் என்ற தரவுகளை வெளியிட்டது பியூ ஆராய்ச்சி அமையம். ஆனால் டிரம்ப் மற்றும் அவருடைய பிரசாரம் இந்த எண்ணிக்கைக்கும் அதிகமாக சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்கள் அமெரிக்காவில் வசிக்கின்றனர் என்று கூறியுள்ளது.

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர்: டொனால்ட் டிரம்பின் புதிய ஆட்சி எப்படி இருக்கும்?

குடியேறிகளை நாட்டைவிட்டு வெளியேற்றும் திட்டமானது அதிக செலவீனத்தைக் கொண்டது என்றும் கடினமானது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் ஆவணப்படுத்தப்படாத பணியாட்கள் முக்கியப் பங்காற்றும் பொருளாதாரத்தின் சில பகுதிகளில் எதிர்மறையான தாக்கம் ஏற்படக் கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, பணவீக்கம், வட்டி விகிதத்தைக் குறைப்பேன், எரிசக்திப் பொருட்களின் விலை கட்டுக்குள் வைக்கப்படும் என்றும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக உறுதி செய்யப்பட்ட பிறகு கடந்த ஜூலையில் டொனால்ட் டிரம்ப் உறுதி அளித்தார்.

அடுத்த ஆண்டுக்குள் நிறைவடைய உள்ள, அவர் அறிமுகம் செய்த வரிக்குறைப்பை நீட்டிக்க உள்ளதாகவும் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். 2017ஆம் ஆண்டு வரிகளை எளிமைப்படுத்தவும், வளர்ச்சி மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கவும், பல பத்தாண்டுகளுக்குப் பிறகு அறிமுகம் செய்யப்பட்ட வரி மறுசீரமைப்புத் திட்டம் அது.

ஆனால் அத்தகைய குறைப்பானது வர்த்தகம் மற்றும் அதிக வசதி படைத்தவர்களுக்கு உதவும் வகையில் அமைந்தது. அதை மாற்றக் கூறி ஜனநாயகக் கட்சியினர் வேண்டுகோள் விடுத்தனர்.

கார்ப்பரேட் வரிகளை 15% ஆகக் குறைக்கவும், 'டிப்ஸ்' மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான 'சோசியல் செக்யூரிட்டி' பரிவர்த்தனைகளுக்கான வரிகளை டிரம்ப் நீக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மற்றொரு வர்த்தகப் போர்?

இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்தார் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, கடந்த 2021ஆம் ஆண்டு தெற்கு எல்லையைப் பார்வையிட்ட டொனால்ட் டிரம்ப்

கச்சா எண்ணெய் உற்பத்தியில் அவர் அதிக நாட்டம் செலுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க இது பயன்பட்டது என்று அவர் நம்புகிறார். வருங்காலத்தில் எரிசக்திப் பொருட்களின் விலையை இதைக் கொண்டு குறைக்க முடியும் என்றும் அவர் நம்புகிறார். ஆனால் நிபுணர்கள் இதற்கான சாத்தியத்தைச் சந்தேகிக்கின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட இருக்கும் பொருட்களுக்கு 10 முதல் 20% வரை வரி விதிக்கப்படும் என்றும் சீனாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 60% வரி விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். பொருளாதார ஆய்வாளர்கள் இதனால் ஏற்படக்கூடிய பாதகங்களைப் பட்டியலிட்டினர். இது விலைவாசியை அதிகரித்து, அமெரிக்க நுகர்வோர்கள் அதிக பணம் கொடுக்கும் சூழலுக்கு ஆளாகக் கூடும் என்று எச்சரித்துள்ளனர்.

தன்னுடைய முதல் ஆட்சியின்போது, சீனா நியாயமற்ற வர்த்தக முறைகளைப் பின்பற்றுவதாகவும், அறிவுசார் சொத்துகளைத் திருடுவதாகவும் குற்றம் சுமத்தி வர்த்தகப் போரை துவங்கினார்.

அவர் நினைத்தது போன்ற மாற்றங்களை கொள்கைகள் மூலமாகக் கொண்டு வர இயலுமா என்பதை அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானிக்கும்.

கடந்த 2017 முதல் 2019 வரை குடியரசுக் கட்சியினர் நாடாளுமன்றத்தின் செனெட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அமெரிக்க நாடாளுமன்றம் எப்படிப் பணியாற்றுகிறது என்பது குறித்து முழுமையாக அறியாத காரணத்தால், வெள்ளை மாளிகையில் இருந்த குடியரசுக் கட்சியின் பலத்தையும், நாடாளுமன்றத்தில் இருந்த பெரும்பான்மையையும் பயன்படுத்திப் பெரிய கொள்கைகளை அறிமுகம் செய்து டிரம்பால் வெற்றி பெற இயலவில்லை என்று அரசியல் நிபுணர்கள் அந்தக் காலகட்டத்தில் கூறினார்கள்.

 

கருக்கலைப்பு தடை

இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்தார் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தன்னுடைய முதல் ஆட்சியின்போது, சீனா நியாயமற்ற வர்த்தக முறைகளைப் பின்பற்றுவதாகவும், அறிவுசார் சொத்துகளைத் திருடுவதாகவும் குற்றம் சுமத்தி வர்த்தகப் போரை துவங்கினார்.

கடந்த 1973ஆம் ஆண்டு கருக்கலைப்பிற்கான அரசியலமைப்பு உரிமையை நிலைநாட்டிய வழக்கின் தீர்ப்பை மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு திரும்பப் பெற்றது.

இந்தக் குழுவை நியமித்தவர் டொனால்ட் டிரம்ப். தற்போது மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார் என்று பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

செப்டம்பர் மாதம் கமலா ஹாரிஸுடன் நடைபெற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்வில் நாடு முழுமைக்குமான கருக்கலைப்பு தடைக்கு ஆதரவு வழங்க மாட்டேன் என்று கூறினார்.

 

தனிமைவாதம், ஒருதலைப்பட்சவாதம்

இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்தார் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, செப்டம்பர் மாதம் கமலா ஹாரிஸுடன் நடைபெற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்வில் நாடு முழுமைக்குமான கருக்கலைப்பு தடைக்கு ஆதரவு வழங்கமாட்டேன் என்று கூறினார்

வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தமட்டில், உலகின் பல பகுதிகளில் நடந்து வரும் போர்களில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது என்ற கடந்த ஆட்சியில் அவர் பின்பற்றிய கொள்கைகளையே தற்போதும் பின்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி 24 மணிநேரத்தில் யுக்ரேன் போரை நிறுத்துவேன் என்று அவர் கூறியுள்ளார். இது ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை வலுவாக்கும் என்று ஜனநாயகக் கட்சியினர் வாதாடுகிறார்கள்.

காஸா மீது இஸ்ரேல் நடத்தும் போரைப் பொறுத்தவரை, அவர் இஸ்ரேலுக்கு ஆதரவானவர் என்ற நிலைப்பாட்டை ஏற்கெனவே கூறிவிட்டார். காஸாவில் நடைபெறும் போரை நிறுத்துவது எப்படி என்று இதுவரை அவர் ஏதும் தெரிவிக்கவில்லை.

"தனிமைவாதம் மற்றும் ஒருதலைப்பட்ச நிலைப்பாடுகளைக் கொண்ட ஆட்சியாகவே டிரம்பின் ஆட்சியை நான் பார்க்கிறேன். அந்த ஆட்சியில் குறைவான நன்மைகளையே வழங்குகின்றன ஆனால் அது சர்வதேச அளவிலான நிச்சயமற்ற தன்மையை ஆழப்படுத்தும்" என்கிறார் மார்டின் க்ரிஃபித்ஸ்.

மார்டின் க்ரிஃபித்ஸ் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளைச் சிறப்பாக நடத்தும் மத்தியஸ்தர் என்று அறியப்பட்ட அவர் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா.வின் துணைச் செயலாளராகவும், அவசரக் கால நிவாரண ஒருங்கிணைப்பாளராகவும் அவர் பணியாற்றி வந்தார்.

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர்: டொனால்ட் டிரம்பின் புதிய ஆட்சி எப்படி இருக்கும்?

பட மூலாதாரம்,REUTERS

முன்னாள் நேட்டோ அதிகாரியும், எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் வியூகம் மற்றும் பாதுகாப்புப் பிரிவு பேராசிரியருமான ஜேமி ஷியா, டொனால்ட் டிரம்பின் முந்தைய ஆட்சியானது சீர்குலைக்கும் தன்மையைக் கொண்டிருந்தது. ஆனால் அதில் ஒரு தொடர்ச்சி இருந்து வந்தது," என்று கூறுகிறார்.

"அவர் நாட்டோவில் இருந்து வெளியேறவில்லை. ஐரோப்பாவில் இருந்து தன்னுடைய ராணுவ துருப்புகளை வெளியேற்றவில்லை. யுக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்கிய முதல் அதிபர் அவரே" என்றும் மேற்கோள் காட்டுகிறார் ஷியா.

அமெரிக்க வரலாற்றில் இரண்டு முறை (தொடர்ச்சியாக அல்லாமல்) அதிபராகப் பதவியேற்கும் இரண்டாவது அதிபர் டொனால்ட் டிரம்ப்.

இதற்கு முன்பு க்ரோவர் க்ளீவ்லேண்ட், 1885 முதல் 1889ஆம் ஆண்டு வரை அமெரிக்காவை ஆட்சி செய்தார். அதற்கு அடுத்த தேர்தலில் அவரால் வெற்றிபெற இயலவில்லை. பிறகு 1893ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அவர் 1897ஆம் ஆண்டு வரை அதிபராகப் பதவி வகித்தார்.

முன்னதாகத் தனது வெற்றி உறுதியான பிறகு, புளோரிடாவில் உள்ள தனது பிரசாரக் குழுவின் தலைமையகத்தில், ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப், "இந்த நாட்டை மீட்டெடுக்க நாங்கள் உதவப் போகிறோம்" என்று கூறினார்.

“இது அமெரிக்காவின் பொற்காலம்" என்று கூறிய டிரம்ப், "இது அமெரிக்க மக்களுக்குக் கிடைத்த அற்புதமான வெற்றி, இது அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசமாக மாற்றும்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c86qgpx4z01o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா,  

ஒருவாறு இந்திய நுளம்புக் கடியில் இருந்து தப்பியாச்சு. அதுக்காகவாவது Trump ஐத் தெரிவு செய்த அமெரிக்கர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். 

😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kapithan said:

அப்பாடா,  

ஒருவாறு இந்திய நுளம்புக் கடியில் இருந்து தப்பியாச்சு. அதுக்காகவாவது Trump ஐத் தெரிவு செய்த அமெரிக்கர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். 

😉

கனடா அமைதியாக இருக்கிறது     பயமா??    இல்லை மகிழ்ச்சியா ???    

அமெரிக்காவை ஒரு ஜேர்மனியன். ஆளப்போவது    மகிழ்ச்சி தான்    🤣.    எல்லைகள் பூட்டப்பட்டதா??

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இசை வேளாளர் சாதியினர் மேளக்காரர் என்ற பெயரிலேயே பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை அழைக்கப்பட்டனர். சின்ன மேளம், பெரிய மேளம் மற்றும் நட்டுவாங்கம் என்பவை இச்சாதியின் உட்பிரிவுகளாகும்.  சின்னமேளம் என்பது இசை வேளாளர் என்று எழுபதுகளில்  களில் மாற்றப்பட்ட தேவதாசி/மேளக்காரர்கள் சாதியின் உட்பிரிவாகும். தேவரடியார்கள் இசை வேளாளர்கள் ஆனா பிறகு அதில் தமிழர்களும் தெலுங்கர்களும் இருந்தனர். அதில் பெரிய மேளம் பிரிவினர் தமிழ் பேசும் தமிழர்கள் ஆவார்கள். சின்ன மேளம் பிரிவினர் தெலுங்கு பேசும் தெலுங்கர்கள் ஆவார்கள்.பிற்காலத்தில் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியால் தமிழரையும்,தெலுங்கரையும் ஒன்றாக இணைத்து குழப்பம் ஏற்படுத்தினார்கள். இந்த குழப்பம் பல சாதிகளில் உள்ளன வாக்கு வங்கிக்காக அரசியல் லாபத்திற்காக வரலாற்றை திரித்து தமிழர் தெலுங்கர் என அனைவரையும் ஒன்றாக இணைத்து ஒரே சாதிகளாக மாற்றிவிட்டனர். 1971 ம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி சின்னமேளம்,பெரிய மேளம்,நட்டுவாங்கம் ஆகிய மூன்று சாதியினரையும் ஒன்றாக சேர்த்து இசை வேளாளர் என அறிவித்தார். இங்கே தான் நம்ம சின்ன மேளம் தமிழர் தெலுங்கர்களை ஒன்றாக சேர்த்து ஒரே சாதியாக அறிவித்து தனது ஜில்மாட்டை காட்ட, இதனை முற்றிலுமாக மறுத்தவர்கள் இல்லை நீ சின்னமேளம் தான் என்று ஆணிவேரை நோண்ட. கடுப்பேறிய சா தீய எதிர்ப்பாளர்கள் இதனை ச தீய வசவுச்சொல்லாக மாற்ற முக்குரினம்.  நம்ம அண்ணனுக்கு சின்னமேளம் மேல் ஒருதலைக்காதல் என்பதால் நைசா அவருடைய  சா-தீய ஒதுக்கப்பட்ட நசுக்கப்பட்ட பிதுக்கப்பட்ட மிக்ஸரை உள்ள சொருகுகிறார்.    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.      
    • Ferre Gola - Mua Mbuyi  
    • மடியில் கனம் இல்லை, மனதில் பயமில்லை. வடிவேலு மாதிரி ரெண்டு பொக்கெற்றையும் இழுத்து காட்டி விட்டு நடையை கட்ட வேண்டியதுதான்🤣.
    • இது சரி, நாயரும் (நம்பூதிரி) பிராமணரின்  ஒரு கிளை.  இந்த நாயர் கேரளத்தில் இருந்த நாகர்களில் இருந்து இவர்களின் தோற்றம் என்பது ஒரு கதை. அனால், நம்பூதிரிகளின் முதல் மகனுக்கு உள்ள சந்ததி நம்பூதிரிகள் என்றும், மற்ற  மகன்களின் சந்ததிகள் நாயர் என்றும்  பிரிந்ததாக, அப்படியான ஒரு முறை இருந்து இருக்கிறது. ஏனெனில், நம்பூதிரிகளிடம் ஒரு தாம்பதிய  முறை இருந்தது - முதல் மகனின் மனைவி நம்பூதிரியாக இருக்க வேண்டும் முதல் மகன் உடன் மட்டுமே தாம்பத்திய  உறவு.  மற்ற மகன்களின் மனைவிகள் நாயராக அல்லது நம்போதிரிகளாக இருக்கலாம்,  அவர்களின் கணவனை தவிர கணவனின் மற்ற ஆண் சகோதரத்துடன் தாம்பத்திய  உறவு வைக்க வேண்டும் என்று. இதில் (மற்ற மகன்களுக்கு) வந்த சந்ததிகள் தான் நாயர் என்றும், மனைவிகள் நம்பூதிரிககள் என்றாலும். இதில் தெரிவது, (வட) பிராமண வருகை (ஏனெனில் நம்பூதிரிகளின் தோற்றம் நர்மதா ஆற்றங்கரையில் என்ற நம்பிக்கை), பின் உள்ளூர் மக்களுடன் (சாதிகளுடன்) கலப்பு.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.