Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ரி-20 இன்று ஆரம்பம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட ரி-20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தம்புள்ளையில் இன்று நடைபெறவுள்ளது.

இப்போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான 10 வது ரி-20 போட்டி இதுவாகும்.

இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 9 போட்டிகளில் 5 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளதுடன், கடைசியாக நடைபெற்ற 4 போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றியை உறுதி செய்துள்ளது.

இலங்கை அணிக்கு இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ள போதும், 3 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளன.

https://thinakkural.lk/article/311911

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட்: நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடுகிறது

image

(நெவில் அன்தனி)

இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி ரங்கிரி தம்புள்ளை சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

இப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.

ஆரம்ப வீரர் அவிஷ்க பெர்னாண்டோ இன்றைய போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக பானுக்க ராஜபக்ஷ அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

குசல் மெண்டிஸ் ஆரம்ப வீரராக விளையாடவுள்ளார்.

பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சாளர் நுவன் துஷார இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இலங்கை அணி: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலன்க (தலைவர்), பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரண, நுவன் துஷார.

நியூஸிலாந்து அணி: டிம் ரொபின்சன், வில் யங், மார்க் சப்மன், க்ளென் பிலிப்ஸ், மைக்கல் ப்றேஸ்வெல், மிச்செல் ஹே, ஜொஷ் க்ளார்க்சன், மிச்செல் சென்ட்னர் (தலைவர்), இஷ் சோதி, ஸக்கரி பௌல்க்ஸ், ஜேக்கப் டவி. 

https://www.virakesari.lk/article/198286

  • கருத்துக்கள உறவுகள்

முத‌ல் ம‌ச்சை வென்று விட்டின‌ம் இல‌ங்கை அணி

 

இல‌ங்கை அணி க‌ப்ட‌ன் விட்ட‌ பிழையால் தான் கூடுத‌லா நியுசிலாந்துக்கு 10ர‌ன்ஸ்சுக்கு மேல் கிடைச்ச‌து

 

ச‌ரியான‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளிட‌ம் ப‌ந்தை கொடுக்க‌ வில்லை 

போராடி ம‌ச்சை வென்று விட்டின‌ம்.............................

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது ரி-20 இல் பந்துவீச்சாளர்களின் திறமையால் நியூஸிலாந்தை 4 விக்கெட்களால் வென்றது  இலங்கை 

image

(நெவில் அன்தனி)

ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (09) நடைபெற்ற முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தை ஒரு ஓவர் மீதம் இருக்க 4 விக்கெட்களால் இலங்கை வெற்றிகொண்டது.

பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சுகள், சரித் அசலன்கவின் பொறுப்புணர்வுடனான துடுப்பாட்டம் என்பன இலங்கையை ஒரு வெற்றிபெறச்செய்தது.

இந்த வெற்றியுடன் 2 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 தொடரில் இலங்கை 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது.

முதலாவது ஓவரில் நியூஸிலாந்து 12 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் அதன் பின்னர் இலங்கையின் பந்து வீச்சில் சிரமத்தை எதிர்கொண்டு விக்கெட்களை சீரான இடைவெளியில் இழந்தது.

ஸக்கரி பௌல்க்ஸ், இஷ் சோதி ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 39 ஓட்டங்கள் நியூஸிலாந்து அணியை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டது.

முன்வரிசையில் மைக்கல் ப்றேஸ்வெல் 27 ஓட்டங்களையும் பின்வரிசையில் ஸக்கரி பௌல்க்ஸ் ஆட்டம் இழக்காமல் 27 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றனர்.

அவர்களைவிட வில் யங் (19), அணித் தலைவர் மிச்செல் சென்ட்னர் (16) ஆகிய இருவரே 15 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அறிமுக வீரர் மிச்செல் ஹே ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

நியூஸிலாந்தின் எண்ணிக்கையில் 16 உதிரிகள் அடங்கியிருந்தன.

பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நுவன் துஷார 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

சுமாரான மொத்த எண்ணிக்கையான 136 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இலங்கை அணியின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஆரம்ப வீரராக களம் இறங்கிய குசல் மெண்டிஸ் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

பெத்தும் நிஸ்ஸன்க (19), குசல் ஜனித் பெரேரா (23) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கையைக் கொடுத்தனர்.

எனினும் இருவரும் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (55 - 3 விக்.)

தொடர்ந்து சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் 23 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தார்.;

பானுக்க ராஜபக்ச சாதிக்கக்கூடியவர், அவரது பாத்திரம் என்னவென்பதை அவர் புரிந்துகொண்டுள்ளார் என அணித் தலைவர் சரித் அசலன்க கூறியபோதிலும் அது பொய்யாகிப்போனது.

பானுக்கு ராஜபக்ஷ வெறும் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (118 - 5 விக்.)

எனினும் அணித் தலைவர் சரித் அசலன்க, வனிந்து ஹசரங்க ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை அண்மிக்க தமது அணிக்கு உதவினர்.

வனிந்து ஹசரங்க 22 ஓட்டங்களுடன் 6ஆவதாக ஆட்டம் இழந்தபோது இலங்கையின் வெற்றிக்கு மேலும் 11 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அணித் தலைவர் சரித் அசலன்கவும் துனித் வெல்லாலகேயும் வெற்றிக்கு தேவைப்பட்ட மீத ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

சரித் அசலன்க 35 ஓட்டங்களுடனும் துனித் வெல்லாலகே 11 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ஷக்கரி பௌல்க்ஸ் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: சரித் அசலன்க.

0911_matheesha_pathirana.png

0911_dunith_wellalage.png

https://www.virakesari.lk/article/198288

  • கருத்துக்கள உறவுகள்
NZ
108
SL FlagSL
(19.5/20 ov, T:109) 103

இரண்டாவது போட்டியில் இலங்கை தோல்வி.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:
NZ
108
SL FlagSL
(19.5/20 ov, T:109) 103

இரண்டாவது போட்டியில் இலங்கை தோல்வி.

தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் தொட‌ர்ந்து ர‌ன்ஸ் அடிக்காம‌ அவுட் ஆகினால் பின்ன‌னி வீர‌ர்க‌ளுக்கு சிர‌ம‌மும் 

ஹ‌ச‌ரங்கா அவுட் ஆன‌ பிற‌க்கு வ‌ந்த‌ வீர‌ர் ப‌ந்தை வீன் அடித்து விட்டார் 

 

இந்த‌ தோல்விக்கு ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ள் தான் கார‌ன‌ம்.............................

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை - நியூசிலாந்து T20 தொடர் சமநிலை

image

சுற்றுலா நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட T20 தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

001.png

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்து அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய நியூசிலாந்து அணி 19 ஓவர்கள் 3 பந்துகள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

002.png

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளை இழந்து 103 ஓட்டங்களை மட்டுமே எடுத்ததால் 5 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. 

ஆகவே இரண்டு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட T20 தொடர் 1 : 1 என்ற சமநிலையில் முடிவடைந்தது. 

https://www.virakesari.lk/article/198377

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை - நியூஸிலாந்து அணிகள் மோதும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (13) பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த வருடம் சொந்த மண்ணில் விளையாடிய நான்கு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்களிலும் வெற்றியீட்டிய இலங்கை, அந்த வெற்றி அலையைத் தொடரும் குறிக்கோளுடன் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை எதிர்கொள்ளவுள்ளது.

ஸிம்பாப்வே (2-0), ஆப்கானிஸ்தான் (3-0), இந்தியா (2-0), மேற்கிந்தியத் தீவுகள் (2-1) ஆகிய அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடர்களில் இலங்கை வெற்றியிட்டியிருந்தது.

எவ்வாறாயினும் அந்நிய மண்ணில் விளையாடிய ஒரே ஒரு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷிடம் இலங்கை தோல்வி அடைந்திருந்தது.

இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பயன்படுத்தப்படும் ஆடுகளங்கள் சுழல்பந்துவீச்சுக்கு சாதகமாக அமையும் என பெரிதும் நம்பப்படுகிறது.

உபாதை காரணமாக பிரதான சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க இந்தத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக இலங்கை குழாத்தில் துஷான் ஹேமன்த இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

எனினும் அவரை விட அனுபவசாலியும் இந்தியாவுக்கு எதிரான தொடரின் 2ஆவது போட்டியில் 6 விக்கெட்களை வீழ்த்தியவருமான ஜெவ்றி வெண்டசேக்கு இறுதி அணியில் முன்னுரிமை வழங்கப்படும் என அணித் தலைவர் சரித் அசலன்க தெரிவித்தார்.

அவருடன் மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, கமிந்து மெண்டிஸ், சரித் அசலன்க ஆகியோரும் சுழல்பந்துவீச்சாளர்களாக இடம்பெறுவர்.

ஆரம்ப வீரர் அவிஷ்க பெர்னாண்டோ அண்மைக்காலமாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியபோதிலும் அவரது முன்னைய ஆற்றல்களைக் கவனத்தில்கொண்டு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும் எனவும்  அசலன்க  குறிப்பிட்டார்.

அத்துடன் இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களை இறுதி அணியில் இணைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.

இந்த 6 வீரர்களுடன் பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், ஜனித் லியனகே, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷன்க ஆகியோர் இறுதி அணியில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை மேலதிக துடுப்பாட்ட வீரர் ஒருவர் (குசல் பெரேரா அல்லது சதீர சமரவிக்ரம) அணியில் சேர்க்கப்பட்டால் பந்துவீச்சாளர்களில் ஒருவர் குறைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

download__1_.png

நியூஸிலாந்து அணியில் புதிய வீரர்கள்

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை கருத்தில் கொண்டு கேன் வில்லியம்சன், டிம் சௌதீ, டெவன் கொன்வே போன்ற பிரதான வீரர்கள் இந்தத் தொடரிலிருந்து விடுகை பெற்றுள்ளனர்.

மேலும், அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் வகையில் இலங்கைக்கு எதிரான தொடரை நியூஸிலாந்து எதிர்கொள்ளவுள்ளது.

நியூஸிலாந்து குழாத்தில் டிம் ரொபின்சன், ஸக்கரி பௌல்க்ஸ், மிச்செல் ஹே, நேதன் ஸ்மித் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம்பெறுகின்றனர்.  டீன் பொக்ஸ்க்ரொவ்ட், ஜொஷ் க்ளாக்சன், ஜேக்கப் டவி ஆகியோர் மிகக் குறைந்த சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடிவர்களாவர்.

இந்த வருடம் நியூஸிலாந்து அணி விளையாடவுள்ள முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் புதிய வீரர்களின் ஆற்றல்கள் பரீட்சிக்கப்படவுள்ளது.

பங்களாதேஷுக்கு எதிராக கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரே நியூஸிலாந்து கடைசியாக விளையாடிய ஒருநாள் தொடராகும்.

இலங்கை அணியைப் போன்றே நியூஸிலாந்து அணியிலும் சுழல்பந்துவீச்சாளர்கள் தாராளமாக இடம்பெறுகின்றனர்.

அணித் தலைவர் மிச்செல் சென்ட்னர், க்ளென் பிலிப்ஸ், மைக்கல் ப்றேஸ்வெல், மார்க் செப்மன், இஷ் சோதி ஆகிய சுழல்பந்துவீச்சாளர்கள் நியூஸிலாந்து குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

துடுப்பாட்ட வீரர்களாக ஹென்றி நிக்கல்ஸ், டிம் ரொபின்சன், வில் யங், விக்கெட்காப்பாளர் மிச்செல் ஹே ஆகியோரும் சகலதுறை வீரர்களாக ஜொஷ் க்ளார்க்சன், ஸக்கரி பௌல்க்ஸ், டீன் பொக்ஸ்க்ரொவ்ட் ஆகியோரும் வேகப்பந்துவீச்சாளர்களாக ஜேக்கப் டவி, அடம் மில்னே (உபாதைக்குள்ளான லொக்கி பெர்கஸனுக்கு பதில்), நேதன் ஸ்மித் ஆகியோரும் நியூஸிலாந்து குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நியூஸிலாந்து 5ஆம் இடத்திலும் இலங்கை 6ஆம் இடத்திலும் இருக்கின்றன.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான 102 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி முடிவுகளின் பிரகாரம் நியூஸிலாந்து 52 - 41 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. 

https://www.virakesari.lk/article/198579

  • nunavilan changed the title to இலங்கை நியூஸிலாந்து ரி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குசல் மெண்டிஸ் 143, அவிஷ்க 100; இலங்கை 324 -  5 விக்.

image

(நெவில் அன்தனி)

ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (13) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 49.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 324 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இரண்டாவது தடவையாக மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இருவரும் தத்தமது நான்காவது சதங்களைக் குவித்து இலங்கையின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர்.

இந்தப் போட்டி குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பித்த போதிலும் ஒரு பந்து வீசப்பட்ட நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் சிறிது நேரத்திற்கு தடைப்பட்டது.

ஆட்டம் மீண்டும் தொடர்ந்த சற்று நேரத்தில் மொத்த எண்ணிக்கை 17 ஓட்டங்களாக இருந்தபோது பெத்தும் நிஸ்ஸன்க (12) ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் அவிஷ்க பெர்னாண்டோவும் குசல் மெண்டிஸும் சதங்கள் குவித்ததுடன் 2ஆவது விக்கெட்டில் 206 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அவிஷ்க பெர்னாண்டோ சரியாக 100 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். இதில் 9 பவுண்டறிகளும் 2 சிக்ஸ்களும் அடங்கியிருந்தன.

குசல் மெண்டிஸ் 128 பந்துகளை எதிர்கொண்டு 17 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 143 ஓட்டங்களைக் குவித்தார். சர்வதேச ஒருநாள் போட்டியில் இது அவரது தனிப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகும்.

சதீர சமரவிக்ரம 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.

சரித் அசலன்க திறமையாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரது ஆட்டமிழப்புடன் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.

பந்துவீச்சில் ஜேக்கப் டவி 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

நியூஸிலாந்து சார்பாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் மிச்செல் ஹே, டிம் ரொபின்சன், நேதன் ஸ்மித் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம்பெற்றனர்.

https://www.virakesari.lk/article/198623

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ அபார சதங்கள்; DLS முறையில் இலங்கை வெற்றியீட்டியது

image

(நெவில் அன்தனி)

ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை (13) மழையினால் பாதிக்கப்பட்டு தொடரப்பட்ட இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 45 ஓட்டங்களால் இலங்கை வெற்றியீட்டியது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 வருடங்களின் பின்னர் நியூஸிலாந்தை முதல் தடவையாக இலங்கை வெற்றிகொண்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி பெற்ற சதங்களும் அவர்கள் பகிர்ந்த இரட்டைச் சத இணைப்பாட்டமும் இலங்கையின் வெற்றிக்கு வித்திட்டிருந்தன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 49.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 324 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மாலை 6.35 மணியளவில் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.

வெகு நேரம் மழை தொடர்ந்ததால் இலங்கையின் இன்னிங்ஸ் அத்துடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

சுமார் இரண்டரை மணித்தியாலங்களின் பின்னர் இரவு 9.00 மணிக்கு ஆட்டம் தொடர்ந்துபோது நியூஸிலாந்துக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமைப் பிரகாரம் 27 ஓவர்களில் 221 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 9 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

வில் யங், டிம் ரொபின்சன் ஆகிய இருவரும் 80 பந்துகளில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

வில் யங் 48 ஓட்டங்களையும் டிம் ரொபின்சன் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆனால், அதன் பின்னர் சிரான இடைவெளியில் விக்கெட்கள்  சரிந்தன.

28 பந்துகளில் 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில்  5 விக்கெட்கள் சரிந்ததால் நியூஸிலாந்து ஆட்டம் காணத் தொடங்கியது. இந்த 5 விக்கெட்களும் இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர் களால் வீழ்த்தப்பட்டது. (110 - 5 விக்.)

அதன் பின்னர் மைக்கல் ப்றேஸ்வெல், அறிமுக வீரர் மிச்செல் ஹே ஆகிய இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சித்தனர்.

ஆனால், 22ஆவது ஓவரில் பந்துவீச அழைக்கப்பட்ட டில்ஷான் மதுஷன்க மிக சாதுரியமாக பந்துவீசி மிச்செல் ஹேயை ஆட்டம் இழக்கச் செய்தார்.

மத்திய வரிசையில் மைக்கல் ப்றேஸ்வெல் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் டில்ஷான் மதுஷன்க 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சரித் அசலன்க 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இலங்கையின் இன்னிங்ஸில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இருவரும் தத்தமது நான்காவது சதங்களைக் குவித்து இலங்கையின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர்.

இந்தப் போட்டி குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பித்த போதிலும் ஒரு பந்து வீசப்பட்ட நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் சிறிது நேரத்திற்கு தடைப்பட்டது.

ஆட்டம் மீண்டும் தொடர்ந்த சற்று நேரத்தில் மொத்த எண்ணிக்கை 17 ஓட்டங்களாக இருந்தபோது பெத்தும் நிஸ்ஸன்க (12) ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் அவிஷ்க பெர்னாண்டோவும் குசல் மெண்டிஸும் சதங்கள் குவித்ததுடன் 2ஆவது விக்கெட்டில் 206 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கைக்கு உரமூட்டினர்.

அவிஷ்க பெர்னாண்டோ சரியாக 100 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். இதில் 9 பவுண்டறிகளும் 2 சிக்ஸ்களும் அடங்கியிருந்தன.

குசல் மெண்டிஸ் 128 பந்துகளை எதிர்கொண்டு 17 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 143 ஓட்டங்களைக் குவித்தார். சர்வதேச ஒருநாள் போட்டியில் இது அவரது தனிப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகும்.

சதீர சமரவிக்ரம 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.

சரித் அசலன்க திறமையாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரது ஆட்டமிழப்புடன் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டு இலங்கையின் இன்னிங்ஸ் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஜனித் லியனகே 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.  

பந்துவீச்சில் ஜேக்கப் டவி 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

நியூஸிலாந்து சார்பாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் மிச்செல் ஹே, டிம் ரொபின்சன், நேதன் ஸ்மித் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம்பெற்றனர்.

ஆட்டநாயகன்: குசல் மெண்டிஸ்.

https://www.virakesari.lk/article/198630

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றையான் விளையாட்டு ப‌ல‌ ம‌ணி நேர‌ம் ம‌ழையால் த‌டை ப‌ட்டு ஓவ‌ர்க‌ள் குறைக்க‌ப் ப‌ட்ட‌து

 

நியுசிலாந் வீர‌ர்க‌ள் கொடுத்த‌ ந‌ல்ல‌ தொட‌க்க‌த்தை பார்க்க‌ இல‌ங்கை அணிய‌ வெல்வார்க‌ள் என்று நினைத்தேன்

 

ஆனால் இல‌ங்கை ப‌வ‌ர் பிலே முடிந்தாப் பிற‌க்கு சிற‌ப்பாக‌ ப‌ந்து வீசி நியுசிலாந் அணிய‌ வென்று விட்டின‌ம்................நியிசிலாந் அணியில் ப‌ல‌ புது முக‌ங்க‌ள்...........................

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் தொட‌ரை இல‌ங்கை வென்று விட்ட‌து....................................................................

Edited by வீரப் பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸிலாந்துடனான தொடரையும் இலங்கை கைப்பற்றியது; சொந்த மண்ணில் இலங்கை ஈட்டிய 6ஆவது தொடர்ச்சியான தொடர் வெற்றி

image

(நெவில் அன்தனி)

கண்டி, பல்லேகலையில் இன்று ஞாயற்றுக்கிழமை மழையினால் தடைப்பட்டு தொடர்ந்து நடைபெற்ற இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 பந்துகள் மீதம் இருக்க 3 விக்கெட்களால் இலங்கை அபார வெற்றியீட்டியது.

1711_kusal_mendis.png

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்  தொடரைக் கைப்பற்றிய இலங்கை, சொந்த மண்ணில் 6ஆவது தொடர்ச்சியான தொடர் வெற்றியை ஈட்டி வரலாறு படைத்தது.

மேலும் சொந்த மண்ணில் 10 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக ஒரே வருடத்தில் 5 தொடர்களை இலங்கை தனதாக்கிக்கொண்டுள்ளது விசேட அம்சமாகும்.

இவ் வெற்றியில் மஹீஷ் தீக்ஷனவின் சகலதுறை ஆட்டம், குசல் மெண்டிஸ் குவித்த ஆட்டமிழக்காத அரைச் சதம் என்பன முக்கிய பங்காற்றின.

210 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 46 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 210 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இந்தப் போட்டியில் இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

அவிஷ்க பெர்னாண்டோ (5), பெத்தும் நிஸ்ஸன்க (28), கமிந்து மெண்டிஸ் (0) ஆகிய மூவரும் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

துடுப்பாட்ட வரிசையில் 4ஆம் இலக்கத்திற்கு உயர்த்தப்பட்ட கமிந்து மெண்டிஸ் 3 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்து இரசிகர்களைப் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தினார்.

தொடர்ந்து சரித் அசலன்க (12), சதீர சமரவிக்ரம (8) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர்.

குசல் மெண்டிஸ், ஜனித் லியனகே ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து அணியை மீட்டெடுக்க முயற்சித்தனர். ஆனால், இருவரும் 39 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஜனித் லியனகே 22 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அதிரடியாக துடுப்பாட்டத்தை ஆரம்பித்த துனித் வெல்லாலகே 7ஆவது விக்கெட்டில் குசல் மெண்டிஸுடன் 25 பந்துகளில் 31 பகிர்ந்த நிலையில் 18 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.

ஒரு பக்கத்தில் உபாதைக்கு மத்தியில் மிகவும் நிதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் மஹீஷ் தீக்ஷனவுடன் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தார்.

குசல் மெண்டிஸ் 6 பவுண்டறிகள் உட்பட 74 ஓட்டங்களுடனும் மஹீஷ் தீக்ஷன 2 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 27ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் மைக்கல் ப்றேஸ்வெல் 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

குறிப்பிட்ட நேரப்படி பிற்பகல் 2.30 அணிக்கு ஆரம்பமான போட்டியில் முதலில் துடுபெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து 18.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 71  ஓட்டங்களைப்   பெற்றிருந்தபோது மழை பெய்ததால் பிற்பகல் 4.19 மணிக்கு ஆட்டம் தடைப்பட்டது.

சுமார் ஒரு மணித்தியாத்திற்குப் பின்னர் ஆட்டம் தொடர்ந்தபோது போட்டியில் 6 ஓவர்கள் குறைக்கப்பட்டு அணிக்கு 47 ஓவர்கள் என நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 45.1 ஒவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றது.

மார்க் செப்மன், மிச்செல் ஹே ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 173 ஓட்டங்களாக உயர்த்தினர். ஆனால், கடைசி 6 விக்கெட்கள் 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தப்பட்டது.

மார்க் செப்மன் 70 ஓட்டங்களையும் மிச்செல் ஹே 49 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களை விட ஆரம்ப வீரர் வில் யங் 26 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெவ்றி வெண்டசே 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: குசல் மெண்டிஸ்

https://www.virakesari.lk/article/199025

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த‌ ம‌ண்ணில் இப்போது இல‌ங்கை பெரிய‌ அணிக‌ள் சின்ன‌ அணிக‌ள் என்ன‌ எல்லாரையும் வெல்லுகின‌ம்

அடுத்த‌ வ‌ருட‌த்தில் இருந்து வெளி ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு போய் விளையாட‌னும்

அங்கை சாதிப்பின‌மா ம‌ண்ணை க‌வ்வுவின‌மா என‌ பொறுத்து இருந்து தான் பார்க்க‌னும்

 

2026 உல‌க‌ கோப்பை இந்தியாவும் இல‌ங்கையும் சேர்ந்து ந‌ட‌த்துவ‌தால் 2024உல‌க‌ கோப்பையில் ப‌ட்ட‌ அவ‌மான‌த்தை அடுத்த‌ உல‌க‌ கோப்பையில் ச‌ரி செய்வின‌ம் என‌ நினைக்கிறேன்

 

இல‌ங்கையின் சுழ‌ல் ப‌ந்து வீச்சு பாராட்டும் ப‌டியா இருக்கு..................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது விக்கெட்டை ஷிராஸ் கைப்பற்றிய ஆட்டம் 21 ஓவர்களுடன் மழையினால் கைவிடப்பட்டது

image
 

(நெவில் அன்தனி)

கண்டி, பல்லேகலையில் செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்ற இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி 21 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழையினால் கைவிடப்பட்டது.

LHP_5642.jpg

எவ்வாறாயினும் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றியீட்டிய இலங்கை, 3 போட்டிகள் கொணட தொடரை 2 - 0 என தனதாக்கிக்கொண்டது.

Copy_of_LHP_5735.jpg

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து 21 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது பிற்பகல் 4.00 மணியளவில் கடும் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.

வில் யங் 8 பவுண்டறிகள் உட்பட 56 ஓட்டங்களுடனும் ஹென்றி நிக்கல்ஸ் 46 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

9 ஓட்டங்களுடன் ஹென்றி நிக்கல்ஸை ஆட்டம் இழக்கச் செய்த மொஹமத் ஷிராஸ், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது முதலாவது விக்கெட்டைக் கைப்பற்றினார்.

சுமார் ஒன்றரை மணித்தியாலங்களின் பின்னர் மழை விட்டதால், ஆடுகளமும் மைதானமும் மாலை 6.00 மணியளவில் பரீச்சிக்கப்படும் என பிற்பகல் 5.30 மணிக்கு அறிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த அறிவிப்பு விடுக்கப்பட்ட சற்று நேரத்தில் மீண்டும் மழை பெய்ததால் ஆடுகள பரிசீலனை கைவிடப்பட்டது.

இரவு 7.30 மணியளவில் மழை ஓய்ந்தபோதிலும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் மீண்டும் கடும் மழை பெய்யத் தொடங்கியது. இதனை அடுத்து இரவு 7.53 மணிக்கு போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இது இவ்வாறிருக்க, முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸன்க, கமிந்து மெண்டிஸ், அசித்த பெர்னாண்டோ ஆகிய நால்வருக்கும் ஓய்வு வழங்கப்பட்டது.

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள அவர்கள் நால்வருக்கும் போதிய ஓய்வு வழங்க தேர்வாளர்கள் தீர்மானித்தனர்.

அத்துடன் துனித் வெல்லாலகேயும் இப் போட்டியில் விளையாடவில்லை.

இந்த ஐவருக்குப் பதிலாக நிஷான் மதுஷ்க, நுவனிது பெர்னாண்டோ, மொஹமத் ஷிராஸ், அறிமுக வீரர் சமிந்து விக்ரமசிங்க, ஜனித் லியனகே ஆகியோர் இறுதி அணியில் இடம்பிடித்தனர்.

ஆனால், மழை காரணமாக அவர்களால் முழு போட்டியை அனுபவிக்க முடியாமல் போனது.

மூன்றாவது  போட்டி கைவிடப்பட்ட நிலையில் தொடர்நாயகன் விருது குசல் மெண்டிஸுக்கு வழங்கப்பட்டது.

தொடர் நாயகனுக்கான பரிசை குசல் மெண்டிஸ் சார்பில் அவிஷ்க பெர்னாண்டோ பெற்றார்.

https://www.virakesari.lk/article/199188

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.