Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"சிரிக்க மட்டும் 😂😂😂"
 
 
*தேர்தலுக்கு முன்பு.*
 
 
*தலைவர்* : ஆம். மீண்டும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தவற விட மாட்டோம்.
 
*மக்கள்* : நீங்கள் நாட்டை கொள்ளை அடிப்பீர்களா..?
 
*தலைவர்* : கனவிலும் கூட அப்படி நினைக்க மாட்டோம்.
 
*மக்கள்* : நீங்கள் எங்கள் மேன்மைக்காகவே பாடுபடுவீர்களா...?
 
*தலைவர்* : ஆம்....நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மிக அதிகமாகவே..
 
*மக்கள்* : உங்கள் ஆட்சியில் விலைவாசி உயருமா...?
 
*தலைவர்* : அதற்கெல்லாம் நிச்சயம் வாய்ப்புகளே இல்லை.
 
*மக்கள்* : நல்ல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவீர்களா..?
 
*தலைவர்* : நிச்சயம் செய்வோம். அதிலென்ன சந்தேகம்.!
 
*மக்கள்* : ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்வீர்களா..?
 
*தலைவர்* : உங்களுக்கென்ன பைத்தியமா...அப்படியெல்லாம் சிந்திக்கவே அவசியமில்லை...
 
*மக்கள்* : உங்களை நாங்கள் முழுமையாக நம்பலாமா..?
 
*தலைவர்* : ஆம்..
 
*மக்கள்* : நீங்கள் தான் எங்கள் தலைவர்.
 
 
( தேர்ந்தெடுக்கப்பட்டதின் பிறகு...)
 
 
மீண்டும் கீழிருந்து மேலாகப் படிக்கவும்..
 
 
சிரிக்க மட்டும் ...
 
No photo description available.
  • Like 2
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கீழேயிருந்து மேல்நோக்கி படிக்கவே நிஜமாக உள்ளது.

உங்களுக்கு கற்பனை அபாரம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றாக இருக்கின்றது நண்பரே . ........ மிகவும் ரசித்தேன் . ........!  👍

பெருமாளின் பூனைக் கதையும் சூப்பர் .......!  😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

niதிபதி; நீங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள்தானே!... உங்களுக்கு கட்டாயம் விவாகரத்து வேண்டுமா!?

#மனைவி; ஆமா பெரிய "காதல்!" நான் ஏமாந்துட்டேன் ஐய்யா!!! இவர் வாயை திறந்தாலே எல்லாமே பொய்தான், பேசுகிறார்... ஒரு விசயத்தில் கூட என்னிடம் உண்மையாகவே இல்லை... தயவுசெய்து எங்களை பிரித்துவிடுங்கள்...

#கணவன்; இவள் பயங்கரமான ஹிட்லர் பேத்தி ஐய்யா! எல்லாவற்றிற்கும் ஒரு கேள்வி கேட்கிறாள், என் மீது சந்தேகப்படுகிறாள், முடியல மை லார்ட்... தயவுசெய்து விவாகரத்து கொடுத்துவிடுங்க...

#நீதிபதி; சரி உங்கள் விருப்பப்படி விவாகரத்து கொடுத்துவிட்டால் உங்கள் குழந்தையை யார் பார்த்துக்கொள்வது!?

#கணவன்; இது என்ன கேள்வி...!!! என் குழந்தை என்னிடம்தான் வளரவேண்டும், அதுதான் நியாயமும் கூட...

#மனைவி; அது எப்படி! நியாயம்...!!! பத்து மாசம் சுமந்து கஷ்டப்பட்டு பெத்து எடுத்தவள் நான்! உடனே இவருக்கு தூக்கி கொடுத்திடனும்மா...! முடியாது மை லார்ட்...

#நீதிபதி; இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் Mr...?

#கணவன்; ஐய்யா... நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்களாமா!

#நீதிபதி; ம்ம்! கேளுங்க!?

#கணவன்; ஐய்யா...!!!

ATM மெஷின்ல கார்டு உள்ளே சொருகி பணம் வெளீயே எடுத்தப்பிறகு அந்த பணம் ATM மெஷினுக்கு சொந்தமா! இல்ல! பணம் எடுத்த அந்த ஆளுக்கு சொந்தமா!???

#மனைவி; அடப் பாவி... சண்டாளா..."!!!

#நீதிபதி; ஒரே கேள்வியில் தலை கிருகிருவென சுற்றி டேபிளில் அடித்து எம்பி சுருண்டு கீழே விழுந்தார் ஜர்ஜ்...

((கோர்ட் இத்துடன் கலைகிறது. "டமால்"))

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓர் ஊரில், ஏழை ஒருவர் சிறிய அலுவலகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கிடைத்த ஊதியத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தார். ஒருநாள் அவர் நடந்துபோய்க்கொண்டிருந்தபோது, ஒரு பழைய நாணயத்தைப் பார்த்து, அதை எடுத்து தூசி தட்டினார். அந்த நாணயத்தில் நடுவில் துளை இருந்தது. அந்தக் காலத்தில் துளை இருந்த நாணயம் கிடைத்தால், அது நல்லது, இராசி என்ற நம்பிக்கை உண்டு. அந்த மனிதருக்கும் அது கிடைத்ததில் அதிக ஆனந்தம். இனிமேல் எனது கஷ்டம் எல்லாம் தீர்ந்துவிடும் என்று மகிழ்ந்து, அந்த நாணயத்தை பத்திரமாக தனது மேல் சட்டைப்பைக்குள் போட்டு வைத்தார். அதை ஒருநாளும் வெளியே எடுக்கமாட்டார். ஆனால் அதை அடிக்கடி தொட்டு மட்டும் பார்த்துக்கொள்வார். சிறிது காலம் சென்று, நல்வாய்ப்புகள், உண்மையாகவே அவரை தேடிவரத் தொடங்கின. செல்வம், பணம், புகழ், பதவி போன்ற எல்லாம் வந்து சேர்ந்தன. சமுதாயத்தில் அவர் பெரிய மனிதரானார், எல்லாரும் அவரைப் பாராட்டினார்கள். அவர் எதைத் தொட்டாலும் வெற்றிதான், எல்லாம் அந்த நாணயத்தின் மகிமை என்று மனதிற்குள்ளே நினைத்துக்கொண்டார். ஒவ்வொரு நாளும் அந்த மேல்சட்டையைப் போட்டுக்கொண்டுதான் வெளியில் கிளம்புவார். வெளியே புறப்படுவதற்குமுன், சட்டைப் பையில் அந்த நாணயம் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக்கொள்வார். இப்படி பல ஆண்டுகள் உருண்டோடின. ஒருநாள் அந்த துளையுள்ள நாணயத்தை கண்ணால் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்தது. அன்று காலையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது தன் மனைவியிடம் தனது ஆசையைச் சொன்னார். ஆனால் மனைவியோ, இப்ப எதுக்கு அதைப் பார்க்கணும், வேண்டாமே என்று இழுத்தார். இல்லை இன்று பார்த்தே தீருவேன் என, அதை சட்டைப் பையிலிருந்து வெளியே எடுத்துப் பார்த்தார். அந்த நாணயத்தில் துளையே இல்லை. அப்போது அவரது மனைவி அவரிடம், உங்க சட்டை தூசியா இருக்கேன்னு, நான் அதை உதறினேன். அப்போ அந்த நாணயம் சன்னல் வழியாக தெருவில் விழுந்துவிட்டது. நானும் எவ்வளவோ நேரம் தேடினேன். கிடைக்கவில்லை. யாரோ அதற்குள் எடுத்துவிட்டார்கள்போலும். உங்களுக்குத் தெரிந்தால் வருத்தப்படுவீர்களே என்று நினைத்து, உங்களது சட்டைப் பைக்குள் ஒரு காசை போட்டுவைத்தேன் என்றார். சரி இது நடந்தது எப்போது என கணவர் கேட்க, நீங்க அந்தக் காசை எடுத்த மறுநாளே நடந்தது என்று மனைவி சொன்னார். ஆம். அந்த மனிதருக்கு நல்வாய்ப்பைக் கொடுத்தது அந்த நாணயமில்லை, அவரது நம்பிக்கை. அதாவது தன்னம்பிக்கை. அதுதான் அவரில் வேலை செய்துள்ளது. எனவே வாழ்வில் முன்னேற விரும்புகிறவர்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் முக்கியம்.

“உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை (சுவாமி விவேகானந்தர்)

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.