Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
மைக் டைசன் Vs ஜேக் பால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஒட்டுமொத்தப் போட்டியில் டைசன் 18 குத்துக்களை மட்டுமே பதிவு செய்தார்.
  • எழுதியவர், கல் சஜாத்
  • பதவி, டெக்சாஸ், பிபிசி ஸ்போர்ட் பத்திரிகையாளர்

உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற மைக் டைசனை, யூடியூபராக இருந்து குத்துச்சண்டை வீரராக மாறிய ஜேக் பால் வென்றுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸில் AT &T மைதானத்தில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் மைக் டைசனை அவர் வீழ்த்தியுள்ளார். இந்த ஆட்டத்தை 70 ஆயிரம் ரசிகர்கள் நேரிலும், லட்சக்கணக்கானோர் நெட்ஃபிளிக்ஸ் மூலம் நேரலையிலும் கண்டு களித்தனர்.

58 வயதான மைக் டைசன் இரண்டு முறை ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் வென்றவர். அவர் 19 வருடங்களாக தொழிற்முறை குத்துச்சண்டைப் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. அவரை எதிர்த்து களம் கண்ட 27 வயதான ஜேக் பால் ஒரு குத்துச்சண்டை களத்துக்கு புதியவர். டைசனுடன் ஒப்பிடுகையில் அவர் மிகவும் இளமையாகவும், தடகள வீரரைப் போன்ற உடற்தகுதியுடனும் இருந்தார்.

 

இரண்டு நிமிட சுற்றுகள் கொண்ட எட்டு-சுற்றுப் போட்டியில் அவர் டைசனை தன் கட்டுக்குள் வைத்திருந்தார். தன் துல்லியமான தாக்குதல்களால் (jabs and accurate punches) டைசனை வீழ்த்தினார்.

இந்த போட்டியில் டைசன் மெதுவாகவும் மந்தமாகவும் செயல்பட்டார்.

குத்துச்சண்டை போட்டிக் களத்திற்குள் டைசன் நுழையும் போது அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்தது. மக்கள் அவரை நாயகனாக பாவித்து கோஷங்கள் எழுப்பினர். ஆனால் சண்டை முடிவடையும் போது அங்கு பெரும் கூச்சல்கள் எழுந்தன. விரக்தியின் அலைப் பரவியது.

 

ரசிகர்கள் சந்தேகம்

போட்டியின் நடுவர்கள் 80-72, 79-73 மற்றும் 79-73 என்ற புள்ளிகளை அறிவிப்பதற்கு முன்பே சில ரசிகர்கள் வெளியேறினர்.

இந்த போட்டியின் உண்மைத் தன்மை மற்றும் போட்டியாளர்கள் எவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொண்டு விளையாடினார்கள் என்பதில் ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் இருந்தன.

போட்டிக்குப் பிந்தைய ஒரு சங்கடமான தருணத்தில், டைசன், ஜேக் பாலின் சகோதரர் லோகனை அழைத்து, இதுவரை அவர் விளையாடிய 57 போட்டிகளில் இது தனது ஏழாவது தோல்வி என்றும் இதற்கு பின்னரும் மீண்டும் போட்டியிடுவேன் என்றும் கூறினார்.

டெக்சாஸ் கமிஷன் நிர்ணயித்த நிபந்தனைகளின் ஒரு பகுதியாக இருவரும் கூடுதல் ஸ்பாஞ்ச் நிரப்பப்பட்ட கனமான கையுறைகளை அணிந்திருந்தனர். இது தொழிற்முறை போட்டிக்கான (pro fight) ஒரு அம்சம். ஆனால் போட்டி முடிந்ததும் இந்த கையுறைகள் விவகாரம் கேலிக்குரியதாகத் தோன்றியது.

இலகுவான கையுறைகள் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தியிருக்காது. இரண்டு வீரர்களும் வீசிய எந்த குத்துகளும் நாக் அவுட் நிலையை நெருங்கவில்லை.

பால் ஒட்டுமொத்தப் போட்டியில் 78 குத்துகளை பதிவு செய்தார். ஆனால் டைசன் 18 குத்துகள் மட்டுமே விட்டார்.

பால் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்பதற்கு முன், ஆன்லைனில் காமெடி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அவரை சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றன்ர.

இது ஜேக் பாலின் 11-வது தொழிற்முறை குத்துச்சண்டைப் போட்டி. கடந்த ஆண்டு டாமி ப்யூரியிடம் அவர் தோற்றார். மேலும் மெக்சிகன் சூப்பர் ஸ்டார் சவுல் 'கனெலோ' அல்வாரெஸுடன் சண்டையிடுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் தெரிவித்தார்.

"அவர் பணம் பெற விரும்புவதை அறிந்ததால், பணம் எங்குள்ளது என்பது அவருக்குத் தெரியும்." என்று பால் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது மைக் ரைச‌னுக்கு அவ‌மான்

போயும் போயும் இள‌ம் பெடிய‌னிட‌ம் தோத்த‌து

 

கிழ‌ட்டு வ‌ய‌தாகியும் மை ரைச‌னுக்கு நினைப்பு தான் 2000ம் ஆண்டுக‌ளில் இருந்த‌ ரைச‌ன் என்று

 

ந‌ல்ல‌ நிலையில் இருக்கும் போது ஓய்வை அறிவித்து இள‌மையில் உழைத்த‌ காசை பிச்ச‌ம் பிடித்து அழ‌கான‌ வாழ்க்கை வாழ்ந்து இருக்க‌லாம்

தோல்விக்கு மேல் தோல்விய‌ ச‌ந்திச்சு க‌ட‌சியில் சில்ல‌றை காசுக்கு விள‌ம்ப‌ர‌ங்க‌ளில் ந‌டித்தார்

 

இவ‌ரை விட‌ திற‌மையான‌ குத்து ச‌ண்டை வீர‌ர்க‌ள் சாதித்து விட்டு 

தாங்க‌ளும் த‌ங்க‌ட‌ குடும்ப‌முமேன‌ வாழுகின‌ம்................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ஏராளன் said:

58 வயதான மைக் டைசன் இரண்டு முறை ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் வென்றவர். அவர் 19 வருடங்களாக தொழிற்முறை குத்துச்சண்டைப் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. அவரை எதிர்த்து களம் கண்ட 27 வயதான ஜேக் பால் ஒரு குத்துச்சண்டை களத்துக்கு புதியவர். டைசனுடன் ஒப்பிடுகையில் அவர் மிகவும் இளமையாகவும், தடகள வீரரைப் போன்ற உடற்தகுதியுடனும் இருந்தார்.

இன்றைய நேரத்தில் மைக் டைசனுக்கு 27 வயதாக இருந்திருந்தால் ஜேக் பாலின் நிலைமையை  நினைத்து பார்த்தேன்.மனதுக்குள் கெக்கட்டம் விட்டு சிரித்தேன்.

அரை நூற்றாண்டு வயதிலும் ஒருவன் குத்துசண்டைக்கு வருகின்றான் என்றால் அவன் மனத்தைரியத்தை பாராட்ட வேண்டும்.

Bild



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.