Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தலில் தமிழ் மக்களிடமிருந்து வடக்கு மாகாணம் பறிபோயுள்ள நிலையில் கடந்த தேர்தலில் பறி போயிருந்த கிழக்கு மாகாணம் தமிழ் மக்களினால் மீண்டும் கைப்பற்றப்படுள்ளது

கடந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி 3 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி. ) 1 ஆசனத்தையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 1 ஆசனத்தையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 1 ஆசனத்தையும் என 7 ஆசனங்களையும் கைப்பற்றி வடக்கு மாகாணத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.

அதே நேரம் வன்னிமாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 1ஆசனத்தையும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 1ஆசனத்தையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி ) 1ஆசனத்தையும் கைப்பற்றிய நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆதிக்கத்திலேயே வன்னி மாவட்டமும் இருந்தது.

அதே நேரம் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள 4 ஆசனங்களில் இலங்கை தமிழரசுக்கட்சி ஒரு ஆசனத்தையும் ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 1ஆசனத்தையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 5 ஆசனங்களில் இலங்கை தமிழரசு கட்சி 2 ஆசனங்களையும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 1 ஆசனத்தையும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 2 ஆசனத்தையும் திகாமடுல்ல மாவட்டத்தில் உள்ள 7 ஆசனங்களில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும் தேசிய காங்கிரஸ் 1 ஆசனத்தையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தன

இதற்கமைய 2020 பாராளுமன்றத்தேர்தலில் வடக்கு மாகாணத்தில் இருந்த 13 ஆசனங்களில் தமிழ் கட்சிகள் 10 ஆசனங்களை கைப்பற்றியிருந்ததுடன் கிழக்கு மாகாணத்திலிருந்த 16 ஆசனங்களில் தமிழ் கட்சிகள் 4 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றியிருந்தன

இந்நிலையில் தான் வியாழக்கிழமை நடந்த பாராளுமன்றத்திற்கான தேர்தலில் வடக்கு மாகாணத்தில் உள்ள 12 ஆசனங்களில் தமிழ் கட்சிகள் 5 ஆசனங்களை மட்டும் கைப்பற்றி வடக்கு மாகாணத்தை தேசிய மக்கள் சக்தியிடம் பறிகொடுத்துள்ளன.

அதேவேளை கிழக்கு மாகாணத்தில் உள்ள 16 ஆசனங்களில் கடந்த முறை 4 ஆசனங்களை தமிழ் கட்சிகள் கைப்பற்றியிருந்த நிலையில் இம்முறை இலங்கை தமிழரசுக்கட்சி தனியாக 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 5 ஆசனங்களில் இலங்கை தமிழரசுக்கட்சி 3 ஆசனங்களைக்கைப்பற்றி தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துள்ளதுடன் திருகோணமலையில் இரா.சம்பந்தனின் வெற்றிடத்தையும் நிரப்பியுள்ளதுடன் கடந்த முறை திகாமடுல்ல மாவட்டத்தில் பறிகொடுத்த தமிழர் பிரதிநிதித்துவத்தையும் இம்முறை தக்கவைத்துள்ளது.

https://thinakkural.lk/article/312222

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிழக்கன்ஸுக்குதான் உண்மையான பிரச்சனையை உணர்கின்றனர்  ....வடக்கன்ஸ் சும்மா வெளிநாட்டு காசில ஜாலியா சிங்கள பெண்களை சைட் அடிச்சு கொண்டு திரிகின்றனர்...அது இளைஞர் சமுதாயமாம்  ..ஒரு கமரா ..டிரோன்..யூடியுப்...நான் ஊடகவிய்ளாலன் ...😅

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, putthan said:

கிழக்கன்ஸுக்குதான் உண்மையான பிரச்சனையை உணர்கின்றனர்  ....வடக்கன்ஸ் சும்மா வெளிநாட்டு காசில ஜாலியா சிங்கள பெண்களை சைட் அடிச்சு கொண்டு திரிகின்றனர்...அது இளைஞர் சமுதாயமாம்  ..ஒரு கமரா ..டிரோன்..யூடியுப்...நான் ஊடகவிய்ளாலன் ...😅

வடக்கில் சிங்கள முஸ்லிம் குடியேற்றங்களாலோ, குடியேற்றவாசிகளாலோ இடையூறுகள் இல்லை. மற்றும் நீங்கள் சுட்டியிருப்பதுபோல் வெளிநாடுவாழ் உறவுகளின் உதவியென்று நிதியும் கிடைக்கும் அதேவேளை, எந்தவொரு அரசியல் புரிதலுமற்ற யுரூப்பர்களுடைய பரப்புரையின் தாக்கம் போன்றனவும் தாக்கம் செலுத்தியுள்ளன. எடுத்துக்காட்டிற்காக 1300மீற்றர் வீதி திறப்பைப் பேசியவர்கள்,அங்கே காணிகளுக்குக் கம்பிக்கட்டை போட்டு வேலி அமைப்பது பற்றி வாயே திறக்கவில்லை. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, nochchi said:

அனுரா அதிரடி உத்தரவு ...தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி...இப்படி தான் அவர்கள் தலையங்கங்கள் இருந்தது.....அனுரா புகழ் பாடிய யூ டியுப்பர்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது...தமிழ் தேசியம் சார்ந்து பேசிய சில யூ டியுப்பர்களின் வீடுகளில் புலனாய்வு பிரிவினர் சென்று எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, putthan said:

எதிர்வரும் 5ஆண்டுகளில் தெளிவான செய்தியை இடதுசாரிக் கோட்பாட்டு முகமூடியுள் மறைந்துள்ள புதிய சிங்கள இனவாத ஆட்சியாளரிடமிருந்து தெளிவானதும் முழுமையானதுமான பரிசுகளைத் தமிழினம் பெறும்வரை இந்த அங்கலாய்ப்புகள் தொடரும். முதலாவது ஆட்சி ஆண்டில் கொண்டுவரப்படும் அரசியல் திருத்தம் 13ஐ தூக்கி எறிவதோடு தொடங்கும் என்றே ஊகிக்கமுடிகிறது. அல்லது இந்தியாவைப் பகைக்காது 13இல்  இருக்கும் ஏனைய பற்களையும் பிடுங்கிவிட்டு ஒப்புக்குத் தேர்தலை நடாத்தி அதிகாரங்களை மாகாணங்களுக்குக் கொடுப்பதாகக் காட்டிவிட்டுத் தமிழினத்தை பப்பாவிலேத்தித் தள்ளிவிடும் அரசியலை யே.வி.பி என்ற என்.பி.பி கையெலெடுக்கும். தமிழினம் கவர்ச்சியரசியலுள் அள்ளுண்டுபோயுள்ள சூழலில் தமிழினம் தனது இருப்பை எப்படித் தக்கவைக்கப்போகிறது என்பது மிகப்பெரும் வினாவாகத் தொக்கிநிற்கிறது. 
சிங்களத்தின் உளவு அமைப்புப் புலம்பெயர் நாடுகள்வரை வியாபித்துள்ள சூழலில், தாயகநிலை எப்படியிருக்கும், அவர்கள் தமிழ்த்தேசிய ஆதரவுத்தளங்களைச் சும்மாவிடுவார்களா? இல்லைத்தனே. ஆட்சியும் கட்சியின் பெயருமே மாறியுள்ளது. ஆனால், அமைந்துள்ளது சிங்களர் அரசாகும்.
யூரூப்பர்கள் மட்டுமன்றி சில முன்னணி ஊடகங்களும் இப்படியான தலைப்புகளைப் போடுவது வெட்கக்கேடு. 

நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி     

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, nochchi said:

1300மீற்றர் வீதி திறப்பைப் பேசியவர்கள்,அங்கே காணிகளுக்குக் கம்பிக்கட்டை போட்டு வேலி அமைப்பது பற்றி வாயே திறக்கவில்லை. 

இந்த வீதியின் உள்ளே காணிகள் உள்ள மக்கள் - ஜனாதி பதிக்கு பலர் சேர்ந்து கையொப்பம் இட்டு கடிதம் அனுப்பியும் ஒரு பதில் தன்னும் இல்லையாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வடக்கு கிழக்கு தற்காலிக இணைப்பை பிரிச்சவைக்கு... வடக்கை கைக்குள் போடுவது அவ்வளவு கடினமல்ல. ஏனெனில்.. வடக்கில் சிங்கள பெளத்த பேரினவாத விசுவாசித் தமிழர்கள் இப்ப அதிகம் பெருகிவிட்டார்கள்.  ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பத்திலும் அதற்கு முன்னரும் இந்த நிலை இருந்தமை.. தெரிந்ததே. அப்பவும் சிங்களம் தமிழர்களைக் கொன்று கொண்டு தான் இருந்தது. ஆனாலும் சிங்கள பெளத்த பேரினவாத விசுவாசிகளை வடக்கு பிரசவிக்கத் தவறவில்லை.

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/11/2024 at 13:47, goshan_che said:

இந்த வீதியின் உள்ளே காணிகள் உள்ள மக்கள் - ஜனாதி பதிக்கு பலர் சேர்ந்து கையொப்பம் இட்டு கடிதம் அனுப்பியும் ஒரு பதில் தன்னும் இல்லையாம்.

அதுதான் சிங்களம். சிங்களம் தான் விரும்போது, தனது தேவைகருதி, தனது இனநலன் சார்ந்து மட்டுமே முடிவெடுக்கும். தமிழர்களைப்போலல்லத்தானே.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.