Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SCG இல் பாரத் அணி இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ஆஸி அணி வெற்றிபெறுவதற்கு 162 ஓட்டங்கள் தேவை.

 
5th Test, Sydney, January 03 - 07, 2025, India tour of Australia
 
IND FlagIND
(39.5 ov) 185 & 157
AUS FlagAUS
181

Day 3 - Session 1: India lead by 161 runs.

CRR: 3.94
 • Min. Ov. Rem: 82.1
 • Last 10 ov (RR): 20/4 (2.00

அற்புதமான சிட்னி ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கமாக மாறியுள்ளது!

  • Replies 106
  • Views 6.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    பகலில் போட்டியை வைத்தாலும் நாங்கள் போகிறது இல்லை........... அது தான் இரவில் இரகசியமாக வைக்கின்றார்களோ............... இரகசியங்களை இரவில் செய்து கொள்வது வழக்கம் தானே.............🤣. டி 20 உலகக் கோ

  • ரசோதரன்
    ரசோதரன்

    🤣............ கிரிக்கட் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆன பின், இங்கு களத்தில் நடந்த டி-20 போட்டியினால் அந்த நேரத்தில் கிரிக்கட் பார்த்தேன். ரோகித்தை அப்பதான் பார்த்தேன். அவர் ஒரு சூப்பர் பாட்ஸ்மேன்

  • ரசோதரன்
    ரசோதரன்

    பையன் சார்,  அரிஸ்டாட்டில், பிளேட்டோ வரிசையில் ஒரு தத்துவஞானியாக வளர்ந்து வருவோம் என்று பார்த்தால், கவுண்டமணி செந்திலுக்கு பின்னர் ஒரு இடைவெளி வந்து விட்டது, அங்கே தான் நான் நிற்கின்றேன் என்று நீ

  • கருத்துக்கள உறவுகள்

மதிய உணவுக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டபோது ஆஸி  தனது இரண்டாவது இன்னிங்ஸில் 71 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை இழந்திருந்தது. வெற்றிபெறுவதற்கு இன்னும் 91 ஓட்டங்கள் தேவை.

Australia 2nd Innings (T: 162 runs)
Batting R B 4s 6s SR
22 17 3 0 129.41
c Washington Sundar b Prasidh Krishna
19 25 0 0 76.00
not out 
6 20 1 0 30.00
c Jaiswal b Prasidh Krishna
4 9 0 0 44.44
c Jaiswal b Prasidh Krishna
5 8 1 0 62.50
not out 
Extras 15 (b 5, lb 1, nb 1, w 😎
Total 71/3
13 Ov (RR: 5.46)
  • கருத்துக்கள உறவுகள்

சங்கி பாரத் அணியை ஆஸி 6 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது!🎉😂

போர்டர் -  கவாஸ்கர் தொடரை 3:1 என்ற அடிப்படையில் ஆஸி  வென்றுள்ளது!🎉🎉😂

அத்தோடு ஆஸி உலக டெஸ்ட் சம்பியஸிப் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது! சங்கி பாரத் அணியை வெளியேற்றியுள்ளது! பாவம் இந்தியனுகள் இனி கதறப் போறானுகள்!😂

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலிய அணி இலகுவாக நிர்ணயிக்கப்பட்ட 162 ஓடங்களை வெறும் 4 விக்கெட் இழப்புடன் பெற்று வெற்றியீட்டியுள்ளது, அவுஸ்ரேலிய அணியின் அற்புதமான பந்துவிச்சு போலில்லாமல் இந்தியணியின் சாதாரண பந்து வீச்சு இந்த இனிங்ஸில் காணப்பட்டது, பும்ரா இந்த இனிங்ஸில் பந்து வீசவில்லை, பும்ரா பந்து வீசியிருந்தால் சிறிது சுவாரசியமாக போட்டி இருந்திருக்கலாம் ஆனால் முடிவில் மாற்றம் இருந்திருக்காது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்றே நாளில் இந்தியா சரண் - 5 மாதங்களில் அணியில் மாற்றம் வரும் என்ற கம்பீர் பேட்டியால் புதிய யூகம்

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி, பார்டர் கவாஸ்கர் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பார்டர் - கவாஸ்கர் கோப்பையுடன் ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

சிட்னியில் நடந்த 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 10 ஆண்டுகளுக்கு பிறகு, ஆஸ்திரேலிய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

சிட்னி டெஸ்ட் தொடங்கி மூன்றாவது நாளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்று ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணியானது இந்த தொடரை இழந்து, கோப்பையையும் பறிகொடுத்துள்ளது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறாமல் படுதோல்வியுடன் தாயகம் திரும்ப உள்ளது.

ஆஸ்திரேலியா அணியுடன் கற்றுக்கொண்டவற்றை வைத்து இந்திய அணி அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் என்று அணியின் கேப்டன் பும்ரா கூறினார். மேலும் வரும் 5 மாதங்களில் இந்திய அணியில் அதிக மாற்றங்கள் வரக்கூடும் என்று தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதனால், இந்திய அணியில் எவ்வாறான மாற்றங்கள் வரக்கூடும் என்று ரசிகர்களிடையே இப்போதே பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன.

 

இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா

பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியதையடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் ஆஸ்திரேலிய அணி விளையாட இருக்கிறது.

இந்த போட்டி வரும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 2வது முறையாக ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்திய அணி மூன்றாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டெஸ்ட் தொடரை பரிதாபமாக இழந்த நிலையில் அந்த வாய்ப்பை இந்திய அணி இழந்துள்ளது.

போட்டிச் சுருக்கம்

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 181 ரன்களும் எடுத்தன. 4 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, நேற்றைய 2வது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்திருந்தது.

3-வது நாளான இன்று, கூடுதலாக 16 ரன்கள் சேர்த்தநிலையில் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்து 39.5 ஓவர்களில் 157 ரன்களை குவித்தது. இதையடுத்து, 162 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 27 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

விமர்சனங்களுக்கு ஆஸ்திரேலியா பதிலடி

பெர்த் டெஸ்டில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தபின் ஆஸ்திரேலியாவின் பேட்டிங், பந்துவீச்சு பற்றி அந்நாட்டு ஊடகங்களும், முன்னாள் வீரர்களும் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

ஆனால், இந்திய அணியை ஒவ்வொரு போட்டியிலும் தங்களின் பந்துவீச்சாலும், பேட்டிங்காலும் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 10 ஆண்டுகளுக்குப்பிறகு ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி, பார்டர் கவாஸ்கர் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இந்திய அணியை தனி ஒருவனாக தாங்கிப் பிடித்த பும்ரா

பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் இந்திய அணியை ஒவ்வொரு போட்டியிலும் தோளில் தூக்கி சுமந்து, திருப்புமுனையை ஏற்படுத்தியது வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மட்டும்தான் என்பதில் சந்தேகமில்லை.

பும்ரா என்ற ஒற்றை பந்துவீச்சாளரை நம்பிதான் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரை எதிர்கொண்டது. இந்தத் தொடரில் மட்டும் பும்ரா 32 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் கடந்த 1977 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் சுழற்பந்துவீச்சாளர் பிஷன் சிங் பேடி 31 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்ததே டெஸ்ட் தொடரில் ஒரு பந்துவீச்சாளர் வீழ்த்திய அதிகபட்ச விக்கெட்டுகளாக இருந்தது. 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த சாதனையை பும்ரா தற்போது முறியடித்துள்ளார்.

பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரின் தொடர்நாயகனாகவும் பும்ரா அறிவிக்கப்பட்டார். இந்தத் தொடரில் 3 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பும்ரா.

பும்ரா வீசும் ஒவ்வொரு 28 பந்துகளுக்கு ஒருமுறை ஒரு விக்கெட்டை வீழ்த்துபவராக இந்த தொடரில் இருந்தார்.

ஆட்டநாயகனாக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் போலந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி, பார்டர் கவாஸ்கர் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரின் தொடர்நாயகனாகவும் பும்ரா அறிவிக்கப்பட்டார்.

தோல்விக்கு காரணங்கள் என்ன?

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ஜஸ்பிரித் பும்ராவுக்கு 2வது நாளான நேற்று திடீரென முதுகு பிடிப்பு ஏற்பட்டு பந்துவீச முடியாமல் அவதிப்பட்டார். இதையடுத்து அணியின் மருத்துவரின் உதவியோடு விளையாட்டு அரங்கிலிருந்து வெளியேறி பும்ரா மருத்துவனைக்குப் புறப்பட்டார்.

இருப்பினும் 2வது இன்னிங்ஸில் பேட் செய்த பும்ரா 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் போலந்து பந்துவீச்சில் போல்டாகி டக்அவுட்டில் வெளியேறினார்.

ஆனால், முதுகு தசைப்பிடிப்பு காரணமாக முன்னெச்சரிக்கையாக 2வது இன்னிங்ஸில் பும்ரா பந்துவீசவில்லை. இதனால் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, நிதிஷ் ரெட்டி ஆகியோர் மட்டுமே பந்துவீசினர். பும்ரா இல்லாமல் இந்திய அணி பந்துவீசியதும் தோல்விக்கான முக்கியக் காரணமாகும்.

அது மட்டுமல்லாமல் போட்டி முடிய இன்னும் 2 நாட்கள் முழுமையாக இருக்கும் போது இந்திய அணி முன்னிலைக்காக குறைந்தபட்சம் 350 ரன்களாக இலக்கு வைத்திருந்தால்தான் வெற்றியை கைப்பற்ற முடியும் என்ற நிலை இருந்தது.

சிட்னி போன்ற கிரீன்டாப் பிட்சில் 162 ரன்கள் இலக்காக வைத்துக்கொண்டு போட்டியை வெல்வது சாத்தியமில்லாதது. அதிலும் பும்ரா அணியில் பந்துவீசியிருந்தால்கூட வெற்றி கிட்டும் என்று நம்பலாம். ஆனால், பும்ரா இல்லாமலும், வெற்றியைக் கைப்பற்ற போதுமான ஸ்கோரும் இல்லாத நிலையில் தோல்வி அடைவது உறுதியானது.

இந்தத் தொடரை இந்திய அணி இழப்பதற்கு மிக முக்கியக் காரணங்களில் ஒன்று பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற பேட்டிங் மட்டும்தான்.

அனுபவமான வீரர்களான புஜாரா, ஹனுமா விஹாரி, ரஹானே ஆகியோர்களை உள்நாட்டு போட்டியில் விளையாட வைத்துவிட்டு அனுபவம் குறைந்த கே.எல்.ராகுல், சுப்மன் கில், ஜெய்ஸ்வால் போன்றோரை நம்பினர். ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரின் மீதும் பெரிய நம்பிக்கை இருந்தநிலையில் இருவரும் பேட்டிங்கில் சொதப்பினர்.

இதில் கோலி முதல் போட்டியில் சதம் அடித்ததோடு சரி மற்ற எந்த போட்டியிலும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. ரோஹித் சர்மா எந்தப் போட்டியிலும் ஒற்றை இலக்க ரன்னையே கடக்கவில்லை.

இந்தத் தொடரில் கோலியின் பேட்டிங் சராரசி 23.75 ஆக இருக்கிறது. ஒரு டெஸ்ட் தொடரில் சதம் அடித்தபின் ஒரு பேட்ஸ்மேன் தொடர்ந்து சொதப்பி மோசமான சராசரி வைத்துள்ள 3வது பேட்ஸ்மேனாக கோலி இருக்கிறார் என்று கிரிக்இன்போ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2024-25 டெஸ்ட் சீசனில் கோலியும், ரோஹித் சர்மாவும் 10 முறை ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்துள்ளனர்.

இந்த டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் சரியில்லையா அல்லது தேர்வே சரியில்லையா, அல்லது தேர்வுக்குழுவே சரியில்லையா என்பது ஆய்வு செய்யப்பட வேண்டியது, என வர்ணனையாளர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி, பார்டர் கவாஸ்கர் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

போராடிய பிரிசித், சிராஜ்

ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 162 ரன்களை இலக்காக இந்திய அணி நி்ர்ணயித்திருந்தது. இது வெற்றி பெற போதுமான இலக்கு அல்ல என்பது தெரிந்தபோதிலும் பும்ரா இல்லாத சூழலில் இந்திய அணி களமிறங்கியது, கேப்டன் பொறுப்பை கோலி ஏற்று செயல்பட்டார்.

சாம் கோன்ஸ்டாஸ், கவாஜா அதிரடியாகத் தொடங்கினர். கோன்ஸ்டாஸ் ஒரு கேமியோ ஆடி 17 பந்துகளில் 22 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். லாபுஷேன் 6 ரன்னில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஸ்லிப்பில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த ஸ்டீவ் ஸ்மித்தும் 6 ரன்னில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஜெய்ஸ்வாலிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்

ஆஸ்திரேலிய அணி 58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதைப் பார்த்தபோது இந்திய வீரர்களுக்கு சற்று நம்பிக்கை துளிர்விட்டது. .

கவாஜா, டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 46 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் கவாஜா 41 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் வெளியேறினார். 104 ரன்களுக்கு 4 வது விக்கெட்டைஆஸ்திரேலியா இழந்தது. இந்த பார்ட்னர்ஷிப்பை விரைவாக உடைத்திருந்தால் நிச்சயம் ஆட்டம்மாறியிருக்கும்.

5வது விக்கெட்டுக்கு வெப்ஸ்டர், டிராவிஸ் ஹெட் கூட்டணி நிதானமாக பேட் செய்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அறிமுக வீரர் வெப்ஸ்டர் 39, ஹெட் 34 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர்.

இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி, பார்டர் கவாஸ்கர் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிரசித் கிருஷ்ணா

"உடல்நிலைக்கும் மதிப்பளிக்க வேண்டும்'

இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா போட்டி முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசுகையில், " இந்த தோல்வி சிறிது வருத்தமாக இருக்கிறது, இருப்பினும் உடல்நிலைக்கும் மதிப்பளிக்க வேண்டும், உடல்நிலையோடு சண்டையிட முடியாது. சில நேரங்களில் அதற்கும் மதிப்பளிக்க வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுபோன்ற பிட்சில் பந்துவீச எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், முதல் இன்னிங்ஸில் இருந்தே சிறிய பிரச்சினை எனக்கு ஏற்பட்டது. மற்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பந்துவீசலாம் என்று முடிவு செய்துதான் உடற்தகுதி நிபுணர்களுடன் பேசினேன் ஆனால், அவர்கள் வேண்டாம் என்று கூறினர்.

இந்தத் தொடர் முழுவதும் ஆஸ்திரேலியாவுடன் கடுமையாக போட்டியிட்டோம், சவாலான தொடராக இருந்தது. இந்த டெஸ்டிலும் அப்படித்தான் இருந்தது. ஏராளமான அனுபவங்கள் கிடைத்தன, அதிகமாகக் கற்றுக்கொண்டோம். இளம் வீரர்கள் பலர் அணிக்குள் வந்துள்ளர், அவர்களும் கற்றுக்கொண்டது எதிர்காலத்தில் உதவும், அணியை மேலும் பலமாக்கும். இந்த கற்றுக்கொண்ட உணர்வோடு அடுத்தக் கட்டத்துக்கு நகர்வோம். சிறந்த தொடராக அமைத்து தந்தமைக்கு ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள்" எனத் தெரிவித்தார்.

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி, பார்டர் கவாஸ்கர் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர்

5 மாதங்களில் மாற்றம் வரும் என கம்பீர் தகவல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு பிறகு இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், "அணியின் ஒரு பிரிவு மட்டுமே காரணம் என்று சொல்லி அவர்கள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. அணியின் ஒவ்வொரு பிரிவிலும் முன்னேற்றம் தேவைப்படுகிறது", என்றார்.

வரும் ஜூன் மாதம், இந்திய அணி அடுத்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இது குறித்து கம்பீர் பேசுகையில், அடுத்த ஐந்து மாதங்களில் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று சுட்டிக்காட்டினார். இருப்பினும், "அடுத்த ஐந்து மாதங்களுக்கான திட்டம் குறித்து பேசுவது இப்போது மிகவும் சீக்கிரமாக இருக்கும். அணியின் ஃபார்ம், அணுகுமுறை, வீரர்கள் என அனைத்திலும் மாற்றங்கள் வரக்கூடும்", என்றும் குறிப்பிட்டார்.

ஐந்தாவது டெஸ்டில் ரோஹித் சர்மாவின் விலகல் குறித்து கேட்டதற்கு, "அவராக முன்வந்துதான் இந்த போட்டியில் இருந்து விலகிக்கொண்டார்", என்று கம்பீர் பதில் அளித்தார்.

பேட்ஸ்மேன்களின் செயல்திறன் பற்றிய கேள்விக்கு, "எல்லா வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த அளவுக்கு உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால், ஒரு அணிக்கு தேவையான சிறப்பான வீரர்களை பெற முடியாது", என்று தெரிவித்தார்.

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு யூகங்கள் குறித்து பேசிய கௌதம் கம்பீர், "அவர்கள் அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் அவர்களுக்கு இந்த விளையாட்டின் மீது இன்னும் பசி இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்ல தங்களால் முடிந்த அனைத்தையும் அவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் என்ன செய்தாலும், இந்திய கிரிக்கெட்டின் நலனை முன்வைத்தே செய்வார்கள்", என்று கூறினார்.

கம்பீர் பதவி மீது தொங்கும் கத்தி

இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பின் இந்திய அணி பல தோல்விகளைச் சந்தித்துள்ளது.

குறிப்பாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 27 ஆண்டுகளுக்குப்பின் 0-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது, உள்நாட்டில் 12 ஆண்டுகளுக்குப்பின் நியூசிலாந்து அணியிடம் டெஸ்ட் தொடரை 3-0 என இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகியது. இப்போது பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை 3-1 என 10 ஆண்டுகளுக்குப்பின் இழந்துள்ளது.

இந்திய அணிக்கு பயிற்சியாளராக ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் இருந்தபோது வீரர்களுடன் சுமூகமான தொடர்பு, பேச்சு, அனுசரணையான போக்கு இருந்தது. அதேபோன்ற போக்கு கம்பீர் பயிற்சியாளராக வந்தபின் வீரர்களிடம் இல்லை, வீரர்களைக் கையாள்வதும் சரியான முறையில் இல்லை, வீரர்கள் ப்ளேயிங் லெவனில் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறார்கள் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி இழந்தால் கம்பீர் பயிற்சியாளர் பதவியில் தொடர்வது இந்திய அணிக்கு பாதுகாப்பானதாக இருக்காது, அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிறது என்பதால் அதற்குள் முடிவு செய்வோம், அதிபட்சமாக ஜனவரி 12ம் தேதிக்குள் ஏதாவது முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி, பார்டர் கவாஸ்கர் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ்

எங்களுக்கு சிறப்பான நாள்

10 ஆண்டுகளுக்குப்பின் பார்டர் கவாஸ்கர் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறுகையில் "என்னால் நம்ப முடியவில்லை. ஆனால், எங்கள் அனைவருக்கும் தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது. எங்கள் திட்டங்கள் குறித்து தெளிவான பார்வையுடன் செயல்பட்டோம்.

ரன்களைக் குறைவாகக் கொடுக்க வேண்டும், விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று திட்டமிட்டோம். பேட்ஸ்மேன்களும் சிறப்பாக செயல்பட்டனர். உண்மையில் பெருமையாக இருக்கிறது. இந்தத் தொடரை கைப்பற்ற குழுவாக அதிகமான நேரத்தை செலவிட்டுள்ளோம். சில வெற்றிகள் எப்போதும் மறக்கமுடியாததாக அமைந்துவிடுகிறது. இந்த வெற்றியை, நாங்கள் அடைந்ததை நினைத்து பெருமைப்படுகிறோம். இளம் வீரர்களின் பங்களிப்பும் அற்புதமாக இருந்தது. ரசிகர்களும் எங்களுக்கு தொடர் முழுவதும் நல்ல ஆதரவு அளித்தனர். இந்த 2025ம் ஆண்டில் இந்தநாள் எங்களுக்கு சிறப்பான நாளாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் தொடர் தோல்விகளுக்கு கம்பீரின் தவறான முடிவுகளே காரணமா? விஸ்வரூபம் எடுக்கும் கேள்விகள்

கௌதம் கம்பீர்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. கட்டுரை தகவல்
  • எழுதியவர்,மனோஜ் சதுர்வேதி
  • பதவி,மூத்த விளையாட்டு பத்திரிகையாளர், பிபிசி இந்தி
  • 6 ஜனவரி 2025

இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் தொடரை இழந்ததை தொடர்ந்து, அணியில் மாற்றம் தேவை என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது. அதோடு, அணியின் தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மீதும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் பல வெற்றிகளை குவித்த இந்திய அணி, திடீரென துவண்டு போய் காணப்படுகிறது.

கம்பீர் பயிற்சியாளராக பதவியேற்ற பிறகு வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. ஆனால் அதன் பிறகு, நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் முதல் முறையாக இந்திய அணி `ஒயிட் வாஷ்' ஆனது.

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழந்த இந்தியா அணி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை எதிர்கொண்டது.

 

கம்பீரின் தவறான முடிவுகளே காரணமா?

இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது

இந்தியா இந்த டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கியது என்பதே உண்மை. ஆனால் இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்திலிருந்து இந்திய அணியின் பேட்டிங்கின் பலவீனம் வெளிப்படத் தொடங்கியது.

மூன்றாவது டெஸ்டில் இந்தியா பலவீனமான பேட்டிங் காரணமாக தோல்வியடைந்தது. இந்நிலையில் நான்காவது டெஸ்டில் பேட்டிங்கை வலுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு அணியில் இடம் கொடுப்பதற்காக சுப்மன் கில் வெளியேற்றப்பட்டது இந்திய அணியின் பேட்டிங்கை மேலும் பலவீனப்படுத்தியது.

சிட்னி டெஸ்டில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் இடம்பெறச் செய்தது தவறான முடிவு. இரண்டாவது சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சுடன் பேட்டிங்கும் வலுப்பெறும் வகையில் ஆல்ரவுண்டராக கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அந்த டெஸ்ட் போட்டி முழுவதும் அவர் ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசினார். பேட்டிங்கிலும் அவரால் சிறப்பாக எதுவும் செய்ய முடியவில்லை.

ஆகாஷ்தீப் அல்லது ஹர்ஷித் ராணா போன்ற மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் சிட்னியில் விளையாடி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும், இந்திய அணிக்கு சாதகமான முடிவுகள் கிடைத்திருக்கலாம்.

கம்பீர், உதவியாளர்கள் மீது கவாஸ்கர் விமர்சனம்

கவாஸ்கர்

பட மூலாதாரம்,IZHAR KHAN/GETTY IMAGES

படக்குறிப்பு,சுனில் கவாஸ்கர்

பயிற்சியாளரின் விருப்பத்திற்கேற்பவே உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போதைய உதவியாளர்களின் நியமனமும் அப்படி தான் நடந்துள்ளது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் கவாஸ்கர் பேசுகையில், உதவியாளர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்க வேண்டும்' என்று கூறினார். பேட்டிங்கில் ஏன் முன்னேற்றம் இல்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

"நம்முடைய பேட்ஸ்மேன்களால் சிறப்பான பந்துவீச்சை எதிர்க்கொள்ள முடியாது என்பது கூடபரவாயில்லை. சில சமயம் பெரிய பேட்ஸ்மேன்களுக்கு கூட சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்வதில் சிக்கல்கள் இருக்கும். ஆனால் சாதாரண பந்துகளை கூட அவர்களால் எதிர்கொள்ள முடியாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது" என்று கவாஸ்கர் குறிப்பிட்டார்.

ஜூன்-ஜூலையில் இங்கிலாந்துக்கு எதிராக அடுத்த டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அந்த நேரத்தில் இந்த உதவியாளர்களை தக்க வைப்பதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றார் கவாஸ்கர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அடுத்த சுழற்சி இங்கிலாந்துக்கு எதிரான தொடருடன் தொடங்கும் என்றும், இந்த சுழற்சியின் இறுதிப் போட்டி ஜூன் 2027 இல் நடைபெறும் போது, அணியின் மூத்த வீரர்கள் யார் என்பதை மனதில் வைத்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தற்போதைய சூழலை மனதில் வைத்து இளம் வீரர்கள் மீது கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றார் கவாஸ்கர்.

டெஸ்ட் தொடர்களுக்கான சுற்றுப்பயணங்களின் போது பயிற்சி போட்டிகளை நடத்துவது தேவை என்று கவாஸ்கர் கருதுகிறார். சில காலமாக பயிற்சி ஆட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை.

"சிறப்பாக விளையாடும் வீரர்கள் பயிற்சி போட்டிகளில் விளையாட விரும்பாமல் இருக்கலாம். ஆனால் ப்ளேயிங் லெவனில் இல்லாத வீரர்களை தயார்படுத்த இந்த போட்டிகள் மிகவும் முக்கியம். அந்த வீரர்கள் தேவைப்படும் நேரத்திற்கு ஏற்றவாறு தயாராக முடியும்." என்றார் கவாஸ்கர்.

கம்பீர் பயிற்சியின் கீழ் நடக்கும் அடுத்த டெஸ்ட் தொடரும் கடினமானது

கம்பீர்

பட மூலாதாரம்,LIGHTROCKET VIA GETTY IMAGES

படக்குறிப்பு,கௌதம் கம்பீர்

வரயிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான கடினமான டெஸ்ட் தொடருடன் கெளதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ஓராண்டு காலத்தை நிறைவு செய்வார்.

இதுவரை அவரின் பயிற்சியின் கீழ் நடந்த அனைத்து ஆட்டங்களையும் பார்க்கும் போது, டி20யில் மட்டும்தான் இந்திய அணி விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதுதவிர 10 டெஸ்ட்களில் மூன்றில் வெற்றியும், 6 தோல்வியும், ஒன்று டிராவும் ஆகியுள்ளது. மூன்று ஒருநாள் போட்டிகளில் இரண்டில் இந்தியா தோல்வியடைந்தது, ஒன்று டையில் முடிந்துள்ளது.

இங்கிலாந்தில் ஒரு தொடரில் விளையாடுவது எளிதல்ல. இங்கிலாந்தில் கம்பீரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்றால், அவர் மீதான விமர்சனம் மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.

'வெளிப்படையாகப் பேசத் தயக்கம்’

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி

பட மூலாதாரம்,PATRICK HAMILTON/AFP

படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஆட்டம் சிறப்பாக இல்லை

இந்த தொடரில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இரு சிறந்த இந்திய வீரர்களின் மோசமான ஆட்டம் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

ஆனால் போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் அணியில் மாற்றம் வருமா என்பது குறித்து கேட்டபோது, கம்பீர், "இதை விவாதிப்பதற்கான சரியான நேரம் இது இல்லை. இன்னும் ஐந்து மாதங்கள் உள்ளது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு நாம் எந்த நிலையில் இருப்போம் என்பதே கேள்வி? விளையாட்டில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. விளையாட்டின் ஃபார்ம் மாறுகிறது. வீரர்கள் மத்தியில் மாற்றம் ஏற்படுகிறது, அணுகுமுறை மாறுகிறது, எல்லாம் மாறுகிறது."

"இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஆனால் எது நடந்தாலும் அது இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காகவே இருக்கும்" என்றார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது அணி தொடர்பாக சில கடினமான முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதை கம்பீரின் இந்த கருத்துகள் சுட்டிக்காட்டுகின்றன. அவர் தனது முடிவுகளை பற்றி இப்போது வெளிப்படையாக கூறவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.

உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட அறிவுறுத்தும் கம்பீர்

கம்பீர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்திய அணி வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளதாகவும், அதன் பிறகு சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட உள்ளதாகவும் கம்பீர் கூறினார்.

இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர்.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, சர்வதேச அளவில் சிறப்பாக விளையாட முடியாத வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இந்தியா வரையறுக்கப்பட்ட ஓவர்கள் (டி20, ஒருநாள்) கொண்ட தொடர்களில் விளையாட உள்ளதாகவும், அதன் பிறகு சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட உள்ளதாகவும் கம்பீர் கூறினார்.

இப்போட்டிகளில் பங்கேற்காத வீரர்கள், வரும் ஜனவரி 23-ஆம் தேதி முதல் மீண்டும் துவங்கும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இந்த போட்டிகளில் விளையாடினால் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் செயல்திறனை மேம்படுத்த முடியும்.

உண்மையில் முன்பு, வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டை விளையாடுவதன் மூலம் தங்கள் ஆட்டத்தின் குறைபாடுகளை மேம்படுத்திக் கொண்டனர். ஆனால் இப்போது வீரர்களின் விளையாட்டில் உள்ள குறைபாடுகள் நீண்ட காலமாக சரி செய்யப்படாமல் உள்ளன. இதற்குக் காரணம், இந்த குறைபாடுகளை மேம்படுத்த எந்த முயற்சியும் செய்யப்படவில்லை.

உதாரணமாக, விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அடிக்க முயன்று அவுட் ஆகிறார். இந்த தொடரிலும் பலமுறை இதே முறையில் அவுட்டாகியுள்ளார்.

ஆனால் அவர் பல ஆண்டுகளாக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடவில்லை. உள்நாட்டு கிரிக்கெட்டை விளையாடுவது, பல்வேறு வகையான ஆடுகளங்களில் விளையாடுவதற்கு வீரர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது.

(இந்த கட்டுரையில் இடம் பெற்ற கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளே.)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் தோல்விக்கு இந்தியா க‌ப்ட‌ன் ரோகித் ச‌ர்மாவின் சுத‌ப்ப‌ல் விளையாட்டும் காரனம்...................4வ‌து  போட்டிய‌ வ‌டிவாய் ச‌ம‌ நிலையில் முடித்து இருக்க‌லாம் ஜேஸ்வால் செஞ்ச‌ரி அடிக்க‌ ஆசை ப‌ட்டு அவுட் ஆன‌தோட‌ ச‌ரி

 

தமிழ‌க வீர‌ர் வஸ்சின்ட‌ன் சுந்த‌ர் திற‌ம்ப‌ட‌ செய‌ல் ப‌ட்டார்👍.............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.