Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவர் சங்கங்கள் அனுப்பும் நிதி லஞ்சம், ஊழலை வளர்த்துவிடுகின்றது!” - ஆளுநர் வேதநாயகம்

IMG-20241124-WA0001-614x470.jpg

“யாழ் பாடசாலைகள் சில நேரடியாக வெளிநாடுகளிலிருந்து பழைய மாணவர் சங்கங்களுடாக நிதியைப் பெறுகிறார்கள். ஆனால் அவை எவ்வாறு செலவிடப்படுகின்றது என்ற பொறுப்புக் கூறல் எதுவும் அங்கில்லை. இது ஊழலுக்கே இட்டுச் செல்லும்” என ஆளுநர் நா வேதநாயகம், ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

யாழில் உள்ள சில முன்னணிப் பாடசாலைகள் சட்டவிரோதமாக அன்பளிப்பு என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் லட்சக் கணக்கிலும் அன்பளிப்புக் கோருகின்றனர். பாடசாலைகளில் நடைபெறும் எந்தவொரு நிகழ்வுக்கும் மாணவர்களிடமோ ஆசிரியர்களிடமோ பணம் கோரக்கூடாது என அளுநர் அங்கு அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் துறைசார் மீளாய்வுக் கூட்டத்திலேயே இக்கருத்தை ஆளுநர் வெளியிட்டார்.

“வடக்கில் 12 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்கின்றார். ஆனால் நாட்டில் சராசரியாக 17 மாணவர்களுக்கே ஒரு ஆசிரியர்” எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம பற்றிக் டிறன்ஞன் வடக்கில் பாட ரீதியாகவே ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாகக் குறிப்பிட்டார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடப் பட்டதாரி ஆசிரியர்களால் கலைப்பாடங்களுக்கான ஆசிரியர்கள் தேவைக்கதிகமாக குவிக்கப்பட்டுள்ளது.
 

 

https://akkinikkunchu.com/?p=300405

Edited by கிருபன்
  • கிருபன் changed the title to வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவர் சங்கங்கள் அனுப்பும் நிதி லஞ்சம், ஊழலை வளர்த்துவிடுகின்றது!” - ஆளுநர் வேதநாயகம்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, கிருபன் said:

யாழ் பாடசாலைகள் சில நேரடியாக வெளிநாடுகளிலிருந்து பழைய மாணவர் சங்கங்களுடாக நிதியைப் பெறுகிறார்கள். ஆனால் அவை எவ்வாறு செலவிடப்படுகின்றது என்ற பொறுப்புக் கூறல் எதுவும் அங்கில்லை. இது ஊழலுக்கே இட்டுச் செல்லும்” என ஆளுநர் நா வேதநாயகம், ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இது வைத்தியசாலைகளுக்கும் பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது உண்மை தான் 

ஆனால் இதற்கான உங்கள் மாற்றீடு என்ன? 

வடமாகாண சபைக்கு இது சம்பந்தமான அதிகாரமும் அங்கீகாரமும் வேண்டும் கொடுப்பீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, விசுகு said:

இது உண்மை தான் 

ஆனால் இதற்கான உங்கள் மாற்றீடு என்ன? 

வடமாகாண சபைக்கு இது சம்பந்தமான அதிகாரமும் அங்கீகாரமும் வேண்டும் கொடுப்பீர்களா?

சரியான கேள்வி. 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, விசுகு said:

இது உண்மை தான் 

ஆனால் இதற்கான உங்கள் மாற்றீடு என்ன? 

வடமாகாண சபைக்கு இது சம்பந்தமான அதிகாரமும் அங்கீகாரமும் வேண்டும் கொடுப்பீர்களா?

 

அவர் என்ன சொல்ல வருகின்றார் என்றால் கொட்டுகின்ற காசை தங்களிட்ட கொண்டு வந்து தரட்டாம்.

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, விசுகு said:

இது உண்மை தான் 

ஆனால் இதற்கான உங்கள் மாற்றீடு என்ன? 

வடமாகாண சபைக்கு இது சம்பந்தமான அதிகாரமும் அங்கீகாரமும் வேண்டும் கொடுப்பீர்களா?

 

9 minutes ago, நியாயம் said:

 

அவர் என்ன சொல்ல வருகின்றார் என்றால் கொட்டுகின்ற காசை தங்களிட்ட கொண்டு வந்து தரட்டாம்.

பாடசாலை வைத்தியசாலை போன்றவை உள்ளுரில் அரசிடம் பணம் வாங்கினால் அதை

கட்டுறத்துக்கு உரிய ரென்ரர் போட வேண்டும்.விரும்பிய ஆட்களுக்கு கொடுக்க முடியாது.

இடை எப்படியான நிலவரத்தில் இருக்கிறதென்ற அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

அப்போது தான் மிகுதி பணத்தை கொடுப்பார்கள்.

வெளிநாட்டில் பணத்தை வாங்கிய சாவகச்சேரி வைத்தியசாலையை பார்த்தாலே எல்லாமே புரியும்.

வெளிநாட்டில் இருப்பவன் பணத்தை கொடுத்ததோடு சரி.

இன்னும் கொஞ்ச சனம் பாடசாலை வைத்தியசாலை என்றால் பணம் கொடுக்காது.

கோவில் என்றால் அள்ளிக் கொடுக்கும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.