Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
Ramanathan Archchuna வைப் பற்றிய Sepal Amarasinghe வின் you tube பதிவினது தமிழாக்கம்.
பகுதி 1.
சில இடங்களில் எனது கருத்துக்களையும் சேர்த்திருக்கிறேன்.
 
Ramanathan Archchuna வால்
 
கேட்கப்படும் பிரச்சனை என்ன என்பது தான் you tube பதிவின் தலையங்கம்…
 
இதை சுருக்கமாக சொல்வதானால்….
 
1)இப்போது (தமிழர்களுக்கு பழையது) பெரும்பான்மையினருக்கு சமூகவலைத்தளத்தில் மிகவும் பிரபலமாக அடிபடும் செய்தி இது தான் என பதிவர் ஆரம்பிக்கிறார்…
யாருக்காவது, என்னாவது , யாராவது
ஏதாவது சமூக வலைத்தளத்தில் இருக்கணும்…
அப்பதான் அது ஓடிக்கொண்டிருக்கும்..
இல்லாட்டி பொறுக்கேலாது…
 
2)தற்போது டொக்டர் அர்ச்சுனா பற்றிய கதை போய்க்கொண்டிருக்கிறது.
தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோரும் அது பற்றி கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
3)ஆனால் அர்ச்சுனா ஆராயப்பட, படிக்கப்பட வேண்டிய மனிதர் தான் என்கிறார் பதிவர்.
அங்கே ஓர் Case Study
இருப்பதாக கூறுகிறார்.
 
4)எல்லோரும் என்னிடம் கேட்டார்கள்,
யார் இவர்? என்ன இது என கேட்டார்கள்.
Dr. Archchuna Ramanathan.
 
5)கேட்டவர்களை நான் கேட்டேன் இவருடன் கதைக்க வேண்டுமா? இது பற்றி கதைக்க வேண்டுமா? இல்லையா எனக் கேட்டேன்.
அதற்கு கேட்டவர்கள் அவனுக்கு பைத்தியம் அவனோட என்ன கதை தேவையில்லை விடுங்கள் என்றார்கள்.
 
6)ஆனால் அது பற்றி கதைக்காமல் விட்டால், அவருடன் கதைக்காமல் இருந்தால் அங்கே தான் பெரிய பிரச்சனை இருக்கிறது என கூறிச்செல்கிறார்.
 
7) கதைப்பதில் பிரச்சனை இல்லை தானே என கூறிச்செல்கிறார். ஆனால் கதைக்காமல் விட்டால் தான் பிரச்சனை பெரிதாகும் என்பதை சுட்டிக்காட்டுகிறார்.
 
8)அர்ச்சுனா இங்கே என்ன செய்கிறார்?
அவர் பாரம்பரிய சம்பிரதாயத்தில், வேதத்தில் கைவைக்கிறார்.
அதை கேள்வி கேட்கிறார்.
அதை தாக்குகிறார்.
 
9)உடனே நாங்கள் என்ன செய்கிறோம்?
ஏய், ஏய் என்ன கேள்வி கேக்கிறாய்?
பேசாம மூடிப்போட்டு போ பாப்பம் என்கிறோம்.
 
10) ஆனால் அர்ச்சுனா கேட்பதாயில்லை.
ஏன் மூடுவான்?
உள்ள ஏதோ இருக்கெண்டுறீங்கள்?
ஒண்டையும் காணலையே?
ஒண்டும் இல்லாட்டி மூடிட்டு போ எண்டுறீங்கள்?என்கிறார் ..
என்ன தான் இருக்கிறது என பாப்போமே என்கிறார்…
 
11) விடயத்தை மூடாட்டி,அதை பார்த்துக் கொண்டிருப்பவர்களாகிய சமுதாயத்தின் பெரிய கூட்டம்
என்ன செய்கிறார்கள்.
இவன் விசரன், பைத்தியம், சிறையில் அடையுங்கள், விசாரியுங்கள், அடியுங்கள், இல்லாமல் செய்யுங்கள், புறக்கணியுங்கள்,
ஒரு பக்கத்தில தூக்கிப் போடுங்கள், கொல்லுங்கள் அல்லது அங்கொடைக்கு கொண்டு போங்கள் என குளற ஆர்ப்பரிக்க ஆரம்பிக்கிறார்கள்.
(இதைத்தான் தமிழர்களாகிய நாம் சாவகச்சேரியில் இருந்து இவருக்கு செய்து வருகிறோம். இதற்கு எதிராகத்தான் தொடர்ந்து நானும் எழுதிக் கொண்டு இருந்தேன், இப்போதும் எழுதிக் கொண்டு இருக்கிறேன்)
 
12) இதை அப்படியே இழுத்து
மூடுவது கூடாது.
இதனால் தான் எமது சமுதாயம் முன்னேறுவதற்கு மிகவும் தாமதமாகிறது என அடித்து கூறுகிறார்.
இப்படி யாராவது பிரச்சனைப்படுத்தினால்
உடன நாங்கள் அவரை அப்படியே அப்புறப்படுத்த ஆரம்பிக்கிறோம்.
சமுதாயத்தில் உள்ள பலங்கள் அனைத்தையும் கொண்டு கேட்பவரை மூடி மறைப்பதால்
பிழைகளை மூடிவிடுகிறோம்.
(அதைத்தானே சாவகச்சேரியில் இருந்து நாம் தொடர்ந்து செய்து வந்தோம்.)
 
13)இந்தப் பிரச்சனையை இப்படியே கைவிடுவது கூடாது என கூறிச்செல்கிறார்.
சமாளிப்பது கடினம் தான்,
(ஏன் என்றால் அந்த பழைய சிஸ்டம் தானே எமக்கு பழகியிருக்கிறது, சுலபமாகவும் இருக்கிறது) ஆனாலும் கைவிடக்கூடாது எனகிறார்.
இதனால் இது மற்றவர்களுக்கு தலையிடியாக மாற ஆரம்பிக்கும்,ஆனாலும்
கைவிடக்கூடாது என்கிறார்.
(இதைத்தான் நான் ஆரம்பத்தில்
இருந்து எழுதிவருகிறேன். இதற்காக மட்டுமே நான் தொடர்ந்து அர்ச்சுனாவின் பக்கம் எழுதி வந்தேன்)
(பிரச்சனை ஒன்று வந்தால் பிரச்சனையை மூடுவதல்ல தீர்வு, பிரச்சனையை தீர்ப்பது.
புண் வந்தால் புண்ணை மூடி மறைப்பது போல் இருக்கிறது. புண்ணை
மாற்ற வேண்டாமா?)
 
14)சமுதாயத்தில் ஒருவரும் கூறாத, கேட்காத விடயத்தை சமூகத்தில் வேறு ஒருவர் கேட்க ஆரம்பித்ததும் மற்றவர்களுக்கு தலையிடி தொடங்கிவிடுகிறது. பேசாம அங்கால போவியா என கோசம் எழுப்புகிறார்கள்.
கலைக்க ஆரம்பிக்கிறார்கள்.
 
15) இதனால் அவர் கூறுவது எல்லாம்
சரியானது என நான் கூறவரவில்லை.
அவரும் சதாரண மனிதர் தானே என்கிறார்.
 
16) மற்ற பக்கம் இருந்து கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார். சமுதாயத்துக்காக, பொதுவிடயத்துக்காக கேள்வி கேட்க ஆரம்பிக்கும் போது அவரது தனிப்பட்ட பலவீனங்களும் வெளியே வர ஆரம்பிக்கின்றன. கேட்பவரின் எல்லாப்பக்கமும் வெளித்தள்ளுகின்றன.
 
17) இது யாருக்கும் நடைபெறலாம்,
பொது விடயங்களை கதைத்துக் கொண்டிருக்கும் போது எமது தனிப்பட்ட பலவீனங்கள் கூட வெளிவரப்பார்க்கும்.
அப்போது அவர் கதைத்த பொது விடயங்கள் அங்கே அடிபட்டுப்போகின்றன.
அதற்காக காத்திருந்தவர்கள், தங்களுக்கான இரையை தூக்கிக்கொண்டு சன்னதம் கொள்கிறார்கள்.
 
18) அப்போது தனிப்பட்ட பலவீனங்கள் பெரிதுபடுத்தப்படுகின்றன.
தூக்கிப்பிடிக்கப்படுகின்றன.
அவர் கூறும் நல்ல விடயங்கள் அடிப்பட்டுப் போகின்றன.
(யாழ் தேர்தலில் அர்ச்சுனா அதற்கான விலையையும் கொடுத்திருந்தார்.)
(இது தான் அர்ச்சுனாவுக்கு தேர்தல் காலங்களில் நடைபெற்றது.
Sepal அர்ச்சுனா பற்றி நல்லதொரு case study தான் செய்திருக்கிறார்.)
 
19)ஒருவர் கட்டுப்பாடு,ஒழுக்கம், அடக்கம் (discipline)என்பவற்றை பாடசாலையிலேயோ, சமுதாயத்திலேயோ, குடும்பத்திலேயோ அல்லது வேறெங்காயினும் கற்றிருந்தால் ஒருவரும் கேளாத கேள்விகளை கேட்க மாட்டார்கள்.
அவர்கள் ஏதோ ஓர் அமைப்புக்குள் அடக்கப்பட்டிருக்கிறார்கள்.
அல்லது அடிமையாகி இருக்கிறார்கள்.
அதனால் கேள்வி கேட்க மாட்டார்கள்.
 
20)Discipline க்க வளர்ந்தவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள். அவர்கள் கூட்டத்துடன் நின்று கொண்டிருப்பார்கள்.
கூட்டத்தில் ஒருவராக நின்று கொண்டிருப்பார்கள்.
Discipline க்க இருப்பவர்கள் கேள்வி கேட்கும் மற்றவர்களாக இருக்க மாட்டார்கள்.
அர்ச்சுனா கூட்டத்தில் இருந்து வெளிவந்து கேள்வி கேட்கிறார்.
ஆனாலும், அவருக்கு எதிரான கூட்டம் அவரை புறக்கணிக்க, அடிக்க, துரத்த, ஒதுக்க, கொல்ல, சிறையில் தள்ள சமூகத்தின் அத்தனை பலங்களையும் பாவிக்க ஆரம்பிக்கிறது…
ஆனால் Aruchchuna எல்லாவற்றையும் எதிர்த்து போராடுகிறார்..
புதுவடிவம் கொள்கிறார்…
பல எதிர்ப்புக்கு மத்தியில்
தொடர்ந்து போராடுகிறார்…
 
பகுதி இரண்டு…
தொடரும்….
 
DR.  அர்ச்சுனா ராமநாதன்   FB  இல் இருந்து
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, வாத்தியார் said:

பதிவுக்கு நன்றி வாத்தியார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தன்னைப் பற்றி இன்னொருவர் செய்த ஆய்வை அப்படியே அர்ச்சுனா தன் முகநூலில் பதிந்திருக்கிறார்.

அர்ச்சுனா அவர்களின் பிரச்சினை, நான் அறிந்த வரையில், அவரது கட்டுப் பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு பிரச்சினை. இந்த சவால்களோடு அவர் க.பொ.த உயரதரம் உயிரியல் பிரிவில் சித்தி பெற்று, மருத்துவ பீடம் சென்று அங்கேயும் பல பின்னடைவுகளுடன் மருத்துவக் கல்வியை முடித்து மருத்துவராக வெளிவந்தமை, அவரது தனிப்பட்ட சாதனை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், தன் சொந்த வாழ்க்கையில் காட்டிய அதே கட்டுப் பாட்டையும் ஒர்மத்தையும் பொது வாழ்க்கையில் காட்ட இயலாமல் தடுமாறுகிறார் என நினைக்கிறேன். இந்த தடுமாற்றத்திற்கான ஒரு பிரதான காரணி, இவரது தனிப்பட்ட சவால்களை அறியாமல் இவரைக் காட்சிப் பொருளாக்கி விட்டிருக்கும் யூ ரியூபர்களும், அதன் சந்தாதாரர்களும். தன்னுடைய வட்டத்தைக் குறுக்கிக் கொண்டு பொது வாழ்க்கையில் சில கட்டுப் பாடுகளைப் பேண வேண்டும் என்று புரிந்து கொண்டால் சிறப்பாக இருக்கும்!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Ramanathan Aruchchuna வைப்பற்றிய Sepal Amarasinge வினது  you tube பதிவின் தமிழாக்கம்…

பகுதி 2…
தொடர்கிறது….

ஒருவரின் வாழ்க்கையின் ஓர் பகுதியை நாம் பார்த்துவிட்டு அது தான் அவரின்  முழு வாழ்க்கையுமாக நினைத்து விடுகிறோம்.

அப்படியில்லை. 
ஓர் நிகழ்வு அவர் வாழ்க்கையின் 
அந்தக் கண நிகழ்வு தான். 

யானையின் காதுக் கதைதான். 
யானைக் காதை மட்டும் பார்த்து விட்டு 
அது சுளகு என கூறக்கூடாது.

அநேகமானவர்கள் அரசியல் என்றால் தேர்தலில் கேட்பது, வெல்வது, பாராளுமன்றில் குடிப்பது , சாப்பிடுவது  கொண்டாடுவது தான் அரசியல் என எண்ணுகிறார்கள்.

அரச்சுனாவின் பிரச்சனைக்கு மீண்டும் வருவோம். 
அவர் பாராளுமன்றத்தில் என்ன செய்தார்?

முதல் நாள் எல்லோரும் விரும்பிய இடங்களில் இருக்கலாம் என 
அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அர்ச்சுனா எதிர்கட்சி தலைவரின் சம்பிராதய கதிரையில் அமர்ந்து விட்டார்.

உடனே சேவகர்கள் ஓடி வந்து இது எதிர்கட்சி தலைவருடையது என 
அறிவிக்கிறார்கள். 

இவர் வழமையாக மற்றவர்கள்  
செய்வது போல் செய்யாமல்
அப்பிடி கூறவில்லையே? 
எங்காவது எழுதியிருக்கிறதா?
என தொடர் கேள்விகளை அடுக்குகிறார்..

அது தான் சம்பிரதாயம் என சேவகர்கள் கூறும் போது சம்பிரதாம் சரிவராது, அதை மாற்றத் தானே நாம் வந்திருக்கிறோம் என கூறுகிறார்.

நீங்கள் இதை மோட்டு வேலை எழுப்பி போக வேண்டியது தானே என  நினைத்தால் அது மோட்டு வேலை தான்…

ஆனால்,
Sanity, insanity என இரண்டு நிலைகள் இருக்கிறது.
Sanity என்பது நல்லறிவு, 

Sanity/insanity எல்லையை சிறிது கடந்த நிலை Insanity.

இங்கே அர்ச்சுனா நிற்கும் நிலை insanity. 
மற்றவர்கள் எல்லோரும் Sanity நிலையில் இருப்பவர்கள்,கூட்டமாக இருக்கிறார்கள்.

பிழையாக இருந்துவிட்டீர்கள் என  எழும்பச் சொன்னதும்
ஆ..அப்படியா என எழும்பி விடுவார்கள்.
Sanity குழு சார்ந்தவர்கள் அவர்கள்…

ஆனால் அர்ச்சுனா அப்படிப்பட்டவர் இல்லை. எழும்பவில்லை, எழும்ப மாட்டார்.

அவர் sanity/insanity  எல்லையை (border)ஐ கடந்து நிற்கிறார்.
அப்போ அவர் அதை பிரச்சனையாக்குவார்.

அடுத்த முறை பாராளுமன்றத்தில் நிச்சயமாக பிரதமர், எதிர்கட்சி தலைவர் இடங்களை அட்டையில் எழுதிவைப்பார்கள்.

மற்றவர்கள் தேவையான இடங்களில் இருக்கலாம் என அறிவிப்பார்கள்.
(இந்தமுறை 3/4 பகுதியினர் புதியவர்கள் என்பதை சேவகர்கள் கவனித்திருக்கலாம்,
அவர்கள் பழைய பழக்கத்தின்படி செயலாற்றியிருக்கிறார்கள்)

பொதுவாக ஒரு விடயத்தை கூறும் போது அதில் கூறப்படாத சில விடயங்களை தாமாக  மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள் என அறிவிப்பவர்கள் 
நினைத்துக் கொள்கிறார்கள்.

எங்காவது இருந்து கொள்ளலாம், ஆனால் குறிப்பிடப்படாத கதிரைகளும் அதில் இருக்கின்றன என நாமாக யோசிக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். 

அதை நாங்கள் நாமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

ஜனநாயகமும் இது போன்றது தான். அமெரிக்காவில் 
கறுப்பு/வெள்ளை பிரச்சனை, 
இந்தியாவில் இந்து/ முஸ்லிம் பிரச்சனை இலங்கையில் தமிழ்/ சிங்கள பிரச்சனை இல்லை என்றே வெளியில் கூறுவார்கள்.

வெளியில் அப்படி கூறப்பட்டாலும் அப்படி ஒரு பிரச்சனை உள்ளே இல்லாமல் இல்லை. பிரச்சனை இருக்கிறது.

தமிழ்/சிங்களப் பிரச்சனை இல்லை என கூறினாலும், எல்லோரும் இலங்கையர்கள் என வெளியில் கூறினாலும் தான் தமிழ் எண்டபடியால் பிரச்சனை இருக்கிறது என அர்ச்சுனாவுக்கு தெரியும் என Sepal கூறுகிறார்.

அதனால் தான் அவர் கேள்விகளை அடுக்குகிறார்..
நீங்கள் கூறுவது போல் இல்லை என
கதிரை விடயம் மூலம் விடயத்தை பெரிதாக்குகிறார்..

நீங்கள் கூறுவது போல் இல்லை..
இதில் வேறுவிடயமும் இருக்கிறது என 
கேள்வி கேட்கிறார்..

அப்படி அவர் விடயத்தை பெரிதாக்கி கேள்விகள கேட்கும் போது தான் எங்களுக்கும்(பெரும்பான்மைக்கும்)
யதார்த்தம் தெரியவரும் என Sepal கூறுகிறார்.

அப்போது தான் எங்களுக்கும் தெரிய வரும்
உள்ளே ஒன்றை வைத்துக்கொண்டு 
ஒண்டுமே இல்லை என நாம் நினைத்துக் கொண்டிருப்போமே 
அப்படி இல்லை பிரச்சனை இருக்கிறது என எங்களுக்கும் தெரியவரும் என்கிறார்…

அதனால் தான் அர்ச்சுனாவுடன் பேசவேண்டும் என கூறுகிறேன்,
ஏன் என்றால்  மற்றவர்கள் கேளாத கேள்விகளை அவர் கேட்கிறார்…

அப்போது தான் நாம் அவரிடம் இருந்து 
பாடங்களை கற்றுக்கொள்ள முடியும்.  பிரச்சனைகளை அறிய முடியும்.
பிரச்சனைகளை அறிந்தால் தானே பிரச்னைகளை தீர்க்க முடியும்..

அதைவிட்டிட்டு சிறையில போடு..
CID இல் கொடு என்றால் என்னாகும்?

பிரச்சனைகள  தொடர்ந்து இருக்கும்..
பிரச்சனைகள் தீர்க்கப்படாது…

ஐந்து வருடம் தானே ஆண்டிடிட்டு
எங்கடை வேலையை பார்த்துக்கொண்டு 
போவமே என போகவேண்டியது தான்….

அதைத்தானே இவளவு காலமும் அரசாங்கங்கள் செய்தன…

அப்போது பிரச்சனை தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கப்போகிறது…
தீர்க்கப்படாது…
சந்தேகங்கள், முரண்பாடுகள் தொடர்ந்து 
வளர்ந்து கொண்டு இருக்கும்…
என கூறுகிறார் Sepal Amarasinghe..

இதை Archchuna Ramanathan வால் சாவகச்சேரியில் பிரச்சனை ஆரம்பிக்கும் போது கூப்பிட்டு என்னடா தம்பி பிரச்சனை 
கதைச்சு பேசி தீர்ப்பமே என கதைத்து இருந்தால் இப்போது நீங்கள் எல்லோரும் எதிர்க்கும் அர்ச்சுனாவை அங்கேயே நிறுத்தியிருக்கலாம்…

நாங்கள் அவருடன் கதையாமல், எதிர்த்ததன் விளைவு தான் நாம் எல்லாம் இன்று அநுபவித்துக்கொண்டு இருக்கிறோம்…

அது தான் எதிர்க்காதீர்கள் கதையுங்கள் 
என்று கூறுகிறோம்…..

பகுதி 3 தொடரும்….

https://www.facebook.com/share/p/19ms7nK9K1/?

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முன்பு உசுபபேற்றல்கள்  செய்து கொண்டிருந்த  தமிழ் தேசியவாதிகள் இப்போது  அநுரகுமார திசாநாயக்கவிடம் தமிழர்கள் பொறுமை காத்து மிகுந்த பொறுப்புணர்சியுடன்  யோசித்து ஸ்ரீலங்காவின் ஒருமைபாட்டிற்கு எதுவிதமான பாதிப்பு வராதபடி நடந்து கொள்ளுமாறு பாடம் எடுக்கின்றனர்.
    • அர்ச்சுனாவின் செயற்பாடுகள் பற்றி Island, கிருபன் நன்றாகவே விளங்கபடுத்தி உள்ளார்கள் தமிழர்கள் பிரச்சனைகளை தீர்காமல் கையில் எடுத்து அதை பேசிப் பேசியே கோமாளி தனங்கள் செய்து தமிழர்களை ஏமாற்றுவது . தமிழரிடையே உள்ள லூசுத்தனங்களை நன்றாக பயன்படுத்தி கொள்வது. [அர்ச்சுனாவின் இந்த வக்கிர போக்கும் ஒரு அதிகார துஷ்பிரயோகம் தான். நீதியை நிலைநாட்ட புறப்பட்டவர் எக்காலக்கட்டத்திலும் பண்பு தவறி நடக்கவோ அராஜகத்தை கையில் எடுக்கவோ கூடாது] வணங்காமுடியின் நல்ல கருத்து ஆனால் முகபுத்தகம் சமூகவலைதளங்களில் அதிகம் படிப்பவர்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் சொன்னபடி அர்ச்சுனாவின் கோமாளிதனங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவருக்கான உறுதியான ஆதரவும் அத்தகைய தமிழர்களிடையே மிகவும் அதிகரித்தே வருகின்றதாம -------------------- கொலஸ்ரோலினால் பக்கவாதம் மாரடைப்பு வரும்போது வாய்க்குள் குழாயை விட்டு கொலஸ்ரோல் கொழுப்பை அகற்றும் மருத்துவ முறை ஒன்று வெளிநாடுகளில் உண்டா🙄
    • தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு:  அவசர செய்தி! உயிர்காக்க விரைவாகப் பகிருங்கள்   நிலமை கடும் தீவிரமாகச் செல்கிறது. எலிக்காய்ச்சல் யாழ்ப்பாணத்தில் வெகு வேகமாகப் பரவுகின்றது.   பருத்தித்துறை வைத்தியசாலை மருத்துவ நிபுணர் வெளியிட்டுள்ள செய்தியில் ,    இதுவரை பருத்தித்துறை வைத்தியசாலையில் மட்டுமே 5 பேர் உயிரிழந்துள்ளனர். பத்து நோயாளிகள் நோய் தீவிரமாகி யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.   உங்களுக்கு காய்சல் , உடம்பு வலி , மூட்டு வலி , கண் சிவப்பாதல், சிறுநீர் கழிப்பது குறைதல், கண் சிவப்பாகுதல், வயிற்று வலி போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.   சேற்று நிலங்களில் வேலை செய்தவர்கள், விவசாயிகள், மீனவர்கள் , அண்மைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெள்ள நீரில் நடந்து திரிந்தவர்கள் பருத்தித்துறை சுகாதார பணிமனையை தொடர்புகொண்டு (MOH office) , நோய் வருவதற்கு முன்பான மாத்திரைகளை பயன்படுத்தி உங்களை உயிராபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். இவை தடுப்பூசிகள் அல்ல , அன்டிபயட்டிக் மாத்திரைகள். தடுப்பூசிக்கு பயப்படுவார்கள் கூட அச்சப்படாமல் இதைப் பயன்படுத்தலாம்.   அவசரமாக பகிருங்கள். உங்களுக்குத் தெரிந்து மேலே சொன்னதுபோல தேங்கி நிற்கும் நீர் நிலைகளோடு தொடர்பு பட்டு ஆபத்தில் உள்ளவர்களை உடனடியாக சுகாதார பணிமனைக்கு ( MOH office) யிற்கு அழைத்துப் போங்கள்.   உங்களுக்குத் தெரிந்த எல்லோருக்கும் இந்த செய்தியை அனுப்புங்கள். நீங்களும் யாரோ ஒருவரை மரணத்தில் இருந்து காப்பாற்றலாம். இதை புறக்கணிக்காமல் பகிருங்கள்.   தகவல் மூலம் : செல்லத்துரை பிரசாந், பொது மருத்துவ நிபுணர் பருத்தி துறை ஆதார வைத்தியசாலை . பிரதி - சி.சிவச்சந்திரன் https://www.facebook.com/share/p/18UmzZibeV/
    • நெளிவு சுளிவு தெரிந்தவர்களிடம் கழுத்தைக் குடுக்க வேண்டும் ...... கண்டபடி யாரிடமும் குடுக்கக் கூடாது . ........ அதுக்கென்றே பிறந்த சிலர் இருக்கின்றார்கள் .....அவர்களை நாடவேண்டும் . ......!    
    • நேரம் கிடைத்தால்…. இஸ்லாமியர்களின்    தலைமயிர் வெட்டும் காணொளிகளை பாருங்கள். படு பயங்கரமாக தலையில் அடிப்பார்கள், திடீரென்று கழுத்தை  எதிர்பாராத கோணத்தில் திருப்புவார்கள், நெருப்பு கொழுத்துவது என்று ஒரே… பயங்கரமாக இருக்கும். “யூ ரியூப்பில்” பார்வையாளர்களை கவர்வதற்காக செய்கிறார்கள் போலுள்ளது. ஆனாலும்…. தலையை கொடுத்தவன், உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டும்.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.