Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட மலேசிய செல்வந்தர் ஆனந்த கிருஷ்ணன் தனது 86 ஆம் வயதில் காலமானார்.

மலேசியாவின் செல்வந்தர்கள் தரவரிசையில் ஆனந்த கிருஷ்ணன் மூன்றாம் நிலையை வகிப்பதாக போர்பஸ் சஞ்சிகை அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.

மலேசிய தேசத்தை கட்டி எழுப்புவதற்கும் கூட்டாண்மையை நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் ஆனந்த கிருஷ்ணனின் பங்களிப்பு அளப்பரியது என பாராட்டப்பட்டுள்ளது.

 

ஆனந்த கிருஷ்ணன்

 

மலேசியா பொருளாதார நெருக்கடி நிலைகளை எதிர்நோக்கிய காலத்தில் கிருஷ்ணன் பொருளாதாரத்திற்கு வழங்கிய பங்களிப்பு முக்கியமானது என கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட மலேசிய செல்வந்தர் காலமானார் | Ananda Krishnan The Elusive Billionaire Died

தொலைதொடர்பு, ஊடகம், சக்தி வளம் எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கிருஷ்ணன் தடம் பதித்து வெற்றியீட்டியுள்ளார்.

ஆனந்த கிருஷ்ணனின் சொத்து மதிப்பு சுமார் ஐந்து தசம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

 

ஆனந்த கிருஷ்ணனின் ஒரே மகனான அதான் சிரிப்பாணியோ தனது 18 ஆவது வயதில் தந்தையின் சொத்துக்களை கைவிட்டு பௌத்த துறவியாக துறவு பூண்டு தாய்லாந்தில் வாழ்ந்து வருகின்றார்.

 

வியாபார நடவடிக்கை

 

அவரது இரண்டு மகள்களும் வியாபார நடவடிக்கைகளில் அதிக நாட்டம் காட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட மலேசிய செல்வந்தர் காலமானார் | Ananda Krishnan The Elusive Billionaire Died

 

ஆனந்தகிருஷ்ணன் 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி மலேசியாவின் பிரிக் பீட்ஸ் பகுதியில் பிறந்தார்.

அவுஸ்திரேலியாவின் மெல்பன், பல்கலைக்கழகத்திலும் ஹவார்ட் வியாபார கல்லூரியிலும் ஆனந்த கிருஷ்ணன் தனது உயர்கல்வியை தொடர்ந்தார்.

ஆனந்த கிருஷ்ணனின் பெற்றோர் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/ananda-krishnan-the-elusive-billionaire-died-1732783235?itm_source=parsely-detail

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

ஆனந்த கிருஷ்ணனின் ஒரே மகனான அதான் சிரிப்பாணியோ தனது 18 ஆவது வயதில் தந்தையின் சொத்துக்களை கைவிட்டு பௌத்த துறவியாக துறவு பூண்டு தாய்லாந்தில் வாழ்ந்து வருகின்றார்.

கெளதம புத்தரின் வாழ்க்கை போல் உள்ளதே.

  • கருத்துக்கள உறவுகள்

மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் மறைவு: 40,000 கோடியை உதறி துறவியான மகன்

anantha.jpg

மலேசியாவில் தொலைத்தொடர்பு, செயற்கைக்கோள், ஊடகம், எண்ணெய்-எரிவாயு, ரியல் எஸ்டேட் என ஏகப்பட்ட நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் “ஏகே” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஆனந்த கிருஷ்ணன்.

இலங்கை தமிழரான இவர், மலேசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஃபோர்ப்ஸ் மதிப்பீட்டின்படி ரூ.40,000 கோடி சொத்துகளுக்கு சொந்தக்காரரான ஆனந்த கிருஷ்ணன் தனது 86 வயதில் உடல்நலக்குறைவால் மலேசியாவில் காலமானார்.

இதுகுறித்து அவரது தனியார் முதலீட்டு நிறுவனமான உசாஹா தேகாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ எங்களது தலைவர் டி. ஆனந்த கிருஷ்ணன் மறைவை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம். மலேசியாவை தன்னிறைவு பெற்ற தேசமாக கட்டியெழுப்புவதற்கும், கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் கணிசமான பங்களிப்பை ஏகே வழங்கியுள்ளார். அவரது சமூக தொண்டு அடித்தட்டில் உள்ள லட்சக்கணக்கான மக்களை சென்றடைந்துள்ளது. அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு” என்று குறிப்பிட்டுள்ளது.

மலேசியாவில் மேக்சிஸ் என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தை நடத்தி வந்த ஏகே கடந்த 2005-ல் இந்தியாவின் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை 1 பில்லியன் டொலருக்கு (சுமார் ரூ.800 கோடி) வாங்கினார். ஏர்செல்-மேக்சி்ஸ் முறைகேடு வழக்கில் இவரின் பெயரும் சேர்க்கப்பட்டது.

மலேசியாவில் பிரதமராக இருந்த மகாதீர் முகமதுவின் நெருங்கிய நண்பராக விளங்கியவர் ஏகே. அந்த வகையில், தொலைத்தொடர்பு, செயற்கைக்கோள், ஒளிபரப்பு துறையில் ஏராளமான உரிமங்களை பெற்றார். மலேசியாவின் அடையாளமான 88 மாடி இரட்டை கோபுரங்களை கட்டமைப்பதற்கு காரணமாக இருந்தவர்.

ஆனந்த கிருஷ்ணனின் பெற்றோர் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் மலேசியாவில் லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் பிரிக்பீல்ட் பகுதியில் குடியேறினர். அப்போதுதான் ஏகே கடந்த 1938-ம் ஆண்டு பிறந்தார். மலேசியாவின் விவேகானந்தா தமிழ்ப் பள்ளியில் தொடக்க கல்வியை தொடங்கி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பை முடித்தார்.

ஆனந்த கிருஷ்ணனின் மனைவி மோம்வஜராங்சே சுப்ரிந்தா சக்ரபன் தாய்லாந்து அரச குடும்பத்தை சேர்ந்தவர். இவர்களது மகன் வென் அஜான் சிரிபான்யோ உலகளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தவர். புத்தமத கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட சிரிபான்யோ தனது தந்தையின் ரூ.40,000 கோடி சாம்ராஜ்யத்தை துறந்துவிட்டு புத்த துறவியாக மாறியது உலக அளவில் பரபரப்பு செய்தியானது. கடந்த 20 ஆண்டுகளாக சிரிபான்யோ தாய்லாந்து-மியான்மர் எல்லைக்கு அருகில் தாவோ டம் புத்த மடாலயத்தில் துறவியாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/312904

  • கருத்துக்கள உறவுகள்

இதே போல் இலங்கையின் கடைசி தேசாதிபதியான மகாபிரபு (Viscount) சோல்பெரியின் மகனும் அவருக்கு பின் சோல்பெரி பிரபு பட்டத்தை பெற்றவருமான 2ம் சோல்பெரி பிரபு -யோகர்சாமியின் சீடராகி துறவறம் பூண்டார்.

1986 வரை கைதடி ஆசிரமத்தில் வாழ்ந்தார் என்கிறது விக்கி. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.