Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், டாலருக்கு மாற்று வழியைத் தேடும் விவகாரம் குறித்து பிரிக்ஸ் (BRICS) நாடுகளுக்கு சனிக்கிழமை கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியை கண்டுபிடிக்க முயற்சிக்கும் பிரிக்ஸ் நாடுகள் மீது, 100 சதவிகித வரியை (இறக்குமதி வரி) விதிக்கப் போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

பிரிக்ஸ் சர்வதேச அமைப்பில், உலகின் இரண்டு பெரிய வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளான சீனா மற்றும் இந்தியா அடங்கியுள்ளன.

டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளில் ஒன்று, சீனப் பொருட்களுக்கு 60% வரை அதிக வரி விதிப்பது.

டிரம்பின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் தீவிரமடையும் என்ற அச்சம் நிலவியது.

கடந்த பல ஆண்டுகளாக, அமெரிக்க நிறுவனமான ஹார்லி டேவிட்சன் விவகாரத்திலும் டிரம்ப் இந்தியாவை குறிவைத்து சில கருத்துக்களைக் கூறினார்.

பிரிக்ஸ் அமைப்பின் முக்கிய உறுப்பு நாடுகளாக, இந்தியாவும் சீனாவும் உள்ளன. பிரதமர் நரேந்திர மோதியை 'தனது நண்பர்’ என்று டிரம்ப் பலமுறை கூறியிருக்கிறார். அதே சமயம், டிரம்ப் வர்த்தகம் தொடர்பான பிரச்னைகளில் இந்தியாவை குறிவைத்து வருகிறார்.

 

டிரம்ப் என்ன சொன்னார்?

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,Getty Images

டிரம்ப் சனிக்கிழமை தனது எக்ஸ் பக்கத்தில், "டாலரை விட்டு விலகும் பிரிக்ஸ் நாடுகளின் முயற்சிகளுக்கு நாங்கள் மௌனம் காத்த காலம் முடிந்துவிட்டது," என்றார்.

"இந்த நாடுகள் புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கவோ அல்லது சக்தி வாய்ந்த அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறொரு நாணயத்தை முன்னிறுத்துவதையோ ஆதரிக்க மாட்டோம். அப்படி நடந்தால், 100 சதவிகித வரியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை முன்னிறுத்த முயற்சிக்க மாட்டோம் என்ற உறுதிமொழி எங்களுக்குத் தேவை." என டிரம்ப் தெரிவித்தார்.

மேலும், "பிரிக்ஸ் நாடுகள் வேறு நாணயத்தை முன்னிறுத்தினால், அற்புதமான அமெரிக்கப் பொருளாதாரத்தில் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வதில் இருந்து விடைபெற வேண்டும். அவர்கள் வேறு நாட்டில் விற்பனை செய்து கொள்ளலாம். சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை மாற்றுவது பிரிக்ஸ் கூட்டமைப்பால் முடியாது. அவ்வாறு செய்யும் எந்த நாடும் அமெரிக்காவிடம் இருந்தும், அனைத்து வர்த்தகத்தில் இருந்தும் விடைபெற வேண்டும்" என்று அவர் பதிவிட்டார்.

கடந்த அக்டோபரில், ரஷ்யாவின் கசான் நகரில் 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. அந்த சமயத்தில், பிரிக்ஸ் அதன் சொந்த நாணயத்தை உருவாக்கத் திட்டமிடுவதாக ஊகங்கள் எழுந்தன.

பிரிக்ஸ் நாணயம் பற்றிய ஊகங்கள்

பிரிக்ஸ்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கடந்த அக்டோபரில், ரஷ்யாவின் கசான் நகரில் 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது

இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு ரஷ்யாவின் தலைமையில் நடைபெற்றது, பிரிக்ஸ் நாணயத்தை அறிமுகப்படுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

கடந்த 2022 ஆம் ஆண்டில் பிரிக்ஸ் நாணயத்தை அறிமுகப்படுத்தும் யோசனையை முன்வைத்தது ரஷ்யாதான், அதற்கு பிரேசில் அதிபர் லுலா டா சில்வா ஆதரவு அளித்தார்.

பிரிக்ஸ் நாணயத்தை அறிமுகப்படுத்துவது குறித்து கசான் மாநாட்டில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், இந்த நாடுகளுக்கு இடையே எல்லை தாண்டிய பண பரிவர்த்தனை செய்வதற்கான புதிய வழிமுறையை உருவாக்குவது குறித்து பேசப்பட்டது. இது மேற்கத்திய கட்டண முறையான 'ஸ்விஃப்ட் நெட்வொர்க்' உடன் செயல்படும்.

பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்குள் நடக்கும் பரிவர்த்தனைகளுக்கு அதிகமாக உள்ளூர் நாணயங்களை பயன்படுத்த விரும்புகின்றன. இதனால் டாலருக்கு எதிராக தங்கள் நாணயங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் அபாயத்தைக் குறைக்க முடியும்.

கசான் உச்சிமாநாட்டின் போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “இருதரப்பு வர்த்தகத்தில் உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்துவது அரசியலில்லா பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்” என்றார்.

 

பிரிக்ஸ் மாநாட்டில் புதின் பேசியது என்ன?

கசான் மாநாட்டின் போது, ரஷ்ய அதிபர் புதின், "டாலர் தொடர்ந்து உலக நிதி அமைப்பின் முக்கிய அங்கமாக இருக்கும், மேலும் அரசியல் நோக்கங்களுக்காக அது பயன்படுத்தப்படும் போது அதன் திறன் குறைகிறது."

"டாலரை விட்டு வெளியேறவோ அல்லது தோற்கடிக்கவோ ரஷ்யா விரும்பவில்லை, ஆனால் டாலர் பயன்பாட்டில் ரஷ்யாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதனால்தான் நாங்கள் வேறு வழிகளைத் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்” என்று புதின் கூறினார்.

யுக்ரேன் மீதான தாக்குதலை அடுத்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள், ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யா மீது 16,500க்கும் மேற்பட்ட பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

இந்தத் தடைகளின் கீழ், சுமார் 276 பில்லியன் டாலர் மதிப்புள்ள ரஷ்யாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் பாதியளவு முடக்கப்பட்டுள்ளது.

இது தவிர, ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய வங்கிகளின் சுமார் 70 சதவிகித சொத்துக்களை முடக்கியுள்ளது மற்றும் அவற்றை `SWIFT’ வங்கி அமைப்பில் இருந்து விலக்கியுள்ளது.

ஸ்விஃப்ட் விரைவான பண பரிவர்த்தனைகளை அனுமதிக்கிறது. சுமார் 200 நாடுகளில் 11,000 நிதி நிறுவனங்களால் இந்த ஸ்விஃப்ட் சேவை பயன்படுத்தப்படுகிறது.

பிரிக்ஸ் நாணயம் வந்தால் டாலருக்கு மாற்றாக இருக்குமா ?

உலகெங்கிலும் உள்ள நாடுகள் பரஸ்பர வர்த்தகத்தில் பண பரிவர்த்தனையில் டாலரைப் பயன்படுத்துகின்றன.

பிரேசில் அதிபர் லுலா டா சில்வாவும், ரஷ்ய அதிபர் புதினும் டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்க பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்க பரிந்துரைத்திருந்தனர்.

இருப்பினும், 2023 பிரிக்ஸ் மாநாட்டில் இது குறித்து எந்த கலந்துரையாடலும் நடைபெறவில்லை.

டப்ளின் டிரினிட்டி கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் பட்ரைக் கார்மோடி, கடந்த ஜனவரி மாதம் பிபிசியிடம் இதுபற்றி கருத்து தெரிவித்தார்.

"பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதாரம் மிகவும் வித்தியாசமாக இருப்பதால், பொதுவான நாணயத்தை உருவாக்குவது என்பது நடைமுறையில் சாத்தியமற்றது" என அவர் கூறினார்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் சர்வதேச வர்த்தகத்தில் பணம் செலுத்துவதற்கான புதிய நாணயத்தை உருவாக்குவது பற்றி அவர்கள் சிந்திக்கலாம் அல்லது அத்தகைய பரிவர்த்தனைகளுக்கு கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்துவதைத் தேர்வு செய்யலாம்” என்று அவர் கூறினார்.

தற்போது உலக அரங்கில் டாலரின் நிலை என்ன?

அனைத்து வணிக பரிவர்த்தனைகள், சர்வதேச பரிவர்த்தனைகள், கடன்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள இறக்குமதி-ஏற்றுமதி ஆகியவை அமெரிக்க டாலர்களில் செய்யப்படுகின்றன.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ப்ரூக்கிங்ஸ் என்ற திங்க் டேங்க், உலகளவில் நடக்கும் அனைத்து கடன் பரிவர்த்தனைகளில் 64% டாலர்களில் இருப்பதாகவும், உலக நாணய கையிருப்பில் 59% டாலராக இருப்பதாகவும் கூறுகிறது.

சர்வதேச பரிவர்த்தனைகளில் டாலரின் பங்கு 58% ஆகும்.

யூரோ உருவானதில் இருந்து, டாலரின் ஆதிக்கம் சற்று குறைந்துள்ளது, ஆனால் அது இன்னும் உலகின் மிகவும் பரவலாக புழக்கத்தில் உள்ள நாணயமாக உள்ளது.

ப்ரூக்கிங்ஸ் தரவுகளின்படி, டாலர் வெளிநாட்டு பரிவர்த்தனைகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது, அதாவது 88% பரிவர்த்தனைகள் டாலரில் செய்யப்படுகிறது.

எனினும், கடந்த 25 ஆண்டுகளில் டாலரின் ஆதிக்கம் குறைந்துள்ளது.

உலகளாவிய கையிருப்பாக அமெரிக்க டாலரின் பங்கு 12% குறைந்துள்ளது. உலகளாவிய கையிருப்பில் அதன் பங்கு 2000 ஆம் ஆண்டில் 71% ஆக இருந்தது, இது 2024 இல் 59% ஆக குறையும்.

பிரிக்ஸ் கூட்டமைப்பு என்றால் என்ன?

பிரிக்ஸ் (BRICS) என்பது வளர்ச்சிப் பாதையில் இருக்கும் பொருளாதாரங்களின் ஒரு கூட்டமைப்பாகும். இதில், ஆரம்பத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் 2010 இல் தென்னாப்ரிக்காவும் சேர்ந்தது.

இந்த பொருளாதாரக் கூட்டணி சமீப ஆண்டுகளில் பல மடங்கு விரிவடைந்துள்ளது. ஜனவரியில், எகிப்து, இரான், எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ஆகியவையும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைந்தன.

வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவின் பணக்கார நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார சக்திக்கு சவால் விடும் வகையில் உலகின் மிக முக்கியமான வளரும் நாடுகளை ஒன்றிணைப்பதற்காக பிரிக்ஸ் உருவாக்கப்பட்டது.

பிரிக்ஸ்-இல் சேர அஜர்பைஜான் மற்றும் துருக்கி விண்ணப்பித்த நிலையில், செளதி அரேபியாவும் கூட்டமைப்பில் சேர விருப்பம் தெரிவித்துள்ளது.

சுமார் 30 நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் சேர விருப்பம் தெரிவித்துள்ளன.

பிரிக்ஸ் நாடுகளின் மொத்த மக்கள் தொகை சுமார் 3.5 பில்லியன் அதாவது உலக மக்கள்தொகையில் 45%.

உறுப்பு நாடுகளின் மொத்தப் பொருளாதாரம் 25.5 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது, இது உலகப் பொருளாதாரத்தில் 28% ஆகும்.

பிரிக்ஸ் பற்றி ஜெய்சங்கர் கூறியது என்ன?

அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்

வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகள், பிரிக்ஸ் கூட்டமைப்பின் செல்வாக்கு அதிகரிப்பதால் கவலையடைந்தன.

இந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், பாதுகாப்புக் கொள்கைக்கான உலகளாவிய மையத்தில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரிடம்`பிரிக்ஸ்’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், “ஏற்கனவே இருக்கும் ஜி7 கூட்டமைப்பில் யாரும் இணைய அனுமதிக்கப்படாததால், பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.”

"பிரிக்ஸ் பற்றி பேசும்போது ஏன் இவ்வளவு சங்கடப்படுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஜி20 அமைப்பு உருவானவுடன் ஜி7 முடிவுக்கு வந்துவிட்டதா? ஜி20 உடன் ஜி7 கூட்டமைப்பும் செயல்பாட்டில் தான் உள்ளது. எனவே, ஜி20 கூட்டமைப்போடு சேர்ந்து பிரிக்ஸ் செயல்படக் கூடாதா?” என்று பேசிய அவர், உலகப் பொருளாதாரத்தில் பிரிக்ஸ் நாடுகள் தற்போது உயர்ந்து வருவதுதான் இந்த கூட்டமைப்பின் சிறப்பு என்றார்.

சமீபத்திய ஆண்டுகளில், பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கியை (New Development Bank) உருவாக்கியுள்ளது.

நிபுணர்கள் கூறுவது என்ன?

"உலகம் முழுவதும் டாலரின் ஆதிக்கம் தொடர வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது என்பதே டிரம்ப் கூறியுள்ள செய்தியின் பொருள்," என்று வெளிநாட்டு விவகார நிபுணரும், 'தி இமேஜ் இந்தியா இன்ஸ்டிட்யூட்' தலைவருமான ரபீந்திர சச்தேவ் நம்புகிறார்.

"பிரிக்ஸ் நாடுகள் இதைச் செய்ய முயற்சிக்கின்றன. அவர்களால் இதற்கு மாற்றாக வேறு நாணயத்தை உருவாக்க முடியாவிட்டாலும், அவை குறைந்தபட்சம் நிதி வலையமைப்பை உருவாக்க முயற்சிக்கின்றன." என ரபீந்திர சச்தேவ் கூறுகிறார்.

"ஸ்விஃப்ட் சர்வதேச வங்கி மீது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

ஒரு நாடு பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளும் போது, இது அந்த அமைப்பிலிருந்து துண்டிக்கப்படுகின்றது" என்றார் அவர்.

ரஷ்யாவைப் போல , பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடலாம் என்று பிரிக்ஸ் நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) கவலை கொண்டிருப்பதாக சச்தேவ் கூறுகிறார்.

இந்த அபாயத்தைத் தவிர்க்க, இந்நாடுகள் தங்கள் சொந்த நிதி வலையமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

ஆனால் உண்மையில் இந்தத் தேடலில் டாலருக்கு மாற்றான வேறு நாணயம் ஏதாவது இருக்கிறதா?

இந்த கேள்விக்கு ரபீந்திர சச்தேவ் பதில் கூறும்போது, "பிரிக்ஸ் நாடுகள் இப்படி ஒரு யோசனையைத் திட்டமிட்டிருந்தன,

ஆனால் அது அவ்வளவு விரைவில் நடக்காது.

இருப்பினும், அதற்கான சில முயற்சிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. அதில் ஒரு பகுதியாக, யுவானில் சீனா பிரேசிலோடு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.

“ டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தைக் கண்டுபிடிக்க சௌதி அரேபியாவுடன் சீனாவும், ரஷ்யாவுடன் இந்தியாவும் அதேபோன்று ஒப்பந்தம் செய்துள்ளன. இத்தகைய போக்குகள் தொடங்கியுள்ளன."

ஆனால்,டாலருக்கு மாற்றாக வேறு ஒரு நாணயத்தைப் பெறுவதற்கு வெகு காலமாகலாம் என்று ரபீந்திர சச்தேவ் நம்புகிறார்.

பிரிக்ஸ், டிரம்ப் எச்சரிக்கை

பட மூலாதாரம்,Getty Images

டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போது இதுபோன்ற ஒரு கூற்றைத் தெரிவித்ததால், புதிதாக எதுவும் சொல்லவில்லை என்று உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலின் மூத்த உறுப்பினரான டாக்டர். ஃபஸ்ஸூர் ரஹ்மான் நம்புகிறார்.

மேலும் இதுபோன்ற முயற்சிகள் எதிர்காலத்தில் டாலருக்கு சவாலாக இருக்கலாம் என்றும், இதை சமாளிக்க டிரம்ப் தயாராக இருப்பதாகவும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

“ ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ (America First) என்ற டிரம்பின் முழக்கத்தில் அரசியல், பொருளாதாரம் மற்றும் ராஜதந்திரமும் அடங்கி உள்ளது. இந்த முழக்கம், எந்த விதத்திலும் பாதிப்படைய டிரம்ப் விடமாட்டார்” என்று ஃபஸூர் ரஹ்மான் கூறுகிறார்.

"டிரம்ப் எதற்கும் அஞ்சாதவர். ஆனால், இச்செய்தி மூலம், இவ்வாறு செயல்பட முயற்சிக்கும் ஒரு நாட்டின் நடவடிக்கையை அவர் எப்படி எதிர்கொள்வார் எனவும், யாருக்கும் அதற்கு அனுமதி வழங்க மாட்டார் எனவும் தெரிவிக்க டிரம்ப் முயற்சித்துள்ளார்" என்கிறார் ஃபஸூர் ரஹ்மான்.

டாலரின் நிலை நலிவடைகிறதா ? என்ற கேள்விக்கு , "உலகில் டாலரின் ஆதிக்கம் இன்னும் அப்படியே உள்ளது.

சில நாடுகளின் ஒப்பந்தத்தால் டாலரின் நிலை பலவீனமடைந்தது என்று சொல்ல முடியாது.

ஆனால் இப்படியான ஒரு விவாதத்தைத் தொடங்குவது பெரிய விஷயம். மேலும் 15-20 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற விவாதத்தை தொடங்குவது சாத்தியமில்லை" என்று தெரிவித்தார் ரஹ்மான்.

BRICS: இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முழுப்பிரச்சனையும் வந்தது டாலரை வன்(முறை)பலத்துக்கு துணையாக ஆயுதமயப்படுத்தியதால்.

டாலர் எவ்வாறு reserve currency ஆக வந்தது என்பதற்கு ஒரு கதை இருக்கிறது , ஆனால், அதன் வரலாற்று குறிப்புகள் வெள்ளைமாளிகையில் இருக்குமா என்பதும், அப்படி இருந்தாலும் வெள்ளைமாளிகை அதை வெளியிடுமா என்பதும் சந்தேகம்.

இந்த கதையை  பல வருடங்களுக்கு முன்பே கேள்விப்பட்டது. ஆனால் இப்போது  கிரீஸ் நாட்டின்  முன்னாள் நிதி, மற்றும் பொருளாதார அமைச்சரும் கிட்டத்தட்ட அப்படி ஒரு நிகழ்வு நடந்ததாக சொல்கிறார்.

அதாவது இது நடந்து, மற்றும் இதன் பிரதான காரணகர்த்தா கிசிங்யர், இவர் ராஜாங்க அமைசரக இருந்த போதிலும் 

1970 களில் அமெரிக்காவின் தேசிய  கடன் கூடிக்  கொண்டே சென்றது.

அத்துடன், 1971 இல், அதுவரை டாலரை தங்கத்துக்கு மாற்றீடு செய்யும் பரிவர்த்தனை அமைப்பான Bretton Woods உம் குழம்பி,  முறிந்து  விட்டது. 

ஆனால், இதை முறித்தது US தான், ஏனெனில் தங்கத்துக்கு கொடுக்க வேண்டிய டாலரின் தொகை கூடியதால் , அதனால் US இன் தேசிய கடனும் கூடியது.

( Bretton Woods பரிவர்த்தனை திட்டமும் , ஒப்பந்தமும் 1944 இல் UN இல் செய்யப்பட்டது, 2ம் உலக யுத்தத்தில் ஓரளவு கை ஓங்கிய  நிலையில், அதாவது d நாளுக்கு    முடிந்து சில வாரங்கள் கடந்து) 

அமெரிக்காவின் தேசிய கடனை   தீர்ப்பதற்கு வழிவகைகளை வெள்ளைமாளிகை ஆராய்ந்தது.

கிசிங்யர் வெள்ளை மாளிகை, மற்றும்  அமெரிக்கா நிதித்துறை சிறப்புத்தேர்ச்சி பெற்றவர்களிடம், எப்படி இதை கையாளலாம் என்பதை, அவர்களின் கருத்தை அரைப்பக்கத்தில் எழுதி விளக்கம் கொடுப்பதற்கு   ஓர் முறை சாரா கூட்டத்தினை ஒழுங்கு செய்தார் (இப்பொது இதை brainstorming என்கிறது மனிதவள துறை).

ஒருவரை தவிர, எல்லோரும் சொல்லியது கடனை எவ்வாறாவது குறைக்க வேண்டும், எப்படி குறைக்கலாம் என்று.

அந்த ஒருவர் சொல்லியது, கடனை (வரையறை இல்லாமல்) கூட்ட வசதி  இருக்க வேண்டும், அந்த கடனை அமெரிக்கா தவிர்ந்த மிகுகி உலகம் கட்டக்கூடியதாக டாலர் இருக்க  வேண்டும். அவர் சொல்லியது மிகுதி உலகின் சேமிப்பை அமெரிக்காவுக்கு இறக்குமதி (அதாவது கடனாக) செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.  

இப்படி இருக்க வேண்டுமாயின், மிகுதி உலகத்துக்கு (நிதி மற்றும் வணிக பரிவர்த்தனைக்கு) டாலர் இன்றியமையாததாக இருக்க வேண்டும்.


இஹை நடைமுறை படுத்துவதில் தொடக்கமே, எண்ணையை டாலரில் மட்டும் விலை குறிப்பதற்கு, விற்பத்திற்கு  சவூதியுடன் அமெரிக்கா 1973 இல் ஒப்பந்தம் செய்தது, டாலரை petrodollar ஆக அழைப்பதற்கு   
வலிவுதா ஒப்பந்தம் 

அனால், எப்படி கிசிங்யர் நிதிதுறைக்குள் தீர்க்கமான முடிவு எடுக்கும் நிலைக்கு வந்தார் என்பது தெரியாது.    

   
இது சுருக்கமாக.

இதில் இருந்து தெரிவது,ஆககுறைந்தது டாலருக்கு  பதிலாக வேறு நாணயம் அல்லது து முறை வழியே வர்த்தகம் நடந்தால் அமெரிக்காவை மிகவும் படிக்கும் ஏனெனில் அமெரிக்கா ஏறத்தாழ இலவசமாக கடன் எடுக்க முடியாது. 


உடனடியாக விளைவு தெரியாது - அனால்  நாள் செல்ல படிப்புகள் தெரிய வரும் 

மறுவளமாக, யூரோ வந்தபோது டாலருக்கு தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டத, ஆயினும் யூரோ சர்வதே நிதி பரிவர்த்தனையில் டாலரின் பங்கை குறைத்தததை தவிர இரு ஒரு தாக்கமும் இல்லை.

நான் நினைக்கிறன், யூரோ மேற்கு நாணயமும் மற்றது நேட்டோ யூரோ நாட்கள் எலாம் நேட்டோ இல் அமெரிக்கா மேலாண்மைக்கு கீழ் இருப்பதால்.

இது மிக முக்கிய வெறுப்பது இப்போது சொல்லப்படும் டாலர் பரிவர்த்தனை மாற்றீடு திட்டத்தில், அதாவது சீன, ரஷ்யா, ஹிந்தியை, பிரேசில் போன்றவை.  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.