Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/12/2024 at 15:47, valavan said:

கனடாவுக்குள் என்ன செய்யவேண்டுமென்று அமெரிக்காவுடன் கனடிய அரசு போய் பேசுமா?

இங்கிலாந்துக்குள் என்ன செய்ய வேண்டுமென்று ஜேர்மனியுடன் போய் பிரிட்டன் அரசு இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்துமா?

பிராந்திய வல்லரசுக்கு அடிபணிந்து வாழ்ந்தாலும் வாழ்வோமேயொழிய தமிழர்களுக்கு எந்த உரிமையும் கொடுக்கமாட்டோம் என்று வாழும் ஆணவ நிலை தொடரும்வரை

உன்னுடைய வீட்டுக்குள் நீ எப்படி குடும்பம் நடத்த வேண்டுமென்று பக்கத்து வீட்டுக்காரன்    கட்டளை போடும் அவலநிலை தொடர்ந்தே தீரும்

தமிழர்களுக்கு தமது பலம் தெரிவதில்லை, இன்றைய இலங்கை பொருளாதாரம் மூச்சு விடுவதற்கு காரணம் புலம் பெயர் தமிழர்கள்தான், கடந்த ஆண்டு இலங்கை அரசுக்கு கிடைத்த 5.4 பில்லியன் அன்னிய செலாவணியில் அதிமுக்கிய பங்கினை புலம் பெயர் தமிழர்களின் நேரடி பங்களிப்பாகவும், இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொறுள்களின் மூலமாக மறைமுகமாகவும் இலங்கைக்கு பெருமளவு அன்னிய செலாவணி இலங்கையினை சென்றடைகிறது.

இது இலங்கையின் உல்லாச பிரயாணத்துறையினை விட முக்கியமான வருமானமாக திகழ்கிறது.

இலங்கையில் நிலவும் அவசரகால சட்டம், முதலீட்டுற்கு வாய்ப்பற்ற சூழல்(Red tape), நிர்வாக சீர்கேடு, ஊழல் என்பவை புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீட்டிற்கு தயங்குவதற்கு காரணமாக இருக்கிறது, அத்துடன் இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தர பிரஜைகளாகவே தொடர்ந்தும் இருக்கின்ற நிலையில், முதலீடுகள் தொடர்பான அச்சம் நிலவுவதற்கு கடந்தகால அனுபவங்களும் காரணமாகின்றது.

தற்போதுள்ள நிலையில் இலங்கையில் இந்திய உதவிகள் மூலமாக தலையீடு செய்யும் இந்திய அரசின் உதவிகளையும், முதலீடுகளையும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பங்களிப்புடன் ஒப்பிடும் போது இது ஒரு வலுவற்றதாக தெரிந்தாலும் இலங்கையின் தற்போதய பொருளாதார சூழ்நிலையில் ஒரு சிறிய அழுத்தம் இலங்கையினை பொருளாதார ரீதியாக உடைத்துவிடும்.

இதனை இலங்கை அறிந்துள்ளது, தற்போது இந்தியா பங்களாதேச பொருளாதாரத்திற்கு கொடுக்கும்நெருக்கடி போல ஒரு நெருக்கடி நிலையினை எதிர்காலத்தில் இலங்கையிலும் ஏற்படலாம், அதற்கான முதலீட்டுத்திட்டங்களில் இந்தியா சிறிது சிறிதாக கடந்தகாலங்களைலிருந்து ஈடுபட்டு வருகிறது.

தனது அயல் நாடுகள் முழுவதிலும் இதே போல ஒரு  சூழ்நிலையினையே ஏற்படுத்தி பின்னர் அதனை பாவித்து அவர்களை அடிபணிய வைக்கின்றது இந்திய அரசு, இந்தியா மட்டுமல்ல அனைத்து உலக வல்லரசுகளும் பொருளாதாரத்தினை ஆயுதமாக பயன்படுத்துகின்றநிலையே காணப்படுகின்றது.

இந்த பூகோள அரசியலில் தற்போது புதிதாக ஏற்பட்டுள்ள  மாற்றங்களை பார்த்தாலே தெரிகிறது அடுத்த பத்தாண்டுகளில் உலக அரசியலின் போக்கு.

பெட்ரோ டொலரில் இருந்து எண்ணெய் வள நாடுகளின் விலகல், அதன் பின்னணியில் உலக பொருளாதார மாற்றம், பல துருவ பொருளாதார மையமாக மாறிவரும் உலக பொருளாதாரம்  இந்தியாவினையும் வட பூகோள நாடுகளையும் எதிரெதிர் நலன் சார் நிலையில் நிறுத்திவிட்டுள்ளது, இந்தியா அதனால் ஏற்பட போகும் நெருக்கடிகளை கையாள இலங்கையில் இந்திய இருப்பு அவசியமாக உள்ளது, இலங்கைக்கும் அது புரிந்துள்ளது என கருதுகிறேன் ஆனால் இலங்கையின் பொருளாதார  நிலை இந்தியாவின் அனுகூலத்தில் தங்கியுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள இந்தியாவிற்கும் அதன் அயல் நாடுகளுக்குமிடையேயான உரசல்களுக்கு பின்னால் உள்ள சக்தி யார் என்பது தெரியும், அந்த சக்தி கூட தனது அதிகாரத்தினை தக்கவைக்கும் பகீரத பிரயத்தனங்களின் மூலம் இலங்கையினை நெருக்குகின்றது, ஆனால் இலங்கை எப்போதும் ஓடும் குதிரையிலேயே தனது பணத்தினை வைக்கிறது, மறுவளமாக தமிழர்கள் தமது சொந்த பலத்தினை உணரவில்லை உலகில் ஏற்படும் மாற்றங்களையும் உணரவில்லை.

இந்த பயணத்தில் பிரிக்ஸில் இலங்கை இணைவதற்கு இலங்கை அழுத்தம் கொடுகும் என நம்புகிறேன்.

44 minutes ago, தமிழ் சிறி said:

470177883_992373802927592_54732213624603

இந்த கருத்தோஒவியம் இலங்கையின் நிலையினை சிறப்பாக காட்டுகிற மிக சிறந்த கருத்தோவியம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, vasee said:

தமிழர்களுக்கு தமது பலம் தெரிவதில்லை, இன்றைய இலங்கை பொருளாதாரம் மூச்சு விடுவதற்கு காரணம் புலம் பெயர் தமிழர்கள்தான், கடந்த ஆண்டு இலங்கை அரசுக்கு கிடைத்த 5.4 பில்லியன் அன்னிய செலாவணியில் அதிமுக்கிய பங்கினை புலம் பெயர் தமிழர்களின் நேரடி பங்களிப்பாகவும், இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொறுள்களின் மூலமாக மறைமுகமாகவும் இலங்கைக்கு பெருமளவு அன்னிய செலாவணி இலங்கையினை சென்றடைகிறது.

 

இது ஒரு பிழையான கூற்றாகும், முதலில் சிங்களவரும், முஸ்லிங்களும் ஆகும், அதன் பின்னர் தான் தமிழர்கள் ஆவார்கள். மற்றவர்களை விட அநேகமான தமிழர்கள் சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபடுவதினால் ( உண்டியல்) அதன் பயனை இலங்கை பெறுவதில்லை.

2021 இல் உலகம் முழுவதும் உள்ள பிற நாடுகள் இருந்து இலங்கையிலிருந்து/இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணப் பரிமாற்றங்களின் மதிப்பு (மில்லியன் அமெரிக்க டாலர்களில்)

May be an image of text that says "Destination territory/territory of origin Remittances sent from Sri Lanka Worldwide Remittances received in Sri Lanka Saudi Arabia 123.68 Net balance in Sri Lanka (remittances received minus remittances sent) Qatar 5,522 1.15 Australia 1,475.6 7.66 5,398.32 Canada 487.04 1,474.45 0.72 India 419.92 479.37 0.15 United Kingdom 401.54 401 44.61 419.2 United Arab Emirates 436.08 0.88 401.38 Italy 359.47 0 391.47 United States 356.27 16.11 358.59 France 263.5 1.41 356.27 Germany 158.04 247.39 4.37 Kuwait 154.76 3.02 156.62 150.13 150.38 0.17 114.67 147.11 114.5"

 

https://www.statista.com/statistics/1411921/bilateral-remittances-sri-lanka/#:~:text=For Sri Lanka%2C the top,India%2C Australia%2C and Canada.

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, zuma said:

இது ஒரு பிழையான கூற்றாகும், முதலில் சிங்களவரும், முஸ்லிங்களும் ஆகும், அதன் பின்னர் தான் தமிழர்கள் ஆவார்கள். மற்றவர்களை விட அநேகமான தமிழர்கள் சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபடுவதினால் ( உண்டியல்) அதன் பயனை இலங்கை பெறுவதில்லை.

2021 இல் உலகம் முழுவதும் உள்ள பிற நாடுகள் இருந்து இலங்கையிலிருந்து/இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணப் பரிமாற்றங்களின் மதிப்பு (மில்லியன் அமெரிக்க டாலர்களில்)

May be an image of text that says "Destination territory/territory of origin Remittances sent from Sri Lanka Worldwide Remittances received in Sri Lanka Saudi Arabia 123.68 Net balance in Sri Lanka (remittances received minus remittances sent) Qatar 5,522 1.15 Australia 1,475.6 7.66 5,398.32 Canada 487.04 1,474.45 0.72 India 419.92 479.37 0.15 United Kingdom 401.54 401 44.61 419.2 United Arab Emirates 436.08 0.88 401.38 Italy 359.47 0 391.47 United States 356.27 16.11 358.59 France 263.5 1.41 356.27 Germany 158.04 247.39 4.37 Kuwait 154.76 3.02 156.62 150.13 150.38 0.17 114.67 147.11 114.5"

 

https://www.statista.com/statistics/1411921/bilateral-remittances-sri-lanka/#:~:text=For Sri Lanka%2C the top,India%2C Australia%2C and Canada.

 

நன்றி உங்கள் கருத்திற்கு,

அன்னிய செலாவணிக்கட்டுப்பாடுள்ள நாடுகள், வரி ஏய்ப்பு போன்ற காரணங்களினால் இந்த கவாலா மற்ற நாடுகளில் பிரபலம், இலங்கையில் அன்னிய செலாவணி பிரச்சினை ஏற்பட்டதன் பின்னரே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது (கட்டுப்பாடுகள் இருக்கிறதா என தெரியாது) என கருதுகிறேன்.

பெரும்பாலும் இந்த கவாலா arbitrage ஆக பயன்படுத்துவார்கள்.

நாட்டின் பொருளாதார கொள்கையினால் நாணய பரிமாற்றம் சரியான விகிதத்தில் இருப்பதில்லை, இதனையே கவாலா முகவர்கள் உப்யோகித்து பணம் பார்க்கிறார்கள், அதனால் பெரும்பாலும்  காவாலா காசு அன்னிய செலாவணியாகவே நாட்டிற்குள் வலம் வரும் .

https://www.investopedia.com/ask/answers/forex/forex-arbritrage.asp

அன்னிய செலாவணி கட்டுப்பாடு உள்ள நாடுகளில் கூட நாட்டிற்குள் அன்னிய செலாவணியாக வராவிட்டாலும் வெளிநாட்டிலிருந்து அனுப்படும் காசினால் உள்நாட்டு பொருளாதாரத்தினை வளப்படுத்தும்

மற்ற நாடுகளை பற்றித்தெரியவில்லை, இங்கு அவுஸில் தமிழ் கடையில் காசு அனுப்பும் போது பற்றுச்சீட்டு கொடுப்பார்கள் அதில் எந்த நிறுவனத்தின் மூலம் அனுப்புகிறார்கள் என்பது இருக்கும் (நான் முன்பு அனுப்பிய கடை மணிகிராம் மூலம், தற்போது ஒரு 6 -7 வருடமாக நேரடியாகவே மணிகிராம் அல்லது வெஸ்ரன் யூனியன் மூலம் இணையத்தினூடாக அனுப்புவதுண்டு).

ஆண்டொன்றிற்கு 5.4 பில்லியன் வெறும் பெரும்பான்மை இனத்தவர்கள், இஸ்லாமியர்களாலும் அனுப்பப்பட முடியுமா? நான் அறிந்த பெரும்பான்மை இனத்தவர்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பணம் அனுப்புவதில்லை, ஆனால் விசேட  தினங்களிற்கு வாழ்த்து அட்டை அனுப்புகிறார்கள் (இது நகைசுவைக்காக கூறவில்லை, அது அவர்களின் இயல்பு).

உங்கள் கருத்தும் சரியானதே (எனது கருத்து தவறாக இருக்கலாம்), தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, zuma said:

உங்களுக்கு இந்த தரவினை பெறக்கூடியதாக இருக்கிறதா? உங்களுக்கு இந்த  தரவினை பெறுவதற்கு இந்த இணைய கணக்கு தேவை என கூறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சூமா, உங்கள் பதிவு மிகவும் சிறப்பான பதிவு, உண்மையாக 5.4 பில்லியன் வெளிநாட்டு காசு இலங்கைக்குள் போகிறது எனும் செய்தியினை மேலோட்டமாகவே பார்த்த நினைவிருந்தமையால் மேலே எனது பதிவில் அதனை சுட்டிக்காட்டியிருந்தேன், குறிப்பாக நீங்கள் இணைத்த தரவில் சவுதி அரேபியாவில் இருந்து அதிக பணம் இலங்கைக்கு போகிறது, அப்படி பார்க்கும் போது நீங்கள் குறிப்பிடும் உண்டியல் மூலம் அனுப்படும் பணத்தின் அளவு எவ்வளவு இருக்கும்?

உண்மையாக இது ஒரு முக்கியமான தகவல், தொடர்ந்து எழுதுங்கள்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.