Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அசாத் அரசினால் கொல்லப்ட்ட பின்னர் சிரிய எழுச்சியின் முகமாக மாறிய 13 வயது சிறுவன் - 'நாங்கள் அனுபவித்ததை அசாத்தும் அனுபவிக்கவேண்டும் " தாயின் மனக்குமுறல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

15 DEC, 2024 | 10:50 AM

image
 

பசார் அல் அசாத்த பதவிகவிழ்ப்பதற்கான முயற்சிகள் சிரியாவின் வேறு எந்த பகுதியையும் விட டெரா என்ற சிரிய நகரத்திலேயே ஆரம்பமானது. இந்த நகரம் ஜோர்தான் சிரிய எல்லையில் காணப்படுகின்றது.

இந்த நகரத்தில் 2011 மே 21ம் திகதி சித்திரவதை செய்து சிதைக்கப்பட்ட 13 வயது ஹம்சா அல் ஹட்டிப்பின் உடலை  அசாத்தின் அதிகாரிகள் குடும்பத்தவர்களிடம் ஒப்படைத்தனர்.

அசாத் அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் கலந்துகொண்டதற்காக இவர் கைதுசெய்யப்பட்டார்.

அவர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டதால் சீற்றமடைந்த பதின்மவயதினர் சுவர்களில் அசாத்திற்கு எதிரான வாசகங்களை எழுததொடங்கினார்கள். அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்தன,அதனை தொடர்ந்து அரசபடையினர் மிக மோசமான ஒடுக்குமுறைகளில் ஈடுபட்டனர்.

318575eb-6808-4d7d-b020-dea0495cf45d.jpg

அசாத்  அரசாங்கத்தின் வீழ்ச்சியை டெராவில்  எவராவது கொண்டாடவேண்டுமென்றால் அது கட்டிபின் குடும்பத்தவர்களே.

ஆனால் நாங்கள் அந்த வீட்டிற்கு சென்றவேளை யாரும் அசாத் அரசாங்கத்தின் வீழ்ச்சியை எவரும் கொண்டாடுவதை காணமுடியவில்லை.

அதற்கான காரணங்கள் அச்சமூட்டுபவை .

சில நிமிடங்களிற்கு முன்னர் அசாத்தின் கொடுரமான சைட்னயா  சிறைச்சாலையிலிருந்து  எடுக்கப்பட்ட ஆவணங்களை அந்த குடும்பத்தினருக்கு சிலர் அனுப்பிவைத்திருந்தனர். அந்த ஆவணத்தில் ஹம்சாவின் மூத்த சகோதரர் ஒமாரும் சிரிய பாதுகாப்பு படையினரால் கைதுசெய்யப்பட்டார் என்ற விடயம் காணப்படுகின்றது.

ஒமார் 2019 ம் ஆண்டு பொலிஸாரின் தடுப்பில் உயிரிழந்தார்.

தனது மூத்த மகன் ஒமார் சிறையிலிருந்து வெளிவருவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்ததாக அவர்களின் தாயார் சமீரா தெரிவித்தார். அவர் பெரும் துயரத்தில் சிக்குண்டிருந்தார்.

இன்றோ நாளையோ எனது மூத்தமகன் வருவான் என காத்திருந்தேன், இன்று எனக்கு இந்த செய்தி கிடைத்தது என அவர் குறிப்பிட்டார்.

மூன்று மாதத்திற்கு முன்னர் உயிரிழந்த தனது கணவரிற்காக கருப்புஉடையணிந்து துக்கத்தை அனுஸ்டித்துக்கொண்டிருந்த அவர் நாங்கள் அனுபவித்ததை அசாத்தும்அனுபவிக்கவேண்டும் என தெரிவித்தார்.

'அசாத் அதற்கான விலையை செலுத்துவார் ஆண்டவன் அவரையும் அவரது பிள்ளைகளையும்  தண்டிப்பார் என எதிர்பார்க்கின்றேன்" என்றார் சமீரா.

சைட்னயா சிறைச்சாலையில் தங்கள் உறவினர்களை தேடுபவர்கள் சமீராவின் மூத்த மகனின் கைது குறித்த  ஆவணங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர் சமீராவின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

அவர்கள் ஒமார் குறித்த கோப்பினை கண்டுபிடித்து அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

அசாத்தின் வீழ்ச்சி அவரது மூடிமறைக்கப்பட்ட அவரது ஆட்சியின் ஒடுக்குமுறைகள் குறித்த தகவல்கள் வெளியுலகிற்கு தெரியவரும் சூழலை உருவாக்கியுள்ளது.

கிளர்ச்சிக்காரர்கள் டமஸ்கஸினை கைப்பற்றியதை தொடர்ந்து பசார் அல் அசாத் சிரியாவிலிருந்து வெளியேறியதை அறிந்த டெரா மக்கள் வீதிகளில் இறங்கி அதனை கொண்டாடினார்கள் .

kateb_mother.jpg

பெரும்மகிழ்ச்சியுடன் அந்த நகரத்தின் பிரதான சதுக்கத்தில் ஆண்கள் காணப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கூச்சலிட்டனர் தங்கள் கரங்களில் இருந்த துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டனர்.

அசாத்தின் ஆட்சியின் போது அதனை எதிர்த்தவர்களின் கோட்டையாக இந்த பகுதியே விளங்கியது.

பாடசாலைகளிலும் கிராமங்களிலும் கடும் மோதல்கள் இடம்பெற்றன. ஒவ்வொரு கிராமமும் தொடர்ச்சியாக டாங்கி தாக்குதல்களையும் துப்பாக்கி ரவைகளையும் எதிர்கொண்டது.

சிரியாவின் தென்பகுதியில் உள்ள அரச எதிர்பாளர்கள் தற்போது அதிகாரத்தை கைப்பற்றியுள்ள கிளர்ச்சியாளர்களிடமிருந்து வேறுபட்டவர்கள்.

ஹம்சாவின் மரணத்தை தொடர்ந்து அரசாங்கத்தின் ஒடுக்குமுறை தீவிரமடைந்த நிலையிலேயே சுதந்திர சிரிய இராணுவம் என்ற அமைப்பு 2011 இல் இந்த நகரத்தில் போரிட ஆரம்பித்தது.

சிரிய இராணுவத்தை சேர்ந்த சில அதிகாரிகளும் இந்த அமைப்புடன் இணைந்துகொண்டனர்.

அவ்வாறு சிரிய கிளர்ச்சியாளர்களுடன் இணைந்துகொண்டவர்களில் ஒருவர் அஹ்மட் அல் அவ்டா பல்கலைகழகத்தில் ஆங்கிலம் பயின்ற பின்னர் இராணுவத்தில்இணைந்துகொண்ட கவிஞர். தற்போது டெராவின் ஆயுதகுழுவின் தலைவர்.

'நாங்கள் தற்போது எவ்வளவு தூரம் மகிச்சியுடன் இருக்கின்றோம் என்பது உங்களிற்கு தெரியாது" என பஸ்ரா நகரில் வைத்து அவர் எங்களிற்கு தெரிவித்தார்.

'நாங்கள் பல நாட்களாக அழுதோம் கண்ணீர் சிந்தினோம், நாங்கள் எப்படி உணர்கின்றோம் என்பதை உங்களால் உணரமுடியாது, இங்குள்ள அனைவரும் குடும்பங்களை இழந்தவர்கள் என அவர் தெரிவித்தார்

பிபிசி Lucy Williamson

தமிழில் ரஜீவன் 

https://www.virakesari.lk/article/201310

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் - இப்படிக்கு  BBC 

🤣

The Guardian  பத்திரிகைச் செய்தி - 2012 ல் 

Syrian rebels accused of war crimes

Human Rights Watch says it has documented more than a dozen summary executions of prisoners
Ian Black, Middle East editor
Mon 17 Sep 2012 13.22 BST

Opposition groups in Syria have been accused of committing war crimes including torture and the summary execution of prisoners, and the UN has been warned of a growing number of human rights violations and the presence of foreign Islamist fighters ranged against the regime of Bashar al-Assad.

Human Rights Watch said it had documented more than a dozen executions by rebels in the northern provinces of Idlib and Aleppo and the coastal region of Latakia. Three opposition leaders who were confronted with evidence of extrajudicial killings said the victims had deserved to die, HRW reported.

https://amp.theguardian.com/world/2012/sep/17/syrian-rebels-accused-war-crimes

பிஸ்னஸ் இன்சைடெர் கட்டுரை - 2012 

How The Free Syrian Army Became A Largely Criminal Enterprise

The Free Syrian Army began as a simple group of fighters battling Assad. But Ruth Sherlock, in Antakya, finds their mission is now making millions from bribery and extortion

The Free Syrian Army commander leant against the door of his four-wheel drive BMW X5 with tinted windows and watched as his men waded through the river on the Syrian border moving the barrels of smuggled petroleum to Turkey.

https://www.businessinsider.com/how-the-free-syrian-army-became-a-largely-criminal-enterprise-2013-11

Edited by Kapithan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.