Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அஷ்வின் ஓய்வு!

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%21+

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ரவிச்சந்திரன் அஷ்வின் ஓய்வினை அறிவித்துள்ளார். 

அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் நிலையில் அவர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

39 வயதான ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளையும், 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளதுடன், 65 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் மற்றும் 14 அரை சதங்களுடன் 3,503 ஓட்டங்களையும், ஒருநாள் போட்டிகளில் 707 ஓட்டங்களையும் பெற்றுள்ளதுடன், இருபதுக்கு 20 போட்டிகளில் 184 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

 

https://www.hirunews.lk/tamil/391108/சர்வதேச-கிரிக்கெட்-போட்டிகளிலிருந்து-அஷ்வின்-ஓய்வு

  • கருத்துக்கள உறவுகள்

இடது கை பேட்டர்களின் எதிரி: முரளிதரன், வார்னேவை விஞ்சி அஸ்வின் படைத்துள்ள சாதனை என்ன?

அஸ்வின், இந்தியா - ஆஸ்திரேலியா, சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

"சரியான நேரத்தில் சரியான பந்தை வீசினால் வரலாற்றையே மாற்ற முடியும். பேட்டர்களின் மனநிலையை புரிந்துகொள்வது என்பது எனது ரகசிய ஆயுதம். ஆதலால் சுழற்பந்து என்பது ஒரு கலை, அதை வீசும் அனைவராலும் மாஸ்டராகிவிட முடியாது"

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக, சுழற்பந்துவீச்சில் ஜாம்பவானாக திகழ்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திர அஸ்வினின் வார்த்தைகள் இவை.

உண்மையில் சுழற்பந்துவீச்சில் அஸ்வின் ஒரு மாஸ்டர்தான் (நிபுணர்தான்). ஏனென்றால் அஸ்வின் ஒரு ஓவர் வீசுகிறார் என்றால் அதில் 6 பந்துகளும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

அஸ்வின் இன்றுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், ஐபிஎல் உள்ளிட்ட உள்நாட்டு தொடர்களில் அஸ்வின் தொடர்ந்து விளையாடுவார்.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தபின், ஊடகத்தினரைச் சந்தித்த ரவிச்சந்திர அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவித்தார்.

ஆஸ்திரேலியத் தொடருக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், கடந்த அடிலெய்ட் போட்டியில் மட்டுமே ஆடினார். வேகப்பந்துவீச்சுக்கு மட்டும் பெரிதாக ஒத்துழைக்கும் மைதானங்களில் சுழற்பந்துவீச்சாளர்களால் சோபிக்க முடியவில்லை. அஸ்வினுக்கும் அதே நிலைதான் ஏற்பட்டது ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.

பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்டில் அஸ்வினுக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டிருந்தார். இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தநிலையில் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவில் இருந்தும் உடனடியாக அஸ்வின் இந்தியாவுக்கு புறப்படுகிறார் என்று கிரிக்இன்போ இணையதளம் தெரிவித்துள்ளது.

அஸ்வின், இந்தியா - ஆஸ்திரேலியா, சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

சர்வதேச கிரிக்கெட்டில் கடைசி நாள்

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரராக கடைசிநாள் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில் " சர்வதேச அளவில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்திய வீரராக நான் பங்கேற்பது இதுதான் கடைசி நாள். கிரிக்கெட் வீரராக எனக்குள் இன்னும் மிச்சம் இருப்பதாக உணர்கிறேன். ஆதலால் லீக் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன், என்னை வெளிப்படுத்துவேன்" என்று தெரிவித்தார்.

கிரிக்கெட்டில் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு நன்றி கூறுவதாக குறிப்பிட்ட அஸ்வின் " இந்திய அணியில் எனக்கு ஏராளமான இனிமையான அனுபவங்கள், நினைவுகள் இருந்தன. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அணியின் சக வீரர்களுடன் நான் மிகுந்த விளையாட்டுத்தனமாக இருந்தேன். இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக என் சக வீரர்கள் ஓய்வு பெற்று சென்றனர். இந்திய கிரிக்கெட்டில் கடைசி சில ஒரிஜினல் கேங்ஸ்டர்கள் நாங்கள்தான், நாங்களும் ஓய்வறையைவிட்டு சென்றுவிட்டோம். வயதான வீரர்களில் நானும் ஒருவன். என்னுடைய ஓய்வு நாள் இன்றுதான் என்பதை இந்த நேரத்தில் அறிவிக்கிறேன்." என்றார்.

அஸ்வின், இந்தியா - ஆஸ்திரேலியா, சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரோஹித், கோலி, ரஹானே, புஜாராவுக்கு அஸ்வின் நன்றி

உண்மையில் இந்த நேரத்தில் ஏராளமானோருக்கு நான் நன்றி கூற வேண்டும். ஆனால், பிசிசிஐ மற்றும் சக வீரர்களுக்கு நான் நன்றி கூறாவிட்டால் நான் என் கடமையிலிருந்து நழுவியவனாகிவிடுவேன். அதில் சிலரின் பெயர், பயிற்சியாளர்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். குறிப்பாக ரோஹித், விராட் கோலி, ரஹானே, சத்தேஸ்வர் புஜாரா ஆகியோர் எதிரணி பேட்டர்களின் பேட்டிலிருந்து தெறித்துப் பாய்ந்த கேட்சுகளை பிடித்து எனக்கு விக்கெட்டுகளை வாரிக் கொடுத்தவர்கள்" எனத் தெரிவித்தார்.

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்ட அஸ்வின் மேலும் கூறுகையில் " அதேபோல ஆஸ்திரேலிய அணிக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். ஏனென்றால் அவர்களுடன் நான் தீவிர கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறேன். அவர்களுக்கு எதிராக விளையாடும் போது ரசித்து ஆடியிருக்கிறேன். இந்த ஓய்வு முடிவை எடுக்க நான் நீண்டகாலம் எடுக்கவில்லை. சிறிது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நான் இருப்பதால் நான் அதிகமான கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் விரும்பவில்லை. என்னைப் பற்றி நல்லவிதமாகவும், விமர்சித்தும் எழுதிய, பேசிய ஊடகங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி " என்று தெரிவித்தார்.

அஸ்வின், இந்தியா - ஆஸ்திரேலியா, சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

நூற்றாண்டின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர்

இந்தியக் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவுக்குப் பின் சுழற்பந்துவீச்சில் சர்வதேச அரங்கில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர்களில் ரவிச்சந்திரன் அஸ்வினும் ஒருவர்.

இந்த நூற்றாண்டின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களை வரிசைப்படுத்தினால், அதில் அஸ்வின் பெயர் முதல் 5 இடங்களுக்குள் இடம் பெறும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சுழற்பந்துவீச்சில் புதுமை

தொடக்கத்தில் மித வேகப்பந்துவீச்சாளராக இருந்த அஸ்வின், தனது பயிற்சியாளர் சி.கே.விஜயகுமார் அறிவுரையின்படி சுழற்பந்துவீச்சுக்கு மாறினார். அதன்பின் சுழற்பந்துவீச்சாளர்கள் சுனில் சுப்பிரமணியன் மற்றும் முன்னாள் வீரர் டபிள்யு வி ராமன் ஆகியோரிடம் அஸ்வின் பயிற்சி பெற்றார்.

அஸ்வினின் சொடுக்கு பந்துவீச்சு, கேரம் பந்துவீச்சு ஆகியவை டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு மிகப்பெரிய மரியாதையையும், பெயரையும் பெற்றுக்கொடுத்தன. சுழற்பந்துவீச்சில் உள்ள பல்வேறு நுணுக்கங்களிலும் தேர்ச்சி பெற்ற அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த ஆடுகளமாக இருந்தாலும் பேட்டர்களுக்கு சவாலான பந்துவீச்சாளராகவே இருந்து வந்துள்ளார்.

அஸ்வினின் புத்திக்கூர்மை, பேட்டர்களின் மனநிலை அறிந்து பந்துவீசுவது, அவரின் நுணுக்கமான 'கேரம் பந்துவீச்சு', 'ஆர்ம் பந்துவீச்சு', ஆஃப் ஸ்பின்னை கட்டுக்கோப்புடன் 'லைன் மற்றும் லென்த்தில்' வீசுவது ஆகியவை அவரது மிகப்பெரிய பலங்கள்.

அஸ்வின் ஒரு ஓவரை வீசினால், 6 பந்துகளும் வெவ்வேறு வகையில்தான் வீசுவாரே தவிர, ஒரே மாதிரியாக பெரும்பாலும் வீசியது இல்லை என்பதை கிரிக்கெட் நிபுணர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு விதமாக வீசி, பேட்டர்களை திணறடிப்பதில் அஸ்வின் தேர்ந்தவர். அதிலும் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் அஸ்வின் பேட்டர்களுக்கு எதிராகத் தனி ராஜ்ஜியமே நடத்துவார்.

அஸ்வின், இந்தியா - ஆஸ்திரேலியா, சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்

இந்திய அணிக்குள் அஸ்வின் வருவதற்கு முன்பாக ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணியில் அவரின் பந்துவீச்சு பலராலும் பேசப்பட்டது, கவனிக்கப்பட்டது. அஸ்வின் அசாத்திய பந்துவீச்சுத் திறன், சுழற்பந்துவீச்சு ஆகியவை இந்தியத் தேர்வாளர்களைத் ஈர்த்தது.

இதையடுத்து, 2010-ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் தேதி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அஸ்வின் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே அஸ்வின் 32 பந்துகளில் 38 ரன்களும், 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அடுத்த ஒரு வாரத்தில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியிலும் அஸ்வின் அறிமுகமாகி விளையாடினார்.

அன்றே கூறிய கம்பீர்

2010-ஆம் ஆண்டு ஆசியக் கோப்பைத் தொடரிலும் இந்திய அணியில் அஸ்வின் இடம் பெற்றார். 2010-ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பரில் நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 5-0 என தொடரை கைப்பற்றியது. இதில் இந்திய அணி சார்பில் அஸ்வின் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அப்போது கேப்டனாக இருந்த கெளதம் கம்பீர் அஸ்வின் குறித்து கூறுகையில் " பவர்ப்ளே ஓவர்களில் பந்துவீச சரியான வீரர் அணிக்கு கிடைத்துவிட்டார்" என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

ஆனாலும், அஸ்வினுக்கு தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்புக் கிடைக்கவில்லை. 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் 2 போட்டிகளில் மட்டுமே ஆடினார்.

2011-ஆம் ஆண்டு நவம்பரில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு பயணம் செய்து டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அப்போதுதான் இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வின் அறிமுகமானார்.

அஸ்வின், இந்தியா - ஆஸ்திரேலியா, சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

இக்கட்டான நேரத்தில் கைகொடுத்தவர்

இந்திய அணிக்குள் அஸ்வின் வந்தபோது, அணி சற்று இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. ஏனென்றால் அது கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக நல்ல சுழற்பந்துவீச்சாளராக ஹர்பஜனை தவிர வேறு யாரும் அடையாளம் காணப்படாத காலம்.

பகுதிநேரப் பந்துவீச்சாளராக யுவராஜ் சிங் மட்டுமே இருந்தார். அந்த நேரத்தில் இந்திய அணிக்குள் இடம் பெற்ற அஸ்வின், கும்ப்ளே இல்லாத குறையை நிவர்த்தி செய்தார்.

அஸ்வின் 2011ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி டெல்லியில் நடந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். அறிமுக போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது வென்ற 3வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார்.

அஸ்வின் படைத்த சாதனைகள்

அஸ்வின் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய வீரர் உலகளவில் 7-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையோடு விடை பெற்றார். அனில் கும்ப்ளே 132 டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.

37 முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகளவில் 2வது இடத்தில் அஸ்வின் உள்ளார். 8 முறை ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியும் அஸ்வின் சாதனை செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் உலகளவில் அதிவேகமாக 350 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. 66 போட்டிகளில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். 45 போட்டிகளில் 250 விக்கெட்டுகளையும், 54 போட்டிகளில் 300 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தி முதலிடம் பிடித்திருந்தார்.

98 போட்டிகளில் 500-வது விக்கெட்டை வீழத்தி, அந்த மைல்கல்லை விரைவாக எட்டிய 2வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

116 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள அஸ்வின் 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் ஆடி 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

அஸ்வின், இந்தியா - ஆஸ்திரேலியா, சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

'ஆல்ரவுண்டர்' அஸ்வின்

அஸ்வின் பேட்டிங்கிலும் பிரகாசித்துள்ளார். 6 சதங்கள், 14 அரைசதங்கள் உள்பட 3503 ரன்களை குவித்துள்ள அவரது ரன் சராசரி 25 ஆகும். ஒருநாள் போட்டியில் ஒரு அரைசதம் உள்பட 707 ரன்களும், டி20 போட்டியில் 184 ரன்களும் அஸ்வின் சேர்த்துள்ளார். பந்துவீச்சாளராக அடையாளம் காணப்பட்ட தன்னை கடைசியில் ஆல்ரவுண்டர் எனும் நிலைக்கு படிப்படியாக அஸ்வின் உயர்த்திக்கொண்டார்.

அது மட்டுமல்லாமல் 11 முறை தொடர்நாயகன் விருதை வென்று முத்தையா முரளிதரன் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார். இலங்கை ஜாம்பவான் முரளிதரன் 64 தொடர்களில் ஆடி 11 தொடர்நாயகன் விருதுகளை வென்ற நிலையில் அஸ்வின் 44 தொடர்களில் விளையாடி 11 தொடர்நாயகன் விருதுகளை கைப்பற்றியுள்ளார்.

அஸ்வின், இந்தியா - ஆஸ்திரேலியா, சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிராக 100 விக்கெட்

அஸ்வின் தனது ஓய்வு அறிவிப்பின் போது குறிப்பிட்டதைப் போல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிராக மிகவும் ரசித்து ஆடக்கூடியவர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 23 டெஸ்ட்களில் 115 விக்கெட்டுகளையும், இங்கிலாந்து அணிக்கு எதிராக 24 போட்டிகளில் 114 விக்கெட்டுகளையும் அவர் சாய்த்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். இதற்குமுன் இந்திய சுழற்பந்துவீச்சாளர் பகவத் சந்திரசேகர் இங்கிலாந்துக்கு எதிராக 95 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை 45 ஆண்டுகளுக்குப் பின் அஸ்வின் முறியடித்தார்.

அது மட்டுமல்லாமல் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே உள்நாட்டில் மட்டும் 350 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார், இதையும் அஸ்வின் முறியடித்து, 383 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

அஸ்வின், இந்தியா - ஆஸ்திரேலியா, சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோனியும், கோலியும்

இந்திய கேப்டன்களில் எம்எஸ் தோனி, விராட் கோலி இருவரும் அஸ்வினின் திறமையை நன்கு பயன்படுத்தினர். தோனி கேப்டன்ஷியில் 3 ஆண்டுகளில் மட்டும் 22 போட்டிகளில் ஆடிய அஸ்வின் 109 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேசமயம் விராட் கோலி கேப்டன்ஷியில் 7 ஆண்டுகளில் 55 போட்டிகளில் ஆடி 293 விக்கெட்டுகளையும், ரோஹித் சர்மா கேப்டன்ஷியில் 20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளார்.

முரளிதரன், வார்னேவை விஞ்சிய அஸ்வின்

இடதுகை பேட்ஸ்மேன்களின் எதிரி என்று அஸ்வினை கிரிக்கெட் வர்ணனையாளர்கள் அவ்வப்போது கூறுவதுண்டு. அஸ்வின் எடுத்த டெஸ்ட் விக்கெட்டுகளில் பாதிக்கு மேற்பட்டவை இடதுகை பேட்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டவை.

எந்த பந்துவீச்சாளரும் சாதிக்காத வகையில், கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் 255க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதாவது அஸ்வின் இதுவரை வீழ்த்திய 537 டெஸ்ட் விக்கெட்டுகளில் 255க்கும் விக்கெட்டுகள் இடதுகை பேட்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டவை. இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் விக்கெட் வீழ்த்தும் சதவீதம் 51% ஆக இருக்கிறது.

சுழற்பந்துவீச்சு ஜாம்பவான்களான முத்தையா முரளிதரன், அனில் கும்ப்ளே, மறைந்த ஷேன் வார்ன் ஆகியோர்கூட இடதுகை பேட்டர்களுக்கு எதிராக 150 விக்கெட்டுகளை தாண்டவில்லை.

இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 12 முறை அஸ்வின் பந்துவீச்சுக்கு தனது விக்கெட்டை பறி கொடுத்துள்ளார். டேவிட் வார்னர்(11முறை), அலிஸ்டர் குக் (9 முறை), நியூசிலாந்து வீரர் டாம் லாதம் (8 முறை) என அஸ்வின் பந்துவீச்சில் வீழ்ந்த இடதுகை பேட்டர்களின் பெயர் பட்டியல் நீள்கிறது.

அஸ்வின், இந்தியா - ஆஸ்திரேலியா, சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

அஸ்வின் வாழ்க்கையில் முக்கிய கட்டம்

அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கையில் 2015-16 சீசன் முக்கியமானது. 8 டெஸ்ட் போட்டிகளில் 336 ரன்கள் குவித்து 48 விக்கெட்டுகளையும் எடுத்தார். அந்த காலகட்டத்தில் 19 டி20 போட்டிகளில் 27 விக்கெட்டுகளையும் அவர் சாய்த்தார். அந்த ஆண்டில் ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதையும், 2016-இல் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதையும் அஸ்வின் பெற்றார். ஐசிசி அறிவித்த டெஸ்ட் அணியில் 5 முறை அஸ்வின் இடம் பெற்றுள்ளார். 2011 முதல் 2020 வரையிலான பத்தாண்டுகளுக்கான சிறந்த டெஸ்ட் அணியிலும் அஸ்வின் இடம் பெற்றார். 2015-ஆம் ஆண்டு அஸ்வினுக்கு மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்தது.

பயணங்கள் முடிவதில்லை...

இந்திய வீரராக அஸ்வின் பந்துவீச்சை இனி ரசிகர்கள் காண முடியாவிட்டாலும், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வீரராக, டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் வீரராக அவரின் பந்துவீச்சைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவமானத்தால் ஓய்வு முடிவை அறிவித்திருக்கலாம்- அஸ்வினின் தந்தை அதிர்ச்சித் தகவல்!

%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%21

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது.

இந்தப் போட்டியானது வெற்றிதோல்வி இன்றி முடிவடைந்தது.

3ஆவது டெஸ்ட் போட்டியின் முடிவில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இது சக வீரர்கள் உள்பட இரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அஸ்வின் ஓய்வு குறித்து முன்னாள் ,தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எனப் பலரும் பாராட்டித் தங்களது கருத்துகளைப் பகிர்ந்தனர்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த அஸ்வின் இன்று சென்னை வந்தடைந்தார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து சென்னை திரும்பிய அஸ்வினுக்கு விமான நிலையத்தில் இரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் அஸ்வின் திடீரென ஓய்வு அறிவிக்க அவமானம் ஒரு காரணமாக இருக்கலாம் என அவரது தந்தை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் - இந்திய டெஸ்ட் அணியின் முதல்தரச் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் திடீரென ஓய்வு அறிவித்தது அதிர்ச்சியாக உள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் சிறப்பாக விளையாடிய போதும் அணியில் இடம் கிடைக்காததால் ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம்.

இந்திய அணியில் விளையாடிய போது அஸ்வின் அவமானப்பட்டு இருக்கலாம்.

கிரிக்கெட் விளையாட்டின் உச்சத்தில் இருக்கும் போது திடீரென ஓய்வு அறிவிக்க அவமானம் ஒரு காரணமாக இருக்கலாம்.

எனினும் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அவரது தனிப்பட்ட முடிவு அதனால் அதில் தலையிட முடியாது.

என அஸ்வினின் தந்தை ரவிச்சந்திரன் கூறினார்.

 

https://www.hirunews.lk/tamil/391254/அவமானத்தால்-ஓய்வு-முடிவை-அறிவித்திருக்கலாம்-அஸ்வினின்-தந்தை-அதிர்ச்சித்-தகவல்

 

  • கருத்துக்கள உறவுகள்

'அவரை மன்னித்து விடுங்கள்' - ஓய்வு குறித்து தந்தையின் சர்ச்சை கருத்துக்கு அஸ்வின் பதில்

ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர், ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அவருடைய ஓய்வு குறித்து அவரின் தந்தை அளித்த பேட்டியும் அதற்கு அஸ்வின் கொடுத்த விளக்கமும் கிரிக்கெட் ஆர்வலர்களிடையே விவாதப் பொருளாகியுள்ளது.

"அஸ்வின் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட விதத்திற்கு பல காரணங்கள் உள்ளன. அஸ்வின் அவமானப்படுத்தப்பட்டிருக்கலாம், அது அஸ்வினுக்கு மட்டுமே தெரியும். எவ்வளவு காலத்துக்குதான் அவரும் பொறுத்துக்கொண்டிருப்பார்." என அவருடைய தந்தை ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

இதற்கு,தன்னுடைய தந்தை ஊடகங்களில் பேசி பழக்கப்பட்டவர் கிடையாது' என விளக்கம் அளித்திருக்கிறார் அஸ்வின்.

அஸ்வினின் ஓய்வு விவாதமாவது ஏன்?

 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இதேபோன்றுதான் ஆஸ்திரேலியத் தொடரின் நடுவே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். அதேபோன்ற முடிவே அஸ்வினும் எடுத்து, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென டிச. 18 அன்று அறிவித்தார்.

குழப்பம், சந்தேகம்

அடுத்ததாக சிட்னி மற்றும் மெல்போர்னில் நடக்கவிருக்கும் இரு டெஸ்ட் போட்டிகளிலும் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பது தெரிந்த நிலையில், அஸ்வின் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்திருப்பது பல்வேறு கேள்விகளையும், குழப்பங்களையும் கிரிக்கெட் விமர்சகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

அஸ்வினின் திடீர் ஓய்வு அறிவிப்பு குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ள நிலையில், திடீரென இந்த முடிவை அவர் எடுத்தது ஏன் என்ற காரணத்தையும் ஆராய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

ரவிச்சந்திரன் அஸ்வின் டிசம்பர் 18 அன்று தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட நிலையில், மாலையிலேயே அங்கிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை காலை சென்னை வந்தார். வழக்கமாக, இந்திய அணியில் ஒரு வீரர் ஓய்வு அறிவிப்பு வெளியிட்டால், வீரர்கள் அனைவருடன் நடக்கும் தேநீர் விருந்து, பிரியாவிடை கூட்டம் ஆகியவைகூட நடக்கவில்லை என்று சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டதை பார்க்க முடிந்தது.

ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரவிச்சந்திரன் அஸ்வின் டிசம்பர் 18 அன்று தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட நிலையில், மாலையிலேயே அங்கிருந்து புறப்பட்டு நேற்று சென்னை வந்தார்

தந்தை வருத்தமும் அஸ்வினின் விளக்கமும்

அஸ்வின் டிசம்பர் 19ம் தேதி அன்று காலை சென்னை வந்தபின் அவரின் இல்லத்தில் அவரின் குடும்பத்தினர் இசை வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேசமயம், அஸ்வினின் ஓய்வு அறிவிப்பு குறித்து அவரின் தந்தை ரவிச்சந்திரன் தன்னுடைய சில வருத்தங்களை எழுப்பியுள்ளார்.

அஸ்வின் தந்தை ரவிச்சந்திரன் தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்தப் பேட்டியில் "என் மகன் தொடர்ந்து சீனியர் அணியில் விளையாட விருப்பமாக இருந்தார். ஆனால், அஸ்வினின் ஓய்வு அறிவிப்பு எனக்குக் கடைசி நிமிடத்தில்தான் தெரிந்தது" என்றார்.

"ஓய்வு பெறுவது அவரின் விருப்பம் அவரின் முடிவில் நான் தலையிட விரும்பவில்லை. ஆனால், ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட விதத்திற்கு பல காரணங்கள் உள்ளன" என்றும் அவர் கூறினார்.

அஸ்வினின் திடீர் மாற்றம், ஓய்வு அறிவிப்பு உண்மையில் அதிர்ச்சியாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

"என்னுடைய தந்தை ஊடகங்களில் பேசி பழக்கப்பட்டவர் கிடையாது. அனைவரும் அவரை மன்னித்து, தனியே விடுங்கள்," என்று அஸ்வின் எக்ஸ் தளத்தில் அவருடைய தந்தையின் கருத்து குறித்து அறிவித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் தொடர்களில் அஸ்வின் தொடர்ந்து இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் புறக்கணிக்கப்பட்டு வந்தார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது

பிளேயிங் லெவனில் இடம் மறுப்பு

வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் தொடர்களில் அஸ்வின் தொடர்ந்து இந்திய அணியின் பிளேயிங் லெவனில் புறக்கணிக்கப்பட்டு வந்தார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடருக்கு அஸ்வின் தேர்வு செய்யப்பட்டாலும் அவர் அணியில் பெஞ்சில் அமரவைப்பது பல காலமாக நடந்துள்ளது.

இப்போது நடந்துவரும் ஆஸ்திரேலியத் தொடரின் முதல் டெஸ்டில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு அஸ்வின் அமரவைக்கப்பட்டார். அடிலெய்ட் டெஸ்டில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, பிரிஸ்பேன் டெஸ்டில் அஸ்வினுக்குப் பதிலாக ஜடேஜாவுக்கு இடம் அளிக்கப்பட்டது.

முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும் சேனல் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில், "அஸ்வின் அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதும், வாஷிங்டன் சுந்தருக்கு அளிக்கப்படும் வாய்ப்பும் கூட அஸ்வின் ஓய்வு அறிவிப்புக்குக் காரணமாக இருக்கலாம்" என விமர்சித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரோகித் இல்லாத நேரம் கம்பிர் செய்த காரியம்: அஸ்வின் முடிவுக்கு இதுதான் காரணம்!

Minnambalam Login1Dec 19, 2024 15:49PM
e9RENlzL-ashwin.jpg

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் பார்டர்- கவாஸ்கர் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியின் 4வது நாளில் திடீரென ஒரு அறிவிப்பை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வெளியிட்டார். 

முன்னதாக 2008 ஆம் ஆண்டு கும்ப்ளேவும் 2014 ஆம் ஆண்டு தோனியும் இது போன்று டெஸ்ட் தொடரில் பாதியில் ஓய்வு அறிவித்துள்ளனர். அதே போல, அஸ்வினும் திடீரென்று இப்படி ஒரு முடிவெடுக்க என்ன காரணம் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. திடீர் ஓய்வு அறிவிப்பின் பின்னணி என்னவென்று பார்ப்போம்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு முன்னதாக, இந்திய மண்ணில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை தழுவியது. முக்கியமாக ஸ்பின்னுக்கு சாதகமான மும்பை, புனே மைதானங்களில் கூட இந்தியா தோற்றது. 

இந்த தொடரில் 9 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார். ரவீந்தர ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் தலா 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். இத்தனைக்கும் வாஷிங்டன் சுந்தர் 2 போட்டிகளில்தான் விளையாடியிருந்தார். 

இதனால், அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் 11 வீரர்களில் இடம் கொடுத்தால் மட்டுமே நான் வருவேன் என்று அணி நிர்வாகத்திடம் கூறியிருந்தார். 

நிபந்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டதால், ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். ஆனால், பெர்த்தில் நடந்த முதல் போட்டியிலேயே பெஞ்சில் வைக்கப்பட்டார். இந்த போட்டிக்கு பும்ரா கேப்டனாக இருந்தார். 

இந்த சமயத்தில் தனக்கு குழந்தை பிறந்திருந்ததால், கேப்டன் ரோகித் சர்மா தாயகம் வந்திருந்தார். இந்த போட்டியில் கோச் கம்பிர் செய்த காரியத்தால் விளையாடும் அணியில் அஸ்வின் இடம் பெறவில்லை. வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பிடித்திருந்தார். அப்போதே அஸ்வின் ஓய்வு குறித்த முடிவை எடுத்து விட்டார். 

பின்னர், ரோகித் மீண்டும் ஆஸ்திரேலியா சென்ற போது, அஸ்வினை சமாதானம் செய்து அடிலெய்டில் நடந்த பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் விளையாட வைத்தார். 

பிரிஸ்பேனில் நடந்த அடுத்த டெஸ்டில் மீண்டும் அஸ்வின் கரையில் வைக்கப்பட, ஜடேஜா உள்ளே வந்தார். இதையடுத்து, டெஸ்ட் அணியில் இருந்து நிரந்தரமாக விடை பெற அஸ்வின் முடிவு செய்தார். தொடர்ந்து, அவரின் 14 வருட தேசிய அணிக்கான கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 

கடந்த 2017- 2019 ஆம் ஆண்டு முதல் அஸ்வினுக்கு மூட்டு வலி உள்ளது. பல சிகிச்சைகள் எடுத்தும் பலன் இல்லை. பின்னர், பெங்களூருவில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 

ஓய்வு குறித்து அறிவிக்க இதுவும் ஒரு காரணமென்று கூறப்படுகிறது. ஏனென்றால், இனிமேல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்ற காரணத்தினால் திடீர் ஓய்வு முடிவுக்கு அவர் வந்து விட்டார்.

 

https://minnambalam.com/sports/did-coach-gautam-gambhirs-decision-hasten-ravichandran-ashwins-retirement/

  • கருத்துக்கள உறவுகள்

ASHWIN-ஐ Retirement-க்கு தள்ளிய KOHLI | திடீர் முடிவுக்கு இதுதான் காரணம் | IND vs AUS | Bosskey RRR

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

அஸ்வினின் தந்தையின் செவ்வி

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 It's not about the size of the dog, it is only about the fight of the dog

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று என்னுடையது நாளையும் என்னுடையதாகயிருக்கும் என நான் ஒருபோதும் நம்புவதில்லை - மக்கள் என்னை கொண்டாடுவதையும் நம்புவதில்லை - மனம்திறந்தார் அஸ்வின்

Published By: RAJEEBAN   27 DEC, 2024 | 12:16 PM

image
 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து  ஒய்வுபெறுவதற்கானதனது முடிவு குறித்து மனம் திறந்துள்ள இந்திய சகலதுறை வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் .இன்று என்னுடையது நாளையும் என்னுடையதாகயிருக்கும் என நான் ஒருபோதும் நம்புவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்கை ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் பொட்காஸ்டில் மைக்கல் ஆதர்டன் நசார் ஹ_சைனுடன் உரையாடுகையில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

ashwin3.jpg

உங்களிற்குள் எப்போதும் ஒரு கேள்வியிருக்கும்.நான் எப்போதும் சரியான முடிவை எடுக்கிறேனா என உங்களை நீங்களே கேட்டுக்கொள்வீர்கள். எனது விடயத்தில் இது சற்று வித்தியாசமானது , நான் விடயங்களை இறுகப்பற்றிக்கொள்ளும் ஒருவன் இல்லை என ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

நான் வாழ்க்கையில் ஒருபோதும் பாதுகாப்பற்றவனாக  உணர்ந்ததில்லை.இன்று என்னுடையது நாளையும் என்னுடையதாகயிருக்கும் என நான் ஒருபோதும் நம்புவதில்லை. என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இதுவே இத்தனை வருடங்களாக என்னை உயர்த்தும் காரணியாகயிருந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் என்னை கொண்டாடுவதை நான் நம்பாததால் எதனைபற்றியும் கவலைப்படாமல் விடயங்களில் இருந்து விடுபடவிரும்பினேன் என தெரிவித்துள்ள அஸ்வின் சில நேரங்களில் இந்தியாவில் எமக்கு கிடைக்கும் வரவேற்பை- கவனத்தை நான் நம்புவதில்லை விளையாட்டே எப்போதும் முக்கியமானதாக காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

537 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தியுள்ள ரவிசந்தின் அஸ்வின்  அந்த பொட்காஸ்டில் மேலும் கருத்து தெரிவிக்கையில் கடந்த காலங்களிலும் ஓய்வு குறித்து சிந்தித்ததாகவும் ஆனால் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஆக்கபூர்வ சக்தியை இழந்துவிட்டதாக கருதியதால் இம்முறைஓய்வு பெற தீர்மானித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/202281

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அஸ்வின் அவுஸ்ரேலியா செல்லாம‌லே ஓய்வை அறிவித்து இருக்க‌ வேண்டும் 

ப‌ல‌ த‌ட‌வை அஸ்வின் மன‌ உளைச்ச‌லுக்கு ஆள் ஆகி இருக்கிறார்

ந‌ல்ல‌ போமில் இருந்த போதும் கூட‌ இங்லாந் தொட‌ரில் ஒரு ம‌ச் த‌ன்னும் விளையாட‌ விடாம‌ வெளியில் உக்கார‌ வைச்ச‌வை................அப்பேக்க‌ அஸ்வின் ர‌சிக‌ர்க‌ள் அவ‌ர் வெளியில் இருப்ப‌தை பார்த்து கவ‌லைப் ப‌ட்டவை........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.