Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அஷ்வின் ஓய்வு!

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%21+

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ரவிச்சந்திரன் அஷ்வின் ஓய்வினை அறிவித்துள்ளார். 

அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் நிலையில் அவர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

39 வயதான ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளையும், 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளதுடன், 65 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் மற்றும் 14 அரை சதங்களுடன் 3,503 ஓட்டங்களையும், ஒருநாள் போட்டிகளில் 707 ஓட்டங்களையும் பெற்றுள்ளதுடன், இருபதுக்கு 20 போட்டிகளில் 184 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

 

https://www.hirunews.lk/tamil/391108/சர்வதேச-கிரிக்கெட்-போட்டிகளிலிருந்து-அஷ்வின்-ஓய்வு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இடது கை பேட்டர்களின் எதிரி: முரளிதரன், வார்னேவை விஞ்சி அஸ்வின் படைத்துள்ள சாதனை என்ன?

அஸ்வின், இந்தியா - ஆஸ்திரேலியா, சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

"சரியான நேரத்தில் சரியான பந்தை வீசினால் வரலாற்றையே மாற்ற முடியும். பேட்டர்களின் மனநிலையை புரிந்துகொள்வது என்பது எனது ரகசிய ஆயுதம். ஆதலால் சுழற்பந்து என்பது ஒரு கலை, அதை வீசும் அனைவராலும் மாஸ்டராகிவிட முடியாது"

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக, சுழற்பந்துவீச்சில் ஜாம்பவானாக திகழ்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திர அஸ்வினின் வார்த்தைகள் இவை.

உண்மையில் சுழற்பந்துவீச்சில் அஸ்வின் ஒரு மாஸ்டர்தான் (நிபுணர்தான்). ஏனென்றால் அஸ்வின் ஒரு ஓவர் வீசுகிறார் என்றால் அதில் 6 பந்துகளும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

அஸ்வின் இன்றுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், ஐபிஎல் உள்ளிட்ட உள்நாட்டு தொடர்களில் அஸ்வின் தொடர்ந்து விளையாடுவார்.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தபின், ஊடகத்தினரைச் சந்தித்த ரவிச்சந்திர அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவித்தார்.

ஆஸ்திரேலியத் தொடருக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், கடந்த அடிலெய்ட் போட்டியில் மட்டுமே ஆடினார். வேகப்பந்துவீச்சுக்கு மட்டும் பெரிதாக ஒத்துழைக்கும் மைதானங்களில் சுழற்பந்துவீச்சாளர்களால் சோபிக்க முடியவில்லை. அஸ்வினுக்கும் அதே நிலைதான் ஏற்பட்டது ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.

பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்டில் அஸ்வினுக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டிருந்தார். இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தநிலையில் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவில் இருந்தும் உடனடியாக அஸ்வின் இந்தியாவுக்கு புறப்படுகிறார் என்று கிரிக்இன்போ இணையதளம் தெரிவித்துள்ளது.

அஸ்வின், இந்தியா - ஆஸ்திரேலியா, சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

சர்வதேச கிரிக்கெட்டில் கடைசி நாள்

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரராக கடைசிநாள் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில் " சர்வதேச அளவில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்திய வீரராக நான் பங்கேற்பது இதுதான் கடைசி நாள். கிரிக்கெட் வீரராக எனக்குள் இன்னும் மிச்சம் இருப்பதாக உணர்கிறேன். ஆதலால் லீக் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன், என்னை வெளிப்படுத்துவேன்" என்று தெரிவித்தார்.

கிரிக்கெட்டில் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு நன்றி கூறுவதாக குறிப்பிட்ட அஸ்வின் " இந்திய அணியில் எனக்கு ஏராளமான இனிமையான அனுபவங்கள், நினைவுகள் இருந்தன. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அணியின் சக வீரர்களுடன் நான் மிகுந்த விளையாட்டுத்தனமாக இருந்தேன். இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக என் சக வீரர்கள் ஓய்வு பெற்று சென்றனர். இந்திய கிரிக்கெட்டில் கடைசி சில ஒரிஜினல் கேங்ஸ்டர்கள் நாங்கள்தான், நாங்களும் ஓய்வறையைவிட்டு சென்றுவிட்டோம். வயதான வீரர்களில் நானும் ஒருவன். என்னுடைய ஓய்வு நாள் இன்றுதான் என்பதை இந்த நேரத்தில் அறிவிக்கிறேன்." என்றார்.

அஸ்வின், இந்தியா - ஆஸ்திரேலியா, சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரோஹித், கோலி, ரஹானே, புஜாராவுக்கு அஸ்வின் நன்றி

உண்மையில் இந்த நேரத்தில் ஏராளமானோருக்கு நான் நன்றி கூற வேண்டும். ஆனால், பிசிசிஐ மற்றும் சக வீரர்களுக்கு நான் நன்றி கூறாவிட்டால் நான் என் கடமையிலிருந்து நழுவியவனாகிவிடுவேன். அதில் சிலரின் பெயர், பயிற்சியாளர்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். குறிப்பாக ரோஹித், விராட் கோலி, ரஹானே, சத்தேஸ்வர் புஜாரா ஆகியோர் எதிரணி பேட்டர்களின் பேட்டிலிருந்து தெறித்துப் பாய்ந்த கேட்சுகளை பிடித்து எனக்கு விக்கெட்டுகளை வாரிக் கொடுத்தவர்கள்" எனத் தெரிவித்தார்.

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்ட அஸ்வின் மேலும் கூறுகையில் " அதேபோல ஆஸ்திரேலிய அணிக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். ஏனென்றால் அவர்களுடன் நான் தீவிர கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறேன். அவர்களுக்கு எதிராக விளையாடும் போது ரசித்து ஆடியிருக்கிறேன். இந்த ஓய்வு முடிவை எடுக்க நான் நீண்டகாலம் எடுக்கவில்லை. சிறிது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நான் இருப்பதால் நான் அதிகமான கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் விரும்பவில்லை. என்னைப் பற்றி நல்லவிதமாகவும், விமர்சித்தும் எழுதிய, பேசிய ஊடகங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி " என்று தெரிவித்தார்.

அஸ்வின், இந்தியா - ஆஸ்திரேலியா, சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

நூற்றாண்டின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர்

இந்தியக் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவுக்குப் பின் சுழற்பந்துவீச்சில் சர்வதேச அரங்கில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர்களில் ரவிச்சந்திரன் அஸ்வினும் ஒருவர்.

இந்த நூற்றாண்டின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களை வரிசைப்படுத்தினால், அதில் அஸ்வின் பெயர் முதல் 5 இடங்களுக்குள் இடம் பெறும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சுழற்பந்துவீச்சில் புதுமை

தொடக்கத்தில் மித வேகப்பந்துவீச்சாளராக இருந்த அஸ்வின், தனது பயிற்சியாளர் சி.கே.விஜயகுமார் அறிவுரையின்படி சுழற்பந்துவீச்சுக்கு மாறினார். அதன்பின் சுழற்பந்துவீச்சாளர்கள் சுனில் சுப்பிரமணியன் மற்றும் முன்னாள் வீரர் டபிள்யு வி ராமன் ஆகியோரிடம் அஸ்வின் பயிற்சி பெற்றார்.

அஸ்வினின் சொடுக்கு பந்துவீச்சு, கேரம் பந்துவீச்சு ஆகியவை டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு மிகப்பெரிய மரியாதையையும், பெயரையும் பெற்றுக்கொடுத்தன. சுழற்பந்துவீச்சில் உள்ள பல்வேறு நுணுக்கங்களிலும் தேர்ச்சி பெற்ற அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த ஆடுகளமாக இருந்தாலும் பேட்டர்களுக்கு சவாலான பந்துவீச்சாளராகவே இருந்து வந்துள்ளார்.

அஸ்வினின் புத்திக்கூர்மை, பேட்டர்களின் மனநிலை அறிந்து பந்துவீசுவது, அவரின் நுணுக்கமான 'கேரம் பந்துவீச்சு', 'ஆர்ம் பந்துவீச்சு', ஆஃப் ஸ்பின்னை கட்டுக்கோப்புடன் 'லைன் மற்றும் லென்த்தில்' வீசுவது ஆகியவை அவரது மிகப்பெரிய பலங்கள்.

அஸ்வின் ஒரு ஓவரை வீசினால், 6 பந்துகளும் வெவ்வேறு வகையில்தான் வீசுவாரே தவிர, ஒரே மாதிரியாக பெரும்பாலும் வீசியது இல்லை என்பதை கிரிக்கெட் நிபுணர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு விதமாக வீசி, பேட்டர்களை திணறடிப்பதில் அஸ்வின் தேர்ந்தவர். அதிலும் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் அஸ்வின் பேட்டர்களுக்கு எதிராகத் தனி ராஜ்ஜியமே நடத்துவார்.

அஸ்வின், இந்தியா - ஆஸ்திரேலியா, சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்

இந்திய அணிக்குள் அஸ்வின் வருவதற்கு முன்பாக ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணியில் அவரின் பந்துவீச்சு பலராலும் பேசப்பட்டது, கவனிக்கப்பட்டது. அஸ்வின் அசாத்திய பந்துவீச்சுத் திறன், சுழற்பந்துவீச்சு ஆகியவை இந்தியத் தேர்வாளர்களைத் ஈர்த்தது.

இதையடுத்து, 2010-ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் தேதி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அஸ்வின் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே அஸ்வின் 32 பந்துகளில் 38 ரன்களும், 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அடுத்த ஒரு வாரத்தில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியிலும் அஸ்வின் அறிமுகமாகி விளையாடினார்.

அன்றே கூறிய கம்பீர்

2010-ஆம் ஆண்டு ஆசியக் கோப்பைத் தொடரிலும் இந்திய அணியில் அஸ்வின் இடம் பெற்றார். 2010-ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பரில் நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 5-0 என தொடரை கைப்பற்றியது. இதில் இந்திய அணி சார்பில் அஸ்வின் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அப்போது கேப்டனாக இருந்த கெளதம் கம்பீர் அஸ்வின் குறித்து கூறுகையில் " பவர்ப்ளே ஓவர்களில் பந்துவீச சரியான வீரர் அணிக்கு கிடைத்துவிட்டார்" என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

ஆனாலும், அஸ்வினுக்கு தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்புக் கிடைக்கவில்லை. 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் 2 போட்டிகளில் மட்டுமே ஆடினார்.

2011-ஆம் ஆண்டு நவம்பரில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு பயணம் செய்து டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அப்போதுதான் இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வின் அறிமுகமானார்.

அஸ்வின், இந்தியா - ஆஸ்திரேலியா, சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

இக்கட்டான நேரத்தில் கைகொடுத்தவர்

இந்திய அணிக்குள் அஸ்வின் வந்தபோது, அணி சற்று இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. ஏனென்றால் அது கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக நல்ல சுழற்பந்துவீச்சாளராக ஹர்பஜனை தவிர வேறு யாரும் அடையாளம் காணப்படாத காலம்.

பகுதிநேரப் பந்துவீச்சாளராக யுவராஜ் சிங் மட்டுமே இருந்தார். அந்த நேரத்தில் இந்திய அணிக்குள் இடம் பெற்ற அஸ்வின், கும்ப்ளே இல்லாத குறையை நிவர்த்தி செய்தார்.

அஸ்வின் 2011ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி டெல்லியில் நடந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். அறிமுக போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது வென்ற 3வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார்.

அஸ்வின் படைத்த சாதனைகள்

அஸ்வின் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய வீரர் உலகளவில் 7-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையோடு விடை பெற்றார். அனில் கும்ப்ளே 132 டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.

37 முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகளவில் 2வது இடத்தில் அஸ்வின் உள்ளார். 8 முறை ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியும் அஸ்வின் சாதனை செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் உலகளவில் அதிவேகமாக 350 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. 66 போட்டிகளில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். 45 போட்டிகளில் 250 விக்கெட்டுகளையும், 54 போட்டிகளில் 300 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தி முதலிடம் பிடித்திருந்தார்.

98 போட்டிகளில் 500-வது விக்கெட்டை வீழத்தி, அந்த மைல்கல்லை விரைவாக எட்டிய 2வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

116 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள அஸ்வின் 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் ஆடி 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

அஸ்வின், இந்தியா - ஆஸ்திரேலியா, சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

'ஆல்ரவுண்டர்' அஸ்வின்

அஸ்வின் பேட்டிங்கிலும் பிரகாசித்துள்ளார். 6 சதங்கள், 14 அரைசதங்கள் உள்பட 3503 ரன்களை குவித்துள்ள அவரது ரன் சராசரி 25 ஆகும். ஒருநாள் போட்டியில் ஒரு அரைசதம் உள்பட 707 ரன்களும், டி20 போட்டியில் 184 ரன்களும் அஸ்வின் சேர்த்துள்ளார். பந்துவீச்சாளராக அடையாளம் காணப்பட்ட தன்னை கடைசியில் ஆல்ரவுண்டர் எனும் நிலைக்கு படிப்படியாக அஸ்வின் உயர்த்திக்கொண்டார்.

அது மட்டுமல்லாமல் 11 முறை தொடர்நாயகன் விருதை வென்று முத்தையா முரளிதரன் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார். இலங்கை ஜாம்பவான் முரளிதரன் 64 தொடர்களில் ஆடி 11 தொடர்நாயகன் விருதுகளை வென்ற நிலையில் அஸ்வின் 44 தொடர்களில் விளையாடி 11 தொடர்நாயகன் விருதுகளை கைப்பற்றியுள்ளார்.

அஸ்வின், இந்தியா - ஆஸ்திரேலியா, சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிராக 100 விக்கெட்

அஸ்வின் தனது ஓய்வு அறிவிப்பின் போது குறிப்பிட்டதைப் போல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிராக மிகவும் ரசித்து ஆடக்கூடியவர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 23 டெஸ்ட்களில் 115 விக்கெட்டுகளையும், இங்கிலாந்து அணிக்கு எதிராக 24 போட்டிகளில் 114 விக்கெட்டுகளையும் அவர் சாய்த்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். இதற்குமுன் இந்திய சுழற்பந்துவீச்சாளர் பகவத் சந்திரசேகர் இங்கிலாந்துக்கு எதிராக 95 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை 45 ஆண்டுகளுக்குப் பின் அஸ்வின் முறியடித்தார்.

அது மட்டுமல்லாமல் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே உள்நாட்டில் மட்டும் 350 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார், இதையும் அஸ்வின் முறியடித்து, 383 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

அஸ்வின், இந்தியா - ஆஸ்திரேலியா, சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோனியும், கோலியும்

இந்திய கேப்டன்களில் எம்எஸ் தோனி, விராட் கோலி இருவரும் அஸ்வினின் திறமையை நன்கு பயன்படுத்தினர். தோனி கேப்டன்ஷியில் 3 ஆண்டுகளில் மட்டும் 22 போட்டிகளில் ஆடிய அஸ்வின் 109 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேசமயம் விராட் கோலி கேப்டன்ஷியில் 7 ஆண்டுகளில் 55 போட்டிகளில் ஆடி 293 விக்கெட்டுகளையும், ரோஹித் சர்மா கேப்டன்ஷியில் 20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளார்.

முரளிதரன், வார்னேவை விஞ்சிய அஸ்வின்

இடதுகை பேட்ஸ்மேன்களின் எதிரி என்று அஸ்வினை கிரிக்கெட் வர்ணனையாளர்கள் அவ்வப்போது கூறுவதுண்டு. அஸ்வின் எடுத்த டெஸ்ட் விக்கெட்டுகளில் பாதிக்கு மேற்பட்டவை இடதுகை பேட்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டவை.

எந்த பந்துவீச்சாளரும் சாதிக்காத வகையில், கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் 255க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதாவது அஸ்வின் இதுவரை வீழ்த்திய 537 டெஸ்ட் விக்கெட்டுகளில் 255க்கும் விக்கெட்டுகள் இடதுகை பேட்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டவை. இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் விக்கெட் வீழ்த்தும் சதவீதம் 51% ஆக இருக்கிறது.

சுழற்பந்துவீச்சு ஜாம்பவான்களான முத்தையா முரளிதரன், அனில் கும்ப்ளே, மறைந்த ஷேன் வார்ன் ஆகியோர்கூட இடதுகை பேட்டர்களுக்கு எதிராக 150 விக்கெட்டுகளை தாண்டவில்லை.

இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 12 முறை அஸ்வின் பந்துவீச்சுக்கு தனது விக்கெட்டை பறி கொடுத்துள்ளார். டேவிட் வார்னர்(11முறை), அலிஸ்டர் குக் (9 முறை), நியூசிலாந்து வீரர் டாம் லாதம் (8 முறை) என அஸ்வின் பந்துவீச்சில் வீழ்ந்த இடதுகை பேட்டர்களின் பெயர் பட்டியல் நீள்கிறது.

அஸ்வின், இந்தியா - ஆஸ்திரேலியா, சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

அஸ்வின் வாழ்க்கையில் முக்கிய கட்டம்

அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கையில் 2015-16 சீசன் முக்கியமானது. 8 டெஸ்ட் போட்டிகளில் 336 ரன்கள் குவித்து 48 விக்கெட்டுகளையும் எடுத்தார். அந்த காலகட்டத்தில் 19 டி20 போட்டிகளில் 27 விக்கெட்டுகளையும் அவர் சாய்த்தார். அந்த ஆண்டில் ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதையும், 2016-இல் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதையும் அஸ்வின் பெற்றார். ஐசிசி அறிவித்த டெஸ்ட் அணியில் 5 முறை அஸ்வின் இடம் பெற்றுள்ளார். 2011 முதல் 2020 வரையிலான பத்தாண்டுகளுக்கான சிறந்த டெஸ்ட் அணியிலும் அஸ்வின் இடம் பெற்றார். 2015-ஆம் ஆண்டு அஸ்வினுக்கு மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்தது.

பயணங்கள் முடிவதில்லை...

இந்திய வீரராக அஸ்வின் பந்துவீச்சை இனி ரசிகர்கள் காண முடியாவிட்டாலும், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வீரராக, டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் வீரராக அவரின் பந்துவீச்சைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த செய்தியில் கிடைத்த மேலதிக தகவல்> மேற்படி பெண்ணின் கணவர் ஒரு லாரி டிரைவராதலால் அவர் அதிகம் வீட்டில் இருப்பதில்லை என்றும் அதனால் தனக்கு கடுமையான மனவுளைச்சல் ஏற்படுவதாக கூறி மணமுறிவு பெற்றதுடன் ஒவ்வொருதரமும் சுமார் 28000 டாலர் இழப்பீட்டு தொகையையும் அரசிடமிருந்து பெற்றிருக்கிறார். பின்னர் அரசு நிறுத்தி வைத்த கைம்பெண் உதவி தொகையையும் மீளப்பெறுவதற்கான அனுமதியையும் பெற்று வாழ்ந்து வந்துள்ளார். 
    • தன் குஞ்சை நம்பாமல், கோழிக் குஞ்சை நம்பி மோசம் போய்ட்டார் பாவம்.
    • வரலாறு தெரிந்தவர் நீங்கள். நாம் மேற்கை நம்பி எமது போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. எமது கனவும் அரவணைப்பும் இந்திய ரசிய சீன கியூபா மற்றும் வியட்நாம் சார்ந்து தான் ஆரம்பித்தது. ஆனால் இவர்கள் அனைவரும் கதவையும் காதையும் முற்றிலுமாக மூடிய பின்னரே நாம் அடுத்தவரை நாடினோம்.  போர்க்குற்றங்கள் மற்றும் பேரளிவுகளுக்கு எல்லோரும் தான் காரணம். அதில் இந்திய ரசிய சீன பங்கு மிக மிக அதிகம். மேற்குலகம் சில தடைகள் எச்சரிக்கைகளை யாவது செய்தது. அதுவும் இல்லாமல் இருந்திருந்தால் கட்டுப்பாடற்ற இந்திய ரசிய சீன ஆதரவுடன் இலங்கையில் தமிழர்களே முற்று முழுதாக இல்லாதொழிக்கப் படக்கூடிய வாய்ப்புகள் தான் அதிகம் உள்ளது.  
    • முப்பட்டைக்கண்ணாடியினூடே jeyamohanDecember 17, 2024 (1) அண்மையில் எகிப்து சென்றிருந்தபோது அங்கிருக்கும் பிரம்மாண்டமான ஆலயங்களினூடாக நடக்கும் நேரத்தில் எண்ணிக்கொண்டேன். அவை வெறும் ஆலயங்கள் மட்டும் அல்ல. மாபெரும் நூல்களும் கூட. காவியங்கள் என்றே சொல்லத்தக்க அளவுக்கு பிரம்மாண்டமானவை. அவற்றின் சித்திர எழுத்துக்கள் முழுமையாகவே படிக்கப்பட்டுவிட்ட நிலையில், இன்று மானுடத்தின் தொல்வரலாறு குறித்து நமக்கிருக்கும் விரிந்த சித்திரமே அங்கிருந்து உருவாகி வந்ததுதான். ‘அழியாத சொல்’ எனும் சொற்சேர்க்கை எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. அவை கல்லில் பொறிக்கப்பட்டமையால் அழிவற்றதாகின்றனவா? இல்லை. எந்த நூலிலும், எங்கும் எழுதப்படாததனாலேயே கூட இந்திய வேதங்கள் அழிவின்மையை அடைந்து இன்று வரை ஒலிபிசகாமல் நீடிக்கின்றன. அழிவின்மை என்பது அச்சொற்களுக்கு மானுடம் அளிக்கும் இடத்தில் உள்ளது. நகரங்கள் இடிந்தழிகின்றன. மலைகள் கூட கரைந்து மறைகின்றன. ஆனால் இலக்கியத்தை மானுடன் நெஞ்சோடணைத்து பேணி கொண்டு யுகங்களைத் தாண்டி வந்துகொண்டே இருக்கிறான். எழுதப்பட்டவை எவையும் அழிவதில்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அவை ஒருவேளை நேரடியாக நினைவில் நின்றிருக்காமல் ஆகலாம். மறைந்து போய்விட்டவை என்று அவற்றைப்பற்றி ஆய்வாளர்கள் சொல்லலாம். மறைந்துவிட்டவை, அழிந்தவை அல்ல. அவை உருகி மறுவடிவை அடைந்தன, மறுபிறப்பு கொண்டன என்றே என்னால் சொல்லமுடிகிறது. அழிவின்மை என்பது சொல்லில் உறையும் உண்மைக்கு மானுடம் அளிக்கும் எதிர்வினை. மானுடன் சொல் அழிவதை விரும்புவதில்லை. சொல் அவனுடைய தெப்பம். அதைப் பற்றிக்கொண்டே அவன் மிதக்க முடியும். அது எந்நிலையிலும் மூழ்கிவிடலாகாது. அந்த அளவுக்கு சொல்லுக்கிருக்கும் பங்களிப்பு தான் என்ன? இப்படித் தோன்றுகிறது, மானுடவாழ்க்கை இங்கு தன்னியல்பான விரிதலுடன் முட்டி மோதி பெருக்கெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. இது உருவான ஊற்றும் அறியக்கூடுவதல்ல. செல்லும் திசை அறியக்கூடுவதல்ல. இதன் எந்தத் தருணமும் ஏதேனும் ஒரு வடிவ ஒழுங்குக்குள் நிற்பதும் அல்ல. முற்றிலும் சிதறுண்டதென்பதுதான் வாழ்க்கைக்கு நாம் அளிக்கும் அறுதியான வரையறை. அவ்வளவு பேருருவம் கொண்ட இவ்வாழ்க்கை நமக்கு வசப்படாத காட்டு விலங்கு. அதை முழுக்க நாம் நம் ஆளுகைக்குள் கொண்டு வர முடியாதெனினும் அதன்மேல் ஏறியே ஆகவேண்டும். அது நம் எல்லைக்குள் காலத்திற்குள் சற்றேனும் நமக்கு துணை நின்றாக வேண்டும். அந்தப்பெருங்களிற்றை பழக்கப்படுத்துவதற்கு அதை வென்று நிறுத்துவதற்கு அதற்கிணையான பெருங்களிறொன்று நமக்குத் தேவையாகிறது. களிறே எப்போதும் களிற்றைப் பிடித்து பழக்கி அளிக்கிறது. இந்த இரண்டாவது பெருங்களிறே இலக்கியம். இது பிறிதொருவனத்தில் நாம் நமது பெருந்தவத்தால் பிடித்து பழக்கி வசப்படுத்தி ஏறிக்கொண்ட ஒரு விலங்கு. மொழியெனும் காட்டில் துளித்துளியாக தொட்டுச் சேர்த்து புனைந்து புனைந்து நாம் உருவாக்கிக்கொண்டது இது. இதன் பேருருவம் இங்கு பிரபஞ்ச வெளி நிகழ்த்தும் வாழ்வெனும் பேருருவத்திற்கு நிகராக நிற்க முடியுமென்று நாம் அறிந்தோம். ஆகவே இதை நம் முதன்மை பெரும் செல்வமென யுகங்கள் தோறும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறோம். வாழ்வின் ஒழுங்கின்மையின், இலக்கின்மையின், வடிவின்மையின் அராஜகத்திற்கு எதிரான ஒன்று இலக்கியம் என்பதனால் ஒழுங்கு, வடிவம், நோக்கம் ஆகியவை என்றும் இலக்கியத்தின் இயல்புகளாக இருந்து வந்துள்ளன. பெருங்காவியங்கள் மொத்த வாழ்க்கையையுமே ஒழுங்கும் நோக்கமும் வடிவும் கொண்டவையாக ஆக்கும் துடிப்பில் இருந்து உருவானவை. ஆகவே அவை வாழ்வளவுக்கே பெரியவை. சொல்லிச் சொல்லி ஒவ்வொன்றுக்கும் நாம் பொருள் அளிக்கிறோம். பொருள்களை அளித்து நோக்கங்களை அமைக்கிறோம். பொருளும் நோக்கமும் பொருந்தி அமையும் வடிவத்தை எழுதியும் பேசியும் பாடியும் பொருளாய்ந்தும் மெல்ல மெல்ல சமைத்துக்கொண்டிருக்கிறோம். இலக்கியத்தின் அடிப்படையான இந்த நோக்கத்திலிருந்து எந்நிலையிலும் அது விலக முடியாதென்றே நான் எண்ணுகிறேன். வாழ்விற்கு பொருளை சமைத்தளிப்பதே இலக்கியத்தின் பிறவி நோக்கம். ஒரு வீச்சில் இதுவரையிலான மானுட இலக்கியத்தை பார்த்தால் என்னென்ன வகையாக அது வாழ்க்கைக்கு பொருள் அளித்திருக்கிறது என்பதை அதன் வெவ்வேறு காலகட்டங்களை அழகியலை வரையறை செய்யும் கூறு என்று தோன்றுகிறது. வீரயுகம் என்று ஒன்றை வரையறுத்தோமெனில் வீரமே மானுட வாழ்வின் பொருள் என்றும், வாழ்வு இங்கு நிகழ்வதின் நோக்கம் என்றும் அது வரையறுத்திருப்பதைக் காணலாம். மகாவீரம் என்று மெய்ஞான பயணத்தை அது குறிப்பிடுகிறது. பின்னர் அறம் தேர்வதும், அறம் நிலை கொள்வதும் இலக்கியத்தின் நோக்கம் என்று ஆயிற்று. இறை ஒன்றை அறிதலும், அகம் கொள்ளுதலும் பின்னர் இலக்கியத்தின் நோக்கமும் பொருளும் என வடிவம் கொண்டது. மானுடப்பெரும் லட்சியங்களை அறிவதும் ஆக்கிக்கொள்வதுமாக நவீன காலச்செவ்வியல் தன்னை முன் வைத்தது. அப்பெரும் கனவுகளுக்கு நிகராகவும் மாற்றாகவும் தனி மனித அகம் எனும் ஒன்றை முன்வைத்தது நவீனத்துவ இலக்கியம். இவ்வாறு பொருள் புனைதல், நோக்கம் கண்டடைதல் என்றே இலக்கியம் இதுகாறும் நிகழ்ந்து வந்துள்ளது. பின் நவீனத்துவ காலகட்டத்தில் அந்நோக்கத்தை ஐயப்படுதல், அந்தப்பொருளை மறுத்தல், அவ்வடிவத்தை சிதறடித்தல் ஆகியவை இலக்கியத்தின் இயல்புகளில் ஒன்றாக வடிவமைத்தனர். மையங்களை அழித்தல் என்று அதற்கு பெயர் சூட்டினர்.  பின்நவீனத்துவத்தின் நோக்கமென்பது நிலை கொண்டுவிட்ட பெரும் கட்டுமானங்களின் அடித்தளத்தை நொறுக்குவது தான். பெருங்கதையாடல்களின் மறுப்பென்பது அதன் அடிப்படை இயல்புகளில் ஒன்று. தமிழில் இவ்விரு கோணங்களிலுமே பின்நவீனத்துவம் அறிமுகமாயிற்று. பின்நவீனத்துவத்தின் பிறிதொரு முதன்மைக்கூறாக இருந்த (Sublime) அல்லது உன்னதம் இங்கு  எவ்வகையிலும் பின் நவீனத்துவத்தால் பொருட்படுத்தப்படவோ பேசப்படவோ இல்லை. அதற்கான காரணங்களை தனியாக ஆராய வேண்டும். இங்கு மதம் அரசியல் ஆகியவற்றினூடாக  பெருங்கதையாடல் ஒன்று நிகழ்ந்து, அதனூடாக ஆதிக்க அதிகாரம் நிலைநிறுத்தப்பட்டிருப்பது மட்டுமே ஒரு பொருட்படுத்தத்தக்க விஷ்யமாக இங்கு வந்தபோது பின் நவீனத்துவம் உணர்ந்திருக்கலாம். அதை தலைகீழாக்குவதும் கட்டுடைப்பதுமே தன் நோக்கம் என்று அது கொண்டிருக்கலாம். உன்னதம் அல்லது Sublime இங்கு ஆன்மிகத்திலும் செவ்வியல் இலக்கியத்திலும் கலைகளிலும் ஏற்கனவே நிகழ்ந்திருப்பதை பிறிதொருவகையில் நிகழ்த்திக்கொள்ள தேவையில்லை என்பதற்கான காரணமாக அது எண்ணிக்கொண்டிருக்கலாம். எவ்வகையிலேனும் இங்கு பின் நவீனத்துவம் வந்தபோது அது ஒரு நிலைகுலைவை உருவாக்கும் நோக்கம் மட்டுமே கொண்டிருந்தது. கலகம் என்றே தன்னை முன் வைத்தது. பின்நவீனத்துவம் தமிழகத்தில் இரண்டு தளங்களில் அறிமுகமாகியது ஒன்று அறிவுத்துறையில் இலக்கியக் கோட்பாடுகளாக. ஒருவகையில் அமைப்புவாதத்தை தமிழில் அறிமுகம் செய்த எஸ்.வி.ராஜதுரை, தமிழவன்  ஆகிய இரண்டு முன்னோடிகளும் தமிழில் அமைப்புவாதம் வழியாகப் பின் நவீனத்துவம் உள் நுழைவதற்கான முதல் திறப்பை நிகழ்த்திய முன்னோடிகள் எனலாம். அவர்கள் இங்கிருந்த நவீனத்துவ, முற்போக்கு இலக்கிய  முகாம்களுடன் நிகழ்த்திய மோதலும் உரையாடலும் ஒரு சிந்தனை மாற்றத்தை நிகழ்த்தின. தொடர்ந்து பின் நவீனத்துவ சிந்தனைகள் இங்கு இலக்கிய கருதுகோள்களாக ரமேஷ் பிரேம், நாகார்ஜுனன், க.பூர்ணசந்திரன், நோயல் இருதயராஜ், ராஜ் கௌதமன் போன்றவர்களால் முன்வைக்கப்பட்டன. அவை கல்வித்துறைகளில் ஓரளவுக்கு செல்வாக்கைச் செலுத்தின. குறிப்பாக கல்வித்துறை சார்ந்த மொழியியல் ,நாட்டாரியல், சமூகவியல் பாடத்திட்டங்களில் அவை சிறிய மாற்றங்களை உருவாக்கியிருப்பதை இப்போது காண முடிகிறது. இக்கோட்பாட்டாளர்கள் பெரும்பாலும் சிற்றிதழ்களில் தங்கள் கருத்தை முன் வைத்தனர். தீவிரமான, முழுமையான மறுப்பாக இக்கருத்துகள் முன்வைக்கப்பட்டமை சிற்றிதழ் சூழலில் ஒரு சலனத்தை உருவாக்கியது. தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளான பெரும்படைப்பாளிகளை ஒற்றை வரியில் நிராகரித்தபடி இக்கருத்துகள் பேசப்பட்டமையால் இவற்றுக்கு எதிரான எதிர்வினைகளும் உருவாயின. இந்த விவாதங்களின் வழியாக பின் நவீனத்துவத்தை நோக்கிய சிந்தனைத்தள நகர்வு ஒன்று இயல்வதாகியது. ஆனால் இன்று ஒட்டுமொத்தமாக தொகுத்துப்பார்க்கையில் இவர்களின் பங்களிப்பு மிகக்குறைவானதென்றே தோன்றுகிறது. இவர்கள் தங்களுடைய சிந்தனைகளை ஒட்டுமொத்த தமிழிலக்கியத்தையோ உலக இலக்கியத்தையோ கருத்தில் கொண்டு விரிவாகவும் தெளிவாகவும் முன்வைக்கவில்லை. தமிழ் இந்திய பண்பாட்டுச் சூழலின் பிரச்னைகளை எதிர்கொண்டு அவற்றுக்குப் புதிய பார்வைக்கோணங்களை உருவாக்கவும் இல்லை. ஒற்றை வரியில் சொல்வதென்றால், சாமானிய தமிழ் வாசகன் ஒருவன் தமிழ் இலக்கியங்களை ஏற்கனவே வாசித்து உருவாக்கிக்கொண்ட கருத்துகளுக்கும் புரிதல்களுக்கும் அப்பால் ஒரு சிறு தனிப்புரிதலைக்கூட, ஒரு சிறிய திறப்பைக் கூட இவர்களால் உருவாக்க இயலவில்லை. தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுக்களத்தில் மரபார்ந்த பண்பாட்டு ஆய்வாளர்கள் துல்லியமான தரவுகளுடன் உருவாக்கிய பார்வைகளுக்கு அப்பால் புதிய எதையுமே இவர்களால் சொல்ல முடியவில்லை, எளிய சில கேலிகளைத் தவிர. ஆகவே பின் நவீனத்துவத்தை நோக்கிய ஒரு பார்வை திருப்புதலுக்கு இவர்கள் காரணமாயினர் என்பதற்கு அப்பால் இவர்களுக்கான சிந்தனை சார்ந்த பங்களிப்பென்பது ஒட்டுமொத்தமாக குறிப்பிடும்படி இல்லை என்றே சொல்லவேண்டியுள்ளது. ஆனால் பின் நவீனத்துவக் கூறுகள் தமிழ் இலக்கியத்தில் வெவ்வேறு வகையில் தங்கள் செல்வாக்கை செலுத்தின. அச்செல்வாக்கு இக்கோட்பாடுகளினூடாக நிகழ்ந்தது அல்ல. மாறாக பின்நவீனத்துவ கூறுகள் கொண்ட மேலைநாட்டுப் புனைவிலக்கியங்கள் இங்கு வாசிக்கக் கிடைத்து அவற்றிலிருந்து உருவான அழகியல் தாக்கத்தினால் அத்தகைய பின் நவீனத்துவ படைப்புகள் இங்கு உருவாக வழி அமைந்தது. தமிழில் நேரடியாக செல்வாக்கை செலுத்திய பின்நவீனத்துவ கூறுகள் கொண்ட மேற்கத்திய புனைவுகள் எனச் சில உண்டு. கப்ரியேல் கார்சியா மார்க்யூசின் ’தனிமையின் நூறு ஆண்டுகள்’ உம்பர்ட்டோ ஈக்கோவின் ’ரோஜாவின் பெயர்’ மற்றும் மிலோரட் பாவிக்கின் ’கசார்களின் அகராதி’ போன்றவை உதாரணம். இப்படைப்புகளின் வடிவத்தைப் பற்றி தொண்ணூறுகளின் தொடக்கத்தில் எழுத்தாளர்கள் தங்களுக்குள் விதந்து பேசிக்கொண்டதை நினைவுகூர்கிறேன். அவ்வாறு தமிழிலக்கியத்தின் வடிவமும் உருமாற்றமும் அடைந்தாக வேண்டுமென்ற எண்ணம் உருவாகி அது அன்று பரவலாக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்த நவீனத்துவ நாவலில் இருந்து பிறிதொருவகை நாவலை நோக்கி எழுத்தாளர்கள் நகர்வதற்கான அடிப்படை தூண்டுதலாக அமைந்தது. என்னைப் பொறுத்தவரை இம்மூன்று நாவல்களையும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயே நான் பயின்றிருந்த போதிலும் முதல் இரண்டு நாவல்களும் என்னில் தீவிரமான ஒரு பாதிப்பை செலுத்தின. கசார்களின் அகராதி வெறும் அறிவுப்பயிற்சி, ஆழமற்றது என்ற எண்ணமே உருவானது இன்றும் அவ்வெண்ணமே நீடிக்கிறது. அத்தகைய அறிவுப்பயிற்சி என்பது எழுத்தெனும் அடிப்படையான அகத்தேடலுக்கு எதிரான ஒன்றென்ற எண்ணமும் எனக்கு வலுவாக உண்டு. வரலாற்றில் மெய்யாகவே உள்ள இடைவெளிகளை நிரப்பிக்கொண்டு எழும் கற்பனை என ரோஜாவின் பெயர் நாவலைச் சொல்லலாம். வரலாற்றை உதறிவிட்டு எழும் கற்பனை என தனிமையின் நூறு ஆண்டுகளைச் சொல்லலாம். இரண்டுமே முன்னோடியான கலைப்படைப்புக்கள். இவ்வாறாக தமிழில் பின்நவீனத்துவ புனைவிலக்கியத்தில் உருத்திரண்டு வந்தது. அவ்வாறு வருவதற்கு எந்த வகையிலும் தமிழில் இங்கு பேசப்பட்ட பின்நவீனத்துவ கோட்பாடுகள் உதவவில்லை என்பது மட்டுமல்ல, அவை புனைவிலக்கியத்தின் பாய்ச்சலுக்கு எதிராகவே இருந்தன. இங்கிருந்த பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர்களால் பின்நவீனத்துவத்தின் புனைவிலக்கிய வெளிப்பாட்டை புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் தாங்கள் மேலைக்கோட்பாளர்களிடமிருந்து கற்று இங்கே திருப்பிச் சொன்ன கருத்துகளை அப்படியே தாங்களும் ஏற்று திருப்பி சொல்லும் எழுத்தாளர்களே பின்நவீனத்துவப் படைப்புகளை உருவாக்க முடியும் என்று நம்பினர். உண்மையில் அது தன்னளவில் பின்நவீனத்துவத்துக்கு எதிரான ஒரு நம்பிக்கை. பின்நவீனத்துவம் என்பது சர்வதேச தன்மையை ஏற்றுக்கொள்வதல்ல. வட்டாரத்தன்மையையே முன்நிறுத்தக் கூடியது. ஒவ்வொரு அலகிலும் முற்றிலும் தனித்தன்மையோடு வெளிப்படும் ஒன்றே இலக்கியம் என்று வாதிடுவது. ஆகவே மேலைப் பின்நவீனத்துவத்தை இங்கு திரும்ப நிகழ்த்த வேண்டுமென்று எண்ணிய இங்குள்ள பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர்களால் இங்குள்ள புனைவிலக்கியத்தில் அது நிகழ்ந்தபோது அதை அடையாளம் கண்டுகொள்ளவோ ஏற்கவோ இயலவில்லை. மட்டுமல்ல, அது பின்நவீனத்துவமே அல்ல என்றும், பின்நவீனத்துவத்திற்கென்று இவ்வண்ணம் இலக்கணங்கள் உண்டென்றும், அந்நெறி இங்கு நூல்களில் பேணப்படவில்லை என்றும், சொல்லி புதிய இலக்கியங்களுக்கு எதிராக மிகப்பெரிய தடையை அவர்கள் உருவாக்கினார்கள். அவர்களுடைய ஏளனங்களையும் எதிர்ப்புகளையும் வழக்கம்போல இலக்கியம் எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை. அவர்களும் காலப்போக்கில் தங்கள் குரல்கள் மதிப்பிழக்க வெறும் பெயர்களாக பின்நகர்ந்து விட்டிருக்கின்றனர். அப்படைப்புகள் வரலாற்றில் தன்னை நிறுவிக்கொண்டிருக்கின்றன. தமிழில் பின்நவீனத்துவம் நிகழ்ந்தபோது இரண்டு வகையில் அதன் வெளிப்பாடு அமைந்தது. ஒன்று பின்நவீனத்துவத்தின் வடிவம் சார்ந்த மீறல்கள் அல்லது கலகங்கள் நேரடியாகவே நிகழும் புனைவுகள்.  இவை பின்நவீனத்துவம் எனும் இலக்கிய அலையால் உலகமெங்கும் உருவாக்கப்பட்ட சிதைவுற்ற சிதறடிக்கப்பட்ட தன்னைத்தானே மறுபுனைவு செய்து கொள்கிற தன்னைத்தானே மறுக்கிற இலக்கிய வடிவங்களை உருவாக்கின. அவை முழுக்க முழுக்க வடிவச் சோதனைகள். அத்தகைய மேலையிலக்கிய வடிவங்களை தமிழ்ச் சூழலில் செயற்கையாக திரும்ப உருவாக்கும் முயற்சிகள் தமிழில் எப்போதும் உண்டு என்றாலும் அவை பின்நவீனத்துவச் சூழலிலேயே அதிகம் நிகழ்ந்தன.  அதற்கு புகழ் பெற்ற உதாரணம் என்று எம்.ஜி.சுரேஷை சொல்லவேண்டும். தன்னுடைய நாவல்களுக்கு வெவ்வேறு பெயர்களைப்போட்டு, அந்த வடிவத்துக்கான உதாரணமென்றே அவற்றை அறிவித்துக்கொண்டு ,அவர் தன் படைப்புகளை எழுதினார். அவை அந்த வடிவத்திற்கு எந்தவகையிலும் நியாயம் செய்யவில்லை என்பதுடன் எவையுமே புனைவாக உருவாகவும் இல்லை. இன்று அவற்றை எவர் பொருட்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. படைப்புகள் வடிவங்களை அடைவதென்பது அப்படைப்பு உருவாக்க நினைக்கும் விளைவை ஒட்டியது. அந்த விளைவை இலக்காக்காமல்  வடிவத்தை  எழுத முயல்வேன் என்பது மிக எளிய மாதிரி வடிவங்களை உருவாக்குவதாகவே அமையும். மலைகளுக்கான மாதிரி வடிவங்களை உள்ளங்கையில் நிற்குமளவுக்கு செய்வது போல அம்முயற்சி என்று சொல்லலாம். இன்னொரு பக்கம் மேலைப்படைப்புகளின் வடிவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு அவற்றினூடாக தமிழ்ப் பண்பாட்டையும் வரலாற்றையும் மெய்யியலையும் எவ்வகையிலேனும் மறுஆக்கமோ விசாரணையோ செய்யமுடியுமா என்று முயன்ற படைப்பாளிகளைக் குறிப்பிடவேண்டும். அவர்களில் முதன்மையானவர் இருவர் ரமேஷ் பிரேதன் மற்றும் பா.வெங்கடேசன். அவர்களின் படைப்புகளுக்கு அவர்கள் கையாண்ட வடிவம் புதுமையையும் செறிவையும் அளிக்கிறது. அவ்வடிவத்தினூடாக அவர்கள் தமிழக அரசியலையும் வாழ்வையும் பண்பாட்டையும் ஆயும்போது சென்றடையும் சில புதிய கோணங்களும் சாத்தியக்கூறுகளும் உள்ளன. ஆனால் அவை வடிவமாகவே முன்னிற்பவை. இந்த இரண்டு பிரிவுகளுக்கும் அப்பாற்பட்ட இன்னொரு வகை பின்நவீனத்துவ எழுத்து என்பது எந்த வகையிலும் பின்நவீனத்துவ கருதுகோளாலோ பின்நவீனத்துவ வடிவங்களாலோ ஈர்க்கப்படாதவர்கள், தங்களை அறியாமலேயே பின்நவீனத்துவ வண்ணங்களை தங்கள் புனைவுகளில் அடைந்தவர்கள், தன்னியல்பாக உருவாக்கியது. அவர்களைப் பொறுத்தவரை எந்த இலக்கியக் கொள்கையும் இலக்கியத்தை வழிநடத்துவதற்கு தகுதி கொண்டது அல்ல.  கொள்கையின் விரிவாக்கமாகவோ,  நிரூபணமாகவோ இலக்கியப்படைப்புகளை எழுதுவது செயற்கையானது. இலக்கிய வடிவம் என்பது ஒரு புனைவை உருவாக்கும்போது தன்னியல்பாக உருவாகி வரவேண்டியதே ஒழிய வடிவத்தை அடையும்பொருட்டு இலக்கியம் எழுதப்படலாகாது. வடிவச் சோதனைகளில் அவர்கள் ஈடுபடுவதும் இல்லை. ஆனால் அவர்கள் புனைவை உருவாக்கும்போது தன்னியல்பாகவே பின்நவீனத்துவ அம்சம் அவற்றில் வந்தமைகிறது. அந்த பின்நவீனத்துவ அம்சம் என்பது உண்மையில் இங்குள்ள வாழ்க்கையில், இங்குள்ள சிந்தனைப்போக்குகளில், இங்குள்ள கலை இலக்கிய சூழலில், பின்நவீனத்துவ அம்சம் குடியேறியிருப்பதனால் அங்கிருந்து அவர்களுக்குத் தன்னியல்பாக வந்ததாகவே உள்ளது. இந்த இரண்டாவது வகைமையைச் சேர்ந்தவர் இரா முருகன். (மேலும்)     https://www.jeyamohan.in/209048/
    • என்ன இது இன்னும் கூத்து தொடங்கவேயில்லை......அதுக்கிடையில 2028 ஆண்டுமாம்...😁
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.