Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

100 மில்லியன் நட்டஈடு கோரி அர்ச்சுனா மீது அவதூறு வழக்கு

December 18, 2024  10:16 pm

100 மில்லியன் நட்டஈடு கோரி அர்ச்சுனா மீது அவதூறு வழக்கு 

யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியினால் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக இன்று (18) அவதூறு வழக்கொன்றை யாழ்.மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்து 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ளார். 

நேற்று (17) தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்குத் தொடர்பான கட்டாணை வழங்குவது தொடர்பாக யாழ்.மாவட்ட நீதிமன்றத்தில் மேலதிக மாவட்ட நீதிபதி அ.அ.ஆனந்தராஜா முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது. 

இதன் போது வழக்காளி சார்பில் சட்டத்தரணி த.தினேசசன் அனுசரனையுடன், சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் ஏற்பாடாகியிருந்தார். 

வழக்காளியான வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தி தடுப்புக் காவலில் இருந்த போது அங்கு அவருக்கு நிகழ்ந்த விடயங்கள் தொடர்பில் அவருக்கு ஆவதூறாக எதிராளி வைத்தியர் இராமநாதன் அசர்ச்சுனாவினால் செல்லப்பட்ட விடயங்கள் மற்றும் 09.12.2024 அன்று இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலைக்குள் நுழைந்து வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தியுடன் சில வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டு, அவருடன் பிணக்கிற்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பிலும், அன்றைய தினத்தில் இராமநாதன் அர்ச்சுனா தன்னுடைய முகப்புத்தகத்தில் வெளியிட்ட காணொளி ஊடாக  அவதூறு பரப்பப்பட்டதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 

ஏதிராளியான இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்து வைத்திய நிபுணர் சத்தியமூர்த்திக்கு எதிராக, அவருடைய மாண்பு மற்றும் கீர்த்திக்கு பங்கம் விளைவிக்கும் கருத்துக்களை தொரிவிப்பதாகவும் மன்றில் தெரிவிக்கப்பட்டது. 

அவரால் கூறப்படும் கருத்துக்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதோடு அடிப்படை அறமற்ற நபர் ஒருவருடைய கருத்தாகும் என்று வழக்காளி சத்தியமூர்த்தி தனது சத்தியக்கூற்றிலே தெரிவித்திருந்தமை தொடர்பில் சட்டத்தினையும், நீதிமன்றங்களினால் வழங்கப்பட்ட தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி நீண்ட சமர்ப்பனம் வழக்காளி தரப்பில் மன்றில் முன்வைக்கப்பட்டது. 

மேலும் வழக்காளியானவர் தனது சத்தியக் கூற்றிலேயே தனது நோக்கம் எதிராளியான இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலே, குடிமகன் என்ற வகையிலே அல்லது பொது நிறுவன்களை பொறுபுக் கூற வைக்க வேண்டும் என்ற நியாயமாக செயற்படும் இடத்து, அவற்றுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்றும் பொய்யான வகையிலும், அவதூறான வகையிலும் அவரால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் கட்டளையாக்கப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. 

குறித்த விடயங்களை செவிமடுத்த நீதிபதி வழக்காளியால் கோரப்பட்டவாறு, அவருக்கு எதிராக அவதூறான கருத்துக்கள் எதனையும் தெரிவிக்க கூடாது என எதிராளி இராமநாதன் அர்ச்சுனாவிற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளார். 

இது ஒரு முகமாக வழக்காளி தரப்பை மட்டும் கேட்டு வழங்கப்படும் கட்டாணை என்பதால், இது தொடர்பான அறிவித்தல் எதிராளிக்கு வழங்கப்பட்டுள்ளது. 

கட்டாணை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை வலிதாக இருக்கும். அன்றைய தினம் அதனை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பிலான தீர்மானத்தினை நீதிபதி எடுப்பார். 

இது தொடர்பில் எதிராளி இராமநாதன் அர்ச்சுனாவிற்கு கட்டளையின் பிரதியையும், அறிவித்தலையும் வழங்குமாறு மன்று கட்டளையிட்டுள்ளது.

 

-யாழ். நிருபர் பிரதீபன்-
 

 

https://tamil.adaderana.lk/news.php?nid=197502

  • கருத்துக்கள உறவுகள்

கேதீஸ்வரன் ஏன் அர்ச்சுனாவின் மீது வழக்கு போடவில்லை என்று ரதி சில நாட்களின் முன்னர் கேட்டிருந்தார்.................. சத்யன் 100 மில்லியன் ரூபாய்கள் என்று ஒரே போடாக போட்டுவிட்டார்............

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சட்டப்படி நஸ்டஈடு கொடுக்கமுடியாவிடின் என்ன நடக்கும், சிறைத்தண்டனை?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, RishiK said:

இலங்கை சட்டப்படி நஸ்டஈடு கொடுக்கமுடியாவிடின் என்ன நடக்கும், சிறைத்தண்டனை?

இலங்கையில் இது ஒரு வகையான அடையாள எதிர்ப்பு என்றே தெரிகின்றது. நஷ்டஈடும் கொடுக்கமாட்டார்கள், சிறைத்தண்டனையும் கிடைப்பதில்லை. இனிமேல் இப்படிச் சொல்லமாட்டோம், செய்யமாட்டோம் என்ற உறுதி மொழிகளோடும், மன்னிப்போடும் வழக்கு முடிந்துவிடும் போல............

ரணிலின் ஆலோசகராக இருந்தவர் அவரின் பெண் தோழியின் நாய்க்குட்டியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக வந்த விவகாரத்திலும் இப்படித்தான் 100 மில்லியனோ ஏதோ மான நஷ்டஈடாகக் கேட்டிருந்தார். கடைசியில் ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை.

ஹிருணிகா, டயான, இப்படி பல பல 100 மில்லியன் வழக்குகள் சமீபத்தில் வந்து போயின.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, RishiK said:

இலங்கை சட்டப்படி நஸ்டஈடு கொடுக்கமுடியாவிடின் என்ன நடக்கும், சிறைத்தண்டனை?

 

15 minutes ago, ரசோதரன் said:

இலங்கையில் இது ஒரு வகையான அடையாள எதிர்ப்பு என்றே தெரிகின்றது. நஷ்டஈடும் கொடுக்கமாட்டார்கள், சிறைத்தண்டனையும் கிடைப்பதில்லை. இனிமேல் இப்படிச் சொல்லமாட்டோம், செய்யமாட்டோம் என்ற உறுதி மொழிகளோடும், மன்னிப்போடும் வழக்கு முடிந்துவிடும் போல............

ரணிலின் ஆலோசகராக இருந்தவர் அவரின் பெண் தோழியின் நாய்க்குட்டியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக வந்த விவகாரத்திலும் இப்படித்தான் 100 மில்லியனோ ஏதோ மான நஷ்டஈடாகக் கேட்டிருந்தார். கடைசியில் ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை.

ஹிருணிகா, டயான, இப்படி பல பல 100 மில்லியன் வழக்குகள் சமீபத்தில் வந்து போயின.

சந்திரிக்கா காலத்தில் criminal defamation சட்டம் கொண்டு வந்தார்கள்.

ஆனால் அது இப்போதும் உள்ளதா தெரியவில்லை.

சிவில் வழக்கில் பணத்தை செலுத்தாவிட்டால் கோர்ட் enforcement action எடுக்கும். இது சொத்ததை பறிமுதல் செய்வது, வருவாயில் பிடிப்பது என பலவகை படலாம்.

வந்தவரை இலாபம் என எடுப்பார்கள்.

கேட்க்கும் தொகையை நியாயப்படுத்த வேண்டும்.

ஆகவே ஒரு மன்னிப்புடன் பலர் சமாதானம் அடைவர். பலதும் out of court settlement.

ஆனால் தக்க ஆதாரம் காட்டினால் பணமாக நஷ்ட ஈடு வழங்கப்படும்.

கேட்கும் தொகை அல்ல. கோர்ட் நிர்ணையிக்கும் தொகை.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுனா இராமநாதன் கூறிய விடயங்கள் உண்மையே; அர்ச்சுனா சார்பில் நீதிமன்றில் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் கூறிய விடயங்கள் உண்மையே என அர்ச்சுனா சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, யாழ்ப்பாணம் மாவட்ட  நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனிடம் 100 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு கோரி யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி யாழ். மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்காளியான வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தி இறுதி யுத்தம் முடிவடைந்த நிலையில் தடுப்புக் காவலில் இருந்த போது அங்கு அவருக்கு நிகழ்ந்த விடயங்கள் தொடர்பில் அவருக்கு அவதூறாக எதிராளி வைத்தியர் இராமநாதன் அசர்ச்சுனாவினால் செல்லப்பட்ட விடயங்கள் மற்றும் கடந்த 09 ஆம் திகதி  இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலைக்குள் நுழைந்து வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தியுடன் சில வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டு, அவருடன் பிணக்கிற்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பிலும், அன்றைய தினத்தில் இராமநாதன் அர்ச்சுனா தன்னுடைய முகப்புத்தகத்தில் வெளியிட்ட காணொளி ஊடாக  அவதூறு பரப்பப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று (30) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, எதிராளியான பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் கூறிய விடயங்கள் அனைத்தும் உண்மை எனவும், அவற்றை மன்றில் நிரூபிக்க தயாராக இருக்கிறோம் என மன்றில் தெரிவித்தார்.

அந்நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு விசாரணைக்காக திகதியிடப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/314244

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். போதனா பணிப்பாளரின் வழக்கு; அர்ச்சுனா எம்.பி.க்கு கட்டாணை நீடிப்பு!

574047578.jpeg

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் கூறிய விடயங்கள் உண்மையே என அர்ச்சுனாவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி எஸ்.கனகசிங்கம் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதேவேளை, மருத்துவர் சத்தியமூர்த்திக்கு எதிராக அவதூறான கருத்துக்களைப் பரப்புவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டாணையை நீதிமன்றம் நீடித்துள்ளது.

வழக்காளியான மருத்துவர் சத்தியமூர்த்தி, இறுதி யுத்தம் முடிவடைந்த நிலையில் தடுப்புக் காவலில் இருந்தபோது அங்கு அவருக்கு நிகழ்ந்த துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனாவால் சொல்லப்பட்ட கருத்துக்கள், கடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குள் நுழைந்து தவறான வார்த்தைப் பிரயோகங்களால் வாக்குவாதப்பட்டமை உள்ளிட்டவற்றுக்காக 100 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி மருத்துவர் சத்தியமூர்த்தியால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கு நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, எதிராளியான நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் கூறிய விடயங்கள் அனைத்தும் உண்மை எனவும், அவற்றை மன்றில் நிரூபிக்க தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து வழக்கு எதிர்வரும் 15ஆம் திகதிக்குத் தவணையிடப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்திக்கு எதிராக, அவதூறான கருத்துக்கள் தெரிவிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டாணையும் நீடிக்கப்பட்டுள்ளது. வழக்காளியான மருத்துவர் சத்தியமூர்த்தியின் சார்பில், கலாநிதி குருபரன் வழக்கில் முன்னிலையானார் என்பது குறிப்பிடத்தக்கது. (ச)
 

 

https://newuthayan.com/article/யாழ்._போதனா_பணிப்பாளரின்_வழக்கு;_அர்ச்சுனா_எம்.பி.க்கு_கட்டாணை_நீடிப்பு!

  • கருத்துக்கள உறவுகள்

சத்யமூர்த்தி ஆரம்பித்து வைத்துள்ளார். இன்னும்  பலர் இவரை தொடர்ந்து அர்ச்சுனாவுக்கு எதிராக வழக்கு தொடர வாய்ப்புள்ளது. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.