Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பரம்பரை பரம்பரையாக நாங்கள் மலையகத்துக்கு ஏதும் செய்யவில்லை என்று குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது - ஜீவன் தொண்டமான்

19 Dec, 2024 | 11:45 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பெருந்தோட்ட மக்கள் இலங்கை பிரஜைகளே தவிர பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரஜைகள் அல்ல, அரசாங்கத்தின் சலுகைகளை யாருக்கு வழங்க வேண்டும் என்று பெருந்தோட்ட நிறுவனங்கள் தீர்மானிக்க முடியாது. ஆகவே இவ்விடயம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். பரம்பரை பரம்பரையாக நாங்கள் மலையகத்துக்கு ஏதும் செய்யவில்லை என்று குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது. எவரையும் விமர்சித்து நான் அரசியல் செய்யவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய விஜயத்தை மேற்கொண்டமைக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். 2023 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு அரசமுறை விஜயத்தை மேற்கொண்டிருந்த போது நானும் இந்தியாவுக்கு சென்றிருந்தேன்.

அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் மலையகத்துக்கான இந்திய வீட்டுத்திட்டம் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன்.

இந்திய வீட்டுத்திட்டத்தின் ஊடாக மலையகத்துக்கு 14 ஆயிரம் வீடுகள் கிடைக்கப்பெற்றன. இந்த திட்டம் தொடர்ந்து இழுபறி நிலையில் இருப்பதற்கு அரசாங்கங்களை மாத்திரம் குறை கூற முடியாது. 1948 ஆம் ஆண்டு முதல் இன்று வரை உரிமைகளுக்காகவே நாங்கள் போராடுகிறோம். ஒரே நாளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. இதனை அரசாங்கமும் தற்போது விளங்கிக் கொண்டிருக்கும் என்று கருதுகிறேன்.

 மலையக பகுதியில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகள் மீது மாத்திரமே குறை கூறப்படுகிறது. முதலில் உண்மையான குறைகளை கண்டுக் கொள்ள வேண்டும்.

பெருந்தோட்டங்களில் தோட்ட நிர்வாகங்களே ஆதிக்கம் கொண்டுள்ளன. ஒரு தோட்டத்தில் 100 குடும்பங்கள் வாழ்வார்களாயின் அவர்களின் 10 குடும்பங்கள் மாத்திரமே தோட்டங்களில் தொழில் புரிகிறார்கள்.

அரச சலுகைகள் வழங்கப்படும் போது தோட்ட நிர்வாகங்களே அவற்றை யாருக்கு வழங்க வேண்டும் அதாவது தோட்டத்தில் தொழில் செய்பவர்களுக்கு வழங்க வேண்டுமா, இல்லையா என்பதை தீர்மானிக்கின்றன. அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் பெருந்தோட்ட மக்கள் அனைவரும் உள்ளடங்குகிறார்கள் என்று ஆளும் தரப்பினர் குறிப்பிடுவதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.

பெருந்தோட்ட பகுதிகளில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை அமுல்படுத்தும் போது பொதுவான கொள்கையை செயற்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம். பெருந்தோட்டங்களில் தொழில் செய்பவர்களைப் போல், தொழில் செய்யாதவர்களுக்கும் அஸ்வெசும திட்டம் மற்றும் தற்போது பாடசாலை மாணவர்களுக்கு வழங்க தீர்மானித்துள்ள 6000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

பெருந்தோட்ட மக்கள் இலங்கை பிரஜைகளே தவிர பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரஜைகள் அல்ல, அரசாங்கத்தின் சலுகைகளை யாருக்கு வழங்க வேண்டும் என்று பெருந் தோட்ட நிறுவனங்கள் தீர்மானிக்க முடியாது. ஆகவே இவ்விடயம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

 எவரையும் குறை கூறி, விமர்சித்து நான் அரசியல் செய்யவில்லை. நாங்கள் பரம்பரை பரம்பரையாக மலையகத்துக்கு ஏதும் செய்யவில்லை என்று குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது. சிறந்த மாற்றத்துக்காகவே மக்கள் புதியவர்களை தெரிவு செய்துள்ளார்கள். ஆகவே மக்களின் ஆணைக்கமைய செயற்படுங்கள். எமது மக்களின் முன்னேற்றத்துக்காக ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றார்.

https://www.virakesari.lk/article/201627

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதெப்படி சொல்ல முடியும் அவர்களின் சந்தாப்பணத்தில் தானே எமது வாழ்க்கை ஓடுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, கிருபன் said:

நாங்கள் பரம்பரை பரம்பரையாக மலையகத்துக்கு ஏதும் செய்யவில்லை என்று குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.

எல்லோரும் மக்களுக்கு சேவை செய்கிறார்கள் ஆனால் மக்கள்தான் முன்னேற மறுக்கிறார்கள்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவர்களைப் போலவே தமிழரசு கட்சியும்…
இரண்டு முறை எதிர்க் கட்சி தலைவர்களாக இருந்து,  
பங்களாவில் வசித்து மேலே போய் சேர்ந்து விட்டார்கள். 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, satan said:

எல்லோரும் மக்களுக்கு சேவை செய்கிறார்கள் ஆனால் மக்கள்தான் முன்னேற மறுக்கிறார்கள்.

இதை நீங்கள் sarcastic ஆக  சொன்னீர்களோ தெரியவில்லை. ஆனால் சொல்லிய விஷயத்தில் உள்ள உண்மையை மறுக்க முடியாது.

மக்கள் தாமாக திருந்த முயல வேண்டும், எல்லாவற்றுக்கும் அரசியல்வாதிகளை குற்றம் சொல்லிக்கொண்டு இருப்பது என்பது இயலாமை. 

புத்திகூர்மையும் பிறந்த சூழலும், நடைமுறை அரசியலும் ஓரளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் எனினும் தனி மனித ஒழுக்கம், கடின உழைப்பு, சரியான தீர்மானங்களை சரியான நேரங்களில் எடுக்கும் திறமை, போதைக்கு( வெற்றிலை பாக்கு, சாராயம், புகையிலை சுருட்டு, ஆபாசம், சினிமா, youtube, Facebook முதலிய சமூக ஊடகங்கள் ) விலகி இருத்தல் ஆகியவற்றை கைக் கொண்டால் எல்லோரும் அடுத்தடுத்த படி நிலைகளை அடைய முடியும். 

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பகிடி said:

இதை நீங்கள் sarcastic ஆக  சொன்னீர்களோ தெரியவில்லை. ஆனால் சொல்லிய விஷயத்தில் உள்ள உண்மையை மறுக்க முடியாது.

மக்கள் தாமாக திருந்த முயல வேண்டும், எல்லாவற்றுக்கும் அரசியல்வாதிகளை குற்றம் சொல்லிக்கொண்டு இருப்பது என்பது இயலாமை. 

புத்திகூர்மையும் பிறந்த சூழலும், நடைமுறை அரசியலும் ஓரளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் எனினும் தனி மனித ஒழுக்கம், கடின உழைப்பு, சரியான தீர்மானங்களை சரியான நேரங்களில் எடுக்கும் திறமை, போதைக்கு( வெற்றிலை பாக்கு, சாராயம், புகையிலை சுருட்டு, ஆபாசம், சினிமா, youtube, Facebook முதலிய சமூக ஊடகங்கள் ) விலகி இருத்தல் ஆகியவற்றை கைக் கொண்டால் எல்லோரும் அடுத்தடுத்த படி நிலைகளை அடைய முடியும். 

 

100% உங்கள் கருத்தை ஏற்று கொள்ளுகின்றேன், அவர்களின் புறநிலை சூழலை மாற்ற யாராவது உதவ வேண்டும். அங்கு தான் நல்லதொரு தன்னலமற்ற அரசியல் தலைவன் தேவை. நாங்கள் ஒரு தொண்டர் நிறுவனத்தின் ஊடாக ஒருசில பாலர்பாடசாலைகளுக்கு உதவுகின்றோம், ஆனால் அவர்களின் தேவை கடலளவு. 

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.