Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பிரித்தானியத் தொழில் அமைச்சர் பங்களாதேஷில் ஊழல் மோசடி!

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%21

பிரித்தானியத் தொழில் அமைச்சர் துலிப் சித்திக் (Tulip Siddiq) பங்களாதேஷில் ஊழல் மோசடிகளை மேற்கொண்டதாகக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார். 

பங்களாதேஷில் முன்னெடுக்கப்பட்ட உட்கட்டமைப்பு திட்டங்கள் ஊடாக அவரது குடும்பத்தினர் 3.9 பில்லியன் பவுண்ட்கள் வரை மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

பிரித்தானிய திறைசேரியின் பொருளாதார செயலாளராக நாட்டின் நிதிச் சந்தைகளில் ஊழலைக் கையாள்வதற்கான பொறுப்பை வகித்தபோது அவர், 

2013ஆம் ஆண்டு ரஷ்யாவுடனான ஒப்பந்தம் ஊடாக பங்களாதேஷின் அணுமின் நிலையமொன்றுக்கான செலவினை அதிகரிக்கப்படுத்தியதாக துலிப் சித்திக் மீது குற்றம் சாட்டப்படுகிறது. 

பங்களாதேஷின் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட துலிப் சித்திக்கின் உறவினரான ஷேக் ஹசீனா மீது பங்களாதேஷின் ஊழல் தடுப்பு ஆணைக்குழு நடத்திய விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. 

இதனிடையே, குறித்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் அரசியல் உள்நோக்கம் மற்றும் ஷேக் ஹசீனாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ளதாகப் பிரித்தானிய அமைச்சர் துலிப் சித்திக் தரப்பினர் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், பிரித்தானியத் தொழில் அமைச்சர் துலிப் சித்திக் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

https://www.hirunews.lk/tamil/391299/பிரித்தானியத்-தொழில்-அமைச்சர்-பங்களாதேஷில்-ஊழல்-மோசடி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மதுரைக்கு வந்த சோதனை,.. .? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
18 hours ago, கிருபன் said:

பிரித்தானிய திறைசேரியின் பொருளாதார செயலாளராக நாட்டின் நிதிச் சந்தைகளில் ஊழலைக் கையாள்வதற்கான பொறுப்பை வகித்தபோது அவர், 

தவறான செய்தி. 

சித்திக் ஹாம்ஸ்டெட் தொகுதி லேபர் எம்பி.  2010 இல் ஆட்சியை இழந்த லேபர் மீள 2024 இல்தான் ஆட்சிக்கு வந்தது.

அதன் பின்தான் சித்திக் திறைசேரியில் ஜூனியர் மினிஸ்டர் ஆகினார்.

ஆகவே 2013 இல் அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு ஊழல் செய்திருக்க முடியாது.

——

ஹசீனாவும், சித்திக்கின் தாயும் சகோதரிகள். ஹசீனானாவின் பினாமியின் விலைமிகு இலண்டன் வீட்டில் சித்திகின் தாய் வாடகை இன்றி வாழ்ந்தார், மற்றும் ஹசினாவுக்காக புட்டினை போய் சந்தித்து ஹசீனா-புட்டின் டீல்களுக்கு சித்திக்கின் தாய் ஏஜெண்டாக இருந்தார் என கதை சிலகாலமாகவே அடிபடுகிறது.

சித்திக் பலகாலம் எம்பி எனவே எம்பியாக இருந்த போது ஏதும் தவறுகள் நடந்திருப்பினும் பதவி இறக்காமல் விடமாட்டார்கள்.

ஆனால் தாயார் செய்ததவறுக்கு அவரை தண்டிக்க முடியாது. 

Edited by goshan_che


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.