Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

20 DEC, 2024 | 10:08 AM

image
 

உக்ரேன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.

நேட்டோ அமைப்பில் இணைய முயன்ற உக்ரேன் மீது ரஷ்யா 2022 ஆம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரேனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் வழங்கி, பொருளாதார உதவிகளை வழங்குகின்றன. அதேபோல் ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடுகளான சீனா உள்ளிட்டவை ஆதரவாக செயல்படுகின்றன.

தற்போது உக்ரேனுக்குள் நுழைந்து ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேபோல் உக்ரேனும், ரஷ்ய படைகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றன. இந்த சூழலில் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட பலநாடுகள் முயன்றன. ஆனால் ரஷ்ய - உக்ரேன் இடையேயான போர் இன்று வரை முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே தான் சமீபத்தில் இருநாடுகள் இடையேயான மோதல் சற்று குறைந்திருந்தநிலையில், கடந்த ஒரு மாதமாக மீண்டும் மோதல் வலு பெற்றுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா, பிரித்தானியா தயாரிப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரேன், ரஷ்யா மீது தாக்குதல் நடத்தியது தான் காரணம். இதனால் கோபமான ரஷ்யா, உக்ரேன் மீதும் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இதனால் மோதல் மீண்டும் தீவிரமானது. இதற்கிடையே தான் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்ற டொனால்ட்  ட்ரம்ப் போரை நிறுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டி வருகிறார். 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போதே, தான் அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்திருந்தால் போர் வந்து இருக்காது. இருப்பினும் பதவியேற்ற அடுத்த 24 மணிநேரத்தில் போரை என்னால் நிறுத்த முடியும் என்று அவர் கூறியிருந்தார். மேலும் தேர்தலில் வென்ற பிறகு உக்ரேன், ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள தயார் என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

https://www.virakesari.lk/article/201708

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சமரசம்,...? 

இது சரியான சொல்லாடல் அல்ல. 

தான் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் ஆதரவாக இருந்து வருவதாக ரஸ்யா தெரிவித்துள்ளது.  ஆனால் சமரசம் செய்ய ஆயத்தமாக உள்ளதாக கூறியதாகச் செய்திகள் ஏதும் இல்லை என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செத்தகிளியால் எழும்பி நடக்கமுடியுமா? சமரசம் செய்துதானே ஆகவேண்டும். எங்கண்ட ட்ரம்ப் வந்து ஓடர்போடப் போறார் எண்டு செத்தகிளி மீசையில் மண் ஒட்டவில்லை கதை விடுது!😂

 அது சரி கிளிக்கே மீசையில்லை அப்ப எப்பிடி செத்தகிளிக்கு மீசைவரும் எண்டு நீங்கள் கேள்வி கேட்டால் நான் அதற்குப் பொறுப்பல்ல!



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சஜித்தின் இந்தக் கூற்று ஏற்கனவே பார் அநுமதிப் பத்திரத்துக்கு சிபாரிசு செய்த சமூகவிரோதிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தமாதிரி இருக்கின்றது. போரினால் பாதிக்கப்பட்ட பிந்தங்கிய மாவட்டமாகிய கிளிநொச்சியில் 16 பார்களுக்கு சமுகவிரோதிகள் சிலர் சிபாரிசு செய்துள்ளமை சகலதரப்பாலும் கண்டிக்கப்படவேண்டியது!
    • சீமான் செய்யும் அரசியல் அவருக்கானது. ஈழத்தமிழர்களுக்கு அதனால் பலன் ஏதும் இல்லையென்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. சர்வ வல்லமை பொருந்திய எம் ஜி ஆரே முதலமைச்சராக இருந்த காலத்தில் செய்ய முடியாததை இதுவரை தேர்தலில் ஒரு ஆசனத்தைத்தன்னும் வெல்லக் கஸ்ட்டப்படும் சீமான் செய்வார் என்று எதனை வைத்து எதிர்பார்க்க முடியும், ஆகவே அவரைக் கடந்து சென்று விடலாம்.  ஆனால், சீமானை எதிர்க்கிறோம் என்கிற கொள்கையில் இருந்துகொண்டு கருனாநிதியை ஆதரிக்கின்ற சிலர் அவர் ஈழத்தமிழர் தொடர்பாக நடந்துகொண்ட முறையினைச் சரியென்று ஏற்றுக்கொள்கிறார்களா?எம் ஜி ஆரிற்குப் போட்டியாகவே அரசியல் செய்துவந்த கருனாநிதி புலிகள் உட்பட ஏனைய போராளிகளை ஆதரித்ததோ அல்லது அவ்வாறு நடந்துகொண்டதோ தனது அரசியல் ஆதாயத்திற்காகவே என்பதை ஏற்றுக்கொள்கிறார்களா? சகோதர யுத்தம் சகோதர யுத்தம் என்று தொடர்ச்சியாக பேசிவந்த கருனாநிதி இறுதிப் போர்க்காலத்தில் நடந்துகொண்ட முறையினைச் சரியென்று ஏற்றுக்கொள்கிறார்களா? தமிழ்நாட்டில் மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டங்களை நசுக்கியமை, பாடசாலைகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை கொடுத்து மாணவர் விடுதிகளை மூடியமை, பாசாங்கு உண்ணாவிரதம் இருந்து தமிழர்களை ஏமாற்றியமை, இறுதி நாட்களில் தில்லியில் கூடாரமடித்து தனது குடும்ப உறவுகளுக்கு பாராளுமன்ற பதவிகளை உறுதிப்படுத்திக்கொண்டமை, இனக்கொலை அகோரமாக நடந்துகொண்டிருக்கும்போது யுத்தநிறுத்தம் வந்துவிட்டதாக பொய்கூறி பின்னர் மழை விட்டாலும் தூவானம் விடாது பெய்வதில்லையா அதுபோலத்தான் என்று சப்பைக் கட்டுக் கட்டியமை.................என்று பல விடயங்களைச் செய்திருந்தாரே? அவற்றைச் சரியென்று இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?  2015 ஆம் ஆண்டில் அன்றைய வெளிவிவகார அமைச்சர் சிவ்சங்கர் மேனன் தெரிவுகள் எனும் புத்தகத்தை எழுதினார். அதில் இறுதிப்போரை நடத்த முன்னர் தமிழ்நாட்டு அரசியல்த் தலைவர்களைச் சந்தித்து போரிற்கெதிரான அவர்களின் நிலைப்பாட்டை நாடிபிடித்தறிந்து, அதனைத் தணிக்கும் காரியங்களில் ஈடுபடுமாறு தன்னையும், பிரணாப் முகர்ஜியையும் சோனியா தமிழ்நாட்டிற்கு அடிக்கடி அனுப்பி வந்ததாகக் கூறியிருந்தார். அந்தப் பயணங்களின்போது தானே அதிசயித்துப் போகும் வண்ணம் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்த் தலைவர்கள் புலிகளை அழிக்கும் போரிற்கெதிராக தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்பெதனையும் கொண்டிருக்கவில்லை என்று அவர் கூறுகிறார். வெளியில் மேடைகளில் போரை எதிர்ப்பதாகக் கூறும் அதே தலைவர்கள் தனிப்பட்ட ரீதியில் புலிகள் அழிக்கப்படுவதை விரும்பினார்கள் என்று கூறுகிறார். கருனாநிதி ஒரு படி மேலே சென்று தனது தனிப்பட்ட பாதுகாப்பிற்குப் புலிகளால் ஆபத்து வரும் என்று தன்னிடம் கூறியதாகவும் அவர் கூறுகிறார். இந்த அரசியல்வாதிகளில் ஜெயலலிதா கூட விதிவிலக்கல்ல.  சீமானை எதிருங்கள், அதில் தவறில்லை. அதற்காக கருனாநிதியை தியாகியாகக் காட்டுவதை நிறுத்துங்கள். 
    • இந்த வரிசையில்  அமெரிக்காவிலிருந்தும் எலான் மாஸ்கையும் ராமசாமியையும் சேர்க்க வேண்டுகிறேன். வாலி சம்பந்தமில்லாத அனுராவை கேட்பதைவிட  ரணிலிடமே நேரடியாக கேட்கலாமே? சுமந்திரனுக்கும் ரணிலுக்கும் தான் நல்ல உறவு உள்ளதே.
    • இவ்வாறான சந்தேகம் மக்கள் மத்தியில் வலுவாக இருக்கின்றது. பின் தங்கிய மாவட்டமாகிய கிளிநெச்சியில் சில சமூகவிரோதிகளின் சிபாரிசின் அடிப்படையில் 16 பார் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சமூகவிரோதிகள் மக்களுக்கு அடையாளம் காட்டப்படவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இச் சமுகவிரோதிகளை அநுர அரசு காப்பாற்ற முனைந்தால் தமிழ் மக்களின் ஆதரவை இழக்கவேண்டியிருக்கும். தம்மைப் பாதுகாக்கும் நோக்கில் ஒருசில அரசியல்வாதிகள் அநுர அதிபரான மறுநாளே விழுந்தடித்துக்கொண்டு ஓடிப்போய் காலில்  விழாக்குறையகச் சந்தித்தது இங்கு குறிப்பிடப்படவேண்டியது அவசியமாகின்றது!
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.