Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

விவேக் இறப்புக்கு இப்போது வரை காரணம் தெரியவில்லை

தனது கருத்துள்ள நகைச்சுவைகளால் ரசிகர்களை கட்டிப் போட்டவர் சின்ன கலைவாணர் விவேக். அவர் இறந்துவிட்டாலும், அப்படி ஒரு நிகழ்வு நடந்தது போலவே தெரியவில்லை என்றே கூறலாம்.

இப்போது வரை அவரது நகைச்சுவை பல இடங்களில் பேசுவதுண்டு, நியாபகப்படுத்துவதுண்டு. இப்படி ஒரு சூழலில் அவர் உயிரிழந்தது சினிமாவுக்கு பேரிழப்பாக உள்ளது.

இந்த நிலையில் விவேக் மனைவி அளித்த பேட்டியில், விவேக் மரணம் இன்று வரை என்ன காரணம் என்பது எனக்கு தெரியவில்லை.

அவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். உடலுக்கு தேவையானதை பார்த்து செய்வார். கொரோனா சமயத்தில் அனைவரும் தடுப்பூசி போட வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்.

விவேக்கும் தடுப்பூசி போடலாமா வேண்டாமா என பலரிடம் ஆலேசானை நடத்தினார். இதனிடையே வெளிநாட்டில் சூட்டிங் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது, ஊடகத்தினர் முன்னிலையில் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

ஆனால் மறுநாள் அனைவருக்குமே பேரிடியாக அந்த செய்தி வந்தது. கொரோனா காலக்கட்டத்தில் கூட நடைபயிற்சியை மேற்கொண்டார். வீட்டில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவர் ஏன் இறந்தார் என்பது இன்று வரை காரணம் எனக்கு தெரியவில்லை.

ஆனால் கொரோனா தடுப்பூசியை நான் குறை சொல்லவில்லை. அவர் எல்லோர் முன்பு, தடுப்பூசியை போட்டுக் கொண்டது அவர் போட்டால் எல்லாரும் போடுவார் என்ற விழிப்புணர்வுதான். தடுப்பூசி போட்டவர்கள் யாரும் இறக்கவில்லை, அதனால் விவேக் இறப்புக்கு தடுப்பூசி காரணம் என கூறமுடியாது என தெரிவித்தார்.

https://tamil.adaderana.lk/news.php?nid=197446

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, ஏராளன் said:

விவேக் மனைவி அளித்த பேட்டியில், விவேக் மரணம் இன்று வரை என்ன காரணம் என்பது எனக்கு தெரியவில்லை.

நான் யாழ்களத்தில் படித்த இந்த செய்தியை இந்தியாவை பற்றி அறிவு கொண்ட  எம்மவர்களிடம் தெரிவித்த போது இல்லையே உயர் இரத்த அழுத்தம் வந்து மாரடைப்பினால் அவர் இறந்தது ஏற்கெனவே தெரிந்தது என்றார்கள்.
இப்படியான இறப்புக்கள் வெளிநாடுகளிலும் நிறைய நடக்கின்றன.
 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.