Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனவரி நடுப் பகுதியில் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!

ஜனவரி நடுப் பகுதியில் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது அண்மைய இந்திய விஜயத்தைத் தொடர்ந்து, ஜனவரி நடுப்பகுதியில் சீனாவுக்கான உத்தியோகபூர்வ சுற்றுப் பயணத் திட்டத்தை அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த வாரம் சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனைக் சம்மேளன (CPPCC) தேசியக் குழுவின் உப தலைவர் கின் பொயோங்கை (Qin Boyong) சந்தித்து, உயரிய முன்னேற்றத்திற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய சில நாட்களுக்குப் பின் சீன விஜயம் தொடர்பான அறிவிப்பு வந்துள்ளது.

கண்டியில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது ஜனாதிபதி, எதிர்வரும் ஜனவரி மாதம் நடுப் பகுதியில் தான் சீனாவுக்கு செல்லவுள்ளதாக கூறினார்.

கடந்த வாரம் அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயம், செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அவர் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுப் பயணமாக அமைந்தது.

இந்திய விஜயத்தின் பின்னர் நாடு திரும்பிய ஜனாதிபதியை சீனவின் மூத்த அதிகாரி சந்தித்து உரையாற்றியதுடன், அவரது பீஜிங் விஜயத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக உறுதிப்படுத்தினார்.

சீனா இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவை தெரிவித்து வரும் நிலையில், சர்வதேச கடனை மறுசீரமைக்க சீனா அளித்த ஆதரவுக்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்திருந்தார்.

https://athavannews.com/2024/1413398

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஜனவரி நடுப் பகுதியில் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!

இந்தியாவுக்கு போட்டியாக சீனர்கள் அனுரவிற்கு ஆகாயத்தில் இருந்து பூமழை தூவுவார்கள்.😂

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

இந்தியாவுக்கு போட்டியாக சீனர்கள் அனுரவிற்கு ஆகாயத்தில் இருந்து பூமழை தூவுவார்கள்.😂

பெப்ருவரி நடுபகுதியில்தான் சீனா போற பிளான் இருந்தது சனாதிபதிக்கு...இந்தியா போட்டுவந்த கையோடை ..சந்தித சீனக்குழு நல்ல வெருட்டு வெருட்டியிருக்கினம் போலை....அதுதான் அய்யா அடித்துப் பிடித்து ஓடுகிறார்..

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

14 ஆம் திகதி ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம்

Published By: DIGITAL DESK 3   07 JAN, 2025 | 03:46 PM

image
 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 14 ஆம் திகதி சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதனை இன்று செவ்வாய்க்கிழமை (07) அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/203230

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனா செல்லவுள்ள ஜனாதிபதி

சீனா செல்லவுள்ள ஜனாதிபதி.

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சீன மக்கள் குடியரசிற்கு, எதிர்வரும் 14 முதல் 17 வரையிலான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி ஷீ ஜின்பிங்குடன் பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதுடன், சீனப் பிரதமர் லீ சியாங் மற்றும் சீன தேசிய மக்கள் காங்கிரஸின் தற்போதைய நிலைக்குழுவின் தலைவர் ஜாஓ லெர்ஜி ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதியின், சீன விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1416054

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

சீனா செல்லவுள்ள ஜனாதிபதி.

தகப்பன் நாட்டுக்கு செல்கிறார் எனவும் எடுத்துக்கொள்ளலாம் 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

தகப்பன் நாட்டுக்கு செல்கிறார் எனவும் எடுத்துக்கொள்ளலாம் 😂

அப்ப.... முதல் போன இந்தியா, தாய் நாடா... 🤣 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

தகப்பன் நாட்டுக்கு செல்கிறார் எனவும் எடுத்துக்கொள்ளலாம் 😂

 

May be a doodle of tree and text

😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, தமிழ் சிறி said:

அப்ப.... முதல் போன இந்தியா, தாய் நாடா... 🤣 

வீணாய்ப்போன நாடு 😂

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி அநுரவுக்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பின்கிற்கும் இடையில் நாளை சந்திப்பு

Published By: VISHNU   13 JAN, 2025 | 03:54 AM

image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், சீன ஜனாதிபதி ஷி ஜின்பின்கிற்கும் இடையிலான இருதரப்பு சந்திப்பு 14ஆம் திகதி செய்வாய்க்கிழமை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விஜயத்தின் போது இருநாடுகளுக்குமிடையில் முதலீடு, மின்துறை, மீன்பிடி, மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பிரதான துறைகளை உள்ளடக்கிய வகையில் 7 ஒப்பந்தங்கள் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளன.

இலங்கைக்கும் - சீனாவுக்கும்; இடையிலான வரலாற்று சிறப்புமிக்க நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயம் அமையும். இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு சீனா என்றும் தயாராகவே உள்ளது. நேர்மை, பரஸ்பர ஆதரவு மற்றும் நிலையான நட்புறவை உள்ளடக்கிய இலங்கையின் மூலோபாய கூட்டுறவு பங்பாளித்துவம் ஆகியவற்றால் இரு நாட்டு மக்களுக்கும் அதிக பயன் கிடைக்கும் என சீன வெளியுறவுத் துறை அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாகுன் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பு ஒப்பந்தங்களுக்கு மேலதிகமாக சர்வதேச நாணய நிதியததின் கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மீட்சிக்கு சீனாவின் ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஷி ஜின்பின்கின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான உத்தியோகபூர்வ நான்கு நாள் அரசமுறை விஜயத்தை நாளை செவ்வாய்கிழமை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீன ஜனாதிபதியுடன் பரஸ்பர பல்துறை அபிவிருத்தி தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.மேலும் சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுவின் தலைவர் சாவோ லெஜி ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஈடுபடவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் 7 இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. மீன்பிடித்துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், சமூக நலன் சார்ந்த அம்சங்களை உள்ளடக்கும் வகையிலான திட்டங்கள், மீனவர்களுக்கான வீட்டுத் திட்டம், விவசாயத்துறையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தல் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளது. அத்துடன் சீன அரசின் ஒத்துழைப்புடன் மின்சக்தி திட்டங்களை அறிமுகப்படுத்துவது இந்த புரிந்துணர்வு திட்டங்களில் ஒன்றாக காணப்படுகிறது.

சீன துறைமுக பொறியியல் நிறுவனம், சீனா மேர்ஷன்ட் குழுமம், சினொபெக், உவாவி, பி.வை.டி உள்ளிட்ட பிரதான சீன நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பங்குபெறும் முதலீட்டாளர் மன்றத்தில் ஜனாதிபதி கலந்துக் கொள்ளவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து டான்பெங் எலக்ட்ரிக் கோர்பரேஷன், ஜான் கி கிராமம், தியாங்கி லித்தியம் கோர்பரேஷன் மற்றும் செங்டு தேசிய வேளாண்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் ஆகியவற்றை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பார்வையிடவுள்ளார். அத்துடன் சிச்சுவான் மாகாணக் குழுவின் சீனக் கம்யூனிசக் கட்சியின் செயலாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயம் குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாகுன் கடந்த வெள்ளிக்கிழமை (10) செய்தியாளர் சந்திப்பில் பல விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

 சீன வெளியுறவுத் துறை அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாகுன் ' இலங்கைக்கும் - சீனாவுக்குமு; இடையிலான வரலாற்று சிறப்புமிக்க நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயம் அமையும். சீனாவின் ஒரு பாதை ஒரு மண்டலம் செயற்திட்டம், சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பல்துறை பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து இந்த விஜயத்தில் விரிவாக ஆராயப்படும்.

இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு சீனா என்றும் தயாராகவே உள்ளது. நேர்மை, பரஸ்பர ஆதரவு மற்றும் நிலையான நட்புறவை உள்ளடக்கிய இலங்கையின் மூலோபாய கூட்டுறவு பங்பாளித்துவம் ஆகியவற்றால் இரு நாட்டு மக்களுக்கும் அதிக பயன் கிடைக்கும்' என செய்தியாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சீனாவும் இலங்கையும் நீண்டகால நண்பர்களாகவும், நெருக்கமான அயல்நாடாகவும் உள்ளது.1957 ஆம் ஆண்டில் இருந்து இரு நாடுகளும் இராஜதந்திர மட்டத்தில் தொடர்புக் கொண்டுள்ளது.இருதரப்பு உறவுகள் மாற்றமடையும் சர்வதேச நிலைவரங்களுக்கு மத்தியில் நிலையானதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/203681

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனாவிற்கு  ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயம்!

சீனாவிற்கு ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயம்!

சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நாட்டிலிருந்து பயணமாகிறார்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின்(Xi Jinping) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (14) முதல் 17 ஆம் திகதி வரை சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லி கியாங்(Li Qiang) மற்றும் இராஜதந்திரிகளை சந்திக்க உள்ளார்.

அத்தோடு இந்த விஜயத்தின் போது, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட துறைசார் பல கள விஜயங்களிலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளதோடு பல உயர் மட்ட வர்த்தகக் கூட்டங்களிலும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்த விஜயம் மிக முக்கியமான முன்னெடுப்பாகக் கருதப்படுகிறதுடன் இதன் ஊடாக இருதரப்பு பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1416196

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

 

May be pop art of chow mein and text

 

May be a doodle of elephant and text

  • கருத்துக்கள உறவுகள்

அரசுத் தலைவர் என்றால் 4 இடங்களுக்கு போய் வரத்தான் செய்யவார். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனா சென்றடைந்தார் ஜனாதிபதி!

சீனா சென்றடைந்தார் ஜனாதிபதி!

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்

அங்கு, சீன பிரதி வெளியுறவு அமைச்சர் சென் சியாடோங் வரவேற்றதோடு சீன இராணுவ மரியாதையுடன் ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டிருந்தது

இதில் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச். எஸ். கே. ஜே. பண்டார ஆகியோரும் இந்த விஜயத்தில் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1416270

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.