Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நைஜீரியால் கூட்ட நெரிசலில் சிக்கி 67 பேர் உயிரிழப்பு!

நைஜீரியால் கூட்ட நெரிசலில் சிக்கி 67 பேர் உயிரிழப்பு!

நைஜீரியால் நத்தார் பண்டிகையை முன்னிட்டு இலவசமாக வழங்கப்பட்ட உணவுகளை பெறுவதற்காக  சென்ற  67 பேர்  கூட்ட நெரிசலில் சிக்குண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்நாட்டில்   கடந்த  வாரம் நத்தார் பண்டிகையை முன்னிட்டு  பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த உணப்பொருட்களை பெற  ஏராளமான மக்கள் அப் பகுதிகளுக்கு படையெடுத்ததால் அங்கு  கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும்  அதில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஓயோ மாநிலத்தில் கடந்த புதன் கிழமை  ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி   35 குழந்தைகள் வரை உயிரிழந்துள்ளனர் எனவும்,  தென்கிழக்கு அனம்ப்ரா மாநிலத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி  22 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும்,  அந்நாட்டின்  தலைநகர் அபுஜாவில்  ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவங்கள் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பான  தீவிர விசாரணைகளை  முன்னெடுக்குமாறு  அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அந்நாட்டு ஜனாதிபதி  அனைத்து கொண்டாட்டங்களையும்  இரத்து செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு நாட்டில் நிலவும் அதிகப்படியான வறுமை, விலை அதிகரிப்பு  மற்றும் அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளே காரணம்  எதிர்க் கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1413670



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவர்கள் அனைவரும் 35.000 தொடக்கம் 40.000 வரையான ஊதியத்துடன் வேலையில் இணையலாம் என்ற செய்தி வைத்தியர் அர்ச்சனாவின் முகப் புத்தக பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.
    • சிறியர்,  ஏலுமென்றால் நிரூபியுங்கள் என்று சவால் விட்டுள்ளார்.  நான் ஒருவருக்கும் சிபாரிசு செய்யவில்லை. நான்  ஒரு Bar license ம் எடுத்துக் கொடுக்கவில்லை என்று சொல்லவில்லையே,.........அதைக் கவனித்தீர்களா?  தனது தொகுதியில் 16 license கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் அவர்தான் எல்லோருக்கும் முன்னுக்கு நின்று சிபாரிசு செய்தவர்களை வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.  அதை விடுத்து சவால் விடுகிறார்.  உண்மை வெளிவரும் போது  நான் சட்டத்திற்குப் புறம்பாக எதுவும் செய்யவில்லையே என்பார் .  விக்கியருக்கு உள்ள வெகுளித்தனமும் தனது பிழையை ஏற்றுக்கொள்ளக் கூடிய பெருந்தன்மையும்  சிறிதரனுக்கு இல்லாமல் போனது துரதிர்ஷ்டம்.  இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், யாழ் களத்தில் தங்களை உண்மை விளம்பிகள் என்கிற ரீதியில் கம்பு சுற்றிய பலரின் உண்மை நிறம் வெளித் தெரிய ஆரம்பித்திருக்கிறது.  சமூகத்திற்கு தீங்கானது என்று தெரிந்துகொண்டே  சிறீதரன் MP  யில்  தவறை மூடி மறைக்க முயற்சிப்பதன் ஊடாக  பலரின் சாயம் வடிந்தோடுகிறது.   அப்படிப்பட்டவர்கள் தங்களின்  சாயம் வெளுப்பது கூட அவர்களுக்குப் புரியவில்லை.  எப்போதோ ஒரு நாள் எல்லாமே வெளிவரத்தான் போகிறது. அதற்காகவேனும் தாங்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நன்று.  😏
    • கிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாடும் உறவுகள் அனைவருக்கும் உளம்கனிந்த நத்தார்தின நல்வாழ்த்துகள்.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • தாயக மண்மீட்புப் போரிலே தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவு கூர்ந்து, தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024, 27.11.2024 புதன்கிழமை அன்று Don Orione மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒழுங்கமைப்பின் கீழ் மிகவும் சிறப்பாகவும், உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றல், தமிழீழத் தேசியக்கொடியேற்றல், ஈகச்சுடரேற்றலுடன், வெண்திரையில் மாவீரர் துயிலுமில்லக் காட்சி ஒளிபரப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், முதல் மாவீரரான சங்கர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அனைத்து மக்களாலும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. பலெர்மோ மாநகர சபை ஆளுநருக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினருக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது. தமிழர்களுக்கு இலங்கை அரசால் இழைக்கப்பட்ட அநீதி, துரோகம் என்பதை எடுத்துக் கூறி இவ்வுடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. மேலும் மாவீர்ர் நினைவு சுமந்த எழுச்சி கானங்கள், தமிழீழத் தேசிய மாவீர்ர் நினைவு சுமந்த பேச்சுப்போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்கழுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டு அவர்களின் பேச்சுக்களும் இடம்பெற்றன. அத்துடன், மாணவர்களின் மாவீர்ர் வணக்கப் பாடலுக்கான நடனங்கள், எழுச்சிநடனங்கள் போன்றவற்றுடன் சிறப்ப அதிதியாக வருகை தந்த மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின், மாவீரர் நாள் சிறப்புரை, நன்றியுரைகள் வழங்கப்பட்டதுடன், தேசியக்கொடி இறக்குதல், உறுதிமொழி எடுக்கப்பட்டு, “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடலுடன், மாவீரர்களை நெஞ்சிலே சுமந்த வண்ணம் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024 நிறைவு பெற்றது You Might Also Like https://firetamil.com/?p=5837
    • நத்தார் கொண்டாடும் அனைவருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.