Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மியன்மார் அகதிகள்  இன்று  கேப்பாபுலவு  இடைத்தங்கல் முகாமிற்கு மாற்றம்!

மியன்மார் அகதிகள் இன்று கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு மாற்றம்!

மியன்மாரில் இருந்து வந்து கைது செய்யப்பட்டு விளக்கமறியறில் வைக்கப்பட்ட 12 மியன்மார் அகதிகளும் இன்று விடுதலையாகி கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் நுழைந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு மியன்மார் அகதிகள் 12 பேர் சட்டவிரோத படகு பயணத்திற்கு செயற்பட்டதாக கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த12 பேரும் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கேப்பாபுலவு விமானப் படைத்தளத்திற்கு கடந்த (23.12.2024) மாலை 5 மணியளவில் மியன்மார் அகதிகள் 103 பேர் அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து இன்றையதினம் தடுப்புகாவலில் வைக்கப்பட்ட ஏனைய 12 பேரும் விடுதலையாகி குறித்த முகாமிற்கு தங்கவைக்க அழைத்து வரப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த 19 ஆம் திகதி 115 பயணிகளுடன்
மியன்மார் அகதிகள் படகு கரை ஒதுங்கியிருந்தது. பின்னர் கப்பல் கரைக்கு வர முடியாத நிலையில் கடற்படையினரின் உதவியுடன் திருகோணமலை கடற்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அவர்கள் திருகோணமலை ஐமாலிய முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் தஞ்சம் கோரிய 115 முஸ்லீம் இனத்தினை சேர்ந்த மியன்மார் அகதிகளும்
மிரிஹானை இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பதற்கான இடவசதி இல்லாத காரணத்தினால் இவர்களில் 103 பேர் இரண்டு பேருந்துகளில் மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை தளம் ஒன்றில் தற்காலிகமாக தங்கவைக்க அழைத்து வரப்பட்டுள்ளனர்.

குறித்த படகில் 45 சிறுவர்கள், 24 பெண்கள், 46 ஆண்கள் உள்ளடங்கலாக 115 பேர் பயணித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

https://athavannews.com/2025/1415593

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கப்பார்த்தால் வன்னியிலே ஆளுக்கு அரை ஏக்கர் நிலத்தை கொடுத்து இருத்தி விடுவார்கள் போலக்கிடக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசு இவர்கள் எல்லோரையும் பர்மாவிற்கு திருப்பி அனுப்ப முடிவெடுத்து, பர்மா அரசை தொடர்பு கொண்டது. ஆனால் பர்மா அரசு இவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இது ஒரு 'கடவுள் இருக்கார், குமார்..........' தருணம். இந்தச் சனங்கள் அந்தக் கொடிய அரசிடம் மீண்டும் போனால் அவர்களுக்கு கொடுமையைத் தவிர வேறு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை.

இலங்கையிலிருந்து எல்லா இனங்களையும் சேர்ந்த எத்தனை இலட்சம் மக்கள் அகதிகளாக உலகெங்கும் போய் வாழ்கின்றனர். இலங்கை நாடும் உலகத்திற்கு ஏதாவது திருப்பிக் கொடுக்க வேண்டாமா............. இலங்கை அரசு இந்தச் சனங்களை அகதிகளாக அறிவித்து, அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கவேண்டும்.

சென்னையில் இந்த மக்கள் பலர் அகதிகளாக ஏற்கனவே வாழ்கின்றனர். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, RishiK said:

போற போக்கப்பார்த்தால் வன்னியிலே ஆளுக்கு அரை ஏக்கர் நிலத்தை கொடுத்து இருத்தி விடுவார்கள் போலக்கிடக்குது. 

போகிற போக்கைப்பாத்தால், அப்பிடிப்போலத்தான் கிடக்கு. ஆனால் அந்த நிலம் எங்கிருந்து வரும்? இராணுவம் பிடித்துவைத்திருக்கிற மக்களின் காணியை சொந்தக்காரருக்கு திருப்பி கொடுக்க மறுக்கிறது. இவ்வாறு இருக்கும்போது, இருக்கிற சனத்தை விரட்டிவிட்டு அவர்களின் நிலத்தை கொடுக்குமோ? சொந்த மக்களை கொலைசெய்து இருப்பவரையும் விரட்டி விட்டு, வேறு நாட்டவரை குடியேற்றி விட்டால்; வரலாறு மாறி, இது சிங்களவரின் பூர்வீக நாடாகிவிடும். மக்களை கொன்றழித்துவிட்டு, நாய்களை காக்கும் காருண்ய நாடு இது.     

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, RishiK said:

போற போக்கப்பார்த்தால் வன்னியிலே ஆளுக்கு அரை ஏக்கர் நிலத்தை கொடுத்து இருத்தி விடுவார்கள் போலக்கிடக்குது. 

அகதிகளாய் ஓடிப்போனவன்களுக்கு........ஓடி வந்த அகதிகளை வைச்சே அடிக்கப்போறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, RishiK said:

போற போக்கப்பார்த்தால் வன்னியிலே ஆளுக்கு அரை ஏக்கர் நிலத்தை கொடுத்து இருத்தி விடுவார்கள் போலக்கிடக்குது. 

இதில என்ன சந்தேகம்.... இன்னும் சில அகதிகள் வருவார்கள் இஸ்லாமிய அகதிகள் .. ...

7 minutes ago, குமாரசாமி said:

அகதிகளாய் ஓடிப்போனவன்களுக்கு........ஓடி வந்த அகதிகளை வைச்சே அடிக்கப்போறாங்கள்.

பங்காளதேசில் பல முன்னாள் தீவிரவாதிகளை தற்போதைய அமேரிக்கா ஆதரவு அரசு விடுதலை செய்துள்ளதாம் அவர்கள் இந்தியாவுக்கு எதிராக செயல் படலாம் என இந்திய உளவுத்துறை பயத்தில இருக்கினம்.😅..உந்த அகதிகளில் சிலர் அவையளின்ட(பங்களதேஷ் ) ஆட்களாகவும் இருக்கலாம்...முல்லை தீவில் இவர்கள் இருப்பதற்கு முக்கிய காரணம் என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

இலங்கை அரசு இவர்கள் எல்லோரையும் பர்மாவிற்கு திருப்பி அனுப்ப முடிவெடுத்து, பர்மா அரசை தொடர்பு கொண்டது. ஆனால் பர்மா அரசு இவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இது ஒரு 'கடவுள் இருக்கார், குமார்..........' தருணம். இந்தச் சனங்கள் அந்தக் கொடிய அரசிடம் மீண்டும் போனால் அவர்களுக்கு கொடுமையைத் தவிர வேறு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை.

இலங்கையிலிருந்து எல்லா இனங்களையும் சேர்ந்த எத்தனை இலட்சம் மக்கள் அகதிகளாக உலகெங்கும் போய் வாழ்கின்றனர். இலங்கை நாடும் உலகத்திற்கு ஏதாவது திருப்பிக் கொடுக்க வேண்டாமா............. இலங்கை அரசு இந்தச் சனங்களை அகதிகளாக அறிவித்து, அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கவேண்டும்.

சென்னையில் இந்த மக்கள் பலர் அகதிகளாக ஏற்கனவே வாழ்கின்றனர். 

இந்த மக்கள் இயல்பு வாழ்க்கையினை மீளப்பெறுவதென்பது மிகவும் சவாலான விடயம் (ஏற்கனவே இலங்கை ஒரு பொருளாதார பாதிப்பிற்குள்ளான நாடு), ஆனாலும் உள்ளூர் மக்கள்தான் முதலில் உதவியுள்ளார்கள் என்பது ஒரு ஆறுதலான விடயம் (முல்லை தீவு மீனவ சங்கத்தின் உதவி), அகதி வாழ்கை வாழ்ந்த எம்மால் ஒரு அகதி வாழ்க்கையின் நடைமுறை அனுபவத்தினூடாக அந்த வலிகளை புரிந்தமையால் அதிலிருந்து இந்த மக்களுக்கான உதவிகளை செய்வதனூடக அவர்களை விரைவாக இயல்பு வாழ்க்கைக்கு திருப்ப முடியும், அத்துடன் நில்லாது அரசு அவர்கள் சுய தொழிலில் ஈடுபடுவதற்கும் சொந்த இருப்பிட வசதிகளை உருவாக்கி வாழ்வதற்கு தேவையானவற்றை செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அட கடவுளே! விகாரை காணாதென்று பள்ளிவாசல்களும் சேர்ந்து கோவில்களை தின்னப்போகுது. சிங்களவனுக்கு இடம் கொடுத்ததால் சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாய் அலையிறோம். இதுக்குள்ள இது வேற. ஏன் காத்தான் குடியில் குடி அமர்த்தினால் என்ன இவர்களை? நான் ஒன்றும் பாகுபாடு காட்டவில்லை முன்னெச்சரிக்கை செய்கிறேன். நாளைக்கு இவர்களும் நாட்டுக்கு சொந்தம் கொண்டாடினால், நாம் எங்கே போவது?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, vasee said:

இந்த மக்கள் இயல்பு வாழ்க்கையினை மீளப்பெறுவதென்பது மிகவும் சவாலான விடயம் (ஏற்கனவே இலங்கை ஒரு பொருளாதார பாதிப்பிற்குள்ளான நாடு), ஆனாலும் உள்ளூர் மக்கள்தான் முதலில் உதவியுள்ளார்கள் என்பது ஒரு ஆறுதலான விடயம் (முல்லை தீவு மீனவ சங்கத்தின் உதவி), அகதி வாழ்கை வாழ்ந்த எம்மால் ஒரு அகதி வாழ்க்கையின் நடைமுறை அனுபவத்தினூடாக அந்த வலிகளை புரிந்தமையால் அதிலிருந்து இந்த மக்களுக்கான உதவிகளை செய்வதனூடக அவர்களை விரைவாக இயல்பு வாழ்க்கைக்கு திருப்ப முடியும், அத்துடன் நில்லாது அரசு அவர்கள் சுய தொழிலில் ஈடுபடுவதற்கும் சொந்த இருப்பிட வசதிகளை உருவாக்கி வாழ்வதற்கு தேவையானவற்றை செய்யவேண்டும்.

உணவு, இருப்பிடம் ஆகியவற்றிற்குப் பிறகு அவர்களின் குடிவரவு உரிமை என்னவாக இருக்கும்? பிள்ளைகள் என்ன மொழியில் கல்வி கற்க முடியும்? 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, RishiK said:

உணவு, இருப்பிடம் ஆகியவற்றிற்குப் பிறகு அவர்களின் குடிவரவு உரிமை என்னவாக இருக்கும்? பிள்ளைகள் என்ன மொழியில் கல்வி கற்க முடியும்? 

சட்டியில் இருந்து அடுப்பிற்குள் விழுந்த  நிலையில் இருப்பதாக அவர்கள் இலங்கைக்கு தவறாக வந்ததையிட்டு நினைக்க கூடும், அதனால் முதலில் அவர்களின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுத்து அவர்கள் போக விரும்பும் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி (பங்களாதேசம் அல்லது இந்தியா போக விரும்பகூடும்)அந்தந்த நாடுகள் சம்மதிக்கும் பட்சத்தில் அவர்களை, அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும், சிலர் தற்காலிகமாக வேன்டுமென்றால் இலங்கையில் தங்க விரும்பகூடும் ஆனால் அவர்கள் குடியுரிமையினை விரும்பமாட்டார்கள் என கருதுகிறேன், தற்காலிக வதிவிடயுரிமையினை விரும்புவர்களை அவர்களுக்குத்தேவையான உதவிகளை செய்வது அரசிற்கு ஒரு பெரிய விடயமாக இருக்க போவதில்லை.

மொழி அவர்கள் போகும் பாடசாலையினை பொறுத்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.