Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2000 ம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் கடனட்டை என்பது மிக பெரிய சவாலாக இருந்தது.இலவச கடனட்டை என்று கொடுக்க மாட்டார்கள்.வருடாவருடம் சந்தாவாக ஒருதொகை வாங்குவார்கள்.

எங்காவது நாங்கள் சிறு தவறு செய்துவிட்டாலும் ஒருதொகையை அபராதமாக செலுத்த வேண்டிவரும்.

இந்தக் கடனட்டையாலேயே மூழ்கிப் போன குடும்பங்களும் உண்டு.

2000 ம் ஆண்டுக்குப் பின்னர்(சரியான ஆண்டு நினைவில் இல்லை)இலவச கடனட்டைகள் கொடுக்கத் தொடங்கினார்கள்.

இதிலும் பலர் நன்மையும் தீமையும் அடைந்தார்கள்.

அண்மையில் திரு @நியாயம் அவர்கள் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் ஒரு தேநீர் குடிக்கக் கூட வழியில்லை என்று விசனமாக எழுதியிருந்தார்.அப்போதே இப்படி ஒரு பதிவு எழுதணும் என்று எண்ணினேன்.இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.

2020 ஓய்வெடுத்த பின்பு பயணம் செய்யத் தொடங்கி இப்போது கடந்த 2-3 வருடங்களாக குறைந்தது வருடத்துக்கு 10 ஒருவழி பயணமாவது மேற்கொள்ளுகிறேன்.முதலில் மகளின் American Express Platinum Card  காட்டில் இருந்து Additional Card எடுத்து தந்தார்.பயணம் செய்யும் போது கூடுதலான விமானநிலையங்களில் Airport Lounge இருக்கிறது.அங்கு இலவசமாக சாப்பிடலாம் குடிக்கலாம் (நான் குடிப்பதில்லை)பொழுதை கழிக்க நல்லதொரு இடம்.

American Express Platinum Card க்கு கூடுதலான பணம் என்று Capital One Venture X இல் இப்போ எடுத்து வைத்திருக்கிறார்கள்.

இதற்கு வருடாவருடம் 400 டாலர்கள் சந்தாவாக கட்ட வேண்டும்.

ஆனால் விமான ரிக்கட் 300 க்கு மேல் எடுத்தால் வருடம் ஒருதடவை அதைக்கழித்து விடுவார்கள்.

இதைவிட வேறுவேறு வழிகளிலும் நிறைய சலுகைகள் தருவார்கள்.நாங்கள் கட்டும் பணத்துக்கு அதிகமாக சலுகைகளை அனுபவிக்கலாம்.

இந்தக் காட்டை எடுத்தவுடன் Priority Pass காட்டுக்கு கோல்பண்ணினால் அந்தக் காட்டை வைத்து ஒரே நேரத்தில் 3 பேர் Airport Lounge க்குப் போகலாம்.

இலங்கையிலும் Airport Lounge இருக்கிறது.சிறியதாக இருந்தாலும் தரமாக இருந்தது.

கடைசியாக இலங்கையில் இருந்து வரும்போது துருக்கியில் 10 மணிநேரம் இடைத்தங்கல்.எப்படித் தான் நேரம்போகப் போகுதோ என்று போனால் நல்ல சாப்பாடுகள் பழச்சாறுகள் என்று மாறிமாறி பசிக்கும் போது சாப்பிட்டோம்.

அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு இன்னும் ஒரு சலுகை இருக்கிறது.

இலவசமாக Global Entry க்கு விண்ணப்பிக்கலாம்.

இது இருந்தால் அமெரிக்காவில் எந்த விமானநிலையத்திலும் TsaPre என்ற விசேடமாக உள்ள இடத்தால் உள்நுழையலாம்.

சப்பாத்து கழட்டத் தேவையில்லை கணனி எடுக்கத் தேவையில்லை.

சர்வதேச பயணம் முடிந்து உள்நுழையும் போது பிரத்தியேகமாக உள்ள இடத்தில் பல கணனிகள் இருக்கும்.ஏதாவது ஒரு கணனியில் முகத்தைக் காட்டினால் Proceed என்று அறிவுறுத்தும்.குடிவரவு உத்தியோகத்தரிடம் போனால் கிட்ட போகும்போதே போகச் சொல்லி கையைக் காட்டுவார்.

இத்தனையும் 2-3 நிமிடங்களில் முடிந்துவிடும்.

இதுபற்றி நிறைய பேருக்கு தெரிவதில்லை.நான் சொல்லி இங்கு பலர் எடுத்து அனுபவிக்கிறார்கள்.பலரும் வருடாவருடம் பயணம் செய்பவர்கள் இருந்தால் இப்படியான சலுகைகளை உங்கள் நாடுகளில் ஈருந்தால் நீங்களும் அனுபவிக்கலாம்.

நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
The Capital One Venture X credit card offers many benefits, including: 
 
  • No foreign transaction fees: Avoid fees for using your card internationally 
     
  • Protection: Get protection for your cell phone, luggage, purchases, and more 
     
  • Price drop protection: Get up to $50 in travel credit if the price of your flight drops within 10 days of booking 
     
  • Flight cancellation: Cancel your flight for any reason 
     
  • Flight price freeze: Freeze the price of your flight and book later 
     
  • Transfer miles: Transfer your miles to over 15 travel loyalty programs 
     
  • Travel rewards: Earn miles for travel, including 10X miles on hotels and rental cars, and 5X miles on flights and vacation rentals 
     
  • Lounge access: Get unlimited access to Capital One Lounges and over 1,300 Priority Pass lounges worldwide 
     
  • Travel credits: Receive a $300 annual credit for travel bookings made through Capital One Travel 
     
  • Experience credits: Receive a $100 experience credit for every hotel or vacation rental booked from the Premier Collection 
     
  • Reimbursement: Receive up to a $120 statement credit every four years for Global Entry or TSA PreCheck 
  • இது அமெரிக்கர்கள் விசேடமாக பாவிக்கலாம்.
     
You can also earn bonus miles when you open your account and on each account anniversary. 

இந்த காட் வைத்திருப்பவர் 4 பேருக்கு மேலதிக சந்தா கட்டாமல் காட் எடுத்து கொடுக்கலாம்.

அவர்கள் குடும்ப உறுப்பினர்களாகவோ மிகவும் நம்பிக்கையானவர்களாகவோ இருக்க வேண்டும்.

எவர் செலவு செய்தாலும் காட்டின் சொந்தக்காரருக்கே அனைத்து புள்ளிகளும் போகும்.

இப்போது எடுக்கும் அனேகமான விமான சீட்டுக்கள் அந்தநாளில் பயணிக்காவிட்டால் 300 டாலருக்கு மேல் கட்டியே திகதியை மாற்றலாம்.

இந்த காட் மூலம் ரிக்கட் எடுத்தால் ஒரு டாக்ரர் சேர்டிபிக்கற்ருடன் அபராதம் ஏதும் இல்லாமல் திகதியை மாற்றலாம்.

@ரசோதரன் @நீர்வேலியான் @பிரபா நீங்கள்  Global Entry எடுத்து வைத்திருக்கிறீர்களா? ஆம் எனில் அதன் நன்மை தீமையை பகிர்ந்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 18/1/2025 at 15:39, ஈழப்பிரியன் said:

அண்மையில் திரு @நியாயம் அவர்கள் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் ஒரு தேநீர் குடிக்கக் கூட வழியில்லை என்று விசனமாக எழுதியிருந்தார்.அப்போதே இப்படி ஒரு பதிவு எழுதணும் என்று எண்ணினேன்.இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.

இலங்கை காசை இலங்கை விமானநிலையத்தில் தேனீர். ரோல்ஸ் வாங்குவதுதவிர டியூட்டி பிரீ பக்கம் பாவிக்க முடியவில்லை. வேறு நாடுகளில் இப்படியான ஒரு நடைமுறை உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நியாயம் said:

இலங்கை காசை இலங்கை விமானநிலையத்தில் தேனீர். ரோல்ஸ் வாங்குவதுதவிர டியூட்டி பிரீ பக்கம் பாவிக்க முடியவில்லை. வேறு நாடுகளில் இப்படியான ஒரு நடைமுறை உள்ளதா?

வேறு நாடுகளில் இன்னும் சிக்கல்............... அங்கே தேனீர், ரோல்ஸிற்கு கூட இலங்கை காசை எடுக்கமாட்டார்கள்....🤣.

** இலங்கைக்கு கீழே இருப்பவர்களும் இருப்பதால், இப்படியான நடைமுறை பல நாடுகளில் இருக்கக்கூடும்............

13 hours ago, ஈழப்பிரியன் said:
 
@ரசோதரன் @நீர்வேலியான் @பிரபா நீங்கள்  Global Entry எடுத்து வைத்திருக்கிறீர்களா? ஆம் எனில் அதன் நன்மை தீமையை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நான் எடுக்கவில்லை, அண்ணா. ஆனால் நண்பர் ஒருவர் எடுத்து வைத்திருக்கின்றார். அவருக்கு உதவுகின்றது என்கின்றார். LAX விமானநிலையத்தில் வெளிநாட்டவர்களுக்கு வரிசை எப்போதும் நீண்டது, அத்துடன் கேள்விகளும் கொஞ்சம் கூடத்தான். ஆனால் எங்களுக்கு, குடிமக்களுக்கு, அப்படியில்லைத் தானே.......... அடிக்கடி வெளிநாடு போய் வருகின்றவர்களுக்கு உதவியாக இருக்கின்றது போல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நியாயம் said:

இலங்கை காசை இலங்கை விமானநிலையத்தில் தேனீர். ரோல்ஸ் வாங்குவதுதவிர டியூட்டி பிரீ பக்கம் பாவிக்க முடியவில்லை. வேறு நாடுகளில் இப்படியான ஒரு நடைமுறை உள்ளதா?

நியாயம் இந்த பதிவை எழுதத் தூண்டியதே நீங்கள் தான்.

உங்களின் அவஸ்தையைப் பார்த்தே இந்த கடனட்டை விபரத்தை எழுதினேன்.

நீங்களும் அடிக்கடி பயணிப்பவர் என்றால்(வருடம் ஒரு தடவை போதும்)இப்படியான கடனட்டைகள் பெரும் உதவியாக இருக்கலாம்.

இலங்கை பணத்தை திரும்ப இலங்கை போகும்போது பாவியுங்கள்.

வணக்கம் @Justin உங்களை மறந்துவிட்டேன்.உங்களின் அனுபவங்களையும் அபிப்பிராயத்தையும் எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

விமானத்தில் ஏற முன்னம் கையில் மிஞ்சுகின்ற இலங்கை காசில் ஏதாவது பொருட்களை இலங்கை டியூட்டி பிரீயில் வாங்க முடியாமல் உள்ளதே என்பதே எனது ஆதங்கம் ஈழப்பிரியன். 

நானும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பாவிப்பது உண்டு. வருடாந்த கட்டணம் மிக அதிகம் என்றாலும் அந்த கட்டணத்தில் காப்புறுதி/மெடிக்கல்/பொதி காணாமல் போதல்/விமானத்தில் ஏறுவதில் முன்னுரிமை/லோஞ்ச் அனுமதி என பல அம்சங்கள் உள்ளடக்கப்படுவதால் அந்த அட்டை இப்போதும் உள்ளது. ஆனால் விரைவில் அதன் பாவனையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தீர்மானித்து உள்ளேன். 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நியாயம் said:

இலங்கை காசை இலங்கை விமானநிலையத்தில் தேனீர். ரோல்ஸ் வாங்குவதுதவிர டியூட்டி பிரீ பக்கம் பாவிக்க முடியவில்லை. வேறு நாடுகளில் இப்படியான ஒரு நடைமுறை உள்ளதா?

இல்லையே.. நான் பாவிக்கவில்லை ஆனால் என் கண்ணுக்கு முன்னால் ஒரு வெள்ளை தட்டுத்தடுமாறி இலங்கை காசை எண்ணி எண்ணி குடுத்து டியுட்டிபிறியில் எனக்கு முன்னுக்கு நிண்டு சாமான் வாங்கினது போனகிழமை..

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

வேறு நாடுகளில் இன்னும் சிக்கல்............... அங்கே தேனீர், ரோல்ஸிற்கு கூட இலங்கை காசை எடுக்கமாட்டார்கள்....🤣.

** இலங்கைக்கு கீழே இருப்பவர்களும் இருப்பதால், இப்படியான நடைமுறை பல நாடுகளில் இருக்கக்கூடும்............

நான் எடுக்கவில்லை, அண்ணா. ஆனால் நண்பர் ஒருவர் எடுத்து வைத்திருக்கின்றார். அவருக்கு உதவுகின்றது என்கின்றார். LAX விமானநிலையத்தில் வெளிநாட்டவர்களுக்கு வரிசை எப்போதும் நீண்டது, அத்துடன் கேள்விகளும் கொஞ்சம் கூடத்தான். ஆனால் எங்களுக்கு, குடிமக்களுக்கு, அப்படியில்லைத் தானே.......... அடிக்கடி வெளிநாடு போய் வருகின்றவர்களுக்கு உதவியாக இருக்கின்றது போல.

நான் இலங்கை காசை வெளியில் மாற்றுவதற்கு ஒரு போதும் முயற்சி செய்தது இல்லை. அப்படியான தேவை ஏற்படவில்லை. விமான நிலையத்தில் உள்ள நாணயம் மாற்றும் இடங்களில் கொடுத்தால் மாற்றித்தரத்தானே வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நியாயம் said:

பொதி காணாமல் போதல்/விமானத்தில் ஏறுவதில் முன்னுரிமை/லோஞ்ச் அனுமதி என பல அம்சங்கள் உள்ளடக்கப்படுவதால்

இப்படி வசதி உள்ள அட்டை ஏதும் ஜரோப்பாவில் உள்ளதில் நல்லது எது..? யாராவது பாவித்தவர்கள் சொன்னால் வாங்கலாம்.. அடிக்கடி விமானப்பயணம் செய்வதால் இந்த வகை வசதி இருந்தால் நன்று..

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பாலபத்ர ஓணாண்டி said:

இல்லையே.. நான் பாவிக்கவில்லை ஆனால் என் கண்ணுக்கு முன்னால் ஒரு வெள்ளை தட்டுத்தடுமாறி இலங்கை காசை எண்ணி எண்ணி குடுத்து டியுட்டிபிறியில் எனக்கு முன்னுக்கு நிண்டு சாமான் வாங்கினது போனகிழமை..

ஓ அப்படியோ. எங்களுக்கு முகத்திலேயே இலங்கை பக்கம் என எழுதி உள்ளது தானே. அதுதான் அனுமதி இல்லை போலும். எதற்கும் அடுத்த தடவை நீங்கள் ஒரு தடவை முயற்சி செய்து பார்த்துவிட்டு கூறுங்கள். சில வேளைகளில் புதிய அரசாங்கம் வந்தபின் இந்த மாற்றம் வந்ததோ தெரியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

இப்படி வசதி உள்ள அட்டை ஏதும் ஜரோப்பாவில் உள்ளதில் நல்லது எது..? யாராவது பாவித்தவர்கள் சொன்னால் வாங்கலாம்.. அடிக்கடி விமானப்பயணம் செய்வதால் இந்த வகை வசதி இருந்தால் நன்று..

அடிக்கடி பயணம் செய்பவர்கள் கட்டாயம் இப்படி ஏதாவதொரு காட் வைத்திருக்க வேண்டும்.

அமெரிக்கா கனடாவில் இருந்து போய்வருவதென்றால் இடைத்தங்கல் சிலவேளைகளில் கூடுதலான நேரங்களும் எடுக்கலாம்.

அந்த நேரங்களில் மிகவும் உதவியாக இருக்கும்.

இலங்கையில் இருதடவைகள் பாவித்தேன்.திருப்திகரமாக இருந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

விமானத்தில் ஏற முன்னம் கையில் மிஞ்சுகின்ற இலங்கை காசில் ஏதாவது பொருட்களை இலங்கை டியூட்டி பிரீயில் வாங்க முடியாமல் உள்ளதே என்பதே எனது ஆதங்கம் ஈழப்பிரியன். 

நானும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பாவிப்பது உண்டு. வருடாந்த கட்டணம் மிக அதிகம் என்றாலும் அந்த கட்டணத்தில் காப்புறுதி/மெடிக்கல்/பொதி காணாமல் போதல்/விமானத்தில் ஏறுவதில் முன்னுரிமை/லோஞ்ச் அனுமதி என பல அம்சங்கள் உள்ளடக்கப்படுவதால் அந்த அட்டை இப்போதும் உள்ளது. ஆனால் விரைவில் அதன் பாவனையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தீர்மானித்து உள்ளேன். 

https://www.americanexpress.com/us/credit-cards/card/platinum/
Annual fee 695$.

https://creditcards.chase.com/rewards-credit-cards/sapphire

Annuan fee 550$.

https://www.capitalone.com/credit-cards/venture-x/

395$.

எனது பிள்ளைகள் மேலேயிருந்து கீழிறங்கி கப்பிடரல்ஒன் வென்சர் தான் கடைசியாக எடுத்து வைத்துள்ளனர்.

இதுவும் மேலே உள்ளதுகளின் வேலையை செய்யும் என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரசோதரன் said:

@ரசோதரன் @நீர்வேலியான் @பிரபா நீங்கள்  Global Entry எடுத்து வைத்திருக்கிறீர்களா? ஆம் எனில் அதன் நன்மை தீமையை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இன்னும் எடுக்கவில்லை. 
இந்த வருடம் எடுக்க வேணும் என நினைத்திருக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா said:

இன்னும் எடுக்கவில்லை. 
இந்த வருடம் எடுக்க வேணும் என நினைத்திருக்கிறேன்.

உங்கள் ஆய்வில் எந்த கடனட்டை நல்லது என்று எண்ணுகிறீர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரசோதரன் said:

நான் எடுக்கவில்லை, அண்ணா. ஆனால் நண்பர் ஒருவர் எடுத்து வைத்திருக்கின்றார். அவருக்கு உதவுகின்றது என்கின்றார். LAX விமானநிலையத்தில் வெளிநாட்டவர்களுக்கு வரிசை எப்போதும் நீண்டது, அத்துடன் கேள்விகளும் கொஞ்சம் கூடத்தான். ஆனால் எங்களுக்கு, குடிமக்களுக்கு, அப்படியில்லைத் தானே.......... அடிக்கடி வெளிநாடு போய் வருகின்றவர்களுக்கு உதவியாக இருக்கின்றது போல.

அமெரிக்கர்களுக்கு தனியாக வரிசைகள் இருந்தாலும் அதுவே நிறைய பயணிகளால் சூழ்ந்திருக்கும்.

கடந்த தடவை இலங்கை போய்வரும் போது 3 விமானங்கள் ஒன்றாக வந்திருந்தன.

Arrival hallway க்குள் உள்புகவே நெரிச்சலாக இருந்தது.  Global entry இருந்தபடியால் ஒரு 5 நிமிடத்தில் பொதிகள் எடுக்குமிடத்துக்கு வந்துவிட்டோம்.

அத்துடன் இடைத்தங்கலிலிலும் 10 மணிநேரம் செலவு செய்தோம்.அப்போதும் வசதியாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/1/2025 at 21:10, ஈழப்பிரியன் said:
 
@ரசோதரன் @நீர்வேலியான் @பிரபா நீங்கள்  Global Entry எடுத்து வைத்திருக்கிறீர்களா? ஆம் எனில் அதன் நன்மை தீமையை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Global Entry அல்லது TSA Precheck இரண்டில் ஒன்றுதான் வைத்திருக்கலாம் ( ஒன்றுக்குத்தான் $120 க்ரெடிட் தருவார்கள்). TSA Precheck Domestic பயணங்களுக்கு சிறப்பு Global Entry அமெரிக்காவிற்குள் நுழையும்போதுதான் பெரிதும் பயன்படும். நியூ யார்க்கில் கஸ்டமில் எப்பபோதும் லைன் இருக்கும் அந்த லைனில் நிற்க தேவை இல்லை. குறிப்பாக உங்களுக்கு Connecting Flight இருந்தால் அது பெரும் உதவியாக இருக்கும். நான் Amex Platinum தான் வைத்திருக்கிறேன் அண்ணளவாக $1000 வரையில் ஒரு வருடத்தில் திரும்ப பெற கூடியதாக இருக்கிறது ஆதலால் அதையே வைத்திருக்கிறேன். Delta Amex Platinum  உண்டு அதுக்கு வருடாந்த பணம் நான் கட்டுவதில்லை என்பதால் வைத்திருக்கிறேன். Amex Platinum எடுக்கும்போது வீட்டில் வேறு ஆட்களின் பெயரில் எடுத்து என்னை Additional Add பண்ணியிருந்திருக்க வேண்டும் ...... யோசிக்காமல் எனது பெயரில் எடுத்துவிட்டேன் ..... இப்போ மாற்ற சொன்னால் அவர்கள் முடியாது என்கிறார்கள். Cancel பண்ணிவிட்டு வேறு பெயருக்கு புதிதாக எடுக்க சொல்கிறார்கள். அதை Cancel பண்ணினால் Capital Venture X தான் எடுப்பது என்று இருக்கிறேன்.

முன்பு மொபைல் பாஸ்போர்ட் ( Mobile Passport) என்று ஒரு ஆப் APP இருந்தது அது முற்றிலும் இலவசம் நீங்கள் அமெரிக்காவிற்குள் நுழையும்போது அந்த அப்பில் உங்கள் விமான போர்டிங் பாஸ் விபரங்களை கொடுத்தால் போதும். காஸ்ட்ரம் Custom வரிசையில் நிற்க தேவையில்லை அநேகமாகமான ஏர்போட்டுகளில் டிப்ளோமட் பாஸ்போர்ட் ( Diplomat Passport)  விமான பணியாளர்கள் ( Crew Line)  போகும் இடத்தால் போகலாம். இப்போதும் அது போட்டு அம்புக்குறி காட்டியிருக்கு ஆனால் அந்த ஆப் வேலை செய்யவில்லை.

முன்பு அந்த ஆப் இருந்ததால் நான் Clear தான் Amex  மூலம் எடுத்து வைத்திருந்தேன். Clear  யிலும் சில நேரங்களில் இப்போது நீண்ட வரிசை அதனால் TSA Precheck இற்கு மாற வேண்டும். Global Entryயம் எடுக்க வேண்டும்.

இருவாரங்கள் முன்பு எங்கோ வாசித்தேன் Capitol Venture X இனி Airport Lounge Access தருவதில்லை என்று அதுதான் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன். நேற்றும் வேலை செய்யும்போது இதுபற்றி யோசித்துக்கொண்டு இருந்தேன் .... இன்று உங்கள் இந்த பதிவை பார்த்ததும் நீங்கள் எனக்காக எழுதியது போல இருக்கு. எனது குழப்பத்திற்கும் யாரவது தீர்வு எழுத்துவார்கள் என்று காத்திருக்கிறேன். வாரகிழமை ஒருமுறை பூமியை சுற்றி வரவேண்டும் அதனால்தான் இதுபற்றி யோசித்தேன். எனக்கு Lounge Access  ஒன்றுதான் இப்போது பிரியோசனமாக இருக்கிறது மற்ற சலுகைகள் பெரிதும் பிரியோசனமாக இல்லை. கார் ரெண்ட் ( Car Rental ) பண்ணும்போது Free Upgrade பண்ணிவிடுவார்கள் கொஞ்சம் வசதியான கார் குறைந்த செலவில் கிடைக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

Global Entry அல்லது TSA Precheck இரண்டில் ஒன்றுதான் வைத்திருக்கலாம் ( ஒன்றுக்குத்தான் $120 க்ரெடிட் தருவார்கள்). TSA Precheck Domestic பயணங்களுக்கு சிறப்பு Global Entry அமெரிக்காவிற்குள் நுழையும்போதுதான் 

Global entry எடுத்தால் TSA pre யும் தானியங்கியாக பாவிக்கலாம்.

ஆனால் TSA Pre மட்டும் வைத்திருப்பவர் குளோபல் என்ரி பாவிக்க முடியாது.

TSA Pre க்கு நேர்காணல் உடனடியாக எடுத்துவிடலாம். 

குளொபல. க்கு பலநாள் பலதடவைகள் நோண்டித் தான் எடுத்தேன்.

புதிது புதிதாக Lounge திறக்கிறார்கள்.

The first Capital One lounge opened at Dallas Fort Worth International Airport (DFW) in 2021, and two locations opened in 2023, at Dulles International Airport (IAD) and Denver International Airport (DEN). Capital One plans to open new lounges next year at Las Vegas' Harry Reid International Airport (LAS) in early 2025 and New York's John F. Kennedy International Airport (JFK) in mid-2025.

On 19/1/2025 at 20:25, நியாயம் said:

இலங்கை காசை இலங்கை விமானநிலையத்தில் தேனீர். ரோல்ஸ் வாங்குவதுதவிர டியூட்டி பிரீ பக்கம் பாவிக்க முடியவில்லை. வேறு நாடுகளில் இப்படியான ஒரு நடைமுறை உள்ளதா?

அடபாவி நல்லநல்ல காட்டெல்லாம் வைத்துக் கொண்டா கட்டுநாயக்காவில் தேநீருக்கு அலைந்தீர்கள்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.