Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

பாடசாலை நாட்களை விட இன்று அதிக இக்கட்டான சந்தர்ப்பங்களில் சிக்கி விடுகின்றோம். இன்று எத்தனையோ நண்பர்கள், தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் புத்தகங்களாகவே பதிப்பித்துக் கொடுக்கின்றார்கள். அனுபவங்களும், ரசனைகளும் வேறுவேறாக இருப்பதாலோ என்னவோ, பலதையும் ஓரிரு பக்கங்களுக்கு மேல் தாண்ட முடிவதில்லை. ஆனால் சில நாட்களின் பின், கொடுத்தவர்கள் எப்படி இருக்கின்றது என்னும் போது, என்ன சொல்வதென்றே தெரிவதில்லை. 

இது எல்லாவற்றையும் ஒரேயடியாக நிராகரிகரிப்பது என்றில்லை. நான் முன்பும் சொல்லியிருந்தது போல,  இருபது வருடங்களின் முன் அளவில் ஒரு ஈழத்துப் பெண் எழுத்தாளரின் சிறுகதைகளை வாசித்து விட்டு, இப்படியும் எழுதலாமா என்று ஆச்சரியப்பட்டிருக்கின்றேன். மிகவும் நன்றாக, சில புதிய கோணங்களை எழுதியிருந்தார்.

சில ஆக்கங்களுக்கு, படைப்புகளுக்கு ஒரு தார்மீக ஆதரவு கொடுக்கப்பட வேண்டும் என்ற ஒரு தரப்பும் இருக்கின்றது. ஒரு வகுப்பு நண்பன் ஒருவன் ஒரு கவிதை எழுதிக் கொடுத்து, அது எப்படியிருக்கின்றது என்று கேட்டால்.......................... அங்கே தான் இந்த தார்மீக உணர்வும் வரவேண்டும் போல, நண்பனின் கவிதை என்னவாக இருந்தாலும்..................🤣.   

அவர் கொஞ்சம் விவகாராமான ஆள், அந்த கவிதை வாசிப்பவருக்கான கவிதை போல இருப்பதாக நினைவுள்ளது (ஒரு காதல் கடிதம் மாதிரி) எமது பாடசாலை ஆண்கள் பாடசாலை, எப்போதும் ஏதாவது கோமாளித்தனம் செய்து கொண்டிருப்பார் (வகுப்ப்பில் முன்னிருக்கை மாணவர்களும் பின்னிருக்கை மாணவர்களும் செய்யும் கோமாளித்தனங்களுக்கு சம்பந்தேமே இல்லாத மிதவாத மாணவர்களாகிய நாங்கள் பாதிக்கப்படுவதால் - Neutral gear  வரும் எரிச்சல் ஒரு காரணம்) இந்த முறை என்ன கோமாளித்தனம் செய்யப்போகிறார்? பாடசாலையில் யாருக்கும் கொடுக்கமாட்டார் என நினைத்திருத்தேன், ஆனால் அந்த தொண்டர் ஆசிரியரிடம் அதனை கொடுத்த போது அதிர்ச்சியாகிவிட்டேன் (அவருக்கும் எமக்கும் அதிக வயது வித்தியாசமில்லை) ஆனால் அந்த தொண்டர் ஆசிரியர் அவரது மூக்குடைத்த போது ஏனோ என்னால் சந்தோசப்படுவதனை கட்டுப்படுத்த முடியவில்லை (மோசமான நண்பர் அல்லவா?)😁

நண்பர் என்றெல்லாம் இல்லை முன்னிருக்கை மாணவர்களையும் பின்னிருக்கை மாணவர்களையும் துஸ்டரை கண்டால் தூர விலகு எனும் மனப்பாண்மையில் இருந்த காலகட்டம் அது.

  • Replies 76
  • Views 4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    பாடல் இரண்டு - செந்தூர பூவே செந்தூர பூவே --------------------------------------------------------------------------- ஊரில் பல பாடசாலைகள் இருந்தன. வீட்டுக்கு அருகிலேயே ஒரு பாடசாலை இருந்தது.

  • ஏதோ இந்த வரி நன்றாக இருப்பது போல உணர்கின்றேன், உங்கல் எழுத்துக்கள் நாளுக்கு நாள் முன்னேற்றம் காட்டுகிறது, கலை கலைக்காகவே என படித்தவர்களுக்குள் கும்மியடிக்கும் இலக்கிய வட்டத்திற்குள் புகாமல் எங்களை ப

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    எனக்கும் இப்படியான எண்ணம் வந்தது. ரசோதரன் யாழுக்கு கிடைத் பொக்கிசம்.

  • கருத்துக்கள உறவுகள்

விமா, நீங்கள் குறிப்பிட்ட வகையினருக்குள் வர மாட்டார் என்று நினைக்கிறேன்.   கன காலம் தமிழ் இலக்கியப் பக்கம் வராமல் இருந்த பழைய கை. திரும்பி வந்தாப் போலை இந்த மும்மூர்த்திகளையும் அடிக்கடி சாயம் போக வெளுப்பார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 22/1/2025 at 23:51, ரசோதரன் said:

மண்டைதீவிலிருக்கும் ஒரு சாத்திரியார் தான் வீட்டில் எல்லோருக்கும் குறிப்புகள், ஜென்ம பலன், எழுதி இருந்தார். என்னைத் தவிர மற்ற எல்லோருடைய குறிப்புகளிலும் அவர்கள் ஆஹா, ஓஹோ என்று வருவார்கள் என்று இருந்தது. என்னுடைய குறிப்பு மட்டும் படு மோசமாக இருந்தது.

ஷோபாசக்தியின் “ஸலாம் அலைக்” நாவலில் வந்த சாத்திரியோ இவர்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, vasee said:

அந்த கவிதை வாசிப்பவருக்கான கவிதை போல இருப்பதாக நினைவுள்ளது

அந்த தொண்டர் ஆசிரியர் அவரது மூக்குடைத்த போது ஏனோ என்னால் சந்தோசப்படுவதனை கட்டுப்படுத்த முடியவில்லை (மோசமான நண்பர் அல்லவா?)😁

நண்பர் என்றெல்லாம் இல்லை முன்னிருக்கை மாணவர்களையும் பின்னிருக்கை மாணவர்களையும் துஸ்டரை கண்டால் தூர விலகு எனும் மனப்பாண்மையில் இருந்த காலகட்டம் அது.

🤣.....................

காதல் கவிதைகள் என்றாலே அது வாசிப்பவருக்கான ஆக்கம் என்ற அறிதல், எல்லாம் கடந்து போன இந்த வயதில் இன்று தான் எனக்கு வந்திருக்கின்றது.......................😜

நான் படித்த பாடசாலையில் உயரத்தின் படியே முன்னிருந்து இருக்கவிடுவார்கள். இது ஒவ்வொரு வருடமும் பாடசாலை முதல் நாளில் நடக்கும். வரிசையில் எனக்கு பின்னல் பெரிய தள்ளுமுள்ளே நடக்கும். யார் உயரம் என்று................நான் எதுவுமே பேசாமல், வரிசையில் அமைதியாக முதல் ஆளாக நிற்பேன்...............🤣.

16 minutes ago, villavan said:

விமா, நீங்கள் குறிப்பிட்ட வகையினருக்குள் வர மாட்டார் என்று நினைக்கிறேன்.   கன காலம் தமிழ் இலக்கியப் பக்கம் வராமல் இருந்த பழைய கை. திரும்பி வந்தாப் போலை இந்த மும்மூர்த்திகளையும் அடிக்கடி சாயம் போக வெளுப்பார். 🤣

ஆமாம், வில்லவன், அவர் இந்த இரு வகைக்குள்ளும் இல்லை. பெரிய இடைவெளி விட்டிருக்கின்றார் என்று தான் அவரின் விபரங்களில் இருக்கின்றது. அடுத்த சில நாட்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவரை வாசிப்பதாக உள்ளேன்.................

Edited by ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

ஷோபாசக்தியின் “ஸலாம் அலைக்” நாவலில் வந்த சாத்திரியோ இவர்?

🤣.................... (பச்சைகள் முடிந்து விட்டது, கிருபன், இன்று இந்தப் பக்கம் ஒரே சிரிப்பாக போய்விட்டது..............)

எங்களுக்கும், ஷோபா சக்திக்கும் ஒரு தொடர்பு இருக்குது தானே, கிருபன்..............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரசோதரன் said:

வாசிப்பவருக்கான ஆக்கம் என்ற அறிதல் எல்லாம் கடந்து போன இந்த வயதில் இன்று தான் எனக்கு வந்திருக்கின்றது

இப்பவும் நேரம் போகவில்லை,  விசைப்பலகையில் உங்கள் வித்தையைக் காட்டி கொஞ்சம் எடுத்து விடுங்கோ.  பாட்டுக் கதைகளில் அடுத்த அத்தியாயம் அது தான் என்று பட்சி சொல்லுது. 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, villavan said:

இப்பவும் நேரம் போகவில்லை,  விசைப்பலகையில் உங்கள் வித்தையைக் காட்டி கொஞ்சம் எடுத்து விடுங்கோ.  பாட்டுக் கதைகளில் அடுத்த அத்தியாயம் அது தான் என்று பட்சி சொல்லுது. 😁

🤣................

'ஆஹா வந்திருச்சி...... ஆஹஹா ஓடி வந்தேன்........' தான் அடுத்த பாடல் என்று முதலே நினைத்து வைத்திருக்கின்றேன்.......................🤣. அதற்கு முன்னர், இப்படி ஒரு முன்னுரை வரும் என்பது எதிர்பாராதது.....😜.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, villavan said:

இப்பவும் நேரம் போகவில்லை,  விசைப்பலகையில் உங்கள் வித்தையைக் காட்டி கொஞ்சம் எடுத்து விடுங்கோ.  பாட்டுக் கதைகளில் அடுத்த அத்தியாயம் அது தான் என்று பட்சி சொல்லுது. 😁

ஐ பாட்டுக்கட்டம்….

அடுத்தது டூயட் போல கிடக்கு🤣

1 minute ago, ரசோதரன் said:

🤣................

'ஆஹா வந்திருச்சி...... ஆஹஹா ஓடி வந்தேன்........' தான் அடுத்த பாடல் என்று முதலே நினைத்து வைத்திருக்கின்றேன்.......................🤣. அதற்கு முன்னர், இப்படி ஒரு முன்னுரை வரும் என்பது எதிர்பாராதது.....😜.

ஏதோ பண்ணுங்க🤣🤣🤣 எஸ் ஏ சி படம் மாரி ஒரு சிலுக்கு சாங் கட்டாயம் தேவை என்று சொல்லாதவரை ஓக்கேதான்.

  • கருத்துக்கள உறவுகள்
On 27/1/2025 at 23:24, vasee said:

பானையில் இருப்பதுதானே அகப்பையில் வரும், சிறந்த சமூக சிந்தனை இல்லாதவர்களால் சிறந்த இலக்கியங்களை படைக்கமுடியாது

அப்படியென்றால் இலட்சிய நாவல்கள் எழுதிய நா. பார்த்தசாரதிதான் சிறந்த இலக்கியப் படைப்பாளி!

சமூக சிந்தனை என்பதை விட பக்கச்சார்பின்றி பாத்திரங்களை படைக்கவேண்டும். ஒரு உலகத்தை கற்பனையில் கொண்டுவந்து வாசகனை உள்ளே இழுக்கவேண்டும்..

ஒருவரின் எழுத்து நூறாண்டுகளுக்கு மேல் விரும்பிப் படிக்கப்பட்டும் பேசப்பட்டும் இருந்தால் அவரது எழுத்து சிறந்ததாகத்தான் இருக்கும். 

புதுமைப்பித்தன் வறுமையில் வாடி எழுதிய கதைகள் இன்றும் நிலைத்துநிற்கின்றன. ஆனால் இலக்கியம் அவருக்கு சோறு போடவில்லை. அவரும் எதிர்பார்க்கவும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கிருபன் said:

ஷோபாசக்தியின் “ஸலாம் அலைக்” நாவலில் வந்த சாத்திரியோ இவர்?

இந்த திரியை வாசிக்கும் போதே, இந்த பழைய புத்தக வாசத்தை நீங்கள் மோப்பம் பிடித்து வர எவ்வளவு நேரம் எடுக்கும் என யோசித்தேன்🤣

இதோ வந்துட்டியள்🤣

2 minutes ago, கிருபன் said:

அப்படியென்றால் இலட்சிய நாவல்கள் எழுதிய நா. பார்த்தசாரதிதான் சிறந்த இலக்கியப் படைப்பாளி!

சமூக சிந்தனை என்பதை விட பக்கச்சார்பின்றி பாத்திரங்களை படைக்கவேண்டும். ஒரு உலகத்தை கற்பனையில் கொண்டுவந்து வாசகனை உள்ளே இழுக்கவேண்டும்..

ஒருவரின் எழுத்து நூறாண்டுகளுக்கு மேல் விரும்பிப் படிக்கப்பட்டும் பேசப்பட்டும் இருந்தால் அவரது எழுத்து சிறந்ததாகத்தான் இருக்கும். 

புதுமைப்பித்தன் வறுமையில் வாடி எழுதிய கதைகள் இன்றும் நிலைத்துநிற்கின்றன. ஆனால் இலக்கியம் அவருக்கு சோறு போடவில்லை. அவரும் எதிர்பார்க்கவும் இல்லை.

எனக்கு தெரிய (நான் வாசித்த மட்டில்) இருவர் இதற்குள் அடங்குவார்கள் என நினைக்கிறேன்.

1. தோப்பில் முகம்மது மீரான்

2. செங்கை ஆழியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

ஏதோ பண்ணுங்க🤣🤣🤣 எஸ் ஏ சி படம் மாரி ஒரு சிலுக்கு சாங் கட்டாயம் தேவை என்று சொல்லாதவரை ஓக்கேதான்.

அப்படி வந்தாலும் 'பூவே இளைய பூவே......... வரம் தரும் வசந்தமே.............' தான் வரும்..............🤣.

5 minutes ago, goshan_che said:

எனக்கு தெரிய (நான் வாசித்த மட்டில்) இருவர் இதற்குள் அடங்குவார்கள் என நினைக்கிறேன்.

1. தோப்பில் முகம்மது மீரான்

2. செங்கை ஆழியன்

இவர்கள் இருவரும் அருமையான படைப்பாளிகள்...........

என்னுடைய வாசிப்பில் புதுமைப்பித்தனும், அசோகமித்ரனும் மற்ற எல்லோரையும் விட அசத்திப்போட்டார்கள். இவர்களால் மட்டும் எப்படி இப்படி முடிகின்றது என்று திருப்பி திருப்பி இவர்களை வாசித்து, எழுத்தும் பிறவியிலேயே அதாகவே வரும் ஒன்று ஆக்கும் என்று இப்பொழுது கொஞ்சம் சமாதானம் ஆகியுள்ளேன்.......... அதுவும் புதுமைப்பித்தன், அவர் வாழ்ந்த அந்தக் காலத்தில்...............❤️.  

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரசோதரன் said:

அப்படி வந்தாலும் 'பூவே இளைய பூவே......... வரம் தரும் வசந்தமே.............' தான் வரும்..............🤣.

இவர்கள் இருவரும் அருமையான படைப்பாளிகள்...........

என்னுடைய வாசிப்பில் புதுமைப்பித்தனும், அசோகமித்ரனும் மற்ற எல்லோரையும் விட அசத்திப்போட்டார்கள். இவர்களால் மட்டும் எப்படி இப்படி முடிகின்றது என்று திருப்பி திருப்பி இவர்களை வாசித்து, எழுத்தும் பிறவியிலேயே அதாகவே வரும் ஒன்று ஆக்கும் என்று இப்பொழுது கொஞ்சம் சமாதானம் ஆகியுள்ளேன்.......... அதுவும் புதுமைப்பித்தன், அவர் வாழ்ந்த அந்தக் காலத்தில்...............❤️.  

நம்மட ஜி @கிருபன் ஐ கேட்டால், சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், புளிச்ச மாவு ஜெயமோகன் என ஒரு லிஸ்ட் போடுவார்.

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு எழுத்து பிடிக்கும் என நினைக்கிறேன். 

காலத்தையும் பொறுத்தது.

முன்னர் அந்த புத்தகத்தை தூக்க கஸ்டபடும் வயதில் வரதராசனாரின் கயமை பிடித்தது. பின்னாளில் அவரின் நெஞ்சிலோர் முள்ளை படிக்க முனைந்தும் முடியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

முவவை விட்டு விடலாம், அவர் ஒரு நல்ல பாடசாலை ஆசிரியர் போல. அக்கறை உள்ளவர், நல்வழி காட்ட வேண்டும் என்று நினைப்பவர் என்று வைத்துக் கொள்ளலாம். ஓரளவு முதிர்ச்சி அடைந்த பின், அவருடையவை நீதி நூல்கள் போல தோன்ற ஆரம்பிக்கும் என்று நினைக்கின்றேன்.

ஒவ்வொருவரின் ரசனையும், அனுபவங்களும் தனித்தனியானவையே...........  

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்ற மூவரும் ஜாம்பவான்களே. 'ஜெமோவின் ஏஜண்ட்' என்று என்னைச் சொல்வான் என்னுடைய தனித்தமிழ் நண்பன். ஆனால், இங்கு களத்தில் வந்து பார்த்தால், கிருபன் தான் ஜெமோவின் பிரதான ஏஜண்ட்.........🤣. ஜெமோவின் பங்களிப்பு அளப்பரியது. அவரின் எல்லா நியாயங்களையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளாமல், ஆனால் அவரின் ஆக்கங்களை வாசித்தபடியே போய்க் கொண்டிருக்கலாம்.   

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் கடந்து போகும் 🙂

1 hour ago, ரசோதரன் said:

அதற்கு முன்னர், இப்படி ஒரு முன்னுரை

கால வரிசைப்படி பார்த்தால் அடுத்தது அது தானே 😄

Edited by villavan
updated content.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், புளிச்ச மாவு ஜெயமோகன் என ஒரு லிஸ்ட் போடுவார்.

ஆம். முன் பதின்ம வயதுகளில் சாண்டில்யனில் ஆரம்பித்து, பின் பதின்ம வயதுகளில் ஜெயகாந்தனில் தொற்றி பின்னர் சுந்தரராமசாமி,  தி.ஜானகிராமன், என்று தொடர்ந்து ஜெயமோகனை அவரது, மண் சிறுகதைத் தொகுதி, ரப்பர், விஷ்ணுபுரம் நாவல்களில் கண்டடைந்தேன்.😀 இப்போது போகன் சங்கர், சுரேஷ் பிரதீப் என்று பலரின் எழுத்துக்களைப் படிக்கின்றேன்!

ஈழப் படைப்பாளிகளின் நூல்களை தவறாமல் வாங்கிவிடுவேன். ஷோபா சக்தியைப் போலவும், முத்துலிங்கத்தைப் போலவும் சிறுகதைகளை தொடர்ச்சியாக எழுதுபவர்கள் பலர் இல்லை.

On 25/1/2025 at 23:20, ரசோதரன் said:

ஶ்ரீதேவியை அவரின் வீட்டில் இருந்து கூட்டி வந்து, இந்தப் பாடலில் அப்படியே நடிக்க வைத்திருப்பார்கள். அவர் இந்தப் பாடலில் கொஞ்சம் கறுப்பாக இருப்பது போல இருக்கும். ஒரு ஊரில் இருக்கும் மிக அழகான பெண் போன்று தான் இருப்பார். ஒரு நடிகை போன்று இந்தப் பாடலில் அவர் இருக்கவில்லை. 

சிறிதேவி “மஞ்சள் தாவணி போடவா” என்று சொல்வதை பாரதிராஜா அப்படி ஒரு ஃபிரேமில் எடுத்திருப்பார்! சிறிதேவியை எந்த வயதில் பார்த்தாலும் அவர் பதினாறு வயது இளைமையாகத்தான் இருப்பார்🥰!  பின்னர் கனவுகளில் வந்த ஐஸ்வர்யா ராய், மனீஷா கொய்ராலா, ஏன் சமந்தா கூட வயது ஏற இளமை மங்கித்தான் தெரிந்தார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
On 31/1/2025 at 10:06, கிருபன் said:

அப்படியென்றால் இலட்சிய நாவல்கள் எழுதிய நா. பார்த்தசாரதிதான் சிறந்த இலக்கியப் படைப்பாளி!

சமூக சிந்தனை என்பதை விட பக்கச்சார்பின்றி பாத்திரங்களை படைக்கவேண்டும். ஒரு உலகத்தை கற்பனையில் கொண்டுவந்து வாசகனை உள்ளே இழுக்கவேண்டும்..

ஒருவரின் எழுத்து நூறாண்டுகளுக்கு மேல் விரும்பிப் படிக்கப்பட்டும் பேசப்பட்டும் இருந்தால் அவரது எழுத்து சிறந்ததாகத்தான் இருக்கும். 

புதுமைப்பித்தன் வறுமையில் வாடி எழுதிய கதைகள் இன்றும் நிலைத்துநிற்கின்றன. ஆனால் இலக்கியம் அவருக்கு சோறு போடவில்லை. அவரும் எதிர்பார்க்கவும் இல்லை.

நீங்கள் அனைவரும் கூறுவது சரி என்றே கருதுகிறேன், நான் தவறான புரிதலுடன் இலக்கியத்தினை பார்க்கிறேனோ என தோன்றுகிறது.

சிறுவயதில் வெவ்வேறு மொழியில் வந்த பெரிய ஆளுமைகளின் தமிழ் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள், கதைகள் வாசித்ததுண்டு பெரும்பாலும் அவை பெரிதாக ஈர்ப்பதில்லை (connect ஆவதில்லை)  சில விதி விலக்காக மறக்கமுடியாதவையாக சில வாழ்வில் தொடரும்.

அதற்கு நானே கண்டுபிடித்த காரணம் அவர்களது மொழியிலிருந்து மொழி மாற்றும் போது மொழி மாற்றுபவர் அந்த உணர்வை நீர்த்து போக செய்வது என, எப்படி ஒரு டப்பிங் படம் பார்ப்பது போல.

இலக்கியங்கள் என்றால் அதற்கான cliche  களில் இருந்தால்தான் இலக்கியம் எனும் நிலை இருப்பதாக கருதுகிறேன், கதாநாயகி அறிமுகம் என்றால் தாவரங்கள் உயிரினங்களை எல்லாம் உவமானமாக காட்டவேண்டும் எனும் நிலையில் வாசகனுகு கதாநாயகியின் அறிமுகத்தில் கதாநாயகியே தெரிவதில்லை, கதாநாயகியினை விட மற்ற விடயங்கள்தான் மனதில் இருக்கும், இவ்வாறான உவமானங்கள்தான் இலக்கியங்கள் எனும் பொதுவான விதியாக கருதப்படுகிறது.

ஒரு போராளி எழுதிய கவிதை " என்னை மண்ணில் புதைத்தாய் என் மண்ணை எங்கே புதைப்பாய்".

இந்த கவிதை மேலோட்டமாக பார்க்கும் போது என்னை அழிக்கலாம் ஆனால் என் இலட்சியத்தினை அழிக்க முடியாது என்பது போல இருக்கும் ஆனால் புதைத்த மண்ணில் நான் இருப்பேன் எனக்கு அழிவில்லை, என்னையும் மண்ணையும் பிரிக்கமுடியாது (மண் - மக்கள்), அடக்குமுறைகளை உடைத்து வெளியேற துடிக்கும் உணர்வு என பல பொருள்படும் ஒரு புதிய வடிவ ஓவியம் போல ஒவ்வொரு கோணத்திலும் தெரியும் ஒரு போராளியின் உள அந்தரிப்பு அதில் தெரியும், நாலைந்து வார்த்தைகளில் அவரது உணர்வை வாசகர்களுக்கு அப்படியே கடத்தி வாசகரிகளிடம் ஒரு ஆகா மொமன்டை உருவாக்குகிறது இதற்கு காரணம், அவரது உணர்வை அவராலேதான் இலகுவாக கடத்தமுடியும்.

இன்னொருவர் சார்பாக சிறந்த இலக்கியவாதிகளாலேயே அவர்கள் உணர்வுகளை அப்படியே உள்வாங்க முடியும் என நம்புகிறேன்.

ஒரு சமூகத்தில் இருந்து வரும் இலக்கியங்களை அந்த மக்களை உணராவிட்டால் ஒரு டப்பிங் படம் போல ஒரு இலக்கியத்தினையே உருவாக்க முடியும் என நம்புகிறேன்.

அத்துடன் இலக்கியவாதிகளும், இலட்சியவாதிகளும் ஒரு சமூகத்தினை செதுக்கும் சிற்பிகள் என நான் நம்புகிறேன், அது தவறாக இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vasee said:

அத்துடன் இலக்கியவாதிகளும், இலட்சியவாதிகளும் ஒரு சமூகத்தினை செதுக்கும் சிற்பிகள் என நான் நம்புகிறேன், அது தவறாக இருக்கலாம்.

உங்களின் பார்வையில் தவறு இல்லை, வசீ, அது இன்னொரு வகையானது என்று தான் சொல்லப்பட அல்லது வகைப்படுத்தப்பட வேண்டும். 

'இப்படி எழுதும் அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தது...........' என்று ராஜாஜி புதுமைப்பித்தனின் எழுத்துகள் குறித்து கேள்வி எழுப்பியதாகச் சொல்லப்படுகின்றது. 'சாபவிமோசனம்' கதையைப் படித்த பின்னர், அவருக்கு அப்படி தோன்றியது போல. 

ஆற்றில், நீரில் மிதந்து வரும் மனிதக் கழிவுகளுக்கு ஒப்பானது என்று சாருவின் எழுத்தை சொன்ன இலக்கியவாதிகளும் உண்டு.

இன்றைய ஈழத்து படைப்பாளிகளில், முத்துலிங்கத்தை ஷோபா சக்தி ஏற்றுக்கொள்வதில்லை. 

இப்படியான பல உதாரணங்கள் உண்டு. எந்த நவீன படைப்புகளையுமே, படைப்பாளிகளையும் உலகம் ஒற்றுமையாக ஏற்றுக் கொள்ளாது போல.  

தமிழில் மொழிபெயர்ப்பில் இருக்கும் சிக்கல்கள் என்றுமே அப்படியே இருக்கின்றது. பெரும்பாலும், இரண்டு மொழிகளும் தெரிந்த, ஆனால் இலக்கியத்தில் பயிற்சி இல்லாதவர்களே மொழிபெயர்ப்பாளர்களாக இருப்பதே அதற்குக் காரணம். கோவிட் காலத்தில் 'அன்னா கரேனினா' இன் ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு வாட்ஸ்அப் குழுமங்களில் வந்தது. அதைக் கொடுமை என்று சாதாரணமாக சொல்லிவிட்டுப் போக முடியாது, அது ஒரு பெரிய அவமதிப்பு என்றும் சொல்லவேண்டும்.  இந்த மொழிபெயர்ப்பாளார்கள் மூலப் பிரதியை உள்வாங்காமலேயே ஏதோ ஒன்றைச் செய்கின்றார்கள்.

 நாளைய உலகை உருவாக்குபவர்கள் இன்று வாழ்பவர்களில் மிகமிகச் சிறிய ஒரு பகுதியினரே. இலக்கியவாதிகள், இலட்சியவாதிகளும் அதற்குள் வருகின்றனர் என்று நீங்கள் சொல்லியிருப்பது மிகச்சரியே.   

  • கருத்துக்கள உறவுகள்

கனகாலத்தின் பின் இந்தத் திரி வாசிக்க நன்றாக உள்ளது . ........ அடுத்த பாடலையும் அதன் பயனையும் தொடருங்கள் . ........!

இன்னும் சிலர் யாழுக்கு வெளியேயும் அறியப்பட்ட எழுத்தாளர்களாக இருக்கின்றனர் . .......!

--- வல்வை சகாரா ........!

--- நெற்கொழுதாசன் . .....!

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2025 at 04:45, ரசோதரன் said:

உங்களின் பார்வையில் தவறு இல்லை, வசீ, அது இன்னொரு வகையானது என்று தான் சொல்லப்பட அல்லது வகைப்படுத்தப்பட வேண்டும். 

'இப்படி எழுதும் அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தது...........' என்று ராஜாஜி புதுமைப்பித்தனின் எழுத்துகள் குறித்து கேள்வி எழுப்பியதாகச் சொல்லப்படுகின்றது. 'சாபவிமோசனம்' கதையைப் படித்த பின்னர், அவருக்கு அப்படி தோன்றியது போல. 

ஆற்றில், நீரில் மிதந்து வரும் மனிதக் கழிவுகளுக்கு ஒப்பானது என்று சாருவின் எழுத்தை சொன்ன இலக்கியவாதிகளும் உண்டு.

இன்றைய ஈழத்து படைப்பாளிகளில், முத்துலிங்கத்தை ஷோபா சக்தி ஏற்றுக்கொள்வதில்லை. 

இப்படியான பல உதாரணங்கள் உண்டு. எந்த நவீன படைப்புகளையுமே, படைப்பாளிகளையும் உலகம் ஒற்றுமையாக ஏற்றுக் கொள்ளாது போல.  

தமிழில் மொழிபெயர்ப்பில் இருக்கும் சிக்கல்கள் என்றுமே அப்படியே இருக்கின்றது. பெரும்பாலும், இரண்டு மொழிகளும் தெரிந்த, ஆனால் இலக்கியத்தில் பயிற்சி இல்லாதவர்களே மொழிபெயர்ப்பாளர்களாக இருப்பதே அதற்குக் காரணம். கோவிட் காலத்தில் 'அன்னா கரேனினா' இன் ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு வாட்ஸ்அப் குழுமங்களில் வந்தது. அதைக் கொடுமை என்று சாதாரணமாக சொல்லிவிட்டுப் போக முடியாது, அது ஒரு பெரிய அவமதிப்பு என்றும் சொல்லவேண்டும்.  இந்த மொழிபெயர்ப்பாளார்கள் மூலப் பிரதியை உள்வாங்காமலேயே ஏதோ ஒன்றைச் செய்கின்றார்கள்.

 நாளைய உலகை உருவாக்குபவர்கள் இன்று வாழ்பவர்களில் மிகமிகச் சிறிய ஒரு பகுதியினரே. இலக்கியவாதிகள், இலட்சியவாதிகளும் அதற்குள் வருகின்றனர் என்று நீங்கள் சொல்லியிருப்பது மிகச்சரியே.   

பல மொழிகள் வரும் படைப்புக்கள் ஆங்கிலத்திற்கு மாறி ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கு மாறி வரும் இலக்கியங்கள் அதன் வடிவத்தினை இழந்திருக்கலாம்.

பொதுவாக இலக்கிய வளர்ச்சி அதன் மொழிவளர்ச்சிக்கு உதவும், ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு தற்போதய நவீன இலக்கியங்கள் எந்த உதவியும் செய்யவில்லை மாறாக மொழி சிதைவிற்கே வழிவகுக்கிறது என கருதுகிறேன்.

இதற்கு காரணம் மக்களின் வாழ்க்கையினை பிரதிபலிக்கும் இலக்கியங்களை உருவாக்குவதற்காக மொழி நடை இலக்கியங்கள் உருவாக்கப்படுகின்றன, ஆனால் குறித்த இலக்கியங்கள் மக்களை சரியாக உணராமல் உருவாக்கப்படும் போது அது சமுக வளர்ச்சி, மொழி வளர்ச்சி என்பவற்றிற்கு இடையூறாக இருக்கின்றன.

உண்மையில் இந்த நவீன இல்க்கியங்களை விமர்சனத்திற்கு உட்படுத்த எனக்கு எந்த தகுதியும் இல்லை, எனக்கு புதிய தமிழ் இலக்கிய  ஆசிரியர்களின் படைப்புக்களை சிலவேளைகளில் வாசித்திருக்கலாம் ஆனால் அவர்களின் பெயர்களை நீங்கள் அனைவரும் குறிப்பிடும் போது வெறுமனே கேள்விப்பட்டுள்ளேன் அது தவிர மேற்கொண்டு அவர்களது இலக்கியங்களை இலவசமாக இணையத்தில் வாசிப்பதற்கு கூட முயற்சி எடுத்ததில்லை, அப்படி வாசித்திருந்தாலும் அதன் தாக்கத்தினை நான் உணரவில்லை என கருதுகிறேன்.

ஏன் தமிழ் மொழியில் பெங்காலிய இலக்கியங்கங்கள் போல நவீன இலக்கியத்தில் தாக்கம் செலுத்த முடியவில்லை?

தமிழ் மொழியில் வெளியான பழைய இலக்கியங்களை தவிர்த்து பார்த்தால் நவீன இலக்கியங்களால் ஏன் சிறந்த இலக்கியத்தினை வழங்கமுடியவில்லை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, vasee said:

ஏன் தமிழ் மொழியில் பெங்காலிய இலக்கியங்கங்கள் போல நவீன இலக்கியத்தில் தாக்கம் செலுத்த முடியவில்லை?

தமிழ் மொழியில் வெளியான பழைய இலக்கியங்களை தவிர்த்து பார்த்தால் நவீன இலக்கியங்களால் ஏன் சிறந்த இலக்கியத்தினை வழங்கமுடியவில்லை?

தமிழில் இருக்கும் பழைய இலக்கியங்கள் சிறந்தது என்று சொல்கின்றோம். ஆனால், இன்றிருக்கும் தமிழர்களில் கம்பரின் கம்பராமாயணத்தில் இருக்கும் பத்து பாடல்களை என்றாலும் எந்த துணையும் இல்லாமல் வாசித்து பொருளும், அதன் அழகும் அறியும் ஆற்றல் எத்தனை பேருக்கு உள்ளது என்பது வருத்தமளிக்கும் ஒரு விடையையே கொடுக்கும். இதுவே தான் இரண்டு வரிகள் உள்ள திருக்குறளுக்கும். 'அகர முதல எழுத்தெல்லாம்.................' என்னும் முதற் குறளையே அதன் அர்த்தத்தில் எத்தனை வீதமானவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று பார்த்தோம் என்றால், அங்கேயும் ஏமாற்றம் தான் மிஞ்சும். இன்றைய தமிழர்கள் மத்தியில் இளங்கோவடிகள் நிலை இன்னும் பரிதாபம்.

ஆகவே, அன்றைய இலக்கியம் - இன்றைய இலக்கியம் என்பதன் ஊடாக வரும் வேறுபாட்டை விட, அன்றைய தமிழ் சமூகம் - இன்றைய தமிழ் சமூகம் என்பதன் ஊடாக வரும் வேறுபாடே பிரதான ஒரு காரணியாக இருக்கின்றது என்று நான் நினைக்கின்றேன்.

தேவாரங்கள், திருவாசகங்கள், அதையொட்டிய பக்தி இலக்கியங்கள், கூட்டுப் பாடல்கள் போன்றவை தான் கடைசி ஆயிரம் வருடங்களிற்கு மேலாக தமிழ் மொழியில் இருந்த பெரும்பாலான இலக்கியச் செயற்பாடுகளாகவும் இருந்தன. இதே கால கட்டத்தில் நாயக்கர்களின் வருகை, முகாலயர்களின் வருகை, ஐரோப்பியர்களின் வருகை என்பனவும் அடங்குகின்றன. மொழியில், இலக்கியத்தில், தனிமனித சிந்தனைகளில் சுதந்திரமான எந்த எழுச்சியும் இந்தக் காலகட்டதில் நடக்கவும் இல்லை. பாரதியார் வரும் வரை இதுவே தான் நிலைமை. தமிழ் மொழியின் உண்மையான இருண்ட காலம் இங்கே தான் உருவாகியது என்று நான் நினைக்கின்றேன்.

அதன் பின்னர், எங்கேயோ போய் விட்டிருந்த உலகத்தை ஓடிப் பிடிக்க எங்களில் சிலர் முயன்றார்கள். ஆனாலும் மக்களைக் கவர்வதில் சினிமாவும், அரசியலும் ஒரு மாய உலகத்தை உருவாக்கி முழுச் சமூகத்தின் ரசனையையும், தேவையையும் மாற்றிவிட்டார்கள். மிகவும் மேம்போக்கான சிந்தனைகள், கருத்துகள், ரசனைகள் என்பனவே எங்களின் அடையாளமாக மாறிப் போய்விட்டன. இளங்கோவடிகள் இன்றிருந்து இன்னொரு சிலப்பதிகாரத்தையே இன்று, இன்றைய வழக்கில் எழுதினாலும், அதுவும் இருநூறு பிரதிகளே இன்று விற்பனையாகும். ஒரு இரண்டாயிரம் பேருக்கு மட்டுமே அவரைத் தெரியவரும். அவர் வீட்டில் அடுப்பு எரியாது.

தமிழில் பாரதிக்கு பின் வந்த ஒரு நூறு எழுத்தாளர்களின் ஆயிரம் படைப்புகளாவது மண்ணையும், மக்களையும், வரலாற்றையும், பண்பாட்டையும் சொல்லி நிற்கின்றது. இவை தமிழில் நவீன உலகத்திற்கான ஒரு உரைநடையை அறிமுகப்படுத்தியும் இருக்கின்றன. ஆனால், தமிழ் மக்கள் மட்டும் இல்லை, தெலுங்கு மக்களும் கூட தொடர்ச்சியாக அவர்களின் மொழியை, அவற்றின் அழகை இழந்து கொண்டே இருக்கின்றார்கள். மேற்கு வங்கமும், கேரளாவும் இந்தச் சுழலுக்குள் அகப்படவில்லை. இது அங்கே இடதுசாரிகள் பலமாகும் முன்னேயே இருந்த நிலையும் கூட.

ஹெமிங்வேயையும், 'கிழவனும் கடலும்' பற்றிக் கூட பேசும் தமிழர்கள் இருக்கின்றார்கள். ஆனால், ப.சிங்காரம் பற்றியோ அல்லது அவரின் 'புயலில் ஒரு தோணி' பற்றியோ பேசுவோரை எண்ணிவிடலாம். தமிழில் வந்த நாவல்களில் ஆகச் சிறந்தது என்று சொல்லகூடியது 'புயலில் ஒரு தோணி'. சிங்காரம் அப்படியே வெறுத்து ஒதுங்கினார். அவர் கடைசி நாட்களில் எவருடனும் பேசக்கூட விரும்பவில்லை.

இன்றும் அதே நிலை தான். 'கொற்றவை' நாவலை மிகவும் பிராயசைப்பட்டே வாசிக்க ஆரம்பித்தேன். முடிவில் பெரும் பிரமிப்பாக அது முடிந்தது. அது ஒரு வாழ்வனுபவமாக இறுதிவரை வரும்.

எங்களின் சமூகம் ஏன், எப்படி இப்படியாகியது என்று ஆரம்பிப்பதே சரியான கேள்விகளாக இருக்குமோ என்று எனக்குத் தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

ஹெமிங்வேயையும், 'கிழவனும் கடலும்' பற்றிக் கூட பேசும் தமிழர்கள் இருக்கின்றார்கள். ஆனால், ப.சிங்காரம் பற்றியோ அல்லது அவரின் 'புயலில் ஒரு தோணி' பற்றியோ பேசுவோரை எண்ணிவிடலாம். தமிழில் வந்த நாவல்களில் ஆகச் சிறந்தது என்று சொல்லகூடியது 'புயலில் ஒரு தோணி'. சிங்காரம் அப்படியே வெறுத்து ஒதுங்கினார். அவர் கடைசி நாட்களில் எவருடனும் பேசக்கூட விரும்பவில்லை.

வர்த்தக மயப்பட்ட சூழல், வாசகர்களின் எதிர்பார்ப்பு இப்படியான யதார்த்தமான இலக்கியங்கள் மக்கள் கண்டு கொள்ளாமைக்கு காரணமாக இருக்கலாம், மக்கள் யதார்த்தத்திற்கு அப்பால் ஒரு கற்பனா உலகில் சஞ்சரிக்க விரும்புகின்ற வாசகர்களுக்கு அவர்கள் விரும்பும் யதார்த்தமற்ற கற்பனைகளை இலகுவாக விற்க முடியுமாக இருக்கலாம்.

2 hours ago, ரசோதரன் said:

எங்களின் சமூகம் ஏன், எப்படி இப்படியாகியது என்று ஆரம்பிப்பதே சரியான கேள்விகளாக இருக்குமோ என்று எனக்குத் தோன்றுகின்றது.

இது ஒரு துணிச்சலான  ஆனால் நியாயமான கேள்வி, திரைப்படங்கள் கூட இவ்வாறான பாதையிலேயே இன்னமும் பயணிக்கின்றது.

முழுவதுமாக வாசகர்களை குறை சொல்ல முடியாது எழுத்தாளர்களும் இதில் பங்குதாரர்கள்தான், சிறந்த மக்கள் பிரச்சினையினை கூறும் ஆக்கங்களுக்கு சரியான வரவேற்பு அதன் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதில்லைதான், ஆனால் தற்போதய இணைய வளர்ச்சி அதற்கான அடித்தளத்தினை வழங்கியிருந்தும் கதாசிரியர்கள் இன்னமும் கற்பனா இலக்கியங்களை கொடுப்பதில்தான் முன்நிற்கிறார்கள், அதற்கு காரணம் தேடல் குறைந்துவிட்டது.

ஒரு விடயத்தினை பற்றிய புரிதலுக்கு அது தொடர்பான முழு அறிவு தேவையாக இருக்கிறது.

கதைகளை வாசிப்பதனை நிறுத்தி வருடங்களாகின்றன, சிறு வயதில் வாசிப்பதுண்டு பின்னர் அதற்கான நேரமும் சந்தர்ப்பமும் அமையவில்லை, அதனால் பெரியவர்களுக்கான இலக்கியங்கள் வாசிக்கவில்லை, தற்போது விரும்பினாலும் கதைகளை வாசிப்பதற்கு முடியாமல் இருக்கின்றது.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

large.2063697680_.jpg

பழசுகள் waiting 😁 @ரசோதரன் அண்ணை.

Edited by villavan
adding reference of user.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, villavan said:

large.2063697680_.jpg

பழசுகள் waiting 😁 @ரசோதரன் அண்ணை.

🤣..........

இரண்டு பஸ்கள் பிரேக்டவுண் ஆகி நிற்கின்றன போல..........

பழைய பஸ் டிப்போ கதை ஒன்று இப்ப நினைவில் வருகின்றது.......🤣.

அசத்தலான படங்கள் வில்லவன்.........👍.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2025 at 03:59, ரசோதரன் said:

பஸ்கள் பிரேக்டவுண் ஆகி நிற்கின்றன போல

நாங்கள் பேருந்துக்கு கால் கடுக்கக் காத்திருக்கும் போது எதிர்ப்பக்கமாத் தான் வாகனங்கள் போகும். மர்பியின் விதிகள் போல. 😄

டிப்போக் கதையைக் கேட்க ஆவல் 🫡

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, villavan said:

டிப்போக் கதையைக் கேட்க ஆவல் 🫡

அப்பொழுது GELT வகுப்புகள் நடந்த காலம். ஜேவிபி பிரச்சனையால் பல்கலைகள் மூடியிருந்தன. நாங்கள் அனுமதி பெற்றுவிட்டு வீட்டிலேயே இருந்தோம். இப்படியே சும்மாவே இருக்கின்றார்களே என்று அரசாங்கம் இந்த வகுப்புகளை ஆரம்பித்தது. ஆங்கிலம் படிபித்தார்கள். அத்துடன் சில இடங்களுக்கு வேலை அனுபவம் அல்லது அறிமுகம் பெறவும் அனுப்பி வைத்தார்கள்.

வகுப்புகள் சில நாட்களில், வேலை சில நாட்களில் என்று போய்க் கொண்டிருந்தது என்று நினைக்கின்றேன். ஆங்கில வகுப்பின் நாலாம் நாள். நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் நடந்து கொண்டிருந்தது. வகுப்பு நடந்து கொண்டிருந்த போது, ஹெலிகாப்டர் ஒன்று வந்து சுட்டார்கள். மேசைக்கு கீழே ஆங்கில ஆசிரியரையும் கண்டேன். அதற்குப் பின் நான் அந்த வகுப்புகளுக்கு போகவேயில்லை.

அரசாங்கம் தான் நாங்கள் சும்மா இருக்கின்றோம் என்று நினைத்தது, ஆனால் ஊரில் நாங்கள் உண்மையிலேயே பிசியாக இருந்தோம்.......................

வேலைக்கு கட்டாயம் போக வேண்டி இருந்தது. வரவு எடுத்து, அதை நிரப்பி, எங்கோ அனுப்பிக் கொண்டிருந்தார்கள். கச்சேரி, டிப்போ, துறைமுகம், மருத்துவமனை, இப்படியான இடங்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர்.

பருத்தித்துறை டிப்போவிற்கு எங்களில் சிலரை அனுப்பியிருந்தனர். அதில் சிலர் அங்கிருந்த கராஜில் போய் புதினம் பார்த்தார்கள். சிலர் டிப்போ அலுவலகத்தில் நின்றனர்.

அங்கு எங்களின் பயிற்சிக் காலம் முடிந்த பின், பஸ் சேவையை எப்படி முன்னேற்றலாம் என்று எங்கள் ஒவ்வொருவரையும் கட்டுரை எழுதித் தரும்படி கேட்டிருந்தனர். நாங்கள் கூடிப் பேசி, நிறைகளையும் குறைகளையும் பட்டியலிட்டு, தீர்வுகளையும் கதைத்துக் கொண்டோம். தனித்தனியே எழுதியும் கொடுத்தோம்.

பின்னர் ஒரு நாள் எங்களை எல்லாம் டிப்போவிற்கு கூப்பிட்டிருந்தனர். எல்லோரையும் பொதுவாக பாராட்டி விட்டு, எங்களில் ஒரே ஒரு ஆள் மட்டும் கண்டைதையும், கடியதையும் எழுதியிருக்கின்றார் என்று கோபப்பட்டனர்.

இனிமேல் இவர்கள் எவர்களையும் நம்பவே கூடாது அன்று நினைத்தேன்................🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.