Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெகவில் முக்கிய பொறுப்பு.. நிர்மல் குமார் - ராஜ்மோகனுக்கும் பதவி தந்த விஜய்

Nantha Kumar RUpdated: Friday, January 31, 2025, 15:43 [IST]
 
tvk aadhav arjuna vijay

சென்னை: விசிகவில் இருந்து விலகி தவெகவில் இன்று இணைந்த ஆதவ் அர்ஜுனா, அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் பிரபல பேச்சாளர் ராஜ்மோகன் உள்ளிட்டோருக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய பொறுப்புகளை நடிகர் விஜய் வழங்கி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். தற்போது கட்சிக்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றன. கட்சி சார்பில் மொத்தம் 120 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்கள் நியமனங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில் தான் இன்று சென்னை பனையூரில் உள்ள தவெகவின் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து நடிகர் விஜய் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதோடு புதிய மாவட்ட செயலாளர்கள் குறித்த அறிவிப்பை அவர்வெளியிட்டு வருகிறார்.

சென்னையில் இன்று தவெகவில் முக்கிய பிரமுகர்கள் விஜய் முன்னிலையில் இணைந்தனர். அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா மற்றும் அதிமுகவில் இருந்து விலகிய சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் பிரபல பேச்சாளரும், யூடியூபருமான ராஜ்மோகன் ஆகியோர் இன்று தவெகவில் இணைந்தனர். கட்சி அலுவகத்துக்கு வந்த 3 பேரையும் தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரேவற்றார். அதன்பிறகு 3 பேரும் கட்சியில் அதிகாரப்பூர்வமாக விஜய் முன்னிலையில் இணைந்தனர்.

கட்சியில் இணைந்த 3 பேருக்கும் உடனடியாக தவெகவில் பதவி என்பது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஆதவ் அர்ஜுனா
தவெகவின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தவெகவில் மிகவும் முக்கிய பொறுப்பாகும். ஏனென்றால் தேர்தல் சார்ந்த பணிகளை ஆதவ் அர்ஜுனா மேற்கொள்ள உள்ளார். அதாவது வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம், அவர்களுக்கான பயிற்சி பட்டறை, தேர்தலுக்கு கட்சி தொண்டர்களை தயார் செய்யும் பணியை ஆதவ் அர்ஜுனா மேற்கொள்ள உள்ளார்.

ரசிகர் மன்றமாக, மக்கள் மன்றமாக உள்ள ரசிகர்கள் தவெகவின் தொண்டர்களாக மாறி உள்ள நிலையில் அவர்களை ஒருங்கிணைத்து பணி செய்யும் வகைகளை ஆதவ் அர்ஜுனாவுக்கு இந்த பொறுப்பு என்பது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்தல் தொடர்பான பணியை மேற்கொண்ட அனுபவம் ஆதவ் அர்ஜுனாவுக்கு உள்ளது. பிரபல அரசியல் வியூகரான பிரசாந்த் கிஷோருடன் இணைந்து தமிழக அரசியல் களத்தை பற்றி அவர் அறிந்து வைத்துள்ளார். கடந்த 2016, 2019 மற்றும் 2021 என தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் திமுகவின் அரசியல் வியூக வகுப்பாளர்களுடன் சேர்ந்து ஆதவ் அர்ஜுனாவும் செயல்பட்டார்.

'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' அமைப்பை தொடங்கியிருந்தார். அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார். அந்த கட்சியில் துணை பொதுச்செயலாளராக செயல்பட்டார். விசிக இப்போது திமுக கூட்டணியில் உள்ளது. இந்நிலையில் தான் விசிகவில் இருந்து கொண்டே திமுகவை கடுமையாக ஆதவ் அர்ஜுனா விமர்சித்தார். இதனால் அவர் விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் கட்சியில் இருந்து விலகிய நிலையில் இப்போது தவெகவில் சேர்ந்துள்ளார்.

அதேபோல் அதிமுகவில் இருந்து விலகிய தவெகவில் இணைந்த சிடிஆர் நிர்மல் குமாருக்கு கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் செயல்பட்டு வருகிறார். இவருக்கு பக்கப்பலமாக சிடிஆர் நிர்மல் குமார் செயல்பட உள்ளார்.

அதேபோல் பிரபல யூடியூபரும், பேச்சாளருமான ராஜ்மோகன் தவெகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒரு கட்சி என்றால் அதற்கு கொள்கைகள் என்பது மிகவும் முக்கியம். அதோடு கட்சியில் இருக்கும் நிர்வாகிகள், தொண்டர்கள் வரை கொள்கைகள் என்பது சென்றடைய வேண்டும். அப்போது தான் கட்சி கொள்கை ரீதியாக வலுவாக நிலைத்து நிற்கும். அந்த வகையில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி ராஜ்மோகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் சிறந்த பேச்சாளர்களாக அறியப்படும் நிலையில் அவர் இனி தவெகவின் கொள்கைகளை பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொள்வார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

https://tamil.oneindia.com/news/chennai/aadhav-arjuna-ctr-nirmala-kumar-and-rajmohan-joins-vijays-tvk-party-and-gets-important-posting-de-676065.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

டிஸ்கி

1. லாட்டரி மார்டீனின் மருமகன் ஆதவ். மார்ட்டின் தனது குடும்ப உறவு ஒருவர் ஆட்சி அதிகாரத்தை எடுக்க கூடிய சகல பகுதியிலும் இருக்கும்படி பார்த்து கொள்வார் என்பார்கள் (யார் ஆட்சிக்கு வந்தாலும் மார்ட்டினின் லாபி அதிகாரத்து அருகே இருக்கும்).

ஆதவ் விஜையிடம் போனது மார்ட்டின் விஜையின் வாய்ப்புகளை அங்கிகரிப்பதாக கொள்ளலாம்.

ஆனால் ஊழலில் சிக்காதவாறு விஜை பார்த்து கொள்ள வேண்டும்.

2. காளியம்மா - நேர காலத்தோட கிளம்புமா. பெண் கொ.ப.செ வெற்றிடம் அப்படியேதான் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

லாட்டரி மார்டீனின் மருமகன் ஆதவ். மார்ட்டின் தனது குடும்ப உறவு ஒருவர் ஆட்சி அதிகாரத்தை எடுக்க கூடிய சகல பகுதியிலும் இருக்கும்படி பார்த்து கொள்வார் என்பார்கள் (யார் ஆட்சிக்கு வந்தாலும் மார்ட்டினின் லாபி அதிகாரத்து அருகே இருக்கும்).

ஆதவ் விஜையிடம் போனது மார்ட்டின் விஜையின் வாய்ப்புகளை அங்கிகரிப்பதாக கொள்ளலாம்.

இந்த வார ஆரம்பத்தில் கூட ஆதவ் அதிமுகவில் இணைவதாகவே செய்திகள் கசிந்து கொண்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் தவெக பக்கம் வந்துவிட்டார். கிஷோரின் கருத்துப்படி, இன்றைய நிலையில் அதிமுகவும், தவெகவும் இணைந்து தேர்தலை சந்திப்பதே திமுகவை நெருக்கடிக்குள்ளாக்கும் ஒரேயொரு வழி. வேறு எந்தக் கூட்டணியுமே திமுகவை அசைக்கமுடியாது.

புஸ்ஸி ஆனந்த் அதிமுகவிடம் தவெக நெருங்குவதை விரும்புவது போல தெரியவில்லை. அவருக்கு வேறொரு திட்டம் இருக்கலாம். தவெகவை அதிமுகவுடன் கூட்டணியாக்க ஆதவ்வால் முடியும். மேலும், தவெகவில் ஆதவ் மிகக் குறுகிய காலத்திலேயே நம்பர் 2 என்னும் நிலைக்கும் வந்துவிடுவார். எடுத்த எடுப்பிலேயே நம்பர் 3 ஆக உள்ளே போகின்றார்.

சில வாரங்களின் முன், ஆதவ் விசிகவையும் திருமாவையும் விட்டு விலகும் போது, இங்கே களத்தில் நான் எழுதியிருந்தேன் - இதையிட்டு தமிழ்நாட்டில் அதிகூடிய கவலை கொள்ள வேண்டியவர் புஸ்ஸி ஆனந்த் என்று. இப்போது தவெகவின் பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன.

ஆதவ் இன்று  லாட்டரி மருமகன், அதனால் இன்று நிதி வசதிகள், பின்புலம் எக்கச்சக்கமாக உள்ளவர். அதே நேரத்தில், இவரது தனிப்பட்ட ஆளுமை, முன்னைய நாட்கள் எல்லாம் முற்றாக வேறானவை. மிகவும் திறன் கொண்ட, அதே நேரத்தில் அளவில்லாத பிடிவாதமும் கொண்டவர் போலவே இருக்கின்றார். அடிப்படையான சில மாற்றங்களை தமிழ்நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றார். ஆனால், பின்னர் உதயநிதியுடன் வந்த மோதலால், இன்று ஆதவ்வின் முழுச் சக்தியும் உதயநிதிக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகின்றது. ஆதவ்வா அல்லது உதயநிதியா என்பது தான் உள்ளிருக்கும் போட்டி. 

தமிழ்நாட்டிற்கு இந்தப் போட்டி நல்லதொரு வருகை. திமுகவை யோசிக்கவைக்கும், தான்தோன்றித்தனமாக அவர்கள் நடக்க எத்தனித்தால் இந்தப் போட்டி அவர்களை கட்டுப்படுத்தும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரசோதரன் said:

ஆனந்தை விடுங்கோ….ஆதவ் தவெகவையே ஆட்டையை போட்டாலும் போடல்கூடும் என நான் நினைக்கிறேன்.

தனது முன்றேற்றம் மட்டுமே குறி, கொள்கை, கோட்பாடு எல்லாம் இரெண்டாம் பட்சம் என பட்டவர்தனமாக நடப்பவராக எனக்கு படுகிறது.

அத்தோடு தலைமைக்கு கீழ் படிதலும் இல்லை.

திருமா எவ்வளவோ விட்டு பிடித்தும் உள்ளே இருந்து குடைச்சல் மேல் குடைச்சல் கொடுத்தார்.

விஜை சொந்த செலவில் சூனியம் வைப்பதாய் முடியலாம்.

காளிஅம்மாள் போல கொள்கைவாதிகளை, கட்சி ஒழுக்கம் உள்ளவர்களை விஜை ஈர்க்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

காளிஅம்மாள் போல கொள்கைவாதிகளை, கட்சி ஒழுக்கம் உள்ளவர்களை விஜை ஈர்க்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.

ஆதவ் மக்களிடையே பிரபல்யம் இல்லை என்பது அவரது பெரிய பலவீனம். அதனால் தான் இப்பொதைக்கு எங்கென்றாலும் நம்பர் 2 ஆக இருந்தால் போதும் என்று ஒரு கணக்கு வைத்திருக்கின்றார் போல. மக்கள் பிரபல்யமும் ஆதவ்விற்கு கிடைத்து விட்டால், விஜய் ஆதவ்விற்கு ஒரு நேர உணவாகிவிடுவார்..................

விஜய் ஒரு அரசியல்வாதியாக வருவதற்கு முன் நான் போய்ச் சேர்ந்து விடுவேன் போல................🤣.

அன்று கூட விஜய்யின் முதலாவது களப் போராட்டத்தில், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராகப் போராடும் மக்களுடனான சந்திப்பு, வெறும் எட்டு நிமிடங்கள் தான், அதுவும் கேரவானை விட்டு இறங்கவேமாட்டன் என்று அங்கே மேலேயே நின்றார்.

இதுவே எம்ஜிஆராக இருந்தால், ஒரு குடிசைக்குள் புகுந்து, அவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு, 'தாய்க்குலமே..... ரத்தத்தின் ரத்தங்களே..................' என்று அவரே அவருக்கென்று எழுதிய வசனங்களை சொல்லிவிட்டு வந்திருப்பார்..................😜. அதற்குப் பின், பரந்தூரும் சுற்று வட்டாரமும் காலம் உள்ள வரைக்கும் இரட்டை இலை தான்..................   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரசோதரன் said:

எம்ஜிஆர் கட்சி தொடங்கும் போதே தேர்ந்த அரசியல்வாதி, இயல்பிலேயே ஏழைகள் நேசன், அடிமட்டத்தில் இருந்து வந்ததால் மீண்டும் அங்கே அசூசை இன்றி போக முடிந்தது.

நம்ம இளசு அப்படி இல்லைத்தானே, வெற்றிபட இயக்குனரின் மகன், லயோலா அலும்னி, இலண்டன் மாப்பிள்ளை - ஏழை எளியவர் மீது ஒவ்வாமை இருப்பது - இந்திய வாழ்க்கை முறையில் வழமை என்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள்.

ஆனால் கட்டாயம் எம்ஜிஆர் போல இறங்கி ஆடினால்தான் வெல்ல முடியும் எனவும் நான் நினைக்கவில்லை.

ஜெ டெம்போ டிரவலரில் இருந்து அரசியல் செய்தார். பின்னாளில் அது ஹெலிகொப்டராக மாறியது, ஆனாலும் வாக்கு விழத்தான் செய்தது.

ஆனாலும் ஜெ யிடம் ஒரு மக்கள் கவர்ச்சி இருந்தது.  பிராமண பெண்ணாக இருந்தாலும், அவர் பெரியார் கொள்கைகளில் சமரசம் செய்யமாட்டார் என மக்கள் நம்பினார்கள். இட ஒதுகீடு, நீட் என பலதில் அவரும் அந்த நம்பிக்கையை காப்பாற்றினார்.

விஜையிடம் இந்த கவர்ச்சி இருந்தாலும் நம்பிக்கை இருக்கிறதா என்பதே கேள்வி. அதை பெற விஜை இன்னும் கடுமையாக அரசியல் செய்ய வேண்டும்.

உதாரணமாக அண்மைய பெரியார் அவதூறு விடயத்தில் சீமானையும், பிஜேபியையும் விட்டு விளாசி இருப்பின், திமுக சாராத திராவிட சார்பு வாக்குகளை அள்ளி இருக்கலாம்.

இப்படி செய்யும் போது இயற்கையாகவே அதிமுக, விசிக, திக அனுதாபிகள் கவனம் அவர் மீது விழும். பெரியார் கொள்கைகளில் சோரம் போகாதா திமுகவுக்கான மாற்று என்ற விம்பம் வலு பெறும்.

ஆனால் இளசு ஒரு அறிக்கையோடு அடங்கி விட்டார்.

விஜை அரசியலில் தேறமுதல் அவரே போய் சேர்ந்து விடக்கூடும்🤣

  • கருத்துக்கள உறவுகள்

மற்ற கட்சிகளிலுருந்து ஆட்களை உள்வாங்குவதும் அவர்களுக்கு ஏற்கனவே கட்சியில் உறுப்பினராக உள்ளவர்களை விட அதிக முக்கியத்துவம் மற்றும் பதவி கொடுப்பதும் கட்சிக்குள் விரிசலை மட்டுமே உண்டு பண்ணும். வந்தவர்களுக்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை இலகுவாக்கிவிடும். பாவம் விஜய். படமும் பணமும் குடும்பமும் போய் அரசியலை உணரும் போது எல்லாவற்றையும் தொலைத்த அநாதையாக நிற்பார். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.