Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
31 Jan, 2025 | 02:40 PM
image
 

னாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (31) நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பல்வேறு கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தார். 

1. யாழ். போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி உடனடியாக அமைக்கப்படல் வேண்டும்.

2. யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள நோயாளர் விடுதிகள் அதிகளவான நோயாளர்களால் நிரம்பி வழிகிறது. பல விடுதிகளில் கட்டில்கள் பற்றாக்குறை காரணமாக அவ்வப்போது நோயாளர்கள் தரையிலும் இரவு முழுவதும் கதிரைகளில் அமர்ந்தவாறும் ஒரு கட்டிலில் இரண்டு நோயாளர்கள்  என உறங்கவேண்டிய நிலைமைகள் காணப்படுகின்றன. நோயாளிகளைப் பராமரிப்பதற்காக உடனிருப்பவர்கள் பல மணிநேரமாக நின்ற நிலையிலேயே பராமரிப்பு பணிகளில் ஈடுபடவேண்டிய நிலையில் உள்ளனர். இந்நிலை உடனடியாக சீர் செய்யப்பட வேண்டும்.  

3. யாழ். பண்ணையில் அமைந்துள்ள மார்பக சிகிச்சை (காச நோய்) பிரிவில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். மயிலிட்டியில் அமைந்திருந்த காசநோய் பிரிவை அந்த இடத்தில் மீளவும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மயிலிட்டியில் இயங்கிய காசநோய் வைத்தியசாலை தற்காலிகமாக கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் இயங்குகிறது. ஆனாலும் அங்கு அந்த அலகுக்கான ஆளணிகள் எதுவும் நியமிக்கப்படவில்லை. உடனடியாக ஆளணி நியமனம் செய்யப்பட வேண்டும்.

பண்ணையில் உள்ள மார்பக சிகிச்சை நிலையத்துக்கென நிரந்தரமான எக்ஸ்ரே றேடியோ கிறாபர் (x-ray radiographer) இல்லை. அவர்களை நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும். (தற்போது திங்கள், புதன் ஆகிய இரண்டு நாட்கள் மட்டும்)

இவ்வைத்தியசாலையில் பரிசோதனைக்காக பெறப்படும் சளி மாதிரிகளை பாதுகாப்பாக களஞ்சியப்படுத்துவதற்கான குளிர்சாதனப் பெட்டிகள் பெரும் பற்றாக்குறையாக உள்ளது. பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகள் ஐந்து நாட்களுக்குள் சோதனை செய்யப்பட வேண்டும். ஆனால், உரிய கருவிகள் இன்மையால் ஒரு வருடத்துக்கும் மேலாக சேமிப்பில் உள்ள நிலை காணப்படுகிறது. இந்நிலை சீர் செய்யப்பட வேண்டும்.  

4. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெருமளவான இளையோர் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாகி வருகின்றனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வளித்து, அவர்களை மீட்டெடுப்பதற்கான புனர்வாழ்வு நிலையம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைக்கப்பட வேண்டும்.

5. யாழ். மாவட்டத்தில் கடற்றொழில் படகுகளை பாதுகாப்பதற்கான கல்லணைகள் அமைத்தல்:

பருத்தித்துறை மூர்க்கம், முனை, கொட்டடி கடற்கரை, சுப்பர்மடம், இன்பர்சிட்டி கடற்கரை, சக்கோட்டை கடற்கரை,  திக்கம் கடற்கரை, கொத்தியால் கடற்கரை, றேவடி கடற்கரை, ஆதிகோவிலடி கடற்கரை, தொண்டைமானாறு கடற்கரை, பலாலி கடற்கரை, சேந்தான்குளம் கடற்கரை, மாதகல் கடற்கரை ஆகிய இடங்களில் படகுகள் தரித்து நிற்கும் இடங்களில் படகுகளைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு கல்லணைகள் அமைக்கப்பட வேண்டும்.  

படகுகள் நுழையும் பகுதிகளை ஆழமாக்குதல்:

மூர்க்கம் தொடக்கம் மாதகல் வரை படகுகள் தொழிலுக்காக இறக்கப்படும் நுழைவு வான்கள் நீண்டகாலமாக ஆழப்படுத்தப்படாமையினால்  படகுகள் சேதமடைகின்றன. படகுகள் சேதமடைவதனை தடுக்கும் வகையில் குறித்த இடங்கள் உடனடியாக ஆழப்படுத்தப்படல் வேண்டும்.  

கொத்தியால் கடற்கரையில் படகுகள் தரிப்பிடத்தில் அகழப்பட்ட மண்ணை அப்புறப்படுத்த நடவடிகை எடுத்தல்:

வல்வெட்டித்துறை கிழக்கு கிராமிய கடற்தொழில் அமைப்பினருக்குச் சொந்தமான படகுகள் தரித்து நிற்கும் பகுதியிலிருந்து அகழப்பட்ட மண் கடற்கரையிலேயே குவிக்கப்பட்டுள்ளது. அந்த மண் மீண்டும் மீண்டும் இறங்குதுறைக்குச் சென்று படகுகள் நிறுத்தும் பகுதியை மூடுவதனால் படகுகளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கொட்டப்பட்டுள்ள மண்ணை அகற்றுவதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இன்னமும் வழங்கவில்லை. எனவே, அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள மண்ணை அண்மையிலுள்ள பொது அமைப்புக்களது பயன்பாட்டுக்காக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.

6. இந்திய மீனவர்களால் வலைகள், படகுகள், சேதமாக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.

7. கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட விவசாய அழிவுகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.

8. யாழ். குடாநாட்டில் சொந்த காணிகள் மற்றும் வீடுகள் இல்லாதவர்களுக்கு காணிகள் வழங்கவும் வீடுகள் கட்டிக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வீட்டுத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி போதாமல் உள்ளது, அத்தொகை அதிகரிக்கப்பட வேண்டும்.

9. தையிட்டியில் தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானம் அகற்றப்பட வேண்டும். தனியார் காணிகள் அனைத்தும் பொது மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

10. மயிலிட்டியில் விடுவிக்கப்படாத மூன்று கிராம சேவையாளர் பிரிவுகள் உட்பட யாழ். குடாநாட்டில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகள் மற்றும் பொதுக் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும். வசாவிளான் சந்தியிலிருந்து பலாலி சந்தி வரையான வீதி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட வேண்டும்.

11. யாழ். நகர அபிவிருத்திக்கு கடந்த 2017ஆம் ஆண்டில் உலக வங்கி வழங்கிய நிதி உதவியில் வடிகாலமைப்பில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான விரிவான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

12. யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் ஒவ்வொன்றுக்கும் தகுதிபெற்ற திட்டமிடலாளருக்குரிய ஆளணி உருவாக்கப்பட்டு, நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

யாழ்ப்பாணம் மாவட்டம் முழுமைக்குமான பிரதான வடிகாலமைப்பு திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.

13. வீதி விளக்குகள் பொருத்துவது தொடர்பில் மினசார சபைக்கும் பிரதேச சபைகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் உடனடியாக தீர்த்து வைக்கப்பட வேண்டும்.

14. நெடுந்தீவுக்கான கடல்வழிப் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் படகுச் சேவைகள் கடற்படையினரிடமிருந்து மீளப்பெற்று வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்பட வேண்டும்.

15. வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இயக்கப்பட்டுவந்த குறிகாட்டுவான் - நைனாதீவுக்கான போக்குவரத்துப் பாதை பழுதடைந்த நிலையில் ஒரு வருடமாகத் திருத்தப்படாமல் உள்ளது. அது உடனடியாக திருத்தப்பட வேண்டும்.

நைனாதீவு தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இறங்குதுறை பழுதடைந்த நிலையில் நீண்டகாலமாக அங்கு போக்குவரத்து இடம்பெறுவதில்லை. அந்த இறங்குதுறை திருத்தி அமைக்கப்பட வேண்டும்.

16. குறிகாட்டுவான் இறங்குதுறை உடனடியாக விஸ்தரிக்கப்பட வேண்டும்.

குறிகாட்டுவான் இறங்குதுறையிலிருந்து புங்குடுதீவு நோக்கிச் செல்லும் வீதி சுமார் 5 கிலோ மீற்றர் குன்றுங்குழியுமாக உள்ளது. உடனடியாக திருத்தப்பட வேண்டும்.

17. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு நிரந்தர மாகாண கல்விப் பணிப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

18. வடக்கு மாகாணத்தில் ளுடுநுயுளு அதிகாரிகளுக்கான பற்றாக்குறை 50 வீதத்துக்கு மேல் காணப்படுகிறது. இவ்வெற்றிடங்களை உடனடியாக நிரப்பும் வகையில் பிரமாணங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

19. வடக்கு மாகாணத்தில் 3555 ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன. அவற்றை நிவர்த்தி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

20. வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான ஆளணி வெற்றிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்

இவ்வாறான கோரிக்கைகளை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பித்தார்.

ஜனாதிபதியிடம் 20 கோரிக்கைகளை சமர்ப்பித்தார் கஜேந்திரகுமார்  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

2. யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள நோயாளர் விடுதிகள் அதிகளவான நோயாளர்களால் நிரம்பி வழிகிறது. பல விடுதிகளில் கட்டில்கள் பற்றாக்குறை காரணமாக அவ்வப்போது நோயாளர்கள் தரையிலும் இரவு முழுவதும் கதிரைகளில் அமர்ந்தவாறும் ஒரு கட்டிலில் இரண்டு நோயாளர்கள்  என உறங்கவேண்டிய நிலைமைகள் காணப்படுகின்றன. நோயாளிகளைப் பராமரிப்பதற்காக உடனிருப்பவர்கள் பல மணிநேரமாக நின்ற நிலையிலேயே பராமரிப்பு பணிகளில் ஈடுபடவேண்டிய நிலையில் உள்ளனர். இந்நிலை உடனடியாக சீர் செய்யப்பட வேண்டும்.  

1975 ஆம் ஆண்டு எனது நண்பர் இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அப்பொழுதும் இதே நிலை தான் ..சிறிலங்காவில் உள்ள சகல வைத்தியசாலைகளிலும் அதே நில இன்றும் ..நான் நினைக்கிறேன் இதுகளை பற்றி பேசி பிரஜோசனமில்லை எண்டு...

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் வந்த அனுரவுடன் சும்மர் உங்களுடன் சேர்ந்து மாவையின்  செத்தவீட்டிற்கு வாறன் என்று கேட்கிறார்..கஜே  ..வேறுயாரும் (கட்சியும்) எந்தக் கேள்வியும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக் 20 அம்ம்ச கோரிக்கையை போட்டு அனுரவை அமுக்கி விட்டார்...அனுரவை காப்பாற்ற  அர்ச்சுனா   ..விகாரை உடைக்கவேண்டாம் ..காணிக்காசை கொடுத்தால் காணும் என்று ..கப்பலை கரைசேர்த்துவிட்டார்....நம்ம தலைவிதி...தமிழரால்தான் எழுதப்படுகிறது ..கடவுளால் அல்ல

Edited by alvayan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.