Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாங்குற காசுக்கு மேல கூவுறாரே.. சீமானை விளாசிய 'ராஜீவ் கேஸ்' பேரறிவாளன் தந்தை குயில்தாசன்!

Mathivanan MaranUpdated: Tuesday, February 11, 2025, 7:21 [IST]
 
periyar seeman perarivalan

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த பேரறிவாளவன், அவரது தந்தை குயில்தாசன் உள்ளிட்டோர் அனைவருமே திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள். 1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்ட பின்னர் எந்த ஒரு பொதுமேடையிலும் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் பங்கேற்பது இல்லை.

Also Read

பரபரக்கும் அதிமுக.. செங்கோட்டையன் வீட்டிற்கு இரவோடு இரவாக பாதுகாப்பு அதிகரிப்பு!

பேரறிவாளன், உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் கூட குயில்தாசன் பொதுவாக அரசியல் மேடைகளில் பேசுவதும் இல்லை. திருப்பத்தூரில் பெரியாரிய ஆய்வறிஞர் ஆனைத்து நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேரறிவாளன் தந்தை குயில்தாசன் பங்கேற்று பேசினார்.

"EPS ஆட்டம் முடிஞ்சது.. அடுத்து நடக்கப்போகும் பிரளயம்" - Theni Karnan பகீர் | ADMK | Sasikala | OPS

இவ்விழாவில் பேசிய குயில்தாசன், பேரறிவாளன் கைது செய்யப்பட்ட காலம் முதல் தற்போது வரை நடந்த பல்வேறு நிகழ்வுகளைக் குறிப்பிட்டார். அந்த துயர காலங்களில் துணையாக இருந்த பலரையும் நினைவுபடுத்தி பேசினார் குயில்தாசன். மேலும் திருப்பத்தூர் நகரம் எப்படி எல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உதவியாக இருந்தது என்பதையும் விவரித்தார் குயில்தாசன்.

அப்போது, தந்தை பெரியாரையும் ஆனைமுத்துவையும் எதிர்ப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்; தங்களது பிள்ளைகளுக்கோ தங்களுக்கோ அரசு கல்வியிலும் பணியிலும் இடஒதுக்கீடு வேண்டாம் என எழுதிக் கொடுங்கள். பெரியாரையும் ஆனைமுத்துவையும் திட்டினால் அவங்க செய்ததை மட்டும் ஏற்றுக் கொள்வீர்களா? அதனால்தான் நீங்கள் விட்டுவிடுங்கள்.. மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும்.

Recommended For You

பெரியாரை தொட்ட நாள்முதல்.. சீமானின் அரசியல் வாழ்க்கையில் சரிவுதான்.. அமைச்சர் சிவசங்கர் அட்டாக்!

சினிமாவில் ஒரு நகைச்சுவை காட்சி வரும்..கொய்யால.. காசு கொடுத்ததற்கு மேல பேசுகிறார் என்கிற வசனம் வரும்.. அந்த மாதிரி பேசுகிறார்கள் (சீமான் பெயரை குறிப்பிடாமல்).. பெரியார் எனும் கிழவனும் சரி.. ஆனைமுத்து எனும் கிழவனும் சரி.. செய்துவிட்டு போன பணிகளால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்..ஏனெனில் நாய்களோடும் நரிகளோடும் பெரும் போராட்டம் நடத்துகிறோம்..ஒரு காலை நாய் கடிக்குது.. இன்னொரு காலை நரி கடிக்குது.. பெரியார் எனும் கிழவன் ஏன்தான் பிறந்து இப்படி சமூக சீர்திருத்தம் செய்தாரோ என நினைக்கத் தோன்றும் அளவுக்கு பேசுகின்றனர்.

https://tamil.oneindia.com/news/chennai/perarivalans-father-kuyildasan-slams-ntk-chief-seeman-for-remarks-against-periyar-679043.html

டிஸ்கி

புலம்பெயர் நாம்தற்குறிகள் நவ்:

பேரறிவாளன் அப்பாவுக்கு சுடச் சுட ஒரு தெலுங்கன் பட்டம் பார்சல்!!!!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அமெரிக்காவில் சீமானுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக ட்ரம்ப் இருக்கிறார்: ஒவ்வொரு முறையும் "இது தான் எல்லை, ரெட் லைன்" என்று எல்லோரும் நினைத்துக் கண்டித்துக் கொண்டிருக்கும் போது, "பண்ணிப்பார்!" என்ற தோரணையில் ட்ரம்ப் எல்லையைத் தாண்டி அடுத்த கோட்டுக்குப் போயிருப்பார்.

எல்லோரும் பொறுத்திருந்து பாருங்கள்: பொட்டம்மான் மீதான வசவு, இப்போது பெரியார் மீதான போலித்தகவல் அடிப்படையில் வசை என்று போய்க் கொண்டிருக்கும் சீமான்,  ஒரு கட்டத்தில் உரிய "தெளிவு"😎 பெட்டி/wire transfer வடிவிலோ அல்லது உயிர் அச்சுறுத்தல் வடிவிலோ கிடைக்கும் போது "பிரபாகரன் என்ன...?" என்ற வசவுடன் இன்னொரு  கோட்டையும் தாண்டுவார்.

யாழ் கள சீமான் விசிறிகள் என்ன செய்வார்கள் அப்போது என்று காண்பதற்காகவே நான் இங்கே இருப்பேன்😂!  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

எல்லோரும் பொறுத்திருந்து பாருங்கள்: பொட்டம்மான் மீதான வசவு, இப்போது பெரியார் மீதான போலித்தகவல் அடிப்படையில் வசை என்று போய்க் கொண்டிருக்கும் சீமான்,  ஒரு கட்டத்தில் உரிய "தெளிவு"😎 பெட்டி/wire transfer வடிவிலோ அல்லது உயிர் அச்சுறுத்தல் வடிவிலோ கிடைக்கும் போது "பிரபாகரன் என்ன...?" என்ற வசவுடன் இன்னொரு  கோட்டையும் தாண்டுவார்.

சீமான் இப்படி செய்வார் என நான் நினைக்கவில்லை.

அவரை பொறுத்தவரை தலைவர் ஒரு பொன்முட்டையிடும் வாத்து. அதை அவர் ஒரு போதும் வெட்டமாட்டார்.

குடிபோதையில் வார்த்தை தவறுதலாக மனதில் நினைப்பதை சொல்லக்கூடும். ஆனால் அதை “போலி” என சொல்லி கடந்து விடுவார்.

தலைவர் படத்துக்கு முன் ஒரு சிறுமியை தடுக்க தடுக்க பாலியல் வன்கொடுமை செய்ததை கூட “இருவர் மனமொத்து வைத்து கொண்ட, வீடியோ எடுத்த உறவு” என நாக்கூசாமல் முட்டு கொடுக்க அவருக்கு அமெரிக்காவிலும், அவுஸ்ரேலியாவிலும் ஆட்கள் இருக்கிறார்கள்.

————

சீமான் அடுத்து கடக்க போகும் ரெட் லைன், பாஜக ஆதரவு நிலை. நேரடியாக அல்லது மறைமுகமாக.

அதற்கான ஏற்பாடுதான், பெரியாரை தூசிப்பதை ஏற்காத தம்பிகள் வெளியேறுங்கள் என்ற நேற்றைய அறிவிப்பு.

அநேகமாக மறைமுகமாக அல்லது நேரடியாக இதை 2026 க்குள் செய்வார் என நினைக்கிறேன்.

இதன் ஒரு அங்கமாக….

திருவள்ளுவருக்கு காவி அடிக்க முனைந்தது போல்…..

தலைவருக்கும் காவியை போத்தி….

சைவத்திருமகன் பிரபாகரன் என முந்தள்ளுவார்…..

புலத்து நாம்தற்குறிகளும், தலைவர் நேரடியாக கஸ்பருக்கு சொன்னதை….கேணல் கிட்டு பகிரங்கமாக மேடையில் சொன்னதை, பாலா அண்ணை அறிக்கையில் சொன்னதை எல்லாம்….வேணும் என்றே புறம் தள்ளி….

தலைவருக்கு காவி அடிப்பதில் முன்னுக்கு நிற்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

சீமான் அடுத்து கடக்க போகும் ரெட் லைன், பாஜக ஆதரவு நிலை. நேரடியாக அல்லது மறைமுகமாக.

அதற்கான ஏற்பாடுதான், பெரியாரை தூசிப்பதை ஏற்காத தம்பிகள் வெளியேறுங்கள் என்ற நேற்றைய அறிவிப்பு.

அநேகமாக மறைமுகமாக அல்லது நேரடியாக இதை 2026 க்குள் செய்வார் என நினைக்கிறேன்.

இது தான் திட்டம்.

ஏற்கனவே சீமானை முதலமைச்சர் வேட்ப்பாளர் ஆக அறிவிக்க மோடி தயார் என்று ஒரு பேச்சு அடிபட்டது. 

சீமான் அதை நோக்கித் தான் போகின்றார். புலம் பெயர் அரை+ முக்கால் ஹிந்துத்துவா ஆதரவு ஆட்களும் தமிழ் நாட்டில் மூளைச் சலவை செய்யப்பட்டவர்களும்  ஏற்கனவே இந்த ஏற்பாட்டுக்கு இப்பொழுதே ரெடி.

காலா காலமாக தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் பேசுவோர் போய் விழுந்து கும்பிடும் இடம் நாக்பூர். 

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கூவுவாங்க. இவ்வளவு காலமும் மனைவியை முன்னுக்கு தள்ளிட்டு பின்னால ஒளிந்து கிடந்த இவர் எனிக் கூவி என்ன கூவாலம் விட்டென்ன. சீமான் பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலைக்கான கொடுத்த குரலை உலகம் மறக்காது. இந்த நன்றி கெட்டதுகள் மறக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

பேரறிவாளன்  ஒன்றும் தனது வீட்டு பிரச்சனைக்காக தண்டனை பெறவில்லை. ஈழத்தமிழருக்கு உதவி செய்ய விரும்பியதாலேயே தண்டனை பெற்றார். அவரது தமிழ் உணர்வை ஈழத்தமிழர்கள் பயன்படுத்தினர். 

உண்மையில்,  தனது இளமைக்காலம் முழுவதையும் ஈழத்தமிழருக்காக தொலைத்த பேரறிவாளனுக்கு தான் ஈழத்தமிழினம் நன்றிக்கடன் பட்டுள்ளது.  உண்மையாக உணர்வுடன் எமக்கு உதவி செய்த உணர்வாளர்களை  மறந்து எமது அவலத்தை வைத்து பிழைப்பு நடத்தும்  சீமான் போன்ற கேடு கெட்ட  அயோக்கிய அரசியல்வாதிகளை ஆதரிக்கும் ஈழத்தமிழர்கள் தான் இந்த உலகிலேயே  நன்றி கெட்டவர்கள்.   

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

 சீமான் பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலைக்கான கொடுத்த குரலை உலகம் மறக்காது. இந்த நன்றி கெட்டதுகள் மறக்கலாம். 

ஈழத்தமிழ் உலகம் நினைவிற் கொள்ள வேண்டியது, பேரறிவாளனின் விடுதலைக்கும், பின்னர் அதே வழக்கில் எஞ்சிய கைதிகள் விடுதலைக்கும் ஆட்சியில் இருந்த அதிமுக, திமுக ஆகிய "திராவிடக்" கட்சிகளின் செயல்பாடுகளும், அக்கறையும் பாரிய காரணங்கள்!

"பட்டி மன்ற ஆவேசப் பேச்சுகள்" இந்தக் கைதிகளை விடுதலை செய்ய உதவவில்லை, அத்தகைய பேச்சுக்களால் இந்திய உயர் நீதிமன்றம் அழுத்தத்திற்குள்ளாகவில்லை.

ஆதாரம், பேரறிவாளன் விடுதலையான செய்தியிலேயே இருக்கிறது👇:

"..The court held that the Tamil Nadu Council of Ministers’ advice on September 9, 2018 to pardon Perarivalan was binding on the Governor under Article 161 (Governor’s power of clemency) of the Constitution"

https://www.thehindu.com/news/national/supreme-court-invokes-extraordinary-powers-to-release-perarivalan/article65425403.ece

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, island said:

பேரறிவாளன்  ஒன்றும் தனது வீட்டு பிரச்சனைக்காக தண்டனை பெறவில்லை. ஈழத்தமிழருக்கு உதவி செய்ய விரும்பியதாலேயே தண்டனை பெற்றார். அவரது தமிழ் உணர்வை ஈழத்தமிழர்கள் பயன்படுத்தினர். 

உண்மையில்,  தனது இளமைக்காலம் முழுவதையும் ஈழத்தமிழருக்காக தொலைத்த பேரறிவாளனுக்கு தான் ஈழத்தமிழினம் நன்றிக்கடன் பட்டுள்ளது.  உண்மையாக உணர்வுடன் எமக்கு உதவி செய்த உணர்வாளர்களை  மறந்து எமது அவலத்தை வைத்து பிழைப்பு நடத்தும்  சீமான் போன்ற கேடு கெட்ட  அயோக்கிய அரசியல்வாதிகளை ஆதரிக்கும் ஈழத்தமிழர்கள் தான் இந்த உலகிலேயே  நன்றி கெட்டவர்கள்.   

எழுவர் விடுதலைக்காக உண்மையில் உரக்க குரல் கொடுத்தவர்கள்.. அதற்கான அழுத்தங்களை மத்திய அரசுக்கு மாநில அரசு ஊடாக வழங்கத் தூண்டியவர்கள் யார் யார் என்பதும்... பேரறிவாளனோடு சிறையில் இருந்த காலம் கூட அவரின் விடுதலைக்கு நற்பத்திரம் வழங்கியது உட்பட... சீமான் ஆற்றிய பங்களிப்பை பேரறிவாளனின் ஒளிந்து கிடந்த தந்தை மறக்கலாம்.. நிச்சயமாக பேரறிவாளனின் விடுதலைக்காக அலையோ அலை என்று அலைந்த அவரின் தாய் மறக்கமாட்டார். எத்தனையோ ஆபத்தான தருணங்களில்.. யாருமே பேச முன்வராத காலங்களில்.. சீமான் மக்களை கூட்டி இவர்களுக்காகப் பேசியதை மறந்த உங்களைப் போன்ற நன்றி கெட்டதுகளை விட ஈனத்தமிழர்கள் யாருமே இருக்க முடியாது. இதனை உங்களிடம் காண்பது வியப்பல்ல. உங்கள் இயல்பே இதுதானே. காட்டிக் கொடுப்பதும்... இகழ்ந்து தள்ளுவதும்.

Edited by nedukkalapoovan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.