Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓணாண்டி அன்போட கோஷான் நான் எழுதும் கடிதமே!

நண்பர் @பாலபத்ர ஓணாண்டி எனக்கு மிகவும் பிடித்த கருத்தாளர். அற்புதமான நகைச்சுவை உணர்வு கொண்டவர். என்னை யாழில் வா தல, போ தல என உரிமையோடு ஒருமையில் எழுதும் ஒரே ஒருவர், நான் அப்படி ஒருமையில் விளிக்கும் ஒரே ஒருவர்.  

அண்மையில் ஒரு கருத்தை சொல்லி விட்டு அதை நிறுவ முடியாமல் போய் விட, தன் credibility உடைந்து விட்டதென கூறி யாழில் கருத்து எழுதுவதை விட்டு விட்டார் (படங்கள் இணைக்கிறார்).

இதெல்லாம் சப்பை மேட்டர், எல்லோருக்கும் நடந்ததுதான் என அவருக்கு நன்கு தெரியும்.

அத்தோடு என்னை போலவே குப்புற படுத்து கிடந்து இந்த பெரும் பிரபஞ்சத்தில் நாம் ஒரு தூசு கூட இல்லை என அடிக்கடி உணர்பவர் ஓணாண்டி.

ஆகவே இந்த சப்ப மேட்டரை தூக்கி போட்டு விட்டு ஓணாண்டி மீண்டும் கருத்துகளம் மீள வேண்டும் என்பதை வலியிறுத்தி….

குணா பட பாடலை உல்டாவாக்கி கீழே வெளியிடுகிறேன்.

பாடல் பெற்ற தலம் போல், பாடல் பெற்ற கருத்தாளர் ஆகிறார் ஓணாண்டி.

பாடலை ஒரிஜினல் மெட்டில் வாசிக்கவும்/பாடவும்.

————

ஓணாண்டி அன்போட கோஷான் நான்…  

நான்…

எழுதும் letter ச்சி மடல் இல்ல கடுதாசி வெச்சிக்கலாமா?

வேணா கடிதமே இருக்கட்டும்,

படி….

ஓணாண்டி அன்போடு கோஷான் நான் எழுதும் கடிதமே…

ஹ்ஹ பாட்டாவே படிச்சிட்டியா அப்ப நானும்….

மொதல்ல ஓணாண்டி சொன்னேன் இல்ல..

இங்க பேராண்டி போட்டுக்க….

பேராண்டி சாவச்சேரியில்  சௌக்கியமா

நான் இங்க சௌக்கியம்…

பேராண்டி சாவச்சேரியில்… சௌக்கியமா

நான் இங்கு சௌக்கியமே…..

ஆஹ…  உன்ன நினைச்சு பாக்கும் போது வாண்டை, வாண்டையா…கெட்டவார்த்தை கொட்டுது…

ஆனா அத எழுதனும்னு உக்காந்தா….

அந்த எழுத்து தான், ஹும் வார்த்த ஹு…

உன்னை எண்ணி பார்க்கையில் வார்த்தை கெட்டது (அதான்)…

அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது…

அதே தான் ஆஹா பிரமாதம் கவிதை கவிதை, படி….

ஓணாண்டி அன்போடு கோஷான் நான் எழுதும் கடிதமே….

பேராண்டி சாவச்சேரியில் சௌக்கியமா….

நான் இங்கு சௌக்கியமே…

உன்னை எண்ணி பார்க்கையில் வார்த்தை கெட்டது…

அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது….

—————————

ம், என்னை யாழ்களத்தில பிராண்டுற காயம் அது தன்னால ஆறிடும்…..

அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல….

எனக்கு ஒண்ணுமே ஆவரது இல்ல, 

இதையும் எழுதிக்க….

நடுவுல நடுவுல மாப்பு, ஆப்பு, கொய்யாலா. யோவ்….

இதெல்லாம் போட்டுக்கணும் 

ஹும்…..

தோ பாரு என்னை கும்பலா சேர்ந்து கும்மினாலும் உடம்பு தாங்கிடும்

உன் மனசு தாங்குமா? தாங்காது.

ஓணாண்டி, ஓணாண்டி, ஓணாண்டி….

(அதையும் எழுதனுமா?)

ஹ்-ஹ்ன், அது நட்பு ஹஹ், என் நட்பு என்னன்னு சொல்லாம

ஏங்க ஏங்க அழுகையா வருது…

ஆனா நான் அழுது

அதனால சீமான் குரூப் சந்தோசப்பட்டிடுமோ

அப்படின்னு நினைக்கும் போது

வர்ற அழுக கூட நின்னுடுது…..

ஹ்-ஹஹ-ஹ-ஹஹ-ஹ

மனிதர் உணர்ந்து கொள்ள யாழ் சாதாரண கருத்துக்களம் அல்ல….

கருத்துக்களம் அல்ல….(4 எக்ஹோ)

அதையும் தாண்டி புனிதமானது 

புனிதமானது புனிதமானது புனிதமானது..

பிராண்டி வைத்த காயம் இங்கு தன்னாலே மாறிப் போன

மாயம் என்ன கொய்யால, கொய்யால…

என்ன காயம் ஆனபோதும் என் மேனி தாங்கி கொள்ளும்

உந்தன் மேனி தாங்காது மாப்புள்ள…

எந்தன் நட்பு என்னவென்று சொல்லாமல்

ஏங்க ஏங்க அழுகை வந்தது….

சீமான் குருப் சந்தோசப்படும் என்றெண்ணும் போது

வந்த அழுகை நின்றது…

மனிதர் உணர்ந்து கொள்ள யாழ் கருத்து களம் அல்ல….

அதையும் தாண்டி புனிதமானது….

ஓணாண்டியே நீ மீண்டும் வாடியேய், என் பாட்டு உனக்கு கேட்குதா…

ஓணாண்டியே யாழில் நீ பேராண்டியே…

அதுவும் உனக்கு புரியுமா….

சுபலாலி லாலியே லாலி லாலியே

லா-லலா-லா-லால-லால-லா-லா-லால-லால-லா

லா-லலா-லா-லால-லால-லா-லா-லால-லால-லா

லால-லால-லால-லா, லால-லால-லா

லல-லால-லால-லா-லால-லால-லா ஓஹோ

லா-லலா-லா-லால-லால-லா-லா-லால-லால-லா

லா-லலா-லா-லால-லால-லா-லா-லால-லால-லா

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

🤣............

ஓணாண்டியார், நீங்கள் எந்த குணா குகைக்குள் போய் இருந்தாலும், உங்களை விடுவதாகவில்லை. குகைக்குள் ஒரு கூட்டமே இறங்குது......................🤣

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை சொல்ல ........ கமல் கண்டால் கதறிடுவார் ...........!   😂

அடுத்த கவிதை வருமுன் ஓணாண்டி தயவு செய்து மேடைக்கு வரவும் . ........!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ரசோதரன் said:

🤣............

ஓணாண்டியார், நீங்கள் எந்த குணா குகைக்குள் போய் இருந்தாலும், உங்களை விடுவதாகவில்லை. குகைக்குள் ஒரு கூட்டமே இறங்குது......................🤣

யாழ்களம் போய்ஸ்🤣

1 minute ago, suvy said:

என்னத்தை சொல்ல ........ கமல் கண்டால் கதறிடுவார் ...........!   😂

அடுத்த கவிதை வருமுன் ஓணாண்டி தயவு செய்து மேடைக்கு வரவும் . ........!

இனியும் வராட்டில் ரஜனியை கதறவிடுவோம்🤣

  • கருத்துக்கள உறவுகள்

தல பாட்டாவே படிச்சுட்டாப்ள.. 😂😂😂 

எனக்கும் அழுவ அழுவையா வருது.. 😂😂😂

சட்ட கிளிஞ்சிருந்தா தச்சி முடுச்சிறளாம் நெஞ்சு கிளிஞ்சிருச்சி இத எங்க முறையிடலாம்..😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஓணாண்டி அன்போட கோஷான் நான் எழுதும் கடிதமே!

நண்பர் @பாலபத்ர ஓணாண்டி எனக்கு மிகவும் பிடித்த கருத்தாளர். அற்புதமான நகைச்சுவை உணர்வு கொண்டவர்.

நகைச்சுவை எனக்கு ரொம்ப பிடித்தது.. வேலை வாழ்க்கை என்று எல்லா துன்பங்களிலும் உழன்றுவிட்டு எனக்கென்று இருக்கும் கொஞ்ச நேரத்தில் மனதை இறுக்கத்தை போக்கி சந்தோசமாக இருக்க கிடைத்த இடம் யாழ்.. அதில் கிடைக்கும் நேரம் எல்லாம் இனிமேல் நெடுகமூஞ்சைய தூக்கிகொண்டு இருக்காமல் சந்தோசமா இருப்பம் எண்டு அப்பப்ப நகைச்சுவையாக எழுதுவன்.. அதுவும் எனது பழைய ஜடியில் என்ன கூத்து எல்லாம் அடிச்சு இருப்பன்.. உதாரணதூக்கு ஒண்டு..👇

//

நெடுக்ஸ் நிகழ்ச்சியில் வாசித்த உரை...[/size]

[size=4]அனைவருக்கும் வணக்கம்.[/size]

[size=4]பெண்கள் பக்கம் இருந்து வணக்கம் சுணக்கமாக வருவதை கண்டித்துக்கொண்டு நான் எனதிந்த சிற்றுரையை ஆரம்பிக்கிறேன்.[/size]

[size=4]பெண்கள் என்றால் யார்..? சாறி உடுத்தால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..? சட்டை போட்டால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..? தோடு குத்தினால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?வளையல் போட்டால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?வகுடெடுத்தால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?வாய்க்கால் கட்டினால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?வரப்பெடுத்தால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?நாத்து நட்டால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?இல்லை [size=4]வயலில் களை எடுத்தால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..? [/size][/size]

[size=4][size=4]மானங்கெட்டவளவையே..உங்களுக்கு மஞ்சல் அரைத்து கொடுப்பது யார்..? அஞ்சு முளத்தில் பூ வாங்கிக்கொடுப்பது யார்..? பிஞ்சிலையே உங்களால் வெம்பிப் பழுப்பது யார்..?கெஞ்சவும் கொஞ்சவும் கடையில் நல்லாய்த் திங்கவும் வைப்பது யார்..?திண்ட பின் உங்கள் நண்பிகளுக்கும் சேத்து பில் கட்டுவது யார்..?இதையெல்லாம் செய்வது யார்..? யார்..? யார்...? :D[/size][/size]

[size=4][size=4]( என்று நெடுக்ஸ் உணர்ச்சிவசப்பட்டு எப்பவோ கேட்ட கட்டபொம்மன் வசனங்களை எல்லாம் பிளைபிளையாய் பேசி முடிக்க பெண்களால் நொந்து போய் இருந்த சுண்டால் கூட்டத்தில் இருந்து பாய்ஞ்சு வந்து மேடையில் ஏறி நெடுக்ஸை கட்டிப்பிடித்து எங்கள் தன்மான சிங்கம்,எங்கள் அடிமைத்தனம் ஒளிக்க வந்த கட்டப்பொம்மன் 2 வாழ்க வாழ்க என்று கத்துகிறார்.. இவற்ரை அவதானித்துக்கொண்டிருந்த கனடா மகளீர் அணித்தலைவி சகாற கடும் சினத்துடன் தன் தலையில் குத்தியிருந்த கிளிப்பை கழட்டி நியக்கிளிப்பை எறிவதாக நினைத்துக்கொண்டு வாயால் டமார் எண்டு சத்தம்போட்டபடி சுண்டலை நோக்கி எறிகிறார்.. :o[/size][/size]

[size=4][size=4]சகாறாவை பின்பற்றி பெண் உறுப்பினர்கள் எல்லாம் தங்கள் கொண்டையில் குத்தியிருந்த கிளிப்பையும் கொண்டை வைக்காத இளம்பெண்கள் தங்கள் கைகளில் போட்டிருந்த வளையல்களையும் சுண்டலையும் நெடுக்ஸையும் நோக்கி கூச்சல் இட்டபடி வீசி எறிகின்றனர்.. :lol:[/size][/size]

[size=4][size=4]நெடுக்ஸ் தான் பேசிக்கொண்டிருந்த மைக் இருந்த ரேபிலுக்கு பின்னால் நிலையெடுத்து இந்த தாக்குதலில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள சுண்டலோ இவற்றை பற்றி எல்லாம் கவலைப்படாமல் வந்து விழுந்த கிளிப்புகளுக்கும்,வளையல் துண்டுகளுக்கும் நடுவே இளம்பெண்களின் வளையல்களை மட்டும் முமுரமாக பொறுக்கி சேகரித்துக்கொண்டிருக்கார்.. [/size][/size]

[size=4][size=4]நிலமை கட்டுக்கடங்காமல் போவதை அவதானித்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தமிழ்சிறி மைக்கை கையில் எடுத்து பெண்கள் அனைவரும் நிகழ்ச்சி முடியும் வரை அமைதியாக இருந்தால் போகும்போது எல்லாருக்கும் ஏசியன் கடையில் எடுத்த சாறியும் யன்னல் வைத்த பிளவுசும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்க பெண்கள் பக்கம் இருந்து குண்டூசி விழுந்தால் கூட கேட்கும அளவுக்கு அமைதி நிலவுகிறது... [/size][/size]

[size=4][size=4]இதனால் சந்தோசம் அடைந்த தமிழ்சிறி நெடுக்ஸ் பக்கம் திரும்பி "இப்பதாண்ட ஒருமாதிரி நிலமையை கட்டுக்கை கொண்டுவந்திருக்கன் அதைக்கெடுத்துப்போடதையெடாப்பா"என்ன்று கெஞ்சுவது போல் பார்க்கிறார்..எதைப்பற்றியும் கவலைப்படாமல் நெடுக்ஸ் மைக்கை எடுத்து தொடர்கிறார்..)[/size] [/size]

[size=4]நண்பர்களே,தோழர்களே...இந்தப் பெண்களைப் பேய்கள் என்றும் சொல்லலாம்..பெண்களை பேய்கள் இல்லை என்றும் சொல்லலாம்..பேய் என்று சொல்வதெல்லாம் பேயாகிவிடாது..அங்கு பெண்களும் இருக்கின்றனர்..அதே போல் பெண் என்று சொல்வதெல்லாம் பெண் ஆகிவிடாது..அங்கு பேய்களும் இருக்கின்றன..பேய்களிடம் இருந்து ஆண்களை காப்பாற்றுவதே தற்பொழுது எனது முதல் பணியாக எடுத்து செய்து கொண்டிருக்கிறேன்.. :o[/size]

[size=4]இந்தப் பணியில் நான் பல சவால்களையும்,தடைகளையும் எதிர்கொண்டாலும் முருங்கை மரத்தில் இருந்து விழுந்த விக்கிரமாதித்தன் போல பேய்களை எதிர்த்து யாழ் உள்ளவரை நான் கீ போட்டில் போராடிக்கொண்டிருப்பேன்..இது என் கீபோட்டின் மேல் சத்தியம்..சத்தியம்..சத்தியம் [/size]

[size=4]( எண்டு ஆவேசம் கொண்டவரைப் போல் நெடுக்ஸ் ஒலிவாங்கி மேசையில் கையால் அடித்துக் கத்துகிறார்.. ஆண்கள் பக்கம் இருந்து பலத்த கரகோசமும் விசில் சத்தமும் வானைப்பிளக்கிறது..[/size]

[size=4]சுண்டல் பொறுக்கமுடியாமல் கூட்டத்தின் நடுவே தான் மட்டும் தனிய எழுந்து நிண்டு கைதட்டுகிறார்..இதை தூரத்தே மேடையின் பின்னால் இருந்து அவதானித்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தமிழ்சிறி குறுக்காலபோவான் திரும்ப கூட்டத்தை குழப்பபோறான் போல கிடகே எண்டு பதற்றத்துடன் காணப்படுகிறார்.. [/size]

[size=4]ஆனால் ஏசியன் சாறியையும் யன்னல் வைத்த யாக்கெட்டையும் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்த பெண்கள் அணி இவற்றினால் எந்த சலனமுமடையாமால் சாறியே குறி என்று அமைதியாக இருக்கின்றனர்.. நெடுக்ஸ் இந்த அமைதியை வாய்ப்பாக பயன்படுத்தி தொடர்கிறார்..) [/size]

[size=4]நாங்கள் கேட்கிறோம்..தெளிவாகக் கேட்கிறோம்...பெண்களை ஏன் இந்த மூடர்கள் கண்கள் என்கிறார்கள்..? ஆண்களுக்கும் கண்கள் இருக்குத்தானே..? எங்கள் கண்கள் மிக அழகானவை..அவற்றின் மூலமே நாம் வண்டுகளையும் பூக்களையும் பார்க்கிறோம்..[/size]

[size=4]நான் பல காலத்துக்கு முன்னரே பூக்களை நின்று பார்க்க வெளிக்கிட்டிட்டன்.ஆனால் என்னைப் பிடிக்காத எனது எதிரிகள் சிலர் நான பூக்களை பார்க்கும் சாட்டில் பெண்களையும் பார்ப்பதாக அபாண்டமாக சொல்லித்திரிகிறார்கள்..!அவர்களின் கண்கள் அழுகிப்போக..[/size]

[size=4]பூக்களைத்தான் பறிக்காதீங்க[/size]

[size=4]என் பூக்காதலைத்தான் பிரிக்கதீங்க..[/size]

[size=4](என்று கோரசாக இழுத்து பாடுகிறார்.. அப்பொழுது அவர் கண்ணில் இருந்து சிலதுளிகள் விழுகின்றன..எல்லோரும் பார்க்கும் வகையில் கைக்குட்டையை எடுத்து தன் கண்ணீரை துடைத்துவிட்டு நான் யாரும் பார்க்க என் கவலைகளை நினைத்து அழுவதில்லை என்று சொல்லிவிட்டு தன் பேச்சை தொடர்கிறார்.. ) [/size]

[size=4]பூக்கள் அழகானவை..பூக்களைமொய்க்கும் வண்டுகள் அதைவிட அழகானவை..ஆகையால் பூக்களை இந்தக்கண்களலேயே ரசிக்கிறோம்..பிறகெதற்கு இந்த மாங்காய் மடையர்கள் கவிதை என்ற பேரில் பெண்களை மட்டும் கண்கள் என்கிறார்கள்..?இது சுத்த ஆணடிமைத்தனமே அன்றி வேறுதுவும் இல்லை.. :o ஆகையால் இனிமேல் கவிஞர்கள் ஆண்களையும் கண்கள் என்று சொல்லவேண்டும் என்று ஆண்களின் சார்பில் இந்த இடத்தில் வன்மையாகக் கேட்டுகொள்கிறேன்.. [/size]

[size=4]சிலபலவருடங்களுக்கு முன்னர் நானும் ஓடினேன்.. பெண்கள் இருகண்கள் என்று பாடினேன்..அவள் ஒரு ரோசாப்பூ..வாடாத ரோசாப்பூ..எங்கள் காதல் ஒரு கைபடாத சீடி.. ஆனால் கடைசியில் போடா போடி.. ஆதலால் சொல்கிறேன் ஆண்களே கரண்டுக்காரன் வெட்டி வைத்த குழியில் விழுந்தாலும் காதலில் விழுந்துவிடாதீர்கள்.. [/size]

[size=4]உங்களுக்கு காதலிக்கவேண்டுமென்றால் என்னைப்போல் பூக்களை கதலியுங்கள்..இல்லையெண்டால் புழுவையெண்டாலும் காதலியுங்கள்.. ஆனால் பெண்களை மட்டும் காதலித்துவிடாதீர்கள்..காதலித்துவிடாதீர்கள்..காதலி....த்..து(எனும்போது நெடுக்ஸிற்கு உணர்ச்சிவசப்பட்டதால் பேச்சுவருகிறது இல்லை..கூட்டத்தில் எல்லாரும் அமைதியாக இருப்பதை அவதானித்த குட்டி உடனே எழுந்து நின்று நான் இதை லைக் பட்டினை அமத்தி லைக் பண்னுறன் எண்டு பெரிதாக சொல்லவும் நெடுக்ஸ் உற்சாகம் அடைந்தவராக தொன்டையை சரி செய்துகொடு மீண்டும் பேசத் தொடங்குகிறார்..) [/size]

[size=4]நண்பர்களே..எனக்கு நீண்டகாலமாக ஒரு சந்தேகம் இருக்கிறது..சோத்து ஆன்ரிகள் சோத்தை சாப்பிட்டதால் அன்ரிகள் ஆனார்களா இல்லை அன்ரிகள் ஆனதால்தான் சோற்ரை சாப்பிடுகிறார்களா என்பதுதான் அது... :oஇதை நான் எங்கள் யூனியில் இருந்த எல்லாப் புத்தகங்களிலும் தேடிப்பார்த்துவிட்டேன்..ஆன்ரிகள் நிறையப்பேர் சிக்கிவிட்டனர்.. ஆனால் விடைதான் சிக்கவில்லை...என் தலையில் இருக்கும் முடி எல்லாம் போனாலும் இதற்கு நான் விடைகாணாமல் ஓயமாட்டேன்.. [/size]

[size=4](அப்பொழுது ரதி தன் கான்ட் பாக்கில் இருந்த உதட்டுச்சாயத்தை எடுத்து உதட்டில் நன்றாக அப்பிவிட்டு எழுந்து நின்று நெடுக்சின் கருத்துக்கு தான் சிவப்பு புள்ளி குத்துவதாகவும் இதை யாழின் பதிவில் இருந்து தூக்கும்படி இணையவனுக்கு றிப்போட் பட்டினை அமத்தி றிப்போட் பண்ணுவதாகவும் தெரிவிக்கிறார்.. அப்பொழுது பக்கத்தில் இருந்த அலைமகள் ரதியை இழுத்துப்பிடிச்சு கீழே இருத்தி அநியாயமாக ஏசியன் கடை சாறியை மிஸ்பண்ணவேணுமோ எண்டு கேட்க ரதி நான் சாறி கட்டுவதில்லை ஒன்லி குட்டைப்பாவாடைதான் அதாலை தனக்கு கவலை இல்லை எண்டு கூறி மீண்டும் உதட்டு சாயத்தை சரிபார்க்கிரார்.. [/size]

[size=4]ரதியைக் கண்ட உற்சாகத்தில் கிருபன் பக்கத்தில் இருந்த இன்னுமொருவனின் காதில் "நட்பார்க்கும் நட்பாய நட்பல்ல நட்பாகும் நிப்பார்க்கும் போவார்க்கும் நடுவில் போகாமல் எப்போதும் நிண்டு" என்று புதுக்கவிதை சொல்கிறார். :icon_mrgreen:.ரதியைக் கன்ட நெடுக்காலபோவானுக்கும் புது வேகம் பிறக்க தன் சிற்ருரையை தொடர்கிறார்..) [/size]

[size=4]என்னைப்பொறுத்தளவில் பெண்கள் பாதிக்கண்கூட இல்லை..பிறகு எதற்கு வெட்டியாக இருகண்கள் மூண்டு கண்கள் எண்டு பேசிக்கொண்டு..கண்கள் எப்பவும் நாங்கள்தான்..நாங்கள் கண்ணெடுத்து சுட்டால் பெண்கள் காணாமல் போய்விடுவார்கள்..எப்பவும் பேரில் முன்னெழுத்து நாங்கள்தான்..பெண்கள் கார் போல..அதை ஓட்ட எப்பவும் ஒரு ட்ரைவர் வேணும்..அதுதான் நாங்கள்..எங்களின் துணையில்லாமல் பெண்களால் வாழவும் முடியாது சாகவும் முடியாது..ஆனால் நாங்கள் தனியே வாழமுடியும் [/size]

[size=4]( என்று நெடுக்ஸ் சொல்லவும் ஆத்திரம் கொண்ட சகாரா ஏசியன் சாறியும் மயிரும் என்று கத்தியபடி எழும்பி தன்ர குதி உயர்ந்த செருப்பை கழட்டி கையில் எடுத்துகொண்டு மேடையை நோக்கி ஓடிவரவும் மற்ர பெண்களும் சகாறாவை பின் தொடர்ந்து மேடைக்கு ஓடுகின்றனர்.. :lol:[/size]

[size=4]இதைக்கண்ட தமிழ் சிறி அப்படியே பாய்ந்து வந்து நெடுக்ஸை பிடித்து இழுத்துக்கொண்டு மேடைக்கு பின்னால் ஒடுகிறார்...நெடுக்ஸ் கையில் அகப்படாத ஏமாற்றத்துடன் பெண்கள் அணி திரும்பிச்செல்ல தமிழ் சிறி நெடுக்ஸை பாதுகாப்பாக ஒருகாரின் பின்னால் ஒளித்துவைத்துவிட்டு வந்து மைக்கை பிடித்து இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம்..நிகழ்ச்சிகள் சிறிய இடைவேளையின் பின் அறிவித்தபடி தொடரும் என்று சொல்லிவிட்டு பெல்ற்றை அவிட்டுக்கொண்டு பல்லை நெருமியபடி மேடையை விட்டு விறுக்கு விறுக்கெண்டு இறங்கி நெடுக்ஸிடம் செல்கிறார்.. :lol:) [/size]

//

அது ஒரு காலம்.. ஒரே பகிடிதான்.. இனிமேல் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் இயன்றளவு அரசியலை விட்டு யாழில் நகைச்சுவையாக எழுதவேணும் எண்டு முடிவெடுத்திருக்கிறன்..

அதுகும் உந்த கோதாரிவிழுவான் அர்ச்சுனாவை ஏன்ரா ஆதரிச்சன் எண்டுற அளவுக்கு ஆனதுக்கு பிறகு அரசியலே வேண்டாம் எண்டாகிப்போச்சு.. விழுவான் அண்மையில் மலையக மக்களை பற்றி சொன்ன கருத்துக்கு பிறகு அந்த பரதேசியை இனிமேல் ஆதரிப்பது இல்லை என்று பகிரங்கமாக அறிவிக்கிறேன்..

இந்த வருசம் பிறந்தது எனக்கு அரசியல் விடயங்கள் சரிவராது போல கிடக்கு.. ஒரே அசிங்கமா இருக்கு.. இனி காமெடிதான் இயன்றளவு..

எனிவே.. என்றைக்கும் என்னை மறக்காமல் நியாபகம் வைத்திருக்கும் தலைவர் கோசானுக்கு என்ன கைமாறு செய்வனோ தெரியா.. அந்த அன்புக்கு என்றும் நன்றியும் பாசமும்..

அதேபோல் ரசோ அண்ணாவுக்கும் சுவி அண்ணவுக்கும்.. ஜ லவ்யூ.. 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொன்று👇😂

யமனாக நிழலியும், சித்திரகுப்தனாக தமிழ் சிறியும், யமதூதர்களாக தூயவன்,நிர்மலன்,புத்தன்,தும்பளையான்,ஜீவா ஆகியோரும் நந்தனாக நந்தனும் கலந்து சிறப்பிக்கும்... எமலோகத்தில் நந்தன் நாடகம் இதோ...[/size]

______________________________________________________________________________________________________________________________

2054 ஆம் வருடம்,மார்கழி மாதம்,அதிகாலையில் தூக்கத்தில் ஆழ்ந்துருந்திருக்கிறார் நந்தன்.அப்போது பார்க்க பயங்கரமான,விகாரமான தோற்றம் உடைய சிலர் அவரிடம் வருகிறார்கள். அவர்கள் "வா எங்களுடன்", என்று கூறி நந்தனை தர தரவென இழுத்துச் செல்கிறார்கள். (உரையாடல் முழுதும் வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்).

காட்சி௧ள் (வானவீதியில்)

நந்தன்: ஆமாஆஆஆ நீங்கெல்லாம் யாருப்பா..?

யமதூதர்கள்: நாங்கள் யமதூதர்கள். உன் உயிரைப் பறித்துப் போகின்றேம்.

நந்தன் : என்னாது... என் உயிரை எடுத்துட்டீங்களா,சொல்லவேயில்லை.

யமதூதர்கள்: சொல்லிட்டுச் செய்ய நாங்க என்ன தமிழ் சினிமா ஹீரோவா, பஞ்ச் டயாலக் பேசி உயிரை எடுக்க...பொத்திக்கொண்டு இருடா டுபாக்கு...

நந்தன் : ஆமா யமதூதா..., ரம்பா,ஊர்வசி,மேனகா எல்லாம் அங்கிட்டு நல்லா இருக்காங்களா.

யமதூதர்கள் : நீ கொஞ்ச நேரம் வாயை அடைத்துக் கொண்டு வருகின்றாயா கிராதகா..?

நந்தன் : என்னது நீங்க மட்டும் வந்துருக்கிங்க, தேவதூதர்கள்,புஷ்பக விமானம் எல்லாம் நமக்கு வராதா?

யமதூதர்கள்: அடேய் நீ பண்ணிய பாவங்களுக்கு,கெட்ட கேட்டுக்கு அவங்க எல்லாம் வரனுமா?.சும்மா பிணாத்தாம வாடா.

நந்தன்: ஆமா எவ்வளவு தூரம் போகனும்?...இப்பிடி ரொம்பத்தூரமின்னு தெரிஞ்சிருந்தா வரும்போது வீட்டிலிருந்து கொஞ்சம் வொட்காவை எடுத்துவந்திருப்பனே..

யமதூதர்கள்: அடேய்,எங்க பொறுமையை சோதிக்காதே. பேசாம வருகிறாயா நரனே.

நந்தன்: இங்கை திண்ணையும் இல்லை..போகின்ற வழிக்கு பொழுது போகனும் இல்லை... 

யமதூதர்கள்: சூலாயுத்தால் வாயில் இடித்து,இப்ப நீ வாயை மூடலைன்னா,அடிச்சே கிழிச்சுடுவேம்.எப்பிடி வசதி.

நந்தன் : அய்யோ, ஆத்தாடி, என்று கப்சிப். 

காட்சி - 2 (எமலோகத்தில் எமனது இறுதி தீர்ப்பு வாசிக்கப்படுகின்றது).

சித்ரகுப்தன்: மன்னா,இவன் ஒரு ஜெகஜாலக் கில்லாடி, நல்லவன் போல நடிப்பவன். இவனை எமலோகத்தில் விட்டு அனைத்து தண்டனைகளும் தரவேண்டும்.

யமன்: அது என் வேலை, நீ முதலில் இவனது குற்றங்களைப் படி. 

நந்தன் : அடப்பாவிகளா, இங்கனயும் பதவிப் போட்டியா?.

யமதூதர்கள்:உஷ் வாயை மூடிக்கொள். இல்லை என்றால் உன் தண்டனை இரு மடங்கு ஆகிவிடும்.

நந்தன் : சரி அப்பு.

சித்ரகுப்தன்: மன்னா சொல்ல அசிங்கம், இவன் பள்ளியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது.....

யமன் : சரி,சரி, இரகஸ்யங்களை சப்தம் போடாதே. வாலிபக் குறும்பு. இதுக்கு தண்டனையா, இவனை தகிக்கும் தங்க பதுமையைக் கட்டி அனைக்கச் சொல்லி வறுத்து எடுப்போம். 

நந்தன் : அடப்பாவமே, நான் எப்பவும் தங்கம் என் உடம்பில் கூடப் போட்டதே கிடையாது. கட்டிக்க தங்கப் பதுமையா?. பூலோகத்தில் அப்புறம் ஏன் தங்கம் விலை ஏறாது. சரி இங்கனயாவது போட்டுக்குவேம்.

யமதூதர்கள்: அடேய் அது சூடான கொதிக்கும் தங்கப் பதுமைடா.

சித்ரகுப்தன்:அதுமட்டும் இல்லை இவன் திண்ணையில் குடித்துவிட்டு, ஒருமுறை.......

யமன்: அடேய்,கஸ்மாலம், கேப்மாரி,முடிச்சவிக்கி, உன்னை....

சித்ரகுப்தன்: மன்னாஆஆஆ.. என்ன ஆச்சு தங்களுக்கு உளறுகின்றீர்கள்.

யமன்(சுதாரித்து): ஒன்றுமில்லை,திண்ணை என்றவுடன் அங்கு இவர்கள் வெள்ளிக்கிழமைகளில் வெறியில் பேசிக்கொள்ளும் பாசை ஒட்டிக் கொண்டது.இதுக்கு தண்டனையாக இவனை நாலு யமதூதர்களை விட்டு முள்ளுச் சவுக்கால் பரேட்டாவைப் போல அடித்து புரட்டி எடுங்கள்.

சித்ரகுப்தன்: மன்னா இதையும் கேளுங்கள்,லண்டனில் இவன்........

யமன்: அடேய் போதும், போதும் இந்தக் குற்றத்திக்கே இவன் நரகத்தில் பல ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும்.இதுக்கு தண்டனையாக இவனை எண்ணைச் சட்டியில் போட்டுப் பொறிக்க வேண்டும். 

சித்ரகுப்தன்:இது மட்டும் அல்ல மன்னா, யாழில் இவன் பதில் எழுதுறன் எண்ட பெயரில் கண்டதையும் எழுதி,தானும் குழம்பி,மற்றவர்களையும் குழப்பி உள்ளான்.ஒரு முறை இவன் களௌறவுகளிடம்......

யமன் : அடேய்ய்ய், மேலே சொல்லதே,என் வாயில் கெட்ட வார்த்தை வந்துவிடும்,இதுக்கு இவன் நாவை அறுத்துச் வறுவல் பண்ணுங்கள்.

நந்தன்: என்னது இது சின்னப்புள்ளைத்தனமா இருக்கு. இதுக்கு முன்னால இவரு புரோட்டாக் கடையில் மாஸ்டரா இருந்தாரா?. வறுக்கனும்,பொறிக்கனும்,வடகம் போடனும்,வறுவல் போடனும் அப்படின்னு தீர்ப்பு சொல்றார்....?

யமன் : அடேய் நரனே. என்ன தைரியம் இருந்தால் என்னை புரோட்டா மாஸ்டர் என்பாய். இதுக்கு உனக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

யமதூதன்: கேட்டாயா, வாயை வைச்சுக் கிட்டு சும்மாயிருந்தா,இப்படி நடக்குமா?

நந்தன் : இல்லைனாலும்,அடப்போய்யா.. நாங்க எல்லாம் எத்தனை பேரைப் பார்த்துருக்கேம்.

சித்ரகுப்தன்: மன்னா,என்ன ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்து விட்டீர்கள். 

யமன்: இந்த நரனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும், என்ன தண்டனை என்ற குழப்பத்தில் உள்ளேன். 

நந்தன்: அப்பாடா, வந்த வேலை முடிஞ்சது. எதே நம்மளால முடிஞ்சது. குழம்பி தீர்வதுக்குள் எஸ் ஆகனும். எப்படிய்ய்ய். 

சித்ரகுப்தன்: மன்னா, இந்த மூன்று தண்டனைகளும் ஒரே காலத்தில் கொடுப்போம். அல்லது தண்டனைக் காலத்தை இன்னமும் அதிகரிப்போம். 

நந்தன்: அடடா, மன்னர் குழம்பினாலும் இந்த அல்லக்கைகள் விடாது போல இருக்கே. சரி சமாளிப்போம். எவ்வளவோ பார்த்துட்டேம்,இது என்ன..

யமன்: மிக மிக கடுமையான தண்டனையாக இருக்கவேண்டும்,அதைப் பார்த்து எவனும் என் முன் வாயைத் திறக்கக் கூடாது. 

நந்தன் : பேசாமல் எல்லாரையும் மன்மோகன் ஆக்கிடுங்க...யாரும் வாயைத் தொறக்க மாட்டாங்க...

யமதூதன்: அடேய் உன் தப்புக்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகின்றது.வாயை மூடு. 

யமன்: ஆகா கண்டுபிடித்து விட்டேன், மிக கொடுமையான தண்டனை, யாரும் வழங்காத தண்டனை. அற்புதமான, ஆளைப் பையித்தியம் பிடிக்க வைக்கும் தண்டனை. 

சித்ரகுப்தன் : ஆவலுடன் மன்னா என்ன அது மன்னா, சொல்லுங்கள். 

நந்தன்: அடாடா,வில்லங்கமா இருக்கும் போல, சரி பொறிக்கறது வீட பெரிசா என்ன தண்டனையைத் தரப்போறானுங்க.

யமன்: டேய் நரனே, அடுக்கடுக்காய் பாவங்கள் பண்ணியது இல்லாமல்,என்னையே கிண்டல் பண்ணத் துனிந்த உனக்கு அதிக பட்ச தண்டனை வழங்குகின்றேன். இதை அனுபவித்து நீ பைத்தியம் பிடித்து அனு அனுவாய் சித்தரவதைப் படுவாய். 

நந்தன் : என்ன தண்டனைன்னு சொல்லாம, புதிர் போட்டா எனக்கு என்ன ஜோசியமா தெரியும். 

யமன்: கோபமாக,சத்தமாக எழுந்து நின்று, அடேய் நரனே, உனக்கு இந்த தண்டனைதான் பொருத்தம். நீ இங்கு இருக்கும் காலம் எல்லாம் தினமும், நீ நெடுக்காலபோவான் எழுதிய பதிவுகள் எல்லாத்தையும் நீயே உக்காந்து படிக்க வேண்டும். இதுதான் நான் உனக்கு வழங்கும் தண்டனை. 

நந்தன் : பதட்டமாக, சத்தம் போடத்துவங்கியபடி....அய்யோ அய்யோ அது மட்டும் வேண்டாம், நீங்க சொன்ன எல்லா தண்டனைகளும் ஒட்டு மொத்தமாக தாருங்கள், ஆனா இந்த தண்டனை மட்டும் வேண்டாம் என்று கத்திக்கொண்டு கண்விழிக்கிறார்.... 

_____________________________________________________________________________________[size=6] [/size]

[size=6]நந்தன் கண்விழிக்கவும்..நாடகம் இனிதே நிறைவேறுகிறது...நன்றி வணக்கம் உறவுகளே..நிழலி மட்டும் தான் போட்டிருக்கும் வாடக்கைக்கு எடுத்த எமதர்மன் உடுப்புகளை தரமாட்டன் என்டு மண்டபத்தின் பின்னால் அடம்பிடிக்கிறார்..இப்பிடியே இருந்து யாழுக்கை வெட்டப்போறாராம்... :( :([/size] “

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதெல்லாமா நடந்திச்சி  வயசு போகப்போக ஒண்டுமே ஞாபகம் வரமாட்டேங்குது.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இப்போதுதான் இவற்றைப் படிக்கிறேன் ....... ஆஹாங், எப்பேர்பட்ட நகைச்சுவை எழுத்தாளனை இந்த நாசமாய்போன அரசியல் திசைமாறிப் போக வைத்து விட்டதே ........ தொடர்ந்து நகைச்சுவைகளாக எழுதுங்கள் . ........ இந்த யாழ் 27 ம் அகவையில் இருந்து மீண்டும் ஆரம்பியுங்கள் .........!  👍

கோஷானின் கவிதைக்கு ஒரு ஆகர்ஷண சக்தி இருக்கத்தான் செய்யுது . ........! 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ரதியைக் கண்ட உற்சாகத்தில் கிருபன்

@ரதியை விட ரதியின் அவதாரில் உள்ள சிவப்பு உதட்டுச் சாய நீலிதான் எப்போதும் உற்சாகம் தருவா😍 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

@பாலபத்ர ஓணாண்டி

ரசோ அண்ணன் வந்திருக்காக, நம்ம பெரியப்பு சுவி அண்ணன் வந்திருக்காக…

இன்னும் இன சனம் எல்லாம் வந்திருக்காக…வாம்மா…மின்னல்….

என அழைத்ததும் மின்னல் போல வந்தமைக்கு நன்றிகள்

மின்னல் போல் வந்தாலும், மழை போல் யாழில் நின்று பொழிக, பொழிகவே🙏.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.