Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது தலைவிதியை நாமே தீர்மானிப்போம்

Featured Replies

நமது தலைவிதியை நாமே தீர்மானிப்போம்

யாழ் இணைய செய்தி அலசல்

எழுதியவர்: ஒலிவர் ஜேம்ஸ்

'இலங்கை அரசு இலங்கைத்தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டும்.' இந்தக் குரல்கள் ஒலிப்பது உள்ளிருந்தல்ல. வலியுறுத்துவது சர்வதேச சமூகம். அடக்கமாக அல்ல. முன்னெப்போதையும் விட அதிகமாக! 'அரசியல் தீர்வு' என்பது பல ஆண்டுகாலமாக பேசப்பட்டுவருகிறது. இலங்கை அரசியல் வரலாற்று நெடுகிலும் இதனைக் காணலம். சாதரணரும் அறிவர்.

அடுத்தடுத்து வந்த எல்லா (சிங்கள) அரசுகளும் 'அரசியல் தீர்வு' என்ற பதத்தை பயன்படுத்தியுள்ளன. ஓர் ஏமாற்று வித்தையாகவே அதனைக் கையாண்டு வந்திருக்கின்றன. இதனை அனுபவம் உறுதி செய்கிறது. இந்த மரபில் வந்தவர்தான் இன்றைய அரசுத்தலைவர். இவர் மட்டும் என்ன விதிவிலக்கா? கடந்தகால தனது சகாக்களின் ஏமாற்று உத்திகளையே இவரும் பயன்படுத்துகிறார். அவர்களின் அனுபவங்களையும் உதவியாகக் கொண்டே 'அரசியல் தீர்வு' பற்றியதான நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

சர்வகட்சி மாநாடு, அனைத்துக்கட்சி மாநாடு, வட்டமேசை மாநாடு போன்ற பெயர்மாற்றங்கள் ஒருபுறம். ஒற்றை ஆட்சி, சமஷ்டி ஆட்சி, ஐக்கிய இலங்கைக்கு உட்பட்ட தீர்வு, மாகாண சபை, மாவட்ட சபை, பிரதேச சபை

போன்ற பல்வேறு அதிகார சபைகள் பற்றிய பேச்சு மறுபுறம். இவற்றின் மூலம், இதோ செய்கிறோம்,இந்தா வருகிறது, ஜனவரியில் தீர்வு, பெப்ரவரியில் தீர்வு என்று பூச்சாண்டிகள் தான் தினம் தினம்.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது:

1. 'அரசியல் தீர்வு' என்பது சிங்கள அரசால் முன்வைக்கப் படக்கூடிய ஒன்றா? இல்லையா?

2. (சிங்கள அரசால் முன்வைக்கப்பட முடியாத) இத்தகைய ஒரு தீர்வுக்காய் எத்தனை காலம் காத்திருப்பது?

3. அவ்வாறாயின், கொல்லப்படும் மக்களைக் காப்பதற்கு மாற்று வழிமூலம் அரசியல் தீர்வைக் காண்பது எப்படி?

இம் மூன்று விடயங்கள் தொடர்பான சில பார்வைகளை சுருக்கமாக இக்கட்டுரை தருகிறது.

அரசியல் தீர்வு

மகிந்த ராஜபக்ச அவர்கள் அரசுத்தலைவராக பதவியேற்றார். வந்த வேகத்தில் இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். இராணுவ வழித் தீர்வில் விருப்பம் காட்டினார். 'அரசியல் தீர்வு' விடயத்தில் நாட்டம் அற்றவராக இருந்தார். இதனைச் சகலரும் அறிவர்.

ஆயினும், சர்வதேசம் விடுமா? 'அரசியல் தீர்வு' காண் என்றது. அதனால் ஒரு வித்தை காட்டும் உத்தியாக 'அரசியல் தீர்வு' விடயத்தை கையிலெடுத்தார். அரசியல் கட்சிகளையும் அமைப்புகளையும் ஒன்று கூட்டினார். சர்வகட்சி எனப் பெயர் சூட்டினார். தீர்வைக் காணுங்கள் என்று பணித்தார்.

யார் அவர்கள்? 'அரசியல் தீர்வு' என்பதையே எதிர்க்கும் கட்சிகள். இதன் அடிப்படையில், தீர்வு எதுவும் எட்டப்படாது நிலை தோற்றுவிக்கப்பட்டது. நீண்டு செல்லக்கூடிய நிகழ்ச்சிநிரல் உருவாக்கப்பட்டு தொடர்கிறது. இதனை செவ்வனவே செய்கின்றன இந்தக் கட்சிகள்.

அதுமட்டுமல்ல. அவ்வப்போது இந்தக் கட்சிகள் ஒன்று கூடும். சர்வதேச நெருக்கடிகளுக்கு ஏற்ப, என்ன அதிகாரம் கொடுக்கலாம் என மதிப்பிடும். பின்னர் அது கொடுக்கப்படக்கூடாது என விவாதிக்கும். இப்படியாக பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகத் தொடர்ந்து வருகின்றது.

இன்றைய அரசுத்தலைவர் தனித்து முடிவெடுக்கும் பிரத்தியேக அதிகாரம் கொண்டவர். அதனை இராணுவ ஏவுதலுக்காகவும், வட கிழக்கை பிரிப்பதற்காகவுமே அவர் பயன்படுத்திவருகிறார். ஆனால், வட கிழக்கில் ஒரு தேசியத் தீர்வை முன்வைப்பதற்கு அவர் முன்வரவில்லை. இந்த வெளிப்பாடு, இன்றைய அரசுத்தலைவரிடம் இருந்து நாம் அமைதித் தீர்வை எதிர்பார்க்க முடியாது என்பதை தெளிவாக்கி நிற்கிறது.

சர்வகட்சி மாநாடு

இன்றைய அரசுத் தலைவரால் கூட்டப்பட்டிருக்கின்ற அரசியல் கட்சிகள் எவை? அவை அனைத்தும் சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துபவை. அவர்கள் சிங்கள மக்களின் பிரதிநிதிகள். ஆதலால், சர்வகட்சி மாநாடு பிரேரிக்கும் விடயம் என்பது சிங்கள மக்களால் தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் ஒருபக்கத்து யோசனை மட்டுமே. அதுவே முடிவல்ல. எனவே, இக் கட்சிகளின் அபிப்பிராயங்கள், முடிவுகள் அல்லது இழுத்தடிப்புகள் யாவும் சிங்கள மக்களால் முன்வைக்கப்படுகின்ற ஆலோசனை என்ற வகையிலேயே பார்க்கப்படவேண்டும்.

'வட கிழக்கு' வாழ் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளுடன் நேரடிப் பேச்சுக்கள் நடத்தப்படவேண்டும். அதன் மூலமே ஓர் தீர்வுக்கு வரவேண்டும். இம் முறையே இலங்கையில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒரு நியாயமான அணுகுமுறையாகும்.

அதை விடுத்து 'வட கிழக்கு' மக்கள் பிரச்சனைக்கு, அம்பாந்தோட்டை பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி தீர்வு காண முற்படுகிறார் இன்றைய அரசுத் தலைவர். இப்போக்கிலிருந்து நாம் மீண்டும் புரிந்துகொள்ளக்கூடியது, 'அரசியல் தீர்வு' எட்டப்பட முடியாத நிலையில் காய்களை நகர்த்தி வருகிறார் என்பதேயாகும்.

சர்வதேசமும் நிர்ப்பந்தமும்

இந்தக் காலகட்டத்தில் நாம் இன்னொரு விடயத்தை அவதானிக்கவேண்டும். சர்வதேச நாடுகள் இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தம் ஏற்படுத்தி ஓர் 'அரசியல் தீர்வு'க்கு இணங்க வைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்படும் எந்தத் தீர்வும் நிலையானது இல்லை. இதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை அரசுத் தலைவர் ஒரு கணம் சம்மதித்தாலும், மறுகணம் அதை மீறுவதற்கான சகல முயற்சிகளிலும் இறங்குவார். இதுவே வரலாற்று உண்மை.

எனவே இலங்கை அரசை நிர்ப்பந்திப்பதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கான ஒரு தீர்வு எட்டுவது என்பது சாத்தியமான அணுகுமுறை அல்ல. அதாவது, இந்தியத் தரப்பாலேயோ, அமெரிக்க தலைமையிலான இணைத்தலைமை நாடுகளாலேயோ அல்லது ஐக்கிய நாடுகளினாலேயோ இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் இலங்கை அரசு ஒரு தீர்வுக்கு வருமாயின் அது விரைவில் கலைந்து போகும் ஒரு தீர்வாகவே இருக்க முடியும். ஆகவே நாம் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு தீர்வை எட்டுவது என்பது தேவையற்ற ஒரு கால விரையமேயாகும்.

தீர்வு - நிறுவுதல், நியாயப்படுத்துதல்

அப்படியாயின், தமிழர்களுக்கான எதிர்காலத் தீர்வு என்பது என்ன? எவ்வகையில் இது கையாளப்படுக் கூடியது? இதுவே இன்றைய கேள்வி ஆகும். இலங்கைத் தமிழர்கள் 'தமது தலைவிதியை தாமே நிர்ணயிக்கும்' முடிவை எப்போதோ பெற்றுள்ளனர். அதற்கான போராட்ட வழிமுறைகளிலும் பல ஆண்டு காலமாக இறங்கி தடம்பதித்து வருகின்றனர். இவ்வேளையில் அவர்களுக்கான 'அரசியல் உரிமை' என்பது நிலை நிறுத்தப்படவேண்டிய ஒன்றாக விளங்குகிறது. இதனால், சிங்கள அரசு இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு தரும் என்ற நம்பிக்கையை நாம் தொடர்ந்தும் பேணி வருவது தேவையற்ற ஒன்று.

பதிலாக, தமிழ்பேசும் மக்கள் தமக்கு உகந்த தீர்வை தாமே முன்மொழிந்து அதனைப் பிரகடனம் செய்வதன் மூலம் நிறுவுவதற்கு முன்வரவேண்டும். இவ்வாறு நிறுவப்படும் தீர்வானது சர்வதேச அரங்கில் ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட தீர்வுகளில் ஒன்றாக அமைவது சிறப்பானதாகும். இது விரைந்த அங்கீகாரத்துக்கு ஓர் உந்து சக்தியாக அமையும். இவ்வாறான ஓர் நடைமுறை தமிழ் மக்களால் முன்னெடுக்கப் படுவதானது, 'இலங்கை அரசு தீர்வுத் திட்டத்தை தீர்மானிக்கும் காலம் வரை நாமாக மேற்கொள்ளும் ஓர் நடவடிக்கை' என நியாயம் கொள்ளல் அவசியமாகும்.

[சர்வதேச அரங்கில் இணக்கம் காணப்பட்ட (இடைக்கால) தீர்வுகளாக 'ஒஸ்லோ உடன்படிக்கை', சுனாமி காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட 'PTOM உடன்படிக்கை' ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.]

இவ்வாறு இலங்கை அரசின் முடிவுக்காக காத்திருக்காது, சர்வதேச சட்ட வரையறைகளுக்கு அமைவான, அதன் ஆதரவு பெற்ற தீர்வுத் திட்டம் ஒன்றை தமிழர்கள் தாமாகவே நடைமுறைக்கு கொண்டு வரவேண்டியது காலத்தின் தேவையாகிறது. இப்படியாக உருவாகும் நிர்வாகத்தை கட்டிக்காப்பதே (அரசியல் இராணுவ நடவடிக்கைகள் மூலம்) தமிழர் தரப்பின் கடமையாகிறது.

மூன்று விடயங்கள் முன்வைக்கப்பட்டு இக்கட்டுரை தொடர்கிறது. முதலாவது விடயம். போர் என்பது தீர்வல்ல. அது வெளிப்படையானது. அவலங்கள் நிறைந்த இந்தப் போர் முடிவுக்கு வருதல் வேண்டும். முடிவுக்கு வருதல் என்கின்ற நிகழ்வு, ஒருபகுதியினருடைய தோல்வியினால் நிகழும்போது மீண்டும் வேற்றுருவில் பிரச்சனைகள் தோன்ற வாய்ப்பக்கள் அதிகமுண்டு. சர்வதேச நிர்மாணங்களுக்கிணங்க ஒரு தீர்வு ஏற்படும் போது அது பேணப்படுதலில் சர்வதேசம் முக்கிய பங்காற்றும். ஆனால் இதுவரையிலான ஒப்பந்தங்கள் எதனையும் சிங்கள அரசுகள் மதித்து நடந்ததேயில்லை என்பதுதான் வரலாறு. அதனை நன்றாக மீண்டுமொருமுறை உலகிற்குப் புரியவைப்பதுவே புலிகளின் நிலைப்பாடு

தீர்வைச் சிங்களம் தருமா? அப்படியென்றால் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றதுபோல் இதுவும் சுதந்திரம் பெறுதல் என்று கருத முடியுமா? அப்படிக் கருதப்பட்டால், தீர்வென்பதைச் சிங்களத்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது. தீர்வு எவருக்குத் தேவையோ அவர்களே சிங்களத்துக்கான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். அந்த வேலைத்திட்டம் விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்படுகின்றது. அதே நேரம் புலம் பெயர்ந்தவர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் சர்வதேசத்திற்கு செய்திகளைச் சொல்வனவாக இருக்க முடியுமே தவிர அவைமீது எவ்வித அழுத்தங்களைப் புகுத்த முடியாது.

தீர்வுக்காகக் காத்திருத்தல், சிங்கள அரசு தீர்வினை முன்வைத்தலென்பது உலகைத் திருப்திப்படுத்தும் ஒரு நாடகம் மட்டுமே. சர்வதேசம் கொடுக்கும் இலங்கை மீதான அழுத்தங்களும் இப்போதைய நிலையில் தமிழர் தரப்பை ஏமாற்றும் ஒரு வேலைத்திட்டந்தான். விடுதலைப்புலிகளால் தென்னிலங்கை முழுவதும் யுத்தம் பற்றிய பயவுணர்வு ஏற்படுத்தப்படும்போது மட்டுமே சிங்களம் தனது அரசைத் தீர்வைநோக்கித் தள்ளிவிடும். அந்த நிலைவரும்போதுதான் தமிழர் அரசியலில் எந்தப் பேரினவாத அரசியல் கட்சிகளும் குளிர்காய முடியாதுபோகும்.

ஈழத்தை போலவே மிக முக்கியமான இடத்தில் அதே அளவான முக்கியத்தோடை இருக்கும் தாய்வானை ஒருக்கா ஒப்பிட்டு பாருங்கள்...

சீன பிராந்திய ஆதிக்கத்துக்குள்ளும், அச்சுறுத்தலுக்குள்ளும் இருக்கும் நாடான தாய்வான் இண்றுவரை ஐக்கிய நாடுகளின் சபையால் அங்கீகரிக்க படாத நாடு... ஆனாலும் சுயமான தேச வரைகளோடு தனித்துவமான ஆட்சியை செய்து வருகிறது...

இந்திய பிராந்திய ஆதிக்கத்துக்குளும் அச்சுறுத்தலுக்குள்ளும் இருக்கும் ஈழம் கூட அதுபோல வாழலாம்... அதோடு கூடுதலாக இலங்கை படைகளை சமாளிக்கும் திறனையும் வைத்திருக்க வேண்டிய தேவை இருக்கிறது... சீனாவை சமாளிக்கும் தாய்வானுக்கும் ஈழத்துக்கும் பெரிய வித்தியாசம் இருக்க போவது இல்லை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிநாட்டையே ஒருதலைப்பட்சமா பிரகடனப்படுத்தலாம் எண்டு அங்கால கதை நடக்குது................. இங்க என்னடா எண்டா தூக்கி குப்பையில போட்ட ஒஸ்லோ உடன்பாட்டையும்.............. சுனாமி உடன்பாட்டையும் ஒருதலைப்பட்சமா பிரகடனப்படுத்தலாமாம்.................... என்னவோ போங்கோ இப்ப எத்தின தரம் நாங்கள் தனிநாட்டை பேப்பர்களிலயும் இன்ரர்நெட்டிலயும் பிரகடனப்படுத்திட்டம்....................

:D:lol:

அதென்ன சர்வதேச சட்ட வரையறைக்குள்ளான தீர்வு............ வரையறைக்கு வெளியிலான தீர்வு???????????? உப்பிடியே எல்லாத்துக்கும் சர்வதேசத்துக்கு பயந்துகொண்டு இருந்தா இவ்வளவு போராட்டமும் நடந்திருக்குமா???????????????? சும்மா ptom atom எண்டுகொண்டு................ ஆய்வாளர் மாருக்கு எழுதுறதுக்கு வேற ஒண்டும் கிடைக்கல போல :D

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தை போலவே மிக முக்கியமான இடத்தில் அதே அளவான முக்கியத்தோடை இருக்கும் தாய்வானை ஒருக்கா ஒப்பிட்டு பாருங்கள்...

சீன பிராந்திய ஆதிக்கத்துக்குள்ளும், அச்சுறுத்தலுக்குள்ளும் இருக்கும் நாடான தாய்வான் இண்றுவரை ஐக்கிய நாடுகளின் சபையால் அங்கீகரிக்க படாத நாடு... ஆனாலும் சுயமான தேச வரைகளோடு தனித்துவமான ஆட்சியை செய்து வருகிறது...

இந்திய பிராந்திய ஆதிக்கத்துக்குளும் அச்சுறுத்தலுக்குள்ளும் இருக்கும் ஈழம் கூட அதுபோல வாழலாம்... அதோடு கூடுதலாக இலங்கை படைகளை சமாளிக்கும் திறனையும் வைத்திருக்க வேண்டிய தேவை இருக்கிறது... சீனாவை சமாளிக்கும் தாய்வானுக்கும் ஈழத்துக்கும் பெரிய வித்தியாசம் இருக்க போவது இல்லை..."

அமெரிக்கா போல உடன்பிறவா சகோதரன் எங்களிடமில்லை.தாய்வானுக்கு அமெரிக்கா உடன் பிறவா சகோதரன்.

அமெரிக்கா போல உடன்பிறவா சகோதரன் எங்களிடமில்லை.தாய்வானுக்கு அமெரிக்கா உடன் பிறவா சகோதரன்.

ஒருவேளை நீங்கள் ஹொங் ஹொங் கைத்தான் தாய்வான் எண்று சொல்கிறீர்களோ எண்று சந்தேகமாக இருக்கிறது....! ஹொங் ஹொங் இப்போ சீனாவில் கைகளில்...

தாய்வானுக்கு அமெரிக்காவில் ஆசி கிடையாது.... இருக்கும் ஆதரவு எல்லாம் எதிரிக்கு எதிரி ஆதரவு நிலைதான்.... அதயும்தாண்டி சீனாவை(இந்தியாவை அல்ல) எதிர்க்கும் தீரம் எல்லாம் அமெரிக்காவுக்கு கிடையாது... அப்படியான சீன எதிர்ப்பை தாங்கும் சக்தியும் தாய்வானுக்கு கிடையாது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவேளை நீங்கள் ஹொங் ஹொங் கைத்தான் தாய்வான் எண்று சொல்கிறீர்களோ எண்று சந்தேகமாக இருக்கிறது....! ஹொங் ஹொங் இப்போ சீனாவில் கைகளில்...

தாய்வானுக்கு அமெரிக்காவில் ஆசி கிடையாது.... இருக்கும் ஆதரவு எல்லாம் எதிரிக்கு எதிரி ஆதரவு நிலைதான்.... அதயும்தாண்டி சீனாவை(இந்தியாவை அல்ல) எதிர்க்கும் தீரம் எல்லாம் அமெரிக்காவுக்கு கிடையாது... அப்படியான சீன எதிர்ப்பை தாங்கும் சக்தியும் தாய்வானுக்கு கிடையாது...

இப்ப நீங்க என்ன சொல்ல வாறீங்க???????????????????????????? சர்வதேசத்தின்ர அங்கீகாரம் தேதவையோ தேவையில்லையோ???????

இப்ப நீங்க என்ன சொல்ல வாறீங்க???????????????????????????? சர்வதேசத்தின்ர அங்கீகாரம் தேதவையோ தேவையில்லையோ???????

உங்களிட்ட சொந்த சரக்கு எண்டு ஒண்டு இருக்குதுதானே..??? அதை வச்சு நீங்களே முடிவு எடுக்கலாமே...

ஒருவேளை தனிநாடு பிரகடனம் செய்தால், தாய் நாட்டுக்கு உங்களின் உதவி எப்படியாக இருக்கும் எண்டு முதலிலை சொல்லுங்கோ... பிரகடனம் சாத்தியமா இல்லையா எண்டு முடிவு பற்றி யோசிக்கலாம்...!! அங்கீகாரம் தேவையா இல்லையா எண்டதையும் யோசிக்கலாம்...

தாயகத்திலை பொருளாதடை இருக்கு... உணவை உற்பத்தி செய்ய முடியவில்லை... பொருளாதாரத்தை பலப்படுத்த உற்பத்திகளுக்கு மூலப்பொருள் இல்லை... மீன் பிடிச்சு சாப்பிடலாம் எண்டால் கடலுக்கு போக கட்டுமரம்தான் இருக்கு வலைக்கு தட்டுப்பாடு...!

நெடுமாறன் அண்ணா உணவு பொருட்களை ஏத்தி யாழ்ப்பாணம் அனுப்ப போறார் எண்டா அப்பிடியோ சங்கதி அவருக்கு ஏன் வேண்டாத வேலை, உது சரி வராது. எண்டு விடுப்பு கதைக்கிறதுக்குதான் எங்கட சனம் சரி... அதுக்கை அடங்கி கிடந்த செய்தியை எத்தினை பேர் விளங்கி கொண்டிங்கள்..??

ஆகிரமிப்பையும் தடையையும் மீறி தமிழகத்தான் ஈழத்தவனுக்கு உணவுதர முன் வருவான் என்பதை உலகுக்கும் ,இந்தியாவுக்கும் சொன்ன செய்தியாக எத்தினை பேருக்கு விளங்கிச்சுதோ நான் அறியேன்...!! அப்படி அடக்கு முறை வந்தாலும் தருவேன் என்னும் அந்த தமிழன். ஈழம் மலர்ந்தாலும் கட்டாயம் தருவான்...! அப்படி தமிழக உறவு செய்ய விளைந்ததை ஏன் இந்த புலம் பெயந்தவனால் செய்ய முடியவில்லை, அல்லது முடியாதா..??

அப்படி எல்லாருமாய் சேந்து ஊருக்கு சாப்பாட்டை அனுப்புவம் எங்கட மக்களை நாங்கள் தாங்குவம் எண்ட நினைப்பு எங்கட ஆக்களுக்கு வராது... அப்படி செய்யிறது சாத்தியம் இல்லை எண்டுவியள் அதோட தமிழீழபிரகடனம் சாத்தியமா எண்டு விடுப்பு புடுங்க மட்டும்தான் முடியும்...!

(( அதாவது முதலிலை தமிழீழத்தை நீங்கள் அங்கீகரியுங்கள்...)

Edited by தயா

இப்ப நீங்க என்ன சொல்ல வாறீங்க???????????????????????????? சர்வதேசத்தின்ர அங்கீகாரம் தேதவையோ தேவையில்லையோ???????

அங்கீகரித்தலை ஆரம்பத்தில் எந்த நாடுகளிலும் ஏற்றுக் கொள்வதற்குத் தயக்கம் காட்டுவார்கள். சர்வதேசத்தினுடைய தலையீடென்பது தவிர்க்க முடியாதது, என்பது விடுதலைப் புலிகளின் கருத்து. ஆனாலும் சர்வதேசத்தின் இயலாமை ஒருகட்டத்தில் வெளிப்படும்போது தனித் தமிழீழத்திற்கான அங்கீகாரம் கிடைக்கப் பெறுவது எழிதாகும். சர்வதேசத்தின் ஓரங்கமாக தமிழீழம் ஆவதற்கு அவர்களின் ஆதரவு தேவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.