Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட்டுவாகல் பாலத்துக்கு ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு; முல்லை மக்களின் நீண்டகால பிரச்சினையை தீர்த்துவைப்பதில் மகிழ்ச்சி - ரவிகரன் எம்.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 2

17 FEB, 2025 | 05:11 PM

image

முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணியினை ஆரம்பிப்பதற்கு 2025ஆம் ஆண்டுக்குரிய வரவு - செலவுத் திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஆரம்ப கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வரவு- செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும்போதே இவ்விடயத்தை அறிவித்துள்ளார்.

இந் நிலையில் தமது அயராத தொடர் முயற்சியால் முல்லைத்தீவு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தமது தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணத்துக்கான நிதியை இவ்வருட வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கியதற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் விமல் ரத்நாயக்க, கூட்டுறவுப் பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோருக்கு முல்லைத்தீவு மக்களின் சார்பாக தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், 

குறிப்பாக முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் அமைக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். 

அந்த வகையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வட்டுவாகல் பாலம் அமைக்கப்பட வேண்டுமென கூட்டுறவுப் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவிடம் வலியுறுத்தியதுடன், இக்கூட்டத்தின் பின்னர் பிரதி அமைச்சர் மற்றும் சக பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் அனைவரையும் நேரடியாக வட்டுவாகல் பாலம் அமைந்துள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து இடர்ப்பாடுகள் குறித்து நேரடியாகக் காண்பித்திருந்தார். 

IMG-20250217-WA0103.jpg

அதன் பின்னர் கடந்த வருடம் டிசம்பர் 04ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது பாராளுமன்ற முதல் உரையில், வட்டுவாகல் பாலம் அமைக்கப்படவேண்டும் என வலியுறுத்தியதுடன், அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பிலும் இந்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார். இதன்போது வட்டுவாகல் பாலம் அமைப்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படுமென ஜனாதிபதியும் தெரிவித்திருந்தார்.

IMG-20250217-WA0101.jpg

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் அமைச்சர் விமல் ரத்நாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில் வட்டுவாகல் பாலம் அமைப்பதற்கு 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுமென அமைச்சர் விமல் ரத்நாயக்க நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் உறுதியளித்திருந்தார்.

இத்தகைய சூழலிலேயே திங்கட்கிழமை (17) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வரவு - செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்போது வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணத்தை ஆரம்பிப்பதற்கு ஆயிரம் மில்லியன் நிதி ஒதுக்கப்படுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG-20250217-WA0098.jpg

வட்டுவாகல் பாலத்துக்கு ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு

  • கருத்துக்கள உறவுகள்

480229742_653376663753139_76368724630431

சேதமடைந்த வட்டுவாகல் பாலத்தை புதிதாக அமைக்க அரசாங்கம் இந்த வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கியுள்ளது, வட்டுவாகல் பாலத்தை மீள அமைக்க வேண்டியது என்பது மிகவும் தேவையான ஒன்று, ஆனால் அவ்வாறு செய்வதன் மூலம், எமது வரலாற்றின் ஒரு முக்கிய பகுதியை அழிக்கும் அபாயமும் உள்ளது என்ற கவலை தோன்றியுள்ளது . பழைய வட்டுவாகல் பாலம் தமிழ் மக்களின் மீள்தன்மை மற்றும் துயரத்தின் கதையைச் சொல்கிறது ( resilience and misery ) - இது தமிழர் போராட்டத்தின் சின்னம் மற்றும் நாம் தாங்கிய துயரத்தின் சாட்சி .

ஜெர்மனியின் பெர்லின் சுவரின் எச்சங்கள் ஜெர்மனியின் கடந்த காலத்தையும் வரலாற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் சக்திவாய்ந்த நினைவூட்டலாகச் செயல்படுவது போல, வட்டுவாகல் பாலம் தமிழர்களின் கூட்டுப் பயணத்திற்கு ஒரு சான்றாக நிற்கிறது.

குறைந்தபட்சம் புதிய பாலத்தை அமைக்கும் போது பழைய பாலத்தின் ஒரு பகுதியை நினைவுச் சின்னமாக பெயர்தெடுத்து பாதுகாக்கலாம். இது தொடர்பில் எமது மக்கள் பிரதிநிதிகள் கவனம் எடுத்து அரசோடு பேச வேண்டும்.முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் .

போரின் நினைவு எச்சமாகவும் மிச்சமாகவும் ( War memorial )போர் சார்ந்த சுற்றுலாவில் எமது முக்கிய அடையாளமாகிய (War tourism ) இந்த வரலாற்று அடையாளத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.

Monisha Kokul

சிங்களம் எரித்த நூலகத்தையே... அதன் சுவடு தெரியாமல் புதிதாக மாற்றியவர்கள் நாம்.

அதன் அருகில்... புதிதாக வேறு ஒரு நூலகத்தை கட்டி, பழையதை நினைவுச் சின்னமாக வைத்திருந்து இருக்கலாம்.

Baskaran Gopalakrishnan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

480229742_653376663753139_76368724630431

சேதமடைந்த வட்டுவாகல் பாலத்தை புதிதாக அமைக்க அரசாங்கம் இந்த வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கியுள்ளது, வட்டுவாகல் பாலத்தை மீள அமைக்க வேண்டியது என்பது மிகவும் தேவையான ஒன்று, ஆனால் அவ்வாறு செய்வதன் மூலம், எமது வரலாற்றின் ஒரு முக்கிய பகுதியை அழிக்கும் அபாயமும் உள்ளது என்ற கவலை தோன்றியுள்ளது . பழைய வட்டுவாகல் பாலம் தமிழ் மக்களின் மீள்தன்மை மற்றும் துயரத்தின் கதையைச் சொல்கிறது ( resilience and misery ) - இது தமிழர் போராட்டத்தின் சின்னம் மற்றும் நாம் தாங்கிய துயரத்தின் சாட்சி .

ஜெர்மனியின் பெர்லின் சுவரின் எச்சங்கள் ஜெர்மனியின் கடந்த காலத்தையும் வரலாற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் சக்திவாய்ந்த நினைவூட்டலாகச் செயல்படுவது போல, வட்டுவாகல் பாலம் தமிழர்களின் கூட்டுப் பயணத்திற்கு ஒரு சான்றாக நிற்கிறது.

குறைந்தபட்சம் புதிய பாலத்தை அமைக்கும் போது பழைய பாலத்தின் ஒரு பகுதியை நினைவுச் சின்னமாக பெயர்தெடுத்து பாதுகாக்கலாம். இது தொடர்பில் எமது மக்கள் பிரதிநிதிகள் கவனம் எடுத்து அரசோடு பேச வேண்டும்.முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் .

போரின் நினைவு எச்சமாகவும் மிச்சமாகவும் ( War memorial )போர் சார்ந்த சுற்றுலாவில் எமது முக்கிய அடையாளமாகிய (War tourism ) இந்த வரலாற்று அடையாளத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.

Monisha Kokul

சிங்களம் எரித்த நூலகத்தையே... அதன் சுவடு தெரியாமல் புதிதாக மாற்றியவர்கள் நாம்.

அதன் அருகில்... புதிதாக வேறு ஒரு நூலகத்தை கட்டி, பழையதை நினைவுச் சின்னமாக வைத்திருந்து இருக்கலாம்.

Baskaran Gopalakrishnan

பிச்சைக்காரனுக்கு பிச்சை எடுப்பதற்க்கு புண் தேவைதான். அம்மண்ணின் மக்களிடம் கேட்டு பாருங்கள், அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு வட்டுவாகல் பாலம் எவ்வளவு முக்கியமானது என்று.

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுவாகல் பாலம் சுமார் 600 மீட்டர் நீளமுடையது, மேலும் தினமும் 40,000க்கும் மேற்பட்ட மக்கள் இதைப் பயன்படுத்துகின்றனர். இந்தப் பாலம் இல்லாத நிலையில், மக்கள் போக்குவரத்தில் பெரும் இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர், குறிப்பாக மழைக்காலங்களில் நீரில் மூழ்கும் பாலம் காரணமாக பயணம் மிகவும் கடினமாகிறது.

இந்தப் பாலம் வன்னி மக்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு முக்கியமானது. விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் போன்றோர் தங்கள் பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்வதற்கு இந்தப் பாலம் தேவையானது.

2009 இறுதி யுத்தத்தின்போது இந்தப் பாலம் பெரும் சேதத்திற்கு உள்ளானது. அதன் பின்னர் இது முறையாக புதுப்பிக்கப்படவில்லை, இது மக்களின் துன்பத்தை மேலும் அதிகரித்துள்ளது. புதிய பாலம் அமைப்பது இந்தப் பகுதியின் மீளமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு தேவையானது.

  • 6 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வட்டுவாகல் பாலத்தை புனரமைக்க அனுமதி

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வட்டுவாகல் பாலம் என அழைக்கப்படும் பரந்தன் - கரைச்சி – முல்லைத்தீவு (A035) வீதியின் 50/1 ஆம் இலக்க பாலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல் களப்புக்குக் குறுக்காக அமைக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டில் இறுதியாக திருத்தப்பட்டுள்ள குறித்த பாலம் தற்போது பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றது.

அதனால், வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் இருவழிப் பாதையுடன் கூடிய புதிய பாலமாக அதனை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக, தேசிய போட்டி விலைமனுக் கோரல் முறைமையின் அடிப்படையில் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.

கிடைக்கப்பெற்ற விலைமனுக்களை மதிப்பீடு செய்த பின்னர், உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளுக்கமைய, கணிசமானபதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரரான M/s RR Construction (Pvt) Limited க்கு இந்த நிர்மாணப் பணிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmei8d8aq02qaqp4k5tvwrtgp

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.