Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று கோழிக்குஞ்சுகள்

--------------------------------------

'பாடசாலை நாட்களில் உனக்கு எத்தனை பெண் நண்பிகள் இருந்தார்கள்?'

'அப்படி ஒருவருமே இருக்கவில்லை............'

கொஞ்சம் திடுக்கிட்ட அவன் என்னைக் கூர்ந்து பார்த்தான்.

'ஏன்.......... உன்னுடைய வகுப்பில் பெண் பிள்ளைகள் எவரும் படிக்கவில்லையா............'

'இல்லை.......நான் ஒரு ஆண்கள் பள்ளியில் படித்தேன்.'

'அது என்ன ஆண்கள் பள்ளி என்றால்...........'

'ஆண்கள் பள்ளி என்றால் அங்கே ஆண்பிள்ளைகள் மட்டுமே படிப்பார்கள். பெண்கள் இருக்கமாட்டார்கள்...........'

அப்படியான பாடசாலைகளும் உலகில் இருக்கின்றனவா என்று கேட்டுவிட்டு, அவன் இதுவரை கேட்டிராத ஒரு புது நகைச்சுவைக்கு சிரிப்பது போல சத்தமாகச் சிரித்தான். அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த எல்லோரும் திரும்பி எங்களையே பார்த்தனர். எனக்குத் தான் அது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. அவன் அதைப் பொருட்படுத்தவே இல்லை.

அவன் சிரித்து முடித்து விட்டு,  'பெண்கள் பாடசாலை என்றும் உங்கள் நாட்டில் இருக்கின்றதா............' என்று  கேட்டான்.

இன்னும் அதிகமாகச் சிரிப்பானோ, நிலத்தில் விழுந்து உருளப் போகிறானோ என்ற தயக்கத்தில் பதில் சொல்லாமல் இருந்தேன். 

ஆனால் அவன் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

'ஆ................. பெண்கள் பாடசாலைகளும் இருக்கின்றன...........'

இந்த தடவை அவன் சிரிக்கவில்லை. அவன் கடுமையாக யோசிப்பது தெரிந்தது. 

நான் அவனுடன் வேலை செய்ய ஆரம்பித்து ஆறு மாதங்களே ஆகியிருந்தன. அவன் கடுமையாக யோசிக்கின்றான் என்பதை என்னால் கண்டுபிடித்துவிடமுடியும். அவன் வேலையில் அடிக்கடி யோசிப்பான். அவன் அவனுடைய நாட்டிலிருக்கும் பல்கலையில் மிகச் சிறப்பான சித்தி பெற்று, பின்னர் மேற்படிப்பிற்காக அமெரிக்கா வந்தவன். அப்படியே இங்கேயே தங்கிவிட்டான்.

எங்களுடன் வேலை செய்த பலரும் அவன் கொஞ்சம் மந்தமானவன் என்றே நினைத்திருந்தனர். ஆனால் உண்மையில் அவன் ஒரு அதிபுத்திசாலி. ஓரளவு உயரமான அவன் மெல்லிதாக இருந்தான். முதுகு கொஞ்சம் வளைந்து இருந்தது. அதனால் அவனது தோற்றத்தில் ஒரு பலவீனம் தெரிந்தது. அந்தப் பலவீனத் தோற்றத்தை வைத்தே அவனைப் பற்றிய கணிப்புகள் உருவாகி இருந்தன.

அவன் தனக்கு தன் நாட்டில் பாடசாலை நாட்களில் ஒரு பெண் நண்பி இருந்ததாகச் சொன்னான். 

அவர் தான் இன்று உன்னுடைய மனைவியா என்ற என் கேள்வியை காதில் வாங்காதது போல யன்னல்களுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். 

சிறிய மௌனத்தின் பின், தான் ஒரு கோழிக்குஞ்சு வளர்த்தேன் என்று ஆரம்பித்தான். 'ஒரேயொரு கோழிக் குஞ்சா, ஏன் கூட்டமாக வளர்ப்பது தானே.....' என்று நான் ஆச்சரியப்பட்டேன். அவனுடைய நாட்டில் செல்லப் பிராணியாக ஒன்றே ஒன்றைத்தான் வளர்க்கலாமாம். அவனுடைய பெற்றோர்கள் ஒரு உயர் தொடர்மாடிக் குடியிருப்பில் 25 வது தளத்தில் இருக்கும் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். அந்த நாட்களில் அவனுடைய நாட்டில் ஒரு குடும்பத்துக்கு ஒரேயொரு பிள்ளை, ஒரேயொரு செல்லப்பிராணி என்று அந்த அரசாங்கத்தின் சட்ட திட்டங்கள் கொஞ்சம் சிக்கனமானவை.

25 வது தளத்தில், ஒரு பூட்டிய வீட்டுக்குள் ஒரு கோழிக்குஞ்சு நாள் முழுக்க, அதன் வாழ்க்கை முழுக்க என்ன செய்யும். அவன் பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் கோழிக்குஞ்சை கையில் கொண்டு கீழே வந்துவிடுவான். கோழிக்குஞ்சு அங்கே தரையில் மேயும், சுற்றுத்திரியும். பின்னர் அவனின் பெற்றோர்கள் வேலையால் வரும் நேரத்தில் நால்வரும் ஒன்றாக வீட்டிற்குள் போவார்கள்.

அவனுடைய பெண் நண்பி பின்னர் ஒரு நாள் அவன் வகுப்பில் இருந்த சிறந்த விளையாட்டு வீரனின் தோழியாக ஆகினார் என்று நான் முன்னர் கேட்ட கேள்விக்கு இப்பொழுது பதில் சொன்னான். நான் ஏற்கனவே அந்தப் பெண்ணை மறந்து விட்டு, அவனின் ஒற்றைக் கோழிக்குஞ்சை பற்றி யோசிக்க ஆரம்பித்திருந்தேன்.

'உன்னுடைய கோழிக்குஞ்சு ஆணா அல்லது பெண்ணா........' என்று கேட்டேன். 

'குஞ்சாக இருக்கும் போது எப்படித் தெரியும்..................'

நாலு நாட்களிலேயே ஒரு குஞ்சு பேட்டுக்குஞ்சா அல்லது சேவல்க்குஞ்சா என்று தெரிந்துவிடும். ஆனால் ஒரேயொரு குஞ்சை 25 வது மாடியில் வளர்ப்பவர்களுக்கு இந்த அனுபவம் கைவர எத்தனை வருடங்கள் தேவைப்படும் என்று தெரியவில்லை.

'அது வளர்ந்திருக்கும் தானே...............'

'நீ பெண்களுடன் ஒரே வகுப்பில் படிக்கவே இல்லையா................' என்று கேட்டான்.

கோழிக்குஞ்சுக்கு என்ன ஆகியிருக்கும் என்ற என் நினைப்பை ஓரமாக தள்ளிவிட்டு, பெண்களுடன் ஒரே வகுப்பில் இருந்திருக்கின்றேனா என்று கணக்குப் பார்க்க ஆரம்பித்தேன். ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கின்றேன். ஆனால் அதை எல்லாம் கணக்கில் சேர்க்கமுடியாது. கோழிக்குஞ்சு என்ன குஞ்சு என்று தெரியாமல் அதை வளர்ப்பது போல அந்த சின்ன வகுப்புகள்.

பின்னர் 11 ம், 12 ம் வகுப்புகளில் தனியார் கல்வி நிலையங்களில் பெண் பிள்ளைகள் இருந்திருக்கின்றார்கள். சமீபத்தில் அவர்களில் ஒருவரை இன்னொரு நாட்டில் ஒரு குடும்ப விழாவில் சந்தித்தேன். அவர் என்னைத் தெரியவே தெரியாது, நாங்கள் ஒன்றாகப் படிக்கவேயில்லை என்று பலர் முன்னிலையில் சொன்னார். இனிமேல் எவரையும் என்னுடன் ஒரே வகுப்பில் படித்ததாக சொல்லுவதில்லை என்ற முடிவை அன்று எடுத்திருந்தேன்.

பல்கலை வகுப்புகளில் பெண்கள் இருந்தார்கள். அவர்கள் முன் வரிசைகளில் இருப்பார்கள். நானும், என் நண்பன் ஒருவனும் எப்போதும் கடைசி வரிசை. அது பருத்தித்துறையும், காலியும் போல. ஒன்றுக்கு இன்னொன்று என்னவென்றே தெரியாது.

'இல்லை..................... நான் பெண்களுடன் படிக்கவேயில்லை..............'

அவன் ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டான். வெள்ளைச் சோற்றின் மேல் அவித்த பச்சைக் கீரையும், ஏதோ ஒரு அவித்த மாமிசமும் அன்று கொண்டு வந்திருந்தான். அநேக நாட்களில் அப்படித்தான் வெறும் அவியல்களாக மட்டுமே  கொண்டுவருவான்.

'ஒரு நாள் கோழிக்குஞ்சும், நானும் கீழே போயிருந்த பொழுது, சிறிது நேரத்தில் திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது................'

அது அப்படியே பெரிய மழையாக கொட்ட ஆரம்பித்தது என்றான். அவன் ஒரு வீட்டின் முன்னால் போய் ஒதுங்கி நின்றிருக்கின்றான். மழை விட்டதும், அவனின் கோழிக்குஞ்சை தேடி ஓடினான்.

'மழையில் கோழிக்குஞ்சுகள் என்ன செய்யும்...............' என்று கேட்டான் அவன்.

'அவைகள் மழை படாத இடமாக ஒதுங்கும்..............'

'ம்ம்............ நான் எல்லா இடமும் தேடினேன்...............'

மீண்டும் யன்னலுக்கு வெளியே பார்த்தான். அவனின் கண்களில் விழுந்த வெளிச்சத்தில் கண்கள் ஈரத்துடன் பளபளத்தன.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ரசோதரன் said:

பாடசாலை நாட்களில் உனக்கு எத்தனை பெண் நண்பிகள் இருந்தார்கள்?'

'அப்படி ஒருவருமே இருக்கவில்லை............'

கொஞ்சம் திடுக்கிட்ட அவன் என்னைக் கூர்ந்து பார்த்தான்.

'ஏன்.......... உன்னுடைய வகுப்பில் பெண் பிள்ளைகள் எவரும் படிக்கவில்லையா............'

'இல்லை.......நான் ஒரு ஆண்கள் பள்ளியில் படித்தேன்.'

'அது என்ன ஆண்கள் பள்ளி என்றால்...........'

'ஆண்கள் பள்ளி என்றால் அங்கே ஆண்பிள்ளைகள் மட்டுமே படிப்பார்கள். பெண்கள் இருக்கமாட்டார்கள்.........

என்ன இது எனது வாழ்க்கை போல உள்ளதே.

எனக்கு வீட்டிலும் இல்லை.

போன பாடசாலையிலும் இல்லை.

நானும் ஒரு கோழிக்குஞ்சு வளர்த்திருக்கலாமோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன இது எனது வாழ்க்கை போல உள்ளதே.

எனக்கு வீட்டிலும் இல்லை.

போன பாடசாலையிலும் இல்லை.

நானும் ஒரு கோழிக்குஞ்சு வளர்த்திருக்கலாமோ?

🤣................

நீங்கள் பரவாயில்லை, அண்ணா.......... அக்காவை உங்களுக்கு முன்னரே தெரியும் தானே........

நாங்கள் பலர் உலகத்தின் ஒரு பக்கம் என்னவென்றே தெரியாமலேயே வளர்ந்தோம்..................

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இந்து பாலர் பாடசாலையில் பெண் பிள்ளைகளுடன் அதுவும் தனித்தனி வகுப்புகளில் படித்தது . ..... அது கொஞ்சம் புரியும்போது இந்துக்கல்லூரிக்கு மாறியாச்சுது . ........ ம் ......... இது சாபமா வரமா இன்னும் புரியவில்லை . ...... இந்தக் கதை படிக்கும்போது . ......... ! 😇

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

எங்களை ஒன்றாகவே சேர்ந்து படிக்க விட்டிருக்கலாம் என்று தான் தோன்றுகின்றது, சுவி ஐயா......

அப்பொழுது 'பெண்கள் மட்டும்' என்று சில பஸ்கள் போய்வரும். மெதடிஸ் பெண்கள் பாடசாலைகள் போன்றவற்றுக்காக ஓடியவை. மெதடிஸ் பெண்கள் பாடசாலை 3:20 க்கும், ஹாட்லி 3:30 க்கும் முடியும்.

ஒரு நாள், ஆறாம் வகுப்பில் என்று நினைக்கின்றேன், எங்களுக்கும் 3:20 பாடசாலை முடிந்தது. பஸ் நிலையத்திற்கு ஓடிப் போனால், 'பெண்கள் மட்டும்' பஸ் வந்தது. சின்னப் பொடியள் தானே என்று எஙகளில் சிலரையும் அதில் ஏற்றினார்கள்.

அங்கிருந்த சில அக்காமார்கள் சுற்றிவர வந்துவிட்டார்கள். அவரைத் தெரியுமா, இவரைத் தெரியுமா என்று சில அண்ணன்மார்களின் பெயர்களைச் சொல்லிக் கேட்டார்கள். ஹாட்லி என்றால் நீங்கள் என்ன பெரிய இதுவா, அதுவா...... என்றும் சிலர் பொய்க்கோபங்களும் காட்டினார்கள்.

இரண்டு பாடசாலைகளும் ஒன்றாக இருந்தால் நல்லாக இருக்குமே என்று அன்றே தோன்றியிருக்குது போல.................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரசோதரன் said:

நல்லத்தான் இருக்கு...இப்படியொன்றை...மூனரும் எங்கேயோ வாசித்தது மாதிரியிருக்கு ரசோ சார்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, alvayan said:

நல்லத்தான் இருக்கு...இப்படியொன்றை...மூனரும் எங்கேயோ வாசித்தது மாதிரியிருக்கு ரசோ சார்..

நான் எழுதவில்லை, அல்வாயன்................... வேறு யாரும் எழுதியிருந்தார்களோ தெரியவில்லை. உங்களுக்கும் இந்த பஸ்களை தெரிந்திருக்கும் தானே..................

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன இது எனது வாழ்க்கை போல உள்ளதே.

எனக்கு வீட்டிலும் இல்லை.

போன பாடசாலையிலும் இல்லை.

நானும் ஒரு கோழிக்குஞ்சு வளர்த்திருக்கலாமோ?

ம் குஞ்சையாவது வளர்த்திருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

................... வேறு யாரும் எழுதியிருந்தார்களோ தெரியவில்லை. உங்களுக்கும் இந்த பஸ்களை தெரிந்திருக்கும் தானே..................

இந்த பஸ்களுக்கென்றே தனி கதைப்புத்தகம் அடிக்கலாம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நந்தன் said:

ம் குஞ்சையாவது வளர்த்திருக்கலாம்

இதற்காகத்தான் கோழிக்குஞ்ச கோழிக்குஞ்சு என்று ஒரே சொல்லாகவே சேர்த்து எழுதியிருந்தனான். அப்படி இருந்தும் நந்தன் அதைப் பிரித்து விட்டார்..........🤣.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மூன்றாவது கோழிக்குஞ்சு யார். தொலைந்து போன அந்தக் கோழிக்குஞ்சு யார். ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும்.😀

பெண்களுடன் படிக்கவே இல்லை என்று சொல்லும் பொழுதே புரிகிறது.😉

7 minutes ago, ரசோதரன் said:

இதற்காகத்தான் கோழிக்குஞ்ச கோழிக்குஞ்சு என்று ஒரே சொல்லாகவே சேர்த்து எழுதியிருந்தனான். அப்படி இருந்தும் நந்தன் அதைப் பிரித்து விட்டார்..........🤣.

நந்தன் எப்போதும் பூடகமாகவே பதில் அளிப்பார். 😃

Edited by செம்பாட்டான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, செம்பாட்டான் said:

அந்த மூன்றாவது கோழிக்குஞ்சு யார். தொலைந்து போன அந்தக் கோழிக்குஞ்சு யார். ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும்.😀

பெண்களுடன் படிக்கவே இல்லை என்று சொல்லும் பொழுதே புரிகிறது.😉

நந்தன் எப்போதும் பூடகமாகவே பதில் அளிப்பார். 😃

தலைப்பு மட்டும் தான் இன்னமும் மிஞ்சி இருக்குது..................... இந்தக் கதை நான் எழுதினது இல்லை............ 🤣.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த 3 குஞ்சுக்கதை அருமை @ரசோதரன் அண்ணை 👌. நல்ல முத்தாய்ப்பு.

நான் ஹாட்லியிலை இருந்து பிறகு கலவன் பள்ளிக்கூடத்துக்கு மாறினான், ஆனால் அங்கையும் பெரா மாதிரித் தான்.

நான்நினைக்கிறன், எங்கடை பழக்கதோசம் சரியில்லைப் போலை, அதோடை நமக்கு வாய்க்கிற நண்பர்கள் இருக்கிறாங்களே....🤣

நான் குருணாகல் சாஹிராவில் 4 ஆம் வகுப்பு வரைக்கும் படித்தனான். அது ஒரு கலவன் முஸ்லிம் பாடசாலை. அங்கு படித்த என் வகுப்பை விட ஒரு வகுப்பு கூடிய என் கூடப் பிறந்த அக்காவுடன் படித்த ஒரு முஸ்லிம் அக்கா, இன்று வரைக்கும் என்னை தம்பி என்று அன்பாக அழைக்கும் ஒருவர். சந்தோசமான ஒரு பாடசாலை.

பின் 83 கலவரத்தின் காரணமாக யாழ்ப்பாணம் போய், பரியோவான் கல்லூரியில் 10 ஆம் வகுப்பு முடியும் வரை படித்தேன். பரியோவான் கல்லூரி ஆண்கள் பாடசலை என்று எல்லாருக்கும் தெரியும் என நினைக்கின்றேன். பாடசாலை வாழ்க்கையில் வரண்ட காலம் அது.

பின் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள விவேகானந்தா கலவன் பாடசாலையில் 11 ஆம், 12 ஆம் வகுப்பு படித்தனான். வாழ்வில் கிடைத்த அருமையான வசந்த காலங்களில் ஒன்று. அங்குள்ள தோழிகளுக்கு கலர்ஸ் காட்டுவதற்காகவே பட்டிமன்றம், பாட்டுப் போட்டி, இலக்கிய விழா என்று ஈடுபட்டு சாகித்திய விழாவில் பரிசுகளும் வாங்கினேன்.

ஆண் பெண் ஆரோக்கியமான உறவும் நட்பும் கூடவே சில அருமையான காதல்களும் உருவாகும் இடம் கலவன் பாடசாலைகள்.

பழைய நினைவுகளை மீட்டி விட்டீர்கள் ரசோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, villavan said:

நான் ஹாட்லியிலை இருந்து பிறகு கலவன் பள்ளிக்கூடத்துக்கு மாறினான், ஆனால் அங்கையும் பெரா மாதிரித் தான்.

நான்நினைக்கிறன், எங்கடை பழக்கதோசம் சரியில்லைப் போலை, அதோடை நமக்கு வாய்க்கிற நண்பர்கள் இருக்கிறாங்களே....🤣

🤣..................

எங்களின் நட்புகளுக்கும், எங்களுக்கும் இருக்கும் பொருத்தம் தான் உள்ளதிலேயே சிறப்பான பொருத்தம்..................🤣.

'ஶ்ரீரங்கத்து தேவதைகள்......' கதைகளில் வருவது போல பல கதைகள் அன்று ஊரில் நடந்திருக்கின்றது. ஆனால் என்னுடைய வட்டத்திற்கும் அதற்கும் சம்பந்தமே கிடையாது....... வெறும் பார்வையாளர்கள் தான்..............

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

அங்கிருந்த சில அக்காமார்கள் சுற்றிவர வந்துவிட்டார்கள். அவரைத் தெரியுமா, இவரைத் தெரியுமா என்று சில அண்ணன்மார்களின் பெயர்களைச் சொல்லிக் கேட்டார்கள். ஹாட்லி என்றால் நீங்கள் என்ன பெரிய இதுவா, அதுவா...... என்றும் சிலர் பொய்க்கோபங்களும் காட்டினார்கள்.

அதுக்குப் பின் கண்டக்ரர் கூப்பிட்டு ஏத்தினாலும்

பிச்சை வேணாம் நாயைப் பிடி என்று

ஏறாமல் இருந்தீர்களா?அல்லது

பெட்டைகளின் வெருட்டலில் ஒரு சுகம் கண்டீர்களா?

2 hours ago, நந்தன் said:

ம் குஞ்சையாவது வளர்த்திருக்கலாம்

ம் அதை வளர்க்கப் போய்த் தான் படிப்பையும் கைவிட்டாச்சு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஆண் பெண் ஆரோக்கியமான உறவும் நட்பும் கூடவே சில அருமையான காதல்களும் உருவாகும் இடம் கலவன் பாடசாலைகள்.

அதுவே தான் நிழலி.....................

இதை நீங்கள் சொன்னவுடன் ஒரு சம்பவம் நினைவிற்கு வருகின்றது. எனக்கு கனடாவில் நடந்தது. மிகச் சாதாரண ஒரு சந்தர்ப்பத்திலேயே நாங்கள் எப்படி திக்குமுக்காடிப் போகின்றோம் என்பதிற்கு அந்த சம்பவம் ஒரு உதாரணம். பின்னர் அதையே ஒரு கதையாக எழுதுகின்றேன்.

17 minutes ago, ஈழப்பிரியன் said:

அதுக்குப் பின் கண்டக்ரர் கூப்பிட்டு ஏத்தினாலும்

பிச்சை வேணாம் நாயைப் பிடி என்று

ஏறாமல் இருந்தீர்களா?

🤣..............

அதற்குப் பின்னர் ஒரே ஒரு தடவை மட்டுமே அந்த பஸ்ஸில் எங்களை ஏற்றினார்கள் என்று ஞாபகம்.

நாங்கள் முன்னெச்சரிக்கையாக 'நாங்கள் வேலாயுதம் ஸ்கூல்........' என்று சொன்னோம். எங்களை எவரும் கவனிக்கவேயில்லை..................🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.