Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் அவமானப்பட்டது உக்கிரேனிய ஜனாதிபதி என நினைத்தாலும், தற்போது இணையத்தளங்களில் உக்கிரேனிய ஜனாதிபதி எவ்வாறு அமெரிக்க ஜனாதிபதியினை அவமானப்படுத்தினார் என்பதற்கு கூறப்படும் அவர் உடல்மொழி மற்றும் திறமையான பேச்சாற்றலையும் கூறுகிறார்கள்.

இந்த நிகழ்வு உக்கிரேனுக்கு சாதகம் எதனையும் ஏற்படுத்தாது, ஆனால் இதனை இவ்வாறு கையாண்டிருக்க கூடாதோ என தோன்றுகிறது, ஆனால் அமெரிக்க அதிபர் கூறிய அமெரிக்க ஆயுதங்கள் இல்லை என்ற்றல் இரண்டு கிழமை கூட உக்கிரேனால் தாக்குபிடிக்க முடியாது என்பதற்கு ஆம் 3 நாள்கள், இதனை முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன் புட்டினிடம் இருந்து என கூறும்போது அவரது உடல் மொழியால் கூறுகின்ற கருத்து மற்றும் நக்கல் தொனி என உக்கிரேனிய அதிபர் தெறிக்கவிடுகின்றார்.

நன்றி உணர்ச்சி இருக்க வேண்டும் என கூறும்போதெல்லாம் அவர் காட்டும் உடல் மொழி 350 பில்லியனுக்கு 500 பில்லியனாக வாங்கும் (கனிம வளமாக) உனக்கெதற்கு நான் நன்றி உணர்ச்சி காட்ட வேண்டும் எனும் ஒரு உடல் மொழி மூலம் இதுவரை உலகில் போரை ஏற்படுத்தி அந்த இரத்ததில் வரும் பணத்தின் மூலம் இராஜ்ஜியம் நடாத்தும் உங்களுக்கே இவ்வளவு ஆணவம் இருக்கும் என்றால் அதில் பாதிக்கப்படுபவனினிற்கு எவ்வளவு உணர்வு இருக்கும் என பாதிக்கப்படும் இனங்களின் சார்பாக எழுச்சி பெற்று நிற்கும் ஒரு தலைவனாக ஜெலென்ஸ்கி காணப்படுகிறார்.

தற்போது தான் அமெரிக்காவிற்கும், இரஸ்சியாவிற்கும் வெளியே உண்மையாக கொண்டாடப்படும் தலைவனாக ஜேலென்ஸ்கி பரிணமித்துள்ளார், அமெரிகாவிற்குள் ஜெலென்ஸ்கிக்கு எதிராக மக்கள் திரும்புகிறார்கள் என கூறப்படுகிறது, இது வரலாற்றில் இதற்கு முன்னர் சர்வதேச அரங்கில் சேகுவேரா அமெரிக்க ஏகாதிபத்தியத்தினை கேள்விக்குள்ளாக்கியது போலாகும் (தாம் கூறுவதனை பொம்மை போல தலையாட்டாமல் கேள்வி கேட்பதனை விரும்பாத அமெரிக்க குடிமக்கள்).

ஆனால் சேகுவேராவையும் ஜெலென்ஸ்கியினையும் ஒப்பிடுவது தவறு, ஆனாலும் தற்போதய கால கட்டத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஜெலென்ஸ்கி நல்ல பதிலை கொடுத்திருக்கிறார், ஆனால் ஜெலென்ஸ்கி ஒரு சந்தர்பவாதி, இலட்சியவாதி அல்ல அதனால் காட்சிகள் மாறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/2/2025 at 23:23, nunavilan said:

போர் தொடங்கிய போதே கூறியது தான். ரஸ்யாவை அடிக்க அமெரிக்கா தேடியவர்கள் யூக்ரேனியர்கள் என்பதை புரிய பல மொக்கு சாமிகளுக்கு பிடித்த ஆண்டு 3 வருடங்கள். தற்போது யூக்ரேன் இழந்தது தனது மக்கள், சொத்து, முக்கியமாக விலைமதிப்பற்ற நிலம்.

இன்று செலன்ஸ்கியை அவமதித்த அமெரிக்கா அழத்தான் தோன்றியது.

சுயநல பாஸ்ரட் அமெரிக்க அரசு சேகுவாராவில் தொடங்கி இன்று செலன்ஸ்கியில் நிற்கிறது.இன்னும் தொடரும்.உலகம் இவர்களை உணராத வரை முடிவு இவரை போலவே எல்லோருக்கும் இருக்கும்.

இந்த சேகுவேரா அமெரிக்கா தொடர்பு உதாரணம் பற்றிக் கொஞ்சம் விளக்குங்கள். நான் அறிந்த வரை சேகுவேரா அமெரிக்கா எதிர் தரப்புகளில் தான் இருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, vasee said:

ஆரம்பத்தில் அவமானப்பட்டது உக்கிரேனிய ஜனாதிபதி என நினைத்தாலும், தற்போது இணையத்தளங்களில் உக்கிரேனிய ஜனாதிபதி எவ்வாறு அமெரிக்க ஜனாதிபதியினை அவமானப்படுத்தினார் என்பதற்கு கூறப்படும் அவர் உடல்மொழி மற்றும் திறமையான பேச்சாற்றலையும் கூறுகிறார்கள்.

இந்த நிகழ்வு உக்கிரேனுக்கு சாதகம் எதனையும் ஏற்படுத்தாது, ஆனால் இதனை இவ்வாறு கையாண்டிருக்க கூடாதோ என தோன்றுகிறது, ஆனால் அமெரிக்க அதிபர் கூறிய அமெரிக்க ஆயுதங்கள் இல்லை என்ற்றல் இரண்டு கிழமை கூட உக்கிரேனால் தாக்குபிடிக்க முடியாது என்பதற்கு ஆம் 3 நாள்கள், இதனை முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன் புட்டினிடம் இருந்து என கூறும்போது அவரது உடல் மொழியால் கூறுகின்ற கருத்து மற்றும் நக்கல் தொனி என உக்கிரேனிய அதிபர் தெறிக்கவிடுகின்றார்.

நன்றி உணர்ச்சி இருக்க வேண்டும் என கூறும்போதெல்லாம் அவர் காட்டும் உடல் மொழி 350 பில்லியனுக்கு 500 பில்லியனாக வாங்கும் (கனிம வளமாக) உனக்கெதற்கு நான் நன்றி உணர்ச்சி காட்ட வேண்டும் எனும் ஒரு உடல் மொழி மூலம் இதுவரை உலகில் போரை ஏற்படுத்தி அந்த இரத்ததில் வரும் பணத்தின் மூலம் இராஜ்ஜியம் நடாத்தும் உங்களுக்கே இவ்வளவு ஆணவம் இருக்கும் என்றால் அதில் பாதிக்கப்படுபவனினிற்கு எவ்வளவு உணர்வு இருக்கும் என பாதிக்கப்படும் இனங்களின் சார்பாக எழுச்சி பெற்று நிற்கும் ஒரு தலைவனாக ஜெலென்ஸ்கி காணப்படுகிறார்.

தற்போது தான் அமெரிக்காவிற்கும், இரஸ்சியாவிற்கும் வெளியே உண்மையாக கொண்டாடப்படும் தலைவனாக ஜேலென்ஸ்கி பரிணமித்துள்ளார், அமெரிகாவிற்குள் ஜெலென்ஸ்கிக்கு எதிராக மக்கள் திரும்புகிறார்கள் என கூறப்படுகிறது, இது வரலாற்றில் இதற்கு முன்னர் சர்வதேச அரங்கில் சேகுவேரா அமெரிக்க ஏகாதிபத்தியத்தினை கேள்விக்குள்ளாக்கியது போலாகும் (தாம் கூறுவதனை பொம்மை போல தலையாட்டாமல் கேள்வி கேட்பதனை விரும்பாத அமெரிக்க குடிமக்கள்).

ஆனால் சேகுவேராவையும் ஜெலென்ஸ்கியினையும் ஒப்பிடுவது தவறு, ஆனாலும் தற்போதய கால கட்டத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஜெலென்ஸ்கி நல்ல பதிலை கொடுத்திருக்கிறார், ஆனால் ஜெலென்ஸ்கி ஒரு சந்தர்பவாதி, இலட்சியவாதி அல்ல அதனால் காட்சிகள் மாறலாம்.

செலன்ஸ்கிக்கு அமெரிக்க மக்களிடையே ஆதரவு குறைந்திருப்பதாக எங்கே தரவு இருக்கிறது? ட்ரம்பின் கூல் எயிட்டை (அல்லது அவர் சொன்னால் பிளீச்சையும்) குடிக்கும் முட்டாள் கூட்டமொன்று இருக்கிறது, அது 2016 இல் இருந்த அதே சிறு எண்ணிக்கையில் தான் இருக்கிறது.

ஆனால், பெரும்பாலான அமெரிக்கர்கள் - இரு கட்சிகளையும் சேர்ந்தோர்- செலன்ஸ்கி மீது மரியாதை வைத்திருக்கின்றனர். இன்று சில நகரங்களில் செலன்ஸ்கிக்கு ஆதரவாக சில ஆர்ப்பாட்டங்களும் நடக்கின்றன. வேர்மொன்ற் மாநிலத்திற்கு குடும்பத்தோடு விடுமுறை போயிருக்கும் புண்ணாக்குப் பயல் ஜேடி வான்சை, அங்கே நடக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக வேறிடத்திற்கு மாற்றியிருக்கிறார்கள்.

செலன்ஸ்கி தலை நிமிர்ந்து உலக வலம் வரும் நிலையில், புண்ணாக்குப் பயல் ஜேடி சொந்த நாட்டிலேயே ஒழித்துத் திரிய வேண்டிய நிலை வந்திருக்கிறது😂.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/3/2025 at 10:22, நிழலி said:

நீங்கள் சொல்வது மிகச் சரி நுணா.

நாங்களும் அதே மாதிரி, சிங்கள பெளத்த இனவாத அரசுக்கு எதிராக போராடாமல், மாவட்ட சபையே போதும் என்று அன்றே காலில் வீழ்ந்து சரணாகதியாகி இருந்தால், அதாவது டீல் பேசி இருந்திருந்தால் பெருமளவான உயிரிழப்புகள், நிலப்பறிப்புகள், பொருளாதார இழப்புகளை தவிர்த்து இன்றைய நிலையினை அன்றே நாம் அடைந்து இருக்கலாம்.

தலைவர் தன்னையும் தன் மக்களையும் நம்பி ஏமாந்து போனார். செலன்ஸ்கி அமெரிக்காவையும், மேற்குலகையும் நம்பி ஏமாந்து போனார்.

பேசாமல் அன்றே காலில் வீழ்ந்து பாதங்களை நக்கிப் பிழைத்து இருக்கலாம்

சொந்த நாட்டில் அடக்குமுறைக்கு எதிராக போராடுவதற்கும்

இன்னொருவனுக்காக அயல்நாட்டுக்கு துரோகம் இழைப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. சோவியத் யூனியன் பிரிந்தபோது உக்ரைன் ஒரு அணுவாயுத நாடு (பெலாரஸ் மற்றும் கசகஜிதான் கூட ) அது எத்தனை பேருக்கு இங்கு தெரியும் என்று தெரியவில்லை. உக்ரைன் மீது போர் செய்து உக்ரைனை கைப்பற்றிக்கொண்டு ரசியாமீது போர்செய்ய நேரிடலாம் எனும் தொலைநோக்கு பார்வையில் உக்ரைன் அணுவாயுதங்களை ரஸ்யாவிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை உருவாக்கியதே அமெரிக்காதான்.

2014 இல் கிரிமியா தன்னை சுதந்திர நாடக பிரகடனப்படுத்திய பின்புதான் தன்னை பிடெரசன் ஒப் ரசியாவுடன் இணைத்துக்கொண்டது. அப்போதுதான் மற்ற எல்லைப்புற ரசிய நகரங்களில் ரசியர்களுக்கு எதிராக உக்ரைன் செய்துவந்த இனத்துவேச படுகொலைகள் உக்ரைனுக்கு எதிராக மாறப்போவதை உணர்ந்துகொண்ட அமெரிக்க- பிரிடிஷ் அரசுகள் ஜி8 ௮ நாடுகளில் இருந்து ரசியாவை நீக்கினார்கள் ஆனாலும் உள்நாட்டு சிறுபான்மை ரசியர்களுக்கும் உக்ரேனிய அரச படைகளுக்கும் உள்நாட்டு போர் நடந்துகொண்டுதான் இருந்தது.

மேற்கு ஒருபோதும் உக்ரைன் நலன் கருதி உக்ரைனுக்கு உதவியதில்லை ... ரசிய எல்லையில் தம் ஆதிக்கத்தை செலுத்தவே உக்ரேனை பகடைக்காயாக பாவித்து வந்தார்கள். ஏன் இவ்வளவு காலமும் ஆளை விடடால் போதும் என்று பின்லாந்து நேட்டோவில் சேராமல் இருந்தார்கள்?

இப்போ உக்ரைன் போர் நெருக்கடிக்குள் அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து இணைத்தது கொண்டார்கள் அதற்க்கான பலனை இப்போதே அவர்கள் அனுபவித்து வருகிறார்கள் அவர்கள் எனர்ஜி செலவு இரட்டிப்பாகி இருக்கிறது.

இவ்வளவு கெடுபிடிக்குள்ளும் பிரான்ஸ் ஜேர்மன் ரசிய பெட்ரோலில்தான் வாழ்வு நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்ன நேரடியாக இல்லாமல் இந்தியா போய் ( கங்கையில் நீராடி புனித பெட்ரோலாக) வருகிறது.

நாம் ஒரு பக்க செய்தி மட்டுமே கேட்டு வாழ்கிறோம் 2022ல் போர் தொடங்குமுன் இரவு புடின் பைடனுடன் 2 மணிநேரம் பேசினார். அவர் என்ன பேசினார் என்பதை மக்களுக்கு காட்டி .... புடின் எவ்வளவு கொடியவர் என்பதை எங்களுக்கு நிரூபித்து காட்டி இருக்கலாமே? நாங்கள் ஒன்றும் பெரிதாக சுதந்திர நாடுகளில் வாழவில்லை .... செய்திகள் இருட்டிடப்பு செய்பட்டு ஒற்றை பக்க செய்திகளை மட்டும்தான் பார்க்கிறோம். ஆனால் ரசிய சீன போன்று அடக்குமுறைகள் இங்கு இல்லை

இந்த உக்ரைன் ரசிய போர் அமளிக்குள் இரண்டு ஆஃப்ரிக்க நாடுகள் பூரண சுந்திரம் அடைந்து தமது சொந்த கால்களில் நிற்க தொடங்கி இருகிறார்கள் மிக பெருத்த வளர்ச்சியிலும் சென்றுகொண்டு இருக்கிறார்கள். மேற்கு உலகிற்கு தாங்கவே முடியாத கசப்பாக இருக்கிறது ரசிய உதவிதான் அதற்கு பின்தளம் அதன் மீது எப்படி அழிவை கொண்டு வருகிறார்கள் என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Maruthankerny said:

நான் அறிந்த வரையில் நீங்கள் எழுதியது அத்தனையும் உண்மை.👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.