Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

11 MAR, 2025 | 10:38 AM

image

பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்டே, சர்வதேச குற்றவியல் நீதின்றத்தின் பிடியாணையின் கீழ் மணிலா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதின்றத்தின் பிடியாணையின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இவராவார்.

போதைப்­பொ­ருட்­களை ஒழிப்­ப­தற்­காக டுடேர்டே நடத்­திய போராட்­டத்தின் போது 30,000 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஐக்­கிய நாடு­களின் நீதி­மன்­ற­மான சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் (ஐ.சி.சி) இது குறித்து விசா­ரணை நடத்­தியது.

இந்நிலையிலேயே அவருக்கு பிடியாணையும், இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு  பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட டுடேர்டே  தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளர்.

கைது சட்டவிரோதமானது எனவும், விமான நிலையத்தில் வழக்கறிஞர்களில் ஒருவரை டுடேர்டேவைச் சந்திக்க பொலிஸார் அனுமதிக்கவில்லை எனவும் டுடெர்ட்டேவின் முன்னாள் சட்ட ஆலோசகர் சால்வடார் பனெலோ தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/208869

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த ரொட்ரிகோ டுட்டெர்டே?

Published By: RAJEEBAN

11 MAR, 2025 | 04:44 PM

image

guardian

முன்னாள் ஜனாதிபதியான இவர் தன்னை பற்றி பெருமிதமாக பேசிக்கொள்வதில்  விருப்பம் உள்ளவர்.

தனது இளம் வயதில் மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன் குற்றவாளிகளை தேடியலைந்ததையும், 16 வயதில் ஒருவரை கத்தியால் குத்திக்கொன்றதையும் அவர் பெருமையுடன் கூறியவர்.

durte.jpg

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண்ணொருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதற்கான வாய்ப்பை தவறவிட்டமை குறித்து 2016 இல் அவர் தெரிவித்திருந்தார். அந்த பெண் 1989 இல் சிறையில் கொல்லப்பட்டார்.

2016 இல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவர் தனது ஈவிரக்கமற்ற போதைப்பொருளிற்கு எதிரான போரை ஹிட்லரின் யூத அழிப்பு நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டிருந்தார்.

ஹிட்லர் 3 மில்லியன் யூதர்களை கொலை செய்தார் பிலிப்பைன்சில் போதைப்பொருளிற்கு அடிமையான மூன்று மில்லியன் பேர் உள்ளனர் அவர்களை படுகொலை செய்வது குறித்து நான் மகிழ்ச்சியடைவேன் என்றார்.

பெண்களை  இழிவு செய்தல்  தன்னை பற்றிய மிகைப்படுத்தி கதைத்தல்  பத்திரிகைகளை தாக்குதல் ஆகியவற்றை விரும்புபவரான ஒரு ஜனரஞ்சகவாதியான பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டே ஆயிரக்கணக்கானவர்களை கொலை செய்த போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்தமைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மனிலா விமான நிலையத்திற்கு அவர் வந்தவேளை சர்வதேச பொலிஸாரின் பிடியாணை அவருக்கு வழங்கப்பட்டது.

அவருடைய பதவிக்காலத்தில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

durte1.jpg

மின்டானாவோவில் உள்ள டாவோ நகரத்தின் முன்னாள் வழக்குதொடுநரும், மேயருமான டுட்டெர்டே போதைப்பொருள் குற்றங்களை ஒழிப்பதாக வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் 2016 இல் பிலிப்பைன்ஸ் தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியானார்.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அவர் ஈடுபட்டதால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதுடன் அவர்களின் உடல்கள் மனிலா குடாவில் உள்ள மீன்களிற்கு உணவாக வழங்கப்பட்டன.

war_on_drugs_phili.jpg

இவர் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் போதைப்பொருள் ஒழிப்புநடவடிக்கைகளின் போது 30,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம்  என சர்வதேசகுற்றவியல் நீதிமன்றத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் வறியமக்கள், நகரப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள். பொலிஸாரினால் இனந்தெரியாத குழுக்களினால் சுடப்பட்டார்கள்.

தண்டனை வழங்குபவர் என  அழைக்கப்பட்ட 79 வயது டுட்டெர்டே 15 வயதில் துப்பாக்கி வைத்திருந்தமைக்காக பாடசாலையிலிருந்து நீக்கப்பட்டவர் .

அவர் சில பாடசாலைகளில் இருந்து நீக்கப்பட்டார், தனது சக மாணவன் ஒருவன் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தார், ஆனால் எதற்காகவும் தண்டிக்கப்படவில்லை தப்பினார். இவரை கடுமையாக விமர்சித்தவரான பிலிப்பைன்சின் செனெட்டர் அந்தோனியோ டிரிலேன்ஸ் ஒரு முறை கார்டியனிற்கு தெரிவித்தார்.

இதுவே தண்டனையிலிருந்து விடுபடும் மனோநிலையை அவரிடம் உருவாக்கியிருக்கலாம். அவர் ஒருபோதும் தண்டிக்கப்படாததால் அவர் கொலைகளில் ஈடுபட்டார், தனது விருப்பம் போல செயற்பட்டார் என செனெட்டர் தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/208926

  • கருத்துக்கள உறவுகள்

இவரை பிலிப்பைன்ஸ் சிறையொன்றிலேயே கொஞ்ச நாட்கள் வைத்திருந்திருக்கலாம் என்பது என் அபிப்பிராயம். யாராவது பாதிக்கப் பட்டவர்களின் ஆட்கள் சிறைக்குள்ளேயே இவருக்குப் பாடம் படிப்பித்திருப்பர்.

நெதர்லாந்தில், ஹேக் நகரில், இவர் போன்றோருக்கு மூன்று நேரம் சத்தான உணவும், பல சலுகைகளும் கிடைக்கும். ஐரோப்பிய மக்களின் வரிப் பணத்தில் உண்டு உறங்கி இளைப்பாறுவார்😂!

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு வழங்கும் தண்டணை எங்களில் உள்ள போட்டு தள்ளுவோர் சங்க உறுப்பினர்களையும் சிந்திக்க வைப்பதாக இருக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-169.jpg?resize=750%2C375&ssl

சர்வதேச விசாரணைக்காக நெதர்லாந்துக்கு அழைத்து செல்லப்பட்ட பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) உத்தரவின் பேரில் மணிலாவில் கைது செய்யப்பட்ட பின்னர், பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே (Rodrigo Duterte) புதன்கிழமை (12) நெதர்லாந்தின் ஹேக் வந்தடைந்தார்.

அங்கு அவர் பதவியில் இருந்தபோது மேற்பார்வையிட்ட போதைப்பொருள் மீதான கொடிய ஒடுக்குமுறையுடன் தொடர்புடைய மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.

ஹாங்கொங்கிற்கான ஒரு பயணத்திலிருந்து துபாய்க்கு திரும்பிய டுடெர்ட்டேவை மணிலா விமான நிலையத்தில் வைத்து செவ்வாயன்று (11) பொலிஸார் கைது செய்தனர்.

79 வயதான அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படும் முதல் ஆசிய முன்னாள் அரச தலைவராக மாறியுள்ளார்.

தனது நாடுகடத்தலை எதிர்த்துப் போராடிய டுடெர்ட்டே, 2016 முதல் 2022 வரை பிலிப்பைன்ஸை வழிநடத்தினார்.

பதவிக் காலத்தில் அவர் மேற்கொண்ட கொடூரமான போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

https://athavannews.com/2025/1424970

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வீடியோ மூலம் ஆஜரானார் பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி

Published By: RAJEEBAN 15 MAR, 2025 | 12:07 PM

image

பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டர்டே சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜரான முதல் ஆசிய தலைவராகியுள்ளார்.

பிலிப்பைன்சின்  79 வயது முன்னாள் ஜனாதிபதி அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ள பகுதியிலிருந்து வீடியோ மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளில் இணைந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ரொட்ரிகோ டுட்டர்டே நீண்டதூரம் பயணம் செய்ததை கருத்தில் கொண்டு நீதிபதி இதற்கான அனுமதியை வழங்கியிருந்தார்.

போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தின்போது இவர் 30,000க்கும் அதிகமான பொதுமக்களை கொலை செய்தார் என சர்வதேச நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.

2016 முதல் 2022 முதல் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக பதவிவகித்த செவ்வாய்கிழமை ஐசிசியின் பிடியாணையின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டார்.

இதன் பின்னர் விமானம்மூலம்நெதர்லாந்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் அவர் வீடியோ மூலம் கலந்துகொண்டவேளை அவர் இழைத்ததாக தெரிவிக்கப்படும் குற்றங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டதுடன் அவருக்கு தன்னை நியாயப்படுத்துவதற்கான  உரிமைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

பலவீனமானவராக காணப்பட்ட பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி தனது பெயர் விபரங்களை உறுதி செய்தார்.

இதேவேளை தனது கட்சிக்காரர் பிலிப்பைன்சிலிருந்து கடத்தப்பட்டுள்ளார் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/209267

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.