Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

14 MAR, 2025 | 10:55 AM

image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவும் அமைச்சரவையும் கொள்கை தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சபையில் பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து ஆராய்வதற்கு விசேட குழுவொன்றை நியமிப்பது எனவும் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/209156

  • கருத்துக்கள உறவுகள்

Parliament.jpg?resize=750%2C375&ssl=1

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை இன்று (14) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை  அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி இந்த விடயம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தியதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக  அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இதன்போது  “இலங்கையில்  வடக்கு மற்றும் தெற்கில்  பல தசாப்தங்களாக, மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வந்துள்ளதாகவும், அதை தாம் நன்கு அறிவதாகவும்,   இந்த நாட்டு மக்களுக்கு ஜனநாயகம் தேவை எனவும், இந்த விடயத்தில் மக்களின் நம்பிக்கையை வென்று, ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தாம்  என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1425125

  • கருத்துக்கள உறவுகள்

484562378_1059918752839763_5126412574476

484782085_1059916296173342_5277620756584

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தை சட்டவிரோத நடவடிக்கைகளிற்கு ஏன் பயன்படுத்தினார்கள் - விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை

Published By: RAJEEBAN 14 MAR, 2025 | 05:08 PM

image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தை சட்டவிரோத நடவடிக்கைகளிற்கு பயன்படுத்தியமைக்கான காரணங்கள்

நாசகார சக்திகளால் ஏற்பட்ட அச்சுறுத்தல் அதிகரித்ததால், அரசாங்கம் இந்த பிரச்சினை குறித்து தீவிர கவனம் செலுத்தியது.

அதிகரித்து வரும் வன்முறையை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக காணப்பட்டது. ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள்  கடுமையான ஆபத்துக்களை எதிர்கொண்டிருந்தனர். தங்கள் நாளாந்த கடமைகளில் ஈடுபடுவது கூட அவர்களிற்கு சாத்தியமற்ற கடினமான விடயமாக காணப்பட்டது.

அரசசொத்துக்களும் அச்சுறுத்தலிற்குள்ளாகியிருந்தன, வன்முறைகள் அதிகரித்தமை அரசாங்கத்தின் மீது ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தியிருந்தது, நிர்வாகத்தை முன்னெடுப்பதிலும் இது தாக்கம்தை செலுத்தியிருந்தது.

ஆளும் ஐக்கிய தேசிய கட்சி ஜேவிபியிடமிருந்தே ஆபத்தை எதிர்கொண்டிருந்தது.

ஜேவிபியின் பிரச்சாரம், ஜனநாயக ரீதியில், சட்டத்திற்கு கட்டுப்பட்டு செயற்படும் அரசாங்கத்தின் எதிராளிகளிற்கு  உதவுகின்றது என அன்றைய அரசாங்கம் கருதியது.

செயற்படும் விதத்தில் அரசாங்கத்தின் ஏனைய எதிராளிகளை விட ஜேவிபி வித்தியாசமானது என்றாலும், ஜேவிபியினரும் அரசாங்கத்திற்கு(ஐக்கியதேசிய கட்சி) எதிரான செயற்பாட்டாளர்களும் ஜனநாயக அரசியல் செயற்பாடுகளில் இணைந்து செயற்பட்டு வந்தமைக்கான சான்றுகள் காணப்பட்டன.

ஐக்கிய தேசிய கட்சியை எதிர்க்கும் ஜனநாய அரசியல் கட்சிகளிற்குள் ஜேவிபியினர் ஊடுருவியுள்ளனர் என புலனாய்வு தகவல்கள் தெரிவித்தன.

jvp_insur.png

மூலோபாய அடிப்படையில் பார்த்தால் இது ஜேவிபியின் செயற்பாட்டாளர்களிற்கு உதவியிருக்கும்.

ஆகவே நாசகார சக்திகளால் உருவாக்கப்பட்ட வன்முறைகளை முடிவிற்கு கொண்டுவருவதற்கு அரசாங்கத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட காரணங்கள் இருந்தன.

நாசகார சக்திகளிற்கு எதிராக நடவடிக்களை எடுப்பதற்கு அரசாங்கம் பொலிஸாரையே பெருமளவிற்கு பயன்படுத்தியது. எனினும் கிளர்ச்சியின் பிந்தைய காலத்தில் அதனை எதிர்கொள்ள திறனை பொலிஸார் இழந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதன் காரணமாக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டிய நிலையேற்பட்டது.

அரசியல்வாதிகளை பொது சொத்துக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அப்பால் நாசகார வேலைகள் குறித்து விசாரணை செய்யவேண்டிய தேவை பொலிஸாருக்கிருந்தது.

புலனாய்வு தகவல்களை சேகரிப்பது நாசகார சக்திகளிற்கு எதிரான நடவடிக்கையில் முக்கியமான அம்சம், நாசகார இயக்கத்தின் செயற்பாடுகள் குறித்த புலனாய்வு தகவல்களை  தகவல்களை வழங்கியவர்கள் மூலமாக மாத்திரம் பெறவில்லை, பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட சந்தேகநபர்களை விசாரணை செய்வதன் மூலம் தகவல்களை பெற்றனர்.

நாசகார இயக்கம் குறித்தும் அதன் திட்டங்கள் குறித்தும் நம்பகதன்மை மிக்க  புலனாய்வு தகவல்களை பெறுவதற்கான நேரடி வழிமுறையாக இது காணப்பட்டது, இதன் காரணமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நபர்களை விசாரணை செய்வது என்பது ஜேவிபிக்கு எதிரான நடவடிக்கையில் முக்கியமானதாக காணப்பட்டது.

ஜேவிபிக்கு  எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸாரின் முக்கிய பிரிவாக நாசகார நடவடிக்கைகளிற்கு எதிரான பிரிவு காணப்பட்டது.

இந்த பிரிவுகளிற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் தலைமைதாங்கினார்கள், இவர்கள் நடவடிக்கைகளிற்கான ஏஎஸ்பி என அழைக்கப்பட்டார்கள்.

இந்த ஏஎஸ்பிக்கள் குறிப்பிட்ட பகுதியின் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கு பதிலளிக்கவேண்டியவர்களாக காணப்பட்டனர், (பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பொலிஸ் அத்தியட்சகர்களாக அல்லது சிரேஸ்ட அத்தியட்சகர்களாக காணப்பட்டனர்.) பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் அந்த பிராந்தியத்திற்கான பிரதிபொலிஸ்மா அதிபருக்கு பதிலளிக்க வேண்டியவர்களாக காணப்பட்டனர்.

நாசகார நடவடிக்கைகளிற்கு எதிரான ஒவ்வொரு பிரிவிலும் பொறுப்பதிகாரியொருவரும் - பத்து அல்லது பதினைந்து கனிஷ்ட தர உத்தியோகத்தர்களும் காணப்பட்டனர்.

நாசகார நடவடிக்கைகளிற்கு எதிரான இந்த பிரிவு அந்த பகுதிக்கான பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியுடன் ஒருங்கிணைந்து செயற்படவேண்டும்.

விசாரணைகளை முன்னெடுப்பதன் மூலமும் நாசகார நடவடிக்கைகளிற்கு எதிரான பிரிவின் விசாரணைகளிற்கு உதவுவதன் மூலமும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் அவர்களுடன் நெருக்கமாக இணைந்து செயற்படுவார்கள்.

நாசகார நடவடிக்கைகளிற்கு எதிரான பிரிவிற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தேவையான சேவைகளை வழங்கவேண்டும், நடவடிக்கைகளிற்கு ஈடுபடுவதற்கு மேலதிக ஆள்பலம் தேவைப்பட்டால் அதனை வழங்கவேண்டும்.

அனேகமான சந்தர்ப்பங்களில் நாசகார நடவடிக்கைகளிற்கு எதிரான பிரிவு குறிப்பிட்ட பொலிஸ் நிலையத்திலேயே இயங்கியது. இந்த பிரிவினால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறிப்பிட்ட பிரிவினால் குறிப்பிட்ட பகுதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

நாசகார சக்திகளிற்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தீவிரமடைந்ததும் அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் அதிகரிக்க ஆரம்பித்தன.

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டவர்கள் காணாமல்போகின்றார்கள் என குற்றச்சாட்டுகள் வெளியாகின, கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது.

நாசகார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்கள் சித்திரவதைகளிற்கு உட்படுத்தப்படுகின்றனர் என குற்றச்சாட்டுகள் வெளியாகின.(நாசகார சந்தேகநபர் என கைதுசெய்யப்பட்ட ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் தான் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தன்னைசித்திரவதை செய்ததாகவும் குறடினை பயன்படுத்தி தனது பல்லை பிடுங்கினார் எனவும் மேல்நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தார்)

அரசாங்க சட்ட அமுலாக்கல் அமைப்புகளினால் கைதுசெய்யப்பட்ட சிலர் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டுகளும் வெளியாகின.(பலர் மோசமாக சித்திரவதை செய்யப்பட்ட பின்னர்)

கொல்லப்பட்ட சிலரின் உடல்கள் பொது இடங்களில் போடப்பட்டன, உடல்களின் மீது டயர்களை போட்டு எரித்தனர், இவை டயர் சிதைமூட்டல் என ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பொது இடங்களில் இளைஞர்களின் உடல்கள் காணப்பட்டவேளைகளில் இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர். பொதுமக்கள் அரசியல்வாதிகள் எதிர்கட்சிகளிடமிருந்து பொலிஸாரும் இராணுவத்தினரும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டனர்.

பொலிஸார் இராணுவத்தினர் இந்த கொலைகளை செய்கின்றனர் அல்லது வேறு யாரோ பொலிஸ் இராணுவத்தின் உதவியுடன் இதனை செய்கின்றனர் என்ற கதைகள் வெளியாகின.

அரசாங்கத்தின் ஆதரவுடன் செயற்பட்ட இந்த துணைப்படையினர் கண்காணிப்பு குழுக்கள் என அழைக்கப்பட்டனர், இந்த குழுக்கள் சிலவற்றின் பெயர்கள் - பிரா, பச்சை புலி மஞ்சள் பூனை.

இவர்கள் பொலிஸார் இராணுவத்தினருடன் இணைந்து செயற்பட்டனர் என குற்றம்சாட்டப்பட்டது.

இந்த குழுக்களின் உண்மை தன்மை  குறித்து சந்தேகம் காணப்பட்டது சில பகுதிகளில் பொலிஸாரே இந்த பெயர்களில் செயற்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு வெளியானது.

கறுப்புபூனை என்பது பொலிஸாரே என தான் கருதியதாக முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். சிஐடி போன்ற பொலிஸின் ஒரு பிரிவு என தான் நினைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிரேஸ்ட அரசியல்வாதி என்ற அடிப்படையில் அவ்வாறு கருதுவதற்கான நியாபூர்வமான காரணங்களை அவர் கொண்டிருந்திருக்கவேண்டும் என நாங்கள் நிச்சயமாக நம்புகின்றோம். அவ்வாறான ஒரு எண்ணத்தினை பெறுவதற்கு அவர் பொருத்தமான தகவல்களை பெற்றிருப்பார்.

ஆகவே இது இந்த விழிப்பு குழுக்களில் பொலிஸாருக்கும் தொடர்பிருந்தது என கருதுவதற்கான நியாயமான காரணங்கள் இருப்பது  இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது.

அவர்கள் யாராகயிருந்தாலும் அவர்களின் நடவடிக்கைகள் தெளிவானவை, அவர்கள் நாசகார சக்திகளை இலக்குவைத்து படுகொலை செய்தார்கள்.

எரியுண்ட சடலங்கள் காணப்படும்போதெல்லாம் தான் அந்த பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியை தொடர்புகொண்டதாகவும் இது குறித்து விசாரித்ததாகவும்  டிஐஜி எம்எம்ஆர் மெரில் குணவர்த்தன தெரிவித்தார்.

தமிழில் - ரஜீபன்

https://www.virakesari.lk/article/209198

  • கருத்துக்கள உறவுகள்

batalanda-commission-report-ranil-wickre

‘படலந்தா’ ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக ரணில் விக்ரமசிங்கவினால் சிறப்பு அறிக்கை!

‘படலந்தா’ ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.

இதேவேளை ‘படலந்தா’ ஆணைக்குழு அறிக்கையை இன்று (14) சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க
நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்ததுடன் இது தொடர்பாக இரண்டு நாள் விவாதம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்

அத்துடன் பட்டலந்தா அறிக்கையை கையாள்வது குறித்து ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை கொள்கை முடிவை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி, இந்த அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதுடன் இந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளை முன்மொழிய ஒரு சிறப்பு குழுவை நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்தப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் இரண்டு நாள் விவாதம் நடத்த உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1425194

  • கருத்துக்கள உறவுகள்

batalanda-commission-report.jpg?resize=7

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை நாளை முதல் பொது மக்களின் பார்வைக்கு.

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாளை முதல் நாடாளுமன்றின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பொதுமக்கள் பார்வையிட முடியும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்

இந்த விடயம் தொடர்பில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க கருத்துரைத்த பின்னரே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

நாட்டில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார். இந்த அறிக்கை சட்ட மா அதிபருக்கு அனுப்பப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அல் ஜஷீராவுக்கு வழங்கிய நேர்காணலின் போது பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை என அறிவித்திருந்தார்

1980ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி மீது நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதைகள் மற்றும் சட்டவிரோத தடுப்புக்காவல்கள் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

1994 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கம், பட்டலந்த சித்திரவதைக் கூடத்தை விசாரிக்க ஒரு முழுமையான ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தார்.

ஆதாரங்களை ஆராய்ந்த பின்னர், அதனுடன் தொடர்புடைய அறிக்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் 1998ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி வழங்கப்பட்ட போதிலும், அப்போதைய அரசாங்கம் அந்த அறிக்கை தொடர்பாக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

https://athavannews.com/2025/1425250

  • கருத்துக்கள உறவுகள்

480063571_1060446342787004_8867132489698

  • கருத்துக்கள உறவுகள்

அனுராவின் ஆட்சி அமைந்தவுடன், வெகுவிரைவில் இந்த ஆட்சி கவிழும், கலைக்கப்படும் என்று ரணிலார் கலவரப்பட்டபோதே நினைத்தேன், பின்னால் ஏதோ செய்தி இருக்கிறதென்று. எல்லோரும் ஒருவரின் குற்றத்தை மற்றவர் மூடி மறைத்து, ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்து எழுபத்தாறு ஆண்டுகளாக நாட்டை சுடுகாடாக்கியதுதான் இவர்களின் சாதனை! இவர்களுக்கு எப்படியான மரணம் வரும்? மஹிந்த, கோத்தாவுக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள், இவர்கள் தப்பினாலும் அவர்கள் அனுபவிப்பார்கள். ஆனால் ரணில், அப்பாவிமாதிரி முகத்தை வைத்துக்கொண்டு போட்ட ஆட்டம் கொஞ்சமல்ல. அவர் செய்தவற்றுக்கெல்லாம்  தானே அனுபவித்துத்தான் முடிய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்


2007 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில், ஜேவிபி (JVP) பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய வாயிலின் முன்பாக ஒரு பிரமாண்டமான போராட்டத்தை நடத்தியது.

திரு அனுர குமார திஸ்ஸநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், காணாமலாக்குதல் உட்பட்ட விடயங்கள் தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்திற்கு எதிராக ஜேவிபி கடும் கண்டனம் தெரிவித்தது.

2006 ஆம் ஆண்டில், கோட்டாபய ராஜபக்சவின் Triploli Platoon , கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் உட்பட 1,000 க்கும் மேற்பட்டோரை கடத்தியிருந்தது.

அதேபோல, 2007 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் கடத்தப்பட்டனர்.

இவ்வாறு ஆயிரக்கணக்கான மக்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடத்தப்பட்ட போது வேடிக்கை பார்த்த ஜேவிபி பிரித்தானிய பாராளுமன்றத்தில் அது தொடர்பாக நடைபெற்ற விவாதத்தை தொடர்ந்து கொதிப்படைந்தது

இதன் விளைவாக, கோட்டாபய ராஜபக்சவின் பங்காளியாகவிருந்த திரு அனுர குமார திஸ்ஸநாயக்க, திரு விஜித ஹேரத், திரு சுனில் ஹந்துன்நெத்தி உட்பட்ட ஆயிரக்கணக்கான ஜேவிபி உறுப்பினர்கள் வீதிக்கு இறங்கினர்.

வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதற்கு பிரித்தானிய அரசாங்கமே காரணம் என்று குற்றம் சாட்டினார்

கோட்டாபய ராஜபக்சே உட்பட ராஜபக்சே குடும்ப உறுப்பினர்களை நியாயம் செய்தனர்

மேலும், "எங்கள் நாட்டிலுள்ள மனித உரிமை அமைப்புகள் மூலம் மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காண முடியும்" என்று கோஷமிட்டனர்

பிரித்தானியா உட்பட்ட வெளிநாடுகளின் தலையீடுகள் அவசியமற்றது என சத்தமிட்டார்கள்

இருப்பினும், நியத்தில் மேஜர் Prabath Bulathwatte என்பவரின் தலைமையில் அரசியல் மற்றும் பணம் பறிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட Triploli Platoon யால் கடத்தப்பட்ட எவரும் இன்றுவரை வீடு திரும்பவில்லை.

அதே போல 2009 ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எவரும் இதுவரை வீடு திரும்பவில்லை

நேற்றும் கூட, வலுக்கட்டாயமாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம் நடத்தியிருந்தனர்

அப்போது ராஜபக்சே குடும்பத்தின் பங்காளியாகவிருந்த ஜேவிபி இப்போது அதிகாரத்தில் இருக்கின்றது

தாங்கள் புது அவதாரம் எடுத்திருப்பதாக கதை சொல்லுகின்றது

வடக்கு கிழக்கில் கடத்தலில் ஈடுபட்ட குறைந்தது 5 வெள்ளை வாகனங்கள் பாதிக்கப்பட்ட மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கடத்தலுக்கு பயன்படுத்திய 252-3286 என்ற இலக்க வெள்ளைவான் அடையாளம் காட்டப்பட்டுள்ளது

அதே போன்று மட்டக்களப்பில் பொதுமக்களை கடத்த பயன்படுத்திய 58-6974 இலக்க வெள்ளைவான் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது

அம்பாறையில் அப்பாவி மக்களை கடத்த பயன்படுத்திய இலக்க தகடற்ற வெள்ளை வான் ஒன்றை திரு உவிந்து குருகுலசூரிய என்கிற பத்திரிகையாளர் படங்களுடன் அடையாளம் காட்டி இருந்தார்

இந்த வாகனங்களை கண்டறிவதன் ஊடாகவே மிக இலகுவாக பின்னணி சூத்திரதாரிகளை கண்டறிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய முடியும்.

இனவாதம் மதவாதம் தோற்கடிக்கப்பட்டதாக ஜேவிபி பேசுவது உண்மையென்றால் பாதிக்கப்பட்டோருக்கு தீர்வு பெற்று கொடுக்க முடியும்.

கோத்தபாயா ராஜபக்சே உட்பட்ட சூத்திரதாரிகளை நீதியின் முன் நிறுத்த முடியும்.

ஆனால் 1987 ஆம் ஆண்டு இயங்கிய படலந்த வதை முகாம் குறித்து வெற்று அறிக்கை வெளியிடும் ஜேவிபி 2006-2009 யில் கோட்டாபய ராஜபக்சே இயக்கிய வதை முகாம்கள் குறித்து பேச மறுக்கின்றது

இனவாதத்தின் பிறப்பிடம்மான ஜேவிபி க்கு இவ்வாறான இரட்டை நிலைப்பாடுகள் புதிதல்ல

ராஜபக்சே குடும்ப ஆட்சியாளர்களுக்கு எதிராக வெளிநாடுகள் மனித உரிமை குற்றசாட்டுகளை முன்வைத்தபோதெல்லாம் ஜேவிபி கொந்தளித்தது.

ஆனால், அதே நாடுகள் வெளிநாட்டு ஆயுத உதவி, புலனாய்வு தகவல், இராணுவ பயிற்சி, விமானிகள் மற்றும் படைத்துறை ஆலோசகர்களை வழங்கியபோது மௌனமாக ஏற்று கொண்டது

மொத்தத்தில் 2007 ஆம் ஆண்டில் ராஜபக்சே குடும்பத்திற்கு துணை நின்று, அத்துணை அநியாயங்களையும் செய்த ஜேவிபி, தற்போதும் தமிழ் சமூக மட்டங்களில் குழப்பங்களை 'Divide and rule' ஏற்படுத்தி அரசியல் செய்கின்றது

Edited by alvayan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சந்திப்புகள் - கலந்தாலோசனைகள் யார் தலைமையில் இடம்பெற்றது? பட்டலந்த விசாரணை ஆணைக்குழு

Published By: RAJEEBAN 17 MAR, 2025 | 04:13 PM

image

ஆணைக்குழுவின் முன் இடம்பெற்ற செயற்பாடுகளின் போது பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சில சந்திப்புகள் கலந்துரையாடல்கள் இடம்பெற்றமை குறித்து தெரியவந்தது.

இந்த சந்திப்புகள் கலந்துரையாடலின் உண்மையான தன்மை குறித்து அறிந்துகொள்வது அவசியம். சட்டவிரோத தடுப்பு முகாம் வதைகூடங்களை உருவாக்கி பேணிவந்தமைக்கும் இந்த சந்திப்புகளிற்கும் இடையில் தொடர்புள்ளதா? என்பதை அறிந்துகொள்வதற்கு இந்த சந்திப்புகளின் உண்மையான தன்மை குறித்து அறிந்துகொள்வது அவசியம்.

ஆணைக்குழுவின்  குறிப்பு விதிமுறைகளின் படி, மேலே குறிப்பிடப்பட்ட சித்திரவதை முகாமை உருவாக்கி பேணி வந்ததால், பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் ஏதாவது சதி இடம்பெற்றதா என்பது குறித்து ஆராய்வது அவசியம்.

பட்டலந்த சந்திப்புகளில் கலந்துகொண்ட முக்கிய நபர்கள் சிலர் வழங்கிய வாக்குமூலங்களை நாங்கள் தற்போது இங்கே ஆராயவிரும்புகின்றோம். அவர்கள் அந்த சந்திப்புகள் தொடர்பில் தெரிவித்த விடயங்கள், அந்த சந்திப்புகளில் ஆராயப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் விடயங்கள்.

சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் நளின் தெல்கொடவே களனி பொலிஸ் பிரிவில் சிரேஸ்ட அதிகாரி. களனி பொலிஸ் பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தால், தெல்கொடவிற்கு அது குறித்து தெரிந்திருக்கும் என  எதிர்பார்க்கலாம். அந்த சந்திப்புகளின் மீது அவர் நேரடி கட்டுப்பாட்டைசெலுத்தியிருப்பார்.

இதன் காரணமாக தெல்கொட இந்த சந்திப்புகள் குறித்து தெரிவித்த விடயங்களில் இருந்து நாங்கள் ஆரம்பிக்கின்றோம்.

ஆணைக்குழுவிற்கு அவசியமான அல்லது பொருத்தமான அந்த காலப்பகுதியில், பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் இடம்பெற்ற இரண்டு மூன்று சந்திப்புகளில் கலந்துகொண்டுள்ளதாக தெல்கொட தெரிவித்தார்.

அந்த சந்திப்புகள் இடம்பெற்ற சரியான  இடத்தை தெரிவிக்குமாறு ஆணைக்குழு அவரிடம் கேட்டவேளை அவர் ரணில் விக்கிரமசிங்கவின் சேர்கியுட் பங்களாவிலேயே அந்த சந்திப்புகள் இடம்பெற்றன என தெரிவித்தார். எனினும் அதன் பின்னர் தான் தெரிவித்ததை மாற்றிய அவர் சேர்கியுட் பங்களாவிற்கு முன்னாலிருந்த வீட்டில் அந்த சந்திப்புகள் இடம்பெற்றதாக தெரிவித்தார்.

கிளர்ச்சிகாலத்தில் அந்த பகுதிக்கான பாதுகாப்பை ஒருங்கிணைப்பதற்காகவே இந்த சந்திப்புகள் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.

விக்கிரமசிங்கவின் தலைமையில் இந்த சந்திப்புகள் இடம்பெற்றதாக தெல்கொட தெரிவித்தார். விக்கிரமசிங்க இந்த சந்திப்புகளிற்கு தலைமை தாங்கியுள்ளார்.

வழமைக்கு மாறான இந்த சந்திப்புகள், கூட்டங்களிற்கான சரியான காரணங்களை ஆணைக்குழு ஆராய்ந்தது. அமைதியையும் பொது ஒழுங்கையும் பேணுவதற்காகவே இந்த சந்திப்புகள் இடம்பெற்றன என தெல்கொட ஆரம்பத்தில் தெரிவித்தார். தொடர்ந்து கேள்வி எழுப்பியவேளை இந்த சந்திப்புகளில் அந்த பகுதியில் காணப்பட்ட நாசகாரசெயற்பாடுகள் குறித்து ஆராய்ந்ததாக அவர் தெரிவித்தார்.

இறுதியாக அவர் பெருமளவு தயக்கத்துடன், நாசகார வேலைகளில் ஈடுபடுபவர்களை ஒடுக்குவதற்காக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கே இந்த சந்திப்புகள் இடம்பெற்றதாக தெரிவித்தார்.

ஏன் அவர் இதனை வெளிப்படையாக தெரிவிப்பதற்கு  தயங்கினார் என நாங்கள் ஆச்சரியமடைந்தோம்? 'நாசகார சக்திகளை ஒடுக்குதல் என்பதாலா" பொலிஸார் தங்களிற்கு சட்டரீதியாக அனுமதி வழங்கப்படாத, சட்டவிரோத படுகொலைகள் போன்ற  விடயங்களை செய்ததன் காரணமாகவா?

ஏன் இந்த சந்திப்புகளிற்கு விக்கிரமசிங்க தலைமை தாங்கவேண்டும் என நாங்கள் கேள்வி எழுப்பினோம்.

சாட்சியமளித்தவர்களிடம் ஏன் இந்த சந்திப்புகள் கூட்டங்களிற்கு விக்கிரமசிங்க தலைமை தாங்கவேண்டும் என கேள்வி எழுப்பினோம்? ஏனென்றால் அவர் பாதுகாப்பு அமைச்சரோ அல்லது பிரதிபாதுகாப்பு அமைச்சரோ இல்லை என நாங்கள் தெரிவித்தவேளை பொலிஸ் உத்தியோகத்தர்களிற்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதற்காகவே  ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கினார் என தெல்கொட தெரிவித்தார்.

அதற்கு ஏன் பொலிஸாருக்கு அரசியல் தலைமைத்துவம் அவசியம் என  கேள்வி எழுப்பியவேளை நாட்டில் அவ்வேளை நிலவிய சூழ்நிலை காரணமாக அரசியல் தலைமைத்துவத்தை பெறுவது அவசியம், இந்த விடயத்தில் அரசியல் தலைமைத்துவத்தின் உத்தரவுகளை பின்பற்றுவதை தவிர வேறு வழியிருக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

'நான் எனது தலையை பாறையில் கொண்டுபோய் மோதுவது சாத்தியமில்லை," என தெல்கொட  தெளிவுபடுத்தினார்.

இந்த விடயத்தில்தான் வேறு எதனையும் செய்ய முடியாது, தான்நிலைமையை மாற்றினால், அல்லது, அரசியல் தலைமைத்துவத்தின் உத்தரவுகளை எற்க மறுத்தால் அது தனக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்  என்பதையே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் இந்த சந்திப்புகளில் ஈடுபட்டதை நியாயப்படுத்த முடியாதவராக தெல்கொட காணப்பட்டார், அவர் அந்த சந்திப்புகளில் பேசப்பட்ட விடயங்களை பெருமளவிற்கு மறைத்துவிட்டார் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்.

தமிழில் ரஜீபன்

https://www.virakesari.lk/article/209461

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

ஆணைக்குழுவின்  குறிப்பு விதிமுறைகளின் படி, மேலே குறிப்பிடப்பட்ட சித்திரவதை முகாமை உருவாக்கி பேணி வந்ததால், பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் ஏதாவது சதி இடம்பெற்றதா என்பது குறித்து ஆராய்வது அவசியம்.

இதில் ஆராச்சி செய்வது ஜேவிபிக்கும் ஆப்பு வரும்.

தமிழர் தரப்புக்கு நல்லது.

ஆனாலும் சரியாக செயல்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

484852755_1063051272526511_3152838899150

  • கருத்துக்கள உறவுகள்

485299263_1063576292474009_5761644366154

485693350_1064365512395087_4059475439052

  • கருத்துக்கள உறவுகள்

486477452_1068676828630622_7996100952776

  • கருத்துக்கள உறவுகள்

486922547_1069450021886636_6655366758089

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.