Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆனையிறவு உப்பளம் தொழிற்சாலை இன்று கையளிப்பு

March 29, 2025 12:14 pm

ஆனையிறவு உப்பளம் தொழிற்சாலை இன்று கையளிப்பு

நவீன உபகரணங்கள் மற்றும் வசதிகளுடன் கூடிய ஆனையிறவு உப்பளம் தொழிற்சாலை இன்று சனிக்கிழமை மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் காலங்களில், அரச இலட்சினையில்  இங்கு உற்பத்தியாகும் உப்பு சந்தைக்கு விநியோகிக்கப்படுமன கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தியமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஆனையிறவு உப்பளம் தொழிற்சாலை ஊடாக கூடுதல் நிவாரண விலையில் ‘ரஜ லுணு’ என்ற வர்த்தக நாமத்தில் உப்பு சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://oruvan.com/elephant-pass-salt-factory-to-be-handed-over-today/

  • கருத்துக்கள உறவுகள்

487119533_10161003632453513_324290869132

நாளை முதல் ஆனையிறவு பெயருடன் உப்பு பாக்கெட் விற்பனையாகவுள்ளது.

Selvakumar Natkunasingam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, தமிழ் சிறி said:

நாளை முதல் ஆனையிறவு பெயருடன் உப்பு பாக்கெட் விற்பனையாகவுள்ளது.

ராஜா உப்பு . அடுத்தது ராணி உப்பு.🤣

487560863-1071847638306004-7504863114235

  • கருத்துக்கள உறவுகள்

வெகுவிரைவில் ஆனையிறவு உப்பு என்ற பெயருடன் உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

29 MAR, 2025 | 06:52 PM

image

ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பானது ஆனையிறவு உப்பு என்ற பெயருடன் உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தேசிய உப்பு நிறுவனத்தின் ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலையில், மேசை உப்பு உற்பத்தியை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (29.03.2025) இடம்பெற்றது.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் ஆகியோரின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு ஆனையிறவில் நடைபெற்றது.

இதன்போது மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆனையிறவில் உற்பத்தி செய்யப்படும் உப்பானது தற்பொழுது ரஜ என்ற பெயரிலேயே வெளிவருகின்றது. கடந்த ஆட்சி காலத்திலேயே பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அந்த பெயரை மாற்ற முடியாது. அதற்கென நடைமுறைகள் உள்ளன. உடனடியாக நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காகவே பழைய பெயரிலேயே விநியோகிக்கப்படுகின்றது.

வெகுவிரைவில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு ஆனையிறவு உப்பளத்தின் பெயரிலேயே இலங்கையில் மட்டும் அல்ல. உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும். இது தொடர்பில் தமக்கு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி உத்தரவாதம் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Photo__12_.jpg

Photo__16_.jpg

Photo__15_.jpg

Photo__11_.jpg

Photo__5_.jpg

Photo__2_.jpg

https://www.virakesari.lk/article/210565

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

‘ரஜ லுணு

4 hours ago, ஏராளன் said:

ஆனையிறவு உப்பளத்தின் பெயரிலேயே இலங்கையில் மட்டும் அல்ல. உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும்.

அது சரி ,,வீண் விரயம் செய்கின்றனர் என ஏனைய கட்சிகளை திட்டி கூவி கூவி பிரச்சாரம் செய்த இவர்கள் ..இப்பொழுது சும்மா அதிருதில்ல ரஜனி ஸ்டைலில் மாலைகள் சகிதம் வலம் வருகின்றனர்...நட்சத்திர தொப்பி எங்கே ? சிவப்பு சேர்ட் எங்கே?

ஆனயிறவு உப்பு என பெயர் மாற்றத்துடன் விறபனைக்கு வந்தால மட்டுமே உப்பு சாப்பிடுவேன் அதுவரை உப்பு போட்டு சாப்பிட மாட்டேன் ...வைத்திய ஆலோசனைப்படி😅

  • கருத்துக்கள உறவுகள்

Ramalingam-Chandrasekar.webp?resize=750%

னையிறவு உப்பு உற்பத்தி தொடர்பில் மக்கள் ஐயம் கொள்ளத் தேவையில்லை!

நவீன உபகரணங்கள் மற்றும் பொதியிடல்  வசதிகளுடன் மீளமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளத்தில்  ‘ரஜலுணு’ என்ற பெயரில் அரசாங்க உப்பு உற்பத்தி சனிக்கிழமை (29) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் நிலவிய உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் கைத்தொழில் அமைச்சின் கீழ் உப்பு உற்பத்தியொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கடந்த சில வாரங்களாக அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தது. அதன் பிரகாரம் ஆனையிறவு உப்பளத்தில் ‘ரஜலுணு’ என்ற பெயரில் குறித்த உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆணையிறவு உப்பு உற்பத்தி தொடர்பில் மக்கள் ஐயம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என  கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதன்போது ‘ராஜ லுணு’ எனும் பெயர் இதுவரை காலமும் பயன்படுத்தப்பட்ட பெயராகும் எனவும், எனவே, இது தொடர்பாக மக்கள் குழப்பமடைய தேவையில்லை எனவும் மக்களைக் குழப்புவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த தொழிற்சாலையில் , சந்தைப்படுத்தல் பணிகள் எதிர்வரும் வாரங்களில் ஆரம்பிக்கும்போது அதன் பெயர் நிச்சயமாக மாற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Athavan News
No image preview

ஆணையிறவு உப்பு உற்பத்தி தொடர்பில் மக்கள் ஐயம் கொள்ளத் தேவ...

நவீன உபகரணங்கள் மற்றும் பொதியிடல்  வசதிகளுடன் மீளமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளத்தில்  'ரஜலுணு' என்ற பெயரில் அரசாங்க உப்பு உற்பத்தி சனிக்கிழமை (29) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் நிலவிய...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.