Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

29 MAR, 2025 | 06:56 PM

image

சுழிபுரம் - திருவடிநிலை பகுதியில் சடலம் புதைக்கும் காணியை தனியார் ஒருவர் வாங்கியதால் சடலத்தை புதைப்பதற்கு மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த விடயமானது வெள்ளிக்கிழமை (28) சங்கானை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் இளைஞர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

காலம் காலமாக சடலங்களை புதைத்து வந்த காணியை தனியார் ஒருவர் வாங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த காணியானது யாருடைய பெயரில் இருக்கிறது என பிரதேச சபையிடம் நாங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக கோரியிருந்த போதும் அவர்கள் அதற்கு பதில் எதுவும் வழங்கவில்லை.

150ற்கும் மேற்பட்ட சடலங்களை புதைத்த இடத்தை வாங்கிய நபர் அதில் உள்ள கல்லறைகளை இடித்துவிட்டு சுற்றுலா மையத்துக்கான கட்டடம் அமைக்கப்போவதாக கூறுகின்றார்.

அத்துடன் ரொஜீனா என்ற சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அந்த பகுதியில் குறித்த சிறுமியின் உடலம் புதைக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கானது இன்னமும் நிறைவடையவும் இல்லை.

அந்த நிலத்தை வாங்கியதாக கூறியவரிடம் நாங்கள் சென்று, எவ்வளவு பணம் என்றாலும் பிரச்சினை இல்லை, அந்த நிலத்தை நாங்கள் வாங்குகின்றோம் என கேட்டோம். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்தார்.

இது குறித்து பல்வேறு தரப்பினருக்கும் கடிதங்களை நாங்கள் அனுப்பியுள்ளோம். இதுவரை பதிவுத் தபாலில் அனுப்பிய கடிதங்களுக்கு 25 ஆயிரம் ரூபா வரை செலவிட்டுள்ளோம். ஆனால் இந்த பிரச்சனையை தீர்ப்பதாக கடிதம் அனுப்புகின்றார்களே தவிர எந்தவிதமான நேரடி விசாரணைகளுக்கும் அழைக்கவில்லை.

பொன்னாலையில் மாற்றுக்காணியை பிரதேச செயலகத்தினர் வழங்கினர். ஆனால் அந்த காணியில் ஒரு முழம் கூட தோண்ட முடியாது. அந்த நிலத்தில் சடலத்தை புதைத்தால் 15 வருடங்களானாலும் மக்கிப்போகாது.

எமது பகுதியில் இருந்து சடலத்தை அந்த பகுதிக்கு கொண்டு செல்லவேண்டும் என்றால் 25ஆயிரம் ரூபா வாகனத்துக்கு செலவிட வேண்டும். ஆகையால் இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன்போது குறுக்கிட்ட பொன்னாலை பகுதியைச் சேர்ந்த ஒருவர், தமது இடம் ஒரு இடுகாடு இல்லை என்றும், அங்கு சடலத்தை புதைப்பதற்கு அனுமதி வழங்க மோட்டோம். இதற்கான மாற்றுத் தீர்வினை கொண்டுவர வேண்டும் என்றார்.

பொன்னாலையில் அந்த காணி வழங்கப்படவில்லை. மூளாய் பகுதியிலேயே வழங்கப்பட்டது என சங்கானை பிரதேச செயலர் கவிதா உதயகுமார் தெரிவித்தார்.

VideoCapture_20250329-164338.jpg

VideoCapture_20250329-164344.jpg

20250328_161111__1_.jpg

https://www.virakesari.lk/article/210563

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

சுடலையைக் கூட பிரதேச சபை செயலளாளர் விற்கிறார்....அதுவும் பெண்மணீ...150 பிரேதம் புதைக்கப்பட்ட இடம் ...சிவ..சிவா ..நம்ம யாழ்ப்பாணம் எங்கு போகிறது...

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, alvayan said:

...சிவ..சிவா ..நம்ம யாழ்ப்பாணம் எங்கு போகிறது...

அபிருத்தியை நோக்கி போகின்றது ...🤣

சுடலையில் சுற்றுலா துறையை வளர்க்கும்

இடதுகளே வலதுகளே வாழ்க ..

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, putthan said:

அபிருத்தியை நோக்கி போகின்றது ...🤣

சுடலையில் சுற்றுலா துறையை வளர்க்கும்

இடதுகளே வலதுகளே வாழ்க ..

இது வந்து ..மாவீரர் துயிலுமில்லங்களை இல்லாதொழிப்பதற்கு ..எடுக்கப்படும் ..முதல் நடவடீகஐ ..சுடலையை வாங்கி கோட்டல் கட்டுவதற்கும் நம்மினம் இருக்குது....கடைசியில் பூமி அதிர்வுடன் அழிந்து ..இறந்த ஆன்மாக்களின்நெஞ்சை குளிரவைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, alvayan said:

இது வந்து ..மாவீரர் துயிலுமில்லங்களை இல்லாதொழிப்பதற்கு ..எடுக்கப்படும் ..முதல் நடவடீகஐ ..சுடலையை வாங்கி கோட்டல் கட்டுவதற்கும் நம்மினம் இருக்குது....கடைசியில் பூமி அதிர்வுடன் அழிந்து ..இறந்த ஆன்மாக்களின்நெஞ்சை குளிரவைக்கும்

யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறைக்கு வருமானம் புலம் பெயர்ந்த உறவுகளின் வருகை,சிங்கள மக்களின் வருகை மற்றும் தற்பொழுது இந்திய மக்களின் வருகையூடாக கிடைக்கின்றது ...

இன்னும் 10 வருடங்களின் பின்பு புலம் பெயர் மக்களின் வருகை குறைந்து விடும்...

இந்திய மக்களின் வருகை நிரந்தர மற்றது ...சிங்கள அரசியல்வாதிகள்,மற்றும் காலநிலையுடன் சம்பந்தப்பட்டது...

ஆனால் சிங்கள மக்களின் வருகை நிரந்தரமானது...விகாரைகளை கட்டி அதை புனிதப்படுத்தி சிங்கள மக்களை வரப்பண்ணுவதில் அரசாங்கத்துக்கு பெரும் பங்கு உண்டு..

நயினா தீவு எம் கண் முன்னே சாட்சியாக இருக்கின்றது ..74 ஆம் ஆண்டு இருந்த நயினாதீவும் 2024 ஆண்டு இருக்கும் நயீனாதிவுக்கும் வித்தியாசம் உண்டு..

  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் துயிலுமில்லங்களையே வாங்கி பல்பொருள் அங்காடி கட்டியவர்கள் ஈழத்தவர்...

இவ்வாறான இழிந்த இனம் எங்ஙனம் இதை விட்டுவைக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நயினா தீவு எம் கண் முன்னே சாட்சியாக இருக்கின்றது ..74 ஆம் ஆண்டு இருந்த நயினாதீவும் 2024 ஆண்டு இருக்கும் நயீனாதிவுக்கும் வித்தியாசம் உண்டு..

செப்டெம்பரில் போனேன் ...பார்த்தேன் .. மவுனமாக கண்ணீர் விடுவதைத் தவிர வேறென்ன செய்வது..

1 hour ago, நன்னிச் சோழன் said:

மாவீரர் துயிலுமில்லங்களையே வாங்கி பல்பொருள் அங்காடி கட்டியவர்கள் ஈழத்தவர்...

இவ்வாறான இழிந்த இனம் எங்ஙனம் இதை விட்டுவைக்கும்?

அளம்பிலைத்தானே சொல்கின்றீர்கள் .. வேதனை

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, alvayan said:

அளம்பிலைத்தானே சொல்கின்றீர்கள் .. வேதனை

ஓம்... அதே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

சுடலையைக் கூட பிரதேச சபை செயலளாளர் விற்கிறார்....அதுவும் பெண்மணீ...150 பிரேதம் புதைக்கப்பட்ட இடம் ...சிவ..சிவா ..நம்ம யாழ்ப்பாணம் எங்கு போகிறது...

அண்ணை, அங்கே திருவடிநிலை சைவசமய மக்களுடைய மயானம் உள்ளது. அதற்கருகே உள்ள தனியார் காணிக்குள்(உரிமையாளர்கள் வெளிநாட்டில்) களவாக உரியவர்களிடம் அனுமதி பெறாது சில உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை விரும்பாத காணி உரிமையாளர்கள் நிறுவனம் ஒன்றிற்கு காணியை கொடுக்க விரும்புகிறார்கள்.

1995 ஆம் ஆண்டின் பின்னர் அதிகரிக்கும் மதம்மாற்றும் அமைப்புகளால் இப்போது தான் ஓரளவு மக்கள் மதம்மாறி உள்ளார்கள். 150 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது தவறான மிகைப்படுத்தப்பட்ட தகவல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இடுகாட்டை வாங்கிய தனியார்; தமது உறவுகளின் கல்லறைகளை பாதுகாக்க கோரும் உறவுகள்

06 APR, 2025 | 04:58 PM

image

யாழ்ப்பாணத்தில் இடுகாடு ஒன்றினை தனியார் ஒருவர் கொள்வனவு செய்து, அதில் கட்டடங்களை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

சுழிபுரம் பகுதியில் உள்ள காணி ஒன்றை நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் இடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். 

அங்கு சுமார் 150 க்கும் மேற்பட்ட உடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் பல கல்லறைகளும் கட்டப்பட்டுள்ளன. 

அத்துடன் அப்பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், சிறுமியின் உடலம் நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த இடுகாட்டிலையே புதைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது 

இந்நிலையில் குறித்த இடுகாடு அமைந்துள்ள காணியை அண்மையில் தான் பணம் கொடுத்து வாங்கியுள்ளதாகவும் அது தனக்கு சொந்தமானது என கூறி, கல்லறைகளை அகற்றி விட்டு, அதில் சுற்றுலா மையம் ஒன்றினை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தனியார் ஒருவர் அப்பகுதி மக்களிடம் கூறியுள்ளார். 

இது தொடர்பில் பிரதேச செயலரிடம் தெரிவித்த நிலையில், குறித்த காணி தனியாருக்கு சொந்தமானது எனவும், இடுகாட்டுக்காக இனிவரும் மூளாய் பகுதியில் 2 ஏக்கர்  காணியை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

எமது உறவுகளின் கல்லறைகள் இந்த இடுகாட்டில் உள்ளது அதனை ஒருவர் அழித்து அதன் மீது சுற்றுலா தளம் ஒன்றினை அமைப்பதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. 

எனவே எமது இடுகாட்டையும்  எம் உறவுகளின் கல்லறைகளையும் பாதுகாத்து தாருங்கள் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

https://www.virakesari.lk/article/211323

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.