Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பொருட்களுக்கு வரியை அதிகரித்தார் டிரம்ப்!

US President Donald Trump delivers remarks on reciprocal tariffs as US Secretary of Commerce Howard Lutnick holds a chart during an event in the Rose Garden entitled "Make America Wealthy Again" at the White House in Washington, DC, on 2 April, 2025.

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பான வரியை அமெரிக்க ஜனாதிபதி நேற்று (02) அறிவித்துள்ள நிலையில்,இந்த வரி நாளை மறுநாள் (05) முதல் அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதை நேரலையில் அறிவித்தார்.

உலகெங்கிலும் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான புதிய வரிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் வர்த்தக ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்துவதும், அமெரிக்கத் தொழில்களை ஊக்குவிப்பதுமே இந்தப் புதிய வரிகளை விதிப்பதன் நோக்கம் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்தப் புதிய வரிக் கொள்கையின்படி, அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் 10 சதவீத வரி உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவுடன் வர்த்தக உபரியை நடத்தும் நாடுகளுக்கு அதிக வரி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை மீது 44 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவால் உலகில் அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து நாடுகளுக்குள் இலங்கை இடம்பிடித்துள்ளது.

கம்போடியா மீது 49 சதவீத வரியும், வியட்நாம் மீது 46 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷூக்கு 37 சதவீதமும், தாய்லாந்திற்கு 36 சதவீதமும், சீனாவிற்கு 34 சதவீதமும், இந்தியாவிற்கு 26 சதவீதமும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 20 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 12.2 சதவீத வரியை விதித்துள்ள நிலையில், இந்த புதிய வரி விதிப்பு நாட்டின் ஏற்றுமதித் துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அமெரிக்காவிற்கு இலங்கையில் இருந்தே அதிக அளவில் ஆடை ஏற்றுமதி மேற்கொள்ளப்படுவதுடன், இந்த வரி விதிப்புடன் அந்தத் துறைக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்ததுடன், இந்த ஆண்டு ஜனவரியில் மட்டும் 346 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

https://www.samakalam.com/இலங்கை-பொருட்களுக்கு-வரி/

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது அச்சமடையவேண்டிய தருணமில்லை - டிரம்பின் வரி அறிவிப்பு குறித்து பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திர

Published By: Rajeeban

03 Apr, 2025 | 11:06 AM

image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய வரி அறிவிப்பு ,அமெரிக்காவுடன் நீண்டகால உறவுகளை கொண்ட இலங்கை போன்ற நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச வர்த்தகத்திற்கு புதிய அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள பிரதிவெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திர இது அச்சப்படவேண்டிய தருணமில்லை என தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய வரி அறிவிப்பு ,அமெரிக்காவுடன் நீண்டகால உறவுகளை கொண்ட இலங்கை போன்ற நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச வர்த்தகத்திற்கு புதிய அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் வரிகட்டமைப்பு ஒருஇரவில் ஏற்படுத்தப்பட்டதல்ல,இது கடந்த காலகொள்கை வழிகாட்டுதல்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பை பிரதிபலிக்கின்றது.

ஆனால் இதற்கு சிந்தனையுடன் சீராக மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு தீர்வு காணும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

உலகளாவிய சந்தையில் தங்கள் இடத்தை பெறுவதற்கு எங்கள் ஏற்றுமதியாளர்கள் ,தொழிலாளர்கள், தொழில்முனைவோர்,எவ்வளவு கடினமாக உழைத்துள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம்.இந்த அரசாங்கம் அந்த முயற்சிகளை பாதுகாப்பதற்கான அனைத்தையும், அவதானமான இராஜதந்திர முயற்சிகள்,நடைமுறை செயற்பாடுகள்,எங்கள் சர்வதேச சகாக்களுடன் இணைந்து செயற்படுதல் ,போன்றவற்றின் மூலம் செய்யும்.

நாங்கள் எங்கள் பொருளாதாரத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாப்போம்.

இது அச்சப்படவேண்டிய தருணம் இல்லை,இது கவனத்தை குவிக்கவேண்டிய தருணம்,நாங்கள் கவனம் செலுத்திவருகின்றோம்.

இலங்கை  அமைதியாக,நம்பிக்கையுடன் இணைந்து முன்னேறும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/210998

  • கருத்துக்கள உறவுகள்

images-1.jpg?resize=300%2C168&ssl=1

அமெரிக்க புதிய வரி முறை குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதியினால் குழு நியமனம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரியினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வு மேற்கொண்டு அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார்.

அதன்படி, நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், இலங்கை முதலீட்டு சபையின் தலைவர், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர், வெளியுறவு அமைச்சின் பொருளாதார விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, இலங்கை வர்த்தக சபையின் பிரதான பொருளாதார கொள்கை ஆலோசகர் ஷிரான் பெர்னாண்டோ, அஷ்ரப் ஒமர், ஷெராட் அமலீன் மற்றும் சைப் ஜெபர்ஜி ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.

இந்தப் புதிய வரிக் கொள்கையின்படி, அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் 10 சதவீத வரி உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவுடன் வர்த்தக உபரியை நடத்தும் நாடுகளுக்கு அதிக வரி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை மீது 44 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவால் உலகில் அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து நாடுகளுக்குள் இலங்கை இடம்பிடித்துள்ளது.

இன்னிலையில் கம்போடியா மீது 49 சதவீத வரியும், வியட்நாம் மீது 46 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளதுடன் பங்களாதேஷூக்கு 37 சதவீதமும், தாய்லாந்திற்கு 36 சதவீதமும், சீனாவிற்கு 34 சதவீதமும், இந்தியாவிற்கு 26 சதவீதமும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 20 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 12.2 சதவீத வரியை விதித்துள்ள நிலையில், இந்த புதிய வரி விதிப்பு நாட்டின் ஏற்றுமதித் துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

https://athavannews.com/2025/1427284

  • கருத்துக்கள உறவுகள்

488216193_1077689841062654_7360366456551

  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcT-zoI0gap5t1r2pNTPwWn

டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்தவுடன் பல நாடுகள் மீது பொருளாதாரப் போருக்கு தயார் ஆனார்.

குறிப்பாக கனடாவின் அமேரிக்க ஏற்மதி தொடர்பாக அவரின் நிலைப்பாடுகள் உள்நாட்டு பொருட்களின் நுகர்வை அதிகரித்தல் மற்றும் உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவித்தல் என்ற போர்வையில் இருந்தது.

இது ஒரு பொருளாதாரப் போர். 440 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஏற்றுமதியைச் அமேரிக்காவுக்கு செய்யும் கனடாவை நிலைகுலைச் செய்யும் ஒரு முறையாக இதைக் கையாள்வதாக அவர் நினைக்கின்றார்.

அதே போல் ஏனைய நாடுகள் மீதும் வரிவிதிப்பிற்கான காரணங்களாக அமேரிக்க பொருட்களை தங்களால் விற்க முடிவதில்லை என்று கூறுகின்றார். ஆனால் சர்வதேச வியாபாரத்தை அவ்வாறு கையாள முடியாது.

இலங்கையின் மேல் விதிக்கப்பட்டிருக்கும் வரியானது 44% ஆக இருக்கின்றது.

எமது அமேரிக்காவுக்கான ஏற்றுமதியும் அமேரிக்காவில் இருந்து நாம் இறக்குமதி செய்யும் பொருட்களிக்கான சென்மதி நிலுவை எப்பொழுதும் மறையாகவே உள்ளது. மிக மிக குறைவான இறக்குமதியே செய்யப்படுகிறது. இதுவே ஒரு பிரதான காரணம்.

இலங்கையின் அமேரிக்காவுக்கான ஏற்றுமதி கிடத்தட்ட 3 பில்லியன்களை டொலர்களை எட்டியுள்ளது. இது மொத்த ஏற்றுமதியில் 20%க்கும் உயர்வாக இருக்கின்றது.

ஏற்கனவே 12% இருந்த வரியை 44% ஆக அதிகரித்திருப்பது குறைவான வரியிருக்கும் நாட்டின் பொருட்களின் நுகர்வை அங்கே அதிகரிக்கும். இதனால் எமது ஏற்றுமதி முழுமையாக பாதிக்கப்படும்.

பெருவாரியாக எமது ஆடை உற்பத்திகளே அங்கு ஏற்றுமதியாகின்றது. அதற்கான போட்டியி சந்தையில் இலகுவாக அமேரிக்கா தனது தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

இலங்கை போன்ற பொருளாதாரத்தில் படிப்படியாக மீட்சியடையும் நாட்டிற்கு ஒரு பேரிடியாக அமையும். மீண்டும் $ பெறுமதி அதிகரிக்கும் பணவீக்கம் தொடரும்.

வளர்முக நாடுகள் தொடர்பாக எந்தவித அக்கறையும் இல்லாமல் எப்பொழுதும் கொடூரமாக செயற்படும். அதன் ஒரு வடிவம் இது.

இதனை கையாள புதிய சந்தை வாய்ப்புகளை நாம் தேட வேண்டும். ஏற்கனவே GSP+ சலுகையில் தான் எமது உற்பத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்கின்றது.

அரசு புதிய முயற்சிகள் புதிய பொருளாதாரக் கொள்கைகள் புதிய உற்பத்தில்கள் என்பவற்றிக்கான ஆரம்பப் படிகளைச் செய்யாமல் எம்மால் மீள முடியாது.

Monisha Kokul

  • கருத்துக்கள உறவுகள்

கெடுவார் தாங்கள் செய்த பாவத்துக்கு எந்த பக்கம் போனாலும் சகுனம் பிழைதான் .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

அதன்படி, நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், இலங்கை முதலீட்டு சபையின் தலைவர், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர், வெளியுறவு அமைச்சின் பொருளாதார விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, இலங்கை வர்த்தக சபையின் பிரதான பொருளாதார கொள்கை ஆலோசகர் ஷிரான் பெர்னாண்டோ, அஷ்ரப் ஒமர், ஷெராட் அமலீன் மற்றும் சைப் ஜெபர்ஜி ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் பொருளாதார நிபுணர்களாக ஒரு தமிழர் கூடவா இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பொருட்களுக்கு 44% அதிக வரியை விதித்தது அமெரிக்கா…

2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.

வியட்நாமுக்கு 46%, சீனாவுக்கு 34%, இந்தியாவுக்கு 26%, பிலிப்பைன்ஸுக்கு 17% மற்றும் சிங்கப்பூருக்கு 10% வரி விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் அமெரிக்க சந்தை பெரும் பங்கை வகிக்கிறது அதன் மீது ட்ரம்ப் விதித்த 44% வரியானது இலங்கையின் மொத்த வருவாயில் தாக்கம் செலுத்துவதால் மீண்டும் மக்களிடம் இருந்தே வரியாக அறவிட IMF நிர்பந்திக்கும் அப்போது அரசு அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது மேலும் வரியை விதிக்காமல் மக்கள் மீதே வரியை விதிப்பார்கள்.

உலக வர்த்தகப் போர் ஆரம்பமாகிவிட்டது; எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்.

• United Kingdom 10%

• Singapore 10%

• Australia 10%

• Chile 10%

• Brazil 10%

• Turkey 10%

• Colombia 10%

• Israel 17%

• Philippines 17%

• European Union 20%

• Japan 24%

• Malaysia 24%

• South Korea 25%

• India 26%

• Pakistan 29%

• South Africa 30%

• Switzerland 31%

• Taiwan 32%

• Indonesia 32%

• China 34%

• Thailand 36%

• Bangladesh 37%

• Sri Lanka 44%

• Vietnam 46%

• Cambodia 49%

யாழ்ப்பாணம்.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.