Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நரேந்திர மோதி , சாதி வாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

30 ஏப்ரல் 2025, 11:10 GMT

புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர்

(இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)

நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு முடிவெடுத்துள்ளதாக, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார் என, ஏ.என்.ஐ. செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லியில் இன்று பிரதமர் மோதி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் இதனை தெரிவித்தார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பில் இதுவரை நடந்தது என்ன?

எடப்பாடி பழனிசாமி

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தலைவர்கள் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாடு மக்கள் பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

ஏற்கெனவே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும்பொழுது, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வந்த திமுக அரசு அதை கைவிட்டுவிட்டது.

தற்போது மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மனதார வரவேற்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அறிவித்த பிரதமர் மோதிக்கு அதிமுக சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு கடைசியாக எப்போது எடுக்கப்பட்டது?

கடந்த 1865ஆம் ஆண்டில் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு மாகாணமான வட-மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பே இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முறையான முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கருதப்படுகிறது.

கடந்த 1931ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கடைசி முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கொள்ளப்படுகிறது.

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிகள் விவரம் சேகரிக்கப்படவில்லை. ஆனால், பட்டியல் பிரிவில் இருக்கும் பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதால், அவர்களது எண்ணிக்கை மட்டும் சேகரிக்கப்பட்டது. மற்ற சாதியினர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படவில்லை.

ஆகவே, மற்ற சாதியினரின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 1931ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இருந்த விகிதமே இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதி தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டாலும், அவை வெளியிடப்படவில்லை.

இந்தியாவில் கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011இல் மேற்கொள்ளப்பட்டது. அதற்கடுத்த கணக்கெடுப்பு, 2021இல் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்தத் தருணத்தில் கோவிட் பரவல் இருந்த காரணத்தால், மேற்கொள்ளப்படவில்லை. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது மேற்கொள்ளப்படும் என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c75dg19vkg7o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது என்ன? சமூகத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்தும்?

சாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அகில இந்திய அளவில் இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

அடுத்து நடக்கவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தப் போவதாக மத்திய அரசு ஏப்ரல் 30ஆம் தேதியன்று அறிவித்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் டெல்லியில் புதன்கிழமையன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "காங்கிரஸ் அரசுகள் எப்போதுமே சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து வந்திருக்கின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு நடந்த எந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்புகளிலும் சாதி குறித்த விவரங்கள் சேகரிக்கப்படவில்லை.

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என 2010ஆம் ஆண்டில் மக்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். பெரும்பாலான அரசியல் கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டுமென பரிந்துரைத்தன. இருந்தபோதும் சமூக, பொருளாதார, சாதி கணக்கெடுப்பு (எஸ்இசிசி) ஒன்றை நடத்த மட்டுமே மத்திய அரசு முடிவெடுத்தது" என்று குறிப்பிட்டார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை பெரும்பாலான கட்சிகள் வரவேற்றுள்ளன. சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென நீண்ட காலமாகக் கோரி வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென அரசுக்கு நாங்கள் அளித்து வந்த அழுத்தத்திற்குப் பலன் கிடைத்துள்ளது. நாங்கள் இதோடு நிறுத்த விரும்பவில்லை.

இட ஒதுக்கீட்டிற்குக் காரண அடிப்படையின்றி விதிக்கப்பட்டுள்ள 50 சதவிகித உச்சவரம்பை நீக்க வேண்டும். மேலும், தனியார் கல்வி நிலையங்களிலும் இட ஒதுக்கீடு வழங்க வழிவகுக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 15(5) முழுமையாகச் செயல்படுத்துவதை நாங்கள் உறுதிப்படுத்துவோம்" என்று குறிப்பிட்டார்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ளார். ஆனால், சில கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார்.

"சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தாமதிக்கவும் மறுக்கவும் செய்யப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து இதையும் நடத்தப் போவதாக மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், எப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும், எப்போது நிறைவடையும் என்ற முக்கியக் கேள்விகள் பதிலின்றியே நிற்கின்றன" என்றார்.

இது அறிவிக்கப்பட்ட தருணம் குறித்தும் அவர் கேள்வியெழுப்பினார்.

பிகார் தேர்தல்களில் சமூக நீதி ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இந்த திடீர் முடிவு அரசியல் அவசியத்தால் எடுக்கப்பட்டதாகத் தோன்றுகிறது எனக் குறிப்பிட்ட அவர், சாதியின் அடிப்படையில் மக்களைப் பிரிப்பதாக எதிர்க்கட்சிகளைக் குற்றம் சாட்டிய இதே பிரதமர் அந்தக் கோரிக்கைக்கு இப்போது பணிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மற்றவர்கள், மாநில அளவிலான சாதிவாரி கணக்கெடுப்பைக் கோரியபோது, "நாங்கள் உறுதியாக நின்றோம். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மத்திய அரசின் பணி. சென்சஸ் சட்டப்படி, மத்திய அரசு மட்டும்தான் சட்டரீதியாக செல்லத்தக்க சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியும்" என மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

மு.க. ஸ்டாலின்

அ.தி.மு.க., பா.ம.க. உள்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளன. சில கட்சிகள், எப்போது இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காலவரையறை குறிப்பிடப்படாததைச் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளன.

இந்தியாவில் 1931ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புதான் சாதிவாரியாக மேற்கொள்ளப்பட்ட கடைசி கணக்கெடுப்பு. 1980களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மையமாகக் கொண்ட கட்சிகள் வலுப்பெற்றபோது, சாதிவாரி கணக்கெடுப்பிற்கான கோரிக்கைகள் எழத் துவங்கின.

சாதிவாரிக் கணக்கெடுப்பில் இருந்து வெளிவரும் புள்ளிவிவரங்கள் மூலம் யாருக்கு என்ன எண்ணிக்கை உள்ளது, சமூகத்தின் வளங்களில் யாருக்கு என்ன பங்கு உள்ளது என்ற உண்மைகள் வெளிவரும். இதில் சமத்துவமின்மை இருந்தால் அது தெரிய வரும் என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அதற்கு எதிரான குரல்களும் தொடர்ந்து எழுந்தன. ஆதிக்க சாதியினர் பொதுவாக இதுபோன்ற சாதிவாரி கணக்கெடுப்புகளை விரும்புவதில்லை. குறிப்பாக, சிறுபான்மையாக இருக்கும் ஆதிக்க சாதி பிரிவினர் இதை விரும்புவதில்லை என்ற கருத்து உள்ளது. இந்த நிலையில்தான், கடந்த சில ஆண்டுகளில் சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கான கோரிக்கைகள் தொடர்ந்து வலுவடைந்து வந்தன.

ஆனால், மத்தியில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க. இதைக் கடுமையாக எதிர்த்து வந்தது. இது மக்களைப் பிளவுபடுத்தும் கோரிக்கை எனக் கூறி வந்தது. ஆனால், திடீரென சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இருந்தபோதும், பல அரசியல் கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியதைப் போல, எப்போது இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பது வெளியிடப்படவில்லை.

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு

நரேந்திர மோதி, நிதிஷ் குமார்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,அக்டோபர் 2023இல், பிகார் அரசு சாதிவாரி கணக்கெடுப்புத் தரவை வெளியிட்டது

கடந்த 1865இல் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு மாகாணமான வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பே இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கருதப்படுகிறது. அதற்குப் பிறகு, 1872இல் அடுத்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டது என்றாலும் வங்க மாகாணத்தில் கணக்கெடுப்பு நடக்கவில்லை.

இதற்குப் பிறகு, 1881இல் முதல் முறையாக, இந்தியாவின் அனைத்து இடங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் உள்ள பகுதிகளில் நேரடியாகவும் உள்ளூர் ஆட்சியாளர்களின் கீழ் உள்ள சமஸ்தானங்களில் சென்சஸ் ஆணையர் விதித்த அறிவுரைகளின்படியும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது தவிர, அந்தத் தருணத்தில் போர்ச்சுகீசு மற்றும் பிரெஞ்சு குடியேற்றங்களும் இந்தியாவில் இருந்தன. இதில் போர்ச்சுக்கீசியர்கள் கீழ் இருந்த பகுதிகளில், கணக்கெடுப்பு நடத்தப்பட்டு புள்ளிவிவரங்கள் பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு அளிக்கப்பட்டன.

கடந்த 1881 முதல் 1941 வரை பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்டது. ஆனால், 1941ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு, இரண்டாம் உலகப் போர் காரணமாக முழுமையாக நடக்கவில்லை. ஆகவே, 1931ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பே பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கடைசி முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கொள்ளப்படுகிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்கியதில் இருந்தே, இந்தியாவில் உள்ள மதங்கள், சாதிகள், இனங்கள் ஆகியவற்றை வகைப்படுத்துவது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சவாலான விஷயமாகவே இருந்தது.

ஆகவே, இது ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் ஒரு முறை மாறி வந்தது. 1901ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 1,646 சாதிகள் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டது. 1941இல் எடுத்த கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை 4,147ஆக உயர்ந்தது.

இந்தியாவில் கடைசியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. அதற்கு அடுத்த கணக்கெடுப்பு 2021ஆம் ஆண்டில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கோவிட் பெருந்தொற்றின் காரணமாக அப்போது அந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என இப்போது வரை மத்திய அரசு அறிவிக்கவில்லை.

சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதி குறித்த விவரம் சேகரிக்கப்படவில்லை. ஆனால், அரசமைப்புச் சட்டப்படி பட்டியல் சாதியினருக்கும் பழங்குடிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதால், அவர்களது எண்ணிக்கை மட்டும் சேகரிக்கப்பட்டது. மற்ற சாதியினர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படவில்லை. ஆகவே, மற்ற சாதியினரின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 1931ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இருந்த விகிதமே இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். 2011ஆம் ஆண்டில் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது ஒருவரது சமூக பொருளாதார, சாதி விவரங்களையும் சேகரிக்க முடிவெடுக்கப்பட்டது.

ஆனால், இந்த விவரங்கள் மட்டும் 1948ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின்படி மேற்கொள்ளப்படவில்லை. இதனால், சேகரிக்கப்பட்ட விவரங்களை அரசு வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை. 2011 கணக்கெடுப்பின்போது மொத்தமாக 46 லட்சம் சாதிகள், துணை சாதிகள், சாதி பெயர்கள், குலங்கள் ஆகியவை மக்களால் அளிக்கப்பட்டிருந்தன.

இந்தப் புள்ளி விவரங்களை அரசு வெளியிடாதது தொடர்பாகத் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்தக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட சாதி தொடர்பான விவரங்களைப் பகுப்பாய்வு செய்ய அப்போதைய நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் அரவிந்த் பனகரியா தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. ஆனால், அதற்குப் பிறகு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

சாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு சாதிவாரிக் கணக்கெடுப்பு ஏதும் நடத்தப்படாத நிலையில் சமூக ரீதியில் பிற்படுத்தப்பட்டவர்களை மேம்படுத்த சில முயற்சிகள் நடந்துள்ளன. இதற்கென நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு ஆணையங்கள் அமைக்கப்பட்டன. ஒன்று 1953இல் அமைக்கப்பட்ட கலேல்கர் ஆணையம். முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் என்றும் கலேல்கர் ஆணையம் என்றும் அழைக்கப்பட்ட இந்த ஆணையம் 1955இல் தனது பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்தது.

இந்தியா முழுவதும் 2399 சாதிகள் பிற்படுத்தப்பட்ட சாதிகளாகவும் 837 சாதிகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளாகவும் இருப்பதாக இந்த ஆணையம் கூறியது. பின்தங்கிய நிலையை அளவிட சாதியை அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. ஆனால், இந்த ஆணையத்தின் தலைவராக இருந்த கலேல்கரே இந்தப் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த ஆணையத்தின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரித்தது.

இதற்கு அடுத்ததாக, 1979ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையத்தின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் பி.பி. மண்டல் நியமிக்கப்பட்டார். 1980ஆம் ஆண்டு மண்டல் ஆணையம் தனது பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்தது. 1931ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 1971ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை வைத்து, இந்தியாவில் 52 சதவிகிதம் பேர் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் என வரையறுத்தது.

ஏற்கெனவே பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கு 22.5 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஓபிசி பிரிவினரின் எண்ணிக்கை அளவுக்கு அதாவது 52 சதவிகித இட ஒதுக்கீடு அளித்தால், அது 50 சதவிகிதம் என்ற எல்லையைத் தாண்டிவிடும் என்பதால், வெறும் 27 சதவிகித இட ஒதுக்கீட்டை அளிக்க ஆணையம் முடிவு செய்தது. 1990இல் வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது, ஆணையத்தின் அறிக்கையைச் செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்தது.

தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களைத் தவிர, நாடு முழுவதும் இந்த நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு நிலவியது. முடிவில், வி.பி. சிங் அரசு கவிழ்ந்தது. இருந்தபோதும் பல்வேறு வழக்குகளுக்குப் பிறகு 27 சதவிகித இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தது.

சாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் தேவை?

சாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்துப் பல முறை கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அப்படி நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டால் அது மக்களிடம் பிளவுகளை ஏற்படுத்தும் என்ற வாதங்களும் பல முறை முன்வைக்கப்பட்டுள்ளன.

"சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு நிச்சயம் தேவை இருக்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பு மக்களைப் பிளவுபடுத்தும் என பா.ஜ.கவும் அவர்கள் உடன் இருப்பவர்களும்தான் சொல்லி வந்தார்கள். எப்போதுமே எந்தவொரு தரவுகளுமே சமூகத்தைப் பிரிக்காது. அது தவிர, எந்தவொரு உறுதியான நடவடிக்கையையும் (affirmative action) செயல்படுத்த தரவுகள் தேவை. அந்தத் தரவுகளை இந்த சாதிவாரிக் கணக்கெடுப்புகள் அளிக்கும்" என்றார் மூத்த பத்திரிகையாளரான ஏ.எஸ். பன்னீர்செல்வன்

இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எண்களே மிகவும் பழையவை எனக் கூறிய அவர், 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வைத்துக்கொண்டு, அதில் உள்ள விவரங்களை ஆண்டுக்கு ஏற்றபடி உயர்த்தித் திட்டமிடுகிறார்கள் என்றார்.

"நமக்குத் துல்லியமான எண்கள் தேவை. அதேபோல, இட ஒதுக்கீட்டிற்கும் துல்லியமான எண்கள் தேவை. அதற்கு இந்தக் கணக்கெடுப்பு உதவும்" என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதை வைத்து இட ஒதுக்கீட்டைத் தகுந்த முறையில் அளிக்க முடியும் என்கிறார் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி.

"இந்தியாவில் 1931க்குப் பிறகு, எந்த சாதியினர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற எந்தப் புள்ளிவிவரமும் கிடையாது. தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பில், பட்டியலினத்தோர், பழங்குடியினர் குறித்த தகவல்கள்தான் சேகரிக்கப்படுகின்றன. பிற்படுத்தப்பட்ட சாதியினரின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுவதில்லை," என்றார் அவர்

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் 27 சதவிகிதம்தான் வழங்கப்படுகிறது என்றும் ஆனால் இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோர் 60 சதவிகிதம் அளவுக்கு இருப்பார்கள் எனக் கருதுவதாகவும் கூறினார் கோ. கருணாநிதி. "அதை இந்தக் கணக்கெடுப்பின் மூலம் உறுதி செய்ய முடியலாம்."

மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வன்

பட மூலாதாரம்,A S PANNEERSELVAN/X

"இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில், நீதிமன்றங்கள் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களைக் கோருகின்றன. உதாரணமாக, கல்வி நிலையங்களில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது தொடர்பான வழக்கிலும் நீதிமன்றம் அப்படி ஒரு கேள்வியை எழுப்பியது," என்றார் கோ. கருணாநிதி.

"அப்போது அரசுத் தரப்பில், 1931ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களை அளித்தபோது, அப்போது எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் இப்போது எப்படி செல்லத்தக்கதாக இருக்கும் என நீதிமன்றம் கேட்டது. இப்போது பல தரப்பினர் இட ஒதுக்கீடு கோரி வருகின்றனர். இவர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தால், எந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு அளித்தீர்கள் என நீதிமன்றம் கேள்வியெழுப்பும்" என்கிறார் அவர்.

மேலும், பிற்படுத்தப்பட்டோரின் சதவிகிதத்தோடு ஒப்பிட்டால் மிகக் குறைவாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் அரசின் எல்லாத் திட்டங்களுக்குமே புள்ளி விவரங்கள் தேவை என்றும் அவர் கூறினார்.

"இன ரீதியான ஒடுக்குமுறை இருக்கும் நாடுகளில், உறுதியான நடவடிக்கைக்கான (affirmative action) இனரீதியான தகவல்களைச் சேகரிக்கிறார்கள். இந்தியாவில் சாதி ரீதியான ஒடுக்குமுறை நீடிக்கும் நிலையில் சாதி ரீதியான புள்ளிவிவரங்களைச் சேகரிக்க வேண்டும்" என்கிறார் கோ. கருணாநிதி.

வேறொரு விஷயத்தையும் ஏ.எஸ். பன்னீர்செல்வன் சுட்டிக்காட்டுகிறார். அதாவது, இந்தியாவில் உள்ள சாதி சார்ந்த புள்ளி விவரங்கள் 1931ஆம் ஆண்டைச் சேர்ந்தவை. அதிலிருந்து சமூகம் வெகுதூரம் பயணப்பட்டுள்ளது என்கிறார் அவர்.

"உதாரணமாகத் தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், அந்தக் காலகட்டத்தில் நாடார்கள் சமூக ரீதியில் மிகவும் பின்தங்கியவர்களாக இருந்தார்கள். இந்த நூறு ஆண்டுகளில் அவர்களின் நிலை எவ்வளவோ மாறிவிட்டது. ஷிவ் நாடார், டேவிட் டேவிதார் என சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க ஆட்கள் அந்த சமூகத்தில் இருந்து வந்துவிட்டார்கள்.

அப்படியிருக்கும் சூழலில் அந்தக் காலகட்டத்தில் புள்ளிவிவரங்களை இப்போதும் பயன்படுத்துவது சரியாக இருக்குமா? சாதிரீதியான கணக்கெடுப்பு நடத்தினால், யார் கீழே சென்றிருக்கிறார்கள், யார் மேலே ஏறியுள்ளார்கள் என்ற விவரங்கள் நமக்குக் கிடைக்கும்" என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை பாஜக வெளிப்படையாக எதிர்க்கவில்லை.

பட மூலாதாரம்,ANI

சாதிவாரிக் கணக்கெடுப்பை ஏற்காமல் இருந்த பா.ஜ.க. இந்த முடிவை எடுத்ததற்குக் காரணம், இந்த ஆண்டின் இறுதியில் நடக்கவுள்ள பிகார் மாநில சட்டமன்றத் தேர்தல்தான் என்ற கருத்தையும் சில விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள்.

"நிச்சயமாக பிகார் தேர்தல்தான் இதற்குக் காரணம். சாதிவாரிக் கணக்கெடுப்பு எந்தெந்த சாதியினர் பின்தங்கியிருக்கிறார்கள் என்பதை அறியவும் அதன் மூலம் இடஓதுக்கீட்டை மாற்றியமைக்கவும் உதவக் கூடியது. இப்போது, இந்த விஷயங்கள் அனைத்தையும் பா.ஜ.க. ஏற்கிறது என்றால், மண்டல் கமிஷன் பரிந்துரைகளைக் கடுமையாக எதிர்த்தது ஏன்? மண்டல் பரிந்துரைகளை மத்திய அரசின் வேலை வாய்ப்புகளுக்கும் விரிவுபடுத்தியபோது அதை எதிர்த்தது ஏன்?" எனக் கேட்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

இப்போது பிகார் தேர்தலில் சாதிவாரிக் கணக்கெடுப்பு முக்கிய விவகாரமாக முன்வைக்கப்படுவதால், பா.ஜ.க. இதை ஏற்றுக் கொண்டிருக்கிறது என்றும் "வெறும் கணக்கெடுப்பைத்தான் நடத்தப் போகிறோம், அதன் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் இருக்காது என்று கூறுவதாக இருந்தால் அதை வெளிப்படையாக அவர்களால் சொல்ல முடியுமா?" என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

ஆனால், பா.ஜ.க. எப்போதுமே இடஒதுக்கீட்டை ஆதரித்து வந்திருக்கிறது என்கிறார் பா.ஜ.கவின் மாநில துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி.

"மண்டல் ஆணையத்தை அமைத்ததே ஜனதா ஆட்சியில்தான். அதற்குப் பிறகு வந்த காங்கிரஸ் ஆட்சிகள் அதைக் கிடப்பில் போட்டுவிட்டன. 1989இல் வி.பி. சிங்கின் ஆட்சி கவிழந்ததற்குக் காரணம், மண்டல் விவகாரமல்ல. அத்வானி கைது செய்யப்பட்டதுதான். தீக்குளித்த ராஜீவ் கோஸ்வாமியை பார்த்துவிட்டு வந்த அத்வானி, இதுபோலத் தீக்குளிப்பது தவறு என்றுதான் சொன்னார். இதற்கு முன்பாக ஒவ்வொரு மாநிலமும் சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தாங்களாக நடத்தப் போவதாகச் சொன்னதைத்தான் நாங்கள் எதிர்த்தோம். இப்போது மத்திய அரசு நடத்துவதில் பிரச்னையில்லை" என்கிறார் அவர்.

இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்றியமைக்க பா.ஜ.க. ஒப்புக்கொள்ளுமா?

"இதுபோலக் கணக்கெடுப்பு நடந்தால் பல விவரங்கள் தெரிய வரும். அந்தத் தருணத்தில் அதைப் பற்றி முடிவெடுக்கலாம்" என்கிறார் அவர்.

சாதி பிளவுகளைக் கூர்மைப்படுத்துமா?

நரேந்திர மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால், இதுபோன்ற சாதிரீதியான கணக்கெடுப்புகளால் வேலை வாய்ப்புகளைப் பெறுவதில் பெரிய பலனிருக்காது என்பதுபோல, அது சாதிப் பிளவுகளைக் கூர்மைப்படுத்தவே செய்யும் என்கிறார் தலித் முரசு இதழின் ஆசிரியரான புனித பாண்டியன்.

"இந்தியா முழுக்க உள்ள அரசு வேலைவாய்ப்புகள் மூன்று சதவிகித்திற்கும் குறைவு. 98 சதவீத வேலை வாய்ப்புகள் தனியார் துறையில்தான் உள்ளன. தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமெனப் பல கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றினாலும் அவை தீர்மானங்களாகவே உள்ளன. சாதிவாரிக் கணக்கெடுப்பின் விவரங்கள் வந்தாலும் அதனால் ஏதும் நடக்காது. காரணம், இதுவரை பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள 27 சதவிகித இட ஒதுக்கீட்டையே அவர்கள் ஒழுங்காக நடைமுறைப்படுத்தவில்லை" என்கிறார் அவர்.

ஆகவே, இதுபோன்ற சாதிவாரிக் கணக்கெடுப்புகள் எதற்கு உதவுமென்றால், தங்கள் சாதியினர் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று காட்டவும் அதன் மூலம் சாதிப் பெருமிதங்களைப் பேசவும்தான் உதவும் என்றும் புனித பாண்டியன் கூறுகிறார்.

"அரசு வேலை வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதால், அதை விட்டுவிட்டு, அமைச்சரவையில் கூடுதல் இடங்கள், கூடுதல் எம்.எல்.ஏ. இடங்களை சில சாதியினர் கோருவதற்குத்தான் இது பயன்படும். தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலேயே இதுதான் நிலை என்றால், மற்ற மாநிலங்களின் நிலையை யோசித்துக் கொள்ளலாம்" என்கிறார் புனிதபாண்டியன்.

ஆனால், அரசியல் கட்சிகள் ஏற்கெனவே சாதி பார்த்துத்தான் தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்துவதால், இந்தப் புள்ளி விவரங்களால் புதிதாக ஏதும் நடந்துவிடாது என்கிறார் கோ. கருணாநிதி.

தமிழ்நாடு எப்படி கூடுதல் இட ஒதுக்கீட்டை அளித்து வந்தது?

சாதிவாரிக் கணக்கெடுப்பால் நடக்கப் போவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவில் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பு 1931ஆம் ஆண்டுக் கணக்கெடுப்புதான் என்ற நிலையிலும்கூட, தமிழ்நாட்டில் அடுத்தடுத்து வந்த அரசுகள் இட ஒதுக்கீட்டை தொடர்ந்து அதிகரித்து வந்தன. இது எப்படி நடந்தது?

இந்தியாவில் நீண்ட காலமாக சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே அப்போதைய சென்னை மாகாணத்தில் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தது. அந்தக் காலகட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதி குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு வந்தன.

இதை அடிப்படையாக வைத்து, அரசுப் பணிகளில் பிராமணர் அல்லாதோர் விகிதத்தை உயர்த்துவதற்காக Communal GO என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கான அரசாணை பனகல் அரசர் தலைமையிலான அரசால் செப்டம்பர் 16, 1921இல் வெளியிடப்பட்டது.

இது போல மூன்று அரசாணைகள் வெளியாயின. 1928 டிசம்பர் 15ஆம் தேதி வெளியிடப்பட்ட மூன்றாவது கம்யூனல் ஜி.ஓ. மூலம்தான், இட ஒதுக்கீடுகள் அமலுக்கு வந்தன. அரசுப் பணிகள், கல்வியிடங்களில் பிராமணர் அல்லாதோரின் விகிதத்தை உயர்த்துவதற்காக இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டாலும், இதில் பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

இந்தியா சுதந்திரம் பெற்று, இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இந்த அரசாணையை எதிர்த்து இரு மாணவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றபோது, இந்த கம்யூனல் ஜி.ஓ. செல்லாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் பிறகு, இட ஒதுக்கீடு அளிக்க ஏதுவாக, இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.

இதற்குப் பிறகு, தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 25 சதவிகிதமும் பட்டியலினத்தோருக்கு 16 சதவிகிதமும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. மு. கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சரான பிறகு, பிற்படுத்தப்பட்டோரின் நிலை குறித்து ஆராய ஏ.என். சட்டநாதன் தலைமையில் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது.

அந்த ஆணையம் தனது பரிந்துரைகளை 1970இல் அளித்தது. இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், இட ஒதுக்கீட்டு விகிதத்தை தி.மு.க. அரசு மாற்றி அமைத்தது. அதன்படி, பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டு வந்த 25 சதவிகித இட ஒதுக்கீடு 31 சதவிகித இட ஒதுக்கீடாக மாற்றப்பட்டது. பட்டியலினத்தோருக்கு வழங்கப்பட்டு வந்த 16 சதவிகித இட ஒதுக்கீடு 18 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், 1979இல் எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. அரசு இட ஒதுக்கீட்டைப் பெற வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, ஆண்டு வருமானம் ரூ. 9,000க்கு மேல் பெறுபவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெற முடியாது என ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து தி.க., தி.மு.க. உள்ளிட்டவை போராட்டம் நடத்திய நிலையில், அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது.

இதையடுத்து வருமான வரம்பு ஆணை திரும்பப் பெறப்பட்டது. பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டு வந்த 31 சதவிகித இட ஒதுக்கீடு 50 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டது. 1989இல் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, இதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன்படி பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடும் பட்டியலினத்தோருக்கு 18 சதவிகித இட ஒதுக்கீடும் பழங்குடியினருக்கு ஒரு சதவிகித இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டது.

"தமிழ்நாட்டில்தான் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவு, பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பட்டியலினத்தோர் இட ஒதுக்கீட்டில் 3 சதவிகிதம் உள் ஒதுக்கீடாக அருந்ததியருக்கு வழங்கப்பட்டது. இது அனுபவ அடிப்படையில் செய்யப்பட்டது. புள்ளிவிவரங்கள் இன்னும் இதை மேம்படுத்த உதவும்" என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/ce3v0l8yywlo

  • கருத்துக்கள உறவுகள்
On 30/4/2025 at 13:23, ஏராளன் said:

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எதிர் கட்சிகள் வலியுறுத்தி, ஆளும் கட்சி அமைசரவை (மட்டும் தோற்றத்தில்) முடிவு.

(உண்மையில் மாறி அல்லவா நடந்து இருக்க வேண்டும்).

(பிஜேபி சாதி வரி கனளக்கெடுப்புக்கு அதன் வரலாற்றில் எதிர்ப்பு, காந்தியை குற்றம் சொல்லி.)

(மற்ற திரியில் சொன்னதின், இந்தியாவை பொறுத்தவரை, இன்னொரு ஓரளவு வெளிப்படை உதாரணம்.)

அதாவது அதிகாரிகள் / அதிகார பீடம் கொள்கை, முடிவுகளில் செல்வாக்கு செலுத்தலாம் சிறு மாற்றத்தில் இருந்து நிராகரிப்பு வரை.

ஆனால் , ஒரு கேள்வி இருக்கிறது,

அமைச்சரவை ஆலோசனையை (இது அமைச்சர் / மந்திரியால் நிராகரிக்கப்படலாம்) ஏற்றுக்கொண்டதா?

இல்லை, முடிவு உதவியாக வழங்கப்பட்டதா என்று? (அதாவது அமைச்சரவை உதவியை நிகராரிக முடியாது).

அப்படி ஆலோசனையை ஏற்றுக்கொண்டு இருந்தால், ஏன் பிஜேபி அப்படி நிலைப்பாட்டை (தலைகீழாக) மாற்றியது என்ற கேள்வி வருகிறது?

(ஆனல், பிஜேபி சாதி வரி கனளக்கெடுப்புக்கு அதன் வரலாற்றில் எதிர்ப்பு, காந்தியை குற்றம் சொல்லி.)

அதே போல, எல்லா கொள்கைகை, முடிவுகளில் மந்திரிகள், அதிகாரிகள் / அதிகார பீடம் முரண்பாடுகள், கருத்து வேறுபாடு இருக்காது.

(ஆயினும், பிஜேபி அறிவித இந்த முடிவின் அடிப்படை சாதியால் பின்தங்கி இருப்போரின் தொகை கூட, அவர்களும் பொருளாதார வளர்த்திக்குள் உல் வாங்கப்பட்ட வேண்டும் என்பது. இதை அரசியல் ஆக கூடாது என்று. இதை வெளியில் ஆங்காங்கே சொல்வதை முதலே தொடங்கி விட்டது. அதாவது தேசிய நலன்.

கட்சி கொள்கை, அரசாங்கத்தில் கைவிடப்பட்டு, தேசிய நலன் சார்ந்த முடிவு.)

இந்த முடிவை, அதிகார பீடம் செல்வாக்கு செலுத்தாமல், பிஜேபி அதுவாகவே முடிவு எடுத்து இருக்கும் என்று சிலர் சொன்னால், அவ்வளவு மட்டுந்தான் அவர்களின் புரிதல் ஆழம், பொத்தம் பொதுவான புரிதல்.

அனால் இவர்கள் இதை தவிர்ப்பதற்கு சொல்லுவது, சதிக்கத்தை, அரைகுறை. வேறு சில அடைமொழிகளும் கொண்டு சொல்லுவது.

Edited by Kadancha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

  • கருத்துக்கள உறவுகள்

அடியும் புரியாத நுனியும் புரியாத அலட்டல்.

ஆ எஸ் எஸ் மோகன்பாகவத் தலைமை எடுத்த கொள்கை முடிவு இது. சாதிவாரியாக இந்துக்களை ஜன சங்கின் கீழ் ஒருங்கிணைத்து, முஸ்லிம், கிறிஸ்தவர்க்கு எதிராக கட்டமைக்கும் அவர்களின் கொள்கையின் அடுத்த பரிணாம படி நிலை இது.

இதை யோகி ஆதிநாத் எதிர்த்தார் ஆனால் ஏனைய பல பிஜேபி மாநில அரசியல்வாதிகள், ஆதரித்ததால் ஆர் எஸ் எஸ் இந்த முடிவுக்கு வந்து, பிஜேபி கொள்கையை மாற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது முழுக்க முழுக்க அரசியல்வாதிகள் எடுத்த கொள்கை முடிவு.

ஆதாரம் கீழே


'சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் ஆர்எஸ்எஸ்' - கவனத்தில் கொள்ளுமா மோடி அரசு?!

சாதிவாரி கணக்கெடுப்பு

ஆர்.எஸ்.எஸ் சொல்லியது என்ன?

இந்த சூழலில்தான் பா.ஜ.க-வின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாகக் கூறப்பட்ட கருத்துக்கள்தான் தற்போதைய ஹாட் டாபிக். ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் அகில இந்திய ஒருங்கிணைப்புக் கூட்டம் கேரளாவின் பாலக்காட்டில் நடைபெற்றது. அதில் பேசிய தேசிய செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேத்கர், "சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் உணர்ச்சிகரமான விஷயம். இது நமது தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு முக்கியமானது. இது மிகவும் தீவிரமாகக் கையாளப்பட வேண்டும்.சில சமயங்களில், அரசாங்கத்துக்கு எண்கள் தேவைப்படுகின்றன. அப்போதுதான் அவர்களின் வளர்ச்சிக்குச் சிறப்புக் கவனம் செலுத்த முடியும். அதற்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு என்றால், பிரச்னை இல்லை. கடந்த காலங்களிலும் இது போன்ற கணக்கெடுப்புகள் நடந்துள்ளன. ஆனால் அது, அந்த சமூகங்கள் மற்றும் சாதிகளின் நலனைப் பற்றிப் பேசுவதாக இருக்க வேண்டும். அது ஓர் அரசியல் கருவியாகவோ அல்லது தேர்தல் பிரச்சாரத்துக்காகவோ பயன்படுத்தப்படக் கூடாது" என்றார்.

இதையடுத்து ஆர்எஸ்எஸ் கருத்தைக் கவனத்தில் கொள்ளுமா மோடி அரசு என்கிற கேள்வியுடன் மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம், "ராகுல் காந்தி பேசுவதாலேயே சாதிவாரி கணக்கெடுப்பு அரசியலாகிவிடாது. அப்போது பாஜக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருப்பது என்ன அரசியல்?. பிற்படுத்தப்பட்டோருக்கு அதிகமான இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும். உயர் சாதியினரின் வாக்குகள் உங்களுக்குக் கிடைக்காது. ஓ.சி பிரிவில் கைவைத்து விடுவார்கள் என்பதால் தானே எதிர்க்கிறீர்கள். சமூக நோக்கத்தோடுதான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. நீங்கள் எதற்காக அமைதியாக இருக்கிறீர்கள்.

நீதிமன்றத்தில் புள்ளிவிவரங்கள் தானே கேட்கிறார்கள். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் கூட இதனால்தான் பிரச்னை ஏற்பட்டது. எனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி கணக்கெடுப்பு நடத்தும்போது ஓபிசியின் விவரங்களையும் சேகரிக்க வேண்டியது தானே?. பீகாரில் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடு கூட சாதிவாரி கணக்கெடுப்பு சரியானது இல்லை என்று கூறி நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. ஆர்எஸ்எஸ் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பேசும். முதலில் இட ஒதுக்கீடு வேண்டாம் என்று கூறிய இயக்கம்தான் ஆர்எஸ்எஸ். தேர்தலுக்கு ஏற்ப அவர்களின் கொள்கைகள் மாறும். ஓட்டுவாங்க வேண்டும் என்பதற்காக மாற்றி, மாற்றிப் பேசுவார்கள்.

ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தி, அதன்பிறகு சமஸ்கிருதம், இந்தியாவை டெல்லியிலிருந்து ஆட்சி செய்ய வேண்டும். பெண்களுக்கான இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்பதில் ஆர்எஸ்எஸ் உறுதியாக இருக்கிறது. ஓட்டு வாங்குவதில் சிக்கல் இருப்பது தெரிந்தால் ஆதரவு தெரிவிப்பது போலத் தெரிவிப்பார்கள். வாக்குகள் கிடைத்த பிறகு கண்டுகொள்ள மாட்டார்கள். 370-ஐ நீக்குவோம் என்று சொல்லியா மெகபூபாவுடன் கூட்டணி வைத்தார்கள். இதுபோல் பல விஷயங்களைச் சொல்ல முடியும். ஆகவே அதிகாரத்தைப் பிடிக்க எப்படியான நெளிவு, சுழிவும் செய்துகொள்வார்கள். அவர்களுடைய கொள்கை இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது. எனவே ஆர்எஸ்எஸ் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனச் சொல்வதெல்லாம் போகிற போக்கில் சொல்லும் விஷயம். அவர்களது பேச்சுகள் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. சந்தேகத்துக்குரியது தான்" என்றார்.

4 hours ago, Kadancha said:

எதிர் கட்சிகள் வலியுறுத்தி, ஆளும் கட்சி அமைசரவை (மட்டும் தோற்றத்தில்) முடிவு.

(உண்மையில் மாறி அல்லவா நடந்து இருக்க வேண்டும்).

(பிஜேபி சாதி வரி கனளக்கெடுப்புக்கு அதன் வரலாற்றில் எதிர்ப்பு, காந்தியை குற்றம் சொல்லி.)

(மற்ற திரியில் சொன்னதின், இந்தியாவை பொறுத்தவரை, இன்னொரு ஓரளவு வெளிப்படை உதாரணம்.)

அதாவது அதிகாரிகள் / அதிகார பீடம் கொள்கை, முடிவுகளில் செல்வாக்கு செலுத்தலாம் சிறு மாற்றத்தில் இருந்து நிராகரிப்பு வரை.

ஆனால் , ஒரு கேள்வி இருக்கிறது,

அமைச்சரவை ஆலோசனையை (இது அமைச்சர் / மந்திரியால் நிராகரிக்கப்படலாம்) ஏற்றுக்கொண்டதா?

இல்லை, முடிவு உதவியாக வழங்கப்பட்டதா என்று? (அதாவது அமைச்சரவை உதவியை நிகராரிக முடியாது).

அப்படி ஆலோசனையை ஏற்றுக்கொண்டு இருந்தால், ஏன் பிஜேபி அப்படி நிலைப்பாட்டை (தலைகீழாக) மாற்றியது என்ற கேள்வி வருகிறது?

(ஆனல், பிஜேபி சாதி வரி கனளக்கெடுப்புக்கு அதன் வரலாற்றில் எதிர்ப்பு, காந்தியை குற்றம் சொல்லி.)

அதே போல, எல்லா கொள்கைகை, முடிவுகளில் மந்திரிகள், அதிகாரிகள் / அதிகார பீடம் முரண்பாடுகள், கருத்து வேறுபாடு இருக்காது.

(ஆயினும், பிஜேபி அறிவித இந்த முடிவின் அடிப்படை சாதியால் பின்தங்கி இருப்போரின் தொகை கூட, அவர்களும் பொருளாதார வளர்த்திக்குள் உல் வாங்கப்பட்ட வேண்டும் என்பது. இதை அரசியல் ஆக கூடாது என்று. இதை வெளியில் ஆங்காங்கே சொல்வதை முதலே தொடங்கி விட்டது. அதாவது தேசிய நலன்.

கட்சி கொள்கை, அரசாங்கத்தில் கைவிடப்பட்டு, தேசிய நலன் சார்ந்த முடிவு.)

இந்த முடிவை, அதிகார பீடம் செல்வாக்கு செலுத்தாமல், பிஜேபி அதுவாகவே முடிவு எடுத்து இருக்கும் என்று சிலர் சொன்னால், அவ்வளவு மட்டுந்தான் அவர்களின் புரிதல் ஆழம், பொத்தம் பொதுவான புரிதல்.

அனால் இவர்கள் இதை தவிர்ப்பதற்கு சொல்லுவது, சதிக்கத்தை, அரைகுறை. வேறு சில அடைமொழிகளும் கொண்டு சொல்லுவது.

👆

https://www.vikatan.com/amp/story/government-and-politics/rss-insists-on-caste-wise-census-what-modi-government-will-do

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

அடியும் புரியாத நுனியும் புரியாத அலட்டல்.

ஆ எஸ் எஸ் மோகன்பாகவத் தலைமை எடுத்த கொள்கை முடிவு இது. சாதிவாரியாக இந்துக்களை ஜன சங்கின் கீழ் ஒருங்கிணைத்து, முஸ்லிம், கிறிஸ்தவர்க்கு எதிராக கட்டமைக்கும் அவர்களின் கொள்கையின் அடுத்த பரிணாம படி நிலை இது.

இதை யோகி ஆதிநாத் எதிர்த்தார் ஆனால் ஏனைய பல பிஜேபி மாநில அரசியல்வாதிகள், ஆதரித்ததால் ஆர் எஸ் எஸ் இந்த முடிவுக்கு வந்து, பிஜேபி கொள்கையை மாற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது முழுக்க முழுக்க அரசியல்வாதிகள் எடுத்த கொள்கை முடிவு.

என்ன எதை விட்டாலும் சிந்திக்க தெரியவில்லையா?

இணையத்தை மட்டும், சிந்தனை இலலாமல், நம்பி இருந்தால் இது தான் நிலை.

தனியே அரசியல்வாதிகள் தான் என்றாலும் (அதற்ககா நான் அப்படி சொல்லலை)

எந்த திசையில் நகர்வது? குறிப்பாக கட்சி பதவியில் இருக்கும் போது.

அதிகாரத்தில் இருந்து (முடிவுகளை எடுத்து விட்டு) அரசியலை நோக்கியா, அரசியலில் இருந்து அதிகாரத்தை நோக்கியா?

சாதாரணமகா கட்சிக்கு உள்ளேயும், கொள்கையை (முடிவுகளை) வகுத்து விட்டு அரசியல் ஆக்குவதா, அரசியல் ஆக்கி விட்டு முடிவு எடுப்பதா?

சொந்தமாக சிந்திக்க தெரியாத ...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

என்ன எதை விட்டாலும் சிந்திக்க தெரியவில்லையா?

இணையத்தை மட்டும், சிந்தனை இலலாமல், நம்பி இருந்தால் இது தான் நிலை.

தனியே அரசியல்வாதிகள் தான் என்றாலும் (அதற்ககா நான் அப்படி சொல்லலை)

எந்த திசையில் நகர்வது? குறிப்பாக கட்சி பதவியில் இருக்கும் போது.

அதிகாரத்தில் இருந்து (முடிவுகளை எடுத்து விட்டு) அரசியலை நோக்கியா, அரசியலில் இருந்து அதிகாரத்தை நோக்கியா?

சாதாரணமகா கட்சிக்கு உள்ளேயும், கொள்கையை (முடிவுகளை) வகுத்து விட்டு அரசியல் ஆக்குவதா, அரசியல் ஆக்கி விட்டு முடிவு எடுப்பதா?

சொந்தமாக சிந்திக்க தெரியாத ...

உங்கள் கற்பனையில் உருவாகும் கஞ்சா கப்ஸா கதைகளுக்கு பெயர் சொந்தமாக சிந்திப்பதல்ல 🤣.

நீங்கள் கற்பனையாக ஒன்றை உங்கள் மனதில் தோன்றும் hallucination இல் கண்டு கொண்டு, நிஜ ஆதாரங்களை எதிர்த்து உங்கள் கற்பனைதான் உண்மை என வாதிடுபவர் என்பதை யாழ் களம் அறியும்.

(முன்னர் இரு ஐடிகளில் இதையே செய்து, திரும்ப உள்ளே வரமுடியாதளவு மொக்கேனப்பட்ட பின் இப்போ இது உங்கள் 3வது ஐடி).

நான் அப்படி அல்ல சொல்வதை ஆதாரம் சகிதம் நிறுவுபவன்.

அது இணையமோ இல்லை புத்தகங்களின் பதிவேற்றலோ - நான் கொடுக்கும் ஆதாரம் நம்பகமான இடத்தில் இருந்து வரும்.

உங்களை போல் ஒரு இம்மியளவு ஆதாரம் கூட கொடாமல் “நம்பினால் நம்புங்கள்” என எழுதுபவர் எல்லாம் ஆதாரத்தை கண்டதும் - இது இணைய ஆதாரம் என்று ஓடுவதை தவிர வேறு வழியில்லாதவர்கள்.

எந்த அதிகாரியும் அல்ல, சாதிவாரி கணெக்கெடுப்பு என்ற கொள்கை முடிவு (மாற்றம்), ஆர் எஸ் எஸ் எனும் தேர்தல் அரசியலில் ஈடுபடாத அமைப்பில் உள்ள அரசியல்வாதிகளால் எடுக்கப்பட்டு, அதன் தேர்தல் அரசியல் முகமான பிஜேபியால் அரச கொள்கையாக வரித்து கொள்ளபட்டுள்ளது.

இங்கே முழுக்க முழுக்க கொள்கை முடிவை எடுத்தவர்கள் அரசியல்வாதிகள். இதில் எந்த அதிகாரிக்கும் சம்பந்தமில்லை.

இதில் நீங்கள் பொல்லை கொடுத்து அடிவாங்கியதுதான் மிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

17 hours ago, goshan_che said:

எந்த அதிகாரியும் அல்ல, சாதிவாரி கணெக்கெடுப்பு என்ற கொள்கை முடிவு (மாற்றம்), ஆர் எஸ் எஸ் எனும் தேர்தல் அரசியலில் ஈடுபடாத அமைப்பில் உள்ள அரசியல்வாதிகளால் எடுக்கப்பட்டு, அதன் தேர்தல் அரசியல் முகமான பிஜேபியால் அரச கொள்கையாக வரித்து கொள்ளபட்டுள்ளது.

இங்கே முழுக்க முழுக்க கொள்கை முடிவை எடுத்தவர்கள் அரசியல்வாதிகள். இதில் எந்த அதிகாரிக்கும் சம்பந்தமில்லை.

இதில் நீங்கள் பொல்லை கொடுத்து அடிவாங்கியதுதான் மிச்சம்.

இது தான் உண்மையில் நடந்து இருந்தால், (rss இல் உள்ளவர்கள் தேர்தலில் ஈடுபடாத அரசியல்வாதிகள் என்பது உங்கலின் வசதி, இதன் மூலம் RSS பற்றியும் உஙளுக்கு புரியவில்லை என்றே எடுக்க வேண்டி இருக்கிறது).

(rss இன் கொள்கை, போக்கு அது அரசியலுக்கு அப்பால், நியாதிக்கமும், அதிகாரமும். -சீனாவில் Confucius தத்துவ அமைப்பு போல (ஒரு முக்கிய காரணம் cpc அரசியலுக்கு அப்பால் என்பதற்கு) . அதே போல rss இந்துத்துவா தத்துவ அமைப்பு, இரண்டிலும் ஒற்றுமை, தத்துவம், அமைப்பு அரசியலுக்கு அப்பால். RSS அதன் ஆரம்ப இரகசிய போக்கையும் முற்றாக கைவிடவில்லை என்பதும்).

சுப்பிரமான சாமி சொன்னது சரி என்று வருகிறது (நான் முதலில் சொ என்பதும்ன்னது அரச அதிகாரிகள் / அதிகார பீடம் தான். அனால், சுப்பிரமணிய சாமி சொன்னதில் சொன்னது வேறு ஏதும் அதிகார பீடம் இருக்கிறதா என்று கேள்வியும் எழுதி இருந்தேன்).

சுப்பிரமான சாமி சொன்னது - அதாவது, அரசியல்வாதிகள், முக்கியமாக மக்கள் பிரதிதியாக அதிகாரத்தில் உள்ள அரசியல் வாதிகளை மேவி கொள்கை, முடிவுகளை தீர்மானிக்கலாம்.

ஆனால், கொள்கைகள் நீங்கள் சொலவ்து போல மாற்றப்படுவது இல்லை. அப்படி செய்ய செய்ய முடியாது, அதுவும் வரலாற்று கொள்கையை.

(இதை பதிய பந்திகள் தேவை)

வெளியே காண்பது, இறுதி படிகள், பரந்த ஆதரவு, அதிகார தளத்தில் ஆமோதிப்பும், ஆதரவையும் திரட்டுவது.

RSS ம் கொள்கை முடிவில் , மாற்றத்தில் பங்கு வகித்து இருக்கலாம்.

சிந்திக்கவும் என்று சொல்லி இருந்தேன்.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இது தான் உண்மையில் நடந்து இருந்தால், (rss இல் உள்ளவர்கள் தேர்தலில் ஈடுபடாத அரசியல்வாதிகள் என்பது உங்கலின் வசதி, இதன் மூலம் RSS பற்றியும் உஙளுக்கு புரியவில்லை என்றே எடுக்க வேண்டி இருக்கிறது).

(rss இன் கொள்கை, போக்கு அது அரசியலுக்கு அப்பால், நியாதிக்கமும், அதிகாரமும். -சீனாவில் Confucius தத்துவ அமைப்பு போல (ஒரு முக்கிய காரணம் cpc அரசியலுக்கு அப்பால் என்பதற்கு) . அதே போல rss இந்துத்துவா தத்துவ அமைப்பு, இரண்டிலும் ஒற்றுமை, தத்துவம், அமைப்பு அரசியலுக்கு அப்பால். RSS அதன் ஆரம்ப இரகசிய போக்கையும் முற்றாக கைவிடவில்லை என்பதும்).

சுப்பிரமான சாமி சொன்னது சரி என்று வருகிறது (நான் முதலில் சொ என்பதும்ன்னது அரச அதிகாரிகள் / அதிகார பீடம் தான். அனால், சுப்பிரமணிய சாமி சொன்னதில் சொன்னது வேறு ஏதும் அதிகார பீடம் இருக்கிறதா என்று கேள்வியும் எழுதி இருந்தேன்).

சுப்பிரமான சாமி சொன்னது - அதாவது, அரசியல்வாதிகள், முக்கியமாக மக்கள் பிரதிதியாக அதிகாரத்தில் உள்ள அரசியல் வாதிகளை மேவி கொள்கை, முடிவுகளை தீர்மானிக்கலாம்.

ஆனால், கொள்கைகள் நீங்கள் சொலவ்து போல மாற்றப்படுவது இல்லை. அப்படி செய்ய செய்ய முடியாது, அதுவும் வரலாற்று கொள்கையை.

(இதை பதிய பந்திகள் தேவை)

வெளியே காண்பது, இறுதி படிகள், பரந்த ஆதரவு, அதிகார தளத்தில் ஆமோதிப்பும், ஆதரவையும் திரட்டுவது.

RSS ம் கொள்கை முடிவில் , மாற்றத்தில் பங்கு வகித்து இருக்கலாம்.

சிந்திக்கவும் என்று சொல்லி இருந்தேன்.

ஆர் எஸ் எஸ் திராவிடர் கழகம் போல் ஒரு அரசியல் இயக்கம்தான். அது ஒன்றும் அதிகாரிகள் சம்மேளனம் அல்ல.

பரவாயில்லை அதிகாரிகள்தான் முடிவு எடுப்பார்கள் என்பதில் இருந்து ஆர் எஸ் எஸ் சும் என உம் விகுதிக்கு முன்னேறி விட்டீர்கள் 🤣.

1 hour ago, Kadancha said:

சிந்திக்கவும் என்று சொல்லி இருந்தேன்.

இன்னும் கொஞ்ச காலம்👆 இதை நீங்கள் தொடர்ந்து அப்பியாசம் செய்தால் உங்கள் hallucination இல் இருந்து விடுபட்டு…

யாழ்கள உறவுகளின் நக்கல், நைதாண்டிக்கு ஆளாகாமல், மொக்கேனப்படமால் நல்ல கருத்தாக எழுத முடியும்.

நம்புங்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இது பொதுவானது

விடயம் அறியாமல் கதைப்பது. எதை கதைக்கிறோம் என்று தெரியாமல் கதைப்பது, வசதிக்கு ஏற்றவாறு.

சும்மா விடயாம் இல்லாமல், சிலர் பொத்தாம் பொதுவான கனவு கண்ட கதை (கனவு கூட காரண காரியம் இருக்கும்).

இறுதி கட்டம் என்று சொல்லியும் என்பதன் கருத்து கூட தெரியாமல், வசதிக்கு ஏற்வாறு புரட்டுவவது. அதுக்கும் பரிகாசம் தேவையாய் இருப்பது, ஏனெனில் விடயம் இல்லை.

ஏன் இந்திய அதிகாரிகள் மந்திரி / அமைச்சரை தடுக்கலாம் என்பதன் யாப்பு விளக்கம்.

அதிகாரிகள் - முன்பு சொன்னது போல - அதிபரால் மட்டுமே நீக்கப்பட முடியும் - அதாவது அதிபரின் (குடிஅரசு தலைவர் ) பிரதிநிதிகள் - அதிபர் (குடிஅரசு தலைவர் ) பீடம் குறிப்பது கிட்டத்தட்ட முடியை - British Raj இந்திய அரசாங்க சட்டத்தில் இருந்து, இந்திய குடியரசு யாப்புக்கு சிறு மாற்றங்களுடன் கொண்டுவரப்பட்டது.

7:40 இல் இருந்த்து 9:40 வரை அம்பேத்கார் செய்தது சொல்லப்பட்டு இருக்கிறது. (இதுவே யாப்பு காரணம் அதிகாரிகள், அரசியல் தலைமை (மந்திரி, அமைச்சர், பிரதமர) முடிவுகள் அல்லது விடயங்களை உரிய காரணங்களுடன் தடுக்கலாம், மாற்றலாம், நிராகரிக்கலாம் ... என்பதற்கு)

ஒருவர் தன்னையே தான் பரிகாசம் செய்யும் நிலை தெரியாது இருப்பவர்களை பரிகாசம் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kadancha said:

ஒருவர் தன்னையே தான் பரிகாசம் செய்யும் நிலை தெரியாது இருப்பவர்களை பரிகாசம் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

ஒட்டு மொத்தகளமே யாரை பார்த்து தப்பு கொட்டி சிரிக்கிறது எனபதை வாசகர் அறிவர் 🤣.

நீங்கள் தமிழ் என வேறு ஏதோ ஒரு புதிய திராவிட மொழியில் எழுதுவதால் ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.

Do a bit of retrospection and have a look at your engagement rate with other contributors in this forum. No one really engages with you. You just write para after para of gibberish and people just ignore whatever you write and move on to the next comment. Justin Anna and I tried and failed to make sense of your writings and gave up. Then Raso Anna and Eppo did the same. Like I said before, you are, without a doubt, dwelling in your own little imaginary conspiracy-theory-fueled world where left is right and right is left. This detachment from reality and the way you butcher the Tamil language will ensure that you continue to do ஆளில்லாத கடையில் டீ ஆத்துறது here, with zero engagement from fellow contributors, unless you change your ways which I doubt you would.

முதலில் தமிழகர்களுக்கு புரியும் வகையில் தமிழில் எழுத கற்று கொள்ளுங்கள் - கருத்து கறுமாந்திரம் எல்லாம் பிறகு எழுதலாம்🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக எல்லோருக்கும், விடயம் இருந்தால் சொல்லவும்

அதிகாரிகள், அரசியல் தலைமையை உரிய காரணதுடன் மேவலாம் என்பது யதார்த்தம் இந்திய அரசில், யாப்பின் படி.

V.P. மேனன் (என்ற மிகவும் மூத்த அதிகாரி) அவர் வாயால் (கொள்கை ஆக்கத்தில்) சொன்னதே இருக்கிறது. ஆனால், அது இனிமேலும் தேவை இல்லை.

எந்தவித எதிர்பார்ப்பும் என்னிடம் இல்லை.

ஆனால், சொல்லபடுவது யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதி.

இந்த விடயத்தில், இந்திய அரசில் அதிகாரிகள் அரசியல் தலைமையை மேவ முடியாது என்று சொன்ன எவருக்கும், இந்த விடயம், அதன் வரலாறு போன்றவற்றை பற்றி எந்த அறிவும் இல்லை என்பது வெளிப்படை. இந்திய சனநாயகத்தின் தனித்துவம் பற்றியும் தெரியாது, அறியாது மேற்கில் இருந்து கனவு காண்பது.

அதை பற்றி சுருக்கமாக சொல்லியும், அவர்களின் பொத்தாம் போது கற்பனையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது. சிலர் இங்கு எதிர்பார்பது conformance ஐ, ஆனால் விடயம் அறியாமல்.

அதற்கு நான் இணங்கப்போவதில்லை என்பதில் தெளிவு.

இங்கு எல்லோருமே ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், இந்திய அரசில் அதிகாரிகள் உரிய காரணத்துடன் அரசியல் தலைமையை மேவலாம் என்பது தான் யதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி நெடுக கெஞ்சுவதால் ஒரு சிரிப்புக்குறி இலவசம்.

இதுதான் ஆக கூடிய engagement 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழ்நாட்டிற்கு எதிரான சதி என்று ஸ்டாலின் விமர்சிப்பது ஏன்?

மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு, நாடாளுமன்றம், ஸ்டாலின், தமிழ்நாடு, திமுக, பாஜக

பட மூலாதாரம்,X/MK STALIN

படக்குறிப்பு, முதலமைச்சர் ஸ்டாலின்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 7 ஜூன் 2025

    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027 மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக, இந்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை அன்று (ஜூன் 4) தெரிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித் திட்டத்தை பா.ஜ.க வெளிப்படையாக அறிவித்துள்ளதாக விமர்சித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழ்நாட்டிற்கு எதிரான சதி என்று ஸ்டாலின் விமர்சிப்பது ஏன்?

இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரும் 2027 ஆம் ஆண்டு இரு கட்டங்களாக நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

பனிப்பொழிவு பகுதிகளாக இருக்கும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், லடாக், இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் 2026 அக்டோபர் 1 முதல் கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948, மக்கள்தொகை கணக்கெடுப்பு விதிகள் 1990 ஆகியவற்றின்படி இவை நடத்தப்பட உள்ளதாக மத்திய அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டம் பிரிவு 3ன்படி வரும் ஜூன் 16 ஆம் தேதியன்று அரசிதழில் வெளியிடப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"முன்பே எச்சரித்தேன்" - முதலமைச்சர் ஸ்டாலின்

X பதிவை கடந்து செல்ல

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், ' 2026 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027 ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது' எனக் கூறியுள்ளார்.

தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே தான் எச்சரித்திருந்ததாகக் கூறியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், 'அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பா.ஜ.க-வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், இதுதொடர்பாக எதுவும் பேசாமல் எடப்பாடி பழனிசாமி அமைதி காக்கிறார்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நியாயமான தொகுதி மறுவரையறை என்னும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்பதாகவும் இதுதொடர்பான விளக்கத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

சதி என ஸ்டாலின் கூறுவது ஏன்?

மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு, நாடாளுமன்றம், ஸ்டாலின், தமிழ்நாடு, திமுக, பாஜக

படக்குறிப்பு, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன்.

"மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யும்போது தமிழ்நாட்டுக்கான பிரதிநிதித்துவம் குறையும். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கூடும்" எனக் கூறுகிறார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன்.

மத்திய அரசின் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை தென்மாநிலங்கள் சிறப்பாக கையாண்டுள்ளதாக பிபிசி தமிழிடம் கூறிய பாலச்சந்திரன், "கணக்கெடுப்புக்குப் பிறகு தொகுதி மறுவரையறை மேற்கொள்ளும்போது தென்மாநிலங்கள் வெகுவாக பாதிக்கும். இதைத் தான் சதி என முதலமைச்சர் குறிப்பிடுகிறார்" என்கிறார்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிந்த பிறகு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.

இந்தியாவில் 1971 ஆம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுக்கப்பட்டது. அதை அடிப்படையாக வைத்து 1973 ஆம் ஆண்டில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டது. 1975 ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சியில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது.

அதேகாலகட்டத்தில், குடும்ப கட்டுப்பாடு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. இதன் காரணமாக அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறையை மேற்கொள்ளாமல் இருக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.

"வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது (2002) தொகுதி மறுவரையறையை மேலும் 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்தார். தற்போது மக்கள்தொகையைக் கணக்கெடுத்தால் நாடாளுமன்ற தொகுதிகளில் மறுவரையறை செய்யப்படும். இதன் பாதிப்பை உணர்ந்து, மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வகையில் திருத்தம் கொண்டு வரவேண்டும் ஸ்டாலின் கூறுகிறார்" என்கிறார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன்.

"1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை செயல்படுத்தினால் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்படாது" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் சிகாமணி திருப்பதி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தொகுதி மறுவரையறையின் மூலம் மாநிலத்தின் பிரதிநிதித்துவத்தை குறைப்பது பா.ஜ.க-வின் நோக்கமாக உள்ளது. உத்தரபிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களுக்கு இணையாக தமிழ்நாட்டுக்கு எம்.பி-க்கள் பிரநிதித்துவம் கிடைக்க வாய்ப்பில்லை" எனவும் குறிப்பிட்டார்.

"வட இந்திய மாநிலங்களில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டால், தென்மாநிலங்களின் ஆதரவு இல்லாமலேயே பா.ஜ.க ஆட்சியமைக்கும். இதைத் தான் சதி என முதலமைச்சர் குறிப்பிடுகிறார்" என்கிறார், சிகாமணி திருப்பதி.

தி.மு.க முன்வைக்கும் 7.18 சதவீதம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு, நாடாளுமன்றம், ஸ்டாலின், தமிழ்நாடு, திமுக, பாஜக

பட மூலாதாரம்,X/MK STALIN

படக்குறிப்பு,அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு நடத்தியது.

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தொடக்கத்தில் இருந்தே தி.மு.க குரல் எழுப்பி வருகிறது. இதுதொடர்பாக கடந்த மார்ச் 5 அன்று அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு நடத்தியது.

அந்தக் கூட்டத்தில், '1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் வரையறுக்கப்படும் என, 2000 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் உறுதியளித்தார்.

தற்போது தொகுதி வரையறையை 2026 ஆம் ஆண்டில் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோதி உறுதியளிக்க வேண்டும். அதற்கேற்ப, அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்' எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

'நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் என்பது 7.18% உள்ளது. இதை எக்காரணம் கொண்டும் மத்திய அரசு மாற்றக் கூடாது' என்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதுதொடர்பான போராட்டங்களை முன்னெடுத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தென்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 உறுப்பினர்களின் பலத்தைக் கணக்கிட்டால் தமிழ்நாட்டுக்கு 7.18% என்ற கணக்கு வருகிறது. 'தொகுதிகளை மறுவரையறை செய்தாலும் இந்த சதவீதம் அளவுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும்' எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், தொகுதி மறுவரையறை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சுமத்தினார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விகிதாச்சார அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும் எனப் பிரதமர் கூறிவிட்டார். தென்னிந்திய மாநிலங்கள் உள்பட எந்த மாநிலத்துக்கும் இதனால் பாதிப்பு ஏற்படாது" எனக் கூறினார்.

"இரண்டாம்தர குடிமக்களாக வடக்கு மாற்றும்"

மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு, நாடாளுமன்றம், ஸ்டாலின், தமிழ்நாடு, திமுக, பாஜக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி

அதேநேரம், "தென்னிந்திய மாநிலங்களில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி அமித் ஷா விளக்கவில்லை" என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி விமர்சித்திருந்தார்.

"தென்மாநிலங்களின் எண்ணிக்கை குறையாது என அமித் ஷா கூறினாலும் எத்தனை இடங்கள் அதிகரிக்கும் என்பதைப் பற்றி தெளிவுபடுத்தவில்லை" எனவும் ரேவந்த் ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து, தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநில முதலமைச்சர்களின் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தை மார்ச் 22 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டினார்.

இதில், கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

"மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை நடந்தால் அதை தெற்கு ஏற்கப் போவதில்லை. தென்னிந்திய மாநிலங்கள் அதன் அரசியல் வலிமையை இழந்துவிடும். தங்களை இரண்டாம்தர குடிமக்களாக வடக்கு மாற்றும்" என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசியிருந்தார்.

"பா.ஜ.க-வின் திட்டம் இதுதான்" - பாலச்சந்திரன்

மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு, நாடாளுமன்றம், ஸ்டாலின், தமிழ்நாடு, திமுக, பாஜக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பாஜக

"தென்மாநிலங்களின் தொகுதிகள் குறையாது என அமித் ஷா கூறினார். ஆனால், அதற்கான காரணத்தை அவர் தெளிவுபடுத்தவில்லை. இங்கு தொகுதிகள் குறையாமல் வடஇந்திய மாநிலங்களில் மட்டும் எண்ணிக்கை அதிகரித்தாலும் பாதிப்பு ஏற்படும்" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் சிகாமணி திருப்பதி.

தற்போது வரை பிரதமரும் உள்துறை அமைச்சரும் இதுதொடர்பாக எந்த விளக்கத்தையும் அளிக்காமல் உள்ளதாகக் கூறுகிறார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன்.

"அவர்களின் நோக்கம் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பிகார் ஆகிய நான்கு மாநிலங்களில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை கூட்டுவது தான்" என்கிறார் அவர்.

மேற்கண்ட நான்கு மாநிலங்களில் பெருவாரியான இடங்களைப் பா.ஜ.க வெற்றி பெற்றுவிட்டால், மக்களவையில் பெரும்பான்மை பலம் கூடும் என்பது அவர்களின் கணக்காக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டி.கே.எஸ்.இளங்கோவன் சொல்வது என்ன?

"பா.ஜ.க முடிவால், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை முறையாகப் பின்பற்றாத உத்தரபிரதேசம் உள்பட சில மாநிலங்கள் பலனடையும். இதனை முறையாக செயல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பாதிப்படையும்" எனக் கூறுகிறார், தி.மு.க செய்தித் தொடர்புத் துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன்.

இதையே சதி என முதலமைச்சர் கூறுவதாகக் குறிப்பிட்ட டி.கே.எஸ்.இளங்கோவன், "தொகுதி மறுவரையறை பிரச்னையை தொடக்கத்தில் இருந்தே தி.மு.க எழுப்பி வருகிறது" என்கிறார்.

"சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால், தொகுதி மறுவரையறை குறித்து எந்தத் தகவலும் வெளிவரவில்லை. அதுதொடர்பான அறிவிப்பு வெளிவரும்போது விவாதமாகும்" எனவும் அவர் தெரிவித்தார்.

"இது வெறுப்பு அரசியல்" - நாராயணன் திருப்பதி

ஆனால், இதனை மறுத்துப் பேசும் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "முதலமைச்சர் எந்த அடிப்படையில் இதைக் கூறுகிறார் எனத் தெரியவில்லை. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை எடுத்த பிறகு தான் தொகுதி மறுவரையறையை மேற்கொள்வார்கள். அதற்கான குழுவை அமைத்த பிறகு பேசுவது தான் சரியாக இருக்கும்" எனக் கூறுகிறார்.

பிபிசி தமிழிடம் தொடர்ந்து பேசிய அவர், "மக்கள்தொகைக் கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் எனக் கூறி வந்த ஸ்டாலின், இப்போது எடுக்க வேண்டாம் என்கிறார். பா.ஜ.க-வை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் வெறுப்பு அரசியலைக் கையில் எடுத்துள்ளார்" என்கிறார்.

"மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவோம் என நாடாளுமன்றத்திலேயே மத்திய அரசு கூறியது. இதை வரவேற்க மனமில்லாமல் இவ்வாறு பேசுவது ஏற்புடையதல்ல" என்கிறார் நாராயணன் திருப்பதி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c93l264gwdpo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.