Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image1170x530cropped.jpg?resize=750%2C37

உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பு ஆரம்பம்!

இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகி நடை பெற்றுவருகின்றது

அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெறவுள்ளது

இதன்படி வாக்காளர்கள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று நாடு முழுவதும் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் ஆரம்பமாகியுள்ளது.

வாக்குப்பதிவு மாலை 4:00 மணி வரை நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், 5,783 மத்திய நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக 1 கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த முறை தேர்தலில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிலிருந்து 75,589 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் 8,287 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கண்காணிக்க சுமார் 3,000 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பெஃப்ரல் (PAFFREL) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டிஆராச்சி தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 65,000 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தேர்தல் சட்டங்களை மீறுவோர் தொடர்பாக சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் காலத்தில் ஏற்படக்கூடிய பேரிடர் நிலைமைகள் குறித்து அறிவிப்பதற்கும், நிவாரணம் வழங்குவதற்கும் விசேட கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்

https://athavannews.com/2025/1430704

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-28-1.jpg?resize=600%2C300&ss

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் -காலை 11.00 மணி வரையான காலப்பகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்!

இலங்கையில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (06) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

வாக்காளர்கள் இன்று மாலை 4.00 மணி வரை வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்..

அதன்படி காலை 11.00 மணி வரையான காலப்பகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்!

அதன்படி,

வவுனியா – 37%

திருகோணமலை – 28%

இரத்தினபுரி – 20%

கேகாலை – 25%

மன்னார் – 26%

அம்பாந்தோட்டை – 20%

அனுராதபுரம் – 22%

திகாமடுல்லா – 26%

Vavuṉiyā – 37%

https://athavannews.com/2025/1430778

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

SL_election-.jpg?resize=750%2C375&ssl=1

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 12.00 மணி வரையான காலப்பகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்!

இலங்கையில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (06) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

வாக்காளர்கள் இன்று மாலை 4.00 மணி வரை வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்..

அதன்படி மதியம் 12 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 30% ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா – 30 %

பதுளை – – 36 %

மொனராகலை – 32 %

அனுராதபுரம் – 30 %

யாழ்ப்பாணம் – 18 %

மன்னார் – 40 %

வவுனியா – 39.5 %

திகாமடுல்ல – 31%

கம்பஹா – 20 %

மாத்தறை – 42 %

களுத்துறை 20 %

பொலனறுவை – 34 %

கொழும்பு – 28 %

புத்தளம் – 36 %

காலி – 35 %

இரத்தினபுரி – 30 %

அம்பாந்தோட்டை – 19 %

கிளிநொச்சி – 22 %

மாத்தளை – 25 %

கேகாலை – 33 %

கண்டி – 21 %

மட்டக்களப்பு – 23 %

குருநாகல் – 30 %

திருகோணமலை – 36%

#####################################################################################

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: பி.ப 1 மணிவரையான தேர்தல் நிலவரம்!

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி விறுவிறுப்பாக இடம்பெற்று  வருகின்றது.

அந்தவகையில் இன்று (06)  இன்று பிற்பகல்  1 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 40% ஐ தாண்டியுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு

பதுளை – 48%
இரத்தினபுரி – 37%
மட்டக்களப்பு – 38%
கேகாலை – 40%
திகாமடுல்ல – 41%
புத்தளம் – 38%
அநுராதபுரம் – 40%
மொனராகலை – 43%
கம்பஹா – 36 %

##############################################################

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: பி.ப 2 மணிவரையான தேர்தல் நிலவரம்!

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் இன்று (06) இன்று பிற்பகல் 2 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 40% ஐ தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு

கொழும்பு மாவட்டத்தில் 38 சதவீதம்

கம்பஹா மாவட்டத்தில் 36 சதவீதம்

களுத்துறை மாவட்டத்தில் 45 சதவீதம்

அநுராதபுரம் மாவட்டத்தில் 40 சதவீதம்

நுவரெலியா மாவட்டத்தில் 53 சதவீதம்

திகாமடுல்ல மாவட்டத்தில் 48 சதவீதம்

பொலன்னறுவை மாவட்டத்தில் 45 சதவீதம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 40 சதவீதம்

பதுளை மாவட்டத்தில் 46 சதவீதம்

மன்னார் மாவட்டத்தில் 54 சதவீதம்

இரத்தினபுரி மாவட்டத்தில் 50 சதவீதம்

கிளிநொச்சி மாவட்டத்தில் 39 சதவீதம்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 42 சதவீதம்

மொனராகலை மாவட்டத்தில் 46 சதவீதம்

https://athavannews.com/2025/1430808

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

494655877_1132363098906547_7012515194486

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி சபை தேர்தல் 2025 : பிற்பகல் 4 மணி வரையான வாக்களிப்பு வீதம்!

Published By: DIGITAL DESK 3

06 MAY, 2025 | 05:05 PM

image

நாடளாவிய ரீதியில் இன்று உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற்று பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

அந்த வைகயில் நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக இடம்பெற்றது.

இன்று பிற்பகல் 4 மணி வரை நிலைவரப்படி,

கொழும்பு மாவட்டத்தில் 50 சத வீத வாக்குப் பதிவுகளும்

பதுளை மாவட்டத்தில் 60 சத வீத வாக்குப் பதிவுகளும்

பொலன்னறுவை மாவட்டத்தில் 53 சத வீத வாக்குப் பதிவுகளும்

நுவரெலியா மாவட்டத்தி 60 சத வீத வாக்குப் பதிவுகளும்

களுத்துறை மாவட்டத்தில் 61 சத வீத வாக்குப் பதிவுகளும் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 சத வீத வாக்குப் பதிவுகளும்

மன்னார் மாவட்டத்தில் 70 சத வீத வாக்குப் பதிவுகளும்

அநுராதபுரம் மாவட்டத்தில் 60 சத வீத வாக்குப் பதிவுகளும்

பொலன்னறுவை மாவட்டத்தில் 64 சத வீத வாக்குப் பதிவுகளும்

மொனராகலை மாவட்டத்தில் 61 சத வீத வாக்குப் பதிவுகளும்

கேகாலை மாவட்டத்தில் 58 சத வீத வாக்குப் பதிவுகளும்

காலி மாவட்டத்தில் 63 சத வீத வாக்குப் பதிவுகளும்

வவுனியா மாவட்டத்தில் 60 சத வீத வாக்குப் பதிவுகளும்

திகாமடுல்ல மாவட்டத்தில் 63 சத வீத வாக்குப் பதிவுகளும்

புத்தளம் மாவட்டத்தில் 55 சத வீத வாக்குப் பதிவுகளும்

திருகோணமலை மாவட்டத்தில் 67 சத வீத வாக்குப் பதிவுகளும்

இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகள் வாக்கெடுப்பு கட்டளைச்சட்டத்தின் படி 8287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 339 உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளுக்கான தேர்தல் வாக்கெடுப்பு இன்று 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

28 மாநகர சபைகளுக்கும் 36 நகர சபைகளுக்கும் 275 பிரதேச சபைகளுக்கும் 8287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெற்றுள்ளது.

நாடளாவிய ரீதியில் 4877 உள்ளூராட்சி மன்ற அதிகார சபை வட்டாரங்களில் அமைக்கப்பட்டுள்ள 13, 759 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் ஊடாக இன்று வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன.

வாக்கெண்ணும் பணிகளுக்காக தொகுதி மட்டத்தில் 5,783 மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டு சற்று நேரத்தில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயோட்சைக் குழுக்கள் சார்பில் 75,589 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றன நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பின் கூட்டிணைக்கப்பட்ட பெயர் பட்டியலுக்கமைய இம்முறை 17,156,338 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/213847

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

495588901_1124860572987327_2781085770276

495543196_1124924042980980_1449478442217

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்மாவட்டத்தின் வாக்களிப்பு வீதம் ஏன் குறிப்பிடப்படவில்லை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, புலவர் said:

யாழ்மாவட்டத்தின் வாக்களிப்பு வீதம் ஏன் குறிப்பிடப்படவில்லை?

வாக்களிப்பு நேரம் முடிந்த பின்… அவர்கள் பெட்டி மாற்ற காத்து இருக்கின்றார்களோ….

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, புலவர் said:

யாழ்மாவட்டத்தின் வாக்களிப்பு வீதம் ஏன் குறிப்பிடப்படவில்லை?

யாழ்ப்பாணம் - 57 %

முல்லைத்தீவு - 61 %

மன்னார் - 70 %

வவுனியா - 60 %

மட்டக்களப்பு - 61 %

கிளிநொச்சி - 60 %

திருகோணமலை - 67 %

நன்றி: Vaanam.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.