Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

சீனாவை சீண்டினால் இந்தியா நினக்கமுடியாத வழியில் எல்லாம் அடி விழும்

முடியாது ஏனெனில் மனிதவளம் இல்லை அவர்கள் ஒரு பிள்ளை. மட்டுமே பெற வேண்டும் என்பது பிழையான சட்டம் இப்போது அது இல்லை ஆனால் இருப்பது குழந்தைகள் கிழவன்கள் மட்டுமே எனவே… சீனா ஒருபோதும் அடிபட போகாது காரணம் இளைஞர்கள் தொகை குறைவு ஆனால் இந்தியா இடம் நிறையவே உண்டு

  • Replies 575
  • Views 23.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    ஒரு காலத்தில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடினாலும், கண்ணை மூடிக் கொண்டு இந்தியாவை ஆதரித்த ஈழத்தமிழினம், இன்று போரின் போது கூட இந்தியா மோசமாக அடி வாங்க வேண்டும் என்று நினைக்கும் வன்ம மனநிலை எ

  • vasee
    vasee

    தமது அரசியல் இலாபங்களுக்காக உயிர்களை பலியிடும் அரசியல்வாதிகளை விடவா மோசமாகியுள்ளோம், இரண்டு நாட்டு முட்டாள் அரசியல்வாதிகளும் அவர்களை தெரிவு செய்த முட்டாள்களும்தான் இந்த போருக்கு எண்ணெய் ஊற்றி கொழு

  • நிழலி
    நிழலி

    இந்தியா சொன்ன மாதிரி பாகிஸ்தானை தாக்கிவிட்டது. பாகிஸ்தான் அணுகுண்டு எல்லாம் தங்களிடம் உள்ளது, அவற்றால் திருப்பி தாக்குவோம் என்ற மாதிரி சொன்ன கதையை எப்போது செய்து காட்டப் போகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

இந்தியர்கள் ஒப்பாரியே வைப்பார்கள்🤣

இதுவரை போரில் மட்டும் அல்ல ஒரு சின்ன கைக்கலப்பில் கூட சீனாவை இந்தியா வெல்லவில்லை.

சீனாவை சீண்டினால் இந்தியா நினக்கமுடியாத வழியில் எல்லாம் அடி விழும்.

சீன‌ன் கூட‌ இவேன்ட‌ அரிசி வேகாது..........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

முடியாது ஏனெனில் மனிதவளம் இல்லை அவர்கள் ஒரு பிள்ளை. மட்டுமே பெற வேண்டும் என்பது பிழையான சட்டம் இப்போது அது இல்லை ஆனால் இருப்பது குழந்தைகள் கிழவன்கள் மட்டுமே எனவே… சீனா ஒருபோதும் அடிபட போகாது காரணம் இளைஞர்கள் தொகை குறைவு ஆனால் இந்தியா இடம் நிறையவே உண்டு

இல்லை

INFOGRAPHIC - Comparison between...
No image preview

INFOGRAPHIC - Comparison between Chinese and Indian milit...

Both countries engaged in a border face-off, saw bloody clash first time in 45 years recently killing 20 Indian soldiers - Anadolu Ajansı
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

முடியாது ஏனெனில் மனிதவளம் இல்லை அவர்கள் ஒரு பிள்ளை. மட்டுமே பெற வேண்டும் என்பது பிழையான சட்டம் இப்போது அது இல்லை ஆனால் இருப்பது குழந்தைகள் கிழவன்கள் மட்டுமே எனவே… சீனா ஒருபோதும் அடிபட போகாது காரணம் இளைஞர்கள் தொகை குறைவு ஆனால் இந்தியா இடம் நிறையவே உண்டு

ஜ‌யோ க‌ந்தையா அண்ணா

சீன‌னிட‌ம் இருக்கும் தொழில்நுட்ப‌த்தை வைச்சே இந்தியாவின் க‌தைய‌ முடித்து விடுவாங்க‌ள்...................போருக்கு இந்த‌ நூற்றாண்டில் ஆமியின் என்னிக்கை முக்கிய‌ம் இல்லை................சீனான் அன்மையில் க‌ண்டு பிடித்த‌ குண்டு , அதாவ‌து வெப்ப‌ம் நிறைந்த‌ குண்டு , அந்த‌ குண்டை டெல்லியில் போட்டால் பாதி டெல்லி நெருப்பில் எரிந்து விடும் , போட்ட‌ குண்டு ச‌த்த‌ம் காதில் கேக்காது..................அந்த‌ குண்டு மின்ன‌ல் வேக‌த்தில் எரிந்து கொண்டு போகும் அதை த‌ண்ணீரால் கூட‌ அனைக்க‌ முடியாது.........................

அணு குண்டு பாவிக்க‌ம‌லே இந்தியாவை சீன‌ன் துவைச்சு போடுவான்....................சீனா இப்போது உள்ள‌ சூழ‌லில் போரை விரும்பாது , அப்ப‌டி ஒரு போர் வ‌ருமானால் தைவான் கூட‌....................தைவானை த‌ங்க‌ட‌ நாட்டுட‌ன் இணைக்க‌ சீனா விரும்புது....................

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, வீரப் பையன்26 said:

கூட‌....................தைவானை த‌ங்க‌ட‌ நாட்டுட‌ன் இணைக்க‌ சீனா விரும்புது....................

தெரியும் அதிக காலமாகப் இணைக்கிறார்கள். ஆனால் முடியவில்லை எப்போது இணைப்பார்கள்.?? சீனா இந்தியாவை அழிக்க முடிமானால். ஏன் அழிக்கவில்லை ?? பாகிஸ்தானை பிடித்து ஆயுதம் கொடுத்து பரீசிலிக்க வேண்டிய தேவை தான் என்ன ??

48 minutes ago, goshan_che said:

இல்லை

INFOGRAPHIC - Comparison between...
No image preview

INFOGRAPHIC - Comparison between Chinese and Indian milit...

Both countries engaged in a border face-off, saw bloody clash first time in 45 years recently killing 20 Indian soldiers - Anadolu Ajansı

இது பழைய தகவல்கள் 🤣. இப்ப முடியுமா ???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

தெரியும் அதிக காலமாகப் இணைக்கிறார்கள். ஆனால் முடியவில்லை எப்போது இணைப்பார்கள்.?? சீனா இந்தியாவை அழிக்க முடிமானால். ஏன் அழிக்கவில்லை ?? பாகிஸ்தானை பிடித்து ஆயுதம் கொடுத்து பரீசிலிக்க வேண்டிய தேவை தான் என்ன ??

இது பழைய தகவல்கள் 🤣. இப்ப முடியுமா ???

தரவு 2020 க்குரியது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடம், தமிழ்த்தேசியம், தனித்தமிழ், பிராமணீயம், இந்துத்வா, முற்போக்கு என்று தமிழ்நாட்டில் இருக்கும் எந்தப் பிரிவும் இந்தச் சண்டையில் இந்தியாவிற்கு எதிராக ஒரு கருத்தையும் வைக்கவில்லை. மாறாக இந்தியாவின் மத்திய அரசுக்கு முழு ஆதரவையும், பாகிஸ்தானுக்கு எதிரான பிரச்சாரத்தையும் எல்லோரும் முன்னின்று நடத்தினார்கள். முழு இந்தியாவிலுமே இது தான் நிலைமை.

இந்தியா என்றுமே உடையாது. பெரும்பாலான ஈழத்தமிழர்களுக்கு இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாடே இந்தியா, இந்தியன் என்று ஒரே குரலில் முழங்கியது ஈழத்தமிழர்களுக்கு பெரிய ஏமாற்றம். கடஞ்சா அடிக்கடி சொல்லும் யதார்த்தம் இது தான்...............🤣. அவர்கள் முதலில் எப்போதும் இந்தியர்கள். நாங்கள் ஈழத்தமிழர்கள் அவர்களுக்கு இடையிடையே அவர்களின் உள்ளூர் அரசியலுக்கு, சமூக ஊடக வருமானத்திற்கு தேவைப்படும் சிறு ஆயுதங்கள். தமிழ்நாட்டு தலைவர்களின் நேற்றைய முள்ளிவாய்க்கால் நினைவு நாள் பத்திரிகை அறிவுப்புகள் போல.

உலகெங்கும் இருக்கும் ஒவ்வொரு ஈழத்தமிழ் மக்களின் வாழ்க்கையும் தமிழ்நாட்டுடன், இந்தியாவுடன் எப்படி இணைந்திருக்குது என்று பார்த்தால், எங்களின் உழைப்பில் ஒரு பகுதியை இந்தியாவுக்கு நாங்கள் தொடர்ச்சியாக கொடுத்துக் கொண்டிருப்பது தெரிகின்றது. நாங்கள் கேரளா போனால் என்ன, காசிக்கு போனால் என்ன, அவர்களின் சினிமாக்களை, தொலைக்காட்சி நிகழ்வுகளை விடாமல் பார்த்தால் என்ன, அவர்களின் கிரிக்கெட்டைப் பார்த்தால் என்ன, ஆடை அணிகலன்கள், பண்ட பாத்திரங்கள், உணவுப் பொருட்கள், இந்தியாவில் வீடு வளவுகள் முதலீடுகள்................. இந்தியாவும், தமிழ்நாடும் இல்லையென்றால் எங்களின் பல வீடுகளே வெற்றிடம் ஆகிவிடும் போல............................

ஆபிரிக்க தேசங்கள் கூட ஒரு நாள் முன்னேறிவிடும். ஆனால் பாகிஸ்தான் என்றும் முன்னேறாது. மாறி மாறி இராணுவ ஆட்சிகளும், பல பிரதேசங்களில் இருக்கும் ஆயுத குழுக்களின் ஆட்சிகளும், அடக்குமுறைகளும் அந்த தேசத்தை ஒரு இம்மியளவு கூட முன்னேற விடப்போவதில்லை.

சீனாவும், இந்தியாவும் மக்கள் தொகையிலும் மற்றும் விவசாய உற்பத்திகளும் தவிர்த்து வேறு எந்த வகையிலும் ஒப்பிடப்பட முடியாதவை ஆகிவிட்டன. சீனாவின் சீரான தொழில்நுட்ப வளர்ச்சி சீனாவை அமெரிக்காவிற்கு அருகில் கொண்டு வந்து சேர்ந்திருக்கின்றது. இந்தியா ஒரு முட்டைக்கோது என்ற சந்தேகம் தான் இப்போது வலுத்திருக்கின்றது. ஆனால் பாகிஸ்தான் ஒரு உடைந்த முட்டைக்கோது.

Edited by ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

இந்த இந்தியன் என்ற உணர்வு இப்போதைக்கு அபரிமிதமாக உள்ளது என்பதும், அது சுயவிருப்பின் பேரிலானது என்பது உண்மையே.

நீங்கள் சொல்லும் கட்சிகள் மட்டும் அல்ல, ஓமர் அப்துல்ல்லாவும், அசாடுடீன் ஓவைசியும் கூட இந்திய சார்பு நிலை எடுத்ததும் நாம் கண்டதே. அதுவும் பிஜேபியின் பரம வைரியான அல்லது அப்படி காட்டி கொள்ளும் ஓவைசி இந்திய வர்ணத்தில் சால்வை போட்டதும், ஜெய்ஹிந்த் என மேடையில் முழங்கியதும்…புதிசு கண்ணா, புதிசு…

ஆனால்….

இதைவிட பலமான ஓர்மத்தோடு இணைந்து இருந்த நாடுகளாக தென்பட்டவை, சோவியத் யூனியனும், யூகோஸ்லாவியாவும். அங்கே ஜனநாயக வழியில் தேர்தல் நடக்கவில்லை என்பது ஒரு பாரிய வேறுபாடுதான், ஆனால் நாட்டினை பிளவுபடாமல் காக்க, அவையும் இந்தியாவை போலவே கடும் சட்டங்களை இயற்றி இருந்தன.

அதேபோல்… பிரிவினை குரல்கள் இந்தியாவுக்கு புதிதல்ல. ஓமர் அப்துல்லாவின் பாட்டா சேய்க் அப்துல்லா காஸ்மீரை விட்டு ஊட்டிக்கும் ஏனைய பகுதிகளுக்கும் நாடுகடத்தப்பட்டு, வீட்டுகாவலில் வைக்கப்பட்டார், சர்வஜனவாக்கெடுப்புக்கான இயக்ககம் தடை செய்யப்பட்டது, பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது, சீனப்போர் காலத்தில் அரசியலமைப்பு பிரிவினையை தடை செய்த பின் அண்ணா திராவிடநாடு பிரிவினையை கைவிட்டார். இன்னும் போர்ர்டோலாண்ட், நாகலாந்து என பிரிவினை குரல்கள் கேட்டவண்ணம்தான் உள்ளன.

இதுவரைக்கும் மட்டுப்பட்ட உள்ளக சுயநிர்ணயம், இந்திய உணர்வு, மதச்சார்பின்மை இந்த மூன்றையும் பாவித்து - இந்தியா பிரிவினையை தடுத்து வருகிறது.

ஆனால் ஆர் எஸ் எஸ் வழி நடக்கும் மோடி அரசு இதை போட்டுடைக்கிறது.

மாநில சுயாட்சியில் கைவைத்து…

ஜெய்சிறீராம் என கூவுவதே இந்திய அடையாளம்…

அப்பட்டமாக முஸ்லீம்களை ஒதுக்கும், கஸ்மீர் சிறப்புரிமை நீக்கம், துண்டாடல், முத்தலாக், வக்கப் சட்டம் மாற்றம் இப்படி பலதை செய்கிறது.

மறுவழமாக முஸ்லிம்கள் ஒரு நாட்டில் குறித்த ஒரு அளவை தாண்டியவுடன், தமக்கு சிறப்பு சலுகை கேட்பார்கள். போராடுவார்கள். இலங்கை, லெபனான் என பல உதாரணங்கள் உள்ளன.

பாக்கிஸ்தான் + பங்களேதேஷ் ஐவிட இந்தியாவில் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகம்.

ஆகவே என்றோ ஒருநாள் இந்தியாவில்

இந்து எதிர் முஸ்லிம் என ரத்த ஆறு ஓடுவது நிச்சயம்.

அது எப்போ என்பதுதான் கேள்வி.

இதில் பாலூசிஸ்தானை உடைக்க ஓரளவுக்கு மேல் இந்தியா முயன்றால் - குவாடரில் இருந்து தம் நாட்டுக்க்கு கக்கோரம் ஹைவேயை கட்டிய சீனா அதை சும்மா வேடிக்கை பார்க்காது.

இப்போதே தமிழ் உட்பட தென் இந்தியாவின் மொழி, கலாச்சாரத்தை சீனர் நன்கு கற்று, உறவு வளர்க்கும் நிலைக்கு வந்துள்ளர்ர்கள்.

வெறும் கொக்கு சுடும் துவக்கோடு இருந்த வீரப்பனையே பிடிக்க முடியாமல் பல வருடம் திண்டாடியவர்கள் இந்தியர்.

சீனா மூன்று மத அல்லது, இன வழி பிரிவினைவாதிகளுக்கு மறைமுக ஆயுத ஆதரவு, பின்புல வசதி கொடுத்தாலே இந்தியா பொல, பொல என உதிர்ந்து விடும்.

என்னை பொறுத்தவரை, இந்தியா உடையும், அல்லது உடைய வேண்டும் என நான் சொல்லுவது இப்படி ஒன்றை மனதில் வைத்தே.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

ஆபிரிக்க தேசங்கள் கூட ஒரு நாள் முன்னேறிவிடும். ஆனால் பாகிஸ்தான் என்றும் முன்னேறாது. மாறி மாறி இராணுவ ஆட்சிகளும், பல பிரதேசங்களில் இருக்கும் ஆயுத குழுக்களின் ஆட்சிகளும், அடக்குமுறைகளும் அந்த தேசத்தை ஒரு இம்மியளவு கூட முன்னேற விடப்போவதில்லை.

மாற்று கருத்து இல்லை. ஆனால் சாப்பிட வழி இல்லாவிட்டாலும் அணு குண்டை வைத்திருப்பார்கள். காரணம் இந்தியா.

நான் பல கட்சிகளின் ஆதரவு பாகிஸ்தானிகளிடம் பேசியவகையில் - அனைவரும் ஒன்று படும் புள்ளிகள் இரெண்டு.

ஒன்று இஸ்லாம்.

அடுத்தது - நாட்டின் தவிர்க்கவியாலாத பாதுகாப்பு கவசம் இராணுவம் என்ற நிலைப்பாடு.

இந்தியா ஒரு நாடாக இருக்கும் வரை, பாகிஸ்தான் ஒரு மறைமுக அல்லது நேரடி இராணுவ ஆட்சி நாடாகவே இருக்க முடியும் என்பது பெரும்பான்மை பாகிஸ்தானிகளின் நிலைப்பாடு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

சீனாவும், இந்தியாவும் மக்கள் தொகையிலும் மற்றும் விவசாய உற்பத்திகளும் தவிர்த்து வேறு எந்த வகையிலும் ஒப்பிடப்பட முடியாதவை ஆகிவிட்டன. சீனாவின் சீரான தொழில்நுட்ப வளர்ச்சி சீனாவை அமெரிக்காவிற்கு அருகில் கொண்டு வந்து சேர்ந்திருக்கின்றது. இந்தியா ஒரு முட்டைக்கோது என்ற சந்தேகம் தான் இப்போது வலுத்திருக்கின்றது. ஆனால் பாகிஸ்தான் ஒரு உடைந்த முட்டைக்கோது.

எப்படி இராணுவ வல்லமையில் சீனாவை அமேரிக்காவுடன் ஒப்பிடல் தப்போ, அதே போலத்தான் பாக்கை இந்தியாவிடன் ஒப்பிடுவதும்.

சீனாவின் பலத்த ஆதரவு இல்லாவிட்டால், பாக்கை இந்தியா ஊதி தள்ளிவிடும்.

ஆனால் வடகொரியா போல பாக்கையும் பாதுகாக்க சீனா முடிவெடுத்து விட்டது.

அக்‌ஷய் சின் பை பாக், சீனாவுக்கு பரிசாக கொடுத்ததில் இருந்து இந்த நல்லுறவு இருக்கிறது. ஆனால் பாக் இதுவரை காலமும் அமெரிக்க, சீனா என இரெட்டை குதிரை சவாரி செய்தமையால் சீனா ஒரு அளவுக்கு மேல் பாக்குக்கு ஆதரவாக இறங்கவில்லை.

ஆர் எஸ் எஸ் சின் கொள்கை வழிப்படி, மோடி-அமித்ஷா கஸ்மீரில் எடுத்த நடவடிக்கைகள், பாக்கை அமெரிக்க சுற்றில் இருந்து கணிசமாக விலக்கி, சீனாவிடம் அடைக்கலாமாக்கி விட்டது.

சீனாவுக்கும் உலக நாடுகள் எல்லாவற்றிகும் தண்ணீர் முக்கியம். ஆகவே கஸ்மீரின் களயதார்த்தத்தை இந்தியா தன்னிச்சையாக மாற்ற முனைவதை சீனா தனக்கான ஆபத்து என்றே பார்க்கும்.

கொரிய தீபகற்பத்தில், இந்து சமுத்கிரத்தில் மேற்கின் பரவலை தடுக்க வட கொரியா, இமாலயத்தில் சீன நலனை பேண பாகிஸ்தான்.

இரெண்டுமே சீனாவின் சிற்றரசுகள் (vassal sates) தான்.

பிகு

இந்த vassal state இல் வரும் வாசல் தமிழில் இருந்து போயிருக்க கூடும். கருத்து ஒற்றுமை உள்ளது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இரெண்டுமே சீனாவின் சிற்றரசுகள் (vassal sates) தான்.

இந்தப் பகுதியில் மியான்மார் கூட சீனாவின் இன்னொரு சிற்றரசு தான். மஹிந்தவின் காலத்தில் இலங்கை கூட சீனாவின் கைப்பாவை என்றே தோன்றியது.

இதே போலவே, உலகில் இதே வகையான நாடுகள் சில ரஷ்யாவின் சிற்றரசுகளாக இருக்கின்றன.

இந்த வகை சிற்றரசு நாடுகளில் இருக்கும் பெரிய குறைபாடு அவர்களின் முற்று முழுதான மக்கள் விரோதப் போக்கு. இந்த நாடுகளில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ஆட்சியாளர்கள் துரத்தப்படுவார்கள், கலைக்கப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள் என்பது சாத்தியம் அதிகமான ஒரு விடயம். உள்நாட்டில் ஸ்திரத்தன்மை அற்ற இவர்களால் அந்நிய நாடொன்றுக்கு தேவையான ஆதரவை எப்போதும் வழங்க முடியுமா என்பது சந்தேகமே.

மேலும் இந்த நாடுகள் உள்நாட்டு உற்பத்திகளையும், வேலை வாய்ப்புகளையும், தம் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் நீண்ட காலத்திற்கு உயர்த்தாமல் இருப்பது ஒரு உள்நாட்டுப் புரட்சிக்கான ஆரம்பமாகவே முடியும்.

சீனாவிற்கும், ரஷ்யாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே இருக்கும் பெரிய இடைவெளிகளில் இதுவும் ஒன்று.

வட இந்தியாவில் இந்து - இஸ்லாம் பிணக்குகள் பெரிதாக்கப்பட்டு, பெரும் இழப்புகள் வருவதற்கு சாத்தியங்கள் நன்றாகவே உண்டு. ஆனால் நீண்ட ஒரு பிரதேசத்தில் பெரும்பான்மையினராக இஸ்லாமியர்கள் தொடர்ச்சியாக வாழாததால், பிரிவினை என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றே நினைக்கின்றேன். எங்களின் கிழக்கு மாகாணம் போலவே, சேர்ந்து வாழ்வதே நடைமுறைத் தீர்வாக இருக்கும். காஷ்மீர் விவகாரம் வேறு, இன்று அது அவர்களின் தொடர்நிலம்.

தென்னிந்திய அரசியல்வாதிகள் வெறும் மேடைப் பேச்சாளர்கள். மேடையில் எதுவென்றாலும் பேசுவார்கள். இதில் அந்த எட்டு வீதத்தினரும் அடக்கம். இவர்களில் கூட எவரும் தனியே பிரிந்து போவதாகச் சொல்லமாட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் கொஞ்சமாக, வெக்கத்தை கக்கத்துள் வைத்துக்கொண்டு, சீனா விமானங்களை, கருவிகளை மட்டும் அல்ல, ஒட்டு மொத்த தாக்குதல் சூழலியல்லையும் (eco system) பாக்குக்கு வழங்கியதை ஏற்று கொள்ளும் இந்திய பாதுகாப்பு அமைச்சால் வழி நடத்தப்படும் அமைப்பினர்.

இதில் இவர் இன்னும் ஒன்றையும் ஒத்து கொள்கிறார் இப்போ பாகிஸ்தான்-சீனா எல்லை ஒரே எல்லைதான், 7000 கிமி யை இந்தியா பாதுகாக்க வேண்டி உள்ளது என்பதை.

இதைதான் 2019 இல் ராகுல் காந்தி இந்திய பாராளுமன்றிலேயே எச்சரித்தார்.

இந்தியாவின் பல தசாப்த கஸ்மீர் கொள்கையை மாற்றி, ஆர் எஸ் எஸ் சின் கஸ்மீர் கொள்கையை இந்தியா கொள்கையாக பிஜேபி அரசு வரித்து கொண்டதன் பின் விழைவே இந்த 7000 கிமி ஒருங்கிணைந்த பாக்-சீனா போர்டர்.

6 minutes ago, ரசோதரன் said:

இந்த வகை சிற்றரசு நாடுகளில் இருக்கும் பெரிய குறைபாடு அவர்களின் முற்று முழுதான மக்கள் விரோதப் போக்கு. இந்த நாடுகளில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ஆட்சியாளர்கள் துரத்தப்படுவார்கள், கலைக்கப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள் என்பது சாத்தியம் அதிகமான ஒரு விடயம். உள்நாட்டில் ஸ்திரத்தன்மை அற்ற இவர்களால் அந்நிய நாடொன்றுக்கு தேவையான ஆதரவை எப்போதும் வழங்க முடியுமா என்பது சந்தேகமே.

இப்படி விழ வட கொரியாவுக்கு வாய்புண்டு - ஆனால் அவர்களில் கைவைக்கவே அமேரிக்காவுக்கே பயம்.

ஆனால் பாகிஸ்தானில் அரசுகள் விழும், எழும் ஆனால் நிழல் அரசு (இராணுவம்) அப்படியேதான் இருக்கும்.

இந்தியா, இந்தியாவாக இருக்கும் வரை பாக்கிஸ்தானில் என்ன பஞ்சம் வந்தாலும், ஆமியை மக்கள் எதிர்க்கமாட்டார்கள் (புலிகள் இருக்கும் வரை அறகளவும் வந்திராது என்பதை போல).

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

திராவிடம், தமிழ்த்தேசியம், தனித்தமிழ், பிராமணீயம், இந்துத்வா, முற்போக்கு என்று தமிழ்நாட்டில் இருக்கும் எந்தப் பிரிவும் இந்தச் சண்டையில் இந்தியாவிற்கு எதிராக ஒரு கருத்தையும் வைக்கவில்லை. மாறாக இந்தியாவின் மத்திய அரசுக்கு முழு ஆதரவையும், பாகிஸ்தானுக்கு எதிரான பிரச்சாரத்தையும் எல்லோரும் முன்னின்று நடத்தினார்கள். முழு இந்தியாவிலுமே இது தான் நிலைமை.

இந்தியா என்றுமே உடையாது. பெரும்பாலான ஈழத்தமிழர்களுக்கு இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாடே இந்தியா, இந்தியன் என்று ஒரே குரலில் முழங்கியது ஈழத்தமிழர்களுக்கு பெரிய ஏமாற்றம். கடஞ்சா அடிக்கடி சொல்லும் யதார்த்தம் இது தான்...............🤣. அவர்கள் முதலில் எப்போதும் இந்தியர்கள். நாங்கள் ஈழத்தமிழர்கள் அவர்களுக்கு இடையிடையே அவர்களின் உள்ளூர் அரசியலுக்கு, சமூக ஊடக வருமானத்திற்கு தேவைப்படும் சிறு ஆயுதங்கள். தமிழ்நாட்டு தலைவர்களின் நேற்றைய முள்ளிவாய்க்கால் நினைவு நாள் பத்திரிகை அறிவுப்புகள் போல.

உலகெங்கும் இருக்கும் ஒவ்வொரு ஈழத்தமிழ் மக்களின் வாழ்க்கையும் தமிழ்நாட்டுடன், இந்தியாவுடன் எப்படி இணைந்திருக்குது என்று பார்த்தால், எங்களின் உழைப்பில் ஒரு பகுதியை இந்தியாவுக்கு நாங்கள் தொடர்ச்சியாக கொடுத்துக் கொண்டிருப்பது தெரிகின்றது. நாங்கள் கேரளா போனால் என்ன, காசிக்கு போனால் என்ன, அவர்களின் சினிமாக்களை, தொலைக்காட்சி நிகழ்வுகளை விடாமல் பார்த்தால் என்ன, அவர்களின் கிரிக்கெட்டைப் பார்த்தால் என்ன, ஆடை அணிகலன்கள், பண்ட பாத்திரங்கள், உணவுப் பொருட்கள், இந்தியாவில் வீடு வளவுகள் முதலீடுகள்................. இந்தியாவும், தமிழ்நாடும் இல்லையென்றால் எங்களின் பல வீடுகளே வெற்றிடம் ஆகிவிடும் போல............................

ஆபிரிக்க தேசங்கள் கூட ஒரு நாள் முன்னேறிவிடும். ஆனால் பாகிஸ்தான் என்றும் முன்னேறாது. மாறி மாறி இராணுவ ஆட்சிகளும், பல பிரதேசங்களில் இருக்கும் ஆயுத குழுக்களின் ஆட்சிகளும், அடக்குமுறைகளும் அந்த தேசத்தை ஒரு இம்மியளவு கூட முன்னேற விடப்போவதில்லை.

சீனாவும், இந்தியாவும் மக்கள் தொகையிலும் மற்றும் விவசாய உற்பத்திகளும் தவிர்த்து வேறு எந்த வகையிலும் ஒப்பிடப்பட முடியாதவை ஆகிவிட்டன. சீனாவின் சீரான தொழில்நுட்ப வளர்ச்சி சீனாவை அமெரிக்காவிற்கு அருகில் கொண்டு வந்து சேர்ந்திருக்கின்றது. இந்தியா ஒரு முட்டைக்கோது என்ற சந்தேகம் தான் இப்போது வலுத்திருக்கின்றது. ஆனால் பாகிஸ்தான் ஒரு உடைந்த முட்டைக்கோது.

வாய‌ல் வ‌டை சுடும் மோடியிட‌ம் இன்னும் 10வ‌ருட‌ம் நாட்டை கொடுத்து பாருங்க‌ள் பிரிவினை எப்ப‌டி உருவாகுது என்ப‌த‌ உங்க‌ள் க‌ண்ணால் பாப்பிங்க‌ள்.........................

ஹிந்தி பேசாத‌ ப‌ல‌ ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் ம‌க‌த்மா காந்தியை கூட‌ க‌ண்ட‌ மேனிக்கு திட்டும் இந்திய‌ர்க‌ளும் இந்தியாவுக்குள் தான் வாழுகின‌ம்..............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரசோதரன் said:

நீண்ட ஒரு பிரதேசத்தில் பெரும்பான்மையினராக இஸ்லாமியர்கள் தொடர்ச்சியாக வாழாததால், பிரிவினை என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றே நினைக்கின்றேன்

அண்மையில் ஒரு பங்களேதேஷ் அமைப்பு அகண்ட பங்களதேஷ் என ஒரு மேப் வெளியிட்டுள்ளது. பல பகுதிகள் பங்களதேசோடு இணைப்பின் அந்த பிராந்தியமே முஸ்லிம் பெரும்பான்மையாக மாறும்.

அது மட்டும் அல்ல, சிலிகூரி காரிடோர் என கேள்வி பட்டிருப்பீர்கள். India’s chicken neck என்பார்கள். ஒரு சின்ன நிலப்பாதைதான் இந்தியாவை அதன் வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கிறது. இதை சீனாவோ, பங்களாதேசோ பிடித்து கொண்டால் - இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் அத்தனையும் பறிபோய்விடும். அருணாச்சலை சீனா எடுத்து கொண்டு, ஏனையவற்றில் “சுதந்திர குடியரசு சிற்றரசுகளை” தாபிக்க வேண்டியதுதான்.

தென் ஒசேசியாவிலும், அபகாசியாவிலும் ரஸ்யா செய்யவில்லையா? சீனா இன்னும் இறங்கவில்லை. இறங்கினால் செய்யலாம்.

அதே போலத்தான் காலிஸ்தானும். இப்போதே அது நீறு பூத்த நெருப்புத்தான். கனடாவில் வைத்து கொல்லும் அளவுக்கு இந்தியா ரிஸ்க் எடுக்கிறது. அவ்வளவு பெரிய ஆபத்து இவர்கள். பாகிஸ்தானின் பஞ்சாபில் தளம் அமைத்து, ஆதரவு கொடுத்தால்…

  1. வட கிழக்கு இந்தியாவை துண்டாடி, சுந்தந்திரம் கொடுத்தல். பின்புலமாக பர்மா, சீனாவை பாவித்தல்.

  2. உத்தர் பிரதேசம், மே வங்கம், பீகாரில் பகுதிகளை இணைத்து இன்னொரு முஸ்லிம் நாடு கோரல். பின்புலமாக பங்காலதேசை பாவித்தல்.

  3. காலிஸ்தான் - பாகிஸ்தானி பஞ்சாப் பின்புலம்.

    சீனா இப்படி இறங்கினால், இந்திய பொருளாதாரம் படுக்கும். இந்தியா திணறும்.

23 minutes ago, ரசோதரன் said:

தென்னிந்திய அரசியல்வாதிகள் வெறும் மேடைப் பேச்சாளர்கள். மேடையில் எதுவென்றாலும் பேசுவார்கள். இதில் அந்த எட்டு வீதத்தினரும் அடக்கம். இவர்களில் கூட எவரும் தனியே பிரிந்து போவதாகச் சொல்லமாட்டார்கள்.

தென்னிந்தியா போராடாது. ஆனால் சோவியத் உடைந்த போது மத்திய ஆசிய நாடுகள் தாமாக கிளம்பி போனதை போல, வட இந்தியா உடையும் போது, தெற்கு தாமாக விலகி போகும் ஒரு நிலை வரலாம்.

அனைத்துமே எனது வெறும் wargaming தான். அல்லது ஆசை, பேராசை, நப்பாசை🤣.

#கனவு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

திராவிடம், தமிழ்த்தேசியம், தனித்தமிழ், பிராமணீயம், இந்துத்வா, முற்போக்கு என்று தமிழ்நாட்டில் இருக்கும் எந்தப் பிரிவும் இந்தச் சண்டையில் இந்தியாவிற்கு எதிராக ஒரு கருத்தையும் வைக்கவில்லை. மாறாக இந்தியாவின் மத்திய அரசுக்கு முழு ஆதரவையும், பாகிஸ்தானுக்கு எதிரான பிரச்சாரத்தையும் எல்லோரும் முன்னின்று நடத்தினார்கள். முழு இந்தியாவிலுமே இது தான் நிலைமை.

இந்தியா என்றுமே உடையாது. பெரும்பாலான ஈழத்தமிழர்களுக்கு இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாடே இந்தியா, இந்தியன் என்று ஒரே குரலில் முழங்கியது ஈழத்தமிழர்களுக்கு பெரிய ஏமாற்றம். கடஞ்சா அடிக்கடி சொல்லும் யதார்த்தம் இது தான்...............🤣. அவர்கள் முதலில் எப்போதும் இந்தியர்கள். நாங்கள் ஈழத்தமிழர்கள் அவர்களுக்கு இடையிடையே அவர்களின் உள்ளூர் அரசியலுக்கு, சமூக ஊடக வருமானத்திற்கு தேவைப்படும் சிறு ஆயுதங்கள். தமிழ்நாட்டு தலைவர்களின் நேற்றைய முள்ளிவாய்க்கால் நினைவு நாள் பத்திரிகை அறிவுப்புகள் போல.

உலகெங்கும் இருக்கும் ஒவ்வொரு ஈழத்தமிழ் மக்களின் வாழ்க்கையும் தமிழ்நாட்டுடன், இந்தியாவுடன் எப்படி இணைந்திருக்குது என்று பார்த்தால், எங்களின் உழைப்பில் ஒரு பகுதியை இந்தியாவுக்கு நாங்கள் தொடர்ச்சியாக கொடுத்துக் கொண்டிருப்பது தெரிகின்றது. நாங்கள் கேரளா போனால் என்ன, காசிக்கு போனால் என்ன, அவர்களின் சினிமாக்களை, தொலைக்காட்சி நிகழ்வுகளை விடாமல் பார்த்தால் என்ன, அவர்களின் கிரிக்கெட்டைப் பார்த்தால் என்ன, ஆடை அணிகலன்கள், பண்ட பாத்திரங்கள், உணவுப் பொருட்கள், இந்தியாவில் வீடு வளவுகள் முதலீடுகள்................. இந்தியாவும், தமிழ்நாடும் இல்லையென்றால் எங்களின் பல வீடுகளே வெற்றிடம் ஆகிவிடும் போல............................

ஆபிரிக்க தேசங்கள் கூட ஒரு நாள் முன்னேறிவிடும். ஆனால் பாகிஸ்தான் என்றும் முன்னேறாது. மாறி மாறி இராணுவ ஆட்சிகளும், பல பிரதேசங்களில் இருக்கும் ஆயுத குழுக்களின் ஆட்சிகளும், அடக்குமுறைகளும் அந்த தேசத்தை ஒரு இம்மியளவு கூட முன்னேற விடப்போவதில்லை.

சீனாவும், இந்தியாவும் மக்கள் தொகையிலும் மற்றும் விவசாய உற்பத்திகளும் தவிர்த்து வேறு எந்த வகையிலும் ஒப்பிடப்பட முடியாதவை ஆகிவிட்டன. சீனாவின் சீரான தொழில்நுட்ப வளர்ச்சி சீனாவை அமெரிக்காவிற்கு அருகில் கொண்டு வந்து சேர்ந்திருக்கின்றது. இந்தியா ஒரு முட்டைக்கோது என்ற சந்தேகம் தான் இப்போது வலுத்திருக்கின்றது. ஆனால் பாகிஸ்தான் ஒரு உடைந்த முட்டைக்கோது.

உண்மைகளை ஒவ்வொன்றாக சிறப்பாக உங்கள் கருத்தில் விளக்கம் அளித்துள்ளீர்கள்

[திராவிடம், தமிழ்த்தேசியம், தனித்தமிழ், பிராமணீயம், இந்துத்வா, முற்போக்கு என்று தமிழ்நாட்டில் இருக்கும் எந்தப் பிரிவும் இந்தச் சண்டையில் இந்தியாவிற்கு எதிராக ஒரு கருத்தையும் வைக்கவில்லை. மாறாக இந்தியாவின் மத்திய அரசுக்கு முழு ஆதரவையும், பாகிஸ்தானுக்கு எதிரான பிரச்சாரத்தையும் எல்லோரும் முன்னின்று நடத்தினார்கள். முழு இந்தியாவிலுமே இது தான் நிலைமை. இந்தியா என்றுமே உடையாது. பெரும்பாலான ஈழத்தமிழர்களுக்கு இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாடே இந்தியா, இந்தியன் என்று ஒரே குரலில் முழங்கியது ஈழத்தமிழர்களுக்கு பெரிய ஏமாற்றம். ]

இந்தியா என்றுமே உடையாது என்ற உண்மையை ஏற்று கொள்ள முடியாமல் இந்தியா உடையும், இந்தியா சிதறும் என்று வெளிநாட்டு ஈழத்தமிழர்கள் கனவு கண்டுகொண்டிருப்பதால் 200 வருடங்கள் சென்றாலும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எந்தவித நன்மையும் நடைபெற போவது இல்லை.

💯 உண்மை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இந்தியா என்றுமே உடையாது என்ற உண்மையை ஏற்று கொள்ள முடியாமல் இந்தியா உடையும், இந்தியா சிதறும் என்று வெளிநாட்டு ஈழத்தமிழர்கள் கனவு கண்டுகொண்டிருப்பதால் 200 வருடங்கள் சென்றாலும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எந்தவித நன்மையும் நடைபெற போவது இல்லை.

இப்படி ஒரு உடைவை தடுக்க…

சீனா, பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவு, இலங்கை என சூழவும் எதிரிகளையும், பூட்டான், நேபாள் போல பட்டும் படாமலும் இருக்கும் நண்பர்களையும் கொண்டு உள்ள இந்தியா - தமது பல ஆயிரம் ஆண்டு கால வரலாற்று கூட்டாளிகளான உலகளாவிய, குறிப்பாக ஈழ தமிழர்களோடு உறவை நன்நம்பிக்கை அடிப்படையில் புதுபிக்க வேண்டும்.

இந்தியாவுக்கு அதன் அருகே vassal states அவசியமாகிறது.

இதை இந்தியாவை விரைந்து உணரவைத்தால் அது இந்தியாவுக்கும், தமிழருக்கும் நன்மை.

இதுதான் ஈழத்தமிழருக்கு விழைய கூடிய நன்மை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

திராவிடம், தமிழ்த்தேசியம், தனித்தமிழ், பிராமணீயம், இந்துத்வா, முற்போக்கு என்று தமிழ்நாட்டில் இருக்கும் எந்தப் பிரிவும் இந்தச் சண்டையில் இந்தியாவிற்கு எதிராக ஒரு கருத்தையும் வைக்கவில்லை. மாறாக இந்தியாவின் மத்திய அரசுக்கு முழு ஆதரவையும், பாகிஸ்தானுக்கு எதிரான பிரச்சாரத்தையும் எல்லோரும் முன்னின்று நடத்தினார்கள். முழு இந்தியாவிலுமே இது தான் நிலைமை.

இந்தியா என்றுமே உடையாது. பெரும்பாலான ஈழத்தமிழர்களுக்கு இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாடே இந்தியா, இந்தியன் என்று ஒரே குரலில் முழங்கியது ஈழத்தமிழர்களுக்கு பெரிய ஏமாற்றம். கடஞ்சா அடிக்கடி சொல்லும் யதார்த்தம் இது தான்...............🤣. அவர்கள் முதலில் எப்போதும் இந்தியர்கள். நாங்கள் ஈழத்தமிழர்கள் அவர்களுக்கு இடையிடையே அவர்களின் உள்ளூர் அரசியலுக்கு, சமூக ஊடக வருமானத்திற்கு தேவைப்படும் சிறு ஆயுதங்கள். தமிழ்நாட்டு தலைவர்களின் நேற்றைய முள்ளிவாய்க்கால் நினைவு நாள் பத்திரிகை அறிவுப்புகள் போல.

உலகெங்கும் இருக்கும் ஒவ்வொரு ஈழத்தமிழ் மக்களின் வாழ்க்கையும் தமிழ்நாட்டுடன், இந்தியாவுடன் எப்படி இணைந்திருக்குது என்று பார்த்தால், எங்களின் உழைப்பில் ஒரு பகுதியை இந்தியாவுக்கு நாங்கள் தொடர்ச்சியாக கொடுத்துக் கொண்டிருப்பது தெரிகின்றது. நாங்கள் கேரளா போனால் என்ன, காசிக்கு போனால் என்ன, அவர்களின் சினிமாக்களை, தொலைக்காட்சி நிகழ்வுகளை விடாமல் பார்த்தால் என்ன, அவர்களின் கிரிக்கெட்டைப் பார்த்தால் என்ன, ஆடை அணிகலன்கள், பண்ட பாத்திரங்கள், உணவுப் பொருட்கள், இந்தியாவில் வீடு வளவுகள் முதலீடுகள்................. இந்தியாவும், தமிழ்நாடும் இல்லையென்றால் எங்களின் பல வீடுகளே வெற்றிடம் ஆகிவிடும் போல............................

ஆபிரிக்க தேசங்கள் கூட ஒரு நாள் முன்னேறிவிடும். ஆனால் பாகிஸ்தான் என்றும் முன்னேறாது. மாறி மாறி இராணுவ ஆட்சிகளும், பல பிரதேசங்களில் இருக்கும் ஆயுத குழுக்களின் ஆட்சிகளும், அடக்குமுறைகளும் அந்த தேசத்தை ஒரு இம்மியளவு கூட முன்னேற விடப்போவதில்லை.

சீனாவும், இந்தியாவும் மக்கள் தொகையிலும் மற்றும் விவசாய உற்பத்திகளும் தவிர்த்து வேறு எந்த வகையிலும் ஒப்பிடப்பட முடியாதவை ஆகிவிட்டன. சீனாவின் சீரான தொழில்நுட்ப வளர்ச்சி சீனாவை அமெரிக்காவிற்கு அருகில் கொண்டு வந்து சேர்ந்திருக்கின்றது. இந்தியா ஒரு முட்டைக்கோது என்ற சந்தேகம் தான் இப்போது வலுத்திருக்கின்றது. ஆனால் பாகிஸ்தான் ஒரு உடைந்த முட்டைக்கோது.

2002ம் ஆண்டு குஜ‌ராத்தில் மோடி ந‌ட‌த்தின‌ ம‌த‌வெறி தாக்குத‌ல‌ இந்தியாவில் வாழும் முஸ்லிம்க‌ள் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்.....................

நாங்க‌ள் எதை வைச்சு த‌மிழ‌ர்க‌ள் என்று சொல்லுகிறோம் நாம் பேசும் மொழியை வைத்து தான் நாங்க‌ள் த‌மிழ‌ர்க‌ள்.......................இங்லாந் நாட்ட‌வ‌ன் இந்தியாவை ஆட்சி செய்த‌ போது அந்த‌ அந்த‌ மானில‌ மொழிக‌ள் அழியாம‌ இருந்த‌து.................திராவிட‌த்தின் மேல் 2009க்கு பிற‌க்கு என‌க்கு அதிக‌ வெறுப்பு இருந்த‌து ஆனால் அன்று அவ‌ர்க‌ள் ஹிந்தி தினிப்புக்கு எதிராக‌ போராடாம‌ல் விட்டு இருந்தால் , இந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் த‌மிழ் நாடும் இன்னொரு ஒடிசா மானில‌ம் போல் வ‌ந்து இருக்கும்...............ம‌த்தியில் ஆள்ப‌வ‌ர்க‌ள் த‌மிழை அழித்து ஹிந்திய‌ முத‌ல் மொழியாக‌ கொண்டு வ‌ந்து இருப்பாங்க‌ள் த‌மிழ் நாட்டில்.....................

ஹிந்தி தினிப்பும் ஒரு நாள் இந்தியாவை துண்டாடும்.................நேற்று முள்ளிவாய்க்கால் நினைவு கூற‌ நிகழ்வில் மேற்கு வங்காள எமெல்லே க‌ல‌ந்து கொண்டு பேசினார்.................அவ‌ரின் மொழி ப‌ற்று உண்மையில் பாராட்ட‌ த‌க்க‌து......................ஹிந்தி மொழிய‌ க‌ண்ட‌ மோனிக்கு கிழித்தார்....................

பெத்த‌ தாய் இருக்கும் போது இன்னொருத்திய‌ அம்மா என்று சொன்னால் பெத்த‌ தாய்க்கு எப்ப‌டி வ‌லிக்கும் அதே போல் தான் மொழியும்.......................ஹிந்தி ஒன்றும் உல‌க‌ம் போற்றும் மொழி கிடையாது...............................என் மொழி தமிழ் இருக்க‌ நீ ஹிந்தில‌ தான் க‌தைக்னும் என்று சொன்னால் அதுவும் ஒரு அட‌க்குமுறை தான் இதை தான் இந்தியாவில் ப‌ல‌ மானில‌ங்க‌ளில் பீஜேப்பி அர‌சு செய்யுது.........................

ந‌ல்ல‌ வேலை உந்த‌ நாறிப் போன‌ இந்திய‌ ஒன்றிய‌த்துக்குள் நாம‌ மாட்டு ப‌ட‌ வில்லை........................ஈழ‌ த‌மிழ‌ன் என்று என்னை அடையால‌ப் ப‌டுத்துவ‌தில் என‌க்கு பெருமை.....................இந்தியாவுக்கான‌ ஆப‌த்து ப‌ல‌ கோன‌ங்க‌ளில் வ‌ரும் அப்போது டெல்லியில் நில‌ ந‌டுக்க‌ம் தான் ஏற்ப‌டும்😁😛......................

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வீரப் பையன்26 said:

ஹிந்தி பேசாத‌ ப‌ல‌ ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் ம‌க‌த்மா காந்தியை கூட‌ க‌ண்ட‌ மேனிக்கு திட்டும் இந்திய‌ர்க‌ளும் இந்தியாவுக்குள் தான் வாழுகின‌ம்..............................

இந்தியாவில் மஹாத்மா காந்திக்கு அவர் வாழ்ந்த காலத்திலேயே எதிர்ப்புகள் எங்கும் இருந்தன. அவர் சுட்டுத்தானே கொல்லப்பட்டார். அம்பேத்கர் வாழும் காலத்திலேயே காந்திக்கு எதிர்ப்பக்கத்தில் தான் அவர் இருந்தார். இன்றும் அம்பேத்கர் வழி நிற்பவர்கள் காந்தியை கண்டிக்கும் இடங்கள் பல உண்டு. சில இந்தியச் சமூகங்களே காந்திக்கு எதிரான நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.

ஆனால் எந்த விதத்திலும் உறுதியானதும், சக மனிதர்களை நேசிப்பதுமான கொள்கைகளும் இல்லாதவர்கள், பத்தோடு பதினொன்றாக காந்தியையும் கண்டிப்பதை பொருட்படுத்தத் தேவையில்லை. உதாரணமாக, அம்பேத்கர் வழி நின்று காந்தியை குற்றம் சொன்னால் காது கொடுத்து கேட்கலாம்.

மேலும், இது ஒன்றும் பிரிந்து போவதற்கான காரணமோ அல்லது ஒரு ஊக்குவினையோ அல்ல. தமிழ்நாட்டில் பெரியார் வழி நிற்பவர்களே ஆளுகின்றனர். பெரியாரை எதிர்ப்போரும் அரசியல்வாதிகளாக உள்ளோர். ஆனால் இந்தப் பிளவின் அர்த்தம் தமிழ்நாட்டை பிளவுபடுத்தும் என்பது இல்லைத்தானே.

தீவிரப் போக்குடைய அரசுகள் சமூக முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என்பது மிகத் தெளிவானது. இந்தியாவின் மோடியும், அமெரிக்காவின் ட்ரம்பும், இன்னும் பல நாடுகளில் பல தலைவர்களும் இப்படி இருக்கின்றார்கள். 'அமெரிக்கா அதன் இனப் பாகுபாட்டின் மூலத்தை மீண்டும் தேடுகின்றதா............................' என்பது போல ஒரு கட்டுரையை கடந்த வாரம் வாசித்திருந்தேன். அமெரிக்கா அதன் இன்றைய அரசால் உடைந்து துண்டாகப் போவதில்லை. ஆனால் முரண்பாடுகள் கூர்மையாகும். இதுவே தான் இன்றைய இந்தியாவிற்கும்.

மனிதர்கள் தான் பின்னோக்கி போவார்கள். காலம் என்றும் முன்னோக்கியே செல்லும். இடையிடையே பின்னோக்கிப் போகும் மனிதர்கள் பின்னர் பாய்ந்து கொண்டு முன்னோக்கி ஓடி வருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உண்மைகளை ஒவ்வொன்றாக சிறப்பாக உங்கள் கருத்தில் விளக்கம் அளித்துள்ளீர்கள்

[திராவிடம், தமிழ்த்தேசியம், தனித்தமிழ், பிராமணீயம், இந்துத்வா, முற்போக்கு என்று தமிழ்நாட்டில் இருக்கும் எந்தப் பிரிவும் இந்தச் சண்டையில் இந்தியாவிற்கு எதிராக ஒரு கருத்தையும் வைக்கவில்லை. மாறாக இந்தியாவின் மத்திய அரசுக்கு முழு ஆதரவையும், பாகிஸ்தானுக்கு எதிரான பிரச்சாரத்தையும் எல்லோரும் முன்னின்று நடத்தினார்கள். முழு இந்தியாவிலுமே இது தான் நிலைமை. இந்தியா என்றுமே உடையாது. பெரும்பாலான ஈழத்தமிழர்களுக்கு இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாடே இந்தியா, இந்தியன் என்று ஒரே குரலில் முழங்கியது ஈழத்தமிழர்களுக்கு பெரிய ஏமாற்றம். ]

இந்தியா என்றுமே உடையாது என்ற உண்மையை ஏற்று கொள்ள முடியாமல் இந்தியா உடையும், இந்தியா சிதறும் என்று வெளிநாட்டு ஈழத்தமிழர்கள் கனவு கண்டுகொண்டிருப்பதால் 200 வருடங்கள் சென்றாலும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எந்தவித நன்மையும் நடைபெற போவது இல்லை.

💯 உண்மை

நீங்க‌ள் ஈழ‌ ஆதார‌வாள‌ரா அல்ல‌து இல‌ங்கை ஆத‌ர‌வு அல்ல‌து ஹிந்தியாவுக்கு உங்க‌ளின் ஆத‌ர‌வு

இதில் நீங்க‌ள் எது ?

இந்தியா உள் நாட்டில் ப‌ல‌ நூறு பிர‌ச்ச‌னைக‌ள்..................இந்தியா உடையாதென்பதுக்கு உங்க‌ளிட‌ம் இருக்கும் வெளிப்ப‌டை ஆதார‌த்தை சொல்ல‌ முடியுமா........................

35 ஆண்டுக்குள் பெரிய‌ நில‌ப்பை வைச்சு இருந்த‌ பெரிய‌ நாடும் , ஜ‌ரோப்பாவில் 8மானில‌ங்க‌ளாய் இருந்த‌ நாடுக‌ள் உடைந்து போன‌ வ‌ர‌லாறுக‌ளை தேடிப் பாருங்கோ...........................

ஹிந்தி தினிப்பு ம‌ற்றும் ப‌ல‌ உண்மைக‌ளை இந்த‌ திரிக்கு மேல‌ எழுதி இருக்கிறேன் விரும்பினா வாசியுங்கோ👍...........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரசோதரன் said:

அமெரிக்கா அதன் இன்றைய அரசால் உடைந்து துண்டாகப் போவதில்லை. ஆனால் முரண்பாடுகள் கூர்மையாகும். இதுவே தான் இன்றைய இந்தியாவிற்கும்.

தவறான ஒப்பீடு என நினைக்கிறேன்.

டிரம்பின் populism மோடியின் மதவாதம் போன்றதல்ல.

டிரம்பிற்கு கலிபோர்னியாவில் பல லத்தினோ பகுதிகளில் அமோக வெற்றி கிடைத்தது. ஜோர்ஜ் புஷ்சின் முதலாவது வெற்றி ஊசலாடிய பாம் பீச் கவுண்டியில் கூட, டிரம்ப் கணிசமான வெற்றியை பெற்றார் என நினைக்கிறேன்.

அதேபோல் கறுப்பர் வாழும் பெரு நகரங்களில் கூட இந்த முறை அவர் மோசமான தோல்வியை காணவில்லை.

ஆனால் இந்திய முஸ்லிம்கள் ஏதோ ஒரு பிராந்திய கட்சியின் பின்னால்தான். மிக அரிதாகவே பிஜேபியோடு.

டிரம்ப் மோடி இருவருமே populist என்றாலும் டிரம்பின் பின்னால் ஒரு நிறுவனமயப்பட்ட சித்தாந்தம் இல்லை. பலர் சொல்வது போல் அவர் அரசியல் transactional - உனக்கு என்ன நன்மை, எனக்கு என்ன நன்மை என்பதே அங்கே முக்கியம் பெறுகிறது.

ஆனால் மோடி அரசியல் அப்படி அல்ல, வருணாசிரமத்தின் வழி வந்த, பல ஆயிரம் ஆண்டுகால சித்தாந்தம் அதன் பின்னே இருக்கிறது.

டிரம்ப் ஒரு passing cloud. ஆர் எஸ் எஸ் அப்படி அல்ல.

அடுத்து அமெரிக்கவை பிரிக்கும் எண்ணம் வரும் அளவுக்கு கூட எதிரிகள் அமெரிக்காவுக்கு இல்லை.

ஆனால் உடையும் நிலையை உருவாக்க வல்ல காரணிகள் பல உள்ளும், புறமுகாக இந்தியாவுக்கு உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

ஆனால் மோடி அரசியல் அப்படி அல்ல, வருணாசிரமத்தின் வழி வந்த, பல ஆயிரம் ஆண்டுகால சித்தாந்தம் அதன் பின்னே இருக்கிறது.

டிரம்ப் ஒரு passing cloud. ஆர் எஸ் எஸ் அப்படி அல்ல.

அடுத்து அமெரிக்கவை பிரிக்கும் எண்ணம் வரும் அளவுக்கு கூட எதிரிகள் அமெரிக்காவுக்கு இல்லை.

ஆனால் உடையும் நிலையை உருவாக்க வல்ல காரணிகள் பல உள்ளும், புறமுகாக இந்தியாவுக்கு உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

அனைத்துமே எனது வெறும் wargaming தான். அல்லது ஆசை, பேராசை, நப்பாசை🤣.

உண்மை தான் ஆசைப்படலாம் உவ்வளவு பெரிய ஆசை கூடாது ......ஆசை நிறைவேற. உழைக்கவும் வேண்டும் இந்தியாவுக்கு அயல்நாடுகளால். ஆபத்து உண்டு என்ற நிலை இருக்கும் வரை இந்தியா உடையாது மாறாக மிகவும் பலமடையும். இந்த எனது விதிப்படி

பாகிஸ்தானும். சீனாவும் இந்தியாவை பலமடையச். செய்கிறார்கள் இந்தியா மாநிலங்களுக்கு இடையிலான இடைவெளி காணமால் போய் விடும் இந்த சீனாவை அந்த காலத்தில் ஜேர்மனி கூட தொடர்ச்சியாக சுரண்டியுள்ளது மாசேதுங். அல்லது வேறு ஒருவர் தான் சீனாவை பலமாக்கினார். கம்யூனிசம் இல்லை என்றால் சீனாவும் பல துண்டுகளாகிவிடும். எவரும் உடைக்க தேவையில்லை சீனா முழுமையாக ஏற்றுமதியில். தங்கியுள்ள நாடு ஒரு போர் வந்தால் தொடர்ந்து நடந்நடந்தால் சீனா தக்குப்பிடிக்குமா??? தெரியவில்லை ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியும். போர் அற்ற. சூழலுக்குத். தான் பொருந்தும் போர் வந்தால்,..நடந்தால் வளர்ச்சி படுத்துவிடும். ஆமா அல்லது இல்லையா???.

குறிப்பு,...நான் ஆசைப்படவில்லை 🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன‌ ஒரு நாடு க‌ட்டார்..................அந்த‌ நாட்டிட‌ம் கூட‌ இந்தியா இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் ம‌ண்டியிட்ட‌து....................உள‌வுபார்க்க‌ வ‌ந்த‌தாக‌ க‌ட்டார் அர‌சு 10பேரை கைது செய்து சிறையில் அடைத்த‌து.......................

இந்தியா காற்றுப் போன‌ ப‌லூன் அதை பெரிய‌ விம்ப‌மாய் காட்ட‌ முய‌ல்வ‌து வேடிக்கையாக‌ இருக்கு😁😛.............................

இந்தியா எச்சை ஊட‌க‌ங்க‌ள் இருக்கும் வ‌ரை நாடும் முன்னேறாது நாட்டு ம‌க்க‌ளுக்கும் உண்மை த‌க‌வ‌ல் போய் சேராது.........................

நாட்டையும் அபிவிருத்தி செய்ய‌ வில்லை , ம‌க்க‌ளின் வாழ்க்கையிலும் பெரிய‌ முன்னேற்ற‌ம் இல்லை.....................ம‌ல‌த்தை பொது வெளியில் க‌ழிக்கும் ம‌னித‌ர்க‌ள் வாழும் நாடு எது என்றால் அது இந்தியா தான்..............வ‌றுமைப் ப‌ட்ட‌ ஆபிரிக்கா நாட்டில் கூட‌ ம‌க்க‌ளுக்கு க‌ழிவறை வ‌ச‌தி இருக்கு............................

இந்திய‌ன் ஜெய்ஹிந் சொல்வ‌தில் பொருமை கிடையாது..................நீங்க‌ள் இந்திய‌ர்க‌ளாய் இருந்து அடைந்த‌ ந‌ன்மை எது என்று கேட்டால் ப‌தில் வ‌ராது..................உங்க‌ட‌ நாட்டுக்கு என்ன‌ பெருமை சேர்த்திங்க‌ள் என்று கேட்டால் ப‌தில் வ‌ராது

2016ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியா இர‌ண்டு ப‌த‌க்க‌ம் வென்ற‌துக்கு இந்தியா இரண்டு ப‌த‌க்க‌ம் வென்று விட்ட‌து என்று இந்திய‌ ஊட‌க‌ங்க‌ளில் கூவிக் கொண்டு இருந்த‌வை

100க்கு மேல் ப‌ட்ட‌ ப‌த‌க்க‌த்தை வென்ற‌ அமெரிக்க‌ன் சும்மா இருக்க‌ , வெறும் இர‌ண்டு ப‌த‌க்க‌ம் வென்ற‌துக்கு உந்த‌ கூவ‌ல் ஹா ஹா😁..............................................

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, goshan_che said:

சீனா இப்படி இறங்கினால், இந்திய பொருளாதாரம் படுக்கும். இந்தியா திணறும்.

தென்னிந்தியா போராடாது. ஆனால் சோவியத் உடைந்த போது மத்திய ஆசிய நாடுகள் தாமாக கிளம்பி போனதை போல, வட இந்தியா உடையும் போது, தெற்கு தாமாக விலகி போகும் ஒரு நிலை வரலாம்.

அனைத்துமே எனது வெறும் wargaming தான். அல்லது ஆசை, பேராசை, நப்பாசை🤣.

சீனாவோ அல்லது இன்னொரு மிகப்பெரிய வளமுள்ள நாடு விரும்பி, இவ்வாறான நடவடிக்கைகளில் இறங்கினால், நிச்சயம் இந்தியா திணறும். ஆனால் இன்றைய உலகில் தங்களுக்கு சேதாரம் அதிகம் இன்றி எந்த ஒரு நாடும் இதைச் செய்வார்களா, செய்ய முடியுமா என்பது ஒரு கேள்வி. உக்ரேன் போன்ற ஒன்று கிடைத்ததால் அமெரிக்காவும், மேற்குலகும் ரஷ்யாவிற்கு இதையே செய்து கொண்டிருக்கின்றன. இந்தியாவால் ஒரு முனையில் போரை நடத்த முடியுமா என்பதே இப்பொழுது கேள்விக்குறியாகி இருக்கின்றது. பல முனைகளில் கிளர்ச்சிகள் ஆரம்பித்தால், இந்தியாவால் சமாளிக்கவே முடியாது. மற்றும் இன்றைய இந்தியாவின் பொருளாதாரமே உலகிற்கு சேவைகளை வழங்குதலில் தங்கியிருக்கின்றது. யுத்தமும், சேவைகள் வழங்குதலும் ஒன்றாக இருக்கமுடியாது.

இந்தியா உடைந்து போக வேண்டும் என்பது ஈழத்தமிழர்களின் பெரும்பாலானவர்களின் விருப்பமே. அதன் மூலம் இந்திய வெறுப்பை காட்டவும், பிரிவதால் எங்களுக்கு சில அனுகூலங்கள் கிடைக்கும் என்றும் நினைக்கின்றனர். அதனாலேயே பலரும் பாகிஸ்தான் ஆதரவாளர்களாக மாறியுள்ளார்கள்.

நான் நடைமுறைகளையும், உலகின் போக்கையும் அடிப்படையாக வைத்தே எனது கருத்துகளை எழுதுகின்றேன். எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை இங்கு தவிர்த்து விடுகின்றேன். 'நீங்கள் எந்தப் பக்கம்..................' என்ற கேள்விக்கு முன்கூட்டிய பதில் இது..................🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kandiah57 said:

உண்மை தான் ஆசைப்படலாம் உவ்வளவு பெரிய ஆசை கூடாது ......ஆசை நிறைவேற. உழைக்கவும் வேண்டும் இந்தியாவுக்கு அயல்நாடுகளால். ஆபத்து உண்டு என்ற நிலை இருக்கும் வரை இந்தியா உடையாது மாறாக மிகவும் பலமடையும். இந்த எனது விதிப்படி

பாகிஸ்தானும். சீனாவும் இந்தியாவை பலமடையச். செய்கிறார்கள் இந்தியா மாநிலங்களுக்கு இடையிலான இடைவெளி காணமால் போய் விடும் இந்த சீனாவை அந்த காலத்தில் ஜேர்மனி கூட தொடர்ச்சியாக சுரண்டியுள்ளது மாசேதுங். அல்லது வேறு ஒருவர் தான் சீனாவை பலமாக்கினார். கம்யூனிசம் இல்லை என்றால் சீனாவும் பல துண்டுகளாகிவிடும். எவரும் உடைக்க தேவையில்லை சீனா முழுமையாக ஏற்றுமதியில். தங்கியுள்ள நாடு ஒரு போர் வந்தால் தொடர்ந்து நடந்நடந்தால் சீனா தக்குப்பிடிக்குமா??? தெரியவில்லை ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியும். போர் அற்ற. சூழலுக்குத். தான் பொருந்தும் போர் வந்தால்,..நடந்தால் வளர்ச்சி படுத்துவிடும். ஆமா அல்லது இல்லையா???.

குறிப்பு,...நான் ஆசைப்படவில்லை 🤣🤣

இப்ப‌ உல‌க‌மே சீன‌னின் தொழில்நுட்ப‌ம் ப‌ற்றி தான் பேச்சு

க‌ட‌லில் கொட்டிய‌ எண்ணைய‌ இந்தியா வாளி வைச்சு அள்ளி கொண்டு இருக்கு........................

இந்தியா நாட்டால் அய‌ல் நாடுக‌ளுக்கு ஒரு ந‌ன்மையும் இல்லை தீன்மை தான் அதிக‌ம்......................

இந்திய‌ர்க‌ளுக்கு எப்ப‌டி போலி தேச‌ப் ப‌ற்று ஊட்ட‌ப் ப‌டுதோ அதே போல் பாக்கிஸ்தானிய‌ர்க‌ளுக்கு த‌ங்க‌ட‌ முன்னோர்க‌ள் இந்த‌ நாடடைய‌ இவ‌ள‌வு தியாக‌ம் செய்தார்க‌ள் என்று சிறுவ‌ய‌து முத‌லே சொல்லிக் கொடுக்கின‌ம்

என‌க்கு பாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த‌ ந‌ல்ல‌ ஒரு ந‌ண்ப‌ன் இருந்தவர்.................என்னை விட‌ வ‌ய‌தில் மூத்த‌வ‌ராய் இருப்பத‌னால் என்னை த‌மிழில் த‌ம்பி என்று என்று தான் அழைப்பார்.................த‌மிழில் அவ‌ருக்கு தெரிந்த‌ ஒரு வ‌ரி த‌ம்பி ம‌ட்டுமே😁👍.....................

ஆனால் பாக்கிஸ்தானிய‌ர்க‌ளுக்கு நாட்டு ப‌ற்று மிக‌ அதிக‌ம் அதோட‌ ம‌த‌ ப‌ற்று இரு ம‌ட‌ங்கு அதிக‌ம்......................

நீங்கள் நினைப்பது போல் பாக்கிஸ்தானை உடைப்பதென்ப‌து ப‌க‌ல் க‌ன‌வு அதையும் மீறி ந‌ட‌ந்தால் இந்தியா உடையும் நாளை மேல‌ கோஷான் சொன்ன‌து போல் எதிர் பார்க்க‌லாம் அது ப‌ஞ்சாப்பில் இருந்து தொட‌ங்கி ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளுக்கும் ப‌ர‌வும்........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.